*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*⛱ மறுமையின்⛱*
⤵
*⛱ சாட்சிகள் ⛱*
*✍🏻...தொடர் ➖0⃣4⃣*
*☄சாட்சியாகும்*
*மலக்குகளும்*
*பதிவேடுகளும் [ 01 ]*
*🏮🍂நம்மைக் கண்காணிப்பது நமது காரியங்களைப் பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகளைச் செய்வதற்கு மலக்குகளை அல்லாஹ் படைத்திருக்கிறான்.* குறிப்பாக, ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது செயல்களைப் பதிவு செய்வதற்கென்று மலக்குகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். *இவ்வாறு, நமக்காக நியமிக்கப்பட்டுள்ள அந்த மலக்குகள் அனைத்துத் தருணங்களிலும் நம்மை கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நமது செயல்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். நமது செயல்களுக்குரிய ஏடுகளும் அவற்றை எழுதிய மலக்குகளும் மறுமை நாளில் நமது காரியங்களுக்கு முக்கியமான சாட்சிகளாக இருப்பார்கள்.* இந்த விளக்கத்தை பின்வரும் வரிகளின் வாயிலாக விளங்கலாம்.
_*🍃உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள்.*_
*📖(அல்குர்ஆன் 82:10,11,12)📖*
_*🍃மனிதர்களுக்கு துன்பம் ஏற்பட்ட பின் அருளை நாம் அவர்களுக்கு அனுபவிக்கச் செய்தால் நமது சான்றுகளில் அவர்கள் சூழ்ச்சி செய்கின்றனர். “அல்லாஹ் விரைந்து சூழ்ச்சி செய்பவன்” என (முஹம்மதே!) கூறுவீராக! நமது தூதர்கள் நீங்கள் செய்யும் சூழ்ச்சியைப் பதிவு செய்கின்றனர்.*_
*📖 (அல்குர்ஆன் 10:21) 📖*
_*🍃மனிதனைப் படைத்தோம். அவனது மனம் எதை எண்ணுகிறது என்பதையும் அறிவோம். நாம் அவனுக்குப் பிடரி நரம்பை விட மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.*_
*📖 (அல்குர்ஆன் 50:16-18) 📖*
_*🍃அவர்களது இரகசியத்தையும், அதை விட ரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா❓ அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர்.*_
*📖 (அல்குர்ஆன் 43:80) 📖*
_*🍃வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.*_
*📖 (அல்குர்ஆன் 50:17,18) 📖*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment