பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 3, 2019

மீலாது

🔹 *இஸ்லாத்தின் பார்வையில் மீலாது*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிப்பதாகக் கூறிக் கொண்டு மீலாது விழா மார்க்கம் அறியாதவர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மதிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்களை மதிப்பது எப்படி என்பதில் தான் அதிகமான மக்கள் அறியாமையில் உள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கம் என்ற பெயரால் எவற்றை நமக்குப் போதித்தார்களோ அதன்படி செயல்படுவதுதான் அவர்களை மதிப்பதாகும். அவர்கள் கற்பிக்காமல் நம்மைப் போல் வஹீ வராத மனிதர்களால் உருவாக்கப்பட்டவைகளை நாம் மார்க்கம் என்று கருதினால் இது நபியை அவமதிப்பதாகும்.

நபிக்குத் தெரியாத நல்ல செயல்கள் உள்ளன; அவற்றை நாங்கள் கண்டுபிடித்து செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளதால் இது நபியின் மதிப்பதைக் குறைப்பதாக ஆகின்றது.

யாரோ ஒரு மார்க்க அறிஞர் சுயமாக இப்படி சொல்லி இருக்கும் போது அதை நாம் ஏற்றுக் கொண்டால் அந்த ஆலிமை நபியின் தகுதிக்கு நாம் உயர்த்தியதாக ஆகும். நபி சொன்னால் நாங்கள் எப்படி கேட்போமோ அது போல் ஆலிம்கள் சொன்னாலும் கேட்போம் என்ற நம்பிக்கை இதனுள் அடங்கியுள்ளது. நபியின் தகுதியை மற்றவர்களுக்குக் கொடுப்பது நபியை அவமதிப்பதாகும்.

இந்த அடிப்படையில் பார்க்கும் போது மீலாது விழாவை நபியவர்கள் கொண்டாடியதில்லை. கொண்டாடச் சொல்லவும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பல நூறு ஆண்டுகளுக்கு பின் நம்மைப் போன்ற மனிதன் உருவாக்கியதை நாம் பின்பற்றி மீலாது விழா கொண்டாடினால் அது நபியை அவமதிப்பதாகவே அமையும்.

இஸ்லாம் மார்க்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே அல்லாஹ் முழுமைப்படுத்தி விட்டதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

*இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.*

திருக்குர்ஆன் 5:3

அல்லாஹ் முழுமையாக்கவில்லை; மீலாது விழாக்களை நாங்களும் கண்டுபிடித்து மார்க்கத்திச் சேர்ப்போம் என்று அதிகப்பிரசங்கித் தனம் செய்வது போல் மீலாது விழா அமைந்துள்ளது.

திருக்குர்ஆனில் பல நபிமார்களின் வரலாறுகளை அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு இஸ்லாத்தில் முக்கியத்துவம் இருந்தால் ஒவ்வொரு நபியும் எப்போது பிறந்தார்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல நபிமார்களின் வரலாற்றுத் துணுக்குகளை நமக்குச் சொல்லி இருக்கிறார்கள். அப்படிச் சொல்லும் போது எந்த ஒரு நபியின் பிறந்த நாள் பற்றியும் அவர்கள் சொல்லவில்லை.

இப்ராஹீம் நபியின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். அவர்கள் அல்லாஹ்வின் கலீல் நண்பர் என்று அல்லாஹ்வால் மதிக்கப்பட்டார்கள். அவர்கள் எப்போது பிறந்தார்கள் என்பதை இந்த சமுதாயத்துக்குச் சொல்லித் தரவில்லை.

பிறந்த நாள் எதுவென்பது கூட தெரியாத அளவுக்கு அல்லாஹ் ஆக்கியுள்ளான் என்றால் பிறந்த நாளுக்கு இஸ்லாத்தில் அங்கீகாரம் இல்லை என்பது உறுதி.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. விழா கொண்டாடவும் இல்லை.

