பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, July 30, 2010

இட ஒதுக்கீடு தீ இந்தியா முழுவதும் பரவுவது நிச்சயம்

தமிழகத்தில் பற்ற வைக்கப்படும் இந்த இட ஒதுக்கீடு தீ இந்தியா முழுவதும் பரவுவது நிச்சயம் இன்ஷாஅல்லாஹ்!


 அடிமை இந்தியாவிலாவது முஸ்லிம்களுக்கென்று ஓரளவேனும் அரசியல் அதிகாரத்தில் கண்ணியம் இருந்ததைப் பார்க்க முடிகிறது.சுதந்திர இந்தியாவிலோ திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.அரசியல் அதிகாரத்தின் உயர் மட்டங்களிலும், பதவிகளிலும் முஸ்லிம்களுக்கென்று ஏதேனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறதா? ரப்பர் ஸ்டாம்பாக இருக்கும் அந்தஸ்தில் உள்ள ஜனாதிபதி போன்ற பதவிகளைத் தவிர அரசோச்சும் செல்வாக்கில் உள்ள பிரதமர்,முதல்வர், தலைமைத் தேர்தல் ஆணையர், சட்டசபை, மக்களவை சபாநாயகர் போன்ற பதவிகளில் நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து எத்தனை முஸ்லிம்கள் இருந்துள்ளனர்?! உங்கள் பார்வைக்கு கீழே ஒரு பட்டியலைத் தருகிறோம்.

பிரதமர்கள்
இந்தியாவின் பிரதமர்களாக

ஜவஹர்லால் நேரு(1947-1964)


குல்ஜாரிலால் நந்தா(1964 மே-ஜுன் தற்காலிகம்)


லால் பகதூர் சாஸ்திரி(1964-1966)


குல்ஜாரிலால் நந்தா(1966 ஜனவரி 11-24 தற்காலிகம்)


இந்திராகாந்தி(1966-1977)


மொரார்ஜி தேசாய்(1977-1979)


கரண்சிங்(1979-1980)


இந்திரா காந்தி (1980-1984)


ராஜீவ் காந்தி (1984-1989)


வி.பி.சிங்(1989-1990)


சந்திரசேகர்(1990-1991)


வி.பி.நரசிம்மராவ்(1991-1996)


வாஜ்பேய்(16-5-1996 to 28-05-1996)


தேவகௌடா(01-6-96 to 20-4-97)


வாஜ்பேய்(1999-2004)


மன்மோகன்சிங் (2004முதல்இன்று வரை) இருந்துள்ளனர்.

சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த நாட்டில் 5ல் ஒரு பங்காக உள்ள முஸ்லிம்களில் ஒருவர் கூட பிரதமராக ஆக முடியவில்லை.அப்படிச் சொல்வதை விட பிரதமர் பதவிக்கான போட்டியில் கூட இல்லை என்பது எவ்வளவு வருத்தமான செய்தி.

இந்தியாவின் பிரதமர்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் நீண்ட காலமாக இருந்துள்ளனர்.இவர்கள் இந்த பதவிக்கு வருவதற்கு முஸ்லிம்களின் ஓட்டு தான் பெரும் காரணமாக இருந்துள்ளது.இப்படி முஸ்லிம்களின் ஓட்டுகளைப் பெற்று,பதவிகளை பிடித்த காங்கிரஸ் பிரதமர் பதவிக்கு முஸ்லிம் வராமல் பார்த்துக் கொண்டது ஒடுக்கு முறை இல்லையா?

தலைமை தேர்தல் ஆணையர்கள்
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்களாக

சுகுமார் சென்(1950-1958)


கே.வி.கே.சுந்தரம்(1958-1967)


எஸ்.பி.சென்வர்மா(1967-1972)


நாகேந்திர சிங்(1972-1973)


டி.ஸ்வாமிநாதன்(1973-1977)


எஸ்.எஸ்.ஷக்தர்(1977-1982)


ஆர்.கே.திரிவேதி(1982-1985)


பெரிசாஸ்திரி(1985-1990)


வி.எஸ்.ரமாதேவி(1990 நவம்பர் 26 முதல் டிசம்பர் 11 வரை), டி.என்.சேஷன்(1990-1996)


எம்.எஸ்.கில்(1996-2001),


ஜே.எம்.லாப்டோ(2001 to 2004)


டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி(2004-2005 பி.பி.தாண்டன் (2005-2006), என்.கோபாலசாமி(2006-2009)


நவீன் சாவ்லா(2009 முதல் இன்று வரை)

இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் மொத்தம் பதினைந்து தலைமைத் தேர்தல் ஆணையர்கள்இருந்துள்ளனர்.இவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் கிடையாது.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர்களாக இருக்கும் தகுதி முஸ்லிம்களுக்கு இல்லையா? அல்லது தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்டார்களா?!


தமிழக முதல்வர்கள்

தமிழகத்தின் முதலமைச்சராக தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்த
ராமசாமி ரெட்டியார்(1947-1949)


இராஜபாளையத்தைச் சேர்ந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா (1949-1952)


பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாஜி (1952-1954)


நாடார் சமூகத்தைச் சேர்ந்த காமராஜர்(1954முதல் 1963வரை3முறை)


உயர் சாதியைச் சேர்ந்த பக்தவச்சலம் (1963-1967)


முதலியார் சமூகத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை (1967-1969)


ஆகியோரும் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கருணாநிதி 5 முறையும்


கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.(1977 முதல் 1987 வரை 3 முறையும்)


அவரது மனைவி ஜானகி ஒரு முறையும் (1988 ஜனவரி 7 முதல் 30 வரை)


பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஜெயலலிதா 3 முறையும் இருந்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தை விட குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் தமிழகத்தின் முதல்வர்களாக ஆகியுள்ள போது முஸ்லிம்களால் முதல்வராக மட்டுமல்ல...முக்கிய பதவிகளைக் கூடத் தக்க வைக்க முடியவில்லை,காரணம் என்ன? முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டது எப்படி?தமிழக சபாநாயகர்கள்
+
தமிழக சட்டப்ரேவை சபாநாயகர்களாக சிவசண்முகப்பள்ளை(1946-1955), என்.கோபாலமேனன்(1955-56)


யு.கிருஷ்ணராவ்(1957-1961)


எஸ்.செல்லப்பாண்டி(1962-67)


சி.பா.ஆதித்தனார்(1967-1968)


புலவர் கே.கோவிந்தன்(1969-71)


கே.ஏ.மதியழகன்(1971-1972)


கே.கோவிந்தன்(1973-1977)


முனுஆதி(1977-1980)


கே.ராஜாராம்(1980-1985)


பி.எச்.பாண்டியன்(1985-1989)


தமிழ்க்குடிமகன் (1989-1991)


சேடப்பட்டி முத்தையா(1991-1996)


பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்(1996-2002)


கே.காளிமுத்து(2001-06)


ஆர்.ஆவுடையப்பன் (19.05.2006 முதல் இன்று வரை)

தமிழக சட்டசபையின் சபாநாயகர்களாக இவ்வளவு பேர் இருந்திருக்க ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பே கிடைக்கவில்லை.


'அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்த சிறப்பும் கிடையாது. வெள்ளையனுக்கு கருப்பனை விட எந்த சிறப்பும் கிடையாது இறையச்சத்தை தவிர' என்று நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதி 3270)

Thursday, July 29, 2010

நபிகளாரின் நற்குணங்கள்

நபிகளாரின் நற்குணங்கள்தன்னடக்கம்

நான்கு எழுத்து படித்து, பணமும் அதிகாரமும் வந்து விட்டால் அவர்களிடம் இருக்கும் பெருமையும் ஆணவமும் கேட்க வேண்டியதில்லை. ஆனால் இவ்வுலகத்தில் சிறப்புமிக்க இறைத்தூதராக இருந்த நபிகளார் எந்தக் கட்டத்திலும் பெருமை கொண்டதில்லை. பணிவும் தன்னடக்கமுமே அவர்களிடம் வெளிப்பட்டது.

ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்லிம், உலகத்தார் அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அந்த யூதர், உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அத்தவன் மீது சத்தியமாக! என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு) அந்த முஸ்லிம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்கடம் சென்று தனக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்ததையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்லிமை அழைத்து வரச் சொல்லி அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முதலிடம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நால் மூர்ச்சையாகி விடுவார்கள். நானும் அவர் களுடன் மூர்ச்சையாகி விடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெந்து எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் விதி விலக்கு அத்திருப்பானா என்று எனக்குத் தெரியாது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (2411)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவரையும் அவரது நற்செயல் (மட்டும்) சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது (அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் சொக்கம் புகமுடியும்) என்று கூறினார்கள்.

மக்கள், தங்களையுமா? அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், என்னையும் தான்; அல்லாஹ் (தனது) கருணையாலும் அருளாலும் என்னை அரவணைத்துக் கொண்டால் தவிர என்று கூறிவிட்டு, எனவே, நீங்கள் நேர்மையோடு (நடு நிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாக நடந்துகொள்ளுங்கள். உங்கல் எவரும் மரணத்தை விரும்பிட வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதன் மூலம்) நன்மையை அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர் வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (5673) நன்மையில் முந்திச் செல்லுதல் நபிகளார் எந்தக் காரியத்தை ஆர்வமூட்டினாலும் அதை, தாம் முதலில் செய்பவர்களாக இருப்பார்கள். கட்சித் தலைவர்களாக இருக்கும் பலர் பத்திரிக்கைகளில் படம் வரவேண்டும் என்பதற்காகக் கேமரா முன் வந்து நின்று விட்டு மாயமாகி விடுவார்கள். ஆனால் எந்தக் காரியத்தை செய்யத் தூண்டினாலும் அதைச் செய்யும் முதல் நபராகவும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் நபிகளார் திகழ்வார்கள்.

பத்ர் போர் நடந்த நாட்களில் நாங்கள் மூன்று பேர் ஒரு ஒட்டகத்தில் செல்லும் நிலைமையில் இருந்தோம். அபூலுபாபா(ரலி), அலீ (ரலி) ஆகியோர் நபிகளாருடன் சேர்ந்திருந்தார்கள். (இருவர் பயணம் செய்ய, மூன்றாம் நபர் நடந்து வருவார். இவ்வாறு பயணத்தை வைத்திருந்தனர்) நபிகளார் நடந்து வரும் முறை வந்த போது இரு நபித்தோழரும், நாங்கள் உங்களுக்காக நடக்கிறோம் (நீங்கள் ஒட்டகத்தில் அமர்ந்து வாருங்கள்) என்று கூறிய போது நீங்கள் இருவரும் என்னை விட வலிமை வாய்ந்தவர்கள் இல்லை. மேலும் உங்களை விட நன்மையில் தேவையற்றவனாகவும் இல்லை என்று பதிலளித்தார்கள். (நூல்: அஹ்மத் 3706)

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான், ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்கன் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே? என்று கேட்டேன். அவர்கள், நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்ப வேண்டாமா? என்று கேட்டார்கள். (தம் வாழ்நான் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்கன் உடல் சதை போட்ட போது அமர்ந்து தொழுதார்கள். ருகூஉ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ருகூஉ செய்வார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (4837)

பாதுகாவலர்

தம் தோழர்களைப் பாதுகாக்கும் கேடயமாக நபிகளார் திகழ்ந்துள்ளார்கள். பிரச்சனைகள், சிக்கல்கள் தம் தோழர்களுக்கு வந்து விட்டால் அதை நிவர்த்தி செய்யும் விதமாக முதலில் களத்தில் ஈடுபடும் மாபெரும் வீரராகவும் நபிகளார் திகழ்ந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (குணத்தாலும் தோற்றத்தாலும்) மக்கலேயே மிகவும் அழகானவர்களாகவும் மக்கலேயே அதிகக் கொடை குணம் கொண்டவர்களாகவும் மக்கலேயே அதிக வீரமுடையவர்களாகவும் இருந்தார்கள்.

(ஒரு முறை) மதீனாவாசிகள் இரவு நேரத்தில் (எதிரிகள் படையெடுத்து வருவதாகக் கேள்விப்பட்டு) பீதியடைந்தார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்கள் நடந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களை எதிர் கொண்டார்கள். சப்தம் வந்த திசையை நோக்கி மக்களுக்கு முன்பே நபி (ஸல்) அவர்கள் சென்று விட்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கழுத்தில் வாளைத் தொங்கவிட்டபடி அபூதல்ஹா (ரலி) அவர்களது சேணம் பூட்டப்படாத வெற்றுடலான குதிரையின் மீது அமர்ந்த வண்ணம், பீதியடையாதீர்கள். பீதியடையாதீர்கள் என்று (மக்களைப் பார்த்துச்) சொன்னார்கள். பிறகு, (தங்கு தடையின்றி) ஓடும் கடலாக இந்தக் குதிரையை நாம் கண்டோம் அல்லது இந்தக் குதிரை (தங்கு தடையின்றி) ஓடும் கடல் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6033)

நல்ல வார்த்தைகள்

அடுத்தவரைக் கண்டிக்கும் போதோ அல்லது சாதாரணமாகப் பேசும் போதோ அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பேசும் வழக்கமுள்ள தலைவர்கள் ஏராளம். பல கட்சிகளில் அருவருப்பாகப் பேசும் பழக்கமுடையவர்களை மாநிலப் பேச்சாளர்களாகவும் நியமித்துள்ளனர். ஆனால் நபி (ஸல்) அவர்களின் பேச்சில் கண்ணியமும் மரியாதையும் நிறைந்திருக்கும்.

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அவர்கள் எங்கடம் பேசினார்கள். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை; செயற்கையாகவும் அருவருப்பாகப் பேசுபவராக இருக்கவில்லை. மேலும், நபி (ஸல்) அவர்கள், நற்குணமுடையவரே உங்கல் சிறந்தவர் என்று கூறுவார்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்; மஸ்ரூக், நூல்: புகாரி (6035)

கெட்ட வார்த்தைகள் பேசுபவராகவோ, சாபமிடுபவராகவோ, ஏசுபவராகவோ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை. (ஒருவரைக்) கண்டிக்கும் போது கூட அவருக்கென்ன நேர்ந்தது? அவருடைய நெற்றி மண்ணில் படட்டும் என்றே கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6046)

பெரியவர்களுக்கு மரியாதை

தம்மை விட வயதில் மூத்தவர்களுக்கு நபிகளார் மரியாதை தருபவர்களாக இருந்தார்கள். இவ்வுலகின் இறுதி நாள் வரை உள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட இறுதி நபி என்ற ஆணவம் அவர்களிடம் இருக்கவில்லை. தம்மை, சிறு வயதில் எடுத்து வளர்த்த உம்மு ஐமன் (ரலி) அவர்களை மரியாதை நிமித்தம் அவர்களின் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்து வருவார்கள். அவர்கள் கோபப்படும் போது அமைதியாக இருப்பார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் (அவர்களது இல்லத்திற்குச்) சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன்.

