பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, February 9, 2010

தவிர்ந்து கொள்ளுங்கள்

தவிர்ந்து கொள்ளுங்கள்

கஞ்சத்தனம்

இறைவன் நமக்குத் தந்திருக்கும் செல்வத்தை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளித்து, நாமும் இன்பம் பெற்று மற்றவர்களையும் மகிழ்விக்கும் எண்ணம் எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டும். ஆனால் பணத்தை நல்வழியில் செலவழிக்காமல் கஞ்சத்தனம் செய்து நல்வாழ்க்கை வாழலாம் என்பவர்களுக்கு திருக்குர்ஆனும் நபிமொழியும் கடுமையான எச்சரிக்கை விடுக்கின்றன.

அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், அது தங்களுக்குச் சிறந்தது’ என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 3:180)

“கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகளணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரது அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (1433, 1444)

கஞ்சத்தனம் செய்து சேமித்து வைக்கும் பலரின் பணம் இரவோடு இரவாக திருடப்பட்டு விடுவதையும், அவர்களுக்குப் பெரும் செலவை இழுத்து வைக்கும் நோய்கள் வருவதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சந்தேகம் கொள்வது

நமக்குள் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளுக்குக் காரணம் தவறான வீண் சந்தேகம் தான். கணவன், மனைவி, நண்பர்கள், நிர்வாகம் என அனைத்து மட்டத்திலும் கட்டமைப்பை சீர்குலைக்கக் கூடிய கொடிய நோயாக உள்ளது இந்த சந்தேகம் தான்.
ஒருவர் ஒரு நேரத்தில் செய்த தவறான நடவடிக்கைகளை வைத்து அவருடைய அனைத்துச் செயல்களையும் குற்ற உணர்வோடு நம்முடைய மனதில் நாமே ஒரு மாயையை உருவாக்கி அதற்குச் செயல் வடிவம் கொடுத்து விடுகிறோம். இது தவறிலிருந்து ஒருவர் திருந்தாமல் மீண்டும் அவர் அந்தத் தவறைச் செய்வதற்குத் தூண்டுவதாகவும் அமைந்து விடும்.

இதனால் தான் இஸ்லாம், அவர் தவறு செய்யும் கட்டத்தில் உள்ள அந்த நிலையை மட்டும் எடுத்துக் கொள்ளச் சொல்கிறது சாட்சி இருந்தால் தான் அந்தத் தவறைக் கூட உண்மைப்படுத்துகிறது. பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தையும் நபிகளாரின் பொன்மொழிகளையும் பாருங்கள்:

நம்பிக்கை கொண்டோரே! ஊகங் களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:12)

“(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம் தான் பேச்சுகலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்றவர்கன் குற்றங் குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள். (நூல்: புகாரி 5143)
எந்த அடிப்படையும் இல்லாமல் தவறான எண்ணம் கொள்வது மிகப் பெரிய பொய் செல்வதைப் போன்றதாகும் என்று நபிகளார் எச்சரித்துள்ளதைக் கவனத்தில் கொள்க!

தீய பேச்சுக்கள்

நம் நாவிலிருந்து உதிரும் பேச்சின் கடினத்தை விளங்காமல் அடுத்தவரது நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுபவர்களுக்கு நபியவர்கள் விடுக்கும் எச்சரிக்கை இதோ:

“ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6477)

இதைப் போன்று, ஒருவர் செய்த தவறுக்காக அவரின் பெற்றோரைத் திட்டும் பழக்கம் நம்மிடம் உள்ளது. இவைகள் அறியாமைக் காலப் பழக்கங்கள் என்ற நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நான் அபூதர் (ரலி) அவர்களை (மதீனாவிற்கு மூன்று மைல் தொலைவிலுள்ள) ரபதா’ எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது அவர் மீது (பழையதும் புதியதுமாக) ஒரு ஜோடி ஆடையும் (அதே போன்று) அவருடைய அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைக் கண்டேன். நான் (அடிமையும் எஜமானரும் ஒரே போல உடையணிந்திருப்பதைக் கண்டு வியந்தவனாக) அதைப் பற்றி அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் கூறினார்கள்: நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிக் கொண்டிருக்கையில் அவருடைய தாயை இழிவுபடுத்திப் பேசி விட்டேன். அப்போது என்னைப் பார்த்து நபியவர்கள் “அபூதர்! அவரையும் அவருடைய தாயையும் இழிவுபடுத்திப் பேசினீரா? நீர் அறியாமைக் காலத்துப் பழக்கமொன்றைக் கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர்; ஊழியர்களுமாவர். அல்லாஹ் தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தான். எனவே தம் சகோதரரை தமது அதிகாரத்தில் வைத்திருப்பவர் தாம் உண்பதிலிருந்து அவருக்கு உண்ணத் தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கு உடுத்தத் தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள் மீது சுமத்தாதீர்கள். அப்படி (அவர்களின் சக்திக்கு மீறிய) பணியில் அவர்களை நீங்கள் ஈடுபடுத்தினால் (அதைச் செய்வதில்) அவர்களுக்கு நீங்கள் உதவுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஉரூர், நூல்: புகாரி (30)

மோசடி

நம்பிக்கை மோசடி இன்று சர்வ சாதாரணமாக நடக்கிறது. வியாபாரம் என்றால் அதில் பல வகையில் நூதனமாக மோசடி செய்கிறார்கள். இவ்வாறு மோசடி செய்து பணம் சம்பாதிப்பவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்ளட்டும். மறுமை நாளில் நரகத்தின் அடித்தட்டில் கடும் வேதனைப்படும் நயவஞ்சகர்கள் தான் இவ்வாறு செய்வார்கள் என்று கூறியுள்ளார்கள். நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும். அவன் பேசும் போது பொய் பேசுவான்; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான்; அவனிடம் நம்பி (ஏதேனுமொன்றை) ஒப்படைத்தால் (அதில்) மோசடி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3333)

முகஸ்துதி

தனிமையில் ஒரு நன்மையைச் செய்வதை விட, பிறர் இருக்கும் போது தான் அதில் அதிக ஈடுபாடு காட்டி செய்கிறோம். ஏன்? அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக! வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக! இவ்வாறு மறுமை வெற்றியை முன்னிலைப் படுத்தாமல், மறுமையில் நன்மை தரும் செயல்களில் முகஸ்துதியை விரும்பினால், அதனால் நன்மை கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

நம் இறைவன் (காட்சியப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெப்படுத்தும் அந்த (மறுமை) நால், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறி விடும்.

அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி (4919)

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் “யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நால்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நால்) அம்பலப்படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி (6499)

மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப் படும்போது, அவருக்குத் தான் வழங்கி யிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்” என்று பதிலளிப்பார்.

இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, மாவீரன்’ என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று, அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டு வரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அவர், “(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய். அறிஞர்’ என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; குர்ஆன் அறிஞர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, “அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?” என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், “நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்” என்று பதிலளிப்பார்.
அதற்கு இறைவன், “(இல்லை) நீ பொய் சொல்கிறாய் இவர் ஒரு புரவலர்’ என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப் படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது” என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3865)

பேராசை

செல்வத்தைத் தேடலாம். ஆனால் செல்வமே வாழ்க்கை என்று அதைத் தேடுவதிலேயே முழுக் கவனம் செலுத்தி இறைக்கடமைகளை புறக்கணித்து விடக் கூடாது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்று பேராசைக் கொண்டு அலைந்தால் மனநிம்மதியும் இழந்து மார்க்க ஒழுங்களை நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகளை பாருங்கள்.

(ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு மேடையில் அமர்ந்து) “இறைவன் உங்களுக்காக வெக் கொணரும் பூமியின் வளங்களைத்தான் உங்கள் விஷயத்தில் நான் அதிகம் அஞ்சுகி றேன்” என்று சொன்னார்கள். “பூமியின் வளங்கள் எவை?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் “(கனிமப் பொருட்கள், ஆடை அணிகலன்கள், பயிர் வகைகள் ஆகிய) இவ்வுலகக் கவர்ச்சிப் பொருட்கள்(தாம் அவை)” என்று பதிலத்தார்கள். அப்போது ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம் “(செல்வம் எனும்) நன்மை தீமையை உருவாக்குமா?” என்று வினவினார். அதற்கு (பதிலக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்படுகிறதோ என்று நாங்கள் நினைத்தோம். பிறகு, தமது நெற்றியைத் துடைக்கலானார்கள். பின்னர் “கேள்வி கேட்டவர் எங்கே?” என்று வினவினார்கள். அம்மனிதர் “(இதோ) நான் (இங்கிருக்கிறேன்)” என்று கூறினார். அந்த பதில் வெப்பட்டதற்காக அவரை நாங்கள் மெச்சினோம்.

நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நன்மையால் நன்மையே விளையும். இந்த (உலகின்) செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். வாய்க்கால் மூலம் விளைகின்ற (பயிர்கள்) ஒவ்வொன்றும் (கால்நடைகளை,) வயிறு புடைக்கத் தின்ன வைத்துக் கொன்று விடுகின்றன; அல்லது கொல்லும் அளவுக்குச் சென்று விடுகின்றன. பசுமையான புல்லைத் தின்னும் கால்நடைகளைத் தவிர. (அவை மடிவதில்லை. ஏனெனில்,) அவை (புல்லைத்) தின்று வயிறு நிரம்பி விடும் போது சூரியனை நோக்கி(ப் படுத்து)க்கொண்டு அசை போடுகின்றன. (இதனால் நன்கு சீரணமாகி) சாணமும் சிறுநீரும் வெயேறுகின்றன. பின்னர் (வயிறு காலியானவுடன்) மறுபடியும் சென்று மேய்கின்றன.

இந்த (உலகின்) செல்வம் இனிமையானதாகும். யார் இதை உரிய முறையில் சம்பாதித்து உரிய முறையில் செலவிடுகின்றாரோ அவருக்கு அது நல்லுதவியாக அமையும். யார் இதை முறையற்ற வழிகல் சம்பாதிக்கின்றாரோ அவர் உண்டும் வயிறு நிரம்பாதவரைப் போன்றவராவார்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி (6427)

“ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இரு நீரோடைகள் (நிறைய) செல்வம் இருந்தாலும் மூன்றாவதையும் அவன் தேடுவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் நிரப்பாது. (பாவங்கலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி (6436)

“(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6446)

-ஆர்ஷத் அலி

படைப்பின் தொழில் நுட்பம்

படைப்பின் தொழில் நுட்பம்

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!
அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான்.
அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.

அல்குர்ஆன் 87:1, 2, 3

இந்த வசனங்களில் படைப்பினங்களைப் பற்றிய ஒரு நியதியை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அனைத்துப் பொருட்களையும் படைத்தான்; பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தினான்; அவற்றின் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்தினான். அதற்குப் பொருத்தமான, நிறைவான எல்லையை அவை அடையும்படிச் செய்தான்.

ஒவ்வொரு படைப்புக்கும் அதனதன் வழியையும் அவற்றின் பணியையும் அவற்றின் இலக்கையும் நிர்ணயித்தான். பின்னர் அவற்றை எதற்காகப் படைத்தானோ அந்தக் குறிக்கோளை அவை அடைவதற்கான வழியை அவற்றிற்குக் காட்டினான். அவை உருவானதற்கான நோக்கத்தை அவை உணரும்படிச் செய்தான். அவை வாழும் காலம் வரை அவற்றுக்கு பொருத்தமானவற்றையும் தேவையானவற்றையும் நிர்ணயம் செய்து அவற்றை அடையும் வழியைக் காட்டினான்.

இந்த நியதி இப்பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களிலும் காணப்படுகின்றது. அவை எவ்வளவு பெரிய பொருளாயினும் சரி! மிகச் சிறிய ஒன்றாயினும் சரி! அற்பமான பொருளானாலும் சரி! பிரமாண்டமான பொருளானாலும் சரி! இப்பேரண்டத்தின் ஒவ்வொரு பொருளுமே மிகுந்த தொழில் நுட்பத்துடன் சீராக அமைக்கப்பட்டு முழுமையாக வடிவமைக்கப் பட்டுள்ளன.

அதனதன் தொழிலை நிறைவேற்றுவதற்கு ஏற்பவே ஆயத்தப்படுத்தப்பட்டுள்ளன. அவை இருப்பதற்கு ஓர் எல்லை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த எல்லையை அவை சென்றடைவதற்கு மிக எளிதான வழியும் மார்க்கமும் அவற்றுக்கு இலகுவாக்கப்பட்டுள்ளன. இப்படி இப்பிரபஞ்சத்தின் எல்லாப் பொருட்களுமே முழுமையாக சீர் செய்யப்பட்டுத் தான் திகழ்கின்றன.

அவை இணைக்கப்படுவதற்கு முன்னர், தனிமங்களாக இருந்த போது, தனிமங்களின் பணிகளை நிறைவேற்ற வழிவகைகள் இலகுவாக்கப்பட்டிருந்தது. அதைப் போன்று அவை இணைக்கப்பட்டு, சேர்மங்களாக்கப்பட்ட போதும் அந்தச் சேர்மங்களின் பணிகளையும் செவ்வனே நிறைவேற்றுவதற்குரிய வழிகள் சுலபமாக்கப்பட்டுள்ளன.

மிகப் பெரும் சூரிய மண்டலம் அதன் பிற கோள்களுடன் எப்படிப்பட்ட அமைப்புடனும், சீருடனும் இணைக்கப்பட்டு ஓர் ஒழுங்குடன் பணியாற்றிக் கொண்டிருக்கின்றதோ அதே போன்ற அமைப்பும், சமச் சீரான நிலையும் ஒரு தனித்த அணுவிலும் காணப்படுகின்றது. அந்த அணுவின் மின்னாற்றலுக்கு இடையிலும் புரோட்டான் (நேர் மின்மம்), எலக்ட்ரான் (எதிர் மின்மம்) ஆகியவற்றுக்கிடையிலும் காணப்படுகின்றது.

பல உயிரணுக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கப்பட்டு, முறையாக வடிவமைப்பட்டுள்ள ஓர் உயிருள்ள படைப்பு எப்படிப்பட்ட ஒழுங்குடன் செயல்படுகின்றதோ அதைப் போன்றே ஒரு தன்னந்தனியான உயிரணுவும், முழுமையான வடிவமைப்புடனும் செயல் திறனுடனும் தனது பணியைச் செவ்வனே நிறைவேற்றுவதற்குரிய முன்னேற்பாடுகளுடன் திகழ்கின்றது.

ஒரு தன்னந்தனியான அணுவுக்கும், மிகப் பெரிய சூரிய மண்டலமாக அது உருவாவதற்கும் மத்தியில் எத்தனையோ படித்தரங்கள் இருக்கின்றன. அதே போல் ஒரேயொரு உயிரணுவுக்கும், பல உயிரணுக்கள் இணைந்து உருவாகும் ஓர் உயிர்ப் படைப்புக்கும் மத்தியில் எத்தனையோ படித்தரங்கள் இருக்கின்றன. அத்தனை படித்தரங்களின் போதும் அவை முறையோடும், சீரோடும் அமைக்கப்பட்டிருப்பதையும், தனித்தனியாக அவை இருந்த போது காணப்பட்ட அந்த ஒழுங்கமைவு அத்தனை படித்தரங்களிலும் இருப்பதையும் நாம் காணலாம்.

அதைப் போன்றே அவற்றின் அமைப்பு, இயக்கம், விதி ஆகிய அனைத்திலுமே இதே நியதியை நாம் கடைசி வரை காணலாம். இந்த ஆழமான பேருண்மைக்கு இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிதர்சனமான எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது.

இந்தப் பிரபஞ்சத்தின் தாளம் தவறாத சுருதி லயத்தைச் செவிமடுக்கும் ஒவ்வொரு மனிதனின் மனதிற்கும் இந்த உண்மைகள் ஒட்டு மொத்தமாகப் புலப்படும். திறந்த மனதுடன் இந்தப் பிரபஞ்சத்தின் முற்ற வெளிகளில் நடமாடும் ஒவ்வொரு பொருட்களையும் நாம் ஆராயும் போது இந்தப் பேருண்மைகள் பளிச்சென்று புலப்படும். இந்த உள்ளுணர்வு எல்லாக் கால கட்டத்தின் போதும் வாழ்கின்ற மனிதனுக்கும், முயன்று அறிவு பெற நினைக்கும் மனிதர்கள் அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று தான்.

எப்போது ஒரு மனிதன் தனது இதய வாசல்கள் அனைத்தையும் திறந்து வைத்துக் கொண்டு. அவனது நரம்புகளை எல்லாம் விழிப்புடன் வைத்துக் கொண்டு இப்பிரபஞ்சத்தின் இயக்கத்தைச் செவிமடுக்க முயல்கிறானோ அப்போது அவன், அதன் தாளம் தவறாத சுருதியைக் கேட்கவே செய்வான்.

மனிதன் இப்பிரபஞ்சத்தை நோக்கும் முதல் நோக்கில் அவனுக்கு ஏற்படும் அந்த உள்ளுணர்வை, தனித்தனி உதாரணங்கள் மூலம் அவன் அறிய முயலும் போதும், நுட்பமாக ஆராய முற்படும் போதும் தெளிவாக அவனால் புரிந்து கொள்ள முடியும்.

அறிவு இறை நம்பிக்கையைத் தூண்டுகின்றது

நியூயார்க் கல்விச் சங்கத்தின் தலைவர் கிரேஸி மோரிஸன் என்பார், “மனிதன் தனித்து இயங்க முடியாது” என்று ஒரு நூல் எழுதியிருக்கின்றார். அந்நூலுக்கு விண்ணியல் ஆய்வாளர் பேராசிரியர் மஹ்மூது ஸாலிஹ் என்பார், “அறிவு இறை நம்பிக்கையைத் தூண்டுகின்றது” என்ற தலைப்பில் ஒரு விரிவுரை எழுதியிருக்கின்றார். அந்த நூலில் அவர் எழுதியுள்ள கருத்துக்களைப் பார்ப்போம்.

வழிதவறாத பறவைகள்

ஆர்க்டிக் பிரதேசத்தில் டெர்ன் என்றழைக்கப்படும் நீள மூக்குடைய கடற்பறவை ஒன்று உள்ளது. இந்தப் பறவை, கோடை காலத்தில் ஆர்க்டிக் பிரதேசத்திலும், குளிர் காலத்தில் அண்டார்டிகா பகுதிக்கும் செல்கின்றது. இதற்காக இந்தப் பறவை பறந்து செல்லும் தூரம் 22,000 மைல்கள் ஆகும்.

முத்தாரம் 01.07.1984, பக்கம் 7

பறவைகளுக்கு, அவை தமது இருப்பிடங்களை விட்டு எவ்வளவு தூரத்துக்குப் பறந்து சென்றாலும் மீண்டும் அவற்றின் இருப்பிடங்களுக்கே திரும்பி வந்து விடுகின்ற இயல்புணர்ச்சி உண்டு. நம் வீட்டு வாசலில் கூடு கட்டி வாழும் தொண்டைப் பகுதி புடைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு வகைச் சிட்டுக்குருவி இலையுதிர் காலத்தில் தென்திசை நோக்கி புறப்பட்டுச் செல்கின்றது. அவை எத்தனை ஆயிரம் மைல்கள் தூரம் சென்றாலும் அடுத்து வரும் வசந்த காலத்தில் தமது கூடுகளுக்குத் திரும்பி விடுகின்றன.

அதே போன்று அமெரிக்க நாட்டுப் பறவைகளில் பெரும்பாலானவை செப்டம்பர் மாதத்தில் தென் திசை நோக்கி, கூட்டம் கூட்டமாகப் பறந்து போய் விடுகின்றன. கடல் கடந்து, பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவை பறந்து போய் விடுகின்றன. ஆயினும் அவை தமது இருப்பிடங்களுக்குத் திரும்பி வரும் போது வழியைத் தவற விடுவதில்லை. திரும்பி வருவதற்குப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளன.
செய்தி கொண்டு செல்லும் புறாக்கள் அவற்றுக்குப் பரிச்சயமில்லாத புதிய சப்தங்களைக் கேட்டு மிரண்டு தடுமாறிப் போனாலும், பயம் தெளிந்ததும் தமது இருப்பிடங்களை நோக்கி மறக்காமல் வந்து விடுகின்றன. காற்று வீசும் போது மரங்களிலும், கூடுகளிலும் பட்டு வரும் வாசனைகளை வைத்துக் கொண்டு தனது கூட்டுக்குத் திரும்பி விடும் தேனீயானது, காற்று வீசாமல் சலனமற்று இருக்கும் போதும் தனது கூட்டைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்து விடுகின்றது.

எவ்வளவு நெடுந்தூரம் சென்றாலும் தனது இருப்பிடத்திற்குத் திரும்பி விடும் இந்த இயல்புணர்ச்சி மனிதனுக்குள் மிகப் பலவீனமாகவே காணப்படுகின்றது. ஆயினும் அவன் திசையறி கருவி போன்ற கருவிகளால் தனது குறைவான ஆற்றலை முழுமைப்படுத்திக் கொள்கிறான். பறவைகள், பிராணிகளுக்கு இயற்கையாக அமைந்திருக்கும் அந்த இயல்புணர்ச்சியின் தேவையை மனிதன் தனது பகுத்தறிவின் மூலம் ஈடு செய்து கொள்கின்றான்.

பார்வைப் புலனும் பகுத்தறிவும்

சில நுண்ணிய புழுப் பூச்சியினங்களுக்கு, மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே காணத்தக்க சின்னஞ்சிறிய கண்கள் இருக்கின்றன. அந்தக் கண்களின் ஆற்றலையும் வரம்பையும் நம்மால் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியாது. பருந்து, கழுகு போன்ற பறவைகளுக்கு, தொலைநோக்கி (டெலஸ்கோப்) போன்று ஒரு பொருளை அண்மையிலும், உருப் பெருக்கியும் காட்டும் கண்கள் இருக்கின்றன.
இங்கேயும் தனது இயந்திர சாதனங்களால் மனிதன் அவற்றை மிகைத்து விடுவதைப் பார்க்க முடிகின்றது. அவனுக்கு இருக்கின்ற பார்க்கும் சக்தியைப் போன்று இருபது லட்சம் மடங்கு அதிகமான சக்தி இருந்தால் மட்டுமே பார்க்க முடியும் அளவுக்குத் தொலைவில் இருக்கின்ற நட்சத்திரங்களைக் கூட டெலஸ்கோப் மூலம் அவனால் பார்க்க முடிகின்றது. மேலும் அவன் தனது மின்னியல் நுண்ணோக்காடி மூலம் சாதாரணமாகப் பார்க்க முடியாத நுண்ணிய பாக்டீரியாக்களையும் பார்க்கிறான்.

நமது கிழட்டுக் குதிரையை இருட்டு நேரத்தில் எங்காவது கொண்டு போய் விட்டு விட்டு நாம் மட்டும் திரும்பி வந்து விடுவோமானால், வழியில் எவ்வளவு கும்மிருட்டு நிலவிய போதும் அது வழியை அறிந்து நமது வீட்டுக்கு வந்து சேர்ந்து விடுகின்றது. எவ்வளவு வெளிச்சமற்ற நிலையிலும் அதனால் பார்க்க முடிகின்றது. வெளிச்சமே இல்லாவிட்டாலும் பாதையிலும், அதன் இரு மருங்கிலும் காணப்படும் வெப்ப அளவின் மாற்றத்தை அது அனுமானித்துக் கொள்கின்றது. வழியில் காணப்படும் மிகக் கடினமான வெப்பத்தின் ஒளிக்கதிர்களால் மிகக் குறைந்த அளவுக்கே உணர்ச்சிக்கு ஆளாகும் தனது கண்களால் அது எப்படியோ வழியை அறிந்து, வந்து சேர்ந்து விடுகின்றது.

அது போன்று எவ்வளவு இருட்டாக இருந்தாலும், எங்கோ செடி கொடிகளுக்கு மத்தியில் ஓடிக் கொண்டிருக்கின்ற எலியின் உடலில் காணப்படும் கதகதப்பான வெப்பத்தை அறிந்து ஆந்தை, எலியை வேட்டையாடி விடுகின்றது. மனிதர்களாகிய நாம் இருட்டில் ஒரு பொருளைக் காண்பதற்கு ஆற்றல் இல்லாதவர்களாக இருந்தாலும் நமது பகுத்தறிவால் கண்டுபிடித்த மின்சார விளக்குகள் மூலம் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சி இரவையே பகலாக்கி விடுகின்றோம்.

தேனீக்களின் கூட்டு வாழ்க்கை

தேனீக்களில் பாட்டாளித் தேனீ, ஆண் தேனீ, ராணித் தேனீ என்று மூன்று வகைகள் இருக்கின்றன. பெண் தேனீக்களில் கருவுறாதவை பாட்டாளித் தேனீக்களாகவும், கருவுற்றவை ராணித் தேனீக்களாகவும் கருதப்படுகின்றன. அந்தப் பாட்டாளித் தேனீக்கள் இனப் பெருக்கத்திற்காகப் பலதரப்பட்ட பருமன்களிலும், அளவுகளிலும் தேன் கூட்டில் பல அறைகளை உருவாக்குகின்றன. அவற்றில் அளவில் சிறியதான அறைகளைத் தொழிலாளித் தேனீக்களுக்கும், அவற்றை விடப் பெரிய அறைகளை ஆண் தேனீக்களுக்கும், கருவுற்றிருக்கும் ராணித் தேனீக்களுக்கு ஒரு பிரத்தியேகமான அறையும் ஆயத்தப்படுத்துகின்றன.

ராணித்தேனீ கருவுறாத முட்டைகளை ஆண் தேனீக்களின் அறைகளிலும், சினைப்படுத்தப்பட்ட முட்டைகளை பெண் தேனீக்களின் அறைகளிலும் எதிர்கால ராணித் தேனீக்களின் அறைகளிலும் இடுகின்றது. உழைக்கும் தேனீக்களான அந்தப் பெண் தேனீக்கள் அந்த முட்டையிலிருந்து புது இனப்பெருக்கம் ஏற்படும் வரை நீண்ட காலம் அவற்றைக் கவனத்துடன் காக்கின்றன.

முட்டைகளிலிருந்து வெளிப்படும் சின்னஞ்சிறு தேனீக்களுக்குத் தேனுடன் மகரந்தத் தூளைச் சேர்த்து மென்று எளிதில் செரிப்பதற்கேற்ற உணவாக்கி அவற்றுக்கு ஊட்டுகின்றன. அவை ஆண், பெண் என இனம் மாறும் அந்தக் குறிப்பிட்ட காலம் வரை தேனையும் மகரந்தத் தூளையுமே உணவாக்கி வளர்க்கின்றன. அவ்வாறு இன மலர்ச்சி ஏற்பட்டதும் அந்தப் பணியை நிறுத்திக் கொள்கின்றன. அவற்றில் பெண் தேனீக்களாக மாறுபவை இப்போது உழைக்கும் பாட்டாளித் தேனீக்களாக மாறி விடுகின்றன.

ராணித் தேனீயின் பிரத்தியேக அறையில் இருக்கின்ற பெண் தேனீக்களுக்கு மட்டும் தான் மெல்லப்பட்டு செரிப்பதற்கேற்றவாறு பக்குவப்படுத்தப்பட்ட உணவு ஊட்டப்படுகின்றது. இவ்வாறு பிரத்தியேகமாகக் கவனிக்கப்படும் அந்தப் பெண் தேனீக்கள் மட்டும் தான் ராணித் தேனீக்களாக மாறும் வாய்ப்பைப் பெறுகின்றன. அவை மட்டும் தான் சினையூட்டப்பட்ட முட்டைகளையும் ஈனுகின்றன. அவ்வாறு தொடர்ந்து சினையூட்டப்பட்ட முட்டைகளை ஈனும் பணி சில குறிப்பிட்ட அறைகளில் மாத்திரம் தான் நிகழ்கின்றன.
எப்படி செரிப்பதற்கேற்றவாறு உணவை மாற்றித் தரும் அந்த ஆச்சரியமான பணியைச் சில குறிப்பிட்ட தேனீக்களே ஏற்றிருக்கின்றனவோ அதே போல சில குறிப்பிட்ட முட்டைகளிலிருந்து மட்டும் தான் இனப் பெருக்கமும் நிகழ்கின்றது. உண்மையில் இது நமது ஆராய்ச்சிக்கும் தனிச் சிறப்பியல்பைப் பற்றிய ஆய்வுக்கும் உரிய ஒன்றாகத் திகழ்கின்றது.

அந்த உணவின் விளைவுகளில் எப்படி இந்த அதிசயம் நிகழ்கின்றது என்பதைக் கண்டுபிடித்து அதை நமது ஆராய்ச்சியுடன் பொருந்த வைத்துப் பார்ப்பதும் அவசியமாகப் படுகின்றது.

இந்த மாற்றங்கள் ஒரு பிரத்தியேகமான முறையில் தேனீக்களின் கூட்டு வாழ்க்கையைச் சுற்றி வியாபித்துக் கொண்டிருக்கின்றன. தேனீ என்ற ஒன்று உருவாவதற்கோ, உருவான பின் அது உயிர் வாழ்வதற்கோ இந்தச் சாமர்த்தியமும், அறிவும் அவசியமில்லை என்றாலும் அவற்றின் கூட்டு வாழ்க்கைக்கு அவை அவசியமாகப்படுகின்றன.

இதன்படிப் பார்த்தால், சில குறிப்பிட்ட பாத்திரங்களில் மட்டும் சினைப் பெருக்கத்திற்கு ஏற்றவாறு உணவை நிலை மாற்றும் அந்தக் கலையில் தேனீ, மனிதனை வென்று விடுகின்றது என்றே தோன்றுகின்றது.

நாயின் மோப்ப சக்தி

நாய் அதற்கு வழங்கப் பட்டிருக்கும் ஒழுகும் மூக்கினால், உயிர்ப் பிராணிகளை மோப்பம் பிடித்து அறியும் ஆற்றல் பெற்றிருக்கின்றது. அதனுடைய குறைந்த அளவிலான மோப்ப சக்தியை வலிமைப்படுத்திக் கொள்வதற்கு மனிதனிடமிருப்பது போன்ற புதுமைக் கருவிகள் எதுவும் அதனிடம் இல்லை. இருப்பினும் நம்முடைய சாதாரண நுகரும் சக்தியால் அறிய முடியாத, மைக்ரோஸ்கோப் மூலமே காண முடியுமளவுக்கு நுண்ணிய அணுக்களையும் நாயினால் உணர முடிகின்றது.

நம்மைத் தவிர எல்லாப் பிராணிகளாலும் நமது அதிர்வு மண்டலங்களுக்கு அப்பாலிருந்து வரும் பெரும்பாலான ஒலிகளைச் செவியுற முடிகின்றது. நமது கேட்கும் சக்தியை வென்று விடத்தக்க அவ்வளவு நுண்ணிய செவிப்புலன்கள் அவற்றுக்கு இருக்கின்றன. ஆயினும் இன்று மனிதனால் கண்டுபிடிப்புச் சாதனங்கள் மூலம் பல மைல்களுக்கு அப்பால் பறந்து போகும் ஒரு கொசுவின் ஒலியைக் கூடக் கேட்க முடிகின்றது. மேலும் அவனால் தனது கருவிகள் மூலம் சூரியனின் ஊதாக் கதிர்களின் வீழ்ச்சி ஒலியைக் கூட பதிவு செய்து விட முடிகின்றது.

ஒரு வகை நீர்ச்சிலந்தி தனது சிலந்தி வலை நூலால் பலூன் போன்ற வடிவத்தில் ஒரு கூடு கட்டுகின்றது. அதைத் தண்ணீருக்கு அடியிலுள்ள ஏதேனும் ஒரு பொருளில் மாட்டி வைத்து விட்டுப் பிறகு வெளியே வந்து தனது சாமர்த்தியத்தால் காற்றுக் குமிழிகளை உண்டாக்கி அவற்றைத் தனது உடலிலுள்ள ரோமங்களில் திரட்டிக் கொண்டு தண்ணீருக்குள் எடுத்துச் சென்று அவற்றை அந்தக் கூட்டுக்குள் அவிழ்த்து விடுகின்றது. இப்படியே பலமுறை முயன்று அந்தக் குமிழிகளால் அந்தக் கூட்டை ஊத வைக்கின்றது. ஊதிய பலூனைப் போன்று அது மாறியதும் அதனுள் குஞ்சு பொறித்து அவற்றை வளர்க்கின்றது. இங்கே அதனுடைய வலை நெய்யும் திறமையையும் அதனுடைய பொறியியல் திறமை மற்றும் வானியல் ஆய்வு ஆகியவற்றையும் கண்டு வியக்கின்றோம்.

பிறந்த இடம் நோக்கி…

ஆற்றிலே பிறக்கின்ற சின்னஞ்சிறு வஞ்சிர மீன், ஆற்றை விட்டு வெளியேறி கடலில் பல ஆண்டு காலம் நீந்தித் திரிந்து விட்டுப் பிறகு அது பிறந்த அந்தக் குறிப்பிட்ட ஆற்றுப் பகுதிக்குத் திரும்பி வந்து விடுகின்றது. அவற்றில் பெரும்பான்மையானவை ஆற்றுப் பெருக்கு ஏராளமாக இருக்கும் ஆற்றுப் பகுதி வழியாக எதிர் நீச்சல் போட்டு தமது பிறப்பிடத்தை வந்தடைகின்றன. இப்படிப்பட்ட எல்லைகளை வகுத்துக் கொண்டு, தான் பிறந்த இடத்தை வந்து சேர்ந்து விடுகின்ற திறமையை அதற்கு அளித்தது எது? அவ்வாறு கடலை விட்டு வெளியேறி அது நீச்சல் போட்டு வந்து கொண்டிருக்கும் போது நீரின் வேகத்தால் வேறொரு சிற்றோடைக்கு அடித்துச் செல்லப்பட்டு விட்டால் உடனடியாக, இது தான் பிறந்த இடமல்ல’ என்பதைக் கண்டு கொண்டு ஆற்றைக் குறுக்கே கிழித்துக் கொண்டு வேறு பக்கத்திற்கு வந்து, பிறகு அங்கிருந்து நீரோட்டத்திற்கு எதிராக நீந்தி முடிவில் எப்படியோ தனது பிறப்பிடத்தை வந்து அடைந்து விடுகின்றது.

