பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, November 27, 2019

சொர்க்கத்தில் ஓரு வசந்த மாளிகை

சொர்க்கத்தில் ஓரு வசந்த மாளிகை

இஸ்லாமியர்களின் பார்வையில் இவ்வுலகம் விரைவில் அழியக்கூடியதும், நிலையில்லாததுமாகும். ஒவ்வொரு இஸ்லாமியர்களும் இந்த உலகை, உலக வாழ்க்கையை இவ்வாறே மதிப்பீடு செய்ய வேண்டும் என இறைவனும், இறைத்தூதரும் நமக்கு கற்றுத்தருகிறார்கள்.

நிலையில்லா இவ்வுலகில் மனிதர்கள் பல்வேறு ஆசைகளுடனும், கனவுகளுடனும் வாழ்கிறார்கள். பலர் தங்கள் ஆசையை அடைவதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொள்ளவும் செய்கிறார்கள்.

அவ்வாறு ஒவ்வொரு மனிதர்களும் விரும்பும் ஆசைகளுள் நமக்கென ஒரு இல்லத்தை எழுப்ப வேண்டும் என்பதும் ஒன்று என்பதை நாம் நன்கறிவோம்.

பலரும் எப்படியாவது இந்த உலகில் ஒரு (வீட்டை) மாளிகையை கட்டிவிட வேண்டும் என்ற வேட்கையோடு அலைகின்றனர். இந்த எண்ணத்தை நிறைவேற்றிட எண்ணிலடங்கா துன்பத்தை அடைகின்றனர்.

பலர் வெளிநாடுகளில் அவதிப்படுவதற்கான காரணங்களில் இந்த இலட்சியமும் ஒன்றே.

இவ்வுலகில் நமக்கு சொந்தமாக ஒரு மாளிகை இருப்பதின் மகிமையை நாம் உணர்வதாலே அதற்காக எதையும் சந்திக்க, சகிக்க தயாராக உள்ளோம். மார்க்க விதிகளை மீறாமல் ஒருவர் இவ்வாறு ஒரு இல்லத்தை எழுப்புகிறார் என்றால் அதை குற்றம் கூற முடியாது.

அழியும் இந்த உலகிலேயே நமக்கு சொந்தமாக ஒரு மாளிகை வேண்டும் எனில் நாம் என்றென்றும் தங்கக்கூடிய, நிலையான மறுமையில் நமக்கென்று ஒரு மாளிகை வேண்டாமா? என்று சிந்திக்க வேண்டும்.

இவ்வுலகில் ஒருவர் சொந்தவீடு இல்லாமலேயே வாழ்ந்து, மரணித்தும் விட்டார் எனில் அது ஒரு பிரச்சனை இல்லை. ஏனெனில் நாம் இங்கேயே நிரந்தமாக தங்கப்போவதில்லை. ஆனால் மறுமையில் நமக்கென ஒரு மாளிகை இல்லையெனில் அது இவ்வுலகில் ஏற்படும் இழப்பை விட பெரும் இழப்பே.

எனவே இவ்வுலகில் ஒரு இல்லத்தை கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவதை விட சற்று அதிகமாகவே, இல்லை மிகவும் அதிகமாகவே மறுமையில் ஒரு மாளிகையை எழுப்ப வேண்டும் என ஆசைப்பட வேண்டும்.

இவ்வுலகில் வீட்டை கட்டுவதற்காக எடுக்கும் முயற்சிகளை காட்டிலும் பன்மடங்கு அதிகமாக மறுமையின் மாளிகைக்காக முயற்சிக்க வேண்டும். ஏனெனில் அது என்ன சாதாரண மாளிகையா?

சிறப்பு மாளிகை

3256- حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَرَاءَيُونَ أَهْلَ الْغُرَفِ مِنْ فَوْقِهِمْ كَمَا يَتَرَاءَيُونَ الْكَوْكَبَ الدُّرِّيَّ الْغَابِرَ فِي الأُفُقِ مِنَ الْمَشْرِقِ ، أَوِ الْمَغْرِبِ لِتَفَاضُلِ مَا بَيْنَهُمْ قَالُوا : يَا رَسُولَ اللهِ تِلْكَ مَنَازِلُ الأَنْبِيَاءِ لاَ يَبْلُغُهَا غَيْرُهُمْ قَالَ بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ رِجَالٌ آمَنُوا بِاللَّهِ وَصَدَّقُوا الْمُرْسَلِينَ.

“சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகல் வசிப்பவர்களை, அடிவானில் கிழக்கிருந்தோ மேற்கிருந்தோ பயணிக்கின்ற ஒயுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள். (அந்தஸ்தில்) தமக்கும் அவர்களுக்கு மிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு (ஏக்கம் கொண்டு தான்) அப்படிப் பார்ப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இதைக் கேட்ட) நபித் தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவை நபிமார்கள் தங்குமிடங்கள் தாமே? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா?” என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “இல்லை. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! அ(ங்கே தங்குப)வர்கள் அல்லாஹ்வின் மீது (உறுதியான) நம்பிக்கை கொண்டு இறைத் தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக் கொண்டவர்களே ஆவர்” என பதிலத்தார்கள்.

அறி ; அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
நூல் : புகாரி 3256

மறுமை நாளில் சொர்க்கவாசிகளுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு இருக்கும் என்பதை பல்வேறு நபிமொழியிலிருந்து விளங்கி கொள்ள முடிகிறது. மேற்கண்ட செய்தியும் அதையே உறுதிப்படுத்துகின்றது. மேலும் சிலருக்கு சொர்க்கத்தில் சிறப்பு மாளிகை, அறை அளிக்கப்பட்டிருக்கும் எனவும், அதை ஏனையோர் ஆர்வத்துடன் பார்ப்பார்கள் எனவும் மேற்கண்ட செய்தி கூறுகிறது.

அல்லாஹ் மறுமையில் தரவிருக்கும் மாளிகை சாதாரண மாளிகையல்ல. அது சிறப்பு மாளிகை என்பதை இச்செய்தியிருந்து அறியலாம்.

உயர்ந்த சொர்க்கவாசிகளுக்கு இந்த மாளிகையை வழங்கி, அவர்களை தனி மரியாதயுடன் கௌரவிக்கின்றான்.

இவ்வுலகில் சில நிகழ்ச்சிகளின் போது வி.ஐ.பி க்கள் உட்கார உயர்ரக சீட், உற்சாக வரவேற்பு என தனி மரியாதை அளிக்கப்படுவதை ஏனையோர் ஆர்வத்துடன் பார்த்து, அவ்வாறு நாமும் தனிமரியாதை செய்யப்படமாட்டோமா என ஏங்குகின்றனர். இவ்வுலகில் சாதாரண மனிதர்களால் தனிமரியாதை செய்யப்படுவதைவிட அகிலத்தையும் படைத்தாளும் இறைவனால் கௌரவிக்கப்படுவதே மிகவும் சிறந்த காரியம்.

முத்து மாளிகை

நாம் ஒரு வீட்டை செங்கல், மணல் ,சிமெண்ட், ஜல்லிபோன்ற வைகளை வைத்தே கட்டுகிறோம். யாரேனும் மிக அரிதாக முழுவதும் டைல்ஸ் பதித்துள்ள வீட்டை கட்டியிருப்பதை கண்டால் அதையே வியப்புடன், ஆசையுடன் பாக்கின்றோம். மறுமையில் இறைவன் வழங்கவிருக்கும் வீடு இவ்வுலகில் உள்ள வீட்டை போன்றதல்ல. முழுக்க முழுக்க முத்துக்களால் ஆன முத்து மாளிகை அது. அதோடு மனிதனின் ஆசைக்கேற்றவாறு கண்கவரும் வடிவமைப்பும் அதில் செய்யப்பட்டிருக்கும்.

