பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, March 31, 2020

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

நன்மைகளை வாரி வழங்கும் தொழுகை

இஸ்லாமிய ஐம்பெரும் கடமைகளில் மிக முக்கியமான ஒரு கடமை தொழுகையாகும்.
தொழுகை என்பது முஃமின்களுக்கு நேரம் குறிக்கப்பட்ட கட்டாயக் கடமை ஆகும்.

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
அல்குர்ஆன் 4:103

ஒருவன் முஸ்லிம் என்பதற்கு மிக முக்கியமான அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் தொழுகையைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

‘நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும்; அதை விட்டவர் காஃபிராகி விட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்கள்: நஸயீ 459, திர்மிதீ 2545, இப்னுமாஜா 1069, அஹ்மத் 21859

‘இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 116

இப்படிப்பட்ட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கட்டாயக் கடமையான தொழுகையை மனித சமுதாயம் சிரமப்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ் கடமையாக்கவில்லை. மாறாக தன்னுடைய அடியார்களுக்குத் தனது அளவற்ற அருளை வாரி வழங்க வேண்டும் என்பதற்காகத் தான் அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.

தொழுகையை முன்னிட்டு ஒரு அடியான் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களுக்கும் இறைவன் வழங்கும் நன்மைகளை ஒருவன் சிந்தித்துப் பார்த்தால் இறைவனின் அளவற்ற அருளை அறிந்து கொள்ள முடியும். இந்தப் பாக்கியம் தொழுகையாளிகளுக்கு மட்டும் தான் கிடைக்குமே தவிர தொழுகையை முறையாகப் பேணாதவர்களுக்குக் கிடைக்காது.

தொழுகைக்காக நாம் எத்தனையோ காரியங்களைச் செய்கின்றோம். பல் துலக்குதல், உளூச் செய்தல், பள்ளியை நோக்கி நடந்து செல்லுதல், பாங்கிற்குப் பதில் கூறுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல், வரிசையில் நிற்பது, குனிவது, சுஜூது செய்வது போன்ற பல செயல்களைச் செய்கின்றோம்.

இவை ஒவ்வொன்றிற்கும் எப்படிப்பட்ட சிறப்புகள்? எவ்வளவு பாக்கியங்கள்? என்பதை ஒருவன் அறிந்து கொண்டால் தொழுகை என்ற வணக்கம் வாரி வழங்கும் ஒரு வற்றாத ஜீவ நதி என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

தொழுகைக்காக நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எப்படிப்பட்ட சிறப்புகளை அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் வாக்களித்துள்ளார்கள் என்பதை நாம் ஒவ்வொன்றாகக் காண்போம்.

இறைநேசத்தை பெற்றுத் தரும் தூய்மை

தொழுகைக்குத் தயாராவதற்காக ஒருவன் பல் துலக்குகிறான், உளூச் செய்கின்றான்; குளிப்புக் கடமையானவனாக இருந்தால் குளிக்கின்றான். இவை ஒவ்வொன்றுமே தூய்மைக்குரிய காரியங்கள் தான்.

இவை நம்முடைய உடலுக்குத் தூய்மையைத் தருகின்றன. இதன் மூலம் நாம் இவ்வுலகில் அறியாத முடியாத பல நன்மைகளைப் பெறுகின்றோம். ஆனால் இத்துடன் மட்டுமல்லாமல் இறைநேசத்தையும் இந்தத் தூய்மை பெற்றுத் தருகிறது.

‘திருந்திக் கொள்வோரை அல்லாஹ் விரும்புகிறான். தூய்மையாக இருப்போரையும் விரும்புகிறான்” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் 2:222

ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.
அல்குர்ஆன் 9:108

ஈமானில் பாதி தூய்மை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும்.
அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)
நூல்: முஸ்லிம் 381

மனத்தூய்மை இல்லாமல் ஒருவன் எந்த நல்லமல்களைச் செய்தாலும் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது. அது போன்று தான் ஈமானிற்கு அடுத்து மிக முக்கிய வணக்கமாகிய தொழுகை, உளூஎன்ற தூய்மை இல்லாமல் ஏற்றுக் கொள்ளப்படாது. இதன் காரணமாகத் தான் நபி (ஸல்) அவர்கள் தூய்மையை ஈமானில் பாதி என்று குறிப்பிடுகிறார்கள்.

தொழுகை என்ற வணக்கத்தை முறையாக நிறைவேற்றுபவர்கள் தான் ஈமானின் முழுமைத் தன்மையை அடைந்து கொள்ள முடியும் என்பதையும் இந்தச் செய்தியிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

பல் துலக்குவதன் சிறப்புகள்

தொழுகைக்காக நாம் உளூச் செய்கின்றோம். இப்படி உளூச் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்னால் நாம் பல்துலக்குவது சுன்னத்தாகும்.

பல நோய்களுக்கு மூலமாகத் திகழ்வது நம்முடைய வாய் தான். இதன் காரணமாக ஒவ்வொரு பல் மருத்துவமனையிலும் நாம் நம்முடைய வாயைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று விளம்பரம் வைத்துள்ளார்கள்.

அதிகமாகப் பல் துலக்குவதால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. அதே நேரத்தில் ஒரு தொழுகையாளிக்கு இந்தக் காரியம் இறைவனின் திருப்தியையும் பெற்றுத் தருகிறது என்றால் தொழுகை எப்படிப்பட்ட பாக்கியம் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பல் துலக்குதல் வாய்க்கு நறுமணத்தையும், இறைவனின் திருப்தியையும் பெற்றுத்தருகிறது.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: நஸாயீ 5

உளூவின் சிறப்புகள் மற்றும் நன்மைகள்

தொழுகையை முறையாக நிறைவேற்றும் ஒருவன் ஒவ்வொரு தொழுகைக்காகவும் உலூவை நிறைவேற்றுகின்றான். இந்தச் சிறிய நற்காரியத்தின் மூலம் இவ்வுலகில் பல நன்மைகள் கிடைக்கின்றன. அது மட்டுமில்லாமல் இதற்கு இறைவன் வாரி வழங்கும் ஏராளமான நன்மைகளை அறிந்து கொண்டால் தொழுகையாளிகளை இறைவன் எந்த அளவிற்கு நேசிக்கின்றான் என்பதையும், தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மறுமை அந்தஸ்தையும் புரிந்து கொள்ளலாம்.

உளூவை முறையாக, பரிபூரணமாக நிறைவேற்றும் தொழுகையாளிகள் எவ்வளவு பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்பதை ஒவ்வொன்றாகக் காண்போம்.

முஃமின்களின் அடையாளம் உளூவைப் பேணுதல்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (தொழுகையை) நிலைநாட்டுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்! உங்களுடைய நல்லறங்களில் மிகவும் சிறந்தது தொழுகைதான். முஃமினைத் தவிர வேறு யாரும் உலூவில் பேணுதலாக இருக்க மாட்டார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: அஹ்மத் 22467

உலூவைப் பேணுவதை முஃமின்களின் அடையாளமாக நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்தப் பாக்கியத்தை தொழுகையாளிகள் பெற்றுக் கொள்ள முடியும்.

பாவங்களை அழிக்கும் உளூ

நாம் நம்முடைய உடல் உறுப்புக்கள் மூலம் எத்தனையோ பாவங்களைச் செய்கின்றோம். கண்கள் மூலமாக, கைகள் மூலமாக, கால்கள் மூலமாக நாம் கணக்கிட முடியாத அளவிற்குப் பல சிறுபாவங்களைச் செய்கின்றோம்.

செய்த பாவங்களுக்கு நாம் இறைவனிடம் மன்னிப்பு தேடுவதும் இல்லை. செய்த பல பாவங்களை உடனேயே மறந்தும் விடுகின்றோம். இறுதியில் நம்முடைய சிறுபாவங்கள் நம்மிலேயே தேங்கி நம்மை வாட்டும் நரகத்தில் கொண்டு போய் சேர்த்து விடுகின்றன.

ஆனால் தொழுகையாளிகளுக்கு இறைவன் வழங்கும் மிகப் பெரும் பாக்கியம் நாம் தொழுகைக்காக செய்யும் உலூவின் மூலமாகவே நாம் உறுப்புக்களால் செய்த அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கின்ற அற்புத அருளை இறைவன் வழங்கியுள்ளான்.

இது தொழுகை மூலம் நாம் அடையும் மிகப்பெரும் பாக்கியமாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு ‘முஸ்லிமான’ அல்லது ‘முஃமினான’ (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) ‘நீருடன்’ அல்லது ‘நீரின் கடைசித் துளியுடன்’ முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) ‘தண்ணீருடன்’ அல்லது ‘தண்ணீரின் கடைசித் துளியுடன்’ வெளியேறுகின்றன.

அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) ‘நீரோடு’ அல்லது ‘நீரின் கடைசித் துளியோடு’ வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார்.
அறிவிப்பவர்: அபூ{ஹரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 412

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் முறையாக உளூ செய்யும்போது (அவர் செய்திருந்த) அவருடைய (சிறு) பாவங்கள் அவரது உடலிலிருந்து வெளியேறி விடுகின்றன. முடிவில், அவருடைய நகக்கண்களுக்குக் கீழேயிருந்தும் (அவருடைய பாவங்கள்) வெளியேறிவிடுகின்றன.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
நூல்: முஸ்லிம் 413

முன்பாவங்கள் மன்னிக்கப்படுதல்

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டு வரச் சொல்லி (உளூ செய்தார்கள். ஆரம்பமாக) தமது இரு முன் கைகளில் மூன்று முறை (தண்ணீர்) ஊற்றிக் கழுவினார்கள். பிறகு தம் வலக்கரத்தைப் பாத்திரத்திற்குள் செலுத்தி, (தண்ணீர் அள்ளி) வாய்க் கொப்பளித்து, (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினார்கள். பிறகு தமது முகத்தை மூன்று முறை கழுவினார்கள்.(பிறகு) தமது இரு கைகளையும் மூட்டுவரை மூன்று முறை கழுவினார்கள். பிறகு தலையை ஈரக் கையால் தடவி (மஸ்{ஹச் செய்திடலா)னார்கள். பின்னர் தமது இரு கால்களையும் கணுக்கால் வரை மூன்று முறை கழுவினார்கள்.

பின்னர் யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச்செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 159

இரு தொழுகைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிப்பு

உலூச் செய்யும் போதே நம்முடைய பாவங்கள் உடல் உறுப்புகள் வழியாக வழிந்தோடும் தண்ணீருடன் வெளியேறுகிறது என்பதைக் கண்டோம். அது மட்டுமில்லாமல் அழகிய முறையில் உளூச் செய்தால் ஒவ்வொரு இரண்டு தொழுகைக்கு மத்தியில் நிகழ்ந்த சிறு பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன.

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் பள்ளிவாசலின் முற்றத்தில் இருந்து கொண்டிருந்தார்கள். அப்போது அஸ்ர் நேரம். அவர்களிடம் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்தார். உடனே உஸ்மான் (ரலி) அவர்கள் உளூ செய்யத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி, உளூ செய்தார்கள். பிறகு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒரு நபிமொழியை அறிவிக்கப்போகிறேன். (குர்ஆனில்) ஒரு வசனம் (2:159) மட்டும் இல்லையானால் இதை நான் உங்களுக்கு அறிவிக்க மாட்டேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அழகிய முறையில் (நிறைவாக) உளூ செய்து, ஒரு தொழுகையை நிறைவேற்றுவாராயின் அவருக்கும் அடுத்த தொழுகைக்கும் இடையிலான (சிறு) பாவங்களை அவருக்காக அல்லாஹ் மன்னிக்காமலிருப்பதில்லை.
அறிவிப்பவர்: ஹூம்ரான் (ரலி)
நூல்: முஸ்லிம் 385

உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘எங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒன்றைப் பற்றி உங்களிடம் நான் அறிவிக்கலாமா? அல்லது வாய்மூடி இருந்து விடலாமா? என்று எனக்குத் தெரியவில்லை” என்று சொன்னார்கள். உடனே நாங்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அது நல்ல தகவலாக இருப்பின் எங்களுக்கு அறிவியுங்கள். இல்லாவிட்டால், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று கூறினோம். அப்போது அவர்கள், ‘ஒரு முஸ்லிம் தம்மீது அல்லாஹ் கட்டாயமாக்கியுள்ள உளூவை முழுமையாகச் செய்து, இந்த ஐவேளைத் தொழுகைகளைத் தொழுவாராயின் அந்த ஐவேளைத் தொழுகைகளுக்கிடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்கு அவை பரிகாரமாக அமையாமலிருப்பதில்லை” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 390

மறுமையில் ஒளி வீசும் உறுப்புகள்

அபூ{ஹரைரா (ரலி) அவர்கள் உளூ செய்வதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள் தமது முகத்தையும் கைகளையும் கழுவிக் கொண்டே தோள்பட்டை வரை சென்றார்கள். பிறகு கால்களைக் கழுவிக்கொண்டே கணுக்கால் வரை சென்றார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘மறுமை நாளில் என் சமுதாயத்தார் உளூ செய்ததன் அடையாளமாக உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் வருவார்கள். ஆகவே, உங்களில் எவருக்கு (உளூவில் தம் பிரதான உறுப்புக்களை நீட்டிக் கழுவி) தமது ஒளியை நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.
அறிவிப்பவர்: நுஐம் பின் அப்தில்லாஹ்
நூல்: முஸ்லிம் 415, புகாரி 136

கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம்

தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியங்களில் ஒன்று தான் மறுமையில் கவ்ஸர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம். தொழுகையாளிகளைத் தவிர மற்றவர்கள் இதனை அடைந்து கொள்ள முடியாது.

அபூ{ஹரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘(மறுமையில் எனக்கு வழங்கப்படவிருக்கும் ‘அல்கவ்ஸர்’ எனும்) எனது நீர்த் தடாக(த்தின் இரு கரைகளுக்கிடையேயான தூர)மானது, (தென் அரபகத்திலுள்ள) ‘அதன்’ நகரத்திலிருந்து (வட அரபகத்திலுள்ள) ‘அய்லா’ நகரத்தைவிட அதிகத் தொலைவுடையதாகும். அ(தன் நீரான)து, பனிக்கட்டியைவிட மிகவும் வெண்மையானது; பால் கலந்த தேனைவிட மதுரமானது. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானவை. ஒருவர் தமது நீர்த் தொட்டியை விட்டும் (பிற) மக்களின் ஒட்டகங்களைத் தடுப்பதைப் போன்று, நான் அந்தத் தடாகத்தை விட்டும் மக்கள் சிலரைத் தடுப்பேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! அன்றைய தினம் (உங்கள் சமூகத்தாராகிய) எங்களை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘ஆம்; வேறெந்தச் சமுதாயத்தாருக்கும் இல்லாத ஓர் அடையாளம் உங்களுக்கு இருக்கும். உளூ செய்ததன் அடையாளமாக(ப் பிரதான) உறுப்புகள் பிரகாசிப்பவர்களாய் என்னிடம் நீங்கள் வருவீர்கள். (அதை வைத்து உங்களை நான் அடையாளம் கண்டுகொள்வேன்)” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 416

நபித்தோழர்களின் அடையாளம் உளூ

நாம் தொழுகைக்காக செய்கின்ற உளூ நமக்கு நபிகள் நாயகத்தின் நண்பர்கள் என்ற அந்தஸ்தை பெற்றுத் தருகிறது. நாம் நபிகள் நாயகத்தின் நண்பர்கள் என்றால் அதன் கூலி மாபெரும் சுவர்க்கத்தைத் தவிர வேறில்லை. இந்தப் பாக்கியமும் தொழுகையாளிகளுக்குத் தான் கிடைக்கிறது.

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று ‘அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லா{ஹ பி(க்)கும் லாஹிகூன்’ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்) என்று கூறி விட்டு, ‘நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார்கள்.

மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் என் தோழர்கள் தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள்” என்று கூறினார்கள். மக்கள், ‘உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒரு மனிதரிடம் முகமும் கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்துகொள்ள மாட்டாரா, கூறுங்கள்” என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தனர். ‘(அவ்வாறே) அவர்கள் உளூவினால் (பிரதான) உறுப்புகள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன்.
அறிவிப்பவர்: அபூ ஹூரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 419

பாவங்களை அழித்து அந்தஸ்தை உயர்த்தும் உளூ

தொழுகையை முறையாகத் தொழுகின்ற ஒருவன் வாட்டும் குளிர் காலத்தில் கூட, தன்னுடைய உளூவை பரிபூரணமாகச் செய்து தொழுகையை நிலைநாட்டினால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவது மட்டுமல்லாமல் அந்தஸ்துகளும் உயர்த்தப்படுகிறது.

அபூ{ஹரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?” என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(அவை:) சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்” என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 421

அழகிய உளூவும் அற்புத சுவர்க்கமும்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளூ செய்து, அகத்தையும் முகத்தையும் ஒருமுகப்படுத்தி (பணிந்து, உள்ளச்சத்துடன்) தொழுதால் அவருக்குச் சொர்க்கம் கட்டாயமாகாமல் இருப்பதில்லை”
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397

உளூச் செய்த பிறகு ஓதும் துஆவின் சிறப்புகள்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு, ‘அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லா{ஹ வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலு{ஹ (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி), நூல்: முஸ்லிம் 397

இதுவரை நாம் உளூச் செய்வதினால் தொழுகையாளிகளுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றி பார்த்தோம். அவற்றைச் சுருக்கமாகக் காண்போம்.

1. தூய்மைப் பேணுவதினால் அல்லாஹ்வின் நேசம் கிடைக்கிறது.
2. தூய்மை ஈமானில் பாதி. அந்த பாக்கியத்தை அடைகின்றோம்.
3. பல்துலக்குவது இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருகிறது.
4. உளூச் செய்யும் போது உறுப்புக்களின் வழியாகத் தண்ணீருடன் பாவங்கள் வெளியேறுகின்றன.
5. முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
6. இரண்டு தொழுகைக்கு மத்தியில் நிகழ்ந்த சிறுபாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.
7. மறுமையில் உளூவினால் உறுப்புகள் ஒளிமயமாகக் காட்சி தருகின்றன.
8. மறுமையில் கவ்சர் தடாகத்தில் நீரறுந்தும் பாக்கியம் கிடைக்கிறது.
9. நபிகள் நாயகத்தின் தோழர்களாகும் பாக்கியம் கிடைக்கிறது.
10. சுவர்க்கத்தில் அந்தஸ்துகள் உயர்த்தப்படுதல்.
11. சுவர்க்கம் கட்டாயமாகிறது.
12. சுவக்கத்தின் எட்டு வாயில்களில் விரும்பிய வாசல் வழியாக நுழையும் பாக்கியம்.

தொழுகை அதனை முறையாகப் பேணுபவர்களுக்கு இன்னும் பல்வேறு பாக்கியங்களை வாரி வழங்குகிறது. அவற்றை வரும் இதழ்களில் விரிவாகக் காண்போம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்

மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்

மறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்

இந்தப் பூமியில் மனிதன் ஏராளமான பாவங்களைச் செய்கிறான். அவன் தன்னால் முடிந்த அளவு இப்பாவங்களை விட்டு விலகி அல்லாஹ்வைப் பயந்து நல்லவனாக வாழ்வதற்காக, அவனது பாவங்களுக்குத் தண்டனை இருப்பதாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி (ஸல்) அவர்களும் நமக்குத் தெளிவு படுத்தியுள்ளனர். இவ்வாறு மனிதன் செய்யும் பாவங்களில் சில சிறியவையாகவும் சில பாவங்கள் மிகப் பெரியவையாகவும் அமைந்துள்ளன.

பெரிய பாவங்கள் எவை? என்பதை அதற்குரிய தண்டனைகளை வைத்து நாம் அறிந்து கொள்ளலாம். இந்த வகையில் மிகப் பெரும் பாவங்களில் உள்ளவையாகக் கருதப்படும் சில குற்றங்களுக்கு அல்லாஹ் கொடுக்கும் தண்டனை அவன் நம்மைப் பார்க்காமலும் நம்மிடம் பேசாமலும் நமது பாவக் கறைகளைச் சுத்தம் செய்யாமலும் இருப்பதாகும். இவர்களைப் பற்றி அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் கூறுகிறான்.

அவ்வாறில்லை! அந்நாளில் அவர்கள் தமது இறைவனை விட்டும் தடுக்கப் படுவார்கள் என்று குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 83:15)

கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு (அல்குர்ஆன் 2:174)

‘மறுமை நாளில் நல்லவர்கள் அனைவரும் அல்லாஹ்வை கண் கூடாகக் காண்பார்கள். பௌர்ணமி நிலவை நாம் எப்படி அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோமோ அது போன்று அல்லாஹ்வைக் காண்போம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்: ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரீ 7435

அல்லாஹ்வைப் பார்ப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. மிகப்பெரிய பாக்கியம்.
சொர்க்கவாசிகள் சுவர்க்கத்தில் நுழையும் போது, ‘இன்னும் உங்களுக்கு நான் எதையாவது அதிகப்படுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?’ என்று அல்லாஹ் கேட்பான். ‘நீ எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சுவர்க்கத்தில் நுழையச் செய்ய வில்லையா? எங்கள் முகங்களை நீ வெண்மையாக்கவில்லையா?’ என்று சுவர்க்கவாசிகள் கூறுவார்கள். பிறகு அல்லாஹ் திரையை அகற்றுவான். அல்லாஹ்வை அவர்கள் காண்பதை விட அவர்களுக்கு விருப்பமானதாக வேறு எதுவும் இருக்காது.
அறிவிப்பாளர்: ஸுஹைப் (ரலி) நூல்: முஸ்லிம் 266

அல்லாஹ் திருக்குர்ஆனில் பேச மாட்டான் என்று கூறுவதன் பொருள், நல்ல வார்த்தைகளால் அன்போடு பேச மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் அல்லாஹ் நரக வாசியைப் பார்த்து வேதனையைச் சுவை என்று கூறுவதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

சுவைத்துப் பார்! நீ மிகைத்தவன் மரியாதைக்குரியவன். நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தது இதுவே (என்று அல்லாஹ் கூறுவான்) (அல்குர்ஆன் 44:49)

இன்னும் கேலி செய்யும் விதமாக அல்லாஹ் நரகவாசியிடம் பேசுவதை குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. மறுமை நாளில் பாவிகளை அல்லாஹ் விசாரிப்பான் என்று பல நபிமொழிகளும் கூறுகின்றன. அல்லாஹ் தூய்மைப்படுத்த மாட்டான் என்றால் பாவத்திலிருந்து தூய்மைப் படுத்தி குற்றமற்றவர்களாக ஆக்க மாட்டான் என்று விளங்கிக் கொள்ள வேண்டும்.

குர்ஆனிலும் நம்பத் தகுந்த நபிமொழியிலும் 12 நபர்கள் இந்தத் தண்டனைக்கு உரியவர்கள் என்று கூறப்படுகிறது. இதில் மூன்று நபர்கள் பற்றி வரும் செய்திகள் பலவீனமானவை ஆகும். மீதமுள்ள 9 நபர்கள் பற்றிய செய்தி ஆதாரப் பூர்வமானதாகும். அவற்றின் விவரத்தைக் காண்போம்.

(1) வேதத்தை மறைத்தவர்கள்

அற்பமான பணத்திற்காக அல்லாஹ்வின் வசனங்களை மக்களுக்கு மறைத்தவர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான். இன்னும் அவர்களிடம் பேசவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு (அல்குர்ஆன் 2:174)

இன்றும் பெரும்பாலான மார்க்க அறிஞர்கள் இந்தத் தவறைச் செய்து வருகிறார்கள். குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமான எத்தனையோ விஷயங்களைத் தவறு என்று அவர்கள் விளங்கி வைத்துள்ளார்கள். ஆனால் அவற்றையெல்லாம் மக்களிடம் கூறினால் தன்னுடைய பொருளாதாரத்திற்குப் பாதிப்பு வந்து விடும் என்று பயப்படுகிறார்கள்.

உதாரணமாக இன்று சமுதாயத்தில் மவ்லூது, கத்தம், பாத்திஹா போன்ற பித்அத்துகள் அனைத்தும் வருமானத்திற்காகத் தான் ஆலிம் பெருந்தகைகளால் உருவாக்கப்பட்டன. இவற்றைச் செய்யும் படி அல்லாஹ்வோ அவனது தூதர் (ஸல்) அவர்களோ கூறவில்லை என்பது ஆலிம்களுக்கு நன்றாகத் தெரியும். நாம் இவற்றுக்கு எதிரான வசனங்களையும் ஹதீஸ்களையும் கூறினாலும் அவர்கள் ஏற்பதற்கு முன் வருவதில்லை.

இவ்வாறு பணத்திற்காக வசனங்களை நாம் மறைத்தால் அல்லாஹ் நம்முடன் பேசாமல் இருப்பதோடு நாம் இவ்வழியில் சம்பாதித்தவற்றை நெருப்பாக மாற்றி உண்ண வைப்பான். கடுமையான இந்தத் தண்டனையை நமது மார்க்க அறிஞர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை.இந்த உலகில் வேண்டுமானால் அதிகமாக சம்பாதித்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம். ஆனால் மறுமையில் இதற்கான பதிலை நாம் கூறாமல் அல்லாஹ்விட மிருந்து தப்பிக்க முடியாது.நபிமார்களாக இருந்தாலும் அவர்களையும் அல்லாஹ் விசாரிக்காமல் விட்டுவிட மாட்டான்.

உமது இறைவன் மீது ஆணையாக! அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி அவர்கள் அனைவரையும் விசாரிப்போம். (அல்குர்ஆன் 15:92)

யாருக்குத் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ அவர்களையும் விசாரிப்போம். தூதர்களையும் விசாரிப்போம். (அல்குர்ஆன் 7:6)

இதை ஸஹாபாக்கள் தெளிவாக விளங்கியிருந்தார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அதிகமாக ஹதீஸை அறிவிப்பதை சிலர் குறை கூறினர். இக்குறையை அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதாமல், நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட செய்திகளை மக்களுக்குக் கூறினார்கள். மார்க்கத்தை மறைக்கக் கூடாது என்று அவர்கள் எண்ணியதே இதற்கு காரணம்.

மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர்வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். (அல்குர்ஆன் 2:159)

இந்த வசனத்தை அபூஹுரைரா (ரலி) அவர்கள் சுட்டி காட்டி ‘இந்த வசனம் மட்டும் இல்லாவிட்டால் நான் ஒரு ஹதீஸைக் கூட கூறியிருக்க மாட்டேன்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 118

மார்க்கத்தை மறைப்பது மாபெரும் குற்றம் என்பதால் அக்குற்றத்தைச் செய்யக் கூடாது என்று நமக்கு முன்னர் வேதம் வழங்கப் பட்டவர்களான யூத, கிறித்தவர் களிடத்தில் அல்லாஹ் உறுதிமொழி வாங்கினான். இந்த உறுதிமொழியை அவர்கள் நிறைவேற்றவில்லை. ஆதலால் தண்டனையைச் சம்பாதித்துக் கொண்டார்கள்.
வேதம் கொடுக்கப் பட்டோரிடம், ‘அதை மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும் மறைக்கக் கூடாது’ என்று அல்லாஹ் உறுதி மொழி எடுத்த போது,

அவர்கள் அதைத் தமது முதுகுகளுக்குப் பின் எறிந்தனர். அற்பமான விலைக்கு விற்றனர். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டது (அல்குர்ஆன் 3:187)

நாம் இந்த உலகத்திற்கு வந்ததன் நோக்கம் மறுமையில் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகத் தான். நாம் தொழுவதும் நோன்பு வைப்பதும் அவ்வுலகில் பலனை அடைவதற்காகத் தான். ஆனால் நாம் மார்க்கத்தை மறைப்போமானால் மறுமையில் நமக்கு எந்தப் பலனும் கிடைக்காது. அல்லாஹ் வேதமுடையோரிடத்தில் செய்த இந்த உடன்படிக்கையை அவர்கள் நிறைவேற்றாத காரணத்தினால் அவர்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்று குர்ஆனில் கூறுகிறான்.

அல்லாஹ்விடம் செய்த உறுதிமொழியையும், தமது சத்தியங்களையும் அற்பமான விலைக்கு விற்றோருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. கியாமத் நாளில் அவர்களுடன் அல்லாஹ் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:77)

(2) பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்பவன்

இன்று பொய் இல்லாமல் வியாபாரம் கிடையாது என்று கூறும் அளவுக்குப் பொய் வியாபாரத்தில் கலந்து விட்டது. உண்மையைக் கூறி, நியாயமாக வியாபாரம் செய்பவன் பிழைக்கத் தெரியாதவன் என்றும் பொய் சொல்லி ஏமாற்றுபவன் அறிவாளி என்றும் நாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.நியாயமாக பிழைப்பவனுக்குக் குறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் நிறைவான பரக்கத்தை வழங்குகிறான். அநியாயமாகப் பிழைப்பவனுக்கு நிறைவாக வருமானம் வந்தாலும் அதில் அல்லாஹ் பரக்கத்தை அழித்து விடுகின்றான்.

விற்பவரும் வாங்குபவரும் பிரியும் வரை (வியாபாரத்தை முறித்துக் கொள்ளும்) உரிமை படைத்திருக்கிறார்கள். அவ்விருவரும் உண்மையைக் கூறி (பொருளின் குறையைத்) தெளிவு படுத்தினால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் செய்யப்படும். அவர்கள் பொய் கூறி (பொருளின் குறையை) மறைத்தால் அவர்களின் வியாபாரத்தில் பரகத் நீக்கப்படும்.
அறிவிப்பாளர்: ஹகீம் பின்
ஹிஸாம் (ரலி), நூல்: புகாரீ 2110

வியாபாரிகள் அனைவரும் பொய் சொல்வார்கள் என்பதை மக்கள் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள். வியாபாரி விலை 50 ரூபாய் என்று கூறினால் வாங்குபவர் 30 ரூபாய்க்குத் தாருங்கள் என்று கேட்கிறார். மக்கள் யாரும் அவர்கள் கூறுவது உண்மை என்று நம்பத் தயாராக இல்லை. அந்தளவுக்கு வியாபாரத்தில் பொய்யும் புரட்டும் நிறைந்து விட்டது.

இதைப் போன்று சில நேரங்களில் கூடுதல் இலாபம் பெற வேண்டும் என்பது போன்ற எண்ணத்தில் வாங்குபவரை நம்ப வைப்பதற்காக, கூடுதல் விலை கொடுத்து வாங்கியதாக அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு விற்பவர்கள் இருக்கிறார்கள். வாங்குபவரும் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறியதால் நம்பி வாங்கிச் சென்று விடுவார். ஆனால் மறுமையில் இதற்குரிய தண்டனையை வியாபாரி யோசித்துப் பார்ப்பதில்லை.அல்லாஹ் பார்க்காத பேசாத கடும் தண்டனைக்குரிய நபர்களில் இவ்வாறு பொய் சத்தியம் செய்து வியாபாரம் செய்தவனும் ஒருவனாவான்.

மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். (ஒருவன் தன் பொருளை அதிக விலைக்கு) விற்பதற்காக வாடிக்கையாளர் கொடுக்கும் விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கியதாக (பொய்) சத்தியம் செய்தவன்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 2369

(3) சுயநலத் தொண்டன்

ஒரு இயக்கத்திற்கோ அல்லது ஒரு குழுவிற்கோ நாம் ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பொது நலனை கருத்தில் கொண்டு ஏற்க வேண்டும். நியாயமானவராகவும் நாணயமான வராகவும் தேர்ந்தெடுக்க வேண்டும். தனக்குச் சாதகமாக நடக்கும் நபரைத் தேர்வு செய்யக் கூடாது.ஆனால் இன்று பெரும்பாலான தொண்டர்கள் இதைக் கவனத்தில் வைப்பதில்லை. தன்னுடைய நலனுக்காக, கொள்ளைக்காரர் களையும் அயோக்கியர்களையும் தலைவராக ஏற்றுள்ளார்கள். தலைவன் அவர்களுக்கு வாரி வழங்கினால் அவனுக்கு விசுவாசமான தொண்டனாக இருக்கிறார்கள். தலைவன் அவர்களுக்கு வழங்கவில்லை என்றால் அவனைப் பகைக்கிறார்கள்.

நமது நாட்டில் ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. இந்தக் கட்சிகளில் இன்று ஒரு கட்சியில் தொண்டனாக இருப்பவன் நாளை வேறொரு கட்சியில் தொண்டனாக மாறுகிறான். நேற்று வரை தன் தலைவனை போற்றிப் புகழ்ந்தவர்கள் இன்று திட்டிக் கொண்டிருக்கின்றான். தலைவர் நாணயமானவராக இருந்தாலும் தனக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்தால் வெறுக்கிறான். எதிரியாக மாறி அவனைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருக்கிறான். இது போன்ற சந்தர்ப்பவாதிகள் இந்த ஹதீஸை கவனத்தில் கொள்ளட்டும்.

மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவனுக்குக் கடுமையான வேதனை உண்டு. (அந்த மூவரில் ஒருவன்) அவன் தன் தலைவனிடம் உலக ஆதாயத்திற்காகவே விசுவாசப் பிரமாணம் செய்து கொண்டவன். அவர் கொடுத்தால் திருப்தி அடைந்து கொடுக்காவிட்டால் கோபம் கொள்பவன்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 2358

தலைவர் மார்க்கத்திற்கு மாற்றமாக நடந்தாலும் கட்டுப்பட வேண்டும் என இந்த ஹதீஸ் தெரிவிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் நியமித்த ஒரு தலைவர் அவர்களின் தொண்டர்களை, கோபத்தில் நெருப்பில் குதிக்க வேண்டும் என்று கட்டளையிட்ட போது இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீங்கள் நெருப்பில் குதித்திருந்தால் மறுமை நாள் வரையிலும் அதிலேயே இருப்பீர்கள் என்று கூறி விட்டு பாவமான விஷயத்தில் கட்டுப்படுதல் இல்லை என்றும் கூறினார்கள்.    (புகாரீ 7257)

(4) உபரியான தண்ணீரை தர மறுப்பவன்

தன் உபயோகத்திற்கு மேலாக இருக்கும் தனது கிணற்றின் நீரையோ அல்லது குளத்தின் நீரையோ பிறர் பயன்படுத்த விடாமல் தடுத்தவனும் இந்த துர்பாக்கிய நிலையை அடைவான்

மூன்று பேர்களுடன் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்… தன் தேவைக்கு மேல் எஞ்சியிருந்த தண்ணீரை (மக்கள் உபயோகிப்பதைத்) தடுத்தவன் ஆவான். (மறுமையில்) அவனை நோக்கி உன் கரங்கள் உருவாக்காத தண்ணீரின் மீதத்தை மக்கள் உபயோகிக்க விடாமல் தடுத்ததைப் போலவே இன்று நான் எனது அருளிலிருந்து உன்னைத் தடுக்கிறேன் என்று அல்லாஹ் கூறுவான்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 2369

தண்ணீர் மனிதர்களுக்கு அவசியம் தேவை. தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் உயிர் வாழ முடியாது. வழிப்போக்கர்கள் பயணிகள் போன்றோர்களுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப்படும். இரக்கம் இல்லாதவர்கள் தான் இது போன்ற செயலைச் செய்வார்கள். அதுவும் எஞ்சிய நீரைக் குடிக்க விடாமல் தடுக்கிறான் என்றால் அவனைப் போன்று கொடிய எண்ணம் உள்ளவன் வேறு யார் இருக்க முடியும்?
தண்ணீர் என்பது நாமாக உருவாக்கும் பொருள் இல்லை. அல்லாஹ்வின் அருளால் நமக்குக் கிடைக்கும் அற்புதமாகும். இந்த அற்புதத்தைப் பிறர் அனுபவிக்க விடாமல் தடுத்தவனுக்கு அல்லாஹ் மறுமையில் தனது அருளைத் தடுத்து விடுவான்.

(5) பெருமைக்காக தரையில் இழுபடுமாறு ஆடையை அணிபவன்

மனிதன் முழுக்க முழுக்க பெருமை கொள்வதற்கு தகுதியற்றவனாக இருக்கின்றான். அவன் தன்னுடைய சொந்த முயற்சியால் தான் எல்லாவற்றையும் பெறுவதாக எண்ணிக் கொண்டிருக்கிறான். அவன் வசதியாக உடல் நலத்துடன் வாழ்வது அல்லாஹ் அவனுக்குப் போட்ட பிச்சை என்பதை மறந்து விடுகின்றான். ஆணவத்துடன் தனது நடை பாவனைகளை அமைத்துக் கொள்கிறான். நபியாக இருந்தாலும் பெருமை கொள்வதற்கு அனுமதியில்லை

பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! (அல்குர்ஆன் 17:37)

‘யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி, நூல்: முஸ்லிம் 147

பெருமை என்றால் எது என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமல், நம்மை அலங்கரித்துக் கொள்ளாமலும் விரும்பிய அழகிய ஆடைகளை அணியாமலும் இருக்கக் கூடாது. பெருமை எது என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

யாருடைய உள்ளத்தில் அணு அளவு தற்பெருமை இருக்கின்றதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘தமது ஆடை அழகாக இருக்க வேண்டும், தமது காலணி அழகாக இருக்க வேண்டுமென ஒருவர் விரும்புகிறார். (இதுவும் தற்பெருமையில்) சேருமா?’ என்று அப்போது ஒரு மனிதர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அழகானவன் அழதையே அவன் விரும்புகிறான். தற்பெருமை என்பது (ஆணவத்தோடு) உண்மையை மறுப்பதும் மக்களைக் கேவலமாக மதிப்பதும் தான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம் 147

பெருமையோடு ஆடையைத் தரையில் படுமாறு அணிந்து செல்பவனை அல்லாஹ் மறுமையில் கண்டு கொள்ள மாட்டான். அவர்களுக்குத் தண்டனையையும் வழங்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

‘மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான். அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ‘(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர். நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!’ என்று கேட்டேன். அதற்கு, ‘(அவர்களில் ஒருவர்)தமது ஆடையை தரையில் படுமாறு அணிபவர்….’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி)  நூல்: முஸ்லிம் 171

அரசியல்வாதிகளிடம் இந்த நடைமுறையை நாம் காணலாம். அழகிய வெள்ளை வேட்டியை அணிந்து வரும் இந்த அரசியல்வாதியின் வேட்டி ஊரை பெருக்கிக் கொண்டு வரும். இவ்வாறு இவர்கள் அணிவது பெருமையைக் கவனத்தில் கொண்டு தான். எனவே இதைப் போன்று அணியும் பழக்கத்தை யாரும் மேற்கொள்ளக்கூடாது.

‘(முன் காலத்தில்) ஒருவன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் (கீழே தொங்க விட்டு) இழுத்துக் கொண்டே நடந்த பொழுது (பூமி பிளந்து அதில்) அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரீ 3485

(6) செய்த உதவியை சொல்லிக் காட்டுபவன்

பிறருக்குத் தான் செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனை அல்லாஹ் பார்க்க மாட்டான். அவனிடம் பேச மாட்டான். அவனைப் பாவத்திலிருந்து தூய்மைப்படுத்தவும் மாட்டான். நம் சமுதாயத்தில் உதவி செய்யும் நபர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். அதிலும் தான் செய்த உதவியை சொல்லிக் காட்டாமல் இருப்பவர்கள் மிகவும் குறைவு தான். உதவி செய்யாதவனை விட, உதவி செய்து விட்டு அதைச் சொல்லிக் காட்டுபவன் அதிக குற்றத்திற்குரியவன்.

‘மூன்று பேரிடம் அல்லாஹ் மறுமையில் பேச மாட்டான்ள அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான் அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான் ‘(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்ள நஷ்டமடைந்து விட்டனர் அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!’ என்று கேட்டேன். அதற்கு, ‘தமது ஆடையை (பெருமைக்காகக்) கீழே இறக்கிக் கட்டியவர் (செய்த உபகாரத்தை) சொல்லிக் காட்டுபவர் பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்லிம் 171

தான் உதவி செய்தது பிறருக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக, செய்த உதவியைச் சொல்லிக் காட்டுபவன் கோடி கோடியாக அள்ளித் தந்தாலும் அவனுக்கு அணு அளவு கூட நன்மை கிடைக்காது, இதற்கு அல்லாஹ் குர்ஆனில் தெளிவான உதாரணத்தைக் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடு பவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 2:264)

ஒரு வழவழப்பான பாறையில் மண் படிந்திருக்கிறது. அந்தப் பாறையின் மீது மழை நீர் விழும் போது பாறையின் மீதுள்ள மண் மழை நீரால் அடித்துச் செல்லப்பட்டு, சிதறி காணாமல் போய் விடும். பாறையின் மீது சிறிய மண் துகளைக் கூட காண முடியாது. இது போன்று பிறர் பார்ப்பதற்காகத் தர்மம் செய்தவனின் செயல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விடுகிறது. சிறிது கூட நன்மை கிடைக்காது. இதையே அல்லாஹ் இந்த உதாரணத்தின் மூலம் விளக்குகின்றான்.