மாறாக, ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த எதை வைத்துத் துவங்கலாம் என்ற ஆலோசனை நடத்தும்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்துத் துவக்குவதை விட்டுவிட்டு, இஸ்லாத்திற்கு மிகவும் திருப்புமுனையாகத் திகழ்ந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியை முன்வைத்தே துவக்கியுள்ளதை இஸ்லாமிய வரலாற்றில் காணமுடிகிறது.

நபிகள் நாயகத்துக்குப் பின் உண்டாக்கப்பட்ட அனைத்துமே பாவமாகும்; வழிகேடாகும் என்பதைப் பின் வரும் நபிமொழிகளில் இருந்தும் அறிந்து கொள்ளலாம்.

صحيح البخاري

2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»

யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரீ 2697

صحيح مسلم

4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்

سنن النسائي

1578 – أَخْبَرَنَا عُتْبَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ سُفْيَانَ، عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ: يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ يَقُولُ: «مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ، إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ»

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸாயி

மீலாது விழா கொண்டாடுதல் நரகில் சேர்க்கும்  என்பதை இந்த நபிமொழிகள் தெளிவாக அறிவிக்கின்றன.

வருடத்துக்கு ஒருதடவை ஆடிப்பாடி மகிழ்வதுதான் மீலாது விழா என்று கொண்டாடப்படுகிறது.

ஒரு மீலாது விழா மார்க்கத்தில் உள்ளது. அது வருடத்துக்கு ஒரு தடவை கொண்டாடும் விழா அல்ல. வாராவாரம் கொண்டாடும் மீலாது விழாவாகும்.

صحيح مسلم

2807 – وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا مَهْدِىُّ بْنُ مَيْمُونٍ عَنْ غَيْلاَنَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَعْبَدٍ الزِّمَّانِىِّ عَنْ أَبِى قَتَادَةَ الأَنْصَارِىِّ رضى الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- سُئِلَ عَنْ صَوْمِ الاِثْنَيْنِ فَقَالَ « فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَىَّ

திங்கள்கிழமை நோன்பு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகையில் "அதில்தான் நான் பிறந்தேன். அதில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அதிலே எனக்கு குர்ஆன் அருளப்பட்டது'' என்கிறார்கள்.

அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலீ)
நூல்: முஸ்லிம்

திங்கட்கிழமை நபிகள் நாயகம் (ஸல்) பிறந்த காரணத்தாலும், அவர்கள் திங்கட்கிழமை தான் நபியாக அனுப்பப்பட்டார்கள் என்பதற்காகவும் வாராவாரம் திங்கட் கிழமை நோன்பு வைக்கலாம்.

மீலாது கூட்டத்தினர் இதைக் கடைப்பிடிக்க மாட்டார்கள்.

இந்த மீலாது கொண்டாடினால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் பண்ண முடியாது, பசியோடு இருக்க வேண்டும் என்பதால் இந்த மீலாது பெயர் தாங்கி முஸ்லிம்களுக்குப் பிடிக்காது.

இந்த மீலாதுக்கு ஆலிம்களுக்கு வருமானமும், புலவு சோறும் கிடைக்காது என்பதால் ஆலிம்களுக்கும் இந்த மீலாது விழா கசப்பாக உள்ளது.

மீலாது விழாக்களில் ஊர்வலம் என்ற பெயரில் போதையில் தள்ளாடுவது, கேடுகெட்ட வாசகங்களைப் பயன்படுத்தி கோசமிடுவது, தெருவாரியாக வசூல் செய்வது, நேர்ச்சை விநியோகிப்பது, இசைக்கருவிகளுடன் பாட்டுக் கச்சேரி நடத்துவது இன்னும் பற்பல அனாச்சாரங்களை ஊருக்கு ஊர் வித்தியாசமாக நடைமுறைப்படுத்துவோருக்கு வாராவாரம் மீலாத் கொண்டாடுவது பாரமாகவே இருக்கும்.

*"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!*

திருக்குர்ஆன் 3:31,32

நபியைப் பின்பற்றுவதில் தான் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியும் என்று உணர்ந்து நடக்கும் நன் மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
_என்றும் இறைப்பணியில்..._
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

No comments:

Post a Comment