இறைவனை இவ்வுலகில் காண முடியுமா?
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது! அவனது சாந்தியும் சமாதானமும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார்கள், தோழர்கள் மற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக!.
இறைவனை இந்த உலகில் பார்க்க இயலுமா என்பதைக் காணுவதற்கு முன்னர் இறைவன் தன்னுடைய பண்புகளாக தன்னுடைய திருமறையில் கூறுவதைச் சற்று பார்ப்போம்.
அல்லாஹ் கூறுகிறான்: -
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது: உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான். (அல்-குர்ஆன் 2:265)
நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அமானிதங்களை அவற்றின் சொந்தக்காரர்களிடம் நீங்கள் ஒப்புவித்து விடவேண்டுமென்றும், மனிதர்களிடையே தீர்ப்பு கூறினால் நியாயமாகவே தீர்ப்புக் கூறுதல் வேண்டும் என்றும் உங்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான்; நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு (இதில்) மிகவும் சிறந்த உபதேசம் செய்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 4:58)
அல்லாஹ்வின் கண்ணியத்திற்குத் தக்கவாறு அவர்கள் அவனை கண்ணியப்படுத்த வில்லை; இன்னும் இந்தப்பூமி முழுதும் கியாம நாளில் அவனுடைய ஒரு பிடிதான்; மேலும், வானங்களனைத்தும் அவனுடைய வலக்கையால் சுருட்டப்பட்டதாக இருக்கும்; அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் மகா தூயவன். (அல்-குர்ஆன் 39:67)
‘அல்லாஹ்வின் கை கட்டப்பட்டிருக்கிறது’ என்று யூதர்கள் கூறுகிறார்கள்; அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கூறியதின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டார்கள்; அல்லாஹ்வின் இரு கைகளோ விரிக்கப்பட்டே இருக்கின்றன; தான் நாடியவாறு (தன் அருட்கொடைகளை) கொடுக்கிறான்; (அல்-குர்ஆன் 5:64)
அல்லாஹ் தன்னுடைய திருமறையின் பல இடங்களில் தான் அனைத்தையும் பார்க்கக் கூடியவன் என்றும், எல்லாவற்றையும் கேட்கக் கூடியவன் என்றும் கூறுகிறான். மேலும் தன்னுடைய கைகளைப் பற்றியும் கூறுகிறான். ஆனால் அவைகளைப் பற்றிய அறிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. அவனைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அவைகள் மனிதக் கற்பனைக்கு கூட மிக மிக அப்பாற்பட்டதாகும்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த ஒரு முஃமின் அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தன்னைப் பற்றிக் கூறியவற்றை உள்ளது உள்ளவாறே நம்பிக்கைக் கொண்டால் போதுமானது. அதாவது அல்லாஹ் தன்னுடைய வல்லமையைக் கொண்டும் ஆற்றலைக்கொண்டும் அனைத்தையும் பார்ப்பவன் மற்றும் எல்லாவற்றையும் கேட்பவன் என்றும் அவன் தன்னுடைய கைகளாக குறிப்பிடப்பட்டவை அவனுடைய படைப்பினங்களில் எதற்கும் ஒப்பானவை அல்ல என்பதையும் நம்பிக்கைக் கொண்டால் போதுமானது.
மேலும் அல்லாஹ் தனது பண்புகளாக திருமறையில் எதைக் குறிப்பிட்டுள்ளானோ அதை அப்படியே நம்பிக்கைக் கொள்ள வேண்டும். அதில் எவ்வித கூடுதலோ அல்லது குறைவோ செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது. மேலும் அவற்றிற்கு சுய விளக்கம் கொடுக்கவும் கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: -
வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (அல்-குர்ஆன் 42:11)
இறைவனை இவ்வுலகில் பார்க்க இயலுமா?
அல்லாஹ் கூறுகிறான்: -
6:102 அவன்தான் அல்லாஹ் – உங்கள் இறைவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; எல்லாப் பொருட்களின் படைப்பாளன் அவனே ஆவான்; ஆகவே, அவனையே வழிபடுங்கள் – இன்னும் அவனே எல்லாக் காரியங்களையும் கண்காணிப்பவன்.
6:103 பார்வைகள் அவனை அடைய முடியா; ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன். (அல்-குர்ஆன் 6:102 ரூ 103)
மேலே குறிப்பிடப்பட்ட திருமறை வசனத்தில் ‘பார்வைகள் அவைன அடைய முடியாது, ஆனால் அவனே எல்லபப் பார்வைகளையும் சுழ்ந்து அடைகின்றான் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே அல்லாஹ்வின் படைப்பினங்களில் யாருமே அவனைப் பார்த்ததில்லை என்றும் அறிய முடிகின்றது.
நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் இரவின் போது இறைவனைப் பார்த்தார்களா?
மஸ்ரூக் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் முஃமின்களின் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஃராஜ் – விண்ணுலகப் பயணத்தின் போது நேரில் பார்த்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்து விட்டது.
மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார்.
முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறினாரோ அவர் பொய் சொல்லிவிட்டார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக) கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது. அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான். எனும் (6:103 ஆவது) வசனத்தையும், எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை எனும் (42:51 ஆவது) வசனத்தையும் ஓதினார்கள்.
மேலும் எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றை அறிவார்கள் என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக) எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகின்றான் என்பதை அறிவதில்லை, எனும் (31:34 ஆவது) வசனத்தை ஓதினார்கள்.
மேலும் எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள், என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார், என்று கூறிவிட்டு பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக) தூதரே! உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் இறைவன் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள் எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். மாறாக முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள் என்று சொன்னார்கள்.
ஸஹீஹ் புகாரியில் இடம் பெற்றுள்ள ஆதாரப் பூர்வமான இந்த ஹதீஸே நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்க்க வில்லை என்பதைத் தெளிவு படுத்துகிறது. மேலும் அவனுடைய படைப்பினங்களில் யாரும் இதுவரை அல்லாஹ்வைப் பார்த்ததில்லை, இனி பார்க்கவும் முடியாது.
எனவே மஹான்கள் பல முறை இறைவனைக் கண்டார்கள், அவனிடம் உரையாடினார்கள் என்றெல்லாம் சூஃபியாக்களின் போலிக் கொள்கைப் பரப்பு புத்தகங்களிலும் மத்ஹப்களின் பிக்ஹ் புத்தகங்களிலும் கூறப்பட்டிருப்பவை அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற இட்டுக் கட்டப்பட்ட பொய்யான செய்திகளாகும்.
ஆனால் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் பல மறுமையில், அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற்ற அவனுடைய நல்லாடியார்களுக்கு அல்லாஹ் காட்சி தருவான் என்று கூறுகிறது.
இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். நபித்தோழர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இல்லை’ என்றார்கள். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், ‘மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?’ என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் ‘இல்லை’ என்றனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ‘இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்’ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), ஆதாரம் : புகாரி
அல்லாஹ் நம் அனைவருக்கும் மறுமையில் அவனுடைய திருமுகத்தைக் காணும் நற்பேற்றினைத் தந்தருள்வானாகவும்.
http://suvanathendral.com/portal/?p=179
Ayyampet ALEEM
Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com
Ayyampet.
aleem_beatz@yahoo.com
Showing posts with label ALLAH. Show all posts
Showing posts with label ALLAH. Show all posts
Sunday, August 22, 2010
Saturday, July 10, 2010
அல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்
அல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்
எல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான்.
இது மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத்
தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம்.
தனது தூதர் மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம்.
தனது தேவைக்கு மிஞ்சிய செல்வம் படைத்தவர்கள், தனக்குக் கீழுள்ள கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுத்து அதன் மூலம் அவர்களது சிரமத்தை நீக்க வேண்டும்.
அல்லாஹ் நமக்குக் காட்டித் தந்த எத்தனையோ நற்காரியங்களுக்கு கணக்கின்றி எண்ணற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கின்றான். அது போன்று தர்மத்திற்கும் எண்ணற்ற பலன்கள் உண்டு. இப்பலனை அறியாத மக்கள் தர்மம் செய்வதை விட்டும் தள்ளிச் சென்று நிற்கின்றனர்.
''தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். முதல் உமது வீட்டாரிடமிருந்து ஆரம்பம் செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1426
தேவைக்கு மிஞ்சியதில் தர்மம் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ள இந்த ஹதீஸை இன்றைய மக்களின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிக மோசமான நிலையே நமக்குக் கிடைக்கின்றது.
கோடீஸ்வரனாகவும் பல இலட்சங்களுக்குச் சொந்தக்காரனாகவும் இருப்பவர்கள் கூட தன் செல்வத்தை வறுமையில் வாடுபவர்களுக்குக் கொடுக்காமல் ஆடம்பரச் செலவு செய்கின்றனர். இப்படியா இஸ்லாம் கூறுகின்றது? பசியில் இருப்பவனைத் தேடிச் சென்று உதவி செய்யச் சொல்கின்றது.
''ஆதமின் மகனே! நீ மற்றவர்களுக்காகச் செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 5352
இதில் அல்லாஹ் நமக்குச் சொல்லக் கூடிய வார்த்தையைப் பாருங்கள். உன்னிடம் இருப்பதை நீ மற்றவர்களுக்குக் கொடுத்தால் உன் பசியை நான் போக்குவேன் என்கிறான். இது எவ்வளவு பெரிய வாக்குறுதி! இதை விட நமக்கு வேறு என்ன வேண்டும்? அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்.
இந்த உலகில் நாம் நன்றாக வாழ்வதற்குத் தர்மம் வழிவகுப்பது போன்றே மறுமை வாழ்க்கையும் நன்றாக அமைய வழிவகுக்கின்றது.
மறுமை என்பது, மனிதர்களின் அழிச்சாட்டியங்கள் அடங்கி ஒடுங்கி பரிதாபத்துடன் நிற்கும் வாழ்க்கை! அவ்வாழ்க்கையின் கடுமைகளில் ஒன்று தான் வெப்பம்; வியர்வை! மனிதன் இவ்வுலகில் செய்த பாவத்திற்கேற்ப அவன் வியர்வையில் மூழ்கும் நேரம். இந்த நேரத்தில் அவன் எப்பேற்பட்ட கொம்பனாக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலை! இந்நிலையில் அந்தக் கொடிய வெப்பத்தை விட்டும், வியர்வையை விட்டும் காப்பதற்கு ஹீரோ போல வந்து நிற்கப் போவது இந்தத் தர்மம்.
இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 660
இத்துடன் தர்மத்தின் பலன்கள் நின்று விடுவதில்லை. அல்லாஹ் அதன் பலன்களை அள்ளி வழங்குகின்றான்.
''அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி) நூல்: புகாரி 1413, 6539
இதுவும் அல்லாஹ் நமக்குச் செய்யும் மிகப் பெரும் உதவி தான். நாம் அனைவருமே நரகத்திருந்து விடுதலை பெறுவதற்காகத் தான் அமல்கள் செய்கிறோம். அத்தகைய நரகத்திருந்து காக்கும் கேடயமாக தர்மம் அமைந்துள்ளது.
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், ''அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். இன்னொருவர், ''அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1442
வெள்ளிக்குப் பதில் யாரேனும் பவளத்தைக் கொடுப்பார்களா? ஆனால் நாம் செய்யும் சாதாரண தர்மத்திற்கு அல்லாஹ் மிகப் பெரும் கூயாக சிறப்பான மறுமை வாழ்வைத் தருகின்றான். எனவே இதில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் இறைவன் நமக்கு வழங்கிய பொருளாதாரத்தைப் பற்றி மறுமை நாளில் விசாரிப்பான்.
அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள். அல்குர்ஆன் 102:8
இந்த வசனத்தில் கூறப்படும் அருட்கொடை என்பது பொருட் செல்வம், மக்கட் செல்வம் என மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்துச் செல்வங்களையும் குறிக்கும். இந்தச் செல்வங்களைக் குறித்து மறுமையில் இறைவன் விசாரிப்பான்.
எனவே இந்த அற்ப உலகில் ஆடம்பரமாகச் செலவு செய்வதை விட்டு விட்டு, வறுமையிலும் பசியிலும் வாழக்கூடிய மக்களுக்கு நாம் அதிகமதிகம் தர்மம் செய்து மறுமையில் நாம் அனைவரும் அல்லாஹ்வின் நிழல் ஒன்று கூடுவோமாக!