தான் செய்த உதவியை சொல்லிக் காட்டாதவர்களுக்குத் தான் நன்மை உண்டு என்று பின்வரும் வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.

அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களைச் செலவிட்டு, பின்னர் செலவிட்டதைச் சொல்லிக் காட்டாமலும், தொல்லை தராமலும் இருப்போருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 2:262)

அல்லாஹ் குர்ஆனில் சொர்க்க வாசிகளின் சில பண்புகளைச் சுட்டிக் காட்டுகிறான். அவர்கள் யாருக்கு உதவி செய்வார்களோ அவர்களிடத்தில் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மக்கள் தன்னைப் புகழ வேண்டும் என்பதற்காக உதவாமல் அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்காகவே உதவுவார்கள் என்று கூறுகின்றான்.

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப் பட்டவருக்கும் உணவளிப்பார்கள். ‘அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர் பார்க்கவில்லை’ (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 76:8)

(7) விபச்சாரம் செய்யும் முதியவன்

பொதுவாக வயோதிகம் என்பது அனைத்தையும் அனுபவித்து ஆசை உணர்வுகள் எல்லாம் அடங்கி விட்ட நிலையாகும். ஒரு வாலிபனுக்கு இருக்கும் ஆசை வயோதிகனுக்கு இருக்காது. அவனைக் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் அவனிடத்தில் அதிகமாகவே இருக்கும். இந்தக் கால கட்டத்தில் அவன் விபச்சாரம் செய்வது அல்லாஹ்வின் பயம் இல்லாமல் துணிந்து பாவம் செய்வதைக் காட்டுகிறது. எனவே தான் அல்லாஹ் இவனுக்கு இந்தத் தண்டனையை வழங்குகிறான்.

இளைய வயதினர் விபச்சாரம் செய்தாலும் அவர்களுக்கும் கடுமையான தண்டனை உண்டு. ஆனால் வயது முதிர்ந்த நிலையில், விபச்சாரம் செய்வதற்குத் தகுதியற்ற நிலையில், தவிர்ந்து கொள்ள முடியும் என்ற நிலையில் இந்தப் பாவத்தைச் செய்வதால் கடும் தண்டனை விபச்சாரம் செய்யும் முதியவனுக்கு கிடைக்கிறது.
‘மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (அவர்களில் ஒருவன்) விபச்சாரம் செய்யும் கிழவன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 156

ஒரு முஸ்லிம் விபச்சாரம் செய்யும் நேரத்தில் அவன் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகின்றான். அந்நேரத்தில் அவனுக்கு மரணம் சம்பவித்தால் காஃபிராக இருக்கும் நிலையிலே அவன் மரணிக்கின்றான். அவன் முன்பு ஈமான் கொண்டதற்கு எந்தப் பலனும் இருக்காது. காலமெல்லாம் பாவியாக இருந்து விட்டு மரண வேளையில் திருந்தி சொர்க்கத்திற்குச் செல்லும் மனிதர்களும் இருக்கிறார்கள். காலமெல்லாம் நல்லமல்களைச் செய்து விட்டு இறுதி நேரத்தில் பாவியாக மரணிக்கும் துர்பாக்கியவான்களும் உண்டு.

நமது இறுதி நிலையே நம்மை சுவர்க்கவாதியாகவோ அல்லது நரக வாதியாகவோ நிர்ணயிக்கிறது. ஆக இந்தக் கொடிய பாவத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்வது நமது முதல் வேலையாக இருக்க வேண்டும்.

‘விபச்சாரம் செய்பவன், விபச்சாரம் புரியும் போது முஃமினாக இருந்து கொண்டு விபச்சாரம் புரிவதில்லை. மேலும் மது அருந்தும் போது ஒருவன் முஃமினாக இருந்து கொண்டு மது அருந்துவதில்லை. ஒருவன் திருடுகின்ற போது முஃமினாக இருந்து கொண்டு திருடுவதில்லை. ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க (பிறரது பொருளை அபகரித்து) கொள்ளை யடிக்கும் போது முஃமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 2475

(8) பொய் சொல்லும் அரசன்

சிறிய சிறிய விஷயங்களுக்கு எல்லாம் இன்று நாம் சாதாரணமாக பொய் சொல்கின்றோம். நல்ல வார்த்தைகளைக் கூறுவதைப் போல் பொய்களை அள்ளி வீசுகின்றோம். நாம் பேசும் பேச்சில் உண்மைகளை விடப் பொய்யே மிகைத்திருக்கிறது. இதை நாம் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. ஆனால் இவ்வாறு பொய் சொல்வது நயவஞ்சகர்களின் குணம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘நயவஞ்சகனின் அடையாளம் மூன்று. அவன் பேசினால் பொய்யையே பேசுவான். வாக்களித்தால் மாறு செய்வான். அவனை நம்பி எதையும் ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 33

நாம் சொல்லும் பொய்கள் நம்மை நரகத்திற்குக் கொண்டு சென்று விடும் என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

‘உண்மை நிச்சயமாக நன்மைக்கு வழி காட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழி காட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளராக ஆகி விடுவார். பொய் நிச்சயமாக தீமைக்கு வழி வகுக்கும். தீமை நரகத்திற்கு வழி வகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டே இருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர் எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரீ 6094

சாதரண மக்களே பொய் சொல்லக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள்.

ஒரு நாட்டின் அரசன் குடி மக்களில் யாரைக் கண்டும் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. யாரையும் குளிர வைத்து காரியம் சாதிக்க வேண்டிய நெருக்கடியும் அவனுக்குக் கிடையாது. அனைத்து அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் அவன் பொய் சொல்லத் தேவையில்லை. இந்நிலையில் அவன் பொய் சொல்வது, பொய் சொல்வதில் அவனுக்கு அதிகம் துணிவு இருப்பதைக் காட்டுகிறது. பல நிர்ப்பந்தங்கள் உள்ள சாதாரண மக்கள் கூட பொய் சொல்லக் கூடாது என்றிருக்கும் போது, எந்த நிர்ப்பந்தமும் இல்லாத ஓர் அரசன் பொய் சொல்வது அதிக குற்றமாக உள்ளது. இந்தக் காரணத்தால் இவனும் இந்த மோசமான நிலையை அடைகின்றான்.

‘மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். (அவர்களில் ஒருவன்) பொய் கூறும் அரசன்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 172

(9) பெருமையடிக்கும் ஏழை

பொதுவாக தற்பெருமை கொள்வதற்குக் காரணமாக அமைவது செல்வாக்கு தான். அந்தச் செல்வாக்கு இல்லாத ஏழை தற்பெருமை கொள்கின்றான் என்றால் அவன் வறட்டு கவுரவம் கொள்கின்றான் என்றே பொருள். ஆக, சந்தர்ப்ப சூழ்நிலையைக் கூட காரணம் காட்ட முடியாத இவன் இப்பாவத்தில் ஈடுபடுவதற்குக் காரணம், அல்லாஹ் விஷயத்தில் அவனுடைய அலட்சியப் போக்கு தான். எனவே இவன் மீதும் அல்லாஹ் கோபம் கொள்கிறான்.

‘மறுமை நாளில் மூன்று நபர்களிடத்தில் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். பெருமையடிக்கும் ஏழை (அவர்களில் ஒருவன்)’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 172

இவை தவிர பெற்றோரை விட்டு விலகியவன், பிள்ளையை விட்டு விலகியவன், நன்றி மறந்தவன் ஆகியோரையும் அல்லாஹ் பார்க்க மாட்டான், பேச மாட்டான், தூய்மைப்படுத்த மாட்டான் என்று கூறும் ஒரு ஹதீஸ் உள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.

‘எனவே பட்டியளிட்ட அனைத்து விஷயங்கலும் தவிர்த்துக் கொண்டு மறுமையில் அல்லாஹ்வை திருமுகத்தை பார்க்கின்ற பாக்கியம் உடைய நன் மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புறிவானாக’!

தளராத உள்ளம்

தளராத உள்ளம்

‘மரங்களில் இப்படியும் ஒருவகை மரம் உண்டு. அதன் இலைகள் உதிர்வதில்லை. அது முஸ்லிமுக்கு உவமையாகும். அது என்ன மரம் என்பதை எனக்கு அறிவியுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது மக்களின் எண்ணங்கள் நாட்டு மரத்தின் பால் திரும்பியது. நான் அதை பேரீச்சை மரம் தான் என்று கூற வெட்கப்பட்டுக் கொண்டு அதைச் சொல்லாமல் இருந்து விட்டேன். பின்னர் ‘அல்லாஹ்வின் தூதரே! அது என்ன மரம் என்று எங்களுக்கு அறிவியுங்கள்’ என தோழர்கள் கேட்டார்கள். அதற்கு ‘பேரீச்சை மரம்’ என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரீ (61), முஸ்லிம் (5028)

துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்? என்பதற்கு இந்த உதாரணம் அழகிய வழிகாட்டியாகும். வாழ்க்கையில் இன்பத்தை விட துன்பங்களை சந்திப்பவர்கள் தான் அதிகம். அவர்கள் விரும்பும் வாழ்க்கை பெரும்பாலும் யாருக்கும் கிடைப்பதில்லை. இது போன்ற நேரங்களில் மோசமான முடிவுகளை எடுத்து, தற்கொலை செய்து கொள்கின்றனர். துன்பங்கள் வரும் வேளையில் ஒரு முஃமினுடைய உள்ளம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு நபிகளாரின் உதாரணம் அழகிய சான்றாகும். எல்லா மரங்களுக்கும் கோடை காலத்தில் இலை உதிர் காலம் உண்டு. அந்தக் காலத்தில், தன் இலைகளை உதிரச் செய்கின்றன. ஆனால் பேரீச்ச மரம் மட்டும் எந்தக் காலத்திலும் இலைகளை உதிரச் செய்வதில்லை. இதைப் போன்று தான் எவ்வளவு துன்பமான நேரம் வந்தாலும் துவண்டு விடாமல் மன உறுதியோடு அதை எதிர் கொள்ள வேண்டும்.

இதைப் போன்று இன்னொரு உதாரணத்தையும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
‘இறை நம்பிக்கையாளரின் நிலை, இளம் தளிர் பயிருக்கு ஒப்பானதாகும். அதைக் காற்று ஒரு முறை சாய்த்து, மறுமுறை நிமிர்ந்து நிற்கச் செய்யும். நயவஞ்சகனின் நிலை தேவதாரு மரத்திற்கு ஒப்பானதாகும். அது ஒரேயடியாக வேரோடு சாயும் வரை (தலை சாயாமல்) நிமிர்ந்து நிற்கும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரீ (5643)

அல்லாஹ்வை நம்பியவன் அவனுக்கு எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும் அந்த நேரத்தில் கவலை கொள்வான்ள ஆனால் அதனால் உள்ளம் தளர்ந்து தவறான முடிவை எடுக்க மாட்டான். எப்படி இளம் தளிர்ப் பயிர், காற்று அடிக்கும் போது சாய்ந்து விட்டுப் பின்னர் எழுந்து விடுகிறதோ இதைப் போன்று இறைநம்பிக்கையாளன் அவனுக்கு வரும் துன்பங்களில் சோர்ந்து இருந்தாலும் சில நாட்களில் சாதாரண நிலைக்கு வந்து விடுவான். பெரும் மரங்கள் சாதாரண காற்றுக்கு அசைந்து கொடுக்கா விட்டாலும் பெரும் காற்று அடிக்கும் போது மொத்தமாக சாய்ந்து விடுகிறது. அது திரும்பவும் நிமிர்ந்து நிற்பதில்லை. அத்தோடு அழிந்து விடுகிறது. இது இறைநம்பிக்கை இல்லாதவனுக்கு உதாரணம்.

சின்ன துன்பங்களைச் சகித்துக் கொள்ளும் இவர்கள் பெரும் துன்பங்கள் வரும் போது மொத்தமாக உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இது போன்று இல்லாமல் சிறிய துன்பமாக இருந்தாலும் பெரிய துன்பமாக இருந்தாலும் சரி, அனைத்தையும் சகித்துக் கொண்டு, திரும்பவும் வீறு நடை போடுபவனே உண்மையான இறை நம்பிக்கையாளன். இன்பங்கள் வரும் போது இறைவனைப் போற்றி, துன்பங்கள் வரும் போது பொறுமையைக் கடைபிடித்து இரு நிலைகளிலும் நன்மை சம்பாதிக்கும் பாக்கியம் இறை நம்பிக்கையாளனுக்கே தவிர வேறு எவருக்கும் இல்லை.

‘முஃமினுடைய காரியம் ஆச்சரியத்தை அளிக்கிறது. அவனுடைய அனைத்துக் காரியங்களும் நல்லதாகவே அமைகின்றன. இந்த நிலை முஃமினைத் தவிர வேறு எவருக்கும் கிடைப்பதில்லை. அவனுக்கு மகிழ்ச்சியான நிலை ஏற்பட்டால் அவன் (இறைவனுக்கு) நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நன்மையாக அமைந்து விடுகிறது. அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் பொறுமையைக் கடைபிடிக்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஷுஹைப் (ரலி)
நூல்: முஸ்லிம் (5318)

தேர்வில் தோல்வி அடையும் போது தற்கொலை, கடன் தொல்லையால் தற்கொலை, குடும்பத் தகராறால் தற்கொலை, திட்டியதால் தற்கொலை, நோயால் தற்கொலை என்று சின்ன சின்ன காரணத்திற்குக் கூட மாபெரும் பாவமான தற்கொலையைச் செய்து கொள்கிறார்கள்.

