TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -5)
விஞ்ஞானத்திற்கு முரணாக இருக்கிறது என்பதற்காக குழந்தை சாயல் ஹதீஸை மறுக்க வேண்டும் என்று கூறிய அந்த TNTJ சகோதரரிடம் நான் கூறினேன்...
சகோதரரே, விஞ்ஞானம் என்பது மாறக்கூடிய கருத்துக்களை உடையது. இன்றைக்கு நாம் சரியானதாகக் கருதும் ஒரு விஞ்ஞானக் கருத்து நாளைக்கே கூட மாற்றப்படலாம். அதுதான் விஞ்ஞானம். அதனால், விஞ்ஞானத்தை வைத்து ஹதீஸை மறுப்பது என்பது சரியானதாகத் தெரியவில்லை என்றேன்.
அப்போதுதான், அவர் மடை திறந்த வெள்ளமாக பேசத் தொடங்கினார்...
** குர்ஆனும் ஹதீஸும் ஒன்றல்ல.
** குர்ஆனைப் போன்று ஹதீஸ் பாதுகாக்கப்படவில்லை.
** ஒரு ஹதீஸ் சரியானதா அல்லது தவறானதா என்பதை நாம்தான் தீர்மாணிக்கிறோம்.
** அதாவது, ஹதீஸ் எனும் வஹியை அது வஹிதானா என்பதை நாம்தான் தீர்மாணிக்கிறோம்.
** ஹதீஸ் கலை விதிகளின் மூலம் வஹியை நாம்தான் முடிவு செய்கிறோம்.
** ஹதீஸ் கலை விதிகளும் மனிதனால் எழுதப்பட்டவைகள்தான்.
** அந்த விதிகளும் ஒவ்வொரு காலகட்டத்தில் சேர்க்கப்பட்டதுதான்.
** ஹதீஸின் ஐந்து விதிகளும் மனிதன் அவ்வப்போது சேர்த்ததுதான். (அவற்றுள் சுமார் 20 துனை விதிகளும் இருக்கின்றன)
** ஆறாவது விதியாக "குரானுக்கு முரண்" என்ற விதியை TNTJ வரையறுக்கிறது.
** அந்த விதியின் உப விதியாக "விஞ்ஞானத்திற்கு முரண்" என்ற விதியை சேர்ப்பது தவறா?
** ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய முஸ்லிம்கள் வகுத்த ஹதீஸ் கலை விதிகளை ஏற்றுக்கொண்ட நாம், புது விதிகளை விதிக்கக் கூடாதா?
** TNTJ வின் "ஆறாவது விதி" கூடாது என்றால் முந்தையை ஐந்து விதிகளும் கூடுமா?
** 1400 வருடங்களாக சரியானதாக நம்பப்பட்ட ஹதீஸ்களை ஐம்பது வருடங்களுக்கு முன்பாக அவை சரியில்லாதவை என்று அல்பானி கூறவில்லையா?
** அல்பானி சரியென்று கூறிய ஹதீஸை தவறானதென்று அர்னாவூத் கூறவில்லையா?
** TNTJ ஹதீஸை மறுக்கிறது என்று கதறுபவர்கள், சுமார் 5,96,000 ஹதீஸ்களை மறுத்த புஹாரியையும்தானே ஹதீஸ் மறுப்பாளர் என்று அழைக்க வேண்டும்!
** புஹாரியின் புத்தகத்தில் தவறே இருக்காதா! அவர் என்ன தவறுகளுக்கு அப்பாற்பட்டவரா!!
என்றெல்லாம் பொரிந்து தள்ளினார் அந்த TNTJ சகோதரர்.
அந்த சகோதரர் கூறிய அனைத்தும் உண்மைதான். இவற்றை மறுப்பதற்கில்லை.
இமாம் புஹாரி அவர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் இல்லைதான். ஆயினும் தவறுகளை குறைத்தவர்.
இது விரிவாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
அதற்கு முன்பாக, ஹதீஸ் மறுப்பு என்றால் என்ன என்பதைப் பார்ப்போம்.
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
பிறை மீரான்.
Part -4
https://m.facebook.com/story.php?story_fbid=748391285584009&id=100012394330588
No comments:
Post a Comment