பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, November 5, 2019

துஆக்களின் தொகுப்பு - 5

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹* 


*📚📚📚துஆக்களின் தொகுப்பு📚📚📚*

 *பாகம் 5* 

 *👉 👉 👉 துஆக்களின் தொகுப்பு என்ற நூலில் இருந்து உங்கள் பார்வைக்கு 👇👇👇*

 *இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்*

 *தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன்* 

بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா

 *இதன் பொருள் :* 

அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து எங்களைக் காப்பாயாக! எங்களுக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.

 *ஆதாரம்: புகாரி 141, 3271, 6388, 7396* 

அல்லது

بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنِيَ الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا

பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னியஷ் ஷை(த்)தான வஜன்னிபிஷ் ஷை(த்)தான மாரஸக்(த்)தனா

 *இதன் பொருள் :* 

அல்லாஹ்வின் பெயரால். இறைவா! ஷைத்தானிடமிருந்து என்னைக் காப்பாயாக. எனக்கு நீ வழங்கும் சந்ததிகளையும் ஷைத்தானிடமிருந்து காப்பாயாக.

 *ஆதாரம்: புகாரி 5165, 3283* 

 *எல்லா நிலையிலும் கூற வேண்டியவை* 

பாத்திரங்களை மூடும் போதும், கதவைச் சாத்தும் போதும், விளக்கை அணைக்கும் போதும், ஒவ்வொரு காரியத்தைச் செய்யும் போதும்

بِسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹ்

எனக் கூற வேண்டும்.

 *ஆதாரம்: புகாரி 3280, 5623* 

 *கோபம் ஏற்படும் போது* 

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தான்

 *இதன் பொருள் :* 

ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

 *ஆதாரம்: புகாரி 3282* 

அல்லது

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

என்று கூறலாம்.

 *ஆதாரம்: புகாரி 6115* 

தீய எண்ணங்கள் ஏற்படும் போதும், மனக் குழப்பத்தின் போதும்

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

எனக் கூற வேண்டும்.

 *ஆதாரம்: புகாரி 3276* 

 *கழுதை கணைக்கும் போது* 

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

எனக் கூற வேண்டும்.

 *ஆதாரம்: புகாரி 3303* 

 *கெட்ட கனவு கண்டால்* 

மனதுக்குக் கவலை தரும் கனவுகளைக் கண்டால் இடது புறம் மூன்று தடவை துப்பிவிட்டு

أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

அவூது பி(B]ல்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்

எனக் கூற வேண்டும்.

 *ஆதாரம்: புகாரி 6995*

 *நோயாளியை விசாரிக்கச் சென்றால்* 

اَللّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَأْسِ اِشْفِ أَنْتَ الشَّافِيْ لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி முத்ஹிபல் ப(B]ஃஸி இஷ்பி[F] அன்தஷ் ஷாபீ[F] லா ஷாபி[F]ய இல்லா அன்(த்)த ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.

 *இதன் பொருள் :* 

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்குபவனே! நீ குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உன்னைத் தவிர குணப்படுத்துபவன் யாருமில்லை. நோயை அறவே மீதம் வைக்காமல் முழுமையாகக் குணப்படுத்து!

எனக் கூற வேண்டும்.

 *ஆதாரம்: புகாரி 5742* 

அல்லது

اَللّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ اِشْفِهِ وَأَنْتَ الشَّافِيْ لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

அல்லாஹும்ம ரப்ப(B]ன்னாஸி அத்ஹிபில் ப(B]ஃஸ இஷ்பி[F]ஹி வஅன்தஷ் ஷாபீ[F] லாஷிபா[F]அ இல்லா ஷிபா[F]வு(க்)க ஷிபா[F]அன் லா யுகாதிரு ஸகமா.

இறைவா! மனிதர்களின் எஜமானே! துன்பத்தை நீக்கி குணப்படுத்து. நீயே குணப்படுத்துபவன். உனது குணப்படுத்துதலைத் தவிர வேறு குணப்படுத்துதல் இல்லை. நோயை மீதம் வைக்காத வகையில் முழுமையாகக் குணப்படுத்து!