விலாங்கு என்பது ஈல் வகையைச் சேர்ந்தது. அது பாம்பல்ல; ஒரு வகை மீன் தான்! பாம்பு போல ஷேப் கொண்டு நழுவும் மீன். முதுகெலும்பு உண்டு. எப்போதும் தண்ணீரில் வாழும். நதிக் கரையில் மிகச் சில நேரம் வாழ்ந்தாலும் தன் வாழ்நாட்களில் ஒரு பகுதியையாவது கடலில் கழிக்கும். ஏனெனில் முட்டையிடுவதற்கு அவற்றுக்கு உப்புத் தண்ணீர் வேண்டும். எனவே நதிவாழ் ஈல் மீன்களால் கடலுக்குப் போவதற்கென்றே சில சமயம் தரையில் ஊர்ந்து செல்ல முடிகின்றது. அப்படிக் கடல் நோக்கித் தரையில் ஊர்ந்து செல்கையில் அவற்றுக்கு மூச்சு வாங்குவதற்காக அவற்றின் சருமத்தின் மேலிருக்கும் ஒரு விதமான ஜவ்வு பயன்படுகின்றது.

இந்த மாதிரி அல்லல் படுவதெல்லாம் பெண் ஈல்கள் தான். முட்டையிடுவதற்காக நாடு கடந்து கூட கடலுக்கு வந்து சேரும். பெண் ஈல்களைக் கடலோர ஆண் ஈல்கள் (அளவில் சற்று சிறியவை) “வா நாமெல்லாம் ஜாலியாக நீந்தலாம்” என்று அழைத்துச் செல்ல, பெண்கள் இந்தப் பேச்சைக் கேட்டு ஆண்களுடன் நூறு மைல் கணக்கில் நீந்தி கடலுக்குள் சந்தோஷப்பட்டு முட்டையிட்டு விட்டுச் செத்துப் போகும். ஐரோப்பிய மீன்கள் இம்மாதிரி முட்டையிட பெர்முடா வரை வருவதும் உண்டு. அங்கே இட்ட முட்டைகள் லார்வா பருவத்தில் நீரோட்டத்தில் மறுபடி ஐரோப்பிய நதிகளின் முகவாய் வரை சென்று அங்கே ஒரு முழு மீனாக மாறுகின்றன.

ஏன்? எதற்கு? எப்படி? – சுஜாதா
ஜூனியர் விகடன், 18.07.1984

விலாங்கு மீன் என்ற இந்த ஆச்சரியமான படைப்பு நன்கு முழுமையாக வளர்ந்து பருவம் அடைந்ததும் அவை வாழும் பலதரப்பட்ட குட்டைகளையும், ஆறுகளையும் விட்டு வலசை புறப்பட்டு விடுகின்றன. அவை ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக இருந்தால் ஐரோப்பியப் பெருங்கடலில் பல ஆயிரம் மைல்களைக் கடந்து நெடுந்தொலைவிலுள்ள ஆழமான பகுதிகளுக்குச் சென்று அங்கே முட்டையிட்டு விட்டு இறந்து விடுகின்றன.

கொந்தளிப்பான தண்ணீரைத் தவிர வேறு எதனையும் அறிந்திருக்க முடியாத, அந்த முட்டையிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் அவற்றின் தாயைப் போலவே அந்தப் பெருங்கடலில் பல்லாயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, எங்கிருந்து அவற்றின் தாய் தனது பயணத்தைத் துவங்கியதோ அதே இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகின்றன. பின்னர் அங்கிருந்து பல்வேறு குட்டைகள், குளங்கள், ஆறுகள், சிறு கடல்கள் இவற்றை நோக்கிச் சென்று விடுகின்றன.

எனவே தான் எந்த வகைத் தண்ணீரும் இந்தக் கடல் விலாங்கு மீன்களுக்கு ஏற்புடையதாக அமைந்து விடுகின்றது. அவற்றின் நெடும் பயணத்தின் போது மிகப் பெரும் கடல் கொந்தளிப்பு, வெள்ளம், புயற்காற்று ஆகியவற்றை அவை எதிர்கொண்ட போதும் உறுதியாய் அவற்றைச் சமாளிக்கின்றன. இடைவிடாது அடித்துக் கொண்டிருக்கும் கடல் அலைகளுக்கு ஈடு கொடுத்து, தமது தாயின் இருப்பிடத்தை வந்து சேர்ந்து விடுகின்றன.

இப்போது அவை வளரத் தலைப்படுகின்றன. முழுமையாக வளர்ந்து பருவம் அடைந்ததும் கண்ணுக்குத் தெரியாத ஒரு விதி அவற்றை, அவை எங்கு பிறந்தனவோ அதே இடத்திற்கு மீண்டும் வலசை புறப்படச் செய்கின்றது. இவ்வாறு அவற்றை அவற்றின் பிறப்பிடத்தை நோக்கி உந்தித் தள்ளும் அந்த உந்து விசை எங்கிருந்து பிறக்கின்றது?
இது வரை அமெரிக்க நாட்டு விலாங்கு மீன் வகைகள் ஐரோப்பியக் கடல்களில் வேட்டையாடப்பட்ட சம்பவம் நிகழ்ந்ததில்லை. அது போன்றே ஐரோப்பிய நாட்டு விலாங்கு மீன் வகைகள் அமெரிக்க நீர் நிலைகளிலும் வேட்டையாடப் பட்டதில்லை. அது தனது நெடும் பயணத்தின் போது கடந்து வந்த தூரத்தை ஈடு செய்வதற்காக ஒரு இயற்கையான சக்தி, அந்த ஐரோப்பிய நாட்டு மீனை வளர்ப்பதில் ஒன்றோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்டுகளோ தாமதிக்க வைக்கின்றது. ஏனெனில் ஒரு அமெரிக்க விலாங்கு மீன் கடந்து வந்த தூரத்தை விட ஐரோப்பிய விலாங்கு மீன் அதிக தூரத்தைக் கடந்து வர வேண்டியிருக்கின்றது.

பொதுவாக எல்லா வகை விலாங்கு மீன்களிலும் இருக்கின்ற அணுக்கள் எல்லாம் ஒன்றாகவே இருந்தால் அவை அனைத்திற்கும் வழிகாட்டுதலும், அதைச் செயல்படுத்துவற்கு அவசியமான எண்ணங்களும் ஒன்றாகவே இருக்க வேண்டுல்லவா? இது எப்படி ஐரோப்பிய விலாங்குகளுக்கும், அமெரிக்க விலாங்குகளுக்கும் வேறுபட்டது? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சேட்டிலைட் இல்லாத செய்திப் பரிமாற்றம்
டோசி டோசி என்று ஒருவகை வண்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறீர்களா? ஆண் வண்டுக்கு மோகம் ஏறும் போது, பக்கத்தில் உள்ள கல்லைத் தட்டுமாம். சாதாரண மைக்கினால் கூட வாங்கிக் கொள்ள முடியாதபடி அவ்வளவு மென்மையாகத் தட்டுமாம். ஐந்து மைலுக்கு அப்பால் இருக்கும் பெண் வண்டுக்கு அது எட்டி, அது புரிந்து கொண்டு பறந்து வருமாம். (ஆதாரம்: இயான் மெஸ்ஸிடர் எழுதிய நூல்)

குமுதம், 28.061984, அரசு பதில்கள், பக்கம்: 16

பால்கனி வழியாக நம் வீட்டு மாடத்தில் ஒரு பெண் வண்ணத்துப் பூச்சியைக் காற்று கொண்டு வந்து சேர்த்து விட்டால், கண்டு கொள்ள முடியாத ஒரு சமிக்ஞையை அது உடனே அனுப்புகின்றது. அதன் துணையான ஆண் வண்ணத்துப் பூச்சி எங்கோ தொலை தூரத்தில் பறந்து கொண்டிருந்த போதும் அதன் சமிக்ஞையைப் புரிந்து கொண்டு உடனடியாக அதற்கு மறுமொழியும் தந்து விடுகின்றது.

அந்தக் காதலர் இருவரையும் தடுமாறச் செய்வதற்காக நமது முயற்சியால் புதுப்புது வாசனைகளை உண்டாக்கினாலும் அந்த வண்ணத்துப் பூச்சிகளின் இந்தச் செய்திப் பரிமாற்றத்தை நம்மால் குலைக்கவே முடியாது. அறிவுத் திறன் குறைந்த இந்தச் சாதாரண படைப்புக்கு ஏதாவது வானொலி நிலையம் இருக்கின்றதா? அல்லது அந்த ஆண் வண்ணத்துப் பூச்சியிடம் அதன் துணை அனுப்பும் செய்திகளைப் பெறுவதற்கான ஏரியல் எதுவும் இருக்கின்றதா? அல்லது அவை ஒலி அலைகளை அதிர்வுறச் செய்த அந்த அதிர்வுகளின் மூலம் பதில்களைப் பெறுகின்றனவா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
தொலைபேசி, வானொலி ஆகியவை நமது அதிசயமான கண்டுபிடிப்புகள் தான். மிக விரைவான செய்திப் பரிமாற்றத்திற்கு அவை நமக்கு வழிகோலுவது உண்மை தான். ஆயினும் அந்தச் செய்திப் பரிமாற்றங்களுக்கு உரிய சாதனங்களும், குறிப்பிட்ட இடங்களும் நமக்குத் தேவைப் படுகின்றனவே! எனவே இந்த வகையில் அவையெல்லாம் தேவைப்படாமல் தமது செய்திப் பரிமாற்றங்களை நடத்திக் கொண்டிருக்கும் வண்ணத்துப் பூச்சிகள் நம்மை வென்று விட்டதாகவே சொல்ல வேண்டும்.

தாவரங்களின் வேலையாட்கள்


தாவரங்கள், தாம் இவ்வுலகில் நீடித்திருப்பதற்காகச் சிலரை, அவர்கள் விரும்பாவிட்டாலும் பணியாளர்களாக நியமித்து அவர்களிடமிருந்து தந்திரமாக வேலை வாங்கிக் கொள்கின்றன. ஒரு மலரிலிருந்து இன்னொரு மலருக்கு மகரந்தப் பொடிகளை எடுத்துச் செல்லும் வண்டுகள், காற்று மற்றும் நடமாடும், பறக்கும் எல்லாப் பொருட்களும் தங்களை அறியாமலேயே தாவரங்களுக்காக இந்தப் பணியை மேற்கொள்கின்றன. அவற்றின் மூலம் தாவர இனங்கள் விருத்தியடைந்து கொண்டும் அதன் வித்துக்கள் பரப்பப்பட்டுக் கொண்டும் இருக்கின்றன. அவ்வளவு தூரம் போவானேன்? தலை சிறந்த மனிதனைக் கூட அந்தத் தாவர இனங்கள் இந்தப் பொறியில் சிக்க வைத்து விடுகின்றன. மனிதனும் அவற்றைப் பெருக்குவதற்கு அருமுயற்சிகள் செய்பவனாகவே திகழ்கின்றான். கலப்பையும் கையுமாகவே காட்சியளிக்கின்றான். விதைக்க, நாற்று நட, நீர் பாய்ச்ச, அறுவடை செய்ய என்பன போன்ற பல கடமைகளுக்கு அவன் ஆளாகி விடுகின்றான். அவன் மாத்திரம் இந்தக் கடமைகளில் கவனம் செலுத்தவில்லை என்றால் பட்டினி அவனது தலைவிதியாகி விடும். காலம் காலமாக மனிதன் உருவாக்கியிருக்கின்ற நாகரீகங்கள் சிதைந்து, பூமி அதன் பழைய இயற்கை நிலைக்கு மாறி விடும்.

உறுப்புகளை வளர்க்கும் உயிரினங்கள்

கடல் நண்டு போன்ற எத்தனையோ பிராணிகள், அவற்றின் கால்கள் அல்லது கொடுக்குகளில் ஒன்றை இழந்து விட்டால் தனது உடலில் ஓர் உறுப்பு குறைந்து போய் விட்டதைத் தெரிந்து கொண்டு உடலிலுள்ள உயிரணுக்களையும், மரபு வழிக் காரணிகளையும் தூண்டுகின்றன. இழந்த உறுப்புக்குப் பதிலாக வேறொரு காலையோ அல்லது கொடுக்கையோ வளரச் செய்து இழப்பை ஈடு செய்து கொள்கின்றன.

எப்போது அந்த உயிரணுக்கள் சேர்ந்து காலாக, கொடுக்காக மாறுகின்றனவோ அப்போது அவை தமது செயல்பாட்டை, அதாவது வளர்ச்சியை நிறுத்திக் கொள்கின்றன. இழந்த உறுப்பு வளர்ச்சியடைந்த உடன் தமது செயல்பாட்டை நிறுத்திக் கொள்ளும் நேரம் வந்து விட்டது என்பதை அந்த உயிரணுக்கள் எப்படியோ ஒரு முறையில் தெரிந்து கொள்கின்றன.

ஆக்டோபஸ் என்ற பல கால்களையுடைய ஒரு கடல்வாழ் உயிரி இரண்டாகப் பிளந்து விட்டாலும், அந்த இரண்டு துண்டங்களில் ஒரு துண்டத்தின் வழியாகத் தன்னைச் சீர் செய்து கொள்ளும் ஆற்றல் மிக்கதாகத் திகழ்கின்றது. உணவுப் பண்டங்களில் காணப்படும் ஒரு வகைப் புழுக்களின் தலையை நாம் கொய்து விட்டால் விரைந்து இன்னொரு தலையை உருவாக்கிக் கொள்ள அதனால் முடியும்.

நமது உடலில் ஏற்படும் வெட்டுக் காயங்களின் உயிரணுக்களைத் தூண்டி முன்பிருந்தபடியே அவை இணைந்து கொள்ளும்படிச் செய்வதற்கு நம்மாலும் முடிகின்றது. என்றாலும் ஒரு புதிய கையையோ, அல்லது சதைப் பகுதியையோ, எலும்பு, நகம், நரம்புகளையோ இழந்து விடும் போது அவற்றை மீண்டும் உருவாக்க உயிரணுக்களை எவ்வாறு தூண்ட வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது எப்போது சாத்தியமாகும்? அந்நிலையை மனிதன் அடைவது சாத்தியம் தானா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.

உடலில் இழந்த அல்லது சேதமுற்ற பகுதி புதிதாக உருவாவது எவ்வாறு? எனும் புதிருக்கு விளக்கமளிக்கக் கூடிய வியத்தகு உண்மை ஒன்று இங்கே இருக்கின்றது. உயிரணுக்கள் தமது முதல் கட்டங்களின் போது பல கூறுகளாகப் பிரிகின்றன. அவ்வாறு அவை பிரியும் போது அவற்றில் ஒவ்வொரு அணுவும் முழுமையான வேறொரு உயிரைப் படைக்க ஆற்றல் மிக்கதாய் மாறி விடுகின்றது. முதல் உயிரணு இரண்டாகி, பின்னர் அவ்விரண்டும் பிரிந்து நான்காகி இப்படியே பிரிந்து கொண்டு போனாலும் ஒன்று போல் தோற்றமளிக்கக் கூடிய இரண்டிற்குள்ளும் அவற்றைப் பற்றிய எல்லா விபரங்களும் அடங்கியிருக்கின்றன. இன்னும் எத்தனையோ செய்திகள் அவை ஒவ்வொன்றின் உள்ளும் பதிவாகியிருப்பதை நாம் நுண்ணோக்காடியில் காணலாம். மொத்தத்தில் தனித்தனியான ஒவ்வொரு அணுவுக்குள்ளும் அந்தப் படைப்பின் முழுமையான தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த அடிப்படையில் நமது உடலிலுள்ள ஒவ்வொரு உயிரணுக்குள்ளும் நம்மைப் பற்றிய எல்லா தகவல்களும் அடங்கியிருப்பதால் அந்த உயிரணுக்கள் ஒவ்வொன்றிற்குள்ளும் அதன் ஒவ்வொரு இழைகளிலும் நாம் இருக்கிறோம் என்பதில் மட்டும் எவ்வித ஐயத்திற்கும் இடமில்லை.

விதையில் ஒரு சாப்ட்வேர்

அந்தப் புத்தகத்தின் அடுத்த பாடத்தில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.
கருவாலி மரத்தின் கொட்டை ஒன்று நிலத்தில் விழுகின்றது. காற்றடித்து, பூமியின் ஏதோ ஒரு பள்ளத்தில் உருண்டு போய் விழுந்து கிடக்கும் அந்தக் கொட்டையைக் கனமான பழுப்பு நிறத்தையுடைய அதன் ஓடு பாதுகாக்கின்றது. வசந்த காலம் வந்ததும் அந்தக் கொட்டையின் மேல் ஓட்டை உடைத்துக் கொண்டு முளை விட ஆரம்பிக்கின்றது. ஒரு முட்டைக்குள் எப்படி அந்த முட்டையின் மரபு வழிக் காரணிகள் பல அடங்கியிருக்கின்றனவோ அதே போல அந்தக் கொட்டைக்குள் இருக்கும் அதன் பருப்பு, அதன் பாரம்பரியத்தைப் பற்றிய எல்லாச் செய்திகளும் அடங்கிய மென்பொருளாக, சாப்ட்வேராக அமைந்துள்ளது. அந்தப் பருப்பின் வழியாக அது உணவு உட்கொள்ள ஆரம்பிக்கின்றது. தனது வேர்களை மண்ணுக்குள் பதிக்கின்றது. இப்போது அங்கே ஒரு சிறு கன்றும் பல ஆண்டுகளுக்குப் பின் ஒரு கருவாலி மரமும் உருவாகி நிற்பதை நாம் பார்க்கிறோம்.
அந்தக் கருவாலி மரக் கொட்டைக்குள்ளிருந்து வெளி வரும் முளைக்குள் பல மில்லியன் மரபு வழிக் காரணிகள் அமைந்திருக்கின்றன. அவை இலை, கிளை, பழம், கொட்டை, கொட்டையின் ஓடு அனைத்தையும் உருவாக்குகின்றன. அது உருவாக்கும் ஒவ்வொன்றும் அந்தக் கொட்டை எந்தக் கருவாலி மரத்தினுடைய கொட்டையோ அதே மரத்தின் பாகங்களுக்கு அப்படியே ஒத்திருக்கின்றன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்த உலகில் தோன்றிய முதல் கருவாலி மரத்தினுடைய கொட்டையும், பழமும், இலையும், கிளையும் எப்படி இருந்தனவோ அப்படியே தான் இத்தனை மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னரும் இருக்கின்றன. கொஞ்சமும் மாறுபடவில்லை.