முஃமின்கள் இது போன்ற நிலையை எடுக்காமல் எந்த நிலையிலும் தடுமாறாமல் மன உறுதியோடு இருக்க வேண்டும். நமக்கு ஏற்படும் சோதனைகள் நமது நன்மைக்கே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகிறானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ (5645)

மேலும் நமக்கு ஏற்படும் ஒவ்வொரு துன்பமும் நமது பாவங்களை அழிக்கிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

‘ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உட்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்குப் பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி)
நூல்: புகாரீ (5641)

இறைவனால் தேர்தெடுக்கப்பட்ட நபி (ஸல்) அவர்கள் கூட துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்றது போல் அல்லாஹ் கூலியையும் கொடுக்கிறான்.

நபி (ஸல்) அவர்கள் காய்ச்சல் கண்டு சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களிடம் நான் சென்று அவர்களை(ப் பணிவோடு) தொட்டேன். அப்போது நான் ‘தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்ளே!’ என்றேன். நபி (ஸல்) அவர்கள் ‘ஆம் உங்களில் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று (நான் ஒருவனே அடைகிறேன்)’ என்றார்கள். நான் ‘(இத்துன்பத்தின் காரணமாக) உங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்குமா?’ என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் ‘ஆம். ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும் அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக) மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் இருப்பதில்லை’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத்(ரலி)
நூல்: புகாரீ (5667)

எனவே எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் இறைவனைப் பற்றி தவறாக நினைக்காமல் பொறுமை மேற்கொண்டு துன்பங்களை ஈமானிய வலிமையுடன் எதிர் கொண்டு இறையருளைப் பெறுவோமாக!

Sunday, March 29, 2020

அல்குர்ஆன்* *வசனமும் - 21

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 21*

*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 12 }*

*☄️இறைத்தூதர்*
           *முன்னிலையில்*
                *குரல்களை*
                    *உயர்த்தக்கூடாது [ 01 ]*

_*🍃நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.*_

     *📖 அல்குர்ஆன் 49:1 📖*

ﺣﺪﺛﻨﺎ اﻟﺤﺴﻦ ﺑﻦ ﻣﺤﻤﺪ، ﺣﺪﺛﻨﺎ ﺣﺠﺎﺝ، ﻋﻦ اﺑﻦ ﺟﺮﻳﺞ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﻣﻠﻴﻜﺔ، *ﺃﻥ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ ﺃﺧﺒﺮﻫﻢ: ﺃﻧﻪ " ﻗﺪﻡ ﺭﻛﺐ ﻣﻦ ﺑﻨﻲ ﺗﻤﻴﻢ ﻋﻠﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ ﺑﻜﺮ: ﺃﻣﺮ اﻟﻘﻌﻘﺎﻉ ﺑﻦ ﻣﻌﺒﺪ، ﻭﻗﺎﻝ ﻋﻤﺮ: ﺑﻞ ﺃﻣﺮ اﻷﻗﺮﻉ ﺑﻦ ﺣﺎﺑﺲ، ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ ﺑﻜﺮ: ﻣﺎ ﺃﺭﺩﺕ ﺇﻟﻰ، ﺃﻭ ﺇﻻ ﺧﻼﻓﻲ، ﻓﻘﺎﻝ ﻋﻤﺮ: ﻣﺎ ﺃﺭﺩﺕ ﺧﻼﻓﻚ، ﻓﺘﻤﺎﺭﻳﺎ ﺣﺘﻰ اﺭﺗﻔﻌﺖ ﺃﺻﻮاﺗﻬﻤﺎ "، ﻓﻨﺰﻝ -[138]- ﻓﻲ ﺫﻟﻚ: {ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﺬﻳﻦ ﺁﻣﻨﻮا ﻻ ﺗﻘﺪﻣﻮا ﺑﻴﻦ ﻳﺪﻱ اﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ} [اﻟﺤﺠﺮاﺕ: 1] ﺣﺘﻰ اﻧﻘﻀﺖ اﻵﻳﺔ* 

_அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) கூறினார்._

_*🍃நபி(ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரினார்.) அப்போது அபூபக்ர் (ரலி), ‘(இறைத்தூதர் அவர்களே!) ‘கஅகாஉ இப்னு மஅபத்’ அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். உமர்(ரலி), ‘அக்ரஉ இப்னு ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்!’ என்று (யோசனை) கூறினார்கள்.*_

_*அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) அவர்களை நோக்கி, ‘எனக்கு மாறு செய்வதையே’ நீங்கள் விரும்பினீர்கள்’ என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி), ‘உங்களுக்கு எதிராகப் பேசுவது என்னுடைய நோக்கமன்று’ என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக் கொண்டபோது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்துவிட்டன.*_

_*இது தொடர்பாகவே ‘நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், அவனது தூதரையும் முந்தாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்’ எனும் (திருக்குர்ஆன் 49:1 வது) இறைவசனம் முழுவதும் இறங்கிற்று.*_

       *📚நூல்: புகாரி (4847)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Friday, March 27, 2020

அல்குர்ஆன்* *வசனமும் - 19

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 19*

*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 10 }*

       *☄️ கிப்லா மாற்றம் ☄️*

_*🍃இவ்வாறே நீங்கள் (மற்ற) மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், இத்தூதர் உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும் உங்களை நடுநிலையான சமுதாயமாக்கினோம். வந்த வழியே திரும்பிச் செல்வோரிலிருந்து இத்தூதரைப் பின்பற்றுவோரை அடையாளம் காட்டுவதற்காகவே, ஏற்கனவே நீர் நோக்கிய கிப்லாவை நிர்ணயித்திருந்தோம். அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கிறது. அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன். (நபியே!) உம்முடைய முகம் வானத்தை நோக்கி அடிக்கடி திரும்புவதைக் காண்கிறோம். எனவே நீர் விரும்புகிற கிப்லாவை நோக்கி உம்மைத் திருப்புகிறோம். எனவே உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராமின் திசையில் திருப்புவீராக! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள்! “இதுவே தமது இறைவனிடமிருந்து வந்த உண்மை’’ என்று வேதம் கொடுக்கப்பட்டோர் அறிவார்கள். அவர்கள் செய்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.*_

*📖அல்குர்ஆன் 2:143, 144📖*

_பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்._

_*🍃நபி (ஸல்) அவர்கள் (ஜெரூசலத்திலுள்ள) பைத்துல் மக்திஸை நோக்கிப் ‘பதினாறு மாதங்கள்’ அல்லது ‘பதினேழு மாதங்கள்’ தொழுதார்கள். (மக்காவிலுள்ள) இறையில்லம் கஅபாவே தாம் முன்னோக்கும் திசையாக இருக்கவேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. (எனவே, தொழுகையில் கஅபாவையே முன்னோக்கும் படி ஆணையிட்டு அல்லாஹ் 2:144 வசனத்தை அருளினான்.)*_

_*உடனே, அவர்கள் அஸர் தொழுகையை (கஅபாவை முன்னோக்கித்) தொழுதார்கள். அவர்களுடன் மக்கள் சிலரும் தொழுதனர். பிறகு அவர்களுடன் தொழுதிருந்தவர்களில் ஒருவர் புறப்பட்டு, (மற்றொரு) பள்ளிவாசலில் (தொழுதுகொண்டு) இருந்தவர்களைக் கடந்து சென்றார். அப்போது அங்கிருந்தவர்கள் ‘ருகூஉ’ செய்து கொண்டிருந்தனர். அவர், ‘அல்லாஹ்வை முன்வைத்து நான் சொல்கிறேன். நான், நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து மக்கா(விலுள்ள கஅபா)வை நோக்கித் தொழுதேன்’ என்று சொல்ல, அவர்கள் அப்படியே (தொழுகையில் ருகூவிலிருந்தபடியே சுற்றி) கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.*_

_*கஅபாவை நோக்கி கிப்லா மாற்றப்படுவதற்கு முன்பாக (பழைய பைத்துல் மக்திஸ்) கிப்லாவைப் பின்பற்றித் தொழுத சிலர் (இறைவழியில்) கொல்லப்பட்டு இறந்துவிட்டிருந்தனர். அவர்களின் விஷயத்தில் நாங்கள் என்ன கூறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. அப்போது ‘அல்லாஹ் உங்கள் நம்பிக்கையைப் பாழாக்குபவனாக இல்லை. அல்லாஹ் இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்’ எனும் (2:143) வசனத்தை அல்லாஹ் அருளினான்.*_

   *📖 நூல்: புகாரி (4486) 📖*

_*🍃கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.*_

      *📖அல்குர்ஆன் 2:115📖*

_இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனா நோக்கி வாகனத்தில் செல்லும்போது தமது முகமிருந்த திசையில் தொழுதார்கள். இது தொடர்பாகவே “நீங்கள் எங்கு திரும்பினாலும் அங்கேயும் அல்லாஹ் இருக்கிறான்’’ எனும் (2:115ஆவது) வசனம் அருளப்பெற்றது.*_

    *📚 நூல்: முஸ்லிம் (1251) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மண்ணறை - 22

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 22 ]*

*மண்ணறை தண்டனைக்கான*
             *காரணங்கள் [ 05 ]*

*☄மறைவிடத்தை மற்றவர்*
       *பார்க்குமாறு நடந்துக்*
             *கொள்ளுதல்☄*

*🏮🍂 எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதில் அழகான ஒழுங்கு முறைகளை பேண வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தருகிறது. மலம் ஜலம் கழிக்கும் போது பிறர் நமது மறைவிடத்தை பார்க்காதவாறு இயற்க்கைத் தேவையை நாம் நிறைவேற்றிக் கொள்ள  வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.*

*🏮🍂 ஆனால் இன்றைக்கு பலர் இந்த ஒழுங்கு முறைகளை கடைப்படிக்காமல் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கும் தெருக்களில் எந்த மறைப்பும் இல்லாமல் எல்லோரும் பார்க்கும் விதத்தில் சிறுநீர் கழிக்கிறார்கள். இவ்வாறு செய்வது குற்றமாகும். இப்படி நடந்துக் கொள்பவர்களுக்கு மண்ணறையில் தண்டனை கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.*

_*ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ -[96]- ﻋﻨﻬﻤﺎ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: ﺃﻧﻪ ﻣﺮ ﺑﻘﺒﺮﻳﻦ ﻳﻌﺬﺑﺎﻥ، ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻬﻤﺎ ﻟﻴﻌﺬﺑﺎﻥ، ﻭﻣﺎ ﻳﻌﺬﺑﺎﻥ ﻓﻲ ﻛﺒﻴﺮ، ﺃﻣﺎ ﺃﺣﺪﻫﻤﺎ ﻓﻜﺎﻥ ﻻ ﻳﺴﺘﺘﺮ ﻣﻦ اﻟﺒﻮﻝ، ﻭﺃﻣﺎ اﻵﺧﺮ ﻓﻜﺎﻥ ﻳﻤﺸﻲ ﺑﺎﻟﻨﻤﻴﻤﺔ»، ﺛﻢ ﺃﺧﺬ ﺟﺮﻳﺪﺓ ﺭﻃﺒﺔ، ﻓﺸﻘﻬﺎ ﺑﻨﺼﻔﻴﻦ، ﺛﻢ ﻏﺮﺯ ﻓﻲ ﻛﻞ ﻗﺒﺮ ﻭاﺣﺪﺓ، ﻓﻘﺎﻟﻮا: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻟﻢ ﺻﻨﻌﺖ ﻫﺬا؟ ﻓﻘﺎﻝ: «ﻟﻌﻠﻪ ﺃﻥ ﻳﺨﻔﻒ ﻋﻨﻬﻤﺎ ﻣﺎ ﻟﻢ ﻳﻴﺒﺴﺎ»*_

_*🍃வேதனை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இருவருடைய கப்ருகளைத் கடந்து நபி(ஸல்) அவர்கள் சென்றபோது, 'இவ்விருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள்; ஆனால் மிகப் பெரும் பாவத்திற்காக வேதனை செய்யப்படவில்லை. ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது மறைக்காதவர்; இன்னொருவர் கோள் சொல்லித் திரிந்தவர்' எனக் கூறிவிட்டு, ஈரமான ஒரு பேரீச்ச மட்டையை இரண்டாகப் பிளந்து இரண்டு கப்ருகளிலும் ஒவ்வொன்றை நட்டார்கள். தோழர்கள், 'இறைத்தூதர் அவர்களே! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்❓' என்று கேட்டதும், 'இவ்விரண்டின் ஈரம் காயாதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படக்கூடும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_ 

*🎙அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)*

*📚 நூல் : புகாரி (1361) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Wednesday, March 25, 2020

அல்குர்ஆன்*வசனமும் - 17

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 17*

*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 08 }*

*☄️ஹுதைபிய்யா*
                   *உடன்படிக்கை☄️*

_*🍃நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குரிய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. (ஏக இறைவனை) மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.*_

     *📖அல்குர்ஆன் 60:10📖*

_*🍃மர்வான் பின் ஹகம் அவர்களும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் நபித்தோழர்களிடமிருந்து அறிவித்ததாவது:*_

_*🍃சுஹைல் இப்னு அம்ர் (ரலி) அந்த (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில் ஒப்பந்தப் பத்திரம் எழுதிய போது அவர் நபி(ஸல்) அவர்களுக்கு விதித்த நிபந்தனைகளில், ‘எங்களிலிருந்து (மக்காவாசிகளிலிருந்து) ஒருவர் உம்மிடம் வந்தால் – அவர் உம்முடைய மார்க்கத்திலிருப்பவராயினும் சரி – அவரைத் திருப்பியனுப்பி, எங்களுக்கும் அவருக்குமிடையே நீர் ஒரு தடையாக இராமல் எங்களிடம் அவரை ஒப்படைத்து விட வேண்டும்’ என்பதும் ஒன்றாயிருந்தது.*_

