இஸ்லாத்தின் அடிப்படைகள்
நாம் எதைப் பின்பற்ற வேண்டும்?
நாம் அல்லாஹ்விடமிருந்து வந்த இறைச் செய்திகளை மட்டும்தான் பின்பற்ற வேண்டும்.
تَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا تَذَكَّرُونَ} ளالأعراف: 3
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன் 7:3)
திருமறைக்குர்ஆனும், மார்க்கமாக நபியவர்கள் வழிகாட்டியவைகளும் இறைச் செய்திகள் ஆகும்.
நபியவர்கள் மார்க்கமாகப் போதித்தவை இறைச் செய்தி என்பதற்கு ஆதாரம் என்ன?
وَمَا يَنْطِقُ عَنِ الْهَوَى (3) إِنْ هُوَ إِلَّا وَحْيٌ يُوحَى } ளالنجم: 3، 4
அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை (அல்குர்ஆன் 53:3,4)
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ شَيْءٌ مِنْ أَمْرِ دُنْيَاكُمْ فَأَنْتُمْ أَعْلَمُ بِهِ فَإِذَا كَانَ مِنْ أَمْرِ دِينِكُمْ فَإِلَيَّ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்கள் உலக காரியங்களில் ஏதேனும் ஒரு காரியமாக இருக்குமென்றால் நீங்கள்தான் அதனை மிகவும் அறிந்தவர்கள். உங்கள் மார்க்க விஷயமாக இருந்தால் என்னிடம்தான் கேட்க வேண்டும்.
அறிவிப்பவர்:அனஸ் (ர) நூல்:அஹ்மத் (12086)
مَا قُلْتُ لَكُمْ قَالَ اللَّهُ فَلَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் அல்லாஹ் கூறியதாக உங்களுக்கு கூறுபவற்றை (பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில் நான் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறவே மாட்டேன்.
அறிவிப்பவர்:தல்ஹா பின் உபைதில்லாஹ் (ர) நூல்:இப்னு மாஜா(2461)
ஹதீஸ் என்றால் என்ன?
நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைப் பற்றி அறிவிக்கப்படும செய்திகளே ஹதீஸ் எனப்படும். இதுவே நாம் மார்க்கமாகப் பின்பற்ற வேண்டியதற்குப் போதுமானதாகும். நபியவர்களின் உடல் தோற்றம் பற்றிய வர்ணணைகளையும் ஹதீஸ் என்று கூறுவார்கள்.
நாம் குர்ஆன், ஹதீஸை மட்டும்தான் பின்பற்ற வேண்டும் என்பதற்கு ஆதாரம் என்ன?
அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட இந்த இஸ்லாமிய மார்க்கத்தை அல்லாஹ், தன் வேதமான திருக்குர்ஆன் மூலமும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்கள் மூலமும் காட்டித்தந்துள்ளான்.
இந்த இரண்டும்தான் இஸ்லாத்தின் அடிப்படையாகும். இந்த இரண்டை மட்டும்தான் முஸ்ம்கள் பின்பற்றவேண்டும். இவ்வாறு அல்லாஹ் திருக்குர்ஆனில் ஏராளமான வசனங்களில் குறிப்பிட்டுள்ளான்.
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ(1) سورة الأنفال
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! (அல்குர்ஆன் 8:1)
وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ يُدْخِلْهُ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ(13) سورة النساء
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 4:13)
அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படாதவனுடைய நிலை என்ன?
இஸ்லாத்தின் அடிப்படையாக உள்ள, இறைவனின் வாக்கான திருக்குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளை பின்பற்றாதவனை திருக்குர்ஆன் கடுமையாக எச்சரிக்கிறது.