உம்மு ஐமன் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரத்தைக் கொடுத்தார்கள். அதில் ஏதோ குடிபானம் இருந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருந்தார்களோ, அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் அ(ந்தப் பானத்)தை விரும்பவில்லையோ தெரியவில்லை. (அதை அவர்கள் பருக மறுத்து விட்டார்கள்.)

அதற்காக உம்மு ஐமன் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உரத்த குரலில் கோபமாகக் கடிந்து கொண்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (4848)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், நம்மை (அம்மையார்) உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்து வருவோம் என்று கூறினார்கள்.

அவ்வாறே உம்மு ஐமன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்ற போது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட) அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே? என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு ஐமன் (ரலி) அவர்கள், அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழவில்லை. மாறாக, வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்) என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச் செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவருமே அழலாயினர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (4849)

உணர்வுக்கு மதிப்பளித்தல்

சிறியவராக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் அவர்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அது மார்க்கத்திற்கு முரணாக இல்லாத போது அதை நிறைவேற்றி வைப்பது சிறந்த பண்பாகும். இதை நபிகளார் அவர்கள் செய்து சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறார்கள்.

ஒரு பெருநாளின் போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி (ஸல்) அவர்கள் தாமாகவோ அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ, நீ பார்க்க ஆசைப்படுகிறாயா? எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர்.

(பிறகு அவர்களை நோக்கி) அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள் என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்த போது, உனக்கு போதுமா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அப்படியானால் (உள்ளே) போ! என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (950)

நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமது மேல் துண்டால் மறைத்துக் கொண்டிருக்க, பள்ளிவாசலில் (ஈட்டியெறிந்து) விளையாடிக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். நானாக சடைந்து விடும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். விளையாட்டுகள் மீது பேராவல் கொண்ட இளம் பெண் எவ்வளவு நேரம் வேடிக்கை பார்ப்பாள் என்பதை நீங்களே மதிப்பிட்டுக் கொள்ளுங்கள்!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 5236

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் விளையாட்டைப் பார்க்க ஆசைப்பட்ட போது அதற்கு நபி (ஸல்) அவர்கள் தடையாக இருக்கவில்லை. மாறாக ஆயிஷா (ரலி) அவர்களுக்காகத் தாமும் பார்த்ததுடன், அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், போதும்! போதும்! என்று சொல்லும் அளவுக்குத் தோள் கொடுத்து நின்று, பார்க்கச் செய்துள்ளார்கள். இறைத் தூதராக இருந்த நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனையோ பணிகள் இருந்த போதும் மனைவியின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டும் என்று அறிந்து அதற்கும் நேரத்தை ஒதுக்கியுள்ளார்கள்.

நான் (சிறுமியாக இருந்த போது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்த்து) விளையாடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (6130)

ஆசையோடு தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைக் கடிந்து கொள்ளவும் இல்லை, தடுக்கவும் இல்லை. மாறாக அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அவர்களைத் தோழிகளிடம் மீண்டும் விளையாட அனுப்பியுள்ளார்கள்.

---Dheen Gula Penmani - June 2008

தவிர்ந்து கொள்ளுங்கள்

தவிர்ந்து கொள்ளுங்கள்


கஞ்சத்தனம்

இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்து, நாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும். ஆனால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்பவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன.

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தங்களுக்குச் சிறந்தது என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 3:180)

கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகளணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரது அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1433, 1444) கஞ்சத்தனம் செய்து சேமித்து வைக்கும் பலரின் பணம் இரவோடு இரவாக திருடப்பட்டு விடுவதையும், அவர்களுக்குப் பெரும் செலவை இழுத்து வைக்கும் நோய்கள் வருவதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சந்தேகம் கொள்வது

நமக்குள் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம் தவறான வீண் சந்தேகம் தான். கணவன், மனைவி, நண்பர்கள், நிர்வாகம் என அனைத்து மட்டத்திலும் கட்டமைப்பை சீர்குலைக்கக் கூடிய கொடிய நோயாக உள்ளது இந்த சந்தேகம் தான்.

ஒருவர் ஒரு நேரத்தில் செய்த தவறான நடவடிக்கைகளை வைத்து அவருடைய அனைத்துச் செயல்களையும் குற்ற உணர்வோடு நம்முடைய மனதில் நாமே ஒரு மாயையை உருவாக்கி அதற்குச் செயல் வடிவம் கொடுத்து விடுகிறோம். இது தவறிலிருந்து ஒருவர் திருந்தாமல் மீண்டும் அவர் அந்தத் தவறைச் செய்வதற்குத் தூண்டுவதாகவும் அமைந்து விடும்.

இதனால் தான் இஸ்லாம், அவர் தவறு செய்யும் கட்டத்தில் உள்ள அந்த நிலையை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறது சாட்சி இருந்தால் தான் அந்தத் தவறைக் கூட உண்மைப்படுத்துகிறது. பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தையும் நபிகளாரின் பொன்மொழிகளையும் பாருங்கள்:

நம்பிக்கை கொண்டோரே! ஊகங் களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)

(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்கன் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். (நூல்: புகாரி 5143)

எந்த அடிப்படையும் இல்லாமல் தவறான எண்ணம் கொள்வது மிகப் பெரிய பொய் செல்வதைப் போன்றதாகும் என்று நபிகளார் எச்சரித்துள்ளதைக் கவனத்தில் கொள்க!

தீய பேச்சுக்கள்

நம் நாவிலிருந்து உதிரும் பேச்சின் கடினத்தை விளங்காமல் அடுத்தவரது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர்களுக்கு நபியவர்கள் விடுக்கும் எச்சரிக்கை இதோ:

ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6477) இதைப் போன்று, ஒருவர் செய்த தவறுக்காக அவரின் பெற்றோரைத் திட்டும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இவைகள் அறியாமைக் காலப் பழக்கங்கள் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரே போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசி விட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஉரூர், நூல்: புகாரி (30)

மோசடி

நம்பிக்கை மோசடி இன்று சர்வ சாதாரணமாக நடக்கிறது. வியாபாரம் என்றால் அதில் பல வகையில் நூதனமாக மோசடி செய்கிறார்கள். இவ்வாறு மோசடி செய்து பணம் சம்பாதிப்பவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளட்டும். மறுமை நாளில் நரகத்தின் அடித்தட்டில் கடும் வேதனைப்படும் நயவஞ்சகர்கள் தான் இவ்வாறு செய்வார்கள் என்று கூறியுள்ளார்கள். நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3333)

முகஸ்துதி

தனிமையில் ஒரு நன்மையைச் செய்வதை விட, பிறர் இருக்கும் போது தான் அதில் அதிக ஈடுபாடு காட்டி செய்கிறோம். ஏன்? அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக! வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக! இவ்வாறு மறுமை வெற்றியை முன்னிலைப் படுத்தாமல், மறுமையில் நன்மை தரும் செயல்களில் முகஸ்துதியை விரும்பினால், அதனால் நன்மை கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நம் இறைவன் (காட்சியப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெப்படுத்தும் அந்த (மறுமை) நால், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறி விடும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி (4919)

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நால்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நால்) அம்பலப்படுத்துவான் என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி (6499) மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கி யிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்? என்று இறைவன் கேட்பான். அவர், (இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன் என்று பதிலளிப்பார்.

இறைவன், (இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, மாவீரன் என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது) என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று, அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்? என்று இறைவன் கேட்பான். அவர், (இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன் என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், (இல்லை) நீ பொய் சொல்கிறாய். அறிஞர் என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; குர்ஆன் அறிஞர் என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்? என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன் என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், (இல்லை) நீ பொய் சொல்கிறாய் இவர் ஒரு புரவலர் என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப் படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3865)

பேராசை

செல்வத்தைத் தேடலாம். ஆனால் செல்வமே வாழ்க்கை என்று அதைத் தேடுவதிலேயே முழுக் கவனம் செலுத்தி இறைக்கடமைகளை புறக்கணித்து விடக் கூடாது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைக் கொண்டு அலைந்தால் மனநிம்மதியும் இழந்து மார்க்க ஒழுங்களை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகளை பாருங்கள்.

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) இறைவன் உங்களுக்காக வெக் கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகி றேன் என்று சொன்னார்கள். பூமியின் வளங்கள் எவை? என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் (கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை) என்று பதிலத்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம் (செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா? என்று வினவினார். அதற்கு (பதிலக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் கேள்வி கேட்டவர் எங்கே? என்று வினவினார்கள். அம்மனிதர் (இதோ) நான் (இங்கிருக்கிறேன்) என்று கூறினார். அந்த பதில் வெப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்று விடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பி விடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெயேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.

இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகல் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி (6427)

ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்கலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (6436)

(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6446)

பனைக்குளம் அர்ஷத் அலீ
--Dheengula Penmani Jun 08

Tuesday, July 20, 2010

“ இருளிலிருந்து ஒளி” க்கு முஸ்லிம்களையே முதலில் மீட்க வேண்டும்

“ இருளிலிருந்து ஒளி” க்கு முஸ்லிம்களையே முதலில் மீட்க வேண்டும்

 நாம் இந்துக்களா ? முஸ்லிம்களா ?

“ இருளிலிருந்து ஒளி” க்கு  முஸ்லிம்களையே முதலில் மீட்க வேண்டும்

*இந்த கொடுமைகளை மூடி மறைத்து இஸ்லாமிய பணி புரிவதால் ஏதும் பிரயோசனம் இல்லை எனபதை நாங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

*விழியிழந்த குருடன் மற்றவருக்கு வழிகாட்டத்தான் முடியுமா?

In the Name of.... மத்ஹப்..........

In the Name of.... மத்ஹப்..........

 

 மத்ஹபுகளில் காணப்படும் ஆபாசத்தைப் போதிக்கும் சட்டங்கள் சிலவற்றைப் தெளிவு படுத்தவுள்ளோம். ஒருவன் இப்படியெல்லாம் சிந்திப்பானா? என்று எண்ணுமளவிற்கு மத்ஹபு நூலாசிரியர்கள் கற்பனை செய்துள்ளார்கள். வக்கிர புத்தி கொண்டவர்களை விடவும் இந்த மத்ஹபு நூலாசிரியர்கள் மிக மோசமாக கற்பனை செய்துள் ளார்கள் என்பதை நாம் அவர்களது நூற்களிருந்தே மேற்கோள்காட்டுவதிலிருந்தே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றிருக்கின்றோம்.


இத்தகைய இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் அடிப்படையில் பின்வரும் மத்ஹபுச் சட்டம் அமையப் பெற்றிருப்பதைப் பாருங்கள்.


MATHHAB-1 : ஒரு நாய் அல்லது பன்றி மனித இனத்தைச் சார்ந்த பெண் மீது பாய்ந்து உடலுறவு கொண்டு அவள் ஒரு மனிதக் குழந்தையைப் பெற்று விட்டால் அந்தக் குழந்தை அசுத்தம்தான். இவ்வாறு அசுத்தமாக இருப்பதுடனே தொழுகை மற்றும் இதர கடமைகள் அவன் மீது கடமையாக்கப்பட்டுவிட்டன. அக்குழந் தையை (தொடக்கூடாது இருப்பினும்) தொடுவது நிர்ப்பந்தமாக இருப்பதால் மன்னிப்பு உண்டு. அவன் மேல் ஈரம் இல்லாவிட்டால் பள்ளிக்கு வருவது கூடும். (நூல் பத்ஹுல் முயீன் ஷரஹுகுர்ரதுல் ஐன் பாகம்-1 பக்கம்-34)


எவ்வளவு மடமைத்தனமான விடயத்தைப் போதிக்கிறது இந்த ஷாபி மத்ஹபு நூல் பார்த்தீர்களா? இப்படி யாராவது சிந்திப் பார்களா? நாய் பன்றி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டு மனிதக் குழந்தை பிறந்தால் என்ற நிபந்தனையுடன் ஆபாசம் ஆரம்பமாகிறது. அப்படியென்றால் நாய் பன்றி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டால் நாயும் பன்றியும்தான் பெண்ணின் வயிற்றில் வளரும் என்று இந்நூலாசிரியர் சொல்ல வருகின்றாரா?


அதனால்தான் மனிதக் குழந்தை பிறந்தால் என்ற நிபந்தனை போட்டார் போலும். இஸ்லாத்திற்கு வெளியே இருப்பவர்கள் இதை அறிந்தால் இஸ்லாத்தைப் பற்றி எப்படி கணிப்பிட்டுக் கொள்வார்கள். மேலும் அக்குழந்தை அசுத்தம் என்று கூறி விட்டு தொழலாம் என்று கூறுவது எவ்வளவு மடமைத்தனம். சிந்தியுங்கள் இச்சட்டம் எவ்வளவு பைத்தியகாரத்தன மாகவும் ஆபாசமாகவும் உள்ளது என்பது விளங்கும். கிறுக்குத் தனமானதும் முட்டாள் தனமானதுமான மற்றுமொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.


MATHHAB_2

உண்ணத்தக்க பிராணி இரண்டும் உடலுறவு கொண்டு மனித வடிவில் குழந்தை பெற்றால் அவன் தூய்மையான வனாவான். அவனை உண்ணலாம். இவன் குர்ஆனை மனனம் செய்து கதீபாக பணிபுரியலாம். நமக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை இவன் நடத்தலாம். தொழுகை முடிந்த பிறகு அவனையே குர்பானியும் கொடுக்கலாம். (நூல்: இஆனதுத் தாலிபீன் பாகம்-1 பக்கம்-113)


ஆடும் ஆடும் சேர்ந்தால் ஆடுதானே பிறக்கும் மனிதன் பிறப்பானா? பிறக்கக் கூடும் என மத்ஹபு கூறுகிறது. ஒரு ஆடு மாட்டுடனோ அல்லது மாடு ஆட்டுடனோ சேர்ந்தால் மனித வடிவில் குழந்தை பிறக்கலாம் என மத்ஹப் கூறுகிறது. இது நடைமுறைச்சாத்தியமா? அறிவியல் இதை நம்புமா? இஸ்லாம் இப்படிப்பட்ட உளறலை கூறியிருக்குமா? அறிவுடையோர் இதை ஒப்புக் கொள்வார்களா? சிந்தியுங்கள். மிருகமும் பெண்ணும் சேர்ந்த பின் பிறக்கும் குழந்தை அசுத்தமாம் மிருகமும் மிருகமும் சேர்ந்த பின் பிறக்கும் குழந்தை சுத்தமாம் வித்தியாசம் ஏதேனும் தெரிகிறதா? அறிவுள்ளவன் எவனாக இருந்தாலும் இச்சட்டத்தைப் பார்த்தால் கொதித்தெழவே செய்வான்.மனிதப் பண்புகளை வேரோடு தகர்த்தெறியும் இச்சட்டத்தை ஏற்க எந்த மனிதனாவது முன்வருவானா? மத்ஹப் வாதிகளே சிந்தியுங்கள்!


இச்சட்டத்தை நீங்கள் ஏற்பீர்களா? இனியும் இந்த மத்ஹபு தேவைதானா?


மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.


Mathhab_3ஆணுறுப்பு என்ற வார்த்தை தன்னுடைய ஆணுறுப்பையும் குறிக்கும். எனவே ஒருவன் தன்னுடைய ஆணுறுப்பைத் தனது பின் துவாரத்தில் விட்டான் என்றால் அதற்காக அவனுக்குத் தண்டனை கொடுக்கப்படும். (நூல்: இஆனதுத் தாலிபீன் பாகம்-4 பக்கம்-162)


எப்படி சிந்தித்துள்ளார்கள் இந்த மத்ஹபு வாதிகள் பார்த்தீர்களா? மிருகஜாதிக்கு மட்டுமே தோன்றக்கூடிய கற்பனைகளை மார்க்க சட்டங்கள் என்ற பேரில் இவர்கள் எழுதி வைத்துள்ளனர். குர்ஆன் ஹதீஸில் இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கூட கேட்க முடியாத அளவுக்கு நா கூசுகின்ற அருவருக்கத் தக்க ஆபாசங்களை உள்ளடக்கியுள்ள இந்த மத்ஹபு நூற்களை என்ன செய்வது?


மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.


மார்க்கக் கடமைகள் விதியாக்கப்பட்ட வயதினன் தனது ஆணுறுப்பை ஒரு சிறுமியின் பெண்ணுறுப்பில் நுழைத்து விடுகிறான். அந்தச் சிறுமி ஒருநாள் குழந்தையாக இருப்பினும் அவ்வாறு நுழைந்ததற்காக அவனுக்கு (விபச்சாரத்திற்கான) தண்டனை வழங்கப்படும். அதுபோல் ஒரு பெண் தனது பெண்ணுறுப்பில் ஒரு சிறுவனுடைய ஆணுறுப்பை நுழைத்து விடுகிறாள். அந்த சிறுவன் ஒருநாள் வயதுப் பையனாக இருப்பினும் அவ்வாறு அவள் நுழைத்ததற்காக அவளுக்கு விபச்சாரத்திற்கான தண்டனை வழங்கப்படும். (நூல் இஆனதுத் தாலிபீன் பாகம்-4 பக்கம்-162) இச்சட்டங்களை எழுதுவதற்குக்கூட கை கூசுகிறது என்ன செய்வது மத்ஹபுகளுக்கு வக்காளத்து வாங்குபவர்களுக்கு மத்ஹபுகளிலுள்ள அபத்தங்களை எடுத்துக் கூறியாவது அதிலிருந்து அவர்களை விடுபட வைப்பது எமது கடமை என்பதால் இவைகளைக் கூறுகின்றோம். மேற்கூறப்பட்ட ஆபாசச் சட்டங்கள் அனைத்தும் எமது நாட்டிலுள்ள அறபு மத்ரஸாக்களில் போதிக்கப்படும் ஷாபி மத்ஹபு நூற்களில் காணப்படுபவைகளாகும்.


இதைவிட மோசமாகவும் கேவலமாகவும் நாங்களும் சளைத்தவர்களல்ல என்ற அடிப்படையில் ஹனபி மத்ஹபுக்காரர்கள் சிந்தித்திருப்பதை நாம் இப்போது சொல்லும் தகவலை வைத்து நீங்கள் புரிந்து கொள்லாம்.


ஒருவன் தனது ஆணுறுப்பை ஒரு மிருகத்திடம் அல்லது இறந்துவிட்ட பெண்ணிடம் இந்திரியம் வெளிப்படாதவாறு செலுத்தினால் அல்லது மிருகத்தின் (பெண்) உறுப்பைத் தொட்டால் அல்லது தன்னுடைய ஆணுறுப்பின் துவாரத்தில் தண்ணீரை அல்லது எண்ணையை சொட்டவிட்டு அது உள்ளே இருக்கும் மூத்திரப் பையை அடைந்தாலும் சரி நமது மத்ஹபின் படி (நோன்பு முறியாது) (நூல்: அத்துர்ருல் முக்தார் பாகம்-2 பக்கம்-439)


எப்படி கற்பனை பார்த்தீர்களா? இப்படியெல்லாம் ஒருவன் கற்பனை செய்வானா? எவ்வளவு ஆபாசமாக இம்மத்ஹபுச் சட்டம் உள்ளது. சிந்தியுங்கள் இனியும் மத்ஹபுப் பிடிவாதம் தேவைதானா?


மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் ஹனபி மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.


mathhab_4 தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லின் பிரகாரம் பார்த்தால் ஆசை ஏற்படாத சிறுமியிடம் அல்லது இறந்துவிட்ட பெண்ணிடம் அல்லது ஒரு மிருகத்திடம் உடலுறவு கொள்வதால் வுழு நீங்க மாட்டாது. ஆண் குறியை மாத்திரம் கழுவி விட வேண்டும். (நூல்: அத்துர்ருல் முக்தார்: பாகம்-1இ பக்கம்-179)


இவ்வளவு ஆபாசமாகக் கூட கற்பனை செய்ய முடியுமா? மத்ஹப்வாதிகள் கறபனை செய்தது போன்று கற்பனை செய்யலாம் என்று வைத்துக் கொள்வோம். இந்தச் சட்டங்களுக்கு ஆதாரமாக அமைந்த அல்குர்ஆன் வசனங்கள் யாவை? அல்லது ஹதீஸ்கள் யாவை? அடுத்து இவர்கள் கூறும் மேற்கூறப்பட்ட சட்டத்திற்கு ஒத்த மற்றொரு சட்டத்தைப் பாருங்கள்.


பார்த்தால் ஆசை ஏற்படாத சிறுமியிடம் உடலுறவு கொள்வதால் குளிப்பு கடமையாகாது. வுழுவும் நீங்காது. இதைச் செய்தால் குளிப்பு கடமையில்லை என்று கூறும் போது இது செய்யத்தக்க காரியம் என்ற கருத்து மறைந்துள்ளது. இப்படி நடக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இதனால் குளிப்பு கடமையில்லை என்று எப்படிக் கூற முடியும்? அதற்கான ஆதாரம் என்ன?


மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் ஹனபி மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.


mathhab_5 ஒருவர் தனது மறைவுறுப்பில் துணியைச் சுற்றிக் கொண்டு உடலுறவில் ஈடுபடுகிறார். அப்போது உடலுறவின் இன்பத்தை அவர் அடைந்தால் குளிப்புக் கமையாகும். இல்லையெனில் குளிப்புக் கடமை இல்லை.


உறுப்பிலே துணியைச் சுற்றிக் கொண்டு உடலுறவில் ஈடுபடும் சாத்தியம் உண்டா? சாத்தியம் என்று வைத்துக் கொண்டாலும் உடலுறவு இன்பத்தை அடைந்தால் மட்டும் குளிப்புக் கடமை என்று கூறுவது சரியா? இந்த ஹதீஸை வாசித்துப் பாருங்கள் பதில் கிடைக்கும்.


‘ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்துவிட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகி விடுகிறது. (விந்து வெளியாகாவிட்டாலும் சரியே!) என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-291)


இதே ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஹதீஸ் தெளிவாக குளிப்பு கடமை என்று கூறியிருக்க மத்ஹப் கூறும் கற்பனைச் சட்டம் கூடாது என்கிறது எதை நாம் பின்பற்ற வேண்டும். தீய சிந்தனை கொண்டவர்களையும் வக்கிர எண்ணம் கொண்டவர்களையும் உருவாக்கிவிட முனையும் வகையில் ஆபாசத்தைத்தான் மதஹபுகள் போதிக்கின்றன என்பதை இனியாவது இந்த மத்ஹபு வாதிகள் சிந்தித்து மத்ஹபுகளை உதறித் தள்ளி விட்டு குர்ஆன்இ ஹதீஸின் பக்கம் வருவார்களா?


மூலம் -dharulathar.com & Ilmul Islam

 

 

Monday, July 19, 2010

பராஅத்தும் மத்ஹபுகளும்

பராஅத்தும் மத்ஹபுகளும்


நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.


இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)

மற்றொரு ஹதீஸில் வருகிறது
நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)

நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் ” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,

மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.

மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்

وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)

மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.

ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )

فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )

وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)

அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த கட்டுரை ஷாஃபான் மாதத்தில் TNTJ கிளைகளில் நோட்டிஸாக அடித்து வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டது!

Sunday, July 11, 2010

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா

இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாமா

? எங்கள் பள்ளியில் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் இமாமுக்குச் சம்பளம் கொடுக்கலாம் என்று பள்ளி நிர்வாகிகள் முடிவெடுத்தோம். ஆனால் அவர் சம்பளம் வாங்க மறுக்கிறார். 36:21வசனத்தில், உங்களிடம் கூலி கேட்காதவரைப் பின்பற்றுங்கள் என்று கூறப்படுவதை ஆதாரமாகக் காட்டுகிறார். இமாமுக்குச் சம்பளம் கொடுப்பது சரியா? தவறா? விளக்கவும்.வணக்கம் என்பது அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செய்யப்பட வேண்டும் என்பதிலோ, அதற்காக மனிதர்களிடம் கூலி கேட்கக் கூடாது என்பதிலோ இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை.

ஆனால் ஒருவர் மார்க்கப் பணிக்காகத் தனது முழு நேரத்தையும் செலவிடுகிறார். அதன் காரணமாக அவரால் தொழில் செய்யவோ பொருளீட்டவோ இயலவில்லை. அத்துடன் அவர் வசதி படைத்தவராகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் அவரது வணக்கத்துக்குக் கூலியாக இல்லாமல் அவரது தேவையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உதவித் தொகை வழங்கலாம். இத்தகையோருக்கு வழங்குவதற்குத் தான் முதலிடம் அளிக்க வேண்டும்.

அப்படி வழங்கப்படும் உதவித் தொகை அவர் செய்யும் வணக்கத்துக்குக் கூலியாகாது.

மார்க்கப் பணிகளுக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு உதவிகள் வழங்குவதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது மட்டுமல்லாமல் வலியுறுத்தப்பட்டும் உள்ளது.

(பொருள் திரட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவாறு அல்லாஹ்வின் பாதையில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு (தர்மங்கள்) உரியது. (அவர்களைப் பற்றி) அறியாதவர், (அவர்களின்) தன்மான உணர்வைக் கண்டு அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார். அவர்களின் அடையாளத்தை வைத்து அவர்களை அறிந்து கொள்வீர்! மக்களிடம் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்.

அல்குர்ஆன் 2:273

பொதுவாக ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்குத் தர்மம் செய்யலாம் என்பதை அனைவரும் அறிவர். ஒருவர் ஏழையாக இருப்பதுடன் மார்க்கப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்துள்ளார். மார்க்கப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது தான் அவர் ஏழையாக இருப்பதற்கே காரணமாகவும் உள்ளது. இதன் காரணமாக அவரால் பொருளீட்டவும் இயலவில்லை.

இத்தகையவர் ஏழையாக இருக்கிறார் என்பதற்காக மட்டுமின்றி மார்க்கப் பணியிலும் ஈடுபடுகிறார் என்பதையும் கவனத்தில் கொண்டு தர்மங்கள் வழங்குவது தவறில்லை என்று இவ்வசனத்திலிருந்து தெரிகிறது.

ஒருவர் பொருளீட்டுவதற்கான முயற்சி எதனையும் மேற்கொள்ளாமல் முழுக்க முழுக்க மார்க்கப் பணிக்காக அர்ப்பணித்துக் கொள்வதைக் குறை கூறக் கூடாது; மாறாக இது பாராட்டப்பட வேண்டிய சேவை என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

அதே சமயத்தில் இவ்வாறு மார்க்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொள்வோர் வேறு வருமானத்திற்கு வழியில்லை என்பதால் மற்றவர்களிடம் யாசிப்பதோ, சுய மரியாதையை இழப்பதோ கூடாது.

எந்த நிலையிலும் எவரிடமும் கேட்பதில்லை என்பதில் உறுதியாக அவர்கள் நிற்க வேண்டும். அவ்வாறு சுயமரியாதையைப் பேணுபவர்களுக்குத் தான் மார்க்கப் பணியைக் காரணம் காட்டி உதவியும் செய்ய வேண்டும். அவர்கள் யாசிக்க ஆரம்பித்து விட்டால் இந்தத் தகுதியை இழந்து விடுகிறார்கள் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறியலாம்.

பொதுவாகவே மார்க்கப் பணிகளில் ஈடுபடுவோருக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது, அவர்கள் தரித்திரர்களாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது.

மவ்லிது,ஃபாத்திஹா போன்ற பித்அத்துக்கள் உருவானதற்கும், மார்க்கத்தின் பெயரால் பொருளீட்டும் நிலை தோன்றியதற்கும் சமுதாயத்தில் நிலவுகின்ற இந்த மன நிலையும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல!

20.03.2010. 12:19

Source: http://www.onlinepj.com/

Abdul Aleem
Ayyampet
http://aleemislam.blogspot.com/

ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா?

ஆண்கள் பிளாட்டினம் அணியலாமா?

ஆண்கள் பிளாட்டினம் என்று சொல்லக்கூடிய அணிகலன்களை அணியலாமா?
பதில் :


தங்க ஆபரணங்களை அணிவதை மட்டுமே ஆண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

5055أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ أَبِي أَفْلَحَ الْهَمْدَانِيِّ عَنْ ابْنِ زُرَيْرٍ أَنَّهُ سَمِعَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ يَقُولُ إِنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ حَرِيرًا فَجَعَلَهُ فِي يَمِينِهِ وَأَخَذَ ذَهَبًا فَجَعَلَهُ فِي شِمَالِهِ ثُمَّ قَالَ إِنَّ هَذَيْنِ حَرَامٌ عَلَى ذُكُورِ أُمَّتِي رواه النسائي

அலீ பின் அபீ தாலிப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நபி (ஸல்) அவர்கள் பட்டை தனது வலக்கரத்திலும் தங்கத்தை தனது இடக்கரத்திலும் பிடித்து இவ்விரண்டும் எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாகும் என்று கூறினார்கள்.

நூல் : நஸாயீ (5055)

எனவே ஆண்கள் தங்கம் அணிவது மட்டுமே தடைசெய்யப்பட்டிருக்கின்றது. பிளாட்டினம் தங்கத்தை விட விலை உயர்ந்ததாக இருந்தாலும் அதை அணிவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.

கூடுதல் விபரங்களுக்கு ”ஆண்கள் கவரிங் அணியலாமா?” என்ற லிங்கையும் பார்க்க

05.04.2010. 18:16

ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாம�
ஆண்கள் கவரிங் நகை அணியலாமா? விற்கலாமா?

தங்க நகைகள் விற்பது போலவே கவரிங் நகைகளையும் விற்கலாம். மார்க்கத்தில் கவரிங் நகைகளை விற்கலாகாது என்று எந்தத் தடையும் இல்லை.(வாங்குவோரை) ஏமாற்றும் வியாபாரத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம் 2783

கவரிங் நகைகளைத் தங்க நகை என்று சொல்லியோ, அல்லது அதில் கலந்துள்ள தங்கத்தின் அளவை விட அதிக அளவு தங்கம் உள்ளதாகச் சொல்லியோ விற்றால் அது கூடாது. அதன் தரம் என்னவோ அதைச் சொல்லி விற்பதில் தவறில்லை.

பட்டாடை, தங்கம் அணிய ஆண்கள் தடுக்கப்பட்டுள்ளனர். ஆயினும் அவற்றில் விதி விலக்குகளும் உள்ளன.

தங்கத்தில் சிறிய அளவைத் தவிர நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர் : முஆவியா (ரலி)
நூல் : அஹ்மத் 16230, 16241, 16261, 16297, 16304 அபூதாவூத் 3701, நஸயீ 5060, 5061, 5068, 5069

இந்த அடிப்படையில் கவரிங், ஐம்பொன் போன்றவற்றை ஆண்கள் அணியலாம். ஏனெனில் இவற்றில் அடங்கியுள்ள தங்கம் இவற்றில் அடங்கியுள்ள மற்ற உலோகங்களுடன் ஒப்பிடும் போது சிறிதளவே உள்ளது.

பாதி தங்கமும், பாதி செம்பும் கலந்திருந்தால் அதில் உள்ள தங்கத்தை சிறிதளவு என்று யாரும் கூறுவதில்லை. அதனால் அதை ஆண்கள் அணியலாகாது.

அதிக விலையைக் காரணம் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கத்தைத் தடுக்கவில்லை. தங்கம் இலவசமாகக் கிடைக்கும் காலம் வந்தாலும் அப்போதும் ஆண்கள் தங்கம் அணியக் கூடாது.

தங்கத்திற்குத் தடை விதித்தால் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். பிளாட்டினம், வைரம் மற்றும் அதை விட மதிப்புள்ள பொருட்கள் எதுவானாலும் அணியலாம். இதையெல்லாம் கூடாது என்றால் அதை அல்லாஹ் சொல்லியிருப்பான்.

"உமது இறைவன் எதையும் மறப்பவனல்லன்'' (அல்குர்ஆன் 19:64)


Source: http://www.onlinepj.com/

Abdul Aleem
Ayyampet
http://aleemislam.blogspot.com/

அக்டோபஸ் உண்ணலாமா?

அக்டோபஸ் உண்ணலாமா?


அக்டோபஸ் - கடல் வாழ் உயிரினம் முஸ்லிம்களுக்கு ஹராமா?

பதில் :

أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَلِلسَّيَّارَةِ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ(96)5

உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.

அல்குர்ஆன் (5 : 96)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் "கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்கள்: அஹமது 6935

பொதுவாக கடலில் உணவாக கிடைக்கும் அனைத்தும் நமக்கு அனுமதி தான் என்று மேற்கண்ட வசனமும், நபிமொழியும் கூறுகிறது. எனவே அக்டோபஸ் உட்பட கடல்வாழ் உயிரினம் எதுவானாலும் அதை உண்ணலாம். ஆனால் அது உடலுக்கு உகந்த உணவா? என்பதை கவனித்து உண்ண வேண்டும். ஏனென்றால் நமக்கு கேடுதருகின்ற பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ(195)2

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் (2 : 195)

ஆனால் அக்டோபஸ் என்பது கடல் வாழ் உயிரினம் என்பதால் நம் உடலுக்குக் கேடு விளைவிக்காத பட்சத்தில் தாராளமாக உண்ணலாம்

31.03.2010. 21:40

Source: http://www.onlinepj.com/

Abdul Aleem
Ayyampet
http://aleemislam.blogspot.com/

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

பிற மதப் பண்டிகை


மாற்று மதத்தினர் தங்களது பண்டிகைகளின் போது தரும் பலகாரங்களை உண்ணலாமா? அவர்களுக்கு வாழ்த்து கூறலாமா?

பதில் :

ஆகுமான உணவுப் பொருட்களை மாற்று மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது. சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 16:115)

அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் "உஹில்ல'' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.

எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை அவர்கள் தரும் போது வாங்கக் கூடாது. மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

இது குறித்து நேரடி கேள்விகளுக்கும் பதி அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை வீடியோ வடிவில் காண

பிற மதத்தவரின் உணவை சாப்பிடலாமா

மேலும் பார்க்க

பிற மதப் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லலாமா என்ற கேள்விக்கு முன்னரே பதில் வெளியிடப்பட்டுள்ளது. அதைப் பார்க்கவும்

மேலும் இதையும் பார்க்கவும்

*****************************************************************************

பிற மதப் பண்டிகைகளின் போது வாழ்த்துக் கூறலாமா?

முஸ்லிம்கள்மட்டும் வாழும் பகுதியில் இது போன்ற பிரச்சனைகளுக்கு இடமில்லை. மற்ற்சமுதாய மக்களுடன் வாழும் போது அவர்கள் நம்முடைய பண்டிகைகளுக்கு வாழ்த்துசொல்லி அனபைப் பகிர்ந்து கொள்வதால் நாமும் அதற்கேற்ப நடக்க வேண்டும் என்றஎண்ணம் நமக்கு ஏற்படுகிறது. இது போன்ற பண்டிகைகளில் நமக்கு உடண்பாடுஇல்லாவிட்டாலும் நாம் வாழ்த்துச் சொல்லாவிட்டால் நம்மை மத வெறியர்களாகக்கருத்தும் நிலை ஏற்படும். நாளை சத்தியத்தை அவர்க்ளுக்கு எடுத்துச்சொல்வதற்கும் இது தடையாக அமைந்து விடும்.

இதன் காரணமாகவே இது குறித்து கேள்விகள் எழுகின்றன.

நம்முடைய மார்க்க வரம்பை மீறாமலும் அவர்கள் தவறாக எண்ணாமலும் இருக்கும் வகையிலான் வழிமுறைகள் இருந்தால் அதைக் கடைப்பிடிப்பதில் தவறு இல்லை.

பின்னர் நட்சத்திரங்களைக் கவனமாகப் பார்த்தார்.நான் நோயாளி எனக் கூறினார்.

அவரை விட்டு விட்டு அவர்கள் சென்றனர்.

திருக்குர் ஆன் 37:89

இவ்வசனத்தில் நான் நோயாளியாக இருக்கிறேன் என்று இப்ராஹீம் நபி சொன்னதாகக் கூறப்படுகிறது.

இது இறைவனுக்காக இப்ராஹீம் நபி சொன்ன பொய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். (பார்க்க: முஸ்லிம் 4371)

இப்ராஹீம் நபியவர்கள் நோயாளியாக இல்லாவிட்டாலும், இறைவனுக்காக நோயாளி என்று கூறியுள்ளார்கள் என்பது இந்த ஹதீஸிலிருந்து தெரிகின்றது.

இது போல் ஒரு தீமையில் பங்கேற்காமல் இருப்பதற்காக இது போன்ற பொய்களை நாம் சொன்னால் அது குற்றமாகாது.

பண்டிகைக்கும் வாழ்த்துக்கும் தான் நமக்கு அனுமதி இல்லை. ஆனால் முஸ்லிம் அல்லாத மக்கள் இவ்வுலகில் எல்லா வளமும் பெற்று வாழ இறைவனிடம் பிரர்த்தனை செய்ய அனுமதி இருக்கிறது. அது போல் அவர்கள் நேர்வழி சென்று மறுமை வெற்றி பெறுவதற்காக பிரார்த்தனை செய்வதற்கும் அனுமதி இருக்கிறது.

இந்த அனுமதிக்கு உட்பட்டு நல் வழி நடந்து எல்லா நாட்களும் எல்லா வளமும் உங்களுக்குக் கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என்று (இதே வார்த்தையை அல்ல) இது போன்ற கருத்தைத் தரும் வார்த்தைகளைத் தேர்வு செய்து கூறினால் அவர்கள் அதை வாழ்த்து என்று புரிந்து கொள்வார்கள். நாமும் வரம்பு மீறியவராக மாட்டோம்.

இன்னும் சொல்லப் போனால் அவர்கள் பயன்படுத்தும் வாழ்த்துக்களை விட இது அதிக மன நிறைவைத் தரும். நம்முடைய துஆ அல்லாஹ்வால் ஏற்கப்பட்டால் அவர்கள் இஸ்லாத்தில் ஈர்க்கப்படவும் வாய்ப்பு உண்டு.

மேலும் அந்தப் பண்டிகை தினத்தில் மட்டும் இன்றி அவ்வப்போது இது போல் பயன்படுத்திக் கொண்டால் பண்டிகைக்காக வாழ்த்தியதாக ஆகாது.

Source: http://www.onlinepj.com/

Abdul Aleem
Ayyampet
http://aleemislam.blogspot.com/

சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமா

சினிமா பாடல் அல்லாத பாடல் கேட்கலாமாகேள்வி: சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா? பாடலாமா? இசை வாசிக்கலாமா?-


குரான் மற்றும் ஹதீஸ் ஆதாரத்துடன் எடுத்துக் கூறவும்
பதில் :

இசை கூடுமா?

பாட்டுப் பாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியுள்ளதா? என்பதை அறிவதற்கு முன்னால் இசையைப் பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்பதை அறிந்து கொள்வோம்.

நவீன சாதனங்கள் அதிகரித்து விட்டதால் நாம் எங்கு சென்றாலும் அனைவரின் செவியிலும் இசைக் கருவிகளின் சப்தம் மிகுதியாக விழுந்து கொண்டிருப்பதை அன்றாட வாழ்வில் கண்கூடாகக் கண்டு வருகிறோம். மனிதனின் உடலில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஈர்ப்பதால் அதிகமான மக்கள் இதை விரும்பக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்டதாக இருந்தால் கண்டிப்பாக மக்களை இசையில் மூழ்காமல் காப்பது நம் மீது கடமை.

மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசையும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இமாம் இப்னு ஹஸ்ம், யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசையைக் கேட்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியம் தான் என்று கூறியுள்ளார்கள். இசை கூடாது என்ற கருத்தில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்று இவர்கள் கூறுவதால் இசை கூடும் என்ற நிலைப்பாட்டிற்கு வந்துள்ளார்கள்.

எனவே இவர்களின் கருத்து சரியானதா? அல்லது நாம் ஏற்கனவே இசை கூடாது என்று எடுத்த முடிவு சரியானதா என ஆய்வு செய்யும் போது இசை கூடாது என ஏற்கனவே நாம் எடுத்த முடிவே சரியானது என்பதை அறியலாம்.

இசை கூடாது என்று கூறக் கூடியவர்கள் புகாரியில் இடம்பெற்ற பின்வரும் செய்தியையே பெரும்பாலும் முதன்மையான ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் ஃகன்ம் அல் அஷ்அரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூஆமிர் (ரலி) அவர்கள் அல்லது அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறியதாவது)

நான் நபி (ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன் : என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள் நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

நூல்: புகாரி 5590

விபச்சாரம் மது பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையும் சேர்த்துச் சொல்லப்பட்டிருப்பதாலும் "இவற்றை ஆகுமாக்குவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது இவை ஆகுமானவை இல்லை என்பதை உணர்த்துவதாலும் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம் என்று இசை கூடாது என்று வாதிடுபவர்கள் கூறுகிறார்கள்.

இந்தச் செய்தியில் வரும் அறிவிப்பாளர்களில் ஹிஷாம் பின் அம்மார் என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பல அறிஞர்கள் நம்பகமானவர் என்று சான்று கூறியுள்ளார்கள். ஆனால் ஒருவரின் ஹதீஸ் ஏற்கப்படுவதற்கு நம்பகத்தன்மை மாத்திரம் இருந்தால் போதாது. அவரது நினைவாற்றலும் சரியாக இருக்க வேண்டும். ஒழுக்கத்திலும் நன்னடத்தையிலும் சிறந்து விளங்கிய எத்தனையோ அறிவிப்பாளர்கள் மோசமான நினைவாற்றலைப் பெற்றிருந்ததால் அறிஞர்களிடம் அவர்கள் பலவீனமானவர்களாகத் தான் கருதப்பட்டார்கள்.

ஒருவர் நல்ல மனனத்தன்மை கொண்டவராக இருந்து பிற்காலத்தில் ஏதோ ஒரு மாற்றத்தால் அவரது மூளை குழம்பிவிட்டால் அவர் நன்றாக இருந்த போது அறிவித்த செய்திகளை எடுத்துக் கொண்டு மூளை குழம்பிய பிறகு அறிவித்த செய்திகளை விட்டுவிட வேண்டும் என்று ஹதீஸ் கலை கூறுகிறது.

மனனத் தன்மையில் கோளாறு ஏற்படுவதற்கு முன்பு அறிவித்ததா? அல்லது பின்பு அறிவித்ததா? என்று நமக்குத் தெரியாவிட்டால் தெளிவு கிடைக்கும் வரை அவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ளாமல் நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலுள்ள ஹதீஸில் இடம் பெறும் ஹிஷாம் பின் அம்மார் என்ற அறிவிப்பாளர் முதியவரான போது அவரின் மனனத் தன்மை மாறி விட்டது. அப்போது அவரிடத்தில் கொண்டு வரப்பட்ட அனைத்து செய்திகளையும் ஆராயாமல் மற்றவர்களுக்குப் படித்துக் காட்டுவார். தனக்குச் சொல்லப்படுவதையெல்லாம் பிறகுக்கு எடுத்துச் சொல்பவராக இருந்தார். முந்தைய காலத்தில் தான் இவர் சரியாக அறிவிக்கக் கூடியவராக இருந்தார் என்று இமாம் அபூஹாதம் கூறியுள்ளார். அடிப்படையில்லாத நானூறுக்கும் மேற்பட்ட ஹதீஸ்களை இவர் அறிவித்திருப்பதாக இமாம் அபூதாவூத் கூறியுள்ளார். இவர் அதிகம் தவறு செய்யக் கூடியவர் என்று இமாம் அஹ்மத் பின் ஹம்பல் கூறியுள்ளார். இவரிடத்தில் ஹதீஸ்கள் சொல்லப்படும் போது அதையெல்லாம் இவர் ஏற்றுச் சொன்னதே இவரால் ஏற்பட்ட ஆபத்தாகும் என்று கஸ்ஸாஸ் என்பவர் கூறியுள்ளார்.

நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 30, பக்கம்: 242

இவர் முந்தைய காலத்தில் அறிவித்த செய்தி தான் சரியானது என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

எனவே புகாரியில் பதிவு செய்யப்பட்ட இச்செய்தியை ஹிஷாம் பின் அம்மார் மூளை குழம்புவதற்கு முன்பு அறிவித்தாரா அல்லது பின்பு அறிவித்தாரா என்று தெளிவு கிடைக்காததால் ஹிஷாம் அறிவிக்கும் இந்தச் செய்தியை இசை கூடாது என்பதற்கு முதன்மை ஆதாரமாகக் காட்ட முடியாது.

இந்த அறிவிப்பாளர் தொடர் பலவீனமாக இருந்தாலும் இதே செய்தி பிஷ்ர் பின் பக்ர் என்ற அறிவிப்பாளரின் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியை இமாம் பைஹகீ அவர்கள் அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தன்னுடைய நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா, பாகம்: 3, பக்கம்: 272

இந்தச் செய்தியை அறிவிப்பவர்கள் அனைவரும் நம்பகமானவர்கள். குறை சொல்லப்படாதவர்கள். எனவே இமாம் பைஹகீ அவர்கள் பதிவு செய்த ஹதீஸ் மார்க்கத்தில் இசை தடை செய்யப்பட்டுள்ளது என்பதற்குப் போதிய ஆதாரமாக உள்ளது. பைஹகீயில் உள்ள இந்த சரியான ஹதீஸைப் போன்றே புகாரியில் உள்ள ஹிஷாம் பின் அம்மார் அறிவிக்கும் செய்தி உள்ளதால் ஹிஷாம் பின் அம்மார் இந்த ஹதீஸில் தவறு செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.

எனவே இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒரு அம்சமாகும்.

இஸ்லாத்தில் பாட்டுப்பாடுவது கூடுமா?

பாடல்களைப் பொறுத்த வரை நல்ல கருத்துள்ள பாடல்களாக இருந்தால் அவற்றை இஸ்லாம் அனுமதிக்கின்றது. ஆபாசமான மற்றும் தவறான கருத்துக்கள் அடங்கிய பாடல்களை இஸ்லாம் தடை செய்கின்றது. நற்கருத்துகள் அடங்கிய பாடல்களை இசையின்றி பாடுவதற்கு மட்டுமே அனுமதியுள்ளது. பின்வரும் செய்திகள் இதற்கு ஆதாரங்களாக உள்ளன.

4001حَدَّثَنَا عَلِيٌّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ عَنْ الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ قَالَتْ دَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ بُنِيَ عَلَيَّ فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي وَجُوَيْرِيَاتٌ يَضْرِبْنَ بِالدُّفِّ يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ يَوْمَ بَدْرٍ حَتَّى قَالَتْ جَارِيَةٌ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُولِي هَكَذَا وَقُولِي مَا كُنْتِ تَقُولِينَ رواه البخاري

ருபய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். -(இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் பின் தக்வான் -ரஹ்- அவர்களிடம்) "எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போல நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள்'' (என்று ருபய்யிஉ கூறினார்கள்)- அங்கு சில (முஸ்லிம்) சிறுமிகள் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, "எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்'' என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், "இப்படிச் சொல்லாதே. (இதை விடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்'' என்று கூறினார்கள்.

புகாரி (4001)

மறைவான ஞானம் நபி (ஸல்) அவர்களுக்கு இல்லை. இறைவனுக்கு மட்டுமே இந்த ஞானம் இருக்கின்றது. முஹம்மது (ஸல்) அவர்களால் நாளை நடப்பதை அறிய முடியும் என்ற தவறான கருத்தை சிறுமி பாடிய போது அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்கிறார்கள். இதைத் தவிர்த்து விட்டு மற்றவற்றைப் பாடுமாறு அனுமதி கொடுக்கிறார்கள்.

எனவே தவறான கருத்துள்ள பாடல்களைப் பாடுவது கூடாது. நற்கருத்துள்ள பாடல்களை மட்டுமே பாடலாம்.

இந்தச் சம்பவத்தில் சிறுமிகள் கஞ்சிராக்களை அடித்து இசைத்ததாகக் கூறப்படுகின்றது. எனவே இசைக்கருவிகளைப் பயன்படுத்தி பாடுவதற்கு அனுமதியுள்ளது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

இசைக்கருவிகளை இஸ்லாம் தடுத்துள்ளது என்பதை முன்பே பார்த்தோம். திருமணம் பெருநாள் போன்ற சந்தோஷமான நேரங்களில் மட்டும் கஞ்சிராக்களை அடித்து பாடுவது அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. கஞ்சிராக்களுக்கு மட்டுமே இந்த அனுமதி உள்ளது. இந்த நேரங்களில் கஞ்சிராக்கள் அல்லாத தற்காலத்தில் உள்ள புதுபுது இசைக் கருவிகளைப் பயன்படுத்துவது கூடாது. இதைப் பின்வரும் சம்பவமும் விளக்குகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் ஒருவரை ஒருவர் நோக்கிப் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத் தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் அன்றாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவ்விருவரையும் விட்டு விடுங்கள்). அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது.

நூல்: முஸ்லிம் 1619

சைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்குத் தருகிறார்கள். இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸ‚ம் இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

அதே நேரத்தில் பெருநாள் தினத்தில் மட்டும் இதற்கு அனுமதி உள்ளது என்பதால் இவ்வாறு செய்பவர்களைத் தடுக்கக் கூடாது.

5163حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّهَا زَفَّتْ امْرَأَةً إِلَى رَجُلٍ مِنْ الْأَنْصَارِ فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَائِشَةُ مَا كَانَ مَعَكُمْ لَهْوٌ فَإِنَّ الْأَنْصَارَ يُعْجِبُهُمْ اللَّهْوُ رواه البخاري

பின்வரும் செய்திகளும் நற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்று கூறுகின்றது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து, அவளை அவ)ரிடம் அனுப்பி வைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே'' என்றார்கள்.

புகாரி (5162)

3841حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْدَقُ كَلِمَةٍ قَالَهَا الشَّاعِرُ كَلِمَةُ لَبِيدٍ أَلَا كُلُّ شَيْءٍ مَا خَلَا اللَّهَ بَاطِلٌ وَكَادَ أُمَيَّةُ بْنُ أَبِي الصَّلْتِ أَنْ يُسْلِمَ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(கவிஞர்) லபீத் அவர்கள் சொன்ன "அறிக! அல்லாஹ்வைத் தவிர உள்ள பொருள்கள் அனைத்துமே அழியக் கூடியவையே'' என்னும் சொல் தான், கவிஞர் சொன்ன சொற்களிலேயே மிக உண்மையான சொல்லாகும். (கவிஞர்) உமய்யா பின் அபிஸ் ஸல்த் (தன் கவிதையின் கருத்துகளால்) இஸ்லாத்தை ஏற்கும் அளவிற்கு வந்து விட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி (3841)

4185حَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ وَابْنُ أَبِي عُمَرَ كِلَاهُمَا عَنْ ابْنِ عُيَيْنَةَ قَالَ ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مَيْسَرَةَ عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ عَنْ أَبِيهِ قَالَ رَدِفْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ هَلْ مَعَكَ مِنْ شِعْرِ أُمَيَّةَ بْنِ أَبِي الصَّلْتِ شَيْءٌ قُلْتُ نَعَمْ قَالَ هِيهْ فَأَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهْ ثُمَّ أَنْشَدْتُهُ بَيْتًا فَقَالَ هِيهْ حَتَّى أَنْشَدْتُهُ مِائَةَ بَيْتٍ رواه مسلم

ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், "உமய்யா பின் அபிஸ்ச் ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். நான் "ஆம் (தெரியும்)'' என்றேன். "பாடு'' என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். "இன்னும் பாடு'' என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக் காட்டினேன்.

முஸ்லிம் (4540)

நற்கருத்துள்ள பாடல்களைப் பாடலாம் என்பதற்கு இன்னும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

Source: http://www.onlinepj.com/

Abdul Aleem
Ayyampet
http://aleemislam.blogspot.com/

நடுவிரலில் மோதிரம் அணியலாமா

 நடுவிரலில் மோதிரம் அணியலாமாமோதிரம் நடுவிரலுக்கும் பக்கத்து விரலில் மட்டும் தான் அனிய வேண்டும் என்று ஹதீஸ் படித்து இருக்கிறேன். எல்லா விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்று சிலர் கூறுகின்றனர். எது சரி?

ஷேக் தாவூத், திட்டச்சேரி

பதில் :

இதற்கு அடிப்படையாக முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளது.

3911 حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِي بُرْدَةَ قَالَ قَالَ عَلِيٌّ نَهَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَتَخَتَّمَ فِي إِصْبَعِي هَذِهِ أَوْ هَذِهِ قَالَ فَأَوْمَأَ إِلَى الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا رواه مسلم

நடுவிரலையும் அதை அடுத்துள்ள விரலையும் சுட்டிக்காட்டி இந்த விரலிலோ அல்லது இந்த விரலிலோ மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தடை செய்தார்கள் என்று அலீ (ரலி) கூறியதாக ஆஸிம் கூறினார்.

இந்த ஹதீஸில் தெளிவாக எதுவும் கூறப்படவில்லை. இரண்டு விரல்களில் மோதிரம் அணியக் கூடாது என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. இரண்டில் ஏதோ ஒரு விரலில் அணியக் கூடாது. அது எந்த விரல் என்பது தெரியவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.

முஸ்லிம் நூலில் இடம் பெற்ற மற்றொரு அறிவிப்பில் " نهاني - يعني النبي صلى الله عليه وسلم - أن أجعل خاتمي في هذه ، أو التي تليها - لم يدر عاصم في أي الثنتين இரண்டு எந்த விரல் என்பது ஆஸிமுக்குத் தெரியவில்லை என்று கூறப்படுகிறது

இதே செய்தி இப்னுமாஜாவில் வேறு விதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عبد الله بن إدريس عن عاصم عن أبي بردة عن علي قال نهاني رسول الله صلى الله عليه وسلم أن أتختم في هذه وفي هذه يعني الخنصر والإبهام

இப்னுமாஜா

கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மோதிரம் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று இந்த அறிவிப்பில் கூறப்படுகிறது.

இரண்டையும் அலீ (ரலி) அவர்கள் தான் அறிவிக்கிறார்கள். இரண்டையும் அலீ (ரலி) வழியாக அபூபுர்தாவும் அவர் வழியாக ஆஸிமும் தான் அறிவிக்கிறார்கள்.

அதாவது ஒரே செய்தி நான்கு விரல்களில் மோதிரம் அணிவதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதியாக அறிவிக்கப்படுவதையே நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.

எனவே குறிப்பிட்ட விரலில் மோதிரம் அணியக் கூடாது என்பதை உறுதியாக ஆறிவிக்கும் ஹதீஸ் இல்லாததால் அனைத்து விரல்களிலும் மோதிரம் அணியலாம் என்பதே சரியானதாகும்.

27.06.2010. 22:22

சலபிக் கொள்கை என்றால் என்ன ?
கேள்வி : சலபி, சலபிக் கொள்கை என்றால் என்ன? கொஞ்சம் விளக்கவும்.
பதில் :

ஸலபி என்னும் இந்த வார்த்தையை வைத்துக் கொண்டு மக்களைப் பலர் நிறையவே குழப்பி வருகிறார்கள்.

அகராதியில் ஸலஃபு எனும் சொல்லுக்கு முன்னோர்கள் என்பது பொருள். நம்முடைய தந்தையின் காலத்தைச் சேர்ந்தவர்கள் முதல் ஆதல் அலை அவர்கள் அவரி வாழ்ந்த அனைவருமே அகராதிப்படி ஸலபுகள் ஆவார்கள். நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் கூட ஸலபிகளாக ஆகிவிடுவோம்..

குர்ஆனிலோ நபி மொழியிலோ ஸலபுக் கொள்கை என்று எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.

வரலாற்று ரீதியாக குறிப்பிட்ட ஒரு பிரச்சனையில் முஸ்லிம் சமுதாயத்தில் பிளவு ஏற்பட்ட போது தான் ஸலலுக் கொள்கை என்பது உருவாக்கப்பட்டது.

அல்லாஹ் தன்னைப் பற்றி பேசும் போது தனது ஆற்றலைப் பற்றியும் பேசுகிறான். தனது தோற்றத்தைப் பற்றியும் பேசுகிறான்.

ஆற்றலைப் பற்றிப் பேசும் வசனங்களில் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எனது கை எனது முகம் என்பன போன்ற சொற்களை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அல்லாஹ்வின் கை என்றால் கை என்றே நபித்தோழர்கள் காலத்தில் புரிந்து கொள்ளப்பட்டது. கை என்றால் அல்லாஹ்வின் ஆற்றல் என்று கருத்து கொடுக்கப்படவில்லை. நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இவ்வாறே பொருள் கொண்டனர். ஆனால் தபவுத் தாபியீன்கள் காலத்தில் நேரடி அர்த்தம் கொள்ளாமல் இது போன்ற சொற்களுக்கு வேறு கருத்தை சில அறிஞர்கள் கொடுக்கலானார்கள். அப்போது தான் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் அல்லாஹ்வை பற்றி நம்முடைய ஸல்புகள் அதாவது சஹாபாக்கள், தாபியீன்கள் எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று முதன் முதலில் ஸலபு என்பதை கொள்கையுடன் தொடர்பு படுத்தி பயன்படுத்தினார்கள்.

இதன் பிறகுதான் யார் நபித்தோழர்கள் அல்லாஹ்வைப் புரிந்து கொண்டது போல் புரிந்து கொண்டார்களோ அவர்கள் ஸலபுகள் என்று குறிப்பிடப்பட்டனர்.