_*இதை முஸ்லிம்கள் வெறுத்தார்கள்; இதைக் கண்டு எரிச்சலடைந்தார்கள். ஆனால், இந்த நிபந்தனையை ஏற்றாலன்றி (சமாதான ஒப்பந்தத்தை எழுத) முடியாது என்று சுஹைல் (தீர்மானமாக) மறுத்துவிட்டார். நபி(ஸல்) அவர்கள் அதன் படியே ஒப்பந்தத்தை அவரிடம் எழுதி வாங்கினார்கள். எனவே, அன்றே அபூ ஜந்தல் (ரலி) அவர்களை அவரின் தந்தை சுஹைல் இப்னு அம்ரிடம் திருப்பியனுப்பிவிட்டார்கள். அந்த (ஒப்பந்தத்தின்) கால கட்டத்தில் தம்மிடம் (அபயம் தேடி) ஆண்களில் எவர் வந்தாலும் அவரைத் திருப்பியனுப்பாமல் நபி (ஸல்) அவர்கள் இருந்ததில்லை; அவர் முஸ்லிமாக இருந்தாலும் சரி.*_

_*முஸ்லிம் பெண்கள் சிலர் ஹிஜ்ரத் செய்து (மதீனா) வந்தார்கள். அன்று (நிராகரிப்பாளர்களின் தலைவன்) உக்பா இப்னு அபீ முஐத்தின் மகள் உம்மு குல்தூம் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் (அபயம் தேடி) வந்த பெண்களில் ஒருவராவார். அப்போது அவர்கள் வாலிபப் பெண்ணாக இருந்தார்கள். எனவே, அவரின் வீட்டார் நபி (ஸல்) அவர்களிடம் அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பக் கோரினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை அவர்களிடம் திருப்பியனுப்பவில்லை.*_

_*🍃அவர்களின் விஷயத்தில் அல்லாஹ், ‘நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை இறைமறுப்பாளர்களிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர்’ (திருக்குர்ஆன் 60:10) என்னும் வசனத்தை அருளியிருந்ததே (அவர்களைத் திருப்பியனுப்பாததற்குக்) காரணமாகும்.*_

*📚நூல்: புகாரி (2711, 2712)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மண்ணறை - 21

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 21 ]*

*மண்ணறை தண்டனைக்கான*
             *காரணங்கள் [ 04 ]*

*☄சிறுநீர் கழித்துவிட்டு சுத்தம்*
           *செய்யாமல் இருத்தல்☄*

*🏮🍂 மலமும்,சிறுநீரும் மனிதனின் உடம்பிலிருந்து வெளிப்படும் அசுத்தங்களாகும். ஆனால் மலம் கழித்தால் மக்கள் சுத்தம் செய்கிறார்கள். சிறுநீர் கழித்தால் சுத்தம் செய்யாமல் விட்டு விடுகிறார்கள்.*

*☄சிறுநீரை தூய்மையான தண்ணீரைப் போன்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தூய்மைப்படுத்திக் கொள்வதற்கு தண்ணீர் கிடைத்தாலும் நீரைப் பயன்படுத்தி சுத்தம் செய்கிற அளவிற்கு சிறுநீர் ஒன்றும் அசுத்தமில்லை என்று கருதுகிறார்கள்.*

*☄ஆனால் உண்மையில் மலத்திலிருந்து துர்வாடை கிளம்புவதுப் போல் சிறுநீரிலிருந்தும் துர்வாடை கிளம்புகிறது. மலத்தில் நோய் கிருமிகள் இருப்பது போல் சிறுநீரிலும் நோய் கிருமிகள் இருக்கிறது.*

*☄எனவே தான் இவ்விரண்டு அசுத்தங்களையும் சுத்தம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது. சுத்தம் செய்யாவிட்டால் மண்ணறையில் தண்டனைக் கிடைக்கும் என்று எச்சரிக்கிறது. சிறுநீர் விஷயத்தில் மட்டுமில்லாமல் எல்லாக் காரியங்களிலும் நாம் சுத்தத்தைக் கடைபிடிக்க வேண்டும்.*

ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﻗﺪاﻣﺔ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺟﺮﻳﺮ، ﻋﻦ ﻣﻨﺼﻮﺭ، ﻋﻦ ﻣﺠﺎﻫﺪ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻗﺎﻝ: ﻣﺮ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﺤﺎﺋﻂ ﻣﻦ ﺣﻴﻄﺎﻥ ﻣﻜﺔ ﺃﻭ اﻟﻤﺪﻳﻨﺔ ﺳﻤﻊ ﺻﻮﺕ ﺇﻧﺴﺎﻧﻴﻦ ﻳﻌﺬﺑﺎﻥ ﻓﻲ ﻗﺒﻮﺭﻫﻤﺎ، ﻓﻘﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻳﻌﺬﺑﺎﻥ ﻭﻣﺎ ﻳﻌﺬﺑﺎﻥ ﻓﻲ ﻛﺒﻴﺮ» ، ﺛﻢ ﻗﺎﻝ: «ﺑﻠﻰ، ﻛﺎﻥ ﺃﺣﺪﻫﻤﺎ ﻻ ﻳﺴﺘﺒﺮﺉ ﻣﻦ ﺑﻮﻟﻪ، ﻭﻛﺎﻥ اﻵﺧﺮ ﻳﻤﺸﻲ ﺑﺎﻟﻨﻤﻴﻤﺔ» ، ﺛﻢ ﺩﻋﺎ ﺑﺠﺮﻳﺪﺓ ﻓﻜﺴﺮﻫﺎ ﻛﺴﺮﺗﻴﻦ، ﻓﻮﺿﻊ ﻋﻠﻰ ﻛﻞ ﻗﺒﺮ ﻣﻨﻬﻤﺎ ﻛﺴﺮﺓ، ﻓﻘﻴﻞ ﻟﻪ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻟﻢ ﻓﻌﻠﺖ ﻫﺬا؟ ﻗﺎﻝ: «ﻟﻌﻠﻪ ﺃﻥ ﻳﺨﻔﻒ ﻋﻨﻬﻤﺎ ﻣﺎ ﻟﻢ ﻳﻴﺒﺴﺎ ﺃﻭ ﺇﻟﻰ ﺃﻥ ﻳﻴﺒﺴﺎ»*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்றார்கள். அப்போது (கப்ரில் உள்ள) இவ்விருவரும் வேதணை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய பாவத்திற்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. அவர்களில் ஒருவர் சிறுநீர் கழித்து விட்டு தூய்மை செய்துக் கொள்ளாதவராக இருந்தார். மற்றவர் கோல் சொல்லி நடப்பவராக இருந்தார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)*

*📚 நூல் : நஸாயி (2042) 📚*

 _*عَنْ أَبِي هُرَيْرَةَ،  قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏"‏ أَكْثَرُ عَذَابِ الْقَبْرِ مِنَ الْبَوْلِ ‏"*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மண்ணறை வேதணையில் அதிகமானது சிறுநீர் (கழித்து விட்டு சுத்தம் செய்யாமல்) இருப்பதால் ஏற்படுகிறது.*_

*🎙அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல் இப்னுமாஜா (342) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Tuesday, March 24, 2020

மண்ணறை - 20

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 20 ]*

*மண்ணறை தண்டனைக்கான*
             *காரணங்கள் [ 03 ]*

*☄இறைவேதத்தை*
         *அலட்சியப்படுத்துதல்☄*

*🏮🍂 இறைவன் வகுத்த சட்டதிட்டங்களை அடிப்படையாக கொண்டு நாம் வாழவேண்டும் என்பதற்காக அல்லாஹ் நமக்கு திருக்குர்ஆனையும், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் தந்துள்ளான்.* இவ்விரண்டின் அடிப்படையில் வாழ்ந்தவர் மண்ணறையிலும்,மறுமையிலும் வெற்றி பெருவார். *ஆனால் இந்த உபதேசத்தை காதில் வாங்காமல் அலட்சியப்படுத்தி மரணிப்பவருக்கு மண்ணறையிலும் நெருக்கடியான வாழ்க்கை கொடுக்கப்படுகிறது.*

_*وَمَنْ أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَىٰ*_

_*🍃எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.*_

*📖திருக்குர்ஆன்  20:124📖*

_*🍃எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20 :124) என்ற வசனத்தில் (சொல்லப்பட்ட தண்டனை) மண்ணறை வேதனையை பற்றியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல் : இப்னு ஹிப்பான் (3174) 📚*

_*🍃எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம். (20 :124) என்ற இந்த வசனம் எது குறித்து இறங்கியது என்று உங்களுக்கு தெரயுமா❓ நெருக்கடியான வாழ்க்கை என்றால் எது என்றும் உங்களுக்கு தெரியுமா❓* _*என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்) கேட்டார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று கூறினார்கள். இறைமறுப்பாளன் அவனுடைய மண்ணறையில் வேதனை செய்யப்படுவதை (இவ்வசனம் குறிப்பிடுகிறது). என் உயிர் எவனது கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீதானையாக அவனுக்கெதிராக தொண்ணூற்றி ஒன்பது  பாம்புகள் சாட்டப்படும். அந்த பாம்புகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா❓ ஒவ்வொரு பாம்புகளுக்கும் ஏழு தலைகள் இருக்கும். மறுமை நாள் வரை அவனுடைய உடம்பில் (விஷக்காற்றை) அவை ஊதிக் கொண்டும் அவனை தீண்டிக் கொண்டும் உராய்ந்துக் கொண்டும் இருக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல் : முஸ்னது அபீயஃலா (6504) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அல்குர்ஆன்* *வசனமும் - 16

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 16*

*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 07 }*

*☄️நபி இருக்கும் போது*
                *வேதனை வராது ☄️*

_*🍃(நபியே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை.*_

_*மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்? (இறைவனை) அஞ்சுவோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்.*_

*📖அல்குர்ஆன் 8:33 , 34📖*

ﺣﺪﺛﻨﻲ ﺃﺣﻤﺪ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﻴﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﻌﺎﺫ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻲ، ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻋﻦ ﻋﺒﺪ اﻟﺤﻤﻴﺪ ﻫﻮ اﺑﻦ ﻛﺮﺩﻳﺪ ﺻﺎﺣﺐ اﻟﺰﻳﺎﺩﻱ، *ﺳﻤﻊ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻗﺎﻝ ﺃﺑﻮ ﺟﻬﻞ: اﻟﻠﻬﻢ ﺇﻥ ﻛﺎﻥ ﻫﺬا ﻫﻮ اﻟﺤﻖ ﻣﻦ ﻋﻨﺪﻙ ﻓﺄﻣﻄﺮ ﻋﻠﻴﻨﺎ ﺣﺠﺎﺭﺓ ﻣﻦ اﻟﺴﻤﺎء ﺃﻭ اﺋﺘﻨﺎ ﺑﻌﺬاﺏ ﺃﻟﻴﻢ، " ﻓﻨﺰﻟﺖ: {ﻭﻣﺎ ﻛﺎﻥ اﻟﻠﻪ ﻟﻴﻌﺬﺑﻬﻢ ﻭﺃﻧﺖ ﻓﻴﻬﻢ، ﻭﻣﺎ ﻛﺎﻥ اﻟﻠﻪ ﻣﻌﺬﺑﻬﻢ ﻭﻫﻢ ﻳﺴﺘﻐﻔﺮﻭﻥ. ﻭﻣﺎ ﻟﻬﻢ ﺃﻻ ﻳﻌﺬﺑﻬﻢ اﻟﻠﻪ ﻭﻫﻢ ﻳﺼﺪﻭﻥ ﻋﻦ اﻟﻤﺴﺠﺪ اﻟﺤﺮاﻡ} [اﻷﻧﻔﺎﻝ: 34] " اﻵﻳﺔ*

_அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:_

_*🍃(குறைஷி இணைவைப்பாளர்களின் தலைவன்) அபூ ஜஹ்ல் ‘இறைவா! இது (-குர்ஆன்-) உன்னிடமிருந்து வந்த சத்தியம் தான் என்றிருப்பின் எங்களின் மீது வானத்திலிருந்து கல்மாரியைப் பொழிந்து விடு! அல்லது துன்புறுத்தும் (ஒரு) வேதனையை எங்களுக்குக் கொண்டு வா!’ என்று சொன்னான். அப்போது ‘(நபியே!) நீர் அவர்களுடன் இருக்கும்போது அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பவனாக இல்லை. அவர்கள் பாவமன்னிப்புத் தேடிக் கொண்டிருக்கும் போதும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பவனாக இல்லை.*_

_*மஸ்ஜிதுல் ஹராமுக்கு அவர்கள் நிர்வாகிகளாக (தகுதி) இல்லாத நிலையிலும், (மக்களை) அவர்கள் தடுத்துக் கொண்டிருக்கும்போது அல்லாஹ் அவர்களை எவ்வாறு தண்டிக்காமலிருப்பான்❓ (இறைவனை) அஞ்சுவோரைத் தவிர வேறெவரும் அதன் நிர்வாகிகளாக இருக்க முடியாது. எனினும் அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்’ எனும் (08:33,34) வசனங்கள் அருளப்பெற்றன.*_

      *📚 நூல்: புகாரி (4648) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Monday, March 23, 2020

அல்குர்ஆன்*வசனமும் - 15

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 15*

*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 06 }*

*☄️அபூலஹபின் மீது*
              *அல்லாஹ்வின் சாபம்*

_*🍃அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொழுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும், விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.*_