 *ஆதாரம்: புகாரி 6743* 

 *அல்லது நோயாளியின் உடலில் கையை வைத்து* 

بِاسْمِ اللهِ

பி(B]ஸ்மில்லாஹ்

என்று மூன்று தடவை கூறி விட்டு

 أَعُوذُ بِاللهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

அவூது பி(B]ல்லாஹி வகுத்ர(த்)திஹி மின் ஷர்ரி மாஅஜிது வஉஹாதிரு

என்று ஏழு தடவையும் கூற வேண்டும்.

 *இதன் பொருள்* :

நான் அஞ்சுகின்ற, நான் அடைந்திருக்கின்ற துன்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

 *ஆதாரம்: முஸ்லிம் 4082* 

அல்லது

لاَ بَأْسَ طَهُورٌ إِنْ شَاءَ اللهُ

லா ப(B]ஃஸ தஹுர் இன்ஷா அல்லாஹ்

 *இதன் பொருள் :* 

கவலை வேண்டாம். அல்லாஹ் நாடினால் குணமாகி விடும்

எனக் கூறலாம்.

 *ஆதாரம்: புகாரி 3616* 

 *மரணத்திற்கு நிகரான துன்பத்தின் போது* 

اَللّهُمَّ أَحْيِنِيْ مَا كَانَتِ الْحَيَاةُ خَيْرًا لِيْ وَتَوَفَّنِيْ إِذَا كَانَتِ الْوَفَاةُ خَيْرًا لِيْ

அல்லாஹும்ம அஹ்யினீ மா கான(த்)தில் ஹயா(த்)து கைரன்லீ வதவப்ப[F]னீ இதா கான(த்)தில் வபா[F](த்)து கைரன் லீ

 *இதன் பொருள் :* 

இறைவா! வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழச் செய்! மரணம் எனக்கு நல்லதாக இருந்தால் மரணிக்கச் செய்!

எனக் கூற வேண்டும்.

 *ஆதாரம்: புகாரி 5671, 6351* 

 *இழப்புகள் ஏற்படும் போது* 

இழப்புகள் ஏற்படும் போது கீழ்க்காணும் துஆவை ஓதினால் அதை விடச் சிறந்ததை அல்லாஹ் மாற்றாகத் தருவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

 *ஆதாரம்: முஸ்லிம் 1525* 

إِنَّا للهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُوْنَ اَللّهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيْبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன், அல்லாஹும்ம அஃஜுர்னீ பீ[F] முஸீப(B](த்)தி வ அக்லிப்[F] லீ கைரன் மின்ஹா

 *இதன் பொருள் :* 

நாங்கள் அல்லாஹ்வுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எனது துன்பத்திற்காக நீ கூலி தருவாயாக. மேலும் இதை விடச் சிறந்ததை பகரமாகத் தருவாயாக.

 *ஆதாரம்: முஸ்லிம் 1525*

 *கணவனை இழந்தவர்கள் கூற வேண்டியது* 

اَللّهُمَّ اغْفِرْ لِيْ وَلَهُ وَأَعْقِبْنِيْ مِنْهُ عُقْبَى حَسَنَةً

அல்லாஹும்மக்பி[F]ர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்ப(B]ன் ஹஸனதன்

 *இதன் பொருள் :* 

இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவரை விடச் சிறந்தவரை எனக்கு அளிப்பாயாக!

 *ஆதாரம்: முஸ்லிம் 1527* 

 *மழை வேண்டும் போது* 

இரு கைகளையும் உயர்த்தி

اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا اَللّهُمَّ اسْقِنَا

அல்லாஹும்மஸ்கினா

அல்லாஹும்மஸ்கினா

அல்லாஹும்மஸ்கினா

எனக் கூற வேண்டும்.

 *இதன் பொருள் :* 

இறைவா! எங்களுக்கு மழையைத் தா.

 *ஆதாரம்: புகாரி 1013* 

அல்லது

اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا اَللّهُمَّ أَغِثْنَا

அல்லாஹும்ம அகிஸ்னா

அல்லாஹும்ம அகிஸ்னா

அல்லாஹும்ம அகிஸ்னா

எனக் கூற வேண்டும்.

 *பொருள்:* 

இறைவா! எங்களுக்கு மழையை இறக்கு!

 *ஆதாரம்: புகாரி 1014* 

 *அளவுக்கு மேல் மழை பெய்தால்* 

اَللّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا

அல்லாஹும்ம ஹவாலைனா வலா அலைனா

என்று இரு கைகளையும் உயர்த்தி கூற வேண்டும்.

 *இதன் பொருள்* :

இறைவா! எங்களின் சுற்றுப்புறங்களுக்கு இதை அனுப்பு! எங்களுக்குக் கேடு தருவதாக இதை ஆக்காதே!

 *ஆதாரம்: புகாரி 933, 1015, 1020, 1021, 1033, 6093, 6342* 

அல்லது

اَللّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலல் ஆகாமி வல் ஜிபா(B]லி வல் ஆஜாமி வள்ளிராபி(B] வல் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி

 *இதன் பொருள்* :

இறைவா! மேடுகளிலும், மலைகளிலும், குன்றுகளிலும், ஓடைகளிலும், கோட்டைகளிலும், மரங்கள் முளைக்கும் இடங்களிலும் இந்த மழையை பொழியச் செய்வாயாக.

 *ஆதாரம்: புகாரி 1013, 1016* 

அல்லது

اَللّهُمَّ عَلَى رُءُوْسِ الْجِبَالِ وَالآكَامِ وَبُطُونِ الأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

அல்லாஹும்ம அலா ருவூஸில் ஜிபா(B]லி வல் ஆகாமி வபு(B]தூனில் அவ்திய(த்)தி வ மனாபி(B]திஷ் ஷஜரி

 *ஆதாரம்: புகாரி 1017* 

 *மழை பொழியும் போது* 

اَللّهُمَّ صَيِّبًا نَافِعًا

அல்லாஹும்ம ஸய்யிப(B]ன் நாபி[F]அன்

 *இதன் பொருள் :* 

இறைவா! பயனுள்ள மழையாக இதை ஆக்கு!

 *ஆதாரம்: புகாரி 1032* 


 *போர்கள் மற்றும் கலவரத்தின் போது* 


اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ سَرِيعَ الْحِسَابِ اَللّهُمَّ اهْزِمْ الأَحْزَابَ اَللّهُمَّ اهْزِمْهُمْ وَزَلْزِلْهُمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி[B], ஸரீஅல் ஹிஸாபி[B], அல்லாஹும்மஹ்ஸிமில் அஹ்ஸாப்(B], அல்லாஹும்மஹ்ஸிம்ஹும் வஸல்ஸில்ஹும்.

 *இதன் பொருள் :* 

இறைவா! வேதத்தை அருளியவனே! விரைந்து விசாரிப்பவனே! எதிரிகளின் கூட்டணியைத் தோல்வியுறச் செய்வாயாக! அவர்களைத் தடுமாறச் செய்வாயாக!

 *ஆதாரம்: புகாரி 2933, 4115* 

அல்லது

اَللّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ

அல்லாஹும்ம முன்ஸிலல் கிதாபி(B] வமுஜ்ரியஸ் ஸஹாபி(B] வஹாஸிமல் அஹ்ஸாபி(B] இஹ்ஸிம்ஹும் வன்ஸுர்னா அலைஹிம்.

 *இதன் பொருள் :* 

இறைவா! வேதத்தை அருளியவனே! மேகத்தை நடத்திச் செல்பவனே! எதிரிகளைத் தோல்வியுறச் செய்பவனே! இவர்களைத் தோல்வியுறச் செய்! எங்களுக்கு உதவி செய்!

 *ஆதாரம்: புகாரி 2966, 3024* 

 *புயல் வீசும் போது*

 *இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 6*

No comments:

Post a Comment