இறைவன் தனக்கு எந்தத் தன்மைகள் இருப்பதாக கூறுகின்றானோ அவற்றுக்கு நாம் மாற்று விளக்கம் கொடுக்காமல் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இறைவன் தனக்கு இருப்பதாகக் கூறிய எந்த அம்சத்தையும் மறுத்துவிடக் கூடாது என்பதே நபித்தோழர்களின் நம்பிக்கை.

இறைவனுக்கு கை கால் முகம் ஆகிய உறுப்புகள் இருப்பதாகவும் உருவம் இருப்பதாகவும் குர்ஆன் கூறுகின்றது. இறைவன் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் எனவும் அவன் பார்க்கின்றான் கேட்கின்றான் எனவும் அவன் நடந்து வருவான் எனவும் மறுமையில் இறைவனை நல்லவர்கள் காண்பார்கள் எனவும் குர்ஆன் கூறுகின்றது.

இவ்விஷயங்கள் அனைத்தையும் அப்படியே நம்பிக்கை கொள்ள வேண்டும். இவற்றுக்கு மாற்று விளக்கம் கொடுப்பதோ இவை எப்படி இருக்கும் என்று கற்பிப்பதோ கூடாது என்பதே சஹாபாக்களின் நம்பிக்கை.

ஆதம் (அலை) அவர்களை எனது கையால் படைத்தேன் என்று அல்லாஹ் சொல்வது, கையால் படைத்தான் என்ற அர்த்த்தில் தான் புரிந்து கொள்ள வேண்டும் என்பது சஹாபாக்களின் நம்பிக்கை/ எனது வலிமையைக் கொண்டு படைத்தோம் என்றே அர்த்தம் செய்ய வேண்டும் என்று பிற்காலத்தவர்கள் விளக்கம் கூறினார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வுடைய பண்புகளில் தன்மைகளில் அல்லாஹ்வுடைய உருவம் சம்பந்தப்பட்டதாக வரும் விஷயங்களில் வியாக்கியானம் கொடுத்து வந்தனர்.

ஸலபுகள் - அதாவது ஸஹாபாக்கள் கண் என்றால் கண் என்றும் காது என்றால் காது என்றும் வேறு வியாக்கியானம் செய்யாமல் எழுதிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் உறுப்புகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வதும் அதற்கு விதம் கற்பிப்பதும் கூடாது. மறுமையில் அவனை காணும் போதே இந்த விபரங்கள் புலப்படும் என்று கூறி விட்டார்கள். இது தான் ஸலஃபி கொள்கையாகும்.

ஆனால் பின்னால் வந்த தாபியீன்கள் இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் முகம் என்றால் திருப்தி என்றும் , கை என்றால் சக்தி என்றும் அர்ஷ் என்றால் அதிகாரம் என்றும் வியாக்கியானம் செய்தனர். இது கலபுகளின் அதாவது பின்வந்தவர்களின் கொள்கையாகும்.

இந்த விஷயத்தில் சஹபாக்கள் எடுத்த முடிவே சரியானது. இதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம்.

ஆக ஸலபி என்கிற இந்த வார்த்தை அல்லாஹ்வுடைய தோற்றம் பற்றிய விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் உருவானதே தவிர இன்று பலரும் சொல்லி வருவது போல் எல்லா விஷயங்களிலும் ஸஹாபாக்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதைக் குறிப்பது அல்ல.

சஹாபாக்கள் மார்க்கம் தொடர்பாக எதைக் கூறினாலும் எந்த விளக்கம் அளித்தாலும் அதை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் ஸலஃபி கொள்கை என்று தவறான தோற்றத்தை இன்றைக்கு சமுதாயத்தில் சிலர் ஏற்படுத்துகின்றனர். சுருங்கச் சொல்வதென்றால் சஹாபாக்களைப் பின்பற்றுவது தான் ஸலஃபிக் கொள்கை என்று கூறுகின்றனர்.

பின்வரும் மக்கள் தன்னையே பின்பற்ற வேண்டும் என எந்த நபித்தோழரும் கூறவில்லை. ஏனைய நபித்தோழர்களைப் பின்பற்றுமாறும் நபித்தோழர்கள் கூறவில்லை. ஏன் ஒரு நபித்தோழர் இன்னொரு நபித்தோழரைப் பின்பற்றவில்லை. மாறாக அவர்கள் அனைவரும் குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே பின்பற்றச் சொன்னார்கள்.

குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டு மட்டுமே மார்க்க ஆதாரம் என்ற நமது நிலைபாட்டிலேயே சஹாபாக்கள் இருந்தார்கள். இது தான் ஸலபுகளின் அதாவது நபித்தோழர்களின் கொள்கை.

குர்ஆன், ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்பதனை 80 களில் இருந்து நாம் கூறி வருகிறோம். தமிழகத்தில் பலரும் இதனைக் கூறி வந்தனர். ஜாக்கின் தலைவராக இருக்கும் எஸ்.கமாலுத்தீன் மதனீ குர்ஆன் ஹதீஸை மட்டும் தான் பின்பற்ற வேண்டும் என்று கூறினார். இதன் காரணமாகத் தன் அப்போது இயக்கத்துக்கு பெயர் வைக்கும் போது ஜம்மியது அஹ்லில் குரான் வல் ஹதீஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. அதாவது குர் ஆன் ஹதீஸை பின்பற்றுவோர் சங்கம் என்பது இதன் பொருள். ஜம்மியது அஹ்லில் குர் ஆன் வல்ஹதீஸ், வஸ்ஸலப் என்று பெயர் சூட்டவில்லை.

2000-ம் வரை கூட இதைத் தான் ஏகத்துவத்தைப் பேசும் அனைவரும் குர்ஆன் சுன்னாவைத் தவிர வேறு இல்லை என்று தான் கூறி வந்தார்கள்.

ஆனால் இன்றைக்கு இந்த இயக்கத்தினர் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டனர். குர்ஆன் ஹதீஸை அடுத்து ஸலபுகள் என்று மூன்றாவதாக ஸலபு மத்ஹபை கொண்டுவந்து விட்டனர்.

ஆரம்ப காலத்திலேயே தராவீஹ் பற்றி நாம் கூறும் போதும் இருபது ரக்அத்கள் இல்லை என்று மறுத்தோம்.

உமர் (ரலி) அவர்கள் காலத்தில் 20 ரக்அத்கள் தொழப்பட்டாலும் நாம் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறினோம்.

அப்போது அதனைச் சரி கண்டவர்கள் இன்று ஸஹாபாக்களைப் பின்பற்றுவோம் என்று கூறுகிறார்கள். ஏனெனில் இப்பொழுது அஸ்திவாரத்தையே மாற்றி விட்டார்கள். அல்லாஹ் இவர்களுக்கு நேரான வழியை காட்டுவானாக.

அல்லாஹ்வின் உருவம் குறித்து ஜூலை மாதம் பீஜேக்கும், ஷேக் அப்துல்லா ஜமாலிக்கும் இடையே நடக்கவுள்ள் விவாதத்தில் இது குறித்து முழுமையாக இன்ஷா அல்லாஹ் தெளிவுபடுத்தப்படும்.

---www.onlinepj.com.

----Ayyampet ALEEM
(http://aleemislam.blogspot.com/)

காட்டுவாசிகளுக்கு இறுதி நாளின் தீர்ப்பு என்ன ?

காட்டுவாசிகளுக்கு இறுதி நாளின் தீர்ப்பு என்ன ?

அவர்களுக்கு இறைவனை அறிய வாய்ப்புகள் உண்டா

பதில் :

மூஸா நபியவர்கள் பிர்அவுனிடம் ஓரிறைக் கொள்கையைப் பிரச்சாரம் செய்த போது அவன் மூஸா நபியிடம் ஒரு கேள்வியைக் கேட்டான். நீங்கள் எந்தக் கேள்வியைக் கேட்கிறீர்களோ அந்தக் கேள்வியைத் தான் கேட்டான்.

"முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் கேட்டான். "அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 20:51, 52)

"இப்போது தான் நீர் ஒரு கடவுளைப் பற்றிப் பேசுகிறீர். உமது பிரச்சாரம் சென்றடையாத மக்களைப் பற்றி என்ன தீர்ப்பு சொல்லப் போகிறீர்?'' என்பது இக்கேள்வியின் கருத்து.

"அது பற்றிய ஞானம் என் இறைவனுக்குத் தான் உள்ளது; என் இறைவன் தவறான முடிவு எடுக்க மாட்டான்; எதையும் மறக்கவும் மாட்டான்'' என்று மூஸா நபியவர்கள் விடையளித்தார்கள். அவர்கள் நரகவாசிகள் என்றோ, சுவர்க்கவாசிகள் என்றோ கூறாமல் அதன் முடிவை இறைவனிடம் விட்டு விட்டார்கள்.

நீதி செலுத்துவதை அதிகம் விரும்புகிற இறைவன் எந்த அநீதியான தீர்ப்பும் வழங்க மாட்டான். நியாயமான தீர்ப்பே வழங்குவான்.

யார் யார் சொர்க்கம் செல்வார்கள்? நரகம் செல்வார்கள்? என்று முடிவு செய்வது நமது அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது.

தவறே செய்யாத ஒரு குழந்தையைக் கூட சொர்க்கவாசி என்று நாம் முடிவு செய்யக் கூடாது. இதை இறைவனுடைய அதிகாரத்திலேயே விட்டுவிட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

4813 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى عَنْ عَمَّتِهِ عَائِشَةَ بِنْتِ طَلْحَةَ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ دُعِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنَازَةِ صَبِيٍّ مِنْ الْأَنْصَارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ لَمْ يَعْمَلْ السُّوءَ وَلَمْ يُدْرِكْهُ قَالَ أَوَ غَيْرَ ذَلِكَ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ خَلَقَ لِلْجَنَّةِ أَهْلًا خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ وَخَلَقَ لِلنَّارِ أَهْلًا خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ زَكَرِيَّاءَ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى ح و حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مَعْبَدٍ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ حَفْصٍ ح و حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ كِلَاهُمَا عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى بِإِسْنَادِ وَكِيعٍ نَحْوَ حَدِيثِهِ رواه مسلم

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அன்சாரிகளில் ஒரு குழந்தை இறந்த போது, அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான், "அல்லாஹ்வின் தூதரே! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துக்கள்! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக் குருவி. அது எந்தத் தீமையையும் செய்யவில்லை. அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை'' என்று சொன்னேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேறு ஏதேனும் உண்டா, ஆயிஷா? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களை அவன் படைத்து விட்டான்; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான். அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத் தண்டுகளில் இருந்த போதே அதற்காகவே அவர்களைப் படைத்து விட்டான்'' என்று கூறினார்கள்.

முஸ்லிம் (5175)

எனவே, எந்தப் பிரச்சாரமும் சென்றடையாத மக்கள் விஷயமாக நம்மை விட அதிகம் நியாயம் வழங்கும் இறைவன் சரியான தீர்ப்பை வழங்குவான் என்ற பதிலோடு நிறுத்திக் கொள்வது தான் நமக்குள்ள உரிமையாகும்.

27.06.2010. 22:30


---www.onlinepj.com.

----Ayyampet ALEEM
(http://aleemislam.blogspot.com/)

ஒட்டு முடி வைக்கலாமா

கேள்வி :

ஒட்டு முடி நடலாமா?

பதில் :

ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். பின்வரும் ஹதீஸ்கள் இதைத் தடைசெய்கின்றன.

5205حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ابْنُ مُسْلِمٍ عَنْ صَفِيَّةَ عَنْ عَائِشَةَ أَنَّ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ زَوَّجَتْ ابْنَتَهَا فَتَمَعَّطَ شَعَرُ رَأْسِهَا فَجَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَتْ ذَلِكَ لَهُ فَقَالَتْ إِنَّ زَوْجَهَا أَمَرَنِي أَنْ أَصِلَ فِي شَعَرِهَا فَقَالَ لَا إِنَّهُ قَدْ لُعِنَ الْمُوصِلَاتُ رواه البخاري

அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்து கொண்டார். பிறகு அவர் நோயுற்றார். அதனால் அவருடைய தலை முடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கின்றான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகின்றான்)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் ; ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி (5934)

மற்றொரு அறிவிப்பில் அவரது கணவர் ஒட்டு முடி வைப்பதை விரும்புகிறார்; எனவே வைத்துக் கொள்ளலாமா என்று அந்தப் பெண் கேட்ட போது கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

புஹாரி 3468, 3488, 4887, 5205, 5933, 5934, 5935, 5938,

3468حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ عَامَ حَجَّ عَلَى الْمِنْبَرِ فَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ وَكَانَتْ فِي يَدَيْ حَرَسِيٍّ فَقَالَ يَا أَهْلَ الْمَدِينَةِ أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ وَيَقُولُ إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَهَا نِسَاؤُهُمْ رواه البخاري

ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

முஆவியா (ரலி) அவர்கள் ஹஜ் செய்த ஆண்டில் (மேடை) மிம்பரின் மீதிருந்தபடி, காவலர் ஒருவரின் கையிலிருந்த முடிக் கற்றை (சவுரிமுடி) ஒன்றை எடுத்து (கையில் வைத்துக் கொண்டு), "மதீனா வாசிகளே! உங்கள் (மார்க்க) அறிஞர்கள் எங்கே?'' என்று கேட்டு விட்டு, "நபி (ஸல்) அவர்கள் இது போன்றதிலிருந்து (மக்களைத்) தடுத்ததையும், "பனூ இஸ்ராயீல் சமுதாயத்தார் அழிந்து போனதெல்லாம் இதை அவர்களுடைய பெண்கள் பயன்படுத்திய போது தான்' என்று சொல்வதையும் நான் செவியுற்றிருக்கிறேன்'' என்று சொல்லக் கேட்டேன் எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி (3468)

4887 حَدَّثَنَا عَلِيٌّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ عَنْ سُفْيَانَ قَالَ ذَكَرْتُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ حَدِيثَ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاصِلَةَ فَقَالَ سَمِعْتُهُ مِنْ امْرَأَةٍ يُقَالُ لَهَا أُمُّ يَعْقُوبَ عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَ حَدِيثِ مَنْصُورٍ رواه البخاري

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

புகாரி (4887)

மனிதர்களின் முடியைத் தான் வைத்துக் கொள்ளக் கூடாது. செய்ற்கையாக தயாரிக்கப்பட்டவைகளை அவித்துக் கொள்ளலாம் என்று சிலர் கூறுகின்றனர். இது தவ்றாகும். ஏனெனில் முஸ்லிமில் வரும் பின்வரும் ஹதீஸில் எதனையும் சேர்க்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

و حدثني الحسن بن علي الحلواني ومحمد بن رافع قالا أخبرنا عبد الرزاق أخبرنا ابن جريج أخبرني أبو الزبير أنه سمع جابر بن عبد الله يقول زجر النبي صلى الله عليه وسلم أن تصل المرأة برأسها شيئا

26.06.2010. 22:37

---www.onlinepj.com

----Ayyampet ALEEM
(http://aleemislam.blogspot.com/)

உருவம் வரைவது ஹராமா?

உருவம் வரைவது ஹராமா?


கேள்வி :

இஸ்லாத்தில் உருவம் வரைவது ஹராம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. எனக்கு படம் வரைவதில் ஆர்வம் அதிகம். சிலர் முகத்தை புகைப்படத்தை பார்த்து வரைந்திருக்கிறேன். நான் வரயும் படங்கள் அனைத்தும் என் பொழுது போக்கிற்காக மட்டும் தான் வரைந்திருக்கிறேன். எவரேனும் நான் வரைந்த உருவப் படத்தைக் கேட்டால் அதை நான் அன்பளிப்பாக கொடுக்கலாமா? இது ஹராமா? இஸ்லாத்தில் உருவம் வரைவது எந்த அளவில் தடுக்கப் பட்டிருக்கிறது?

ஃபியாஸ்

பதில் :

உருவச்சிலைகள்

உருவச்சிலைகள், உருவப்படங்கள், புகைப்படங்கள், நிழற்படங்கள், எலக்ட்ரான் கதிர் அலைகளால் தெரியும் படங்கள் என பல்வேறு வகைகள் உள்ளன. இவை குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

3225حَدَّثَنَا ابْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَقُولُ سَمِعْتُ أَبَا طَلْحَةَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةُ تَمَاثِيلَ رواه البخاري

"எந்த வீட்டில் உருவச்சிலைகளும், நாய்களும் உள்ளனவோ அங்கே மலக்குகள் நுழைய மாட்டார்கள்' என்பது நபிமொழி. அபுதல்ஹா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி (3225), முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

உருவச் சிலைகள் என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் "திம்ஸால்' "தமாஸீல்' என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸில் உருவச் சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் வர மாட்டார்கள் என்று கடுமையான வார்த்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளதால் உருவச்சிலைகளுக்கு அறவே அனுமதி இல்லை என்று தெளிவாக உணரலாம்.

இந்தத் தடை எல்லா உருவச் சிலைகளுக்கும் பொதுவானதா? அல்லது இதில் விதி விலக்கு ஏதும் உள்ளதா? என்று பார்ப்போம்.

6130حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي فَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ فَيُسَرِّبُهُنَّ إِلَيَّ فَيَلْعَبْنَ مَعِي رواه البخاري

"நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடனிருக்கும் போது பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருப்பேன். என்னுடன் விளையாடுவதற்கு சில தோழிகளும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழையும் போது அவர்கள் ஓடி ஒளிந்து கொள்வர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (என்னுடன் விளையாட) அவர்களை திருப்பி அனுப்புவார்கள். அதன் பின் அவர்கள் என்னோடு விளையாடுவார்கள்'' என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

இது புகாரி (6130), முஸ்லிம், அபூதாவூத் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸிலிருந்து "பனாத்' (பொம்மைகள்) வைத்து விளையாட அனுமதி உள்ளது என்று உணரப்படுகின்றது. ஆயிஷா (ரலி) அவர்கள் "உயிருள்ளவைகளின் பொம்கைளையே வைத்து விளையாடி இருக்கிறார்கள்'' என்பதை வேறு ஒரு செய்தி தெளிவாக அறிவிக்கின்றது.

4284حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَوْفٍ حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ قَالَ حَدَّثَنِي عُمَارَةُ بْنُ غَزِيَّةَ أَنَّ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ حَدَّثَهُ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ قَالَتْ فَرَسٌ قَالَ وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ قَالَتْ جَنَاحَانِ قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ رواه أبو داود

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தபூக்கோ, அல்லது ஹுனைனோ இரண்டில் ஏதோ ஒரு போர்க்களத்திலிருந்து திரும்பி வந்தனர். அப்போது காற்று வீசி ஆயிஷா (ரலி) அவர்களின் விளையாட்டுப் பொம்மைக்குப் போடப்பட்டிருந்த திரை விலக்கியது. அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஆயிஷாவே என்ன இது?'' என்றார்கள். "என் பொம்மைகள்'' என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள். அவற்றுக்கிடையே இரண்டு இறக்கைகளைக் கொண்ட குதிரை பொம்மை ஒன்றையும் கண்டு, அதோ நடுவில் உள்ள அந்தப் பொம்மை என்ன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "குதிரை'' என்று ஆயிஷா(ரலி) பதில் கூறினார்கள். குதிரையின் மேல் என்ன? என்று கேட்டார்கள். "இறக்கைகள்'' என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். குதிரைக்கும் இரண்டு இறக்கைகளா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்க, "ஏன் சுலைமான் நபியிடம் இறக்கைகள் உள்ள குதிரை இருந்ததாக நீங்கள் கேள்விப்பட்டதில்லையோ?'' என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். இதைக் கேட்டதும், அவர்களின் கடவாய்ப்பற்களை நான் காணும் அளவுக்கு சிரித்தார்கள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.

ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுடன் அபூதாவூதில் (4283) இது இடம் பெற்றுள்ளது.

உயிருள்ள குதிரையின் உருவச் சிலையைக் கண்ட பின்னும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைக் கண்டிக்காதது மட்டுமல்ல; தமது சிரிப்பின் மூலம் அதற்கு அங்கீகாரமும் அளிக்கிறார்கள். இதன் மூலம் உயிரற்றவைகள் மட்டுமல்ல; உயிருள்ளவைகளின் பொம்மைகளைக் கூட சிறுவர்கள் விளையாடலாம். அதை வீட்டில் வைத்திருக்கலாம் என்பது தெளிவாகின்றது. உருவச்சிலைகள் உள்ள இடங்களில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது, சிறுவர்களின் விளையாட்டுக்காக இல்லாமல் ஏனைய நோக்கங்களுக்காக உள்ள உருவச்சிலைகளுக்கே என்று உணரலாம்.

சிறுவர்கள் கற்றுக் கொள்வதற்காக யானை, சிங்கம் போன்ற விலங்குகளை வரைந்து கற்றுக் கொடுப்பது, இது அல்லாத அறிவைப் பெருக்குவதற்குத் தேவையான உருவப்படங்களை சிறுவர்களுக்குக் கொடுப்பதும் வீட்டில் வைத்திருப்பதும் குற்றமாகாது என்பதையும் இதில் இருந்து அறியலாம்.

விளையாட்டை விட அறிவைப் பெருக்குவது அவசியமானதகும். பயனில்லாமல் விளையாட்டுப் பொருளாகவே பொம்மைகளை வைத்துக் கொள்ளலாம் என்றால் அறிவை வளர்ப்பதற்காக உருவப்படங்களை வைத்து சொல்லிக் கொடுக்கலாம் என்பதை அறியலாம்.

உயிரற்ற பொருட்களாகிய மரம், செடி, கப்பல், வீடு, கார் போன்ற உருவங்களுக்குத் தடை ஏதுமில்லை. இவை உருவச் சிலையாக இருந்தாலும் உருவப்படங்களாக இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

2225حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ أَخْبَرَنَا عَوْفٌ عَنْ سَعِيدِ بْنِ أَبِي الْحَسَنِ قَالَ كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا إِذْ أَتَاهُ رَجُلٌ فَقَالَ يَا أَبَا عَبَّاسٍ إِنِّي إِنْسَانٌ إِنَّمَا مَعِيشَتِي مِنْ صَنْعَةِ يَدِي وَإِنِّي أَصْنَعُ هَذِهِ التَّصَاوِيرَ فَقَالَ ابْنُ عَبَّاسٍ لَا أُحَدِّثُكَ إِلَّا مَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعْتُهُ يَقُولُ مَنْ صَوَّرَ صُورَةً فَإِنَّ اللَّهَ مُعَذِّبُهُ حَتَّى يَنْفُخَ فِيهَا الرُّوحَ وَلَيْسَ بِنَافِخٍ فِيهَا أَبَدًا فَرَبَا الرَّجُلُ رَبْوَةً شَدِيدَةً وَاصْفَرَّ وَجْهُهُ فَقَالَ وَيْحَكَ إِنْ أَبَيْتَ إِلَّا أَنْ تَصْنَعَ فَعَلَيْكَ بِهَذَا الشَّجَرِ كُلِّ شَيْءٍ لَيْسَ فِيهِ رُوحٌ قَالَ أَبُو عَبْد اللَّهِ سَمِعَ سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ مِنْ النَّضْرِ بْنِ أَنَسٍ هَذَا الْوَاحِدَ رواه البخاري

"நான் ஓவியங்கள் வரைகிறேன். அது பற்றி எனக்குத் தீர்ப்பளியுங்கள்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஒருவர் கேட்டார். "எல்லா ஓவியர்களும் நரகில் தான். அவன் வரைந்த ஓவியங்களுக்கு உயிரளிக்கப்பட்டு அவை அவனை நரகில் வேதனைப்படுத்தும். நீ அவசியம் செய்தாக வேண்டும் என்றால் மரம் மற்றும் உயிரற்றவைகளைச் செய்து கொள்!'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

இது புகாரி (2225), முஸ்லிம், அஹ்மத் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

உயிரற்ற பொருட்களைச் செய்து கொள்ள ஒரு தடையுமில்லை என்பதை இந்த ஹதீஸ் திட்டவட்டமாக அறிவித்து விடுகின்றது. ஆனால் இந்த அனுமதியிலும் விதிவிலக்கு இருக்கின்றது. உயிரற்றவைகளான ஒரு சில பொருட்களை வைத்துக் கொள்ள நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள்.

5952حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلَّا نَقَضَهُ رواه البخاري

" நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் "சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள்' என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி,(5952) அபூதாவூத், நஸயீ, அஹ்மத் ஆகிய நூற்களில் இது இடம் பெற்றுள்ளது.''

ஏனைய மக்களால் புனிதப் பொருளாக கருதப்படும் பொருட்களின் உருவங்கள் உள்ளப் பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

முப்பரிமாணம் உள்ள உருவச் சிலைகளைப் பொருத்தவரை சிறுவர்கள் விளையாடும் சிறு பொம்மைகள், வைத்துக் கொள்ள அனுமதி உள்ளது என்பதையும், பிறரால் புனிதமாகக் கருதப்படாத உயிரற்ற ஏனைய உருவச்சிலைகளையும் வைத்துக் கொள்ளலாம் என்பதையும் இதன் மூலம் அறிகிறோம். இவற்றைத் தவிர எல்லா உருவச்சிலைகளையும் இஸ்லாம் முற்றாக தடை செய்கிறது.

உருவப்படங்கள்

உருவப் படங்கள் வைத்திருப்பதை இஸ்லாம் தடை செய்கின்றது.

3227حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِي عُمَرُ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ وَعَدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ فَقَالَ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلَا كَلْبٌ رواه البخاري

எந்த வீட்டில் உருவப்படங்கள் உள்ளனவோ அந்த வீட்டில் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பது நபிமொழி.

அபூதல்ஹா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி (3227), முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.

6109حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ قَالَ حَدَّثَنِي عُمَرُ عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ قَالَ وَعَدَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ فَقَالَ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلَا كَلْبٌ رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது உருவங்கள் உள்ள திரைச் சீலையைத் தொங்க விட்டிருந்தேன். அதைக் கண்டதும் அவர்களின் முகம் மாற்றமடைந்தது. அதைக் கிழித்து எறிந்து விட்டு "ஆயிஷாவே! அல்லாஹ்வின் படைப்பைப் போல் படைக்க முற்படுபவர்களே கியாமத் நாளில் கடுமையான தண்டனைக்குரியவர்கள்'' என்று கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் புகாரி, (6109) முஸ்லிம், முஅத்தா, நஸயீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

உருவப்படங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டதா? அதில் ஏதேனும் விதிவிலக்கு உண்டா? என்பதை இனி காண்போம்.

2479حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ الْقَاسِمِ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا كَانَتْ اتَّخَذَتْ عَلَى سَهْوَةٍ لَهَا سِتْرًا فِيهِ تَمَاثِيلُ فَهَتَكَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاتَّخَذَتْ مِنْهُ نُمْرُقَتَيْنِ فَكَانَتَا فِي الْبَيْتِ يَجْلِسُ عَلَيْهِمَا رواه البخاري

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்த போது உருவப்படம் வரையப்பட்ட திரைச்சீலைகளைக் கண்டதும். அதை அகற்றினார்கள். நான் அதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் அவர்கள் சாய்ந்து கொள்பவர்களாக இருந்தனர்'' என்று அன்னை ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.

புகாரி (2479), முஸ்லிம் அஹ்மத் ஆகிய நூற்களில் இது இடம் பெற்றுள்ளது.

حدثنا عثمان بن عمر قال حدثنا أسامة عن عبد الرحمن بن القاسم عن أمه أسماء بنت عبد الرحمن عن عائشة قالت قدم رسول الله صلى الله عليه وسلم من سفر وقد اشتريت نمطا فيه صورة فسترته على سهوة بيتي فلما دخل كره ما صنعت وقال أتسترين الجدر يا عائشة فطرحته فقطعته مرفقتين فقد رأيته متكئا على إحداهما وفيها صورة

நான் இதை இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவப்படங்கள் இருக்கும் நிலையிலேயே அதில் அவர்கள் சாய்ந்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன் என்று அன்னை ஆயிஷா (ரலி) அறிக்கும் மற்றொரு ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.

3627حَدَّثَنَا أَبُو صَالِحٍ مَحْبُوبُ بْنُ مُوسَى حَدَّثَنَا أَبُو إِسْحَقَ الْفَزَارِيُّ عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَقَ عَنْ مُجَاهِدٍ قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فَقَالَ لِي أَتَيْتُكَ الْبَارِحَةَ فَلَمْ يَمْنَعْنِي أَنْ أَكُونَ دَخَلْتُ إِلَّا أَنَّهُ كَانَ عَلَى الْبَابِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ قِرَامُ سِتْرٍ فِيهِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ كَلْبٌ فَمُرْ بِرَأْسِ التِّمْثَالِ الَّذِي فِي الْبَيْتِ يُقْطَعُ فَيَصِيرُ كَهَيْئَةِ الشَّجَرَةِ وَمُرْ بِالسِّتْرِ فَلْيُقْطَعْ فَلْيُجْعَلْ مِنْهُ وِسَادَتَيْنِ مَنْبُوذَتَيْنِ تُوطَآَنِ وَمُرْ بِالْكَلْبِ فَلْيُخْرَجْ فَفَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِذَا الْكَلْبُ لِحَسَنٍ أَوْ حُسَيْنٍ كَانَ تَحْتَ نَضَدٍ لَهُمْ فَأُمِرَ بِهِ فَأُخْرِجَ قَالَ أَبُو دَاوُد وَالنَّضَدُ شَيْءٌ تُوضَعُ عَلَيْهِ الثِّيَابُ شَبَهُ السَّرِيرِ رواه أبو داود

"சென்ற இரவு உங்கள் வீட்டுக்கு நான் வருவதற்குத் தடையாக இருந்தவை என்னவென்றால், உங்கள் வீட்டில் ஒரு மனிதனது உருவச் சிலையும், உருவம் பொறித்த திரைச்சீலை ஒன்றும், நாய் ஒன்றும் இருந்தது தான். உருவச் சிலையின் தலையை அகற்றுமாறும், உருவப்படங்கள் உள்ள திரைச்சீலையைக் கிழித்து மதிப்பில்லாமல் மிதிபடும் இரண்டு தலையணைகளாக்கிக் கொள்ளுமாறும், நாயை வெளியேற்றுமாறும் உங்கள் (குடும்பத்துக்கு) கட்டளையிடுங்கள்'' என்று ஜிப்ரீல் (அலை) என்னிடம் கூறினார்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் அஹ்மத், அபூதாவூத் (3627), திர்மிதீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

3935حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ وَقَدْ سَتَّرْتُ عَلَى بَابِي دُرْنُوكًا فِيهِ الْخَيْلُ ذَوَاتُ الْأَجْنِحَةِ فَأَمَرَنِي فَنَزَعْتُهُ و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ ح و حَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ حَدَّثَنَا وَكِيعٌ بِهَذَا الْإِسْنَادِ وَلَيْسَ فِي حَدِيثِ عَبْدَةَ قَدِمَ مِنْ سَفَرٍ رواه مسلم

தன்னிடம் இறக்கைகள் உடைய குதிரைகளின் படம் பொறிக்கப்பட்ட திரைச்சீலை இருந்ததாகவும், அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கிழித்ததும், அதில் இரண்டு தலையணைகள் செய்ததாகவும் அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள். இது முஸ்லிமில் (3935) இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்களைக் கவனமாகப் பார்க்கும் போது, உருவப் படங்களில் அனுமதிக்கப்பட்டவை எவை? தடுக்கப்பட்டவை எவை? என்பதை எவரும் அறிய முடியும். மதிப்பு மிக்கவையாக கருதப்படும் உருவப்படங்களே தடுக்கப்படுகின்றன. "மதிப்பில்லாமல் மிதிபடும் தலையணையாக மாற்றுமாறு' ஜிப்ரீல் (அலை) கூறிய வார்த்தை இதைத் தெளிவாக விளக்கும். எந்த உருவம் திரைச்சீலையாக தொங்கிக் கொண்டிருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்டதோ அதே உருவம் தலையணையாகத் தரையில் போடக் கூடியதாக ஆகும் போது நபிகள் நாயகம் பி(ஸல்) அவர்களால் தடுக்கப்படவில்லை. மாறாக அதை அவர்களே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

அந்தத் திரைச்சீலையை இரண்டாகக் கிழித்த போது உருவமும் பாதி பாதியாக சிதறுண்டு போயிருக்கலாம். அதனால் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று சிலருக்குத் தோன்றக் கூடும். அது சரியான அனுமானம் அல்ல. ஏனெனில் ஆயிஷா (ரலி) அவர்கள்حدثنا عثمان بن عمر قال حدثنا أسامة عن عبد الرحمن بن القاسم عن أمه أسماء بنت عبد الرحمن عن عائشة قالت قدم رسول الله صلى الله عليه وسلم من سفر وقد اشتريت نمطا فيه صورة فسترته على سهوة بيتي فلما دخل كره ما صنعت وقال أتسترين الجدر يا عائشة فطرحته فقطعته مرفقتين فقد رأيته متكئا على إحداهما وفيها صورة

"அதில் உருவம் இருக்கும் நிலையிலேயே அதில் சாய்ந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன்'' என்கிறார்கள்.

உருவம் சிதைந்து அதைப் பயன்படுத்தினார்கள் என்றால் அதை உருவம் என்று சொல்லும் அளவுக்கு விபரம் அறியாதவர்களாக அறிவுச் சுடர் அன்னை ஆயிஷா (ரலி) இருக்கவில்லை. சின்னஞ்சிறு வித்தியாசத்தையும் நுணுக்கமாகக் கவனிக்கும் அன்னை அவர்கள் உருவம் சிதைந்து போயிருந்தால் அதை உருவம் என்று குறிப்பிட்டிருக்க மாட்டார்கள்.

மேலும் சம்மந்தப்பட்ட ஹதீஸில் உருவச் சிலையின் தலையை அகற்றுமாறு கூறிய ஜிப்ரீல் (அலை) அவர்கள், உருவப்படங்கள் உள்ள சீலையை உருவம் தெரியாதவாறு நீள வடிவில் பாதியாகக் கிழிக்குமாறு கூறவில்லை. உருவம் தெரியாத அளவுக்கு மாற்றினால் தான் தலையணையாகப் பயன்படுத்தலாம் என்றிருந்தால் "மதிப்பில்லாமல் மிதிபடும் வகையில் என்று கூறியிருக்கத் தேவையில்லை. இன்னும் சொல்வதென்றால் தலையணையாக ஆக்குமாறு கூட அவர்கள் கூறத் தேவையில்லை. உருவம் தெரியாத வகையில் கிழிக்கப்பட்டு விட்டால் அதைத் திரைச்சீலையாகவே மீண்டும் பயன்படுத்தலாமே!''

ஆக மதிப்பற்ற விதத்தில் பொறிக்கப்பட்டுள்ள படங்களைப் பயன்படுத்தத் தடை ஏதும் இல்லை என்பதே சரியாகும். தொங்க விடப்படும் உருவப் படங்கள் பொறித்த திரைச் சீலைகள், பிரேம் செய்து மாட்டப்படும் உருவப் படங்கள், ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கும் போட்டோக்கள், பெட்டியில் பூட்டி வைத்து பாதுகாக்கும் உருவப் படங்கள் இவயெல்லாம் தடுக்கப்படுகின்றன. அதைப் பற்றி மதிப்பிருக்கின்ற காரணத்தினால் தான் பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கிறார்கள். ஆல்பத்தில் வைத்து அழகு பார்க்கிறார்கள். உயர்ந்த இடத்தில் வைத்துப் பேணுகிறார்கள். இது போன்ற வழிகளில் பயன்படுத்த இஸ்லாம் தடுக்கின்றது.

செய்தித்தாள்களில் காணப்படும் உருவப்படங்கள், பொட்டலம் கட்டிக் கொடுக்கப் பயன்படும் உருவபடங்கள் பொறித்த காகிதங்கள், பொருட்களைப் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பெட்டிகளில் பொறிக்கப்பட்ட உருவப் படங்களுக்கு (உதாரணம்: தீப்பெட்டி) எவ்வித மதிப்பும் அளிக்கப்படுவதில்லை. இவைகளை வைத்திருக்கத் தடையும் இல்லை. ஒரு செய்திப் பத்திரிகை நம் வீட்டில் இருந்தால் மலக்குகள் நுழைய மாட்டார்கள் என்பதில்லை.

அது போல் சாட்சியங்களாகப் பயன்படக் கூடிய வகையிலும் படங்களைப் பயன்படுத்தலாம்.

ஒரு ஊரில் ஒரு சமுதாயத்தினர் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அம்பலப்படுத்திட புகைப்படங்கள் சிறந்த சாட்சியமாகப் பயன்படும். சிலரது சந்திப்புகளை நிரூபிக்கும் அவசியம் ஏற்படும் என்றால் அப்போதும் புகைப்படங்களைத் தடுக்க முடியாது.

இது தவிர சிறிய அளவிலான உருவப்படங்களுக்கும் அனுமதி இருக்கிறது.

புஹாரியில் பதிவு செய்யப்பட்டுள்ள 5958 வது ஹதீஸில் இருந்து இதை அறியலாம்.

حدثنا قتيبة حدثنا الليث عن بكير عن بسر بن سعيد عن زيد بن خالد عن أبي طلحة صاحب رسول الله صلى الله عليه وسلم قال إن رسول الله صلى الله عليه وسلم قال إن الملائكة لا تدخل بيتا فيه الصورة قال بسر ثم اشتكى زيد فعدناه فإذا على بابه ستر فيه صورة فقلت لعبيدالله ربيب ميمونة زوج النبي صلى الله عليه وسلم ألم يخبرنا زيد عن الصور يوم الأول فقال عبيد الله ألم تسمعه حين قال إلا رقما في ثوب وقال ابن وهب أخبرنا عمرو هو ابن الحارث حدثه بكير حدثه بسر حدثه زيد حدثه أبو طلحة عن النبي صلى الله عليه وسلم

5958 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்.

இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் பின் காலித் (ரலி) அவர்கள், பின்னர் நோய்வாய்ப்பட்ட போது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களுடைய வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. நான் (உடனிருந்த) நபி (ஸல்) அவர்களின் துணைவியரான மைமூனா (ரலி) அவர்களுடைய வளர்ப்பு மகன் உபைதுல்லாஹ் பின் அஸ்வத் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம் , உருவப் படங்களைப் பற்றி முன்பு ஒரு நாள் ஸைத் (ரலி) அவர்கள் நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா? என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள், துணியில் வரையப்பட்டதைத் தவிர' என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டார்கள்.135

இந்த ஹதீஸ் அபூதல்ஹா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

மேலும் புஹாரி 3226 ஹதீஸையும் பார்க்க

மேற்கண்ட ஹதீஸில் ரஹ்மத் டர்ஸ்ட் தமிழாக்கத்தில் துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் படத்)தைத் தவிர' என்று மொழிபெயர்த்துள்ளனர். மொழி பெயர்ப்பு சரியானது என்றாலும் அடைப்புக்குறிக்குள் அவர்கள் போட்டுள்ள சொற்கள் மொழி பெயர்த்தவர்கள் சுயமாக சேர்த்ததாகும். மூலத்தில் இல்லை. அதை நீக்கி விட்டுத்தான் இந்த ஹதீஸின் கருத்தை சிந்திக்க வேண்டும்.

ஆடைகளில் அழகுக்காக சிறு சிறு உருவங்களை பதிப்பதை நாம் காண்கிறோம். அருகில் சென்று பார்த்தால் தான் அந்த உருவம் இன்னது எனத் தெரியும். தூரத்தில் இருந்து பார்த்தால் அது ஒரு வேலைப்பாடாகத் தான் தெரியும். இது தான் ரகம் என்று கூறப்பட்டும். அந்தச் சொல் தான் மூலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தூரத்தில் இருந்து பார்த்தாலும் அது என்ன உருவம் என்பது தெரியுமானால் அந்த உருவம் முக்கியப்படுத்தப்பட்டு பொரிக்கப்பட்டுள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சிறிது சிறிதாக வேலைப்பாடு என்ற அடிப்படையில் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட உருவமாக் இருந்தால் அதர்குத் தடை இல்லை என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

எனவே உருவத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வேறு காரணத்துக்காக சிறிய அளவில் வரையப்பட்ட உருவங்களை பயன்படுத்துவது தவறல்ல என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.

மேலும் நஸயி, திர்மிதி ஆகிய நூல்களில் இடம் பெற்ற பின்வரும் ஹதீஸையும் காணக்

حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ أَبِي النَّضْرِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ أَنَّهُ دَخَلَ عَلَى أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ يَعُودُهُ قَالَ فَوَجَدْتُ عِنْدَهُ سَهْلَ بْنَ حُنَيْفٍ قَالَ فَدَعَا أَبُو طَلْحَةَ إِنْسَانًا يَنْزِعُ نَمَطًا تَحْتَهُ فَقَالَ لَهُ سَهْلٌ لِمَ تَنْزِعُهُ فَقَالَ لِأَنَّ فِيهِ تَصَاوِيرَ وَقَدْ قَالَ فِيهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَدْ عَلِمْتَ قَالَ سَهْلٌ أَوَلَمْ يَقُلْ إِلَّا مَا كَانَ رَقْمًا فِي ثَوْبٍ فَقَالَ بَلَى وَلَكِنَّهُ أَطْيَبُ لِنَفْسِي قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

அபூ தல்ஹா ரலி அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது அவரை நான் நோய் விசரிக்கச் சென்றேன். அவருடன் ஸஹ்ல் பின் ஹுனைஃப் ரலி அவர்களும் இருந்தார்கள். அபூதல்ஹா அவர்கள் ஒரு மனிதரை அழைத்து தனக்குக் கீழே உள்ள விரிப்பை நீக்குமாறு கூறினார்கள். இதைக் கண்ட ஸஹ்ல் ரலி அவர்கள் ஏன் இதை நீக்குகிறீர் என்று கேட்டார்கள். அதற்கு அபூதல்ஹா ரலி அவர்கள் அதில் உருவப்படங்கள் உள்ளன; உருவப்படங்கள் குறித்து நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியது தான் உமக்குத் தெரியுமே என்று கூறினார்கள். அத்ற்கு ஸஹ்ல் ரலி அவர்கள் ஆடையில் வேலைப்பாடு செய்யப்பட்ட உருவங்களைத் தவிர என்று நபிகள் நாயகம் ஸல அவர்கள் கூறவில்லையா என்று அபூதல்ஹாவிடம் கேட்டார்கள். அதற்கு அபூ தல்ஹா அவர்கள் ஆம் ஆனாலும் என் மன திருப்திக்காக (அதாவது பேணுதலுக்காக) அகற்றச் சொன்னேன் என்று கூறினார்கள்.

மேற்கண்ட விதிவிலக்கை இந்த ஹதீஸும் உறுதிப்படுத்துகிறது.

இது போன்ற விதிவிலக்கு இல்லாமல் உருவப்படங்கள் வரைய அனுமதி இல்லை.

எனவே பொழுதுபோக்கிற்காக உயிருள்ளவர்களின் உருவப்படங்களை நீங்கள் வரைவதும் இந்த அடிப்படையில் தடை செய்யப்பட்டதாகும். உருவம் வரைபவர்கள் நரகில் தண்டிக்கப்படுவார்கள் என்பதால் இதை நீங்கள் கைவிட வேண்டும். அடுத்தவர்களுக்கு இதை அன்பளிப்பாக வழங்குவதும் கூடாது.

14.06.2010. 09:49

---www.onlinepj.com

----Ayyampet ALEEM
(http://aleemislam.blogspot.com/)