*📖அல்குர்ஆன் 111:1-5📖*

ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮ ﺑﻦ ﺣﻔﺺ ﺑﻦ ﻏﻴﺎﺙ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻲ، ﺣﺪﺛﻨﺎ اﻷﻋﻤﺶ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻣﺮﺓ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺟﺒﻴﺮ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ: ﻟﻤﺎ ﻧﺰﻟﺖ: {ﻭﺃﻧﺬﺭ ﻋﺸﻴﺮﺗﻚ اﻷﻗﺮﺑﻴﻦ} [اﻟﺸﻌﺮاء: 214]، ﺻﻌﺪ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻋﻠﻰ اﻟﺼﻔﺎ، ﻓﺠﻌﻞ ﻳﻨﺎﺩﻱ: «ﻳﺎ ﺑﻨﻲ ﻓﻬﺮ، ﻳﺎ ﺑﻨﻲ ﻋﺪﻱ» - ﻟﺒﻄﻮﻥ ﻗﺮﻳﺶ - ﺣﺘﻰ اﺟﺘﻤﻌﻮا ﻓﺠﻌﻞ اﻟﺮﺟﻞ ﺇﺫا ﻟﻢ ﻳﺴﺘﻄﻊ ﺃﻥ ﻳﺨﺮﺝ ﺃﺭﺳﻞ ﺭﺳﻮﻻ ﻟﻴﻨﻈﺮ ﻣﺎ ﻫﻮ، ﻓﺠﺎء ﺃﺑﻮ ﻟﻬﺐ ﻭﻗﺮﻳﺶ، ﻓﻘﺎﻝ: «ﺃﺭﺃﻳﺘﻜﻢ ﻟﻮ ﺃﺧﺒﺮﺗﻜﻢ ﺃﻥ ﺧﻴﻼ ﺑﺎﻟﻮاﺩﻱ ﺗﺮﻳﺪ ﺃﻥ ﺗﻐﻴﺮ ﻋﻠﻴﻜﻢ، ﺃﻛﻨﺘﻢ ﻣﺼﺪﻗﻲ؟» ﻗﺎﻟﻮا: ﻧﻌﻢ، ﻣﺎ ﺟﺮﺑﻨﺎ ﻋﻠﻴﻚ ﺇﻻ ﺻﺪﻗﺎ، ﻗﺎﻝ: «ﻓﺈﻧﻲ ﻧﺬﻳﺮ ﻟﻜﻢ ﺑﻴﻦ ﻳﺪﻱ ﻋﺬاﺏ ﺷﺪﻳﺪ» ﻓﻘﺎﻝ ﺃﺑﻮ ﻟﻬﺐ: ﺗﺒﺎ ﻟﻚ ﺳﺎﺋﺮ اﻟﻴﻮﻡ، ﺃﻟﻬﺬا ﺟﻤﻌﺘﻨﺎ؟ ﻓﻨﺰﻟﺖ: {ﺗﺒﺖ ﻳﺪا ﺃﺑﻲ ﻟﻬﺐ ﻭﺗﺐ ﻣﺎ ﺃﻏﻨﻰ ﻋﻨﻪ ﻣﺎﻟﻪ ﻭﻣﺎ ﻛﺴﺐ} [اﻟﻤﺴﺪ: 2]*

_இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்._

_*🍃‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்’ எனும் (26:214) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி(ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, ‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!’ என்று குறைஷிக் குலங்களை அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வர முடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்தனர்.*_

_*நபி (ஸல்) அவர்கள், ‘சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்களின் மீது தாக்குதல் தொடுக்கப் போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்க, மக்கள் ‘ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை’ என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கிறேன்’ என்று (மறுமையைக் குறித்து) கூறினார்கள்.*_

_*(இதைக் கேட்ட) அபூ லஹப், ‘நாளெல்லாம் நீர் நாசமாகட்டும்! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினீர்?’ என்று கூறினான். அப்போதுதான் ‘அபூ லஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்…’ என்று தொடங்கும் (111வது) அத்தியாயம் அருளப்பெற்றது.*_

      *📚நூல்: புகாரி (4770)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Sunday, March 22, 2020

அல்குர்ஆன் *வசனமும் - 14

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 14*

*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 05 }*

*☄️வஹீ எனும் இறைச்*
               *செய்தியின் துவக்கம்*

*☄️அபூஜஹ்ல்*
           *அரங்கேற்றிய அநியாயம்*

_*🍃அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.*_

_*தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா❓ அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா❓ அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா❓*_

_*அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம். எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! நெருங்குவீராக!*_

*📖 அல்குர்ஆன் 96:6-19  📖*

_அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:_

_*🍃அபூஜஹ்ல், “உங்களிடையே முஹம்மத் (இறைவனை வணங்குவதற்காக) மண்ணில் தமது முகத்தை வைக்கிறாரா?” என்று கேட்டான். அப்போது “ஆம்’’ என்று சொல்லப்பட்டது. அவன், “லாத் மற்றும் உஸ்ஸாவின் மீதாணையாக! அவ்வாறு அவர் செய்துகொண்டிருப்பதை நான் கண்டால், அவரது பிடறியின் மீது நிச்சயமாக நான் மிதிப்பேன்; அல்லது அவரது முகத்தை மண்ணுக்குள் புதைப்பேன்” என்று சொன்னான். அவ்வாறே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருந்தபோது, அவர்களது பிடரியின் மீது மிதிப்பதற்காக அவர்களை நோக்கி வந்தான். அப்போது அவன் தன் கைகளால் எதிலிருந்தோ தப்பிவருவதைப் போன்று சைகை செய்தவாறு வந்தவழியே பின்வாங்கி ஓடினான். இதைக் கண்ட மக்கள் திடுக்குற்றனர். அவனிடம், “உனக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவன், “எனக்கும் அவருக்குமிடையில் நெருப்பாலான அகழ் ஒன்றையும் பீதியையும் இறக்கைகளையும் கண்டேன்” என்று சொன்னான்.*_

_*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவன் மட்டும் என்னை நெருங்கியிருந்தால் அவனுடைய உறுப்புகளை ஒவ்வொன்றாக வானவர்கள் பிய்த்தெடுத்திருப்பார்கள்” என்று சொன்னார்கள். ஆகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “அவ்வாறில்லை தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான். உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம். அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி. அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம்” (96:6-19) எனும் வசனங்களை அருளினான்.*_

    *📚நூல்: முஸ்லிம் (5390)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Saturday, March 21, 2020

தர்மத்தின் சிறப்புகள்

தர்மத்தின் சிறப்புகள்


குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே!

ஒரு மனிதன் அல்லாஹ்விடம் நன்மையை எதிர்பார்த்தவனாகத் தன் குடும்பத்திற்குச் செலவு செய்தால் அது அவனுக்குத் தர்மமாகி விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூமஸ்ஊத் (ரலி), 

நூல்: புகாரி 55

அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்..

அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கின்றான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்பு படுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது "நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்' என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்து கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 

நூல் : புகாரி 660

இறந்தவருக்காக தர்மம்

ஸஅத் பின் உப்பாதா (ரலி) அவர்கள் வெளியே சென்றிருந்த போது அவருடைய தாயார் இறந்து விட்டார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் நான் வெளியே சென்றிருந்த போது மரணமடைந்து விட்டார். நான் அவர் சார்பாக தர்மம் ஏதும் செய்தால் இது அவருக்குப் பயனளிக்குமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ஆம்! என்று பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஸஅத் (ரலி) அவர்கள், "நான் எனது மிக்ராஃப் எனும் தோட்டத்தை என் தாயார் சார்பாக தர்மம் செய்து விட்டேன். அதற்கு தங்களை சாட்சியாக்குகின்றேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 

நூல்: புகாரி 1388, 2756

வங்கியில் வளரும் தர்மம்

அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக் கொள்வதில்லை. யார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக் கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 

நூல்: புகாரி 1410

பெருநரகை விட்டு காக்கும் சிறு பேரீச்சம்பழம்

"அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), 
நூல்: புகாரி 6539

மனைவியின் தர்மத்தில் கணவனுக்குப் பங்கு

"ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் அவளது கணவனுக்கும் நன்மை கிடைக்கும். அது போலவே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்து விட முடியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 

நூல்: புகாரி 1425, 2065

சிறந்த தர்மம் எது?

"தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி 1426

இறுக்கினால் இறுகி விடும்

நபி (ஸல்) அவர்கள் என்னிடம் "நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் அருள்) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்'' என்று கூறினார்கள்.

அப்தாவின் அறிவிப்பில், "நீ (இவ்வளவு தான்) என்று வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான்'' என்று கூறியதாக உள்ளது.

அறிவிப்பவர்: அஸ்மா (ரலி), 
நூல்: புகாரி 1433, 1434

இறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள்

ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். இன்னொருவர், "அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி 1442

சுவனத்தின் ஸதகா வாசல்

"ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, "அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)'' என்று அழைக்கப் படுவார். தொழுகையாளிகளாக இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே எவரேனும் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகின்றேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 

நூல்: புகாரி 1897

மரம் நடுதல்

ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து (அதன் விளைச்சலை) ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), 

நூல்: புகாரி 2320

உறவினருக்கு உதவுவதில் உயர்ந்த கூலி

நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேனே! அறிவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (விடுதலை) செய்து விட்டாயா?'' என்று கேட்க, நான், "ஆம்'' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்னை மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி), 

நூல்: புகாரி 2592

அல்லாஹ் சொல்லும் சேதி

"ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி 5352

தர்மமே நமது சொத்து

நபி (ஸல்) அவர்கள், "உங்களில் யாருக்காவது தமது செல்வத்தை விட தமது வாரிசுகளின் செல்வம் விருப்பமுடையதாக இருக்குமா?'' என்று கேட்டார்கள். தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! எங்கள் அனைவருக்குமே எங்களின் செல்வம் தான் விருப்பமானதாகும்'' என்று பதிலளித்தார்கள். "அவ்வாறாயின் ஒருவர் (இறப்பதற்கு முன் அறவழியில்) எதைச் செலவிட்டாரோ அது தான் அவரது செல்வமாகும். (இறக்கும் போது) எதைச் விட்டுச் செல்கின்றாரோ அது அவருடைய வாரிசுகளின் செல்வமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), 

நூல்: புகாரி 6442

அல்லாஹ்வின் மன்னிப்பு

மிஸ்தஹ் பின் உஸாஸா என்பவர் தமது உறவினர் என்பதால் அபூபக்ர் (ரலி) அவர்கள் அவருக்காக செலவிட்டு வந்தார்கள். "அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன்'' என்று அபூபக்ர் (ரலி) கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், "உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' எனும் (24:22) வசனத்தை அருளினான்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், "ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று கூறிவிட்டு மிஸ்தஹுக்கு ஏற்கனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். மேலும், "அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு (செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: புகாரி 6679

Friday, March 20, 2020

மண்ணறை- 19

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 19 ]*

*மண்ணறை தண்டனைக்கான*
             *காரணங்கள் [ 02 ]*

*☄வழிகெட்ட*
          *கொள்கையைப்*
                 *பின்பற்றுதல்☄*

*🏮🍂 பாவமான காரியங்கள் அனைத்தும் தன்டனையை பெற்று தரக் கூடியதாக இருந்தாலும் குறிப்பிட்ட சில பாவங்களினால் மண்ணறையில் கிடைக்கும் தண்டனையை பற்றி நபி (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.* இந்த பாவங்கள் நமக்கு ஏற்ப்படாதவாறு நாம் நடந்துக் கொண்டால் *மண்ணறை தண்டனையிலிருந்து அல்லாஹ் நாடினால் தப்பித்துக் கொள்ளலாம்.*

*☄இன்றைக்கு சமுதாயத்தில் பல வழிக்கெட்டகொள்கைகள் தோன்றியிருக்கிறது. நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது குர்ஆன் மட்டும் போதும் என்று கூறி ஒரு சாரார் இஸ்லாத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.*

*☄ தர்ஹா வழிபாடு, தனிமனிதர் வழிபாடு போன்றவைகளால் ஒரு சாரார் அல்லாஹ்விற்க்கு இணை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.*

*☄ நபி (ஸல்) அவர்களைப் போன்று மிர்ஸா குலாம் என்பவனும் நபி என்று நம்பி ஒரு சாரார் இஸ்லாத்தை விட்டும் தடம் புரண்டுவிட்டார்கள்.*

*☄மேலும் குர்ஆன்,ஹதீஸை இந்த இரண்டை மட்டும் மூல ஆதாரமாகக் கொள்ளாமல்மற்றவர்களின் கருத்துகளையும் புதுமையான விஷயங்களையும் மார்க்கமாக ஏற்றுச் செயல்படுவதும் மக்களிடையே இருந்து வருகிறது.*

*☄ குர்ஆனையும்,ஹதீஸையும் மட்டும் பின்பற்ற வேண்டும் என்ற நேரான கொள்கையை ஏற்று இதை தவிர உள்ள அனைத்து வழிகெட்ட கொள்கையையும், கோட்பாடுகளையும் புறக்கணித்தால் மண்ணறை வாழ்க்கையில் தண்டனையிலிருந்து தப்பிக்கலாம். இல்லையென்றால் மண்ணறை வாழ்க்கை நரக வாழ்க்கையாக இருக்கும் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை.*