7338 – وَحَدَّثَنِى أَبُو غَسَّانَ الْمِسْمَعِىُّ حَدَّثَنَا أَبُو عَبْدِ الصَّمَدِ حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِىُّ عَنْ أَبِى بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
« فِى الْجَنَّةِ خَيْمَةٌ مِنْ لُؤْلُؤَةٍ مُجَوَّفَةٍ عَرْضُهَا سِتُّونَ مِيلاً فِى كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ مَا يَرَوْنَ الآخَرِينَ يَطُوفُ عَلَيْهِمُ الْمُؤْمِنُ ».

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளருக்குச் சொர்க்கத்தில் ஒரு கூடாரம் உண்டு. அது நடுவில் துளையுள்ள (பிரமாண்டமான) முத்தால் ஆனதாகும். அதன் உயரம் அறுபது மைல்களாகும். அதில் இறை நம்பிக்கையாளருக்குத் துணைவியர் பலர் இருப்பர். அவர்களிடம் இறைநம்பிக்கையாளர் சுற்றி வருவார்.
அவர்களில் ஒருவர் மற்றவரைப் பார்க்க முடியாது.

அறி : அபூமூசா அல்அஷ்அரீ (ரலி),

நூல் : முஸ்லிம் 5458

இப்படி ஒரு மாளிகையை எவ்வளவு பெரிய பணக்காரனாலும்கட்ட முடியாது என்பதை திட்டவட்டமாக கூறலாம். மறுமையில் உள்ள அம்மாளிகையின் உயரம் அறுபது மைல் என நபிகளார் கூறியுள்ளார்கள்.

இவ்வுலகில் ஒரு மைல் நீளத்தில் உள்ள கட்டடமே மக்களால் அதிசயத்தோடு பார்க்கப்படுகிறது என்றால் அறுபது மைல் நீளமுள்ள மாளிகையை கற்பனை செய்து பாருங்கள். சந்தேகமற இது ஒரு வசந்த மாளிகையே.

கீழே ஆறுகள்

மனிதனையும், தண்ணீரையும் பிரித்து பார்க்கவே முடியாது என்கிற அளவிற்கு மனிதனின் வாழ்க்கையில் தண்ணீர் பெரும் பங்கு வகிக்கின்றது. மனிதன் உயிர் வாழ அத்தியாவசிய தேவைகளில் தண்ணீரும் ஒன்று.

அது போல ஆறு, அருவி போன்றவைகளும் மனிதனுக்கு மிகுந்த விருப்பத்திற்குரியதாக இருக்கிறது. இதில் குளிப்பது ஒரு வித சந்தோஷத்தை அளிப்பதனாலே பல ஆயிரங்களை செலவு செய்து, வெளியூருக்கும், வெளிநாட்டுக்கும் பயணம் புறப்பட்டேனும் இவற்றில் குளிக்க மனிதன் விரும்புகிறான்.

இறைவன் தரும் மாளிகையில் இவற்றிருக்கும் பஞ்சமில்லை. மாளிகையின் கீழே வசதியாக பல ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் என இறைவன் தெரிவிக்கிறான்.

لٰـكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّنْ فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ ۙ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕوَعْدَ اللّٰهِ‌ ؕ لَا يُخْلِفُ اللّٰهُ الْمِيْعَادَ‏
மாறாக, தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.

(அல்குர்ஆன் 39:20)

தூய்மையான வசிப்பிடம்

என்னதான் பெரிய மாளிகையாக இருந்தாலும் அது தூய்மையாக இல்லையெனில் பார்ப்பதற்கு களையற்று காணப்படும். அதில் நாம் தங்குவது மன மகிழ்ச்சியை தராது. எனவே இறைவன் நமக்களிக்கும் மாளிகையை தூய்மையானதாகவே தருகிறான்.

وَعَدَ اللّٰهُ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا وَمَسٰكِنَ طَيِّبَةً فِىْ جَنّٰتِ عَدْنٍ‌ ؕ وَرِضْوَانٌ مِّنَ اللّٰهِ اَكْبَرُ‌ ؕ ذٰ لِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيْمُ
நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், பெண்களுக்கும் சொர்க்கச் சோலைகளை அல்லாஹ் வாக்களித்துள்ளான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். நிலையான சொர்க்கச் சோலைகளில் தூய்மையான வசிப்பிடங்களும் உள்ளன. அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன் 9:72)

ஹூருல் ஈன்’ எனும் கண்ணழகியர்

சொர்க்கத்தில் உள்ள அந்த மாளிகையில் இது போன்ற இன்பங்களை மட்டும் தருவதோடு நின்றுவிடாமல் ஹூருல் ஈன்’ எனும் பெண்களையும் இறைவன் அளிக்கின்றான்.

482 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِى بُكَيْرٍ حَدَّثَنَا زُهَيْرُ بْنُ مُحَمَّدٍ عَنْ سُهَيْلِ بْنِ أَبِى صَالِحٍ عَنِ النُّعْمَانِ بْنِ أَبِى عَيَّاشٍ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ
« إِنَّ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً رَجُلٌ صَرَفَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ قِبَلَ الْجَنَّةِ وَمَثَّلَ لَهُ شَجَرَةً ذَاتَ ظِلٍّ فَقَالَ أَىْ رَبِّ قَدِّمْنِى إِلَى هَذِهِ الشَّجَرَةِ أَكُونُ فِى ظِلِّهَا ». وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ وَلَمْ يُذْكُرْ « فَيَقُولُ يَا ابْنَ آدَمَ مَا يَصْرِينِى مِنْكَ ». إِلَى آخِرِ الْحَدِيثِ وَزَادَ فِيهِ « وَيُذَكِّرُهُ اللَّهُ سَلْ كَذَا وَكَذَا فَإِذَا انْقَطَعَتْ بِهِ الأَمَانِىُّ قَالَ اللَّهُ هُوَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ – قَالَ – ثُمَّ يَدْخُلُ بَيْتَهُ فَتَدْخُلُ عَلَيْهِ زَوْجَتَاهُ مِنَ الْحُورِ الْعِينِ فَتَقُولاَنِ الْحَمْدُ لِلَّهِ الَّذِى أَحْيَاكَ لَنَا وَأَحْيَانَا لَكَ – قَالَ – فَيَقُولُ مَا أُعْطِىَ أَحَدٌ مِثْلَ مَا أُعْطِيتُ ».

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: சொர்க்கவாசிகளில் மிகக் குறைந்த தரமுடைய மனிதர் யாரெனில், அவரது முகத்தை அல்லாஹ் நரகத்திருந்து சொர்க்கத்தின் பக்கம் திருப்பிவிடுவான்; மேலும், நிழல் தரும் மரம் ஒன்றை அவருக்குக் காட்டுவான். அப்போது அவர், “என் இறைவா! இந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டுசெல்வாயாக! நான் அதன் நிழல் இருக்க வேண்டும்” என்பார்.

பிறகு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பில் உள்ளவாறே காணப்படுகிறது.

ஆனால், “மனிதா! ஏன் என்னிடம் கோருவதை நிறுத்திக்கொண்டாய்?” என்பதிருந்து இறுதிவரையுள்ள மற்ற தகவல்கள் இதில் இடம்பெறவில்லை. “இன்னின்னதை நீ கேட்கலாம்!” என்று அவருக்கு அல்லாஹ் நினைவூட்டுவான். (அவ்வாறே அவர் ஆசைப்பட்டுக் கேட்பார்.) இறுதியில் ஆசைகள் அனைத்தும் அடங்கிவிடும்போது, இதுவும் உனக்குக் கிடைக்கும்; இதைப் போன்று இன்னும் பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும்’ என்று இறைவன் கூறுவான்” என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

பிறகு அந்த மனிதர் (சொர்க்கத்திலுள்ள) தமது இல்லத்திற்குள் நுழைவார். அப்போது அவருடைய ஹூருல் ஈன்’ எனும் (கண்ணழகுக் கன்னியரான) சொர்க்கத் துணைவியர் இருவர் அவரிடம் வந்து, “எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவன்தான் எங்களுக்காக உங்களையும், உங்களுக்காக எங்களையும் உயிர்ப்பித்தான்” என்று கூறுவார்கள். அப்போது அந்த மனிதர் “எனக்கு வழங்கப்பட்டதைப் போன்று வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை” என்று (மகிழ்ந்து) கூறுவார்.

அறி ; நுஅமான் பின் அபீஅய்யாஷ்,

நூல் : முஸ்லிம் 311

மிகக் குறைந்த தரமுடைய சொர்க்கவாசிகளின் நிலை இந்த ஹதீஸில் விவரிக்கப்படுகின்றது. அவர்களுக்கு அந்த மாளிகையில் ஹூருல் ஈன்’ எனும் கண்ணழகியர்கள் வழங்கப்படுவார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

ஒருவனுக்கு பெரும் மாளிகையிருந்து அதில் அவன் தனியே இருக்க நேர்ந்தால் அதை விட கொடுமை வேறொன்றும் இல்லை எனலாம். எனவே தான் வெறும் மாளிகையை மட்டும் தருவதோடு நிற்காமல் அதில் நாம் இன்பமுற தக்க துணைகளையும் இறைவன் ஏற்படுத்தி தருகிறான். கண்ணழகியர்களுடன் மேலும் வழங்கப்படுகின்ற இன்பங்களை அறிகிற போது அது இன்பங்கள் நிறைந்த இன்ப மாளிகை என்பதை அறியலாம்.

மறுமையில் இறைவன் தரவிருக்கும் மாளிகை இவ்வளவு இன்பங்களும், வசதிகளும் நிறைந்த மாளிகை என்பதை அறிந்துவிட்ட போது அதை பெறுவதற்காக நாம் சில முயற்சிளை மேற்கொள்ள வேண்டும்.

தூய்மையான துணைவியர்

وَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَنُدْخِلُهُمْ جَنّٰتٍ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَاۤ اَبَدًا‌ ؕ لَـهُمْ فِيْهَاۤ اَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَّنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيْلًا‏
நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிவோரைச் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அதில் அவர்களுக்குத் தூய்மையான துணைகளும் உள்ளனர். மிகச்சிறந்த நிழலில் அவர்களை நுழையச் செய்வோம்.

(அல்குர்ஆன் 4:57)

كَاَنَّهُنَّ الْيَاقُوْتُ وَالْمَرْجَانُ‌ۚ‏
அவர்கள் வெண் முத்தையும், பவளத்தையும் போல் இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 55:58)

فِيْهِنَّ خَيْرٰتٌ حِسَانٌ‌ۚ‏
அங்கேயும் சிறந்த அழகிகள் இருப்பார்கள்.
(அல்குர்ஆன் 55:70)

فَجَعَلْنٰهُنَّ اَبْكَارًاۙ‏
عُرُبًا اَتْرَابًاۙ‏

(அப்பெண்களை) நாமே அழகுறப் படைத்தோம். அவர்களைக் கன்னியராகவும் ஒத்த வயதினராகவும், நேசம் மிக்கோராகவும் ஆக்கினோம்.

(அல்குர்ஆன் 56:36,37)

6568 – وَقَالَ غَدْوَةٌ فِي سَبِيلِ اللهِ ، أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنَ الدَّنْيَا وَمَا فِيهَا وَلَقَابُ قَوْسِ أَحَدِكُمْ ، أَوْ مَوْضِعُ قَدَمٍ مِنَ الْجَنَّةِ خَيْرٌ مِنَ الدَّنْيَا وَمَا فِيهَا وَ
لَوْ أَنَّ امْرَأَةً مِنْ نِسَاءِ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَتْ إِلَى الأَرْضِ لأَضَاءَتْ مَا بَيْنَهُمَا وَلَمَلأَتْ مَا بَيْنَهُمَا رِيحًا وَلَنَصِيفُهَا ، يَعْنِي الْخِمَارَ – خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا

சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால், வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள பகுதிகளெல்லாம் ஒரும். மேலும், அப் பகுதிகள் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் முகத்திரை (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும்விட மேலானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறி : அனஸ் (ரலி),

நூல் : புகாரி (6568)

பள்ளிவாசல் கட்டுதல்

மறுமையில் தனக்கென்று ஒரு மாளிகையை எழுப்ப விரும்புபவர்களுக்கு பல வழிமுறைகளை நபிகளார் கற்றுத்தந்துள்ளார்கள். அவற்றில் பள்ளிவாசல் கட்டுதலும் ஒன்றாகும். இவ்வுலகில் இறைவனுக்காக ஒரு இல்லத்தை எழுப்ப உதவினால் மறுமையில் நமக்காக ஒரு மாளிகையை இறைவன் எழுப்புகிறான்.

450- حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ ، حَدَّثَنِي ابْنُ وَهْبٍ ، أَخْبَرَنِي عَمْرٌو ، أَنَّ بُكَيْرًا حَدَّثَهُ أَنَّ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ عُبَيْدَ اللهِ الْخَوْلاَنِيَّ أَنَّهُ سَمِعَ عُثْمَانَ بْنَ عَفَّانَ يَقُولُ عِنْدَ قَوْلِ النَّاسِ فِيهِ حِينَ بَنَى مَسْجِدَ الرَّسُولِ صلى الله عليه وسلم إِنَّكُمْ أَكْثَرْتُمْ وَإِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ :
مَنْ بَنَى مَسْجِدًا- قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ – يَبْتَغِي بِهِ وَجْهَ اللهِ بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ.

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டிய (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலை (விரிவுபடுத்தி)க் கட்ட எண்ணியபோது அது குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது உஸ்மான் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நீங்கள் மிக அதிகமாகவே பேசிவிட்டீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் யார் அல்லாஹ்வுக்காகப் பள்ளிவாசல் ஒன்றைக் கட்டுகிறாரோ அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான்’ என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறி : உபைதுல்லாஹ் அல்கவ்லானீ,

நூல்கள் : புகாரி 450, முஸ்லிம் 926

பள்ளிவாசல் பணி என்று வரும்போது கணக்கு பார்க்காமல் நம்மால் முடிந்த பொருளாதாரத்தை அள்ளிவழங்கிட முன்வர வேண்டும். மறுமையில் நமக்குரிய மாளிகை எழுப்பப்பட நாம் வழங்கும் முன்பணம் என்று எண்ணி இச்செயல் அதிகம் ஈடுபாடு கொள்ளவேண்டும்.

உபரியான தொழுகைகள்

ஒரு நாளைக்கு கடமையான தொழுகைகள் தவிர உபரியாக 12 ரக்அத்துகள் தொழுபவருக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகையை இறைவன் தருகிறான் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். அவை எந்த ரகஅத்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ் இல்லை. எனவே, சுன்னத்தான தொழுகைகளில் 12 ரகஅத்தை நாமே தேர்வு செய்து கொள்ளலாம்.

1727 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ – يَعْنِى سُلَيْمَانَ بْنَ حَيَّانَ – عَنْ دَاوُدَ بْنِ أَبِى هِنْدٍ عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ قَالَ حَدَّثَنِى عَنْبَسَةُ بْنُ أَبِى سُفْيَانَ فِى مَرَضِهِ الَّذِى مَاتَ فِيهِ بِحَدِيثٍ يُتَسَارُّ إِلَيْهِ قَالَ سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ
« مَنْ صَلَّى اثْنَتَىْ عَشْرَةَ رَكْعَةً فِى يَوْمٍ وَلَيْلَةٍ بُنِىَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِى الْجَنَّةِ ». قَالَتْ أُمُّ حَبِيبَةَ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم-. وَقَالَ عَنْبَسَةُ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது. உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை.

அறி : உம்மு ஹபீபா (ரலி),

நூல் : முஸ்லிம் 1319

கடமையான தொழுகைகளிலேயே அலட்சியமாக இருக்கும் நாம் இந்த செய்தியை எப்போதும் நினைவில் நிறுத்தி, கடமையான வணக்கங்களில் கவனம் செலுத்தவதோடு உபரியான தொழுகைகளிலும் ஆர்வம் செலுத்த வேண்டும்.

பள்ளிவாசலுடன் தொடர்பு

இறைவனை வணங்குவதற்காக பள்ளிவாசலுக்கு வரும்போதெல்லாம் மறுமையில் இறைவன் நமக்கான மாளிகையை தயார் செய்கிறான் என நபிகள் நாயகம் தெரிவித்துள்ளார்கள்.

662- حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللهِ ، قَالَ : حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ : أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مُطَرِّفٍ ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :
مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ وَرَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ نُزُلَهُ مِنَ الْجَنَّةِ كُلَّمَا غَدَا ، أَوْ رَاحَ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் பள்வாசலுக்கு (வணங்குவதற்காகச்) சென்று வந்தால் அவர் ஒவ்வொரு முறை சென்று வரும்போதும் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் அவருடைய மாகையை ஆயத்தப்படுத்துகிறான்.

அறி : அபூஹரைரா (ரலி),

நூல் : புகாரி 662

பள்ளிவாசலுடன் தொடர்பை அதிகப்படுத்திக் கொள்வது ஏராளமான நன்மைகளை பெற்றுத்தருவதோடு மறுமை மாளிகை நம்வசமாகுவதற்கும் காரணமாக திகழ்கிறது.

இறைவனை அஞ்சுதல்

உலகில் வாழும் போது இறையச்சத்துடன் நடந்து கொள்பவர்களுக்கு மறுமையில் உயர்ந்த மாளிகைகளை தருவதாக இறைவன் வாக்களிக் கின்றான்.

لٰـكِنِ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّنْ فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ ۙ تَجْرِىْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕوَعْدَ اللّٰهِ‌ ؕ لَا يُخْلِفُ اللّٰهُ الْمِيْعَادَ‏
தமது இறைவனை அஞ்சியோருக்கு மாளிகைகளுக்கு மேல் எழுப்பப்பட்ட மாளிகைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இது அல்லாஹ்வின் வாக்குறுதி. அல்லாஹ் வாக்குறுதியை மீற மாட்டான்.

(அல்குர்ஆன் 39:20)

தீமைகள் நம்மை அண்டுவதற்கு இறையச்சம், இறை பயம் நம்மிடம் இல்லாததே காரணம் என்பதை சொல்புரியவேண்டியதில்லை. நம்மை உண்மை முஸ்லிமாக மாற்றக்கூடிய இறை பயத்தை இறைவனிடம் வேண்டிட வேண்டும்.

கவனிக்க …

இவ்வுலகில் ஒரு வீட்டை கட்டிமுடிக்க பெரும் சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. இப்போதும் அது பலருக்கு பகல் கனவாகவே தோன்றுகிறது. ஆனால் மறுமையில் ஒரு இல்லத்தை, மாளிகையை எழுப்ப இது போன்ற சிரமங்களை அனுபவிக்க வேண்டியதில்லை என்பதை மேற்கண்ட தகவல்களிருந்து அறிகிறோம்.

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ اٰمَنُوْا امْرَاَتَ فِرْعَوْنَ‌ۘ اِذْ قَالَتْ رَبِّ ابْنِ لِىْ عِنْدَكَ بَيْتًا فِى الْجَـنَّةِ وَنَجِّنِىْ مِنْ فِرْعَوْنَ وَعَمَلِهٖ وَنَجِّنِىْ مِنَ الْقَوْمِ الظّٰلِمِيْنَۙ‏
என் இறைவா சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக என்று ஃபிர்அவ்னின் மனைவி இறைவனிடம் பிரார்த்தனை புரிந்ததை அனைத்து முஃமின்களுக்கும் இறைவன் உதாரணமாக கூறுகிறான்.

(அல்குர்ஆன் 66:11)

நாமும் இறைவனிடம் பிரார்த்தனை புரிவதோடு இறைவனும் இறைத் தூதரும் கற்றுத்தந்துள்ள மேற்கண்ட எளிய செயல்களை செய்தாலே அந்த மாளிகை நம்வசமாகும் என்பதை இந்நேரத்தில் கவனிக்க வேண்டும். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி நிலையான மறுமையின் வசந்த மாளிகைக்கு சொந்தக்காரராக மாறுவோமாக.

No comments:

Post a Comment