வழிகாட்டப்படும் உயிரணுக்கள்

எந்த உயிருள்ள படைப்பில் இருக்கின்ற உயிரணுக்களாக இருந்தாலும் அவை தம்மை அந்தப் படைப்பினுடைய தசையின் ஒரு கூறாகப் புனைந்து கொள்ள வேண்டிய அவசியமுடையவையாக இருக்கின்றன. அன்றாடம் உராய்வினாலும் தேய்மானத்தினாலும் சிதைந்து கொண்டிருக்கின்ற உடலின் மேல் தோலின் ஒரு கூறாகத் தம்மைத் தியாகம் செய்து கொள்ள வேண்டிய அவசியத்திற்கு உயிரணுக்கள் ஆளாகின்றன.

பற்களுக்குப் பளபளப்பைத் தரும் இனாமல் பூச்சாகவோ, கண்களுக்குத் தெளிவையும் பளபளப்பையும் தரும் திரவமாகவோ அல்லது மூக்கு, காது போன்ற அங்கங்களை உருவாக்குவதில் பங்கேற்க வேண்டிய அவசியம் உடையவையாகவோ இருக்கின்றன.

மேலும் ஒவ்வொரு செல்லும் தன்னை அந்தந்த வடிவங்களுக்கு ஏற்பப் புனைந்து கொள்வதுடன் அதனதன் முக்கியமான பணியை நிறைவேற்றுவதற்குரிய தனித் தன்மைகள் பெற்றுத் திகழ்வதும் அவசியமாகும்.

ஆனால் எந்தெந்த உயிரணு வலது கையாக மாறக் கூடியவை, எவை இடது கையாக மாறக் கூடியவை என்பதையெல்லாம் யூகித்து அறிவது சிரமம். ஆயினும் ஏதோ ஓர் உயிரணு இடது காதின் ஒரு கூறாக மாறிக் கொண்டிருக்கும் வேளையில் மற்றொன்று வலது காதின் கூறாக மாறிக் கொண்டிருக்கின்றது.

இநத உயிரணுக்களின் செயல்பாட்டினை ஆராயும் போது பல்லாயிரக்கணக்கான உயிரணுக்களிடம், மிகச் சரியான ஒன்றை மிகச் சரியான தருணத்திலும் மிகச் சரியான இடத்திலும் செய்ய வேண்டிய பொறுப்பு ஒப்படைக்கப் பட்டுள்ளதைப் போல் தெரிகின்றது.

குளவிகளின் இனப் பெருக்கம்

இந்த உலகில் எத்தனையோ வித விதமான படைப்புகள் காணப்படுகின்றன. அந்தப் படைப்புகள் பல்வேறு வடிவங்களில் சிறந்த உள்ளுணர்வையும், அறிவுத் திறத்தையும் அல்லது நமக்கே புரியாத ஒரு தகுதியையும் புலப்படுத்துபவையாகத் திகழ்கின்றன. உதாரணமாக குளவிகளுக்கு இனப் பெருக்கக் காலம் வந்ததும் ஆண் குளவி ஒரு வெட்டுக்கிளியைப் பிடித்து, அதில் எந்த இடத்தில் குத்தினால் அது உணர்விழந்து விடும் என்பதைத் தெரிந்து, அந்தப் பொருத்தமான இடத்தில் ஒரு குத்து குத்தி அதை உணர்விழக்கச் செய்கின்றது. உணர்விழந்த அந்த வெட்டுக்கிளி பாதுகாப்பாக வைக்கப்பட்ட மாமிசத்தைப் போல் உயிருடன் பத்திரமாக இருக்கின்றது. பிறகு ஒரு குழி தோண்டி அதில் அந்த வெட்டுக்கிளியைப் போட்டு விடுகின்றது.
இப்போது பெண் குளவி வந்து மிக நுட்பமாக அந்த வெட்டுக் கிளியின் உடலில் எங்கே துளையிடப்பட்டுள்ளதோ அந்தப் பொருத்தமான இடத்தில் முட்டையிட்டுப் பின்னர் குழியை மூடிவிட்டுப் பறந்து போய் விடுகின்றது.

புழு, பூச்சியினங்களை உணவாக உட்கொண்டு தான் குளவிகள் உயிர் வாழ்கின்றன. ஆனால் முட்டையிலிருந்து வெளிவந்தவுடன் புழு, பூச்சிகளைக் கொன்று அதைத் தின்று தான் உயிர் வாழ வேண்டும் என்றால் அதன் பாடு ஆபத்தாக முடிந்து விடும். அதற்கு அவசியமில்லாமல் தனது குஞ்சுகள் இந்த வெட்டுக்கிளியின் மாமிசத்தையே உணவாக உட்கொள்ளட்டும் என்றெல்லாம் சிந்திக்காமல் தன்னிச்சையாகக் கூட அந்தக் குளவி இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை தனது குஞ்சு உயிர் வாழ்வதற்காக இம்முறையைத் தான் குளவிகள் பின்பற்றி வருகின்றன. அவ்வாறு அந்தக் குஞ்சுகளின் உணவுக்கான முன்னேற்பாடுகளை அது செய்து வைக்கவில்லை என்றால் இம்மண்ணில் குளவி இனமே இல்லாது அழிந்து போயிருக்கும். மேலோட்டமாகத் தெரியும் இந்த ரகசியத்திற்கு இது வரை எந்த விளக்கமும் தெரியவில்லை. ஆயினும் இதை ஒரு தற்செயலான செயல் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியவில்லை.
முட்டையிட்டு முடிந்ததும் பெண் குளவி குழியை மூடி விட்டு மகிழ்ச்சியாகப் பறந்து போய், பிறகு மடிந்து விடுகின்றது. அதுவோ அதன் முன்னோர்களோ இந்தச் செயலைப் பற்றி ஒரு நாளும் சிந்தித்ததில்லை. தமது குஞ்சுகளுக்கு அடுத்து என்ன நேரிடப் போகின்றது என்ற அறிவும் அவற்றுக்கு இல்லை. அந்தக் குழிக்குள் குஞ்சு என்கின்ற ஒன்று வரப் போகின்றது என்பதோ அதுவும் நம்மைப் போன்றே வாழ்ந்து நம்மைப் போன்றே தனது இனத்தின் விருத்திக்காகப் பாடுபட்டுப் பிறகு மடியும் என்பதோ அவற்றுக்குத் தெரியாது.

எறும்புகளின் அறிவாற்றல்

ஒரு வகை எறும்பு இனத்தில் தொழிலாளி எறும்புகள் குளிர் காலங்களில் பிற எறும்புகளின் உணவுக்காகச் சின்னச் சின்ன வித்துக்களை இழுத்து வந்து புற்றுக்களில் சேர்க்கின்றன. புற்றுக்குள் தானியங்கள், வித்துக்கள் போன்றவற்றை அரைப்பதற்கென்றே ஒரு கிடங்கை அந்த எறும்புகள் உருவாக்குகின்றன.

அங்கே குடியிருக்கும் எறும்புகளுக்கு தானியங்களை அரைத்து உண்ணுவதற்கேற்ற வகையில் முன்னேற்பாடுகள் செய்து தருவதற்கான பொறுப்பை, பெரிய தாடைகளையுடைய சில எறும்புகள் ஏற்றுக் கொள்கின்றன. அது ஒன்று தான் அந்த எறும்புகளின் வேலை. இலையுதிர் காலம் வரும் போது அந்தக் கிடங்கிலுள்ள எல்லா தானியங்களும் அரைத்து முடிக்கப்பட்டு விடுகின்றன. இப்போது பெரிய எண்ணிக்கையுடைய அந்த எறும்புகளின் தலை சிறந்த பணி முன்னேற்பாடாக ஒதுக்கப்பட்டுள்ள அந்த உணவைப் பாதுகாப்பது ஒன்று தான்.

இன்னும் சில வகை எறும்புகளை அவற்றின் உள்ளுணர்வோ அல்லது அறிவுத் திறமோ எதுவோ ஒன்று அவற்றின் உணவுக்காகவும் வசிப்பதற்காகவும் புல் வீடுகளை வளர்க்கச் சொல்லித் தூண்டுகின்றது. புல்லால் ஆன அந்தக் குடில்களே அவற்றிற்கு உணவாகவும் பயன்படுவதால் அவற்றைத் தோட்ட வீடுகள் என்றும் சொல்லலாம். அவை தேன் கூடுகளுக்கு இடர் விளைவிக்கும் சில குறிப்பிட்ட கம்பளிப் புழுக்களையும் பூச்சிகளையும் வேட்டையாடி உண்ணுகின்றன. அந்தப் புழுக்களும் பூச்சிகளும் தான் அவற்றுக்கு மாமிசம் வழங்கும் ஆடு மாடுகளாகும். அந்தப் புழுக்களிலிருந்து தேனைப் போல் வடியும் ஒரு திரவத்தையும் அந்த எறும்புகள் உணவாகக் கொள்ளுகின்றன.

சில எறும்புகள் அவற்றிலேயே சிலவற்றைப் பிடித்துத் தமக்கு அடிமைகளாக்கிக் கொள்கின்றன. வேறு சில எறும்புகள் தமக்குக் குடில் அமைத்துக் கொள்ளும் போது இலை தழைகளை தமக்குத் தேவையான பருமனுக்கு ஏற்ப வெட்டிக் கொள்கின்றன. சில தொழிலாளி எறும்புகள் ஓய்வாகத் தமது கை, கால்களை ஓரிடத்தில் கிடத்திக் கொண்டு படுத்து விடும் போது, பட்டுப் புழுக்களைப் போல் பட்டு நூல் நூற்கவும் அவற்றால் நெய்யவும் தெரிந்த கூடுகளில் வாழும் ஒரு வகைச் சிற்றெறும்புகளை வேலைக்கு அமர்த்திக் கொள்கின்றன. சில குட்டி எறும்புகளுக்கு அவற்றுக்கான கூடுகளை உருவாக்கிக் கொள்ளத் தெரியாத போது அதன் சமுதாயம் பாடுபட்டு அதற்காக ஒரு கூட்டை உருவாக்கித் தருகின்றது.
வழிகாட்டியவன் யார்?

எந்த உயிரணுக்களிலிருந்து எறும்புகள் உருவாகின்றனவோ அவற்றிடம் இந்தச் சிக்கல் நிறைந்த பணிகள் எல்லாம் எவ்வாறு ஒப்படைக்கப்படுகின்றன?

நிச்சயம் அங்கே அவற்றிற்கெல்லாம் இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்குரிய வழிகாட்டும் படைப்பாளன் ஒருவன் இருக்கின்றான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

இத்துடன் பேராசிரியர் மஹ்மூது ஸாலிஹ் அவர்களின் அறிவு, இறை நம்பிக்கையைத் தூண்டுகிறது’ என்ற நூலிலிருந்து எடுத்தாளப்பட்ட கருத்துக்கள் முடிகின்றன.

ஆம்! நிச்சயம் அந்த எறும்புகளுக்கும் அவைகளல்லாத சிறிய, பெரிய பிற படைப்புகளுக்கும் ஒரு படைப்பாளன் இருக்கிறான்; அவன் தான் அவற்றைப் படைத்து அவற்றிற்குச் சரியான வழியையும் காட்டுகின்றான்.

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான்.

அல்குர்ஆன் 87:2, 3

அந்தப் பேராசிரியரின் நூலிலிருந்து நாம் அளித்த எடுத்துக் காட்டுக்கள் உயிரினங்கள், பறவைகள், புழு பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றின் உலகங்களைப் பற்றி மனிதன் பதிவு செய்து வைத்திருக்கின்ற ஆய்வுகளின் ஒரு சிறிய பகுதி தான். இவையல்லாமல் இவை போன்ற இன்னும் ஏராளமான எடுத்துக்காட்டுகளின் தொகுப்புகள் இருக்கின்றன.
நம் கண்களுக்குத் தெரிகின்ற இந்த மிகப் பெரும் பிரபஞ்சத்தைப் பற்றி மிகக் குறைவிலும் குறைவாகத் தான் நாம் தெரிந்திருக்கிறோம்.

அதனையும் தாண்டி இன்னும் எத்தனையோ உலகங்களும் இருக்கின்றன. சாமானியமான நமது மனிதப் படைப்பு புரிந்து கொள்ள முடியுமான அளவுக்கு மட்டுமே இறைவன் அவற்றைப் பற்றி நமக்கு அறிவிக்கின்றான்.

(மறைந்த அறிஞர் பி.எஸ். அலாவுதீன் அவர்களின் பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களிலிருந்து இக் கட்டுரை தொகுக்கப்பட்டுள்ளது.)

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

கூட்டுக் குடும்பமும் கூடாத நடைமுறைகளும்

இஸ்லாம் என்பது புற வாழ்க்கையிலும் அக வாழ்க்கையிலும் ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தரக் கூடிய மார்க்கமாகும். ஒரு மனிதன் தன்னுடைய வாழ்வை சொர்க்கத்திற்குரிய வாழ்வாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அவனுடைய வெளிப்புற வாழ்க்கை மட்டுமல்லாது தன்னுடைய சுற்றத்தினரோடு கலந்து வாழ்கின்ற வாழ்க்கையையும் ஒழுக்கமான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ள வேண்டும். நம் தமிழகத்தைப் பொறுத்த வரை பெரும்பான்மையான முஸ்லிம்கள் கூட்டுக் குடும்பமாகத் தான் வாழ்ந்து வருகின்றனர். கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பலவிதமான நன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் வெறுக்கத்தக்க வகையில் தீமைகளும் நிறைந்து தான் காணப்படுகின்றன.

கூட்டுக் குடும்பமாக நாம் வாழ்ந்து வந்தாலும் அதில் மார்க்கம் கூறுகின்ற ஒழுக்க மாண்புகளை முறையாகப் பேணிப் பின்பற்றினால் இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகளிலிருந்தும் நம் சமுதாயத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

தங்கை உறவா? தடுக்கப்பட்ட உறவா?

கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் பெண் மக்களை உடன் பிறந்த அக்கா, தங்கை போன்று கருதி அவர்களோடு நெருங்கிப் பழகி வருகின்றனர். வீடுகளில் தனிமையில் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பது, வாகனங்களில் பின்னால் வைத்து அழைத்துச் செல்வது போன்று பல விதங்களில் கலந்து பழகி வருகின்றனர். இத்தகைய பழக்க வழக்கங்கள் பல நேரங்களில் அவர்களுக்கு மத்தியில் தவறான தொடர்புகள் ஏற்படுவதற்குக் காரணமாகவும் அமைந்து விடுகின்றது. ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள் அல்லது ஒரு தந்தைக்குப் பிறந்தவர்கள் மற்றும் பால்குடிச் சகோதரர்களுக்கு மத்தியில் தான் அண்ணன் தங்கை உறவு ஏற்படுமே தவிர மார்க்க அடிப்படையில் வேறு யாருக்கு மத்தியிலும் அண்ணன் தங்கை உறவு ஏற்படாது.

திருமணம் செய்வதற்கு தடுக்கப் பட்ட உறவுகளை திருமறைக் குர்ஆன் விவரித்துள்ளது. இந்த உறவினர்களை மணக்க அனுமதியில்லை.

ஆண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்

1. தாய், 2. மகள், 3. சகோதரி, 4.தாயின் சகோதரி, 5. தந்தையின் சகோதரி, 6. சகோதரனின் புதல்விகள், 7. சகோதரியின் புதல்விகள், 8. பாலூட்டிய அன்னையர், 9. பாலூட்டிய அன்னையின் புதல்விகள், 10. மனைவியின் தாய், 11. மனைவியின் புதல்வி, 12. மகனின் மனைவி, 13. இரு சகோதரிகளை ஒரே காலத்தில் மனைவியராக்குதல்

பெண்கள் மணமுடிக்கக் கூடாத உறவுகள்

1. தந்தை 2. மகன் 3. சகோதரன் 4. தாயின் சகோதரன் 5. தந்தையின் சகோதரன் 6. சகோதரனின் மகன் 7. சகோதரியின் மகன் 8. பாலூட்டிய அன்னையின் கணவன் 9. பாலூட்டிய அன்னையின் மகன் 10. கணவனின் தந்தை 11. கணவனின் புதல்வன் 12. புதல்வியின் கணவன் 13. சகோதரியின் கணவனை, சகோதரியுடன் வாழும் போது மணப்பது ஆகியவை தடுக்கப்பட்டுள்ளன.
திருக்குர்ஆன் 4:23 வசனத்திலிருந்து இதை அறியலாம்.

உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்குப் பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள மனைவியின் புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) விலக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாக ரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (விலக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (விலக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:23 இரத்த சம்பந்தத்தால் யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று மேலே நாம் குறிப்பிட்டோம். அன்னியப் பெண்ணிடம் பால்

குடித்ததால் மேற்கண்ட உறவு முறை ஏற்படுமானால் அவர்களையும் மணக்கக் கூடாது.

அதாவது ஒரு பெண்ணிடம் ஒருவன் பாலருந்தி விட்டால் அவள் தாயாகி விடுகிறாள். இதன் காரணமாக அவளது சகோதரி சின்னம்மா அல்லது பெரியம்மா ஆகி விடுவார்கள். எனவே அவரையும் மணக்கக் கூடாது.

அவளது சகோதரன் அல்லது சகோதரியின் மகளையும் மணக்கக் கூடாது. பாலூட்டிய அன்னையை பெற்ற தாய் இடத்தில் வைத்துப் பார்த்தால் அவளது உறவினர்கள் நமக்கு மேற்கண்ட உறவு முறையுடையவர்களானால் அவர்களை மணக்கக் கூடாது.

இரத்த சம்பந்தத்தால் தடுக்கப்பட்ட உறவு முறைகள், பால் அருந்திய உறவு முறையிலும் தடுக்கப்பட்டதாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 2451, 4719

இது தவிர ஒரு பெண்ணை மணந்து அவளுடன் வாழும் போது அவளது தாயின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது. அது போல் மனைவியின் தந்தையின் சகோதரியையும் சேர்த்து மணக்கக் கூடாது.
(பார்க்க: புகாரி 4719)

மனைவி மரணித்து விட்டாலோ விவாகரத்து ஆகி விட்டாலோ மனைவியின் தாயுடைய சகோதரியை, மனைவியின் தந்தையுடைய சகோதரியை மணக்கத் தடையில்லை.

மேற்கண்ட பட்டியலில் பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் இடம் பெறவில்லை. இதிலிருந்து பெரியப்பா, சித்தப்பாமார்களின் மகள்கள் அந்நியப் பெண்களே என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அவர்களைத் திருமணம் செய்வது ஆகுமானதாகும்.

ஆனால் ஷாஃபி மத்ஹபினர் இதனை ஹராமாக்கி வைத்துள்ளனர். இதனை எந்த ஆலிம்களும் வெள்ளி மேடைகளில் கண்டித்து உரையாற்றுவது கிடையாது. யாராவது பேசினாலும் அவர்களை ஒரு விதமாக பார்க்கக் கூடிய நிலை தான் காணப்படுகிறது. எனவே கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அந்நிய ஆணும் பெண்ணும் அண்ணன் தங்கை போன்று கலந்து வாழ்கின்ற இது போன்ற ஒழுக்கச் சீர்கேடுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியமானதாகும்.

அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே

அது போன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் அண்ணியை அன்னை போன்றோ அக்கா போன்றோ கருதி அவர்களோடு நெருங்கிப் பழகக்கூடிய நிலையும் அதிகமாகக் காணப்படுகிறது. இத்தகைய உறவும் பலவிதமான தவறுகள் நிகழ்வதற்குக் காரணமாக அமைகின்றது. இவ்வாறு கலந்துறவாடுவது மார்க்கம் காட்டுகின்ற மாண்பிற்கு எதிரானதாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகல் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ர) நூல்: புகாரி 5232

அனுமதி கோரல்

கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் மார்க்கத்திற்கு எதிரான பல்வேறு நடைமுறைகள் நிறைந்து காணப்படுகின்றன. அதில் ஒன்று, வீடுகளுக்குள் நுழையும் போது பேண வேண்டிய ஒழுக்கங்கள் பின்பற்றப் படுவதில்லை.

கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் அதற்குரிய தனித்தன்மை காக்கப்பட வேண்டும். அண்ணன் தம்பிகள் திருமணம் செய்து ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் அனைவருக்கும் தனித் தனி அறைகளை ஏற்பாடு செய்து, மார்க்கம் கூறுகின்ற ஒழுக்கங்களை அங்கு மிகவும் கண்டிப்புடன் கடைப்பிடித்தால் பல்வேறு விதமான ஒழுக்கச் சீர்கேடுகள் அரங்கேறுவதை விட்டும் நம் குடும்பத்தினரை பாதுகாத்துக் கொள்ளலாம். அதில் ஒன்று தான் வீடுகளுக்குள்ளோ மற்றவரின் அறைகளுக்குள்ளோ செல்லும் போது அனுமதி பெற்றுச் செல்வதாகும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)

அல்லாஹ்வின் இந்தக் கட்டளைக்கு மாற்றமாக வீட்டில் உள்ள பெண்களிடம் ஏதாவது ஓர் உறவு முறையில், ஊர் பழக்கத்திற்குத் தக்க மச்சி, மாமி, மதினி என்று கூறிக் கொண்டு உரிமையுடன் உத்தரவின்றி உள்ளே நுழைந்து விடுகின்றார்கள்.
அல்லாஹ்வின் வசனத்தின் அடிப்படையில் இது தடை செய்யப்பட்ட காரியமாகும்.

கணவன், மனைவி என இருவரும் இணைந்திருக்கும் போது, அல்லது ஆணோ, பெண்ணோ தனியாக இருக்கும் போது பல்வேறு விதமான அசவுகரியங்களில் இருப்பார்கள். இதையெல்லாம் கருத்தில் கொண்டு அல்லாஹ் தன் திருமறையில், அனுமதி இல்லையேல் திரும்பி விடுங்கள் என்று கூறுகின்றான்.

அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! “திரும்பி விடுங்கள்!” என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 24:28)

இந்தக் கட்டளையின் படி, உள்ளே வர அனுமதியில்லை என்றால் கண்ணியமான முறையில் திரும்பி விட வேண்டும். இன்று இது போல் வீட்டுக்கு வந்தவரிடம் வீட்டில் உள்ளவர் தெரிவித்து விட்டால் வந்தவர் கோபித்துக் கொள்கின்றார். நான் வாசல் தேடி வந்தேன்; உள்ளேயிருந்து கொண்டே என்னை வாசற்படியில் நிற்க வைத்தே அனுப்பி விட்டார்’ என்று வந்தவர் வீட்டுக்காரரைப் பற்றிக் குறை கூறிப் பொறுமுகின்றார். இந்த வசனத்தின் பொருளை உணர்ந்து கொண்டால் இந்தப் பொறுமலுக்கு அவர் இடமளிக்க மாட்டார்.

தெளிவாகப் பெயரைச் சொல்லுதல்

வாசலில் வந்து அனுமதி கேட்பவர், தான் இன்னார் என்று குறிப்பிட்டுத் தன் பெயரை தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மொட்டையாக நான் தான்’ என்று கூறக் கூடாது.

என் தந்தை (ஒரு யூதருக்குக்) கொடுக்க வேண்டியிருந்த ஒரு கடன் விஷயமாக நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்று கதவைத் தட்டினேன். அப்போது அவர்கள், “யாரது?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “நான் தான்” என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “நான் தான் என்றால்…?” என்று அதை விரும்பாதவர்கள் போல் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி 6250

மூன்று முக்கிய நேரங்கள்

கூட்டாக வாழ்கின்ற வாழ்க்கையில் நம்முடைய குழந்தைகளும் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். அவர்களுக்குரிய ஒழுங்கங்களையும் நாம் அவர்களுக்கு முறையாகக் கற்பிக்க வேண்டும். பின்வரும் வசனத்தில் மூன்று நேரங்களில் குழந்தைகள் கூட அனுமதி பெற்றுத் தான் வீட்டிற்குள் நுழைய வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான். நம்பிக்கை கொண்டோரே! உங்கள் அடிமைகளும், உங்களில் பருவ வயதை அடையாதோரும் ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நண்பகலில் (உபரியான) உங்கள் ஆடைகளைக் களைந்துள்ள நேரத்திலும், இஷா தொழுகைக்குப் பிறகும் ஆகிய முன்று நேரங்களில் (வீட்டுக்குள் நுழைவதற்கு) உங்களிடம் அனுமதி கேட்கட்டும். இம்மூன்றும் உங்களுக்குரிய அந்தரங்க(நேர)ங்கள். இதன் பின்னர் அவர்கள் மீதோ, உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்கள் உங்களைச் சுற்றி வருபவர்கள். உங்களில் ஒருவர் மற்றவரிடம் வந்து செல்பவர்கள். இவ்வாறே அல்லாஹ் வசனங்களைத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
உங்களில் சிறுவர்கள் பருவ வயதை அடைந்து விட்டால் (வயதால்) அவர்களுக்கு முந்தியோர் அனுமதி கேட்பது போல் அவர்களும் அனுமதி கேட்க வேண்டும். இவ்வாறே அல்லாஹ் தனது வசனங்களை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 24:57, 58)

இந்த நேரங்கள் பெண்கள் தங்கள் படுக்கைக்கு ஒதுங்குகின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற நேரங்களாகும். இந்நேரங்களில் வீட்டில் பணியாற்றும் அடிமைகள் மற்றும் பருவ வயதை அடையாத பாலகர்கள் கூட அனுமதி பெற்றுத் தான் வரவேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்றால் மற்றவர்கள் அனுமதி பெறாமல் வரலாமா?

மூன்று முறை அனுமதி கோரல்

நான் அன்சாரிகளின் அவை ஒன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். “நான் உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது வீட்டிற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆகவே நான் திரும்பி விட்டேன். பின்பு உமர் (ரலி), “(உங்களை வரச் சொல்லியிருந்தேனே) நீங்கள் ஏன் வரவில்லை?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியளிக்கப் படவில்லை. ஆகவே நான் திரும்பி வந்து விட்டேன். (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும். அவருக்கு அனுமதி வழங்கப் படவில்லை என்றால் அவர் திரும்பி விடட்டும்’ என்று கூறியுள்ளார்கள்” என்று கூறினேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்கள். இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்களில் உள்ளாரா?” என்று அபூமூஸா (ரலி) கேட்டார்கள்.

அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! மக்களில் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சி சொல்ல) வருவார்” என்று சொன்னார்கள். அங்கு நான் தான் மக்களில் சிறியவனாக இருந்தேன். எனவே நான் அபூமூஸா (ரலி) அவர்களுடன் சென்று, “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள்” என்று உமர் (ரலி) அவர்களிடம் தெரிவித்தேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 6245

பார்வையை உள்ளே செலுத்தாதிருத்தல்

ஒருவர் இன்னொருவர் வீட்டிற்கு வரும் போது, வீட்டில் நுழைவதற்கு அனுமதி பெறுவதற்கு முன், வீட்டுக்குள் பார்வையைச் செலுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் அந்நியப் பெண்களின் மீது பார்வை பட்டு விடக் கூடாது என்பது தான் நபி (ஸல்) அவர்களது கட்டளையின் முக்கிய நோக்கமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்ப்பதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலுள்ளவர்கள் மீது விழக் கூடும் என்ற) காரணத்தினால் தான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி 5294

பார்வையைப் பறித்தாலும் பாவமில்லை

இதனையும் மீறி பார்வையை உள்ளே செலுத்துபவர் மீது கையில் இருப்பதை விட்டெறிந்து கண்ணைப் பறித்தால் கூட தப்பில்லை என்று சொல்லும் அளவுக்கு நபி (ஸல்) அவர்களது கட்டளை அமைந்துள்ளது.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்முனையுடன் அவருக்குத் தெரியாமல் அவரை நோக்கிச் சென்று (அவருடைய கண்ணில்) குத்துவதற்குச் சென்றதை இப்போதும் நான் பார்ப்பது போல் உள்ளது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 6242

உன் அனுமதியின்றி ஒரு மனிதர் உன்னை எட்டிப் பார்த்த போது அவர் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரது கண்ணைப் பறித்து விட்டால் உன் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று அபுல்காஸிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6902

அடுத்தவர் வீட்டுக்கு ஒருவர் செல்லுகையில் மேற்கண்ட அல்லாஹ்வின் கட்டளைகளையும், அவனது தூதருடைய கட்டளைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

திரையைத் தொங்க விடுதல்

வீட்டிற்கு வருபவருக்கென்று ஒழுங்கு முறைகள் இருப்பது போல் வீட்டில் உள்ளவருக்கும் அனுமதியளிக்கும் விஷயத்தில் வரைமுறைகள், ஒழுங்கு முறைகள் உள்ளன. வீட்டில் இருப்பவர்கள் வருவோர், போவோர், தெருவில் கடந்து செல்வோர் யாரும் பார்வைகளைச் செலுத்துவதற்கு வசதியாக வாசலைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. திரைகளைத் தொங்கப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
மேற்கண்ட வசனங்களிலும், ஹதீஸ்களிலும் வீட்டில் இருப்பவர்களும் இது போன்று அடுத்தவர் பார்வையில் படும்படி இருக்கக் கூடாது என்பதையும் சேர்த்தே தெரிவிக்கின்றன. நபி (ஸல்) அவர்களது வீட்டிலும், அவர்களது மகளார் பாத்திமா (ரலி) வீட்டிலும் திரைகள் தொங்கிக் கொண்டிருந்ததை புகாரி மற்றும் இதர நூல்களில் இடம் பெற்றுள்ள பல்வேறு ஹதீஸ்களில் நாம் காண முடிகின்றது.

தமிழகத்தின் சில பகுதிகளிலுள்ள முஸ்லிம் பெண்களிடம் ஒரு வழக்கம் உண்டு. அவர்கள் பேருந்துகளில் செல்லும் போது தாடி, தலைப்பாகையுடன் யாரேனும் பேருந்தில் ஏறினால் அப்பெண்கள் தங்கள் புர்க்காவை நன்கு இழுத்துப் போர்த்திக் கொள்வார்கள். வெட்கப்படுவதற்கு இவர்கள் மட்டும் தகுதியானவர்கள், மற்றவர்கள் கிடையாது என்ற போங்கில் இவர்களது இந்தச் செயல் அமைந்திருக்கும். அது போல் இன்று புர்கா சட்டத்தைப் பேணக் கூடிய முஸ்லிம்கள் குறிப்பாக குர்ஆன், ஹதீஸைப் பேணக் கூடியவர்களின் வீட்டிலும் ஒரு விநோதம் நடக்கின்றது.

ஓரளவுக்கு மார்க்கப் பற்றுள்ள முஸ்லிம்கள் வந்தால் ஒழுக்க மரியாதையுடன் முறைப்படி அனுமதி அளிக்கின்றனர். பேணுதலுடன் நடந்து கொள்கின்றனர். ஆனால் அதே சமயம் கார் டிரைவர்கள், கொத்தனார்கள், தச்சர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர்கள், பூக்காரர்கள், வளையல்காரர்கள், சிட்டை வட்டிக்காரர்கள், தங்கள் வயல்களில் உழும் விவசாயிகள், வயர்மேன்கள், பிளம்பர்கள் குறிப்பாக பொற்கொல்லர்கள் ஆகியோர் சர்வ சாதாரணமாக வீட்டிற்கு வந்து செல்கின்றார்கள். இவர்களைப் பெண்கள் கண்டு கொள்வதே கிடையாது. இத்தகையவர்கள் சமையலறை வரை சர்வ சாதாரணமாகப் பவனி வருகின்றார்கள்.

பெண்கள் அடுக்களையில் சமையல் பணியில் இருக்கும் போது முற்றிலும் தங்கள் ஆடைகளைச் சரி செய்து கொண்டு நிற்க இயலாது. இது போன்ற கட்டங்களைப் பெண்களும் வெட்கப்படுவதற்குரிய கட்டங்கள் என்று கருதுவது கிடையாது. இது போன்ற சந்தர்ப்பங்களில் அந்நிய ஆண்களை சர்வ சாதாரணமாக வீட்டிற்குள் அனுமதிப்பது இறைக் கட்டளைக்கு மாற்றமானதாகும்.
இதற்கெல்லாம் காரணம், அல்லாஹ்வின் கட்டளையை முழுமையாக உணர்ந்து செயல்படாதது தான்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
அல்குர்ஆன் 24:31

இந்த இறைக் கட்டளையைப் பெண்கள் பேணி நடக்க வேண்டும். இந்த இறைக் கட்டளைகளைப் பேணி நடந்தால் நம்முடைய கூட்டுக் குடும்ப வாழ்க்கை மிகச் சிறந்த வாழ்க்கையாக, ஒழுக்கமான வாழ்க்கையாக, மறுமையில் வெற்றி பெறக் கூடிய வாழ்க்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

-கே.எம். அப்துந் நாசிர்

நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்

நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்

நாமும் கலெக்டராவோம் கமிஷ்னராவோம்

- வெரும் 70 ரூபாய் செலவில் தயாராகுங்கள் பட்டதாரிகளே !!!

இந்தியாவை நிர்வகிக்கும் முக்கிய பதிவிகளுக்குக்கான நுழைவு தேர்வை மத்திய அரசின் UPSC ( http://www.upsc.gov.in/) வருட வருடம் நடத்தி வருகின்றது. மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்), சுங்கத்துறை, வெளியுறவு துறை உட்பட 24 அரசு உயர் பதவிகளுக்கான நுழைவு தேர்வு (IAS, IPS, IFS etc…) விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

முதல் நிலை தேர்வு, இரண்டாம் நிலை தேர்வு, நேர்முக தேர்வு என 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வில் முதல் நிலை தேர்விற்க்கான விண்ணப்பம் தற்போது வினியோகிக்கப்பட்டு வருகின்றன. முதல் நிலை தேர்வை பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்சி பெற்று, இரண்டாம் நிலை தேர்வுவிலும் தேர்சி பெற்று நேர்முக தேர்வுவில் தேர்வு பெற்றால் 24 உயர் பதவியியில் ஒன்றை பெறலாம். இந்தியாவின் தலை எழுத்தை தீர்மானிக்கும் முக்கிய அரசு பதவிக்கான தேர்வு என்றும் இதை சொல்லலாம். முஸ்லீம்கள் ஒடுக்கப்படுவதற்க்கும், உரிமைகள் நசுக்கப்படுவதர்க்கும் இது போன்ற மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்) காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) பணிகளில் முஸ்லீம்கள் இல்லாததே (அல்லது மிக குறைவாக இருப்பதே) காரணம்.