_*ﻋﻦ ﺃﻧﺲ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " اﻟﻌﺒﺪ ﺇﺫا ﻭﺿﻊ ﻓﻲ ﻗﺒﺮﻩ، ﻭﺗﻮﻟﻲ ﻭﺫﻫﺐ ﺃﺻﺤﺎﺑﻪ ﺣﺘﻰ ﺇﻧﻪ ﻟﻴﺴﻤﻊ ﻗﺮﻉ ﻧﻌﺎﻟﻬﻢ، ﺃﺗﺎﻩ ﻣﻠﻜﺎﻥ، ﻓﺄﻗﻌﺪاﻩ، ﻓﻴﻘﻮﻻﻥ ﻟﻪ: ﻣﺎ ﻛﻨﺖ ﺗﻘﻮﻝ ﻓﻲ ﻫﺬا اﻟﺮﺟﻞ ﻣﺤﻤﺪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ؟ ﻓﻴﻘﻮﻝ: ﺃﺷﻬﺪ ﺃﻧﻪ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ، ﻓﻴﻘﺎﻝ: اﻧﻈﺮ ﺇﻟﻰ ﻣﻘﻌﺪﻙ ﻣﻦ اﻟﻨﺎﺭ ﺃﺑﺪﻟﻚ اﻟﻠﻪ ﺑﻪ ﻣﻘﻌﺪا ﻣﻦ اﻟﺠﻨﺔ، ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: " ﻓﻴﺮاﻫﻤﺎ ﺟﻤﻴﻌﺎ، ﻭﺃﻣﺎ اﻟﻜﺎﻓﺮ - ﺃﻭ اﻟﻤﻨﺎﻓﻖ - ﻓﻴﻘﻮﻝ: ﻻ ﺃﺩﺭﻱ، ﻛﻨﺖ ﺃﻗﻮﻝ ﻣﺎ ﻳﻘﻮﻝ اﻟﻨﺎﺱ، ﻓﻴﻘﺎﻝ: ﻻ ﺩﺭﻳﺖ ﻭﻻ ﺗﻠﻴﺖ، ﺛﻢ ﻳﻀﺮﺏ ﺑﻤﻄﺮﻗﺔ ﻣﻦ ﺣﺪﻳﺪ ﺿﺮﺑﺔ ﺑﻴﻦ ﺃﺫﻧﻴﻪ، ﻓﻴﺼﻴﺢ ﺻﻴﺤﺔ ﻳﺴﻤﻌﻬﺎ ﻣﻦ ﻳﻠﻴﻪ ﺇﻻ اﻟﺜﻘﻠﻴﻦ "*_

_*🍃அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_
_*ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து முஹம்மத் எனும் இந்த மனிதரைப் - பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்❓' எனக் கேட்பர். அதற்கவன் 'இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்' என்பான். பிறகு '(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்! (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்' என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், 'எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்' என்பான். அப்போது அவனிடம் 'நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கி)யதுமிலலை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் அலறுவான்.*_

*🎙அறிவிப்பவர் : அனஸ்(ரலி)*

*📚 நூல் : புகாரி (1338) 📚*

*🏮🍂யூதர்களாக மரணித்தால் மண்ணறையில் வேதனை செய்யப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்தியுள்ளார்கள்.*

_*عَنْ أَبِي  أَيُّوبَ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه  وسلم بَعْدَ مَا غَرَبَتِ الشَّمْسُ فَسَمِعَ صَوْتًا فَقَالَ ‏"‏ يَهُودُ تُعَذَّبُ فِي قُبُورِهَا ‏"*_

_*(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் மறைந்தபின் வெளியே புறப்பட்டார்கள். அப்போது ஒரு சப்தத்தைக் கேட்டுவிட்டு "யூதர்கள், அவர்களின் கல்லறைகளில் வேதனை செய்யப்படுகிறார்கள்" என்று கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி)*

*📚 நூல் : முஸ்லிம் (5504) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அல்குர்ஆன்* *வசனமும் - 12

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : 12*


*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 03 }*

*☄️வஹீ எனும் இறைச்*
               *செய்தியின் துவக்கம்*

*☄️வஹீயைப் பாதுகாப்பது*
          *அல்லாஹ்வின் பொறுப்பு*

_*🍃(நபியே!) இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது. எனவே நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக! பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது.*_

*📖அல்குர்ஆன் 75:16 – 19📖*

ﺣﺪﺛﻨﺎ ﻗﺘﻴﺒﺔ ﺑﻦ ﺳﻌﻴﺪ، ﺣﺪﺛﻨﺎ ﺟﺮﻳﺮ، ﻋﻦ ﻣﻮﺳﻰ ﺑﻦ ﺃﺑﻲ ﻋﺎﺋﺸﺔ، ﻋﻦ ﺳﻌﻴﺪ ﺑﻦ ﺟﺒﻴﺮ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﻓﻲ ﻗﻮﻟﻪ: {ﻻ ﺗﺤﺮﻙ ﺑﻪ ﻟﺴﺎﻧﻚ ﻟﺘﻌﺠﻞ ﺑﻪ} [اﻟﻘﻴﺎﻣﺔ: 16]، ﻗﺎﻝ: " ﻛﺎﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺇﺫا ﻧﺰﻝ ﺟﺒﺮﻳﻞ ﺑﺎﻟﻮﺣﻲ، ﻭﻛﺎﻥ ﻣﻤﺎ ﻳﺤﺮﻙ ﺑﻪ ﻟﺴﺎﻧﻪ ﻭﺷﻔﺘﻴﻪ ﻓﻴﺸﺘﺪ ﻋﻠﻴﻪ، ﻭﻛﺎﻥ ﻳﻌﺮﻑ ﻣﻨﻪ، ﻓﺄﻧﺰﻝ اﻟﻠﻪ اﻵﻳﺔ اﻟﺘﻲ ﻓﻲ: ﻻ ﺃﻗﺴﻢ ﺑﻴﻮﻡ اﻟﻘﻴﺎﻣﺔ: {ﻻ ﺗﺤﺮﻙ ﺑﻪ ﻟﺴﺎﻧﻚ ﻟﺘﻌﺠﻞ ﺑﻪ، ﺇﻥ ﻋﻠﻴﻨﺎ ﺟﻤﻌﻪ ﻭﻗﺮﺁﻧﻪ} [اﻟﻘﻴﺎﻣﺔ: 17] ﻗﺎﻝ: ﻋﻠﻴﻨﺎ ﺃﻥ ﻧﺠﻤﻌﻪ ﻓﻲ ﺻﺪﺭﻙ، {ﻭﻗﺮﺁﻧﻪ ﻓﺈﺫا ﻗﺮﺃﻧﺎﻩ ﻓﺎﺗﺒﻊ ﻗﺮﺁﻧﻪ} [اﻟﻘﻴﺎﻣﺔ: 17]: ﻓﺈﺫا ﺃﻧﺰﻟﻨﺎﻩ ﻓﺎﺳﺘﻤﻊ، {ﺛﻢ ﺇﻥ ﻋﻠﻴﻨﺎ ﺑﻴﺎﻧﻪ} [اﻟﻘﻴﺎﻣﺔ: 19]: ﻋﻠﻴﻨﺎ ﺃﻥ ﻧﺒﻴﻨﻪ ﺑﻠﺴﺎﻧﻚ، ﻗﺎﻝ: ﻓﻜﺎﻥ ﺇﺫا ﺃﺗﺎﻩ ﺟﺒﺮﻳﻞ ﺃﻃﺮﻕ، ﻓﺈﺫا ﺫﻫﺐ ﻗﺮﺃﻩ ﻛﻤﺎ ﻭﻋﺪﻩ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ. {ﺃﻭﻟﻰ ﻟﻚ ﻓﺄﻭﻟﻰ} [اﻟﻘﻴﺎﻣﺔ: 34] ﺗﻮﻋﺪ "*

_திருக்குர்ஆன் 75:16 வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்:*_

_*🍃ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டு வரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் முகத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ், ‘லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா’ என்று தொடங்கும் (75வது அத்தியாயத்திலுள்ள) ‘இதற்காக (குர்ஆனை மனனம் செய்வதற்காக) அவசரப்பட்டு உமது நாவை அசைக்காதீர்! அதைத் திரட்டுவதும், ஓதச் செய்வதும் நம்மைச் சேர்ந்தது’ எனும் (75:16, 17) வசனங்களை அருளினான்.*_

_*அதாவது, ‘உங்கள் உள்ளத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்’ என்று இறைவன் கூறினான். மேலும், ‘நாம் அதை ஓதும்போது அந்த ஓதுதலைப் பின்பற்றுவீராக!’ என்ற (75:18) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘நாம் அருளும்போது, அதனைக் கவனத்துடன் கேளுங்கள்’ என்று கூறினான். ‘பின்னர் அதைத் தெளிவுபடுத்துவது நம்மைச் சேர்ந்தது’ எனும் (75:19) வசனத்தையும் அருளினான். அதாவது, ‘உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நம்முடைய பொறுப்பாகும்’ என்று கூறினான். (இதன் பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல் (அலை) அவர்கள் (‘வஹீ’ கொண்டு) வரும்போது தலையைத் தாழ்த்தி (கேட்டுக்) கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்றுவிடும் போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.*_

*📚 நூல்: புகாரி (4929) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Thursday, March 19, 2020

மண்ணறை வாழ்க்கை* - 17

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 17 ]*

*தீயவர்களின் மண்ணறை*
                 *வாழ்க்கை [ 12 ]*

            *🏖 இறுதி பாகம் 🏖*

*☄தொழுகையிலும்,*
          *தொழுகைக்குப் பின்பும்*
        *பாதுகாப்புத் தேட வேண்டும்*

*🏮🍂 தொழுகையில் அத்தஹியாத் ஓதும்போதும் தொழுது முடித்த பிறகும் மண்ணறை வேதனையை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டும் நபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள்.  எனவே அந்த குறிப்பிட்ட நேரத்தில் மறவாமல் பாதுகாப்புத் தேட வேண்டும்.*

_*ﻗﺎﻟﺖ ﻋﺎﺋﺸﺔ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﺎ: ﻓﻤﺎ ﺭﺃﻳﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻌﺪ ﺻﻠﻰ ﺻﻼﺓ ﺇﻻ ﺗﻌﻮﺫ ﻣﻦ ﻋﺬاﺏ اﻟﻘﺒﺮ ﺯاﺩ ﻏﻨﺪﺭ: «ﻋﺬاﺏ اﻟﻘﺒﺮ ﺣﻖ»*_

_*🍃ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்ததேயில்லை.*_

*🎙அறிவிப்பவர் : மஸ்ரூக் (ரலி)*

*📚 நூல் : புகாரி (1372) 📚*

ﺣﺪﺛﻨﺎ ﻣﻮﺳﻰ ﺑﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻋﻮاﻧﺔ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻤﻠﻚ ﺑﻦ ﻋﻤﻴﺮ، _*ﺳﻤﻌﺖ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻣﻴﻤﻮﻥ اﻷﻭﺩﻱ، ﻗﺎﻝ: ﻛﺎﻥ ﺳﻌﺪ ﻳﻌﻠﻢ ﺑﻨﻴﻪ ﻫﺆﻻء اﻟﻜﻠﻤﺎﺕ ﻛﻤﺎ ﻳﻌﻠﻢ اﻟﻤﻌﻠﻢ اﻟﻐﻠﻤﺎﻥ اﻟﻜﺘﺎﺑﺔ ﻭﻳﻘﻮﻝ: ﺇﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻛﺎﻥ ﻳﺘﻌﻮﺫ ﻣﻨﻬﻦ ﺩﺑﺮ اﻟﺼﻼﺓ: «اﻟﻠﻬﻢ ﺇﻧﻲ ﺃﻋﻮﺫ ﺑﻚ ﻣﻦ اﻟﺠﺒﻦ، ﻭﺃﻋﻮﺫ ﺑﻚ ﺃﻥ ﺃﺭﺩ ﺇﻟﻰ ﺃﺭﺫﻝ اﻟﻌﻤﺮ، ﻭﺃﻋﻮﺫ ﺑﻚ ﻣﻦ ﻓﺘﻨﺔ اﻟﺪﻧﻴﺎ، ﻭﺃﻋﻮﺫ ﺑﻚ ﻣﻦ ﻋﺬاﺏ اﻟﻘﺒﺮ»، ﻓﺤﺪﺛﺖ ﺑﻪ ﻣﺼﻌﺒﺎ ﻓﺼﺪﻗﻪ*_

_*🍃ஆசிரியர் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போன்று, ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்; அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வஅஊது பிக்க மின் அதாபில் கப்ரி - 'இறைவா! நான் கோழைத்தனத்திலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்; புதைகுழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று கூறிவிட்டு, 'இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்' என்றும் அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் : அம்ர் இப்னு மைமூன் அல் அவ்தீ(ரஹ்)*

*📚 நூல் : புகாரி (2822) 📚*

_*أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ  اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِذَا فَرَغَ أَحَدُكُمْ مِنَ التَّشَهُّدِ  الآخِرِ فَلْيَتَعَوَّذْ بِاللَّهِ مِنْ أَرْبَعٍ مِنْ عَذَابِ جَهَنَّمَ  وَمِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ وَمِنْ  شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ ‏"‏ ‏.‏   وَحَدَّثَنِيهِ الْحَكَمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِقْلُ بْنُ زِيَادٍ، ح  قَالَ وَحَدَّثَنَا عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى، - يَعْنِي  ابْنَ يُونُسَ - جَمِيعًا عَنِ الأَوْزَاعِيِّ، بِهَذَا الإِسْنَادِ  وَقَالَ ‏"‏ إِذَا فَرَغَ أَحَدُكُمْ مِنَ التَّشَهُّدِ ‏"‏ ‏.‏ وَلَمْ  يَذْكُرِ ‏"‏ الآخِرَ ‏"‏*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*_ _*உங்களில் ஒருவர் (தொழுகையில்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும்போது நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள்.*_

 _*(அவை:)*_

 _*அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபி ஜஹன்னம, வ மின் அதாபில் கப்றி, வ மின் ஃபித்னத்தில் மஹ்யா வல் மமாத்தி, வ மின் ஃபித்னத்தில் மஸீஹித் தஜ்ஜால்.*_

_*பொருள்: இறைவா, உன்னிடம் நான் நரகத்தின் வேதனையிலிருந்தும், சவக்குழியின் வேதனையிலிருந்தும், வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும், (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.*_

*🎙அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*
 
*📚 நூல் : முஸ்லிம் (1030) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