பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, November 30, 2019

மறுமையின்⛱* ⤵ *⛱ சாட்சிகள் - 11

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *⛱ மறுமையின்⛱*
                             ⤵
                    *⛱ சாட்சிகள் ⛱*

           *✍🏻...தொடர் ➖1⃣1⃣*

*☄உடல் உறுப்புகளின்*
                    *சாட்சிகள் { 01 } ☄*

*🏮🍂நாம் செய்யும் செயல்கள் யாருக்கும் தெரியாது என்று பலரும் பல்வேறு காரியங்களில் ஈடுபடுகிறார்கள். திரை மறைவில் தைரியமாக தப்பும் தவறுமான காரியங்களில் இறங்குகிறார்கள். இத்தகையவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.* எந்தக் கை, கால்களை வைத்து தீயகாரியங்களைச் செய்கிறார்களோ அவை மறுமையில் தாங்கள் செய்த காரியங்களைப் பற்றி பேசும்.

*🏮🍂உலகில் நாம் நினைப்பது போன்று பேசுவதற்கு நாவைப் பயன்படுத்துகிறோம். மறுமையிலோ நாக்கு உலகில் தான் பேசியவற்றை எல்லாம் வெளிப்படுத்தும். நாம் நல்ல காரியங்களைச் செய்தவர்களாக இருப்பின் நமது உடல்களும் நல்ல வகையில் சாட்சியமளிக்கும். கெட்ட காரியங்களை செய்திருப்பின் கெட்ட விதத்தில் சாட்சியமளிக்கும்.*

*🏮🍂நமது உடல் உறுப்புகள், இவர் குர்ஆன் படித்தார், பள்ளிவாசலுக்குச் சென்றார் என்று நல்ல செய்திகளைக் கூறவேண்டுமா❓ அல்லது இவர் புறம் பேசினார், புகை பிடித்தார் என்று தீய தகவல்களைத் தெரிவிக்க வேண்டுமா❓ என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.*

_*🍃இதுவே உங்களுக்கு எச்சரிக்கப்பட்ட நரகம். "நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்ததால் இன்று இதில் கருகுங்கள்!'' என்று கூறப்படும். இன்றைய தினம் அவர்களின் வாய்களுக்கு முத்திரையிடுவோம். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவர்களின் கைகள் நம்மிடம் பேசும்; கால்கள் சாட்சி கூறும்.*_

*📖(அல்குர்ஆன் 36:63,65)📖*

_*🍃அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.*_

*📖 (அல்குர்ஆன் 24:24, 25) 📖*

_*🍃அல்லாஹ்வின் பகைவர்கள் நரகை நோக்கித் திரட்டப்படும் நாளில் அவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள். முடிவில் அவர்கள் அங்கே வந்ததும் அவர்களுக்கு எதிராக அவர்களின் செவியும், பார்வைகளும், தோல்களும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். "எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்❓'' என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள். "ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்த அல்லாஹ்வே எங்களையும் பேசச் செய்தான். முதல் தடவை அவனே உங்களைப் படைத்தான். அவனிடமே திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளீர்கள்!'' என்று அவை கூறும். உங்கள் செவியும், பார்வைகளும், உங்கள் தோல்களும் உங்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்காமலிருக்க (அவற்றுக்குத் தெரியாமல்) நீங்கள் மறைத்ததில்லை. நீங்கள் செய்தவற்றில் அதிகமானவற்றை அல்லாஹ் அறிய மாட்டான் என்று நினைத்தீர்கள். இதுவே உங்கள் இறைவனைப் பற்றி உங்களது எண்ணம். அது உங்களை அழித்து விட்டது. எனவே நஷ்டமடைந்தோரில் ஆகிவிட்டீர்கள்.*_

*📖 (அல்குர்ஆன்  41:19-23) 📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

இறைவன் ஒருவன் என்பதை அறிந்த நிலையில் மரணித்தால்

இறைவன் ஒருவன் என்பதை அறிந்த நிலையில் மரணித்தால்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று யார் (மனமார) அறிந்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கம் செல்வார்.
இதை உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. (முஸ்லிம் 43) 

அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் மரணித்தால்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்து விடுகிறாரோ அவர் நிச்சயமாக நரகம் செல்வார்” என்று கூறியதை நான் கேட்டேன். நான் (அதே கருத்தை) “யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் நிச்சயமாக சொர்க்கம் செல்வார்” என்று கூறினேன்.

முஸ்லிம் 150)

அல்லாஹ்வின் பெயர்களை மனனம் செய்தால்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வுக்குத் தொண்ணூற்று ஒன்பது பெயர்கள் உள்ளன. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் சொர்க்கம் செல்வார். மேலும், அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (முஸ்லிம் 5198)

காலை மாலையில் இந்த துஆவை ஓதினால்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘அல்லாஹும்ம அன்த்த ரப்பீ. ல இலாஹ இல்லா அன்த்த. கலக்த்தனீ. வ அன அப்துக்க. வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்ததஅத்து, அபூ உ லக்க பி நிஅமத்திக்க, வ அபூ உ லக்க பி தன்பீ. ஃபஃபக்ஃபிர்லீ. ஃபஇன்னஹு லா யஃக் ஃபிருத் துனூப இல்லா அன்த்த. அஊது பிக்க மின் ஷர்ரி ஸனஅத்து’ என்பதே தலைசிறந்த பாவமன்னிப்புக் கோரல் ஆகும். 
(பொருள்: அல்லாஹ்! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமையாவேன். நான் உனக்குச் செய்து கொடுத்த உறுதி மொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நீ (எனக்கு) அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளதையும் உன்னிடம் (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என்னை மன்னிப்பாயாக! ஏனெனில், பாவத்தை மன்னிப்பவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. நான் செய்தவற்றின் தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். 
மாலை நேரத்தில் ஒருவர் இதைச் சொல்லிவிட்டு (அன்று மாலையே) அவர் இறந்தால் அவர் (சொர்க்கம் செல்வார்’ அல்லது சொர்க்கவாசியாவார்’ காலை நேரத்தில் ஒருவர் (இதைச்) சொல்லிவிட்டு அன்று பகலிலேயே இறந்தால் அதே போன்றுதான் (அவரும் சொர்க்கம் செல்வார்) 
என ஷத்தாத் இப்னு அவ்ஸ்(ரலி) அறிவித்தார்.

(புகாரி 6323)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணை ஏதுமின்றி சொர்க்கம் செல்வார்கள். அவர்கள் யாரெனில், ஓதிப்பார்க்க மாட்டார்கள். பறவை சகுனம் பார்க்கமாட்டார்கள். தம் இறைவ(ன் மீது முழு நம்பிக்கை கொண்டு அவ)னையே சார்ந்திருப்பார்கள். (புகாரி 6472)

நபிகளாருக்கு கீழ்படிந்தால்

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர’ என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! ஏற்க மறுத்தவர் யார்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறு செய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவராவார்’ என்று பதிலளித்தார்கள். ( புகாரி 7280)

பஜ்ர் மற்று அஸர் தொழுகையை முறையாக தொழுதால்

பகலின் வெப்பம் குறைந்த இரண்டு நேரத் தொழுகைகளை (அதாவது பஜ்ருத், அஸர் தொழுகைகளை முறையாகத்) தொழுகிறவர் சுவர்க்கத்தில் நுழைவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். (புகாரி 574)

நல்லறங்கள் செய்வோர்

4:124   وَمَنْ يَّعْمَلْ مِنَ الصّٰلِحٰتِ مِنْ ذَكَرٍ اَوْ اُنْثٰى وَهُوَ مُؤْمِنٌ فَاُولٰٓٮِٕكَ يَدْخُلُوْنَ الْجَـنَّةَ وَلَا يُظْلَمُوْنَ نَقِيْرًا‏
 
ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:124)
 
இறைவனை அஞ்சியோர்
 
39:73   وَسِيْقَ الَّذِيْنَ اتَّقَوْا رَبَّهُمْ اِلَى الْجَـنَّةِ زُمَرًا‌ؕ حَتّٰٓى اِذَا جَآءُوْهَا وَفُتِحَتْ اَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلٰمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خٰلِدِيْنَ‏
 
தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். முடிவில் அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் “உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!” என அதன் காவலர்கள் அவர்களிடம் கூறுவார்கள். (அல்குர்ஆன் 39:73)

துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?

*துக்கம் விசாரிக்கும் போது முஸாபஹா உண்டா?*

கேள்வி: இறந்தவரை அடக்கம் செய்தபின் அவருடைய வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து ஸலாம் சொல்லிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வது இறந்தவருக்கு பயன்தருமா?

பதில் : 

இறந்தவரை அடக்கம் செய்தபின் அவரது வீட்டிற்கு முன்னால் அணிவகுத்து நின்று ஒருவருக்கொருவர் முஸாஃபஹா செய்து கைகொடுத்துக் கொள்ளும் வழக்கம் சில முஸ்லிம் ஊர்களில் காணப்படுகிறது. ஜனாசா தொழுகையில் கலந்து கொள்ளாதவர்கள் கூட கட்டாயம் இதில் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சிக்கு வராதவர்கள் இறந்தவருக்கு மிகப்பெரும் எதிரி போல் சில ஊர்களில் கருதப்படுகின்றனர்.

ஒரு முஸ்லிம் சகோதரர் மரணித்துவிட்டால் அவருக்காக ஜனாசா தொழுகையில் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்வது ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்குச் செய்ய வேண்டிய கடமைகளில் ஒன்றாக நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை:
 
ஸலாமுக்கு பதிலுரைப்பது, நோயாளியை நலம்விசாரிப்பது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக் கொள்வது, 
தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1240

அடக்கம் செய்தபின் இறந்தவரின் வீட்டிற்கு முன்னால் அணிவகுத்து நின்று ஒருவருக்கொருவர் கைகொடுத்து ஸலாம் சொல்லிக் கொள்வதும். ஸலவாத் ஓதிக் கொள்வதும் நபியவர்கள் காட்டித்தராத பித்அத்தான அனாச்சாரங்களாகும்.
எனவே இதுபோன்ற காரியங்களில் நாம் பங்கெடுப்பது கூடாது. இதனால் இறந்தவருக்கு எந்தப் பயனும் ஏற்படாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது (இறைவனால்) மறுக்கப்படும்!

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரீ 2697

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவான அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : நஸயீ 1560

நானும் ஜனாசாவில் கலந்து கொண்டேன் என்று காட்டிக் கொள்வதற்காக இந்த வழக்கம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இறந்தவரின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்து இருக்கும் போது மூன்று நாட்கள் அவர்கள் கவலைப்படுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கும் போது அவர்களைத் தேடிச் சென்று தொல்லைப்படுத்துவது ஏற்கத்தக்கது அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்வது நல்லது.

இறந்தவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி அறிந்திட ஜனாஸாவின் சட்டங்கள் என்ற நமது நூலைப் பார்வையிடவும்.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
என்றும் இறைப்பணியில்...
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா

*🔮🔮🔮மீள் பதிவு🚨🚨🚨* 

*🔔🔔🔔🔔இஸ்லாமிய பார்வையில் தஸ்பீஹ் 🔔 🔔 🔔* 


*🏆🏆🏆தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா❓❓❓*

 *👉 👉 👉 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொன்மொழியில் இருந்து உங்கள் பார்வைக்கு 👇👇👇👇👇👇 👇* 

தஸ்பீஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா? குர்ஆன், ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குங்கள்! சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுகிறதே!



தஸ்பீஹ் மணி மூலம் திக்ர் செய்யலாம் என்று கூறுபவர்கள் சில செய்திகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அவற்றை முதலில் பார்ப்போம்.

*حدثنا محمد بن بشار حدثنا عبد الصمد بن عبد الوارث حدثنا هاشم وهو ابن سعيد الكوفي حدثني كنانة مولى صفية قال سمعت صفية تقول دخل علي رسول الله صلى الله عليه وسلم وبين يدي أربعة آلاف نواة أسبح بها فقال لقد سبحت بهذه ألا أعلمك بأكثر مما سبحت به فقلت بلى علمني فقال قولي سبحان الله عدد خلقه قال أبو عيسى هذا حديث غريب لا نعرفه من حديث صفية إلا من هذا الوجه من حديث هاشم بن سعيد الكوفي وليس إسناده بمعروف وفي الباب عن ابن عباس*

*நான் தஸ்பீஹ் செய்வதற்காக வைத்துள்ள நன்காயிரம் பேரீச்சம் கொட்டைகள் என் முன்னால் இருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது, "இதைக் கொண்டு தான் நீ தஸ்பீஹ் செய்வாயா?'' என்று கேட்டு விட்டு, "இதைக் கொண்டு நீ செய்யும் தஹ்பீஹை விட கூடுதலான ஒன்றை நான் உனக்குக் கற்றுக் கொடுக்கட்டுமா?'' என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "ஸுப்ஹானல்லாஹி அதத கல்கிஹி என்று நீ சொல்'' என கூறினார்கள்.*

*அறிவிப்பவர்: ஸஃபிய்யா (ரலி)*

*நூல்: திர்மிதீ 3477*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஸ்பீஹ் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தத் தடையையும் செய்யவில்லை; மேலும் தமது மனைவி பேரீச்சம் கொட்டைகளைக் கொண்டு தஹ்பீஹ் செய்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளதால் தற்போது நவீன காலத்தில் தஸ்பீஹ் மணி கண்டுபிடிக்கப்பட்டு அதன் மூலம் தஸ்பீஹ் செய்யப்படுகிறது. எனவே இதைக் கூடாது என்று கூற முடியாது என்று வாதிடுகின்றனர்.

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் இச்செய்தியின் இறுதியில், "இது அறியப்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் அமையவில்லை'' என்று குறை கூறியுள்ளார்கள்.

மேலும் இதன் மூன்றாவது அறிவிப்பாளர் ஹாஷிம் பின் ஸயீத் என்பவர் பலவீனமானவர்.

அதன் இரண்டாவது அறிவிப்பாளர் கினானா என்பவர் யாரென அறியப்படாதவர்.

எனவே இந்தச் செய்தி ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை. இதை ஆதாரமாகக் கொண்டு சட்டம் எடுக்க முடியாது.

இதைப் போன்று இன்னொரு நசெய்தியையும் தஸ்பீஹ் மணிக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.    

*حدثنا أحمد بن صالح حدثنا عبد الله بن وهب أخبرني عمرو أن سعيد بن أبي هلال حدثه عن خزيمة عن عائشة بنت سعد بن أبي وقاص عن أبيها أنه دخل நمع رسول الله صلى الله عليه وسلم على امرأة وبين يديها نوى أو حصى تسبح به فقال أخبرك بما هو أيسر عليك من هذا أو أفضل فقال سبحان الله நعدد ما خلق في السماء وسبحان الله عدد ما خلق في الأرض وسبحان الله عدد ما خلق بين ذلك وسبحان الله عدد ما هو خالق والله أكبر مثل ذلك والحمد لله مثل ذلك ولا إله إلا الله مثل ذلك ولا حول ولا قوة إلا بالله مثل ذلك*

*நானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஒரு பெண்மணியிடம் சென்றோம். அப்பெண்மணியின் முன்னால் அவர் தஸ்பீஹ் செய்வதற்குப் பயன்படும் பேரீச்சம் கொட்டைகளோ, அல்லது சிறு கற்களோ இருந்தன. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (அப்பெண்மணியிடம்) இதை விட உனக்கு இலகுவான அல்லது சிறந்ததை அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள்...*

*அறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி)*

*நூல்கள்: அபூதாவூத் 1282, திர்மிதீ 3491*

 *இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!* 

இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் ஹுஸைமா என்பவர் யாரென அறிப்படாதவர். இவர் நம்பகமானவரா? நினைவாற்றல் மிக்கவரா? என்பன போன்ற விவரங்கள் இல்லை. எனவே இவரை ஹாபிழ் இப்னு ஹஜர், தஹபீ ஆகியோர் யாரென அறியப்படாதவர் என்று குறை கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தியையும் ஆதாரமாகக் காட்ட முடியாது.

மேலும் தஸ்பீஹ் மணி என்பது மாற்று மதத்தவர்களின் வழிபாடுகளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதாகும். அங்கு தான் சில கொட்டைகளை வைத்து பின்னப்பட்ட மாலைகளைப் பயன்படுத்தித் துதிப்பார்கள். எனவே இந்தப் பழக்கத்தைப் பின்பற்றுவது கூடாது.

*"யார் மாற்றுமதக் கலச்சாரத்திற்கு ஒப்பாக நடக்கிறாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.*

*நூல்: பஸ்ஸார்*

*أخبرنا يحيى بن حبيب بن عربي قال حدثنا حماد عن عطاء بن السائب عن أبيه عن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم خلتان لا يحصيهما رجل مسلم إلا دخل الجنة وهما يسير ومن يعمل بهما قليل قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس يسبح أحدكم في دبر كل صلاة عشرا ويحمد عشرا ويكبر عشرا فهي خمسون ومائة في اللسان وألف وخمس مائة في الميزان وأنا رأيت رسول الله صلى الله عليه وسلم يعقدهن بيده وإذا أوى أحدكم إلى فراشه أو مضجعه سبح ثلاثا وثلاثين وحمد ثلاثا وثلاثين وكبر أربعا وثلاثين فهي مائة على اللسان وألف في الميزان قال قال رسول الله صلى الله عليه وسلم فأيكم يعمل في كل يوم وليلة ألفين وخمس مائة سيئة قيل يا رسول الله وكيف لا نحصيهما فقال إن الشيطان يأتي أحدكم وهو في صلاته فيقول اذكر كذا اذكر كذا ويأتيه عند منامه فينيمه*

*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் கைகளால் தஹ்பீஹ் செய்ததை நான் பார்த்தேன்.*

*அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)*

*நூல்: நஸயீ 1331*

இந்தச் செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அதா பின் ஸாயிப் என்பவர் மூளை குழம்பியவர் என்ற விமர்சனம், இந்த ஹதீஸில் எந்தப் பலவீனத்தையும் ஏற்படுத்தாது.

 *ஒருவர் மூளை குழம்பியவர் என்றால் அவரது அறிவிப்புக்கள் பிரித்துப் பார்க்கப்படும்.* 

அவர் மூளை குழம்பிய பின்னர் அறிவித்தவை என்று உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் நிராகரிக்கப்படும்.

மூளை முழம்பியதற்கு முன் இதை அறிவித்தாரா? பின்னர் அறிவித்தாரா என்பது தெரியாவிட்டால் அதை எந்த முடிவும் இல்லாமல் நிறுத்தி வைக்கப்படும்.

மூளை குழம்புவதற்கு முன்னர் அறிவித்தவை என்றால் அவை ஆதாரமாக ஏற்கப்படும்.

இந்த ஹதீஸைப் பொருத்தவரை மூளை முழம்புவதற்கு முன்னர் அறிவித்ததாகும்.

ஏனெனில் அதா பின் யஸீத் என்பவரிடம் இந்தச் செய்தியைச் செவியுற்ற ஹம்மாத் பின் ஸைத் என்பவர், இவர் மூளை குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் கேட்டவர் என்று யஹ்யா பின் அல்கத்தான் அவர்கள் குறிப்பிடும் செய்தி "தஹ்தீபுத் தஹ்தீப்' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைந்துள்ளதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி விரல்களால் தஹ்பீஹ் செய்வதே நபிவழியாகும்.

 *சவூதியில் தஸ்பீஹ் மணி விற்கப்படுவதால் தஹ்பீஹ் மணி மார்க்கத்தில் உள்ளது என்ற முடிவுக்கு வரக் கூடாது.* ஒரு காரியம் கூடுமா? கூடாதா? என்று முடிவெடுக்க குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டுமே அளவுகோலாகக் கொள்ள வேண்டும்


அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

நன்மைகளை வாரி - 44

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 44 ]*_

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 14 }*

*🏖வரிசையை*
           *சீராக்குவதன்*
                    *சிறப்புகள் { 02 }🏖*

*☄உள்ளமும் நோக்கமும்*
               *ஒன்றுபடுகிறது☄*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﻮﻟﻴﺪ ﻫﺸﺎﻡ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻤﻠﻚ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﻤﺮﻭ ﺑﻦ ﻣﺮﺓ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺳﺎﻟﻢ ﺑﻦ ﺃﺑﻲ اﻟﺠﻌﺪ، _*ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ اﻟﻨﻌﻤﺎﻥ ﺑﻦ ﺑﺸﻴﺮ، ﻳﻘﻮﻝ: ﻗﺎﻝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﻟﺘﺴﻮﻥ ﺻﻔﻮﻓﻜﻢ، ﺃﻭ ﻟﻴﺨﺎﻟﻔﻦ اﻟﻠﻪ ﺑﻴﻦ ﻭﺟﻮﻫﻜﻢ*_

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். இல்லையெனில், அல்லாஹ் உங்கள் முகங்களுக்கிடையே மாற்றத்தை ஏற்படுத்திவிடுவான்.*_

*🎙அறிவிப்பவர்:*
           *நுஅமான் பின் பஷீர் (ரலி),*

*📚நூல்: புகாரி (717)📚*

_*🍃"நேராக நில்லுங்கள்; (முன்பின்னாக) வேறுபட்டு நிற்காதீர்கள்; அப்படி (வேறுபட்டு) நின்றால், உங்கள் உள்ளங்களும் வேறுபட்டுவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் அல்அன்சாரி (ரலி),*

*📚 நூல்: முஸ்லிம் (739) 📚*

*🏮🍂தொழுகை வரிசையை சீராக ஆக்குவதன் மூலம் அல்லாஹ் தொழுகையாளிகளின் உள்ளங்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துகிறான். இது தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுபவர்களுக்