இந்த தேர்வை எழுதி வெற்றி பெருவதன் மூலம் நாமும் மாவட்ட ஆட்சியராகவும் (கலெக்டர்), காவல் துறை ஆணையராகவும் (கமிஷ்னர்) முடியும். இந்த தேர்விற்க்கான கட்டணம் வெரும் ரூ.70 தான், பெண்களுக்கு ரூ.20 தான். இப்படி அதி முக்கியதுவம் வாய்ந்த இந்த தேர்வை எழுதும் முஸ்லீம்களின் எண்ணிக்கை மிக குறைவு.

முஸ்லீம் சமூகத்தை பாதுகாக்க களம் இறங்குங்கள் மாணவர்களே!

இது வெறும் தேர்வு அல்லது வேலை மட்டும் அல்ல, இந்த பணிகளில் நாம் சேர்ந்தால்தான் நமது சமுதாயத்திற்க்கு பாதுகாப்பு அளிக்க முடியும், குஜராத்திலும், கோவையிலும் இன்னும் இந்தியாவின் பல்வேறு பகுதியிலும் முஸ்லீம்களுக்கு எதிரான கோர தாக்குதலுக்கு இந்த துறைகளில் நாம் இல்லாதது (அல்லது மிக குறைவாக இருப்பது) மிக முக்கிய காரணங்களில் . சமுதாய முன்னேற்றத்திற்க்கும், பாதுகாப்பிற்க்கும் நாம் IPS, IAS -இல் தேர்வாகி காவல் துறை ஆனையாளராகவும், மாவட்ட கலெக்டராகவும் ஆனால் மட்டுமே நமது சமுதாயத்திற்க்கு பதுகாப்பு அளிக்க முடியும். சமுதாய முன்னேறத்திற்க்கும் பாதுகாப்பிற்க்கும் அரசியல் தீர்வல்ல, படித்து இது போன்ற பதிவிகளில் அமருவதின் மூலமே நமது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்.

அரசியல் மாயை காட்டி உங்களின் உழைப்பில் பதவி சுகம், பணம் அடையதுடிப்பவர்களை தூக்கி எறியுங்கள், நேரத்தை வீணாக்காமல் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பியுங்கள்.

இன்னும் எத்தனை காலம் தான் நாம் ஆர்பாட்டம் போராட்டம் என்று வாழ்வது, நமது உரிமையை மீட்க சமுதாயாத்திற்க்கு பாதுகாப்பு வழங்க நாமும் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) ஆகுவோம் வருங்கள் என உங்களை மாணவர் அணி அன்புடன் அழைகின்றது.

இந்த தேர்வை எழுதும் முஸ்லீம் மாணவரகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்க்கு மற்றும் ஓர் காரணம் , இந்த நுழைவு தேர்வுகளை பற்றி முஸ்லீம் சமுதாயம் அறியாமல் இருப்பதும், அறிந்திருந்தாலும் இதெல்லாம் மிக கடினம் என்று ஒதுக்கி விடுவதாலும் தான், உண்மையில் நன்றாக படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இத்த தேர்வுகள் கடினமில்லை.

இது போன்ற தேர்வுகளை எழுதி உயர்பதிகளில் இருப்பவர்கள் உயர் சாதியினர் (ன்று தங்களை சொல்லிகொள்பவர்கள்). இதற்க்கு அவர்கள் செய்யும் முதல் வேலை, IAS,IPS தேர்வு மிக மிக கடினம், சாதாரண மக்கள் இந்த தேர்வுகள் எழுத முடியாது என்று ஒரு கருத்தை சமுதாயத்தில் பரவவிட்டிருப்பது, இதனால் தேர்வு எழுத துணியும் மற்ற சமுதாய பட்டதாரிகளின் தன் நம்பிக்கையை தகர்பதும், பிறறை இந்த தேர்வுகளை எழுதவிடாமல் தடுப்பதும் ஆகும்.

இதை மாற்ற நாமும் UPSC ( IAS,IPS,IFS) தேர்வு எழுதி தேர்சி பெற வேண்டும், தேர்வுகள் கடினம் என்ற தவறான சிந்தனையை குப்பையில் போடுங்கள், எந்த தேர்வையும் சந்தித்து சாதிக்க நம்மோடு அல்லாஹ் இருகின்றான், அல்லாஹ்விம் மீது நம்பிக்கைவையுங்கள் அவனிடம் வலியுறித்தி கேளுங்கள், கடினமாக உழைத்து படியுங்கள் நிச்சயம் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான் இன்ஷா அல்லாஹ்.

தங்கள் பிள்ளைகளை இலச்ச கணக்கில் பணத்தை கட்டி படிக்க வைக்க விரும்பும் பெற்றோர்கள் 70 ரூபாயில் எழுதப்படும் இந்த தேர்வை எழுத தங்கள் பிள்ளைகளை தூண்டுவதில்லை.

இதில் நாம் பெற்றோர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. பொதுவாகவே நமது சமுதாய மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இது பற்றிய விபரங்கள் தெரிவதில்லை, மேலும் வழிகாட்ட யாரும் முன் வருவதில்லை, அல்லது அவர்களின் வழிகாட்டல் மிக குறுகிய வட்டத்திற்க்குள்ளேயே உள்ளது (இப்போது உங்களுக்கு வழிகாட்ட நமது மாணவர் அணி தயாராக உள்ளது). இது வரை முஸ்லீம் இயக்கங்களை நடத்திய தலைவர்கள் இதில் அக்கரை காட்டாமல் தங்களுக்கு இலாபம் கிடைக்கும் அரசியலை பிடித்துக்கொண்டு முஸ்லீம்களை ஏமாற்ற நினைக்கின்றனர். அரசியலைவிட கல்வி முன்னேற்றம் தான் ஒரு சமூகத்திற்க்கு பாதுகாப்பையும், சுகாதாரத்தையும், சுய சிந்தனையும் கொடுக்கும். அரசியல்வதிகள் ஐந்து வருததில் மாறிவிடுவார்கள் ஆனால் மாவட்ட ஆட்சியர் (கலெக்டர்), காவல் துறை ஆணையர் (கமிஷ்னர்) போன்றவர்கள் பல வருடங்கள் பணியாற்றி சமுதாயத்திற்க்கு பாதுகாப்பும் முன்னேற்றமும் வழங்க முடியும். எனவே தான் நமது மாணவர் அணி கல்வி முன்னேற்றத்தை கையில் எடுத்து இதுவரை யாரும் செய்திராத கல்வி வளர்ச்சி பணியை தமிழகத்தின் மூளை முடுக்கெள்ளாம் செய்து வருகின்றது.

IAS, IPS நுழைவு தேர்வுக்கென்றே சிறப்பு வழிகாட்டுதல் குழுவை நமது மாணவரணியில் ஏற்படுத்தி உள்ளோம்.

1. S.N. அஹமது இப்ராஹீம். B.Tech – 9841464521.
2. T.H. கலீல் ரஹ்மான்.MBA – 9095138186
e-mail : tntjedu@gmail.com

நமது சகோதரர்களை தொடர்பு கொண்டு UPSC தேர்வுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக்கம் :
S.சித்தீக்.M.Tech
TNTJ மாணவரணி


UPSC – 2010 (IAS, IPS etc…) தேர்வை பற்றிய விபரம்

விண்ணப்பம் சமர்பிக்க கடைசி தேதி :
பிப்ரவரி 1 (01/02/10) இன்ஷா அல்லாஹ்

விண்ணப்பங்கள் கிடைக்கும் இடம் :
அனைத்து தபால் அழுவலகங்கள் (Post office)

கட்டணம்

விண்ணப்பத்தின் விலை ரூ.20 மற்றும் தேர்வு கட்டணம் ரூ.50. பெண்களுக்கு தேர்வு கட்டணம் இலவசம்

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி
Secretary, Union Public Service Commission, Dholpur House, Shahjahan Road, New Delhi – 110069

விண்ணப்ப படிவத்தை பற்றி அறிந்து கொள்ள, சந்தேகங்களுக்கு தெளிவு பெற ஹெல்ப் லைன் எண் (Help line Number)
011-23385271,011-23381125,011-23098543 (காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை)

தேர்வு நடைபெறும் தேதி
மே – 23 (23/05/10) இன்ஷா அல்லாஹ்

வயது வரம்பு
33 வயது (முஸ்லீம்கள் உட்பட) பிற்படுத்தபட்ட வகுப்பின்ர்களுக்கு.
பொது பிரிவினருக்கு 30 வயது

தேர்வு எழுத தகுதி :

ஏதாவது ஒரு பட்ட படிப்பு. இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் எழுதலாம்

பயனளிக்காத உறவுகள்

பயனளிக்காத உறவுகள்

திருக்குர்ஆனும் நபிமொழியும் தான் இஸ்லாத்தின் அடிப்படை என்பதை விளங்கி வைத்திருக்கின்ற ஒவ்வொருவரும் இந்த ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஆனால் இவ்வாறு உறுதியாக இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றவர்களின் இறை நம்பிக்கையைப் பலவீனப்படுத்தி, ஆட்டம் காண ஷைத்தான் ஒரு குறுக்கு வழியைக் கையாள்கிறான். அந்தக் குறுக்கு வழியின் மூலம் வழிகெட்டு, வழிகேட்டின்பால் விழுவோரில் தீன்குலப் பெண்மணிகள் முதலிடம் வகின்றனர்.

இறை நம்பிக்கையில் உறுதியானவர்களின் உறுதியையும் ஆட்டம் காணச் செய்ய ஷைத்தான் நாடும் குறுக்கு வழி என்ன? அந்த நிலையை நாம் எவ்வாறு சரி செய்வது? என்பதைக் காண்போம்.

உறவு முன்னால்! கொள்கை பின்னால்!

எத்தனையோ விஷயங்களில், எவ்வளவு நேரங்களில் அல்லாஹ்வுடைய கட்டளையையும் நபி (ஸல்) அவர்களுடைய வழிகாட்டுதலையும் உயிரினும் மேலாக மதிக்கும் கொள்கை உறுதி மிக்கவர்கள், தன்னுடைய சொந்த பந்தத்தில், குருதி உறவில் தன் உறுதியை இழந்து விடுவதை கண்கூடாகக் கண்டு வருகிறோம்.
தொடர்ந்து நபிவழியைப் பேணி வாழ்ந்தவர் தனது அண்ணனுடைய வரதட்சணை திருமணத்தில் கலந்து கொள்வதையும், தனது அண்ணன் மகனுடைய கத்னா எனும் சுன்னத் கல்யாணத்தில் (?) கலந்து கொள்வதையும், தனது அக்காள் மகள் காது குத்தில் கலந்து கொள்வதையும், தனது தம்பி மனைவியின் வளைகாப்பு வைபவத்தில் கலந்து கொள்வதையும், தனது தங்கையின் பூப்புனித நீராட்டு விழாவில் சீராட்டோடு கலந்து கொள்வதையும் குருதி உறவைக் காரணம் காட்டி ஈமானிய உறுதி குலையக் காரணமாவதை உதாரணமாகக் கூறலாம்.
ஏகத்துவத்தை பேசக்கூடிய எத்தனையோ கணவன்மார்கள் மேற்கூறியவையெல்லாம் தவறு, நபிவழிக்குப் புறம்பானது என்பதை பட்டும்படாமலோ, அழுத்தம் திருத்தமாகவோ சுட்டிக் காட்டினாலும் நம் தீன்குலப் பெண்மணிகள் ஏற்றுக் கொள்வதில்லை.
அவர்கள் எல்லாம் நம் நெருங்கிய உறவினர்கள் ஆயிற்றே! அவர்களது நிகழ்ச்சியில் நாம் எப்படி கலந்து கொள்ளாமல் இருக்க முடியும்? நாளை நமது வீட்டில் நடக்கும் நல்ல விஷயங்களுக்கு அவர்கள் வரவேண்டாமா? என்று அடுக்கடுக்கான சான்றுகளை எடுத்துரைத்து கணவன்மார்களை சரிகட்டி மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபட்டு, பாவமூட்டைகளை சுமந்து கொள்கின்றனர். ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடன் இருப்பவர்களை வழிகெடுக்கும் ஷைத்தானின் குறுக்கு வழிகள் இதுதான்.

இந்த உறவுகளால் பயன் என்ன?

இந்த உலக வாழ்க்கையை முற்றிலுமாகக் கருத்தில் கொண்டு இத்தகையோர் வழிகேட்டின் பக்கம் போகிறார்களே! இந்த உறவுகள் மறுமை நாளில் பயன் தருமா? உறவு முறையைக் காரணம் காட்டி வழிகெடுப்பவர்கள், குறிப்பாக பெண்கள் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஓட்டம் எடுக்கும் உறவுகள்

மறுமை நாளில் ஏற்பட இருக்கும் நிகழ்வுகளை அல்லாஹ் தன் திருமறையில் படம் பிடித்துக் காட்டுகின்றான். எந்த ஒரு மனிதனும் தனது தாயையோ, தனது தந்தையையோ, தனது சகோதர, சகோதரியையோ அந்த மறுமை நாளின் திடுக்கத்தின் பயத்தில் கண்டு கொள்ள மாட்டான்.

அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதரனையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.
(அல்குர்ஆன் 80:33-36)

மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! தந்தை மகனைக் காக்க முடியாத, மகன் தந்தையைச் சிறிதும் காப்பாற்ற இயலாத நாளை அஞ்சுங்கள்! அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது. இவ்வுலக வாழ்க்கை உங்களை ஏமாற்றி விட வேண்டாம்! ஏமாற்றுபவனும் அல்லாஹ்வைப் பற்றி உங்களை ஏமாற்றி விட வேண்டாம்.
(அல்குர்ஆன் 31:33)

எந்த மனைவி கூறியதால் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் மாறு செய்தானோ அந்த மனைவியை கணவன் கண்டு கொள்ள மாட்டான். தனது கணவனை மனைவி கண்டு கொள்ள மாட்டாள். தனது தாய், தந்தை கூறியதால் தான் வரதட்சணை வாங்கித் திருமணம் செய்தேன் என்று தாய், தந்தை பேச்சைக் கேட்டு பெண் வீட்டாரிடத்தில் பிச்சை எடுத்த மகனை விட்டும் அவனது தாய், தந்தையர் ஓடி விடுவர்.

எந்த ஒரு ஆபத்து ஏற்பட்டாலும் மனிதனுக்கு முதலில் உதவுபவன் அவன் உடன் பிறந்த சகோதரனாகத் தான் இருப்பான். இதை தமிழில் தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று கூறுவார்கள். ஆனால் அந்தச் சப்தம் ஏற்படும் போது மனிதனை விட்டு ஓடுபவர்களில் முதலாவதாக அல்லாஹ் சகோதரனைத் தான் குறிப்பிடுகின்றான்.
எந்தத் துன்பம் வந்தாலும் உயிர் காப்பான் தோழன் என்று கூறுவார்கள். ஆனால் அவனும் கூட எந்த உதவியும் செய்ய மாட்டான் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான்.

எந்த நண்பனும் நண்பனை விசாரிக்க மாட்டான். (அல்குர்ஆன் 70:10)
எந்த உறவுகளுக்காக மார்க்கத்திற்கு முரணாக நடந்தானோ அந்த உறவுகள் உதவி செய்யாமல் போவதுடன் அதற்கும் ஒருபடி மேலே போய் நம்மை மாட்டிவிட்டு, தான் தப்பித்துக் கொள்வதற்கு, எந்த உறவுகளையும் விற்பனை செய்வதற்குத் தயாராக இருக்கும் பரிதாபமான நிலை ஏற்படும்.

அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனை யும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அல்குர்ஆன் 70:11-14
தனது உறவுகள் பயனிக்கும் என்று நம்பி, இறைவனுக்கும் இறைவனுடைய தூதருக்கும் மாறு செய்யக்கூடியோர் மேற்கண்ட திருமறை வசனங்களை சிந்தித்துப் பார்க்கட்டும்.

எந்தக் குடும்பத்திற்காக, எந்தப் பிள்ளை குட்டிகளுக்காக, எந்த உறவினர்களுக்காக தனது வாழ்வை இவ்வுலகில் அர்ப்பணித்தானோ அவர்கள் அனைவரையும் ஈடாகக் கொடுத்தாவது தான் விடுதலையாக வேண்டும் என்று மனிதன் விரும்புவான் என்றால் நம்மை இறைவனது நெறியை விட்டும் இறைத்தூதர் வழியை விட்டும் திசை திருப்பும் இந்த உறவுமுறைகள் தேவை தானா? இது போன்று நம்மை விட்டுவிட்டு மறுமை நாளில் ஓடக்கூடிய, நமக்கு எதிராகத் திரும்பக் கூடிய இந்த பயனிக்காத உறவுகள் பேச்சைக் கேட்க வேண்டுமா என்ன?