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ(14) سورة النساء
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 4:14)
وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا(23) سورة الجن
அல்லாஹ்விடமிருந்தும், அவன் தூதுச் செய்திகளிருந்தும் எடுத்துச் சொல்வதைத் தவிர (வேறு இல்லை). அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்வோருக்கு நரக நெருப்பு உள்ளது. அதில் என்றென்றும் அவர் நிரந்தரமாக இருப்பார். (அல்குர்ஆன் 72:23)
முன்னோர்களின் நடைமுறைகளை மார்க்கமாகப் பின்பற்றலாமா?
அல்லாஹ்வின் வஹிச் செய்தியான திருமறைக்குர்ஆன் மற்றும் நபியவர்களின் வழிமுறை ஆகிய இரண்டை மற்றுமே நாம் பின்பற்ற வேண்டும். இவ்விரண்டிற்கு மாற்றமாக முன்னோர்களின் வழிமுறைகளை மார்க்கமாகக் கருதி பின்பற்றுவது கூடாது.
وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ(104) سورة المائدة
”அல்லாஹ் அருளியதை நோக்கியும் இத்தூதரை (முஹம்மதை) நோக்கியும் வாருங்கள்!” என்று அவர்களிடம் கூறப்பட்டால் ”எங்கள் முன்னோர்களை எதில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்” என்று கூறுகின்றனர். அவர்களின் முன்னோர்கள் எதையும் அறியாமலும், நேர் வழி பெறாமலும் இருந்தாலுமா? (அல்குர்ஆன் 5:104)
يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَالَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَ(66)وَقَالُوا رَبَّنَا إِنَّا أَطَعْنَا سَادَتَنَا وَكُبَرَاءَنَا فَأَضَلُّونَا السَّبِيلَ(67)رَبَّنَا آتِهِمْ ضِعْفَيْنِ مِنْ الْعَذَابِ وَالْعَنْهُمْ لَعْنًا كَبِيرًا(68) سورة الأحزاب
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ”நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?” எனக் கூறுவார்கள். ”எங்கள் இறைவா! எங்கள் தலை வர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்” எனவும் கூறுவார்கள். ”எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!” எனவும் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:66…68)
பெரும்பான்மை மக்கள் ஒரு காரியத்தைச் செய்தால் அதனை மார்க்கமாகப் பின்பற்றலாமா?
குர்ஆன், ஹதீஸ் ஆதாரமில்லாமல் உலகமே சேர்ந்து ஒரு காரியத்தைச் செய்தாலும் அதனை மார்க்கமாகப் பின்பற்றுவது கூடாது. அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் சொன்னவை மட்டுமே மார்க்கமாகும்.
وَإِنْ تُطِعْ أَكْثَرَ مَنْ فِي الْأَرْضِ يُضِلُّوكَ عَنْ سَبِيلِ اللَّهِ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنْ هُمْ إِلَّا يَخْرُصُونَ(116) سورة الأنعام
பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு (முஹம்மதே!) நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின்பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.
(அல்குர்ஆன் 6 : 116)
முஸ்ம்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்டால் எதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும்.?
நமக்கு மத்தியில் பிரச்சனைகள் ஏற்படும்போது திருக்குர்ஆனையும் நபிமொழியையும் வைத்தே எக்கருத்து சரியானது என்பதை முடிவு செய்யவேண்டும். இவ்வாறே திருக்குர்ஆன் வழிகாட்டுகிறது.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا(59) سورة النساء
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும். (அல்குர்ஆன் 4:59)
அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தை முழுமைப் படுத்திவிட்டானா? இல்லையா?
மார்க்கம் என்பது நாயகம்(ஸல்) அவர்களோடு முழுமைப்படுத்தப்பட்டு விட்டது. இனி இம்மார்க்கத்தில் ஒன்றைக் கூட்டுவதற்கோ குறைப்பதற்கோ யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا … (3) سورة المائدة
இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான ( தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.
அறிவிப்பவர் : இர்பாள் பின் ஸாரியா(ர)
நூல் : அஹ்மத் (16519)
அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்தை மார்க்கச் சட்டமாக்குவது இணைவைத்தலா?
ஆம்! அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்தை மார்க்கச் சட்டமாக்குவது இணைவைத்தலாகும்.
أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ ளالشورى/21
அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது (அல்குர்ஆன் 42 ் 21)
பித்அத் என்றால் என்ன?
அல்லாஹ்வாலும், அல்லாஹ்வின் தூதராலும் மார்க்கமாக வழிகாட்டப்படாமல், நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கப்பட்ட விசயங்களே பித்அத் எனப்படும்.
நாயகம்(ஸல்) அவர்கள் பித்அத்தான காரியங்களை விட்டும் எச்சரிக்கை செய்கிறார்கள்.
நாயகம்(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ர) நூல் : நஸயீ (1560)
பித்அத்தான காரியங்களைச் செய்தால் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படுமா?
முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமான இஸ்லாத்தில் இல்லாத காரியங்களை மார்க்கம் என்று கருதி செய்தால் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது.
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே!
அறிவிப்பவர் : ஆயிஷா(ர) நூல் : புகாரீ (2697)
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ர) நூல் : முஸ்ம் (3243)
இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தில் காணப்படக்கூடிய சில பித்அத்தான காரியங்களை கூறுக.
இன்று நம் சமுதாயத்தில் குர்ஆனுக்கும் நபி வழிக்கும் மாற்றமான எத்தனையோ புதுமையான நடைமுறைகள் காணப்படுகின்றன அவற்றில் சிலவற்றைக் காண்போம் :
பாங்குக்கு முன் ஸலவாத் கூறுவது ஜுமுஆவில் இரண்டு பாங்கு கூறுதல் தொழுகைக்கு பின் கூட்டு துஆ ஓதுதல், ஷஅபான் பிறை 15,ரஜப் பிறை 27 இரவுகளில் நின்று வணங்கி பகல் நோன்பு நோற்றல் இறந்தவருக்கு 40 நாட்கள் தொடர்ந்து ஃபாத்திஹா ஓதுதல் வருடாந்திர ஃபாத்திஹா ஓதுதல், மவ்லீது ஓதுதல், மீலாது விழா கொண்டாடுதல், ஸலாத்துன்னாரிய்யா ஓதுதல் இதைப்போன்று எத்தனையோ செயல்கள் மார்க்கத்தின் பெயரால் நபி (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இல்லாமல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இவற்றிக்கும் நன்மை கிடைக்காது என்போதோடு தண்டனையும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்ல, மத்ஹபு ரீதியாகவும் சமுதாயம் பிரிந்து கிடக்கின்றனர். ஷாஃபி, ஹனஃபி, ஹன்ப, மாகி என்று பல பிரிவுகளாகப் பிரிந்து மார்க்கத்திற்கு மாற்றமான காரியங்களை மார்க்கம் என்ற பெயரில் செய்கின்றனர்.
நான்கு மத்ஹபில் உள்ள எத்தனையோ சட்டங்கள் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் மாற்றமாக இருந்தாலும் குர்ஆன் சுன்னாவை தூக்கி எறிந்து விட்டு மத்ஹபுகளைப் பின்பற்றக்கூடிய அவல நிலையையும் காண்கிறோம்.
அல்குர்ஆனும் நபிவழியும் மார்க்கம் என்பதை அறியாததினால்தான் இந்நிலை காணப்படுகிறது. நாம் நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்றி நடக்கவேண்டும்.
குர்ஆனுடன் நபிவழியும் அவசியமா?
وَأَنْزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ ளالنحل/44
மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம். (அல்குர்ஆன் 16:44)
முஹம்மதே! உமக்கு வேதத்தை அளித்தது, நீர் விளக்குவதற்காகவும், அவர்கள் சிந்திப்பதற்காகவும் தான் என்று இவ்வசனம் மிகத் தெளிவாகக் கூறுகிறது. எனவே நபிகள் நாயகத்தின் விளக்கம் இல்லாமல் நாம் திருக்குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியாது. எனவே திருக்குர்ஆனுடன் நபிகள் நாயகத்தின் வழிமுறையும் அவசியமானதாகும். மேலும்
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا ளالأحزاب/21
அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
உஸ்வத் லி முன்மாதிரி என்றால் ஒருவரது செயலை நடவடிக்கைகளைப் பார்த்து அவரை அப்படியே பின்பற்றி நடப்பதாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய முன்மாதிரியான வாழ்க்கை ஹதீஸ்களில் தான் கிடைக்கும். எனவே குர்ஆனுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் விளக்கம் அவசியத்திலும் அவசியம் . நபியவர்களின் வழிகாட்டுதல் வேண்டாம். குர்ஆன் மட்டும் போதும் என்று கூறும் ”அஹ்லுல் குர்ஆன்” கொள்கையினர் குர்ஆனை மறுக்கும் காஃபிர்கள் ஆவர்.
நபித்தோழர்களாகிய ஸஹாபாக்களை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும்?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலகட்டத்தில் வாழ்ந்த ஸஹாபாக்கள் சமுதாயம் இவ்வுலகில் கியாமத் நாள் வரை தோன்றவிருக்கும் சமுதாயங்களிலே மிகச் சிறந்தவர்கள் என்று நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.
அறிவிப்பவர்:இம்ரான் பின் ஹுஸைன் (ர) நூல்:புகாரி (2651)
ஸஹாபாக்களின் சொந்தக் கருத்துக்களை நாம் மார்க்கமாகப் பின்பற்றுவது அவசியமா?
அல்லாஹ்விடம் இருந்து இறக்கிய அருளப்பெற்ற வஹி என்ற இறைச் செய்தி மட்டும்தான் இஸ்லாம் ஆகும். இதைத் தவிர வேறு யாருடைய கருத்துக்களையும் நாம் இஸ்லாம் என்று கருவது கூடாது.
تَّبِعُوا مَا أُنْزِلَ إِلَيْكُمْ مِنْ رَبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِنْ دُونِهِ أَوْلِيَاءَ قَلِيلًا مَا تَذَكَّرُونَ} ளالأعراف: 3ன
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
(அல்குர்ஆன் 7:3)
நபித்தோழர்களாகிய ஸஹாபாக்களுக்கு அல்லாஹ்விடம் இருந்து இறைச்செய்திகள் அருளப்படவில்லை. எனவே ஸஹாபாக்களின் சொந்தக் கருத்துக்களை நாம் மார்க்கமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஸஹாபாக்களும் அவர்களுக்குப் பின்வந்த நல்லறிஞர்களும் மார்க்கத் தீர்ப்புகளை வழங்கியிருந்தால் அதனை நாம் ஏற்றுக் கொள்ளலாம். மாற்றமாக இருந்தால் குர்ஆன், ஹதீஸிற்கே முக்கியத்துவம் வழங்க வேண்டும்.
அல்லாஹ் எத்தகைய ஸஹாபாக்களை பொருந்திக் கொண்டதாக திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.?
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ ளالتوبة/100
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)
ஆரம்ப காலத்தில் ஹிஜ்ரத் செய்வதில் யார் முந்திக் கொண்டார்களோ அவர்கள், அவர்களுக்கு உதவி செய்தவர்கள் மட்டுமின்றி அவர்களைப் பின்பற்றி ஹிஜ்ரத் செய்தவர்களும் இறை திருப்திக்கு உரியவர்கள். அது போன்று மேற்குறிப்பிடப்பட்ட ஸஹாபாக்கள் எவ்வாறு நபிவழியை உறுதியாகப் பின்பாற்றினார்களோ, இஸ்லாத்திற்காக உதவி செய்தார்களோ அது போன்று அவர்களுக்கு பின்வந்தவர்கள் நற்காரியங்களைச் செய்தாலும் அவர்களுக்கும் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் உரித்தாகும்.
No comments:
Post a Comment