*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*✍🏼...நன்மைகளை வாரி*
⤵
*வழங்கும் தொழுகை*
*✍🏼...தொடர் [ 19 ]*
*☄தொழுகைக்கு முன்கூட்டியே*
*வருவதன் சிறப்புகள் { 03 }*
*☄முன்கூட்டி வருவது*
*நிதானத்தைப் பெற்றுத் தரும்*
*🏮🍂தொழுகைக்கு மிக மிக முக்கியமானது நிதானமாகும். இதனை நபியவர்கள் மிகவும் வலியுறுத்தியுள்ளார்கள்.*
*أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ فَلاَ تَأْتُوهَا تَسْعَوْنَ وَأْتُوهَا تَمْشُونَ وَعَلَيْكُمُ السَّكِينَةُ فَمَا أَدْرَكْتُمْ فَصَلُّوا وَمَا فَاتَكُمْ فَأَتِمُّوا "*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் தொழுகைக்கு ஓடிச் செல்லாதீர்கள்; நடந்தே செல்லுங்கள்; நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்குக் கிடைத்த (ரக்அத்)தை (இமாமுடன்) தொழுங்கள்; தவறிப்போனதை (பின்னர் எழுந்து) நிறைவு செய்துகொள்ளுங்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூஹுரைரா (ரலி),*
*📚 நூல்: முஸ்லிம் (1053) 📚*
*🏮🍂தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் நாம் அமைதியாகவும், நிதானமாகவும் தொழுகின்ற பாக்கியத்தைப் பெறுகின்றோம்.* சில சகோதரர்கள் தாமதமாக வருவதால் இமாம் ஜமாஅத்தை அடைவதற்காக வேக, வேகமாக உளூச் செய்து விட்டு மூச்சிறைக்க ஓடிவந்து தொழுகையில் இணைகின்றனர். *இது தொழுகைக்கு இருக்க வேண்டிய அமைதியையும், நிதானத்தையும் இல்லாமல் ஆக்கி விடுகின்றது. தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் இதுபோன்ற நிலைகளை விட்டும் நாம் தவிர்ந்து கொள்ளலாம்.*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄முன்கூட்டி வருவதால் கிடைக்கும் பாக்கியங்களின் தொகுப்பு☄*
*☄நபியவர்கள் பாங்கு சொன்னவுடன் வீட்டிலிருந்து தொழுகைக்குப் புறப்பட்டுவிடுவார்கள் என்ற ஹதீஸின் மூலம் இது மிகச் சிறந்த நற்செயல் என்பதை நாம் அறிகிறோம்.*
*☄தொழுகைக்கு ஆரம்ப வேளையில் வருவதன் நன்மைகளை மக்கள் அறிந்தால் அந்த நன்மைகளை அடைவதற்குப் போட்டியிடுவார்கள்.*
*☄தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் பள்ளிவாசலோடு தொடர்பு கொண்ட உள்ளத்தைப் பெற்றவராகிவிடுகிறார். இதன் காரணமாக மறுமையில் அர்ஷின் நிழலைப் பெறும் பாக்கியம் கிடைக்கிறது.*
*☄தொழுகையில் நிதானம், அமைதி மிகவும் அவசியமாகும். முன்கூட்டியே வருவதன் மூலம் இதனை நாம் அடைந்து கொள்ளலாம்.*
*🏮🍂தொழுகைக்கு முன்கூட்டியே வருவதால் இன்னும் ஏராளமான பாக்கியங்களை பெறமுடியும். அவற்றை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து விரிவாகக் காண்போம்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜
⤵⤵⤵
✍🏼...
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment