பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, May 30, 2018

நபியின்_இரத்தம்_குடித்தால்_நரகம்_தீண்டாதா

#நபியின்_இரத்தம்_குடித்தால்_நரகம்_தீண்டாதா?

நபி (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் அறிவிப்பாளர் தொடர் ரீதியிலும் மிகவும் பலவீனமான செய்தி என்பதை ஏகத்துவ இதழில் தெளிவுபடுத்தி இருந்தோம்.

இதே போன்று நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் கேவலப்படுத்தக்கூடிய இன்னொரு பொய்யான செய்தியும் ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. நபியவர்கள் வெளியேற்றிய இரத்தத்தை நபித்தோழர்கள் குடித்தார்கள் என்பதே அந்தப் பொய்யான செய்தி.

குர்ஆனைப் பற்றியும் ஹதீஸ்களைப் பற்றியும் அறிவில்லாத சில அறிவிலிகள் நபி (ஸல்) அவர்களைப் புகழ்கிறோம் என்ற பெயரில் இது போன்ற செய்திகளை மக்களிடம் சொல்லி, நபி (ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் காட்டுமிராண்டி போல் மற்றவர்களிடம் சித்தரித்துக் காட்டுகின்றனர்.

எனவே இந்த ஆய்வுக் கட்டுரையில் நபி (ஸல்) அவர்களின் இரத்தத்தை நபித்தோழர்கள் குடித்தார்களா? என்பதைப் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம்.

நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்தபோது தன் இரத்தத்தை என்னுடைய மகனிடம் கொடுத்தார்கள். என் மகன் அதை பருகிவிட்டார். ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இந்த விசயத்தை நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் (என் மகனிடம்), “நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். “உங்கள் இரத்தத்தை கீழே கொட்ட நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவருடைய தலையை வருடிவிட்டு, “நரகம் உன்னைத் தீண்டாது. உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகும். மக்களால் உனக்குக் கேடு உண்டாகும்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அஸ்மா பின் அபீபக்ர் (ரலி),

நூல்: தாரகுத்னீ

குர்ஆனுடன் முரண்படும் செய்தி

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்துள்ளான்.

(அல்குர்ஆன் 2:173)

இரத்தத்தை உண்ணுவது ஹராம் என்று அல்லாஹ் கூறுகிறான். ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பிராணிகளின் இறைச்சி உண்ணத் தகுந்ததாக இருந்தாலும் இவற்றின் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது.

உண்ணத் தகுந்த பிராணிகளின் இரத்தத்தையே உண்ணக் கூடாது என்றால் உண்ணுவதற்கு முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டவற்றின் இரத்தத்தைக் குடிப்பது மிக மோசமான செயலாகும்.

ஒருவன் ஆட்டின் இரத்தத்தைக் குடிப்பதைக் காட்டிலும் பன்றியின் இரத்தத்தைக் குடிப்பது மிக மோசமான செயல் என்று கூறுவோம். ஏனென்றால் பன்றியின் இரத்தம், பன்றி என்ற காரணத்தாலும் இரத்தம் என்ற காரணத்தாலும் ஹராமாக உள்ளது. இதன் இரத்தத்தை ஒருவன் குடிக்கும் போது இறைவனுடைய இரண்டு கட்டளைகளை மீறும் நிலை ஏற்படுகின்றது.

மனிதர்களின் இரத்தத்தைக் குடிப்பதும் இதுபோன்ற மோசமான செயலேயாகும். மனிதன், மனிதனை உண்ணுவதை மார்க்கம் தடை செய்துள்ளது. இரத்தமும் தடை செய்யப்பட்ட பொருளாகும்.

ஒரு சாதாரண மனிதருக்கு முன்னால் யாராவது இப்படிச் செய்தால் அந்த மனிதர் இதை ஏற்றுக் கொள்ளமாட்டார். அநாகரீகமான இந்தச் செயலை எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

அப்படியானால் மனிதனை மனிதாக வாழக் கற்றுக் கொடுத்தவரும் நற்பண்புகளின் முழு உருவமாகவும் இருந்த நபி (ஸல்) அவர்கள் இந்தக் கெட்ட செயலை அனுமதித்து இருப்பார்களா? என்று சிந்திக்க வேண்டும்.

(நபியே) நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

(அல்குர்ஆன் 68:4)

மேலும் மேற்கண்ட ஹதீஸில் கருத்து முரண்பாடும் உள்ளது. நரகம் உன்னைத் தீண்டாது என்ற வாசகத்தின் மூலம் நபியின் இரத்தத்தைக் குடித்தவர் நல்ல காரியத்தைச் செய்துள்ளார் என்று இந்தச் செய்தி கூறுகின்றது. அப்படியானால் நபி (ஸல்) அவர்கள், உன்னால் மக்களுக்கும் மக்களால் உனக்கும் கேடு உண்டாகும் என்று ஏன் பழிக்க வேண்டும்?

பலவீனர்கள் அறிவிக்கும் செய்தி

இந்தச் செய்தி கருத்து ரீதியில் பலவீனமான செய்தியாக இருப்பதுடன் இது சரியான அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்படவில்லை. இதன் அறிவிப்பாளர் தொடரில் பல பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தச் செய்தியில் பின்வரும் நபர்கள் வரிசையாக இடம்பெற்றுள்ளனர்.

1. அஸ்மா பின்த் அபீபக்ர்

2. ரபாஹ் அந்நவ்பீ அபூ முஹம்மது

3. அலீ பின் முஜாஹித்

4. முஹம்மது பின் ஹுமைத்

5. அப்துல்லாஹ் பின் முஹம்மது பின் அப்தில் அஜீஸ்

இவர்களில் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபித்தோழியர் என்பதால் இவரைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள்.

இரண்டாவது அறிவிப்பாளரான ரபாஹ் பலவீனராவார். இவர் யாரென்றே தெரியவில்லை. இவரைச் சிலர் பலவீனர் என்று கூறியுள்ளனர் என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள். இவருடைய நம்பகத்தன்மை அறியப்படாத காரணத்தால் இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

மூன்றாவதாக இடம்பெற்றுள்ள அறிவிப்பாளர் அலீ பின் முஜாஹிதும் பலவீனராவார். இவர் ஹதீஸில் இட்டுக்கட்டும் பெரும் பொய்யர் என்று யஹ்யா பின் ளரீஸ் மற்றும் யஹ்யா பின் மயீன் ஆகிய இரு அறிஞர்களும் கூறியுள்ளனர். முஹம்மது பின் மஹ்ரான் என்பவரும் இவ்வாறு கூறியுள்ளார். ஹதீஸ் கலையில் இவர் முற்றிலுமாக விடப்பட்டவர் என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

நான்காவது அறிவிப்பாளரான முஹம்மது பின் ஹுமைத் என்பவரும் பலவீனமானவராவார். இவர் பெரும் பொய்யர் என இப்னு கராஷ், சாலிஹ் ஜஸ்ரா, இஸ்ஹாக் பின் மன்சூர் ஆகிய மூவரும் கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் என்று இமாம் நஸாயீ அவர்களும் இப்ராஹீம் பின் யஃகூப் என்பவரும் கூறியுள்ளனர். மேலும் இமாம் தஹபீ அவர்களும் இமாம் இப்னு ஹஜர் அவர்களும் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

இந்தச் செய்தியில் மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெறுவதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அறியப்படாதவர்களின் அறிவிப்பு

ஹில்யதுல் அவ்லியா எனும் நூலில் இடம் பெற்றுள்ள இந்தச் செய்தியில் அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் வெளியேற்றிய இரத்தத்தைக் குடித்ததாகவும் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நரகம் உன்னைத் தீண்டாது எனக் கூறி இதற்கு அங்கீகாரம் வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் கைசான், சஅத், முஹம்முது பின் மூசா, அஹ்மது பின் ஹம்மாத், மற்றும் முஹம்மது பின் அலீ ஆகிய ஐந்து நபர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரின் நம்பகத்தன்மையும் நிரூபிக்கப்படவில்லை. எனவே நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத நபர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.

சஃபீனாவின் அறிவிப்பு

நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துவிட்டு பிறகு என்னிடம் “இந்த இரத்தத்தை எடுத்து பறவைகள் அல்லது மக்கள் மற்றும் கால்நடைகளின் (கண்ணில் படாதவாறு) புதைத்துவிடு” என்று கூறினார்கள். எனவே நான் தனியே சென்று அதைக் குடித்து விட்டேன். பிறகு அவர்கள் என்னிடம் இதைப் பற்றிக் கேட்ட போது நான் அதைக் குடித்தேன் என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் சிரித்தார்கள்.

அறிவிப்பவர்: சஃபீனா (ரலி),

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா

இந்தச் செய்தியில் புரைஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர் என்று இப்னு கஸீர் கூறியுள்ளார். இமாம் தாரகுத்னீயும் இப்னு ஹிப்பானும் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

மேலும் இந்த செய்தியில் உமர் பின் சஃபீனா என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவர் யார் என அறியப்படாதவர் என்று இமாம் தஹபீ கூறியுள்ளார்கள். இமாம் புகாரி அவர்கள் இவரை மஜ்ஹுல் – அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். எனவே இதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களின் அறிவிப்பு

உஹதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய முகத்தில் காயம் ஏற்பட்டபோது என் தந்தை மாலிக் பின் சினான் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி விழுங்கினார்கள். “நீ இரத்தத்தை குடிக்கின்றாயா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரத்தத்தைக் குடிக்கின்றேன்” எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னுடைய இரத்தம் அவருடைய இரத்தத்துடன் கலந்துவிட்டது. அவரை நரகம் தீண்டாது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: சஅத் பின் மாலிக் (ரலி),

நூல்: தப்ரானீ

இந்தச் செய்தியில் ருபைஹ் பின் அப்திர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார். இவருடைய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. மேலும் இதில் இடம்பெற்றுள்ள இப்னுல் அஸ்கஃ யாரென்ற விபரம் அறியப்படவில்லை.

மேலும் இதில் மூசா பின் யஃகூப் என்வர் இடம்பெற்றுள்ளார். இவர் மனன சக்தி சரியில்லாதவர் என்று இமாம் இப்னு ஹஜரும், இவர் பலவீனமானவர் என்று இமாம் அலீ பின் மதீனீயும், இவரிடத்தில் பலவீனம் உள்ளது என்று இமாம் தஹபீயும் கூறியுள்ளனர்.

மேலும் இதில் இடம்பெற்றுள்ள அப்பாஸ் பின் அபீ ஷம்லா என்பவரைப் பற்றி எந்தக் குறிப்பும் ஹதீஸ் நூற்களில் இல்லை. இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. எனவே பலவீனமானவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியை ஏற்றுக்கொள்ள முடியாது.

பரேலவிகளுக்கு எதிரான செய்தி

நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக்கொண்டிருக்கும் போது அவர்களிடத்தில் நான் வந்தேன். அந்த வேலை முடிந்தவுடன் அவர்கள், “அப்துல்லாஹ்வே” என்று (என்னை) அழைத்து, “இந்த இரத்தத்தைக் கொண்டு சென்று இதை யாரும் பார்க்காதவாறு கீழே கொட்டிவிடு” என்று கூறினார்கள். நான் நபி (ஸல்) அவர்களை விட்டுத் தனியே சென்று அதைக் குடித்து விட்டேன். நான் அவர்களிடம் திரும்பி வந்தபோது, “அப்துல்லாஹ்வே! அதை நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். “மக்களை விட்டும் மறைவான இடம் என்று நான் கருதிய ஒரு இடத்தில் அதை வைத்துவிட்டேன்” என்று நான் கூறினேன். அவர்கள், “அதை நீ குடித்து விட்டாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். உடனே அவர்கள், “இரத்தத்தைக் குடிக்குமாறு உனக்கு ஏவியது யார்? மக்களால் உனக்குக் கேடு உண்டாகட்டும். உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகட்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி),

நூல்: ஹாகிம்

நபித்தோழர்கள் நபியின் இரத்தத்தைக் குடித்தார்கள் என்று வாதிடக்கூடியவர்கள் இந்தச் செய்தியை ஆதாரமாகக் காட்டுகின்றனர். இதில் ஹின்ந் பின் காசிம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவருடைய நம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை.

எதிர் தரப்பினர் தங்கள் கருத்துக்கு ஆதாரமாகக் காட்டும் செய்திகளில் இந்தச் செய்தி தான் ஓரளவுக்குப் பரவாயில்லை என்று கூறும் நிலையில் குறைவான பலவீனத்தைக் கொண்டுள்ளது என்றாலும் இதில் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத நபர் இருப்பதால் இதுவும் பலவீனமான செய்தியாகும்.

ஒரு பேச்சுக்கு இது சரியான செய்தி என்பதை ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் வாதத்துக்கு எதிராகவே இந்தச் செய்தி அமைந்துள்ளது.

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் நபியின் இரத்தத்தைக் குடித்த போது, “உன்னை நரகம் தீண்டாது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அப்படிக் கூறியிருந்தால் இந்த நபித்தோழர் செய்த செயலை நபியவர்கள் அங்கீகரித்தார்கள் என்று பொருள் வரும்.

ஆனால் அவ்வாறு கூறாமல் “இரத்தத்தைக் குடிக்குமாறு உனக்கு ஏவியது யார்? மக்களால் உனக்குக் கேடு உண்டாகட்டும். உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகட்டும்’ என்று கடிந்து கொள்கிறார்கள். எனவே நபியின் இரத்தமாக இருந்தாலும் அதைக் குடிப்பது கூடாது; இது அநாகரீகமான செயல் என்று இந்தச் செய்தி கூறுகின்றது.

தங்களுக்கு எதிராக அமைந்துள்ள இந்தச் செய்தியை எதிர் தரப்பினர் தங்களுக்கு ஆதாரமாகச் கூறுவது ஆச்சரியமாக உள்ளது.

Sunday, May 20, 2018

ரமலானின் பெயரால்_நம்பப்படும் ஆதாரமற்ற செய்த

⛔ *ரமலானின் பெயரால்_நம்பப்படும் ஆதாரமற்ற செய்தி* ⛔

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட்கொடையை கேட்கும் நாட்கள் என்றும், நடுப்பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக்கு உரியவை என்றும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து மீட்சியளிக்கக் கூடிய நாட்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவும்,

அந்த ஒவ்வொரு 10 நாட்களுக்கும் பிரத்யேகமான ஒவ்வொரு துஆ இருப்பதாகவும் மக்களிடத்திலே ஒரு செய்தி பரவலாக‌ வேரூன்றியுள்ள‌து. அதனால் மூன்று 10 நாட்களுக்கும் மூன்று விதமான துஆக்களை ஓதவேண்டும் என்று பலர் நம்பியும், நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள்.

⚠ "தாரீஹ் திமிஷ்க் லிஇப்னி அஸாகிர்" என்ற நூலிலும் இன்னும் சில நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ள அத்தகைய செய்தி அனைத்துமே பலஹீனமானவை! ⚠

அதன் அறிவிப்பாளர்களில் வரக்கூடிய 'ஸல்லாம் இப்னு ஸிவார்', 'மஸ்லமா' ஆகிய‌ இருவரும் நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.

சுன்னாஹ்வில் இல்லாத இந்த துஆக்களை ஓதிவரும் மக்கள், கடைசிப் பத்து நாட்களில் அதிகமதிகமாக ஓதி பிரார்த்திக்கும்படி நமக்கு அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சொல்லித் தந்த துஆவினை நடைமுறைப்படுத்துவதில்லை. எங்கே பித்அத் தோன்றுகிறதோ அங்கே சுன்னத் மறைக்கடிக்கப்பட்டு விடுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்று!

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் சொல்லித்தராத துஆக்களை பிரத்யேகமாக ஒவ்வொரு பத்து நாட்களிலும் ஓதவேண்டும் என்றெண்ணி ரமலானின் பெயரால் இத்தகைய பித்அத்தினை செய்யாமல், ரமலான் முழுமைக்கும் நமக்கு வேண்டிய அனைத்தையும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம், இன்ஷா அல்லாஹ்!

Saturday, May 19, 2018

இஸ்லாமிய பெயர்களும்,சட்டங்களும்

ஆக்கம் -- J. யாஸீன்  இம்தாதி
    +++++++++++++++++++++++++
   
        இஸ்லாமிய. பெயர்களும்,     .சட்டங்களும்   ஆய்வுப் பார்வை
                   19-05-14
              ********************
             
  NB :  நாம்  இக்கட்டுரையில்  தவறான பெயர்கள்,  அர்த்தமற்ற, பொருத்தமற்ற, சில பெயர்களை  பட்டியல்  போட்டுள்ளோம்   .  அது  தமிழகத்தில் பலர்களுக்கு  பெயராக இன்றும்  உள்ளது  . அவர்களை குற்ற  நோக்கில் நான்  எழுதவில்லை  அவ்வாறு  உங்கள் உள்ளத்தில்  தோன்றினால்  எனது பெயரும்  கூட   இக்கட்டுரையில்  விமர்சிக்கப்  பட்டுள்ளது   .அதைப் படித்து  லேசாக மகிழ்ச்சி  அடைந்து கொள்ளுங்கள்.
****************************************

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

              இருக்கின்ற    ஒன்றை  குறிப்பதற்க்கும்,    அதை முறையோடு அழைப்பதற்க்கும்,  பயன் படுவதே  பெயர்கள் ,

            மனிதன்  அறிந்து வைத்துள்ள எந்த ஒன்றும்   பெயர்  சூட்டப்  படாத நிலையில்   இல்லை.

          பெயர் சூட்டுதல்  அவசியம் என்று உணர்ந்தவர்களில்   பலர்  . எந்த வார்த்தையை  பெயராக சூட்டுவது பொறுத்தமானது,  அழகானது  என்பதைக்கூட     அறியவில்லை.

          அதனால் தான் 
    மதுசூதனன் ----   அதாவது  மதுவையும், சூது விளையாடுதலையும்  விரும்புகின்ற மனிதன்  என்று பெயர் சூட்டுகின்றனர்

        .இஸ்லாத்தை  பொருத்தவரை  பெயர்களை     எவ்வாறு  தேர்ந்தெடுப்பது  , அதை  யார்  வைப்பது  என்பதற்க்கு  அழகிய வழிகாட்டுதல்கள் உள்ளது.

அந்த வழிகாட்டுதலை  முஸ்லிம்களில் பலர்களே புரிந்து கொள்ளவில்லை

அதனால்   தான் பெயர் சூட்டுவதையே  பாரமான   விசயமாக   கருதிக் கொண்டு அதற்க்கு  பெயர்  சூட்டுத்  திருவிழா எனும் பெயரிலே  நிகழ்ச்சி  எடுப்பதைப் பார்க்கின்றோம்.

     இஸ்லாமிய  மார்க்கத்திலே  பெயர் சூட்டுவதற்க்கு   என்று  எவ்வித சடங்குககளும்  இல்லை.  நபி (ஸல்) அவர்கள்  தவறுதலான  சில பெயர்களை   மாற்றியமைத்தாக ஹதீஸ்களில்  காண  முடிகின்றதே தவிர.
பெயர்  சூட்டுவதற்க்கு  என்று  சடங்குகள்  கற்றுத்   தந்ததாக எவ்விதமான  செய்தியும்  ஹதீஸ்களில்  இல்லை.

     பெயர்  சூட்டுதல் என்றால்  என்ன?
      ***********************************

எந்த  பெயரை  நீங்கள்  உங்கள் சந்ததிக்கு  சூட்ட  விரும்புகின்றீர்களோ  அந்த  பெயரைச்  சொல்லி  அழைப்பதே பெயர் சூட்டுதல் ஆகும்

       அதை  சூட்ட. மார்க்க அறிஞர்கள்  வரவேண்டும்  என்றோ,  சூராக்களில் சிலவற்றை  படிக்க  வேண்டும் என்றோ மார்க்கத்தில்  வழிகாட்டப் படவில்லை 

இன்னும்   சொல்வதாக. இருந்தால் கைக்  குழந்தையின்  தாயே தன் பிள்ளைக்கு  பெயர் சூட்டலாம்

(மேலும்  இம்ரான்    சொன்னார்:) “அவளுக்கு  மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;  இன்னும் அவளையும்,  அவள்  சந்ததியையும் விரட்டப்பட்ட   ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து  காப்பாற்றத்  திடமாக   உன்னிடம்  காவல் தேடுகின்றேன்.

அல்குர்ஆன் :03:35

   பெயர்கள்  அரபியில்  தான் சூட்டபட  
                     வேண்டுமா  ?
************************************
           அரபியில்   பெயர்  வைப்பதை சுன்னத்து   என்று  சிலர்கள்  விளங்கி வைத்திருப்பதால்   தான் 
ஒரு பெயர்  சூட்ட   அதன்  பொருள் கேட்டு   ஒரு  மாதம்  அலைவதை பார்க்கின்றோம்.


இஸ்லாத்தில்   அரபியில்  தான்  பெயர் சூட்ட வேண்டும்  என்ற  கட்டளையும் இல்லை.

அரபியில்   பெயர்   வைப்பது  குற்றமும்     இல்லை.

    குர்ஆனில்   சொல்லப் பட்டுள்ள    நபிமார்களில்  முஹம்மத்  ,  இன்னும்  சிலரைத்  தவிர
      இஸ்மாயீல்,இஸ்ஹாக் ,  இப்ராரஹீம் , போன்ற   பல  பெயர்களும்  கூட  அரபு  வார்த்தைகள் இல்லை.

சஹாபாக்களில்  பிலால்  ,ஸல்மான், இது  போன்ற  பல பெயர்களும்  கூட   அரபு  வார்த்தை    இல்லை.

அழகிய  பெயரை  சூட்டுங்கள்  என்பது தான்  நபி( ஸல் ) அவர்களின் ஒட்டு மொத்தம்   கட்டளையின்   சாராம்சம்

    தடுக்கப்பட்ட.  பெயர்கள்
    **************************
              ஒரு மனிதன்  வைத்துள்ள பெயர்களில்   அல்லாஹ்விடத்தில்  அருவறுப்பானதும்,  மோசமானதும்  மலிகுல்  அம்லாக்  என்ற பெயரேயாகும்.    அல்லாஹ்வைத் தவிர மாலிக் எவருமில்லை  என்று நபி (ஸல்)  அவர்கள்  குறிப்பிட்டார்கள்

  அபூஹுரைரா.ரலி. புகாரி ,முஸ்லிம்

        மலிகுல்  அம்லாக்  என்பதின்  பொருள்  அரசனுக்கு மேல் அரசன் என்பதாகும்
        இந்த   கருத்து  கொண்ட எந்த பெயரும் , எம்மொழியில்  இருந்தாலும்  அது  முற்றிலும்  தவிர்க்கப் பட வேண்டியவையாகும்.
      
    முஸ்லிம்   சமூகத்தில்  இது போன்ற சில பெயர்கள்  வைக்கப் பட்டுள்ளது

  1- ஷாஜஹான்: உலகை ஆளும்
       எஜமான்

   2- அக்பர்  : மிகப் பெரியவன்

   3- அஜீஸ் :  யாவற்றையும்     
         மிகைத்தவன்

   4- சாகுல் ஹமீது :  அல்லாஹ்வுக்கே
         எஜமானன்
         
             
    இறை அடிமை என்பதற்க்கு எதிரான
                       பெயர்கள்
      ************************************

           ஒரு  மனிதர்  தனக்கு  அப்துல் ஹஜர்  என்று  பெயர்  சூட்டியிருப்பதை  பார்த்து  அந்த  பெயரை  நபி(ஸல்)  அவர்கள்   அப்துல்லாஹ்  என்று மாற்றி அமைத்தார்கள்

    அபுஹீரைரா.ரலி. முஸன்னப் இப்னு அபீஷைபா,  முஃஜமுல் கபீர்.

      
அப்துல் ஹஜர்  என்றால்   கல்லின்  அடிமை  என்று பொருள்  இந்த கருத்துப்    பட உள்ள அனைத்து    பெயர்களும் அவசியம்   மாற்றப்பட வேண்டியவையாகும்.

      இன்றைய   பெயர்களில்   சில!

1 : அப்துல் முத்தலிப்.  நபி (ஸல்  )          அவர்கள் காலத்தில் காஃபிர்கள் வணங்கிய. சிலையின் பெயரே முத்தலிப்  என்பதாகும்

  2:  அப்துல்  மனாஃப்.   இதுவும்
         சிலையின்  பெயராகும்
  
  3 : குலாம்  இரசூல் : இரசூலுக்கு
         அடிமை

  4:  குலாம்  முஹம்மத்: முஹம்மதின்
            அடிமை
         
              குலாம்   என்ற   பதத்திற்க்கு
   சிறுவன்  என்ற  பொருளும் உண்டு. ஆனால்   அதுவும் பெயருக்கு தகுந்ததல்ல

   5:  அப்துஸ் சம்சு - சூரியனுக்கு
          அடிமை

இது  போன்ற  பெயர்கள்  தான் கடுமையாக   கண்டிக்கத்தக்கது

    அர்த்தம்  பொருத்தமில்லா பெயர்கள்
   ***************************************
     நபி (ஸல்)  அவர்கள்  சபையில் ஒரு மனிதர்  வருகை  தந்தார்  அவரிடம் நபியவர்கள் உங்கள்  பெயர் என்னவென்று   கேட்ட போது
    தனது  பெயர்  ஹுஜ்னு  என்று வந்தவர் கூறினார்  .
அப்போது  நபியவர்கள்  அந்த பெயரை மாற்றி  சஹ்லு என்று வைக்க உத்தரவு போட்டார்கள்
  
அந்த  மனிதர்  தன் தந்தை வைத்த  பெயரை  மாற்ற மாட்டேன்  என்றார்

     அவர்  வாழ்  நாள் வரை  ஹீஜ்னாகவே  வாழ்ந்து மடிந்ததை நான் பார்த்தேன்.

இப்னுல் முஸைய்யப்.ரலி.பைஹகீ

     ஹுஜ்னு என்றால் கவலை உள்ளவன்  என்று பொருள்.

     இது  போல் பல பெயர்களை நபி (ஸல்)  அவர்கள் மாற்றியமைத்த சம்பவங்கள்    ஹதீஸ்களில் பதியப்பட்டுள்ளது. அதை பிரதிப்பதைப் போல்

   இன்று  முஸ்லிம்கள்  வைத்துள்ள பெயர்களில்  சில!

