பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 24, 2019

TNTJ ஹதீஸ் மறுப்பு - 19

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -19)

"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படக்கூடாது" என்ற விதியானது ஒரு "மனநலக் கோளாறு" என்பதை கூறினேன். 

இதைக் கேட்ட அந்த TNTJ சகோதரர் "ஹதீஸ் கலையின் மற்ற விதிகளைப் போன்ற ஒரு விதிதான் இது. ஹதீஸ்களை செம்மைபடுத்துவதற்காக பிற இமாம்கள் விதி வகுத்ததுபோலவே எங்களுடைய இமாமும் விதி வகுத்திருக்கிறார். இந்த விதிக்கு நீங்கள் கூறும் விமர்சனத்தை ஹதீஸ் கலையின் மற்ற விதிகளுக்கும் பொறுத்திப் பார்க்க முடியும்தானே! மற்ற இமாம்களுக்கு ஒரு நீதி!! எங்கள் இமாமுக்கு ஒரு நீதியா!!!" என்று காற்சிலம்பைக் கையிலேந்தியவராக நீதிகேட்டார். 

மேலோட்டமாகப் பார்த்தால் அந்த TNTJ சகோதரர் சொல்வது சரியென்றே தோன்றும். உண்மையில் அது அறியாமையால் விளைந்த கேள்வி. அதை  சற்று விரிவாகப் பார்ப்போம். 

ஹதீஸ் கலையில் விதிவகுத்த இமாம்கள் ஏதோ போகிற போக்கில் விதிகளை சொல்லிவிட்டு போய்விடவில்லை. அந்த விதியின் அடிப்படையில் ஹதீஸ்களை தொகுத்துக் காண்பித்தனர். 

** இரண்டு அறிவிப்பாளர்களும் சந்தித்திருக்க வேண்டும் என்று விதி வகுத்த இமாம் புஹாரி, அந்த விதியின் பிரகாரம் ஹதீஸ்களை தொகுத்துக் காண்பித்தார். 

** இரண்டு அறிவிப்பாளர்கள் சந்திக்க வாய்ப்பிருந்தாலே போதும் என்று விதி வகுத்த இமாம் முஸ்லிம், அந்த விதியின் பிரகாரம் ஹதீஸ்களை தொகுத்துக் காண்பித்தார். 

** மனனம் செய்து அறிவிப்பதில் சிறு பிழை உள்ளள அறிவிப்பாளர்ளின் அறிவிப்புகளை "ஹஸன்" என்ற தரத்தில் வைக்கலாம் என்று விதி வகுத்த இமாம் திர்மிதி, அந்த விதியின் பிரகாரம் ஹதீஸ்களை தொகுத்துக் காண்பித்தார். 

"ஹதீஸானது குர்ஆனுக்கு முரணாக இருக்கக்கூடாது" என்று விதிவகுக்கும் TNTJ, அந்த விதியின் பிரகாரம் ஹதீஸ்களை தொகுத்துக் கொடுத்திருந்தால், அந்த விதியை மற்ற இமாம்களின் விதிகளைப் போல் கருதலாம்தான். ஆனால், அந்த விதியை பயன்படுத்தி இதுவரையிலும் குர்ஆனிற்கு முரணில்லாத ஒரே ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டியதில்லை.

குர்ஆனின் 6666 வசனங்களுக்கும் முரணில்லாத வகையில் ஒரே ஒரு ஹதீஸை மட்டுமாவது எடுத்திக்காட்டிவிட்டால் கூட போதும். மற்ற இமாம்களின் விதிகளைப்போல் TNTJ வின் கொள்கை இமாம் வகுத்த "குர்ஆனிற்கு முரணாக ஹதீஸ் இருக்கக்கூடாது" என்ற விதியையும் பொன்னால் ஆன எழுத்துக்களால் பொறித்து வைக்கலாம்தான். 

ஆனால், குர்ஆனின் 6666 வசனங்களுக்கும் முரணில்லாத வகையில் ஒரே ஒரு ஹதீஸைக் கூட கியாமத்நாள் வரைக்கும் அவர்களால் காட்ட முடியாது. 

ஏனென்றால், முத்தஸாபிஹாத் வசனங்கள் கியாமத்நாள் வரைக்கும் இருக்கும். "பல அர்த்தங்களைக்" கொடுக்கும். ஒரு முத்தஸாபிஹாத் வசனத்திற்கு "ஒரு அர்த்தம்" கொடுத்தால் மட்டுமே அந்த விளக்கத்திற்கு முரணாக ஒரு ஹதீஸை மாற்ற முடியும். 

நிற்க. 

ஹதீஸ் கலை விதிகளை வேறொரு கோணத்தில் அணுகி அதை இன்னும் எளிதாக விளங்கிக் கொள்வதை அடுத்த பகுதியில் பார்ப்போம். (இன்ஷா அல்லாஹ்)

"குர்ஆனுக்கு ஹதீஸ் முரண்படக்கூடாது" என்றொரு விதியை வகுக்க வேண்டியத் தேவை TNTJ வுக்கு ஏன் ஏற்பட்டது? 

அப்பாவி மக்களை சூனியத்தின் பெயரால் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் கள்ள ஆலிம்களுக்கு ஆப்படிப்பதற்காகத்தான் ஆறாவது விதியை வகுத்திருந்தார் அவர்கள் கூறும் "முன்னாள் அறிஞர்". (இந்த விதியை TNTJ ஏற்றுக்கொண்டிருப்பதால் இந்த விதியை அந்த அமைப்பிற்கும் உரியதாகக் கருதி அவர்களின் பெயரிலேயே தொடர்வோம்) 

ஹதீஸை நிராகரித்த காதியானிகள் போன்றவர்களிடம் விவாதகளத்தில் "குர்ஆனுக்கு முரணில்லாமல் ஹதீஸை புரிந்து கொள்ள வேண்டும்" என்று புத்தி சொன்ன TNTJ, இறுதியில் சூனியத்தில் புத்தியை இழந்தது. 

குர்ஆனுக்கு முரணாக ஹதீஸை விளக்கம் கொடுக்க ஆரம்பித்தது. சூனிய ஹதீஸை மறுப்பதற்கு சப்போர்ட்டாக பல்லி, பால்குடி, அஜ்வா என பலதையும் இழுத்துப்போட்டு பேன் பார்க்க ஆரம்பித்தது. 

குர்ஆனுடன் முரண்படுத்திக் காட்டப்பட்ட ஹதீஸ்களை வைத்து "குர்ஆனுடன் ஹதீஸ் முரண்படுகிறது" என்ற கோயபல்ஸ் தத்துவத்தை கையில் எடுத்தது. 

"குர்ஆனுடன் முரண்பட்டால் அது ஹதீஸா?"
என்ற கேள்வியை தொடர்ச்சியாக எழுப்பி இறுதியில், "குர்ஆனுடன் முரண்பட்டதால் இவை ஹதீஸே அல்ல" என்று தீர்ப்பெழுதியது. நிற்க.

ஸஹீஹான ஹதீஸ்கள் ழயீஃபாக மாற்றப்படுவதும், ழயீஃபான ஹதீஸ்கள் ஸஹீஹாக மாற்றப்படுவதும் வரலாற்றின் நெடுகிலும் இருக்கத்தான் செய்கிறது. 

ஹதீஸ்களை புரட்டிப்போடும் கலையைச் செய்யும் அந்த அறிஞர்களிடம் நேர்மை இருக்கும். ஒரு ஹதீஸை ழயீஃபாகவோ, ழயீஃபான ஹதீஸை ஸஹீஹாகவோ  மாற்றும்போது அதற்கான காரணத்தையும் பகிரங்கப்படுத்துவர். 

அந்த காரணங்களை ஆராயும் மற்றொருவர், அந்த காரணங்கள் சரியானதா அல்லது தவறானது என்பதைப் பார்த்து தன்னுடைய முடிவை அறிவிப்பார். 

உதாரணமாக, சமகாலத்தில் வாழ்ந்த ஹதீஸ் கலை அறிஞர் நாஸிர்தீன் அல்பானி அவர்கள் நிறைய ஹதீஸ்களை ஆய்வு செய்து கருத்து அறிவித்தார். ஸஹீஹ் என்று நினைக்கப்பட்ட ஹதீஸ்களை ழயீஃப் என்று அறிவித்தார். 
ழயீஃப் ஆக கருதப்பட்ட சில ஹதீஸ்களை ஸஹீஹ் என்றும் அறிவித்தார். 

இதை அவர் தான்தோன்றித்தனமாக செய்யவில்லை. ஹதீஸ் கலையின் அடிப்படையில் அறிவிப்பாளர்களின் விமசர்சனங்களை வைத்தே அந்த முடிவுகளை அறிவித்தார். 

பின்னாளில், அவருடைய மாணவர் ஒருவர் அல்பானியின் பல அறிவிப்புகளுக்கு மாற்றமாகவும் அறிவித்தார். ஹதீஸ்களை ஸஹீஹாக அறிவித்ததற்கும், ழயீஃபாக அறிவித்ததற்கும் அல்பானி கூறிய காரணங்களை ஆய்வு செய்து அதில் இருந்த பிழைகளின் காரணங்களை கண்டுபிடித்து அதற்கு மாற்றமாக அறிவித்தார் அவருடைய மாணவர். 

இதன் மூலம் நாம் அறிவதாவது...

ஒரு அறிவிப்பாளரை பலவீனப்படுத்தினால் அந்த ஹதீஸ் "ழயீஃப்" ஆகிவிடும். 

பலவீனமான ஒரு அறிவிப்பாளரை பலமானவராக நிறுவி விட்டால் அந்த ஹதீஸ் "ஸஹீஹ்" ஆக மாறிவிடும். 

இதுதான் ஹதீஸ் கலையில் அடிப்படையான விஷயம். 

சூனியம் தொடர்பான ஹதீஸ்களை TNTJ ழயீஃப் ஆக மாற்றிவிட்டால் அந்த ஹதீஸ்களைப் பற்றி கவலைப்படத் தேவையில்லைதான். 

அதாவது, சூனியம் தொடர்பான ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களுள் ஒருவரை பலவீனமாக்கிவிட்டால் கூட போதும். சூனிய ஹதீஸ்களை பலவீனமாக்கி விடலாம். 

அதற்கான வாசல் திறந்தே இருக்கிறது.

இதைச் செய்வதற்கு அறிவும் ஆற்றலும் தங்களுக்கு இல்லாத நிலையில்தான் "குர்ஆனுக்கு முரணாக இருக்கிறது" என்று கூறி, சூனிய ஹதீஸ்களை மறுக்க ஆரம்பித்தது TNTJ.

இதில்தான் ஒரு கேள்வி எழும்...

குர்ஆனுக்கு முரணாக அந்த ஹதீஸ்களை அறிவித்தது யார்? என்ற கேள்வி எழும். 

ஏனென்றால், ஹதீஸ் கலையின்படி ஒரு ஹதீஸை பாழ்படுத்தும் காரணியை அடையாளம் காட்ட வேண்டும். 

குர்ஆனுக்கு முரணான ஒரு செய்தியை ஹதீஸ் என்று அறிவித்த அந்த அறிவிப்பாளர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்திருந்தால் TNTJ வினர் நேர்மையாளர்கள் என்று கூறிவிடலாம்தான். 

ஆனால், இவர்கள் நேர்மையை தூக்கி வீசினர். 

கரித்துண்டை கையில் எடுத்தனர். 

கக்கூஸில் கிறுக்க ஆரம்பித்தனர்.

சூனியம் தொடர்பான ஹதீஸ்களை "எவரோ இட்டுக்கட்டிவிட்டார்" என்று கிறுக்க ஆரம்பித்தனர். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

No comments:

Post a Comment