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
யமன் நாட்டைப் பூர்வீமாகக் கொண்ட குலத்தினர் தான் அஷ்அரீன் என்ற குலத்தினர். இவர்கள் மதீனாவிற்கு வந்து அங்கு குடியேறினர். ஆரம்ப காலத்தில் யமன் நாட்டிருந்து வந்து இஸ்லாத்தைத் தழுவியவர்களில் முக்கியமானவர் அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள். இவர்கள் ஆரம்ப காலத்திலேயே இஸ்லாத்தைத் தழுவியவர்களில் ஒருவர்.
யமன் நாட்டில் வாழ்ந்த இக்குலத்தினரிடம் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்திருந்தன. திருக்குர்ஆனை அழகிய குரல் ஓதுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே! இதை நபிகளாரின் பொன்மொழிகள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.
''என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது, அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்கா விட்டால் இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும் அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால் அவர்களைப் பார்த்து, 'என் தோழர்கள் தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தவிடுகின்றனர்' என்று (துணிவோடு) கூறுவார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: புகாரீ 4232
திருக்குர்ஆனை அழகாக ஓதுவதில் அஷ்அரீன் குலத்தில் முதடம் பெற்றவர்களாக அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் திகழ்ந்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களே இவர்களின் ஓதுதலைப் பார்த்து வியந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (நான் இனிய குரல் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) ''அபூமூஸாவே! (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப் பட்டிருந்த இனிய குரல் உங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: புகாரீ 5048
இது போன்று, இக்கூட்டத்தாரிடம் தம் குலத்தவர்களுடன் இணங்கி வாழ்வது, அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பது போன்ற அழகிய பண்புகளும் நிறைந்திருந்தன என்பதற்கு நாம் முன்னர் கூறிய நபிமொழிகள் தெளிவான சான்றாகும்.
ஒரு சமூகத்தார் தம் சமூகத்தாருடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும்? தம் சுற்றத்தாருடன் எப்படி உறவு வைத்துக் கொள்ள வேண்டும்? எவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்பதற்கு இவர்கள் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
அவர்களிடம் உணவு தட்டுப்பாடு வரும் போது வசதி படைத்தவர்கள் சும்மா இருப்பதில்லை. அனைவரும் ஒன்று கூடி தங்களிடம் இருந்த உணவுகள் அனைத்தையும் ஓரிடத்தில் ஒன்று திரட்டி அவர்கள் சமூகத்தினர் அனைவர்களும் வந்து ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடின்றி சம அளவில் உணவுகளைப் பங்கிட்டு எடுத்துச் செல்வார்கள்.
இந்த நல்ல பண்பைக் கண்டு தான் நபி (ஸல்) அவர்கள், 'அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள்; நான் அவர்களைச் சார்ந்தவன்' என்று புகழந்துரைத்தார்கள்.
''தன் அண்டை வீட்டாரை விட்டு விட்டு, தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிட மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: அஹ்மத் 367
பக்கத்து வீட்டான் பசியோடு இருக்க தான் மட்டும் வயிறு புடைக்க உண்பவன் முஃமின் அல்லன் என்ற நபிமொழிக்கு செயல் வடிவம் கொடுத்தவர்கள் இந்தக் குலத்தவர்கள்.
'யார் ஒருவன் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றும் காரியத்தில் இருப்பானோ அவன் காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவான்' என்ற நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை மதித்தவர்கள் இந்தக் கூட்டத்தினர்.
இஸ்லாத்தை ஒருவர் ஏற்ற பிறகு மற்ற முஸ்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குப் பல அரிய போதனைகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். அவற்றைக் காண்போம்.
முஃமினுக்கு உதாரணம்
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும் இரக்கம் காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடன்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடைய அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டு இருக்கின்றன. அத்துடன் (உடல் முழுவதும்) காய்ச்சலும் கண்டு விடுகின்றது. அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: புகாரீ 6011
உடல் உறுப்புகளில் ஓர் உறுப்பு, மற்ற உறுப்புகளுக்கு எவ்வாறு உதவி புரிகின்றதோ அதைப் போன்று ஆள் வெவ்வேறாக இருந்தாலும் ஈமானில் ஒன்றிணைந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு உதவிகள் புரிய வேண்டும்.
முஸ்மின் செயல்பாடு
''ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்மின் சகோதரன் ஆவான். அவனுக்கு இவன் அநீதி இழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தம் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்மின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டும் அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்மின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரீ 2442
ஒரு முஸ்மின் தேவையை நிறைவேற்றுவதில் நாம் ஈடுபட்டால் நம் தேவையை நிறைவு செய்வதற்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான். இதை விட சிறந்த பாக்கியம் நமக்கு என்ன வேண்டும்?
மேலும் மற்றவர்களின் கஷ்டத்தை நாம் போக்கினால் மறுமை நாளில் ஏற்படும் சிரமம் ஒன்றை அல்லாஹ் போக்குகிறான். இந்தப் பாக்கியமும் மற்றவர்களின் துயர் துடைப்பதிலேயே கிடைக்கிறது.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்
அல்லாஹ் தஆலா மறுமை நாளில் (சில மனிதர்களைப் பார்த்து), ''ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன். ஆனால் நீ நோய் விசாரிக்க வரவில்லை'' என்பான். அதற்கு அம்மனிதன், ''என் இறைவா! எப்படி நான் உன்னை நோய் விசாரிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். இதற்கு அல்லாஹ், ''இந்த என்னுடைய அடியான் நோயுற்றிருந்தான்; அவனை நீ நோய் விசாரிக்கச் செல்லவில்லை என்பதை நீ அறிய மாட்டாயா? நீ அவனை நோய் விசாரித்திருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று பதிலளிப்பான்.
மேலும், ''ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு வேண்டினேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்க வில்லை'' என்பான். அதற்கு அவன், ''என் இறைவா! நான் எப்படி உனக்கு உணவளிக்க முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். அதற்கு அல்லாஹ், ''இந்த என் அடியான் உன்னிடம் உணவை வேண்டினான்; ஆனால் நீ அவனுக்கு உணவளிக்கவில்லை என்பதை நீ அறியமாட்டாயா? அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்பான்.
''ஆதமின் மகனே! நான் உன்னிடம் தண்ணீர் வேண்டினேன். ஆனால் நீ எனக்குத் தண்ணீர் புகட்டவில்லை'' என்று இறைவன் கூறுவான். அதற்கு அவன், ''என் இறைவனே! உனக்கு எப்படி நான் தண்ணீர் புகட்ட முடியும்? நீயோ உலகத்தின் அதிபதியாயிற்றே!'' என்பான். அதற்கு அல்லாஹ், ''இந்த என் அடியான் உன்னிடம் தண்ணீர் கேட்டான். அவனுக்கு நீ தண்ணீர் புகட்டியிருந்தால் அந்த இடத்தில் என்னைக் கண்டிருப்பாய்'' என்று அல்லாஹ் பதிலளிப்பான். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்ம் 4661
உதவும் போது இறைவன் உதவி நமக்கு உண்டு
''ஆதமின் மகனே! (நீ மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ 5352
இன்று நம் தெருவில் இருப்பவர்கள் எத்தனை பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். அதைப் பார்த்தும் பார்க்காதது போல் நடந்து கொள்கிறோமே தவிர அவர்களுக்கு உதவ நாம் முன்வருவதில்லை.
மழை, வெள்ளத்தால் எத்தனை பேர் நமது ஊரில் வீடுகளை இழந்துள்ளனர்; சொத்துக்களை இழந்துள்ளனர்; உறவுகளை இழந்துள்ளனர்; ஊனமுற்றுள்ளனர்; இவர்களுக்கு எல்லாம் நமது உதவிகளைச் செய்ய முன்வருதில்லை.
உதவிகள் குறைவாக இருந்தாலும் நிறைவாக இருந்தாலும் அதை வழங்க முன்வர வேண்டும். அஷ்அரீன் குலத்தவர்கள் கூடுதல் குறைவாக இருந்த அனைவரும் ஒன்றிணைந்து எப்படி அனைவருக்கும் வழங்க முன்வந்தார்களோ அதைப் போன்று நமது ஊரில் இருப்பவர்களுக்கு, நமது தெருவில் இருப்பவர்களுக்கு உதவி, நபி (ஸல்) அவர்களின் பொன் மொழிகளைப் பின்பற்றிய கடமையை நிறைவேற்றியவர்களாக ஆக வேண்டும்.
''அஷ்அரீ குலத்தினர் போரின் போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்து விட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய் விட்டால், தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து பிறகு ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுடையே அதைப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சோந்தவன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) நூல்: புகாரீ 2486

Subscribe to:
Posts (Atom)