  1-  சேக் -  கிழவன்
  2-   பீர்   -  ஆசி  கொடுப்பவன்
  3-   மஸ்தான்-  போதைக்கு அடிமை
           பட்டவன்
   4-  நாகூர்  பிச்சை
   5-    முஹ்யத்தீன்  பிச்சை
   6-   பர்ஜானா :  பெண்ணுருப்பு
   7-   ஜின்னா : பைத்தியக்காரன்
   8-  பீவீ  :  என் மனைவி
   9-   பானு:   என் காதலி
10-    பேகம்-  பிடித்தமானவள்
11 -  கவுஸ் -  பாதுகாவலன்

         இன்னும்  பல உண்டு புரிந்து கொள்ளவே  இவைகள்

  பாலின   வேறுபாடு  பெயர்கள்
*********************************
      ஆணுக்கு  ஒப்பாக  நடக்கும் பெண்
    பெண்ணுக்கு  ஒப்பாக  நடக்கும் ஆண் 
   சாபத்திற்க்குரியவர்களாவர் என்று நபி (ஸல் ) கண்டித்தனர்

     அபூஹீரைரா.ரலி. முஸ்லிம்

     இந்த ஹதீஸ் நடத்தைகளுக்கு மட்டுல்ல    பெயருக்கும்  பொருந்தும்

  1- மும்தாஜ்  - இது ஆண் பால்
  2-   தாஜ் -  இது பெண் பால்
  3- மைமூன் -  ஆண் பால்
  4- மைமூனா -  பெண் பால்
  5- தில்சாத்-   ஆண்  பால்
  6- தில்சா -  பெண்  பால்
   7- ஆதிலா- ஆண்  பால்
              இன்னும் சில

        பெயருக்கு பொருத்தமற்றவை
        ********************************
அரபுக்கள்  தன்  குழந்தைகளின் பெயரை எழுதி  விட்டு   அவரின்  தந்தை  என்று அறிமுகம்  செய்வார்கள்  உதாரணமாக

    அபூ ஷாலிஹ். சாலிஹின் தந்தை

    அபூ என்பது  தந்தை  என்ற  பொருள் கொண்டது

      உங்கள்  பிள்ளைக்கு  அபூ ஷாலிஹ் என்று  பெயர்  வைத்தால் 
யாருக்கு  அவன்  தந்தையாக  இருக்க முடியும்?  என்ற  கேள்வி  வரும்

      உம்மு  என்றால்  தாய்  என்று பொருள்

     உங்கள்  பெண்  பிள்ளைக்கு உம்மு ஹபீபா  என்று  நீங்கள்  பெயர் வைத்தால்      அவள் ஹபீபா என்பவளுக்கு தாய் என்று பொருள்

       சில  நேரங்களில்  காரணங்களோடு  அடை மொழியாக  பயன் படுதுவது  தவறில்லை

    அபூஹீரைரா  என்றால் பூனையின் தந்தை என்று தான் பொருள்

பூனையின்  மீது  பாசமுள்ளவராக அந்த  சஹாபி இருந்ததால் நபி(ஸல்) அவர்கள்  செல்லமாக  அவரை அழைத்த பெயரே  அபூஹீரைரா என்பதாகும்.
அந்த. சஹாபியின்  எதார்த்த பெயர் அப்துர் ரஹ்மானாகும்.

  தனி  எழுத்துக்கள்  பெயருக்கு தகுதியா?
  ***************************************
   ஒருவருக்கு  அ .ஆ. இ.சிற

  என்று பெயர் சூட்டுதல் எவ்வாறு பெயருக்கு  பொறுத்தமில்லையோ அது போலத்தான்

1-யா  சீன் -     யாசீன்
2-தா  சீம் -       தாசீம்
3- ஹா மீம்-   ஹாமீம்
4- தா  ஹா-   தாஹா

             என்ற பெயர்கள்  அமைந்துள்ளது

  இது  போன்ற  எழுத்துப் பெயர்கள் சஹாபாக்களின்   பெயரில் இது வரை நாம்  பார்த்ததில்லை

   மேலும்  முஹம்மத்  என்பது ஒரு பெயராகும்.   ஒருவரை  அழைக்கவும் அதுவே  போதுமானது

நடைமுறையில்  ஆண்களுக்கு முஹம்மத்  என்ற. பெயருடனே சேர்த்து மற்றொரு பெயர் இணைக்கப் படுகின்றது.
இது அவசியமில்லை   அவ்வாறு இரு பெயர்  சூட்டினாலும்  அந்த  இரு பெயர் கொண்டு  யாரும் அழைக்கப் படுவதுமில்லை

முஹம்மத்  அப்பாஸ்  என்று  நீங்கள் பெயர்  வைத்தால்  அவர் அப்பாஸ் என்று  மட்டுமே  அழைக்கப் படுவார்

இது நபியின் மீது வைத்துள்ள நேசமாக தோன்றினாலும்   இது மார்க்கம்  கற்றுத் தந்தை  நேசத்தின் அடையாளமுமல்ல

அவ்வாறு  இருந்தால் சஹாபாக்கள் தனது  பெயருடன்  முஹம்மத் என்ற பெயரையும்  இணைத்திருப்பார்கள்
அப்படி  நாம்  காண முடியவில்லை
விரும்பினால்  முஹம்மத் என்று மட்டும்  பெயர்  சூட்டுங்கள்

     ஒருமைப்  பெயர்கள்
    ---------------------
அம்மாவை   அம்மாக்கள் என்று அழைப்பதில்லை  அது  இலக்கண ரீதியில்  சரியானதுமில்லை
      ஆனால்  சில முஸ்லிம்களின் பெயர்கள்  அந்த. பண்மை  தோரணையில்  உள்ளது

1- ஜவ்ஹருல்லாஹ்  ---- சரி
2- ஐவாஹிருல்லாஹ்---- தவறு

  3- பக்ரு --- சரி
  4- பாக்கர்--- தவறு (அபூபக்கர்)

   5- ஜீலானி ---- சரி
   6- ஜெய்லானி ----தவறு

   7-வலியுல்லாஹ் ---சரி

  8-- அவ்லியா--தவறு

        சாதி  இனப் பெயர் இணைத்தல்
         *******************************
 
ஜாதி  ,இன உணர்வு  ஏற்றத் தாழ்வுகள், இஸ்லாமிய சமூகத்தில் இல்லையானாலும்  அதன் வாடை கூட முஸ்லிம்கள்  தவிர்க்க வேண்டும்

பெயருக்கு  முன்னால் அடையாளமாகப் போடப்படும்  இராவுத்தர்,மரைக்காயர், தக்னீ, லெப்பை,  இது போன்ற தவறுகள் நீக்கப் பட வேண்டும்

  இறைவனுக்கு பிடித்தமானவை
  *********************************

  நீங்கள்  வைக்கின்ற  பெயர்களில் அல்லாஹ்விற்க்கு  பிடித்தமானவை அப்துல்லா,  அப்துர் ரஹ்மான்    என்பதாகும்  என  நபி( ஸல்)  சொன்னார்கள்

அபூஹீரைரா.ரலி. திர்மிதி.

   இறைவனின்  99 திருநாமங்களிலும்  அப்து என்ற வார்த்தையை இணைத்து  நீங்கள்  விரும்பினால்  பெயர் வைக்கலாம்

அப்து   என்றால்  ஆண் அடிமை என்றே பொருள்
அப்படியானால் பெண்களுக்கு இச் சிறப்பு  இல்லையா  என்று சிலருக்கு தோன்றலாம்

     இறைவனின்  திருநாமங்களோடு  அமத்  என்ற வார்த்தையை  இணைத்து  பெண்  குழந்தைகளுக்கு பெயர்  சூட்டலாம்

அமத்  என்றால்  அடிமைப் பெண் என்று பொருள். 
    அமதுல்லாஹ்  என்றால் அல்லாஹ்வின் * அடிமைப் பெண் * என்று பொருள்

இந்தப்  பெயருக்கு  சிறப்பை சொல்லியுள்ளதால்  இதை தான் சூட்ட வேண்டும்  என்றில்லை

நபி (ஸல்) அவர்களே  தன் மகனுக்கும்,  பேரர்களுக்கும்,  அப்துல்லாஹ் என்று பெயர்   சூட்டவில்லை.  நீங்கள் விரும்பினால்  சூட்டிக்  கொள்ளலாம்

லேட்டஸ்டாக பெயர்  வைக்க வேண்டும்  என்பற்காக  மனதில்  தோன்றுபவைகளை   எல்லாம் பெயராக சூட்டாமல்

இறைவன்  தடுக்காத   அழகிய பெயரை உங்கள் சந்ததியினர்களுக்கு சூட்டுங்கள்

நட்புடன் : இம்தாதி