யாரை நேசிப்பதாக இருந்தாலும் அந்த நேசம் அல்லாஹ்வுக்காக அவன் தூதருக்காக இருக்க வேண்டும்.

“யார் அல்லாஹ்வுக்காக நேசித்து, அல்லாஹ்வுக்காக வெறுத்து, அல்லாஹ்வுக்காகக் கொடுத்து, அல்லாஹ்வுக்காக வெறுத்தால் அவனது ஈமான் நிறைவு பெற்றுவிட்டது” என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி), நூல்: அபூதாவூத் (4061)

இந்தக் கருத்தை வலுவூட்டும் வண்ணம் நபிகளார் வேறு இடத்தில் இவ்வாறு கூறியுள்ளார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் ஈமானின் சுவையை உணர்ந்தவராவார். (அவை:)

1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது.
2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.
3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (16)

ஈமானை நன்றாக அறிந்தவர்கள் எந்த நிலையிலும் அல்லாஹ்வின் கூற்றை விட, அவன் தூதர் காட்டிய வழியை விட உறவினர்களின் பேச்சுக்கு முதலிடம் கொடுக்க மாட்டார்கள். படைத்தவனின் கட்டளைக்கும் அவன் விரும்பும் வழிகாட்டுதலுக்குமே முதலிடம் கொடுப்பார்கள்.

நபிமார்களும் உறவுகளும்

அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைத்தூதர்களின் உறவினர்கள் கூட இறைக்கட்டளையின்படி நடக்காவிட்டால் அவர்கள் இறைத்தூதர்களின் உறவினர்கள் என்பதற்காக மறுமையில் வெற்றியடைய முடியாது.

நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் தந்தையாக இருந்த ஆஸர், இறைத்தூதரின் தந்தை என்பதற்காக அவர் மறுமையில் வெற்றியடைந்து விட முடியாது. அவருக்காக பாவமன்னிப்புக் கூட கேட்க அல்லாஹ் அனுமதிக்கவில்லை.

“உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது” என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. “உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடுவேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை” என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது.
(அல்குர்ஆன் 60:4)

இப்ராஹீம் தம் தந்தைக்காகப் பாவ மன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே! அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:114)

இதைப் போன்று நபி நூஹ் (அலை) மற்றும் லூத் (அலை) அவர்களின் மனைவிமார்கள் மார்க்கத்திற்கு முரணாக நடந்தனர். அவர்கள் இறைத்தூதரின் மனைவி என்பதால் அவர்கள் சொர்க்கம் போக முடியவில்லை. மாறாக நரகவாதிகள் என்று தெளிவாக அல்லாஹ் கூறியுள்ளான்.

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!” என்று கூறப்பட்டது.
(அல்குர்ஆன் 66:10)

இதைப் போன்று நூஹ் (அலை) அவர்களின் மகன், இஸ்லாத்தின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளாததால் அவனையும் கடல் பேரலையால் மூழ்கடித்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அவர்களின் தந்தை, மகன் உறவு பயனளிக்கவில்லை.

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது “ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!” என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.

“இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறினார்.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி “அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!” என்று நூஹ் கூறினார்.

“ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்” என்று அவன் கூறினான். “அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை” என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். (அல்குர்ஆன் 11:40-43)

இவ்வுலகத்தின் அருட்கொடையாக வந்த நபிகளாரின் தந்தையும் தாயும் கூட இஸ்லாத்தை ஏற்காததால் அவர்களும் நரகவாதிகளாக ஆகிவிட்டார்கள். அவர்களின் உறவும் அல்லாஹ்விடத்தில் எந்தப் பயனையும் ஏற்படுத்தவில்லை.

நபி (ஸல்) அவர்கள் தம் தாயாரின் அடக்கத் தலத்தைச் சந்தித்தபோது அழுதார்கள்; (இதைக் கண்டு) அவர்களைச் சுற்றியிருந்தவர்களும் அழுதனர். அப்போது அவர்கள், “நான் என் இறைவனிடம் என் தாயாருக்காகப் பாவ மன்னிப்புக் கோர அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அவரது அடக்கத் தலத்தைச் சந்திப்பதற்கு அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினான். எனவே, அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:முஸ்லிம் (1777)

ஒரு மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! (இஸ்லாத்திற்கு முன் இறந்துவிட்ட) என் தந்தை எங்கே இருக்கிறார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (நரக) நெருப்பில்” என்று பதிலளித்தார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “என் தந்தையும் உன் தந்தையும் (நரக) நெருப்பில் தான் (இருக்கிறார்கள்)” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (347)

மார்க்கத்திற்கு முதலிடம் கொடுத்த நபிகளார்

மிகவும் அன்பிற்குரியவர்களாக நேசித்த தன் மகள் பாத்திமா (ரலி) அவர்கள் மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்த போது அன்பிற்குரிய மகளின் செயல் என்று அதை அங்கீகரிக்காமல் அதைக் கண்டிக்கும் வண்ணமாக அவர்களது வீட்டிற்குச் செல்லாமல் திரும்பி வந்துவிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், (தமது மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கன் வீட்டுக்கு வந்தார்கள். ஆனால், அவர்கடம் செல்லவில்லை. அலீ (ரலி) அவர்கள் வந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்கடம் விஷயத்தைச் சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்கடம் சொல்ல, “நான் ஃபாத்திமாவின் வீட்டு வாசலில் பல வண்ணச் சித்திரங்கள் வரையப்பட்ட திரைச் சீலை ஒன்றைக் கண்டேன். எனக்கும் இந்த (ஆடம்பரமான) உலகத்திற்கும் என்ன தொடர்பு? (அதனால்தான் திரும்பி வந்துவிட்டேன்)” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கடம் சென்று, நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் சொன்னார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், “அந்தத் திரைச் சீலையின் விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள், தாம் விரும்புவதை எனக்குக் கட்டளையிடட்டும்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அதை இன்னாரின் வீட்டாரிடம் அனுப்பி விடு. அவர் களுக்குத் தேவையுள்ளது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி), நூல்: புகாரி (2613)

எந்தச் சோதனை வந்தாலும் எதிர்த்து நின்று போராடக் கூடிய ஈமானிய வலிமை மிகுந்த ஏகத்துவவாதிகள் பலரும் உறவு முறை என்று வந்து விட்டால் அவர்களது ஈமானிய நிலை ஆட்டம் கண்டு விடுவதையும், அவர்கள் மிக உறுதியாக நின்றாலும் அவரது மனைவிமார்கள் அவர்களது மதியை மயக்கி ஈமானை மலுங்கடித்து விடச் செய்வதையும் காண்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்றால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முன்மாதிரியை நம் வாழ்வில் எடுத்து நடக்க வேண்டும். தானாடாவிட்டாலும் தன் சதையாடும் என்பார்கள். மார்க்க விஷயம் என்று வந்து விட்டால் நபியவர்கள் தானும் ஆடவில்லை, தன் சதையையும் ஆடவிடவில்லை.

சிறந்த தோழர்கள்

பயனளிக்காத இந்த உறவுக்காக மறுமை வாழ்க்கையைப் பாழாக்கி விடாதீர்கள். மறுமை வாழ்க்கைக்குப் பயனளிக்கும் மார்க்கக் கடமைகளுக்கு முதலிடம் கொடுங்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய கட்டளையை ஏற்று நடங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். மறுமை நாளில் சிறந்த தோழமை உங்களுக்குக் கிடைக்கும்.
அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள்,

உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள். (அல்குர்ஆன் 4:69)
மறுமை நாள் ஏற்படும் போது வரும் சப்தத்தைக் கேட்டவுடன் நம்மை விட்டும் ஓட்டம் எடுக்கும் உறவுகள் ஒருபுறம் இருக்க, அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள் மிக உயர்ந்த நபிமார்கள், உயிர் தியாகிகள், உண்மையாளர்கள், நல்லவர்கள் ஆகியோருடன் இருக்கும் நல்வாய்ப்பு கிட்டும். இந்த வாய்ப்பைப் பெறுவதற்கு முழு முயற்சியை நாம் எடுப்போம்.

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்

“அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு”
“பெண் புத்தி பின் புத்தி”
“ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே”

என்றெல்லாம் பெண்ணினத்தை இழிவுபடுத்திப் பல்வேறு பழமொழிகள் நடைமுறையில் கூறப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் பெண்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கப்படவில்லை. பெண்களுக்கு ஆன்மா இருக்கிறதா? என்றெல்லாம் ஆய்வு செய்யப்பட்ட காலம் அது. இன்றைய காலத்திலும் பெண்கள் போகப் பொருளாகத் தான் கருதப்படுகின்றனர். ஆனால் உண்மையிலேயே பெண்களுக்குரிய உரிமைகளை வழங்கி, அவர்களுக்குரிய கடமைகளையும் தெளிவுபடுத்திய ஒரே மார்க்கம் இஸ்லாம் தான்.

பெண்ணுரிமை பறிக்கப்பட்ட காலத்தில் “பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன” (அல்குர்ஆன் 2:228) என்று பெண்ணுரிமை போற்றிய மார்க்கம் தான் இஸ்லாம். நம்முடைய சமுதாயத்திலும் மார்க்கம் தெரியாத காரணத்தினால் பெண்களுக்குப் பல்வேறு விதமான கொடுமைகள் இழைக்கப்பட்டன. பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்டது.

பள்ளியில் சென்று தொழுவது, மனதிற்குப் பிடித்த ஆண்மகனைத் திருமணம் செய்தல், மஹர் எனும் மணக்கொடை மறுக்கப்பட்டு பெண்களே இலட்சக் கணக்கில் வரதட்சணை கொடுத்துத் திருமணம் செய்யும் அவல நிலை, இத்தா என்ற பெயரில் பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பது இன்னும் எவ்வளவோ கொடுமைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் இன்றைக்கு தவ்ஹீத் பேரெழுச்சிக்குப் பின்னால் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் வெகுவாகக் குறைந்துள்ளன என்றே கூற வேண்டும். இன்று பெண்கள் மதரஸாக்கள் அதிக அளவில் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஆண்களை விட பெண் ஆலிமாக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள இளம் பெண்களில் ஓரளவினர் பல்வேறு விதமான மார்க்கச் சட்டங்களைத் தெரிந்தே வைத்துள்ளனர்.

ஆனால் சில விஷயங்களை மார்க்கத்தின் பெயரால் தவறாகவும் விளங்கி வைத்துள்ளனர்.

இன்றைக்கு அனைத்துச் சமுதாயங்களிலும் மாமியார் கொடுமை என்பது எழுதப்படாத ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. தன்னுடைய மகனுக்கு மனைவியாக வந்து விட்ட காரணத்தினால் தன்னுடைய மருமகளை ஒரு அடிமைப் பெண்ணைப் போன்று, ஒரு வேலைக்காரியைப் போன்று நடத்தக்கூடிய அவல நிலை காணப்படுகிறது. தன்னுடைய மருமகள் தெரியாமல் ஒரு சிறு தவறு செய்து விட்டாலும் அதை ஊதிப் பெரிதாக்கி பஞ்சாயத்தைக் கூட்டக்கூடிய நிலையை சில மாமியார்கள் உருவாக்கி விடுகின்றனர். மாமியார் உடைத்தால் மண்சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்ற வழக்கத்தில் உள்ள இந்தப் பழமொழி மாமியார்களின் ஆதிக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

ஆனால் அனைத்து மாமியார்களும் இப்படித் தான் என்று கூறிவிட முடியாது. தான் பெற்ற மகளை விட மருமகள்களை நேசிக்கின்ற குணவதிகளும் பலர் இருக்கத் தான் செய்கின்றனர்

மாமியார் கொடுமை பரவலாக இருக்கின்ற காரணத்தினால் பல மருமகள்கள் முன்னெச்சரிக்கையாக மாமியார் விஷயத்தில் கடுமை காட்டத் துவங்கி விடுகின்றனர். தன்னுடைய மாமனார், மாமியாருக்குப் பணிவிடைகள் செய்வது தனக்குக் கடமையில்லை; கணவனுக்கு மட்டும் தான் பணிவிடை செய்வது கடமை; இவ்வாறு தான் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் என்று சில பெண்கள் மாமனார் மாமியார்களைத் தவியாய் தவிக்க விட்டு விடுகின்றனர். இதனால் அவர்கள் வயதான பருவத்தில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி விடுகின்றனர். பலர் மருமகள் கொடுமை தாங்க முடியாமல் முதியோர் இல்லங்களுக்குச் செல்ல நேரிடுகிறது.

“என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?” என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.

அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார். சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை மாரடித்து விட்டு மனக் கஷ்டத்துடன் திரும்பும் ஆசிரியராகக் கூட அவர் இருப்பார். அல்லது குழப்பவாதிகள் பேசும் ஃபித்னா, ஃபஸாதுகளைப் பற்றி சங்கடப்பட்டுக் கொண்டே திரும்பும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவராக இருப்பார். அல்லது இரவெல்லாம் கண் விழித்து காரோட்டி விட்டு வீடு திரும்பும் ஒரு டிரைவராகக் கூட அவர் இருப்பார்.

இப்படிப்பட்டவர்கள் மன அமைதியையும் நிம்மதியையும் தங்கள் மனைவியரிடம் நாடியே வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்.
ஆனால் மாமனார் மாமியாருக்குப் பணிவிடை செய்தல் என்பதும் மருமகளுக்குக் கடமை தான் என்பதை மார்க்கம் நமக்குத் தெளிவாக வழிகாட்டியிருக்கிறது.

கணவனுடைய செல்வம், கணவனுடைய வீட்டிலுள்ளவர்கள் அனைத்திற்கும் பொறுப்பு அவனுடைய மனைவி தான். கணவனின் தாயும், தகப்பனும் அவனது பொறுப்பிலுள்ளவர்களே எனும் போது கணவன் சார்பாக அவர்களைக் கவனிக்க வேண்டிய பொறுப்பு அவன் மனைவியைச் சார்ந்தது தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். நூல்: புகாரி 2554

பின்வரும் ஹதீஸ் மாமனார் மாமியார் மட்டுமல்ல! கணவனுடைய சகோதர சகோதரிகளுக்கும் உதவி செய்ய வேண்டிய நிலையிருந்தால் ஒரு பெண் செய்து தான் ஆக வேண்டும் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபியவர்கடம், “அல்லாஹ்வின் தூதரே! நான் புது மாப்பிள்ளை” என்று சொல்லி ஊருக்கு விரைவாகச் செல்ல அனுமதி கேட்டேன். அவர்கள் எனக்கு அனுமதி அத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்கடம் மதீனாவுக்கு சீக்கிரமாகச் செல்ல அனுமதி கேட்ட போது அவர்கள் என்னிடம், “நீ கன்னிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா? வாழ்ந்த அனுபவமுள்ள பெண்ணை மணமுடித்துக் கொண்டாயா?” என்று கேட்டிருந்தார்கள். அதற்கு நான், “வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணைத் தான் மண முடித்துக் கொண்டேன்” என்று பதில் கூறினேன். அதற்கு அவர்கள், “கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? நீ அவளுடனும் அவள் உன்னுடனும் விளையாடலாமே!” என்று கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சிறு வயது சகோதரிகள் பலர் இருக்கும் நிலையில் என் தந்தை (உஹுதுப் போரில்) மரணித்து விட்டார்கள். அல்லது கொல்லப்பட்டு விட்டார்கள். ஆகவே, அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிக்கவோ, அவர்களைப் பராமரிக்கவோ இயலாத அவர்களைப் போன்றே (அனுபவமற்ற சிறு வயதுப் பெண்) ஒருத்தியை நான் மணந்து கொள்ள விரும்பவில்லை. ஆகவே, அவர்களைப் பராமரிப்பதற்காகவும் அவர்களுக்கு ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே மணந்து கொண்டேன்” என்று பதிலத்தேன். நூல்: புகாரி 2967

கணவனுடைய சகோதரிகளைக் கூட பராமரிப்பது அவனுடைய மனைவிக்குரிய கடமை என்றால் அவனுடைய தாய் தந்தையர்களுக்குப் பணிவிடை செய்வது மருமகளுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

மேலும் ஜாபிர் (ரலி) இவ்வாறு கூறும் போது நபியவர்கள் சரியான செயல் என்று அதை ஆமோதித்துள்ளார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை (அப்துல்லாஹ்-ரலி அவர்கள்) ஒன்பது பெண் மக்களை விட்டு விட்டு உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்)” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், “நீ செய்தது சரி தான்” என்று கூறினார்கள். நூல்: புகாரி 4052

ஒரு பெண் தன் கணவணைத் தவிர மற்றவர்களுக்குப் பணிவிடை செய்தல் கடமையில்லை என்றிருக்குமானால் நபியவர்கள் நீ எப்படி மற்றொரு வீட்டுப் பெண்ணை உன் மனைவி என்பதற்காக உன் சகோதரிகளுக்குத் தலைவாரி விடுமாறு கூறலாம்? அதற்கொரு வேலைக்காரியை வைத்துக் கொள்ள வேண்டியது தானே? என்றே கேட்டிருப்பார்கள். மாறாக நபியவர்கள் நீ செய்தது சரி தான் என்றே கூறியுள்ளார்கள்.
எனவே கணவனின் பொறுப்பில் உள்ள அனைவரையும் கவனிக்கின்ற பொறுப்பு அவன் மனைவிக்கு இருக்கின்றது. அதே நேரத்தில் எந்த ஒன்றும் சக்திக்கு மீறியதாக இருக்கக் கூடாது. மருமகள் என்பதற்காக அனைத்து வேலைகளையும் அவளே செய்ய வேண்டும் என்று மாமியார்கள் கருதக் கூடாது. இரு தரப்பினரும் இறைவனைப் பயந்து மார்க்கத்திற்கு உட்பட்டு நடந்து கொண்டால் ஒவ்வொரு குடும்பமும் ஒரு பல்கலைக் கழகமே!

-மீராள் மைந்தன், கடையநல்லூர்

IAS,IPS தேர்வு எழுதுவோர் கவனத்திற்க்கு!

IAS,IPS தேர்வு எழுதுவோர் கவனத்திற்க்கு!

இந்த வருடம் UPSC எழுதும் சகோதரர்கள் கவனத்திற்கு நீங்கள் இத்தேர்வுக்கு தயாராக சில குறிப்பு புத்தகங்களை கிழே வரிசை படித்தி இருக்கின்றோம்.

முழு ஈடுபாடுடன் உங்களை தயார்ப்படுத்துங்கள் நீச்சயமாக நம்மாலும் IAS ,IPS ஆக முடியும் இன்ஷா அல்லாஹ்

1. இந்திய வரலாறு (Indian History – India Struggle for Independence )
பிபின் சந்திரா ( Bipin Chandra)
NCERT Books ( XI & XII )
புவியியல் (Geography )

Spectrum Books (P) Ltd.

2. இந்திய கொள்கைகள்(Indian Policy – Constitution Of India )
பக்ஷி (Bakshi)

3. இந்திய பொருளாதாராம் (Indian Economy )
பிரதியோகிதா தார்பனின்தியா (Pratiyogita Darpaninthia)
XI & XII – Plus One, Plus Two Books,

4. பொது அறிவியல் (General Science )

Tata Mc Graw Hill Guide

5. மனத்திறன் (Mental Ability – Quantitative Aptitude)
R.S. Aggarwal

6. நாட்டு நடப்புக்கு சில செய்தி தாள்கள் , வர மற்றும் மாத இதழ்கள் (Current Affairs – Some magazines and Newspapers )

i. The Hindu/The Times of India
ii. Frontline
iii. Civil Service Chronicle
iv. Chanakya
v. Competition WIZARD
vi. Civil Services Today

7. வழிகாட்டி நூல்கள் (Guides)

1. Tata Mc Graw Hill
2. Spectrum
3. Unique

மேலும் விவரங்களுக்கு TNTJ மாணவரணியை தொடர்பு கொள்ளவும்.

எஸ்.எண். அஹமது இப்ராஹீம் B .Tech

அரசின் இலவச கல்வி உதவி தொகை

அரசின் இலவச கல்வி உதவி தொகை

பள்ளி படிப்பு

1. பள்ளி படிப்பிற்க்கு தமிழக அரசால் வழக்கப்படும் உதவித்தொகை, சீருடை, நோட்டு புத்தகம், காலனி அரசு பள்ளியில் படிப்பவர்களுக்கே வழங்கப்படுகின்றது (தனியார் பள்ளிகளுக்கு கிடையாது). இதை பெருவதில் சிரமம் இல்லை, இதில் கல்வி கட்டணத்தை தவிர அனைத்தும் தானகவே கிடைக்கின்றது. கல்வி உதவி தொகை விண்ணப்பித்தால் கிடைக்கும், அரசு பள்ளிகளில் கல்வி கட்டணம் மிக மிக குறைவு( சில நூறு ரூபாய்கள்). எனவே (அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்கும்) பெற்றோர்கள் இதை பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. .

2. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்காக மத்திய அரசு ஒரு தகுதி தேர்வுவை (NET/NTSE/NMMS தேர்வுகள்) நடத்துகின்றது, இந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் (பாஸ் பன்னினால் ) மட்டுமே உதவி தொகை கிடைக்கும். (8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு) மாதம் 500 ரூபாய் வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள், மேலும் விபரம் அறிய நமது மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.

பட்ட படிப்பு

1. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ. 1000 வரை கிடைக்கும்.

2. பட்டபடிப்பை பொருத்தவரையில் தமிழக அரசு முஸ்லீம்களுக்கென்று தனியாக இதுவரை எந்த கல்வி உதவி தொகை திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை வழங்குகின்றது. படிப்பிற்க்கு தக்கவாறு ஒரு வருடத்திற்க்கு ரூ.1000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது இதை பெருவதும் அவ்வளவு சிரமம்மில்லை, ஒவ்வொறு கல்லூரியிலும் இதற்க்கான விண்ணப்பம் வினியோகிக்கப்படும், அதை வாங்கி பூர்த்தி செய்துகொடுத்தாலே போதும், பெரும்பாலும் நமது சமுதாயம் இதை பெற்றுகொள்கின்றது. இந்த கல்வி தொகை பெற தாஸில்தாரிடம் வருமான சான்றிதழ் பெற வேண்டும், வருமான சான்றிதழ் பெருவதற்க்கு அலுப்புபட்டு கொண்டு நமது சமுதாய மாணவர்களில் சிலர் இதை பெருவதில்லை.

3. மத்திய அரசு (தமிழக அரசுடன் இணைந்து) தொழில் கல்வி (ITI, Diploma, B.E/B.Tech, M.E/M.Tech) படிக்கும் சிறுபாண்மை (முஸ்லீம், கிறித்துவர், சீக்கியர்) மாணவர்களுக்காக சிறப்பான இலவச கல்வி உதவி தொகை திட்டத்தை அமல் படுத்தி வருகின்றது (வருடத்திற்க்கு ரூ.25,000 வரை). விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இது கிடைக்காது. (மேலும் விபரம் அறிய www.minorityaffairs.gov.in) ஒவ்வொறு வருடமும் அரசு குறிபிட்ட எண்ணிக்கையில் உதவியை வழங்குகின்றது. இந்த எண்ணிகை மிக மிக குறைவு, நாம் கணகிட்ட வரை 200 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவர் என்ற எண்ணிக்கையில் இருக்கும். இதில் இன்னோறு சிக்கல் இதை பெருவதாக இருந்தால் மேலே குறிபிட்ட தமிழக அரசு உதவி தொகை பெறமுடியாது. இது யாருக்கு கிடைக்கும் என்றால் ஐஐடி, என்ஐடி மாணவர்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும், ஏனெனில் மத்திய அரசு இங்கு படிக்கும் மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றது. மேலும் ஐஐடி, என்ஐடியில் இதை பெருவதற்க்காக சிறப்பான ஏற்பாடும் செய்து வைத்துள்ளனர். ஆனால் கட்டாயம் ரூ.25,000 வரை உதவி தொகை கிடைக்கும் ஐஐடி, என்ஐடியில் முஸ்லீம் மாணவர்கள் மிக மிக குறைவு.

பட்ட மேற்படிப்பு படிப்பவர்களுக்கு கல்வி உதவி தொகை

1. மேலே குறிபிட்ட தமிழக அரசு செயல் படுத்தும் (முஸ்லீம்களையும் சேர்த்து) பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்காக இலவச உதவி தொகை பட்ட மேற்படிப்பிற்க்கும் கிடைக்கும். படிப்பிற்க்கு தக்கவாறு ஒரு வருடத்திற்க்கு ரூ.2000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது.

2. மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வு (NET/NTS/NMMS தேர்வுகள்) பட்ட மேற்படிப்பிற்க்கும் உள்ளது, தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் மாதம் ரூ. 2000 வரை கிடைக்கும். இந்த தேர்வை பற்றிய விபரம் அறிய http://dge.tn.gov.in/ மற்றும் www.ncert.nic.in இந்த இனையத்திற்க்கு செல்லுங்கள்.

3. M.E/M.Tech படிக்க மத்திய அரசு (IIT) GATE என்ற நுழைவு தேர்வை நடத்துகின்றது. இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.5000 முதல் ரூ.8500 வரை வழங்குகின்றது.

மேலே குறிபிட்ட நுழைவுதேர்வு பற்றிய விபரத்தை நமது மாணவரணியை தொடர்புகொண்டு அறிந்துகொள்ளாம்.

முனைவர் படிப்பு (Phd) மற்றும் பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு

1. M.Sc. படித்தவர்களுக்கு மத்திய அரசு CSIR -நுழைவு தேர்வு நடத்துகின்றது, இதில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.9000 வழங்குகின்றது.

2. மேலும் அராய்ச்சி படிப்புகளான உயிர் தொழிநுட்பம் (பயோ டெக்னாலஜி) உயிரில் (தாவரவியல், விலங்கியல் போன்ற வற்றில் உயர் கல்வி பயலும் மாணவர்களுக்கு இளநிலை விஞ்ஞானி தேர்வுகள் (DBT, JRF தேர்வுகள் ) ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தபடுகிறது. இது சம்பதமாக தகவல்களை நமது TNTJ மாணவரணியை தொடபு கொள்ளவும்.

2. சில நுழைவு தேர்வுகள் (GATE etc..) எழுதினால் பெரும்பாலும் உள்ள முனைவர் படிப்பிற்க்கு உதவிதொகை கிடைக்கும். முனைவர் படிப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் ஆய்வு செய்யும் பாடம், படிக்கும் பல்கலை கழகம் போன்ற தகவலுடன் நமது மணவரனியை தொடர்புகொண்டால் அவர்களுக்கு உதவி தொகை பெருவதற்க்கான வழிமுறைகளை விளக்குவோம்.

வெளி நாட்டு படிப்பிற்க்கான உதவி தொகை

அமெரிக்காவில் உதவி தொகை பெற

GRE , TOEFL என்ற இரண்டு தேர்வுகள் உள்ளது. இதை எழுத ரூ.18,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி). இதில நல்ல மதிப்பெண் எடுத்தால் அமெரிக்க பல்கலைகழகங்கள் மாதம் ரூ.80,000 வரை உதவி தொகை வழங்குகின்றது. இந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, உதவி தொகை பெற்று, நல்ல பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தாலும் அமெரிக்கா விசா வாங்குவது மிக மிக கடினம்.

இங்கிலாந்தில் உதவி தொகை பெற

IELTS- என்ற தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தால் இங்கிலாந்து பல்கலைகழகங்கள் மாதம் ரூ.60,000 வரை உதவி தொகை வழங்குகின்றது. இதை எழுத ரூ.10,000 தேவைபடும் (தற்போதைய நிலவரபடி).

பிற நாடுகள் : மேலே குறிபிட்ட மூன்று நுழைவுதேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பிற நாடுகளில் உள்ள பல்கலைகழகங்கள் உதவி தொகை வழங்குகின்றன.

பிற கல்வி உதவிகள்

அரசு செய்யும் உதவி தொகைகளைகளை தவிர சில கல்லூரிகள், அவர்களுடைய கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக தனி தனியாக உதவி தொகை வழங்குகின்றது. அது கல்லூரிக்கு கல்லூரி மாறுபடும். (உதாரணத்திற்க்கு சென்னை புது கல்லுரியில் அங்கு படிக்கும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம், ஐஐடி-யில் அங்கு பயிலும் மாணவர்களுக்கென தனியாக இலவச கல்வி உதவி தொகை திட்டம் , etc…..)

நாம் மேலே குறிபிட்டது போக மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது சில கல்வி உதவிதொகை திட்டத்தை அறிவிக்கும், அவற்றை பற்றி அரசு அறிவிப்பு வெளியகும் போது நமது ஊடங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

அரசின் இலவச கல்வி திட்டமும் முஸ்லீம்களின் நிலையும்

1. மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச கல்வி உதவி தொகை மிக மிக குறைவாக உள்ளது, இதனால் நமது சமுதாயம் அதை வாங்குவதில் அதிக கவனம் செலுத்துவதில்லை.

2. அதிக பணம் கிடைக்கும் கல்வி உதவி தொகை பெற நுழைவு/தகுதி தேர்வுகள் உள்ளன. இந்த தேர்வுகளெள்ளாம் கடினம் என நமது சமுதாய மாணவர்கள் நினைப்பதினால், இதை எழுதி தேர்ச்சி பெரும் நிலையில் நமது சமுதாயம் இல்லை, இதனால் பெரும்பாலான இலவச கல்வி உதவி தொகை வீணகின்றது.

3. நுழைவு/தகுதி தேர்வு இல்லாமல் கிடைக்கும் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பம் வாங்கி, சான்றிதழ் பெற்று பூர்த்தி செய்ய வேண்டி இருப்பதால் நமது சமுதாயம் இதில் அதிக அக்கரை காட்டுவதில்லை. காரணம் பெரும்பாலானவர்கள் இதை பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர், அரசு நிறுவங்களுக்கு சென்று பழக்கம் இல்லாதவர்களாக இருக்கின்றனர், பெரும்பாலான மாணவர்களின் தந்தைகள் வெளி நாட்டில் இருப்பதால் பெண்களே இந்த வேலையை செய்ய வேண்டி உள்ளது, அல்லது அடுத்த ஆண்களின் துனையை நாட வேண்டி உள்ளது இதனாலேயே பலர் அரசிடம் இருந்துகிடைக்கும் சிறிய அளவிளான கல்வி தொகையையும் பெருவதற்க்கு முயற்சிப்பதில்லை.

தீர்வு என்ன?

தமிழகத்தில் லட்சக்காணக்கான முஸ்லீம் மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர், அனைவருக்கும் நாமே நேரடியாக சென்று கல்வி உதவி வாங்கி தருவது என்பது நடைமுறை சாத்தியமில்லை, எனவே நமது முஸ்லீம் சமுதாயத்திற்க்கு நாம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எவ்வாறு அரசிடம் இருந்து கல்வி உதவி பெருவது என்பதை விளக்க வேண்டும், அவர்களே தானாக சென்று கல்வி உதவி பெரும் நிலையை ஏற்படுத்த வேண்டும், இதைதான் தற்போது TNTJ மாணவரணி செய்து கொண்டு இருக்கின்றது,

கல்வி உதவி பெறுவது சம்மந்தமான அனைத்து தகவல்களையும் மக்களுக்கு விளக்கும் வண்ணம் இதுவரை தமிழகத்தில் 130 இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி மக்களுக்கு தெளிவு படுத்தி உள்ளோம். இருந்தும் இந்த விஷயத்தில் மக்கள் நம்மை பயன்படுத்திகொள்வது குறைவாகவே உள்ளது. இருந்தாலும் நமது பணியை தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கின்றோம் (பணி தொடர அல்லாஹ்விடம் துவா செய்யவும்). கல்வி உதவி சம்மந்தமான அனைத்து தகவலையும் தொடர்ந்து நமது ஊடகத்தில் (உணர்வு வார இதழ், www.tntj.net இணையதளம்) வெளியிட்டுகொண்டு இருக்கின்றோம். நம்மை தொடர்புகொள்பவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் நம்மால் இயன்றவரை தந்துகொண்டு இருக்கின்றோம்.

அரசு வழங்கிவருவதாக சொல்லும் வட்டியில்லா கடன் திட்டம் சிக்கல் இல்லாமல் நடைமுறையில் கிடைக்கப்பெற்றால் நிச்சயம் இந்த சமூகம் கல்வியில் முன்னேறும். ஆனால் இந்த வட்டியில் கடன் திட்டம் நடைமுறையில் இருப்பதாக அரசு சொன்னாலும் முஸ்லீம் மாணவர்களுக்கு அது எட்டா கனியாகவே உள்ளது.

ஆக்கம்

S.சித்தீக்.M.Tech


கல்வி உதவி சம்மதமான முக்கியமான இணைய தளங்கள்

தமிழக அரசின் தேர்வுகளுக்குகான இணையம்
www.dge.tn.gov.in/

தேசிய திறன் தேர்வு இணையம்
www.ncert.nic.in

மத்திய அரசின் சிறுபாண்மை நலதுறை
www.minorityaffairs.gov.in

கல்வி உதவிக்கான மத்திய அரசின் இணையதளம்
www.educationsupport.nic.in

பிற கல்வி உதவி சம்மந்தமான தகவல் பெற
www.scholarshipsinindia.com

மேலும் கீழ்க்கானும் தமிழக அரசின் அமைப்புகள் கல்வி உதவி , இலவச பயிற்சி போன்றவற்றை சிறுபாண்மை மாணவர்களுக்கு அளித்து வருகின்றன.

1.சிறுபாண்மையினர் நல இயக்கம்
எண்:807, அண்ணாசலை, சென்னை-600002

2.தமிழ்நாடு சிறுபாண்மையினர் பொருளாதரா வளர்ச்சி கழகம்
எண்:807, அண்ணாசாலை, 5வது மாடி, சென்னை-600002

Monday, February 8, 2010

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?


கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.

எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.

நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,

இன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.

உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.

“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243

தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.

திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)

மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை பார்க்கின்றனர்.

விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.

பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.

செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.

செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.

தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.

ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.

ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.

பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.

இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.

இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது.

என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!

ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை என்ற செய்தியை நிறைய கேள்விபட்டிருப்போம்.

மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர்.

பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.

ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?

தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.

இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை” அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு தெரியும்.

இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக் கொண்டிருப்பதினால் தான்.

இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.

ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.

அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.

அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!

சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!

பிப்ரவரி 14 ம் டிசம்பர் 1 நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காகசெய்யப்ட டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை). அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல் கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.


-தொகுப்பு:

எஸ்.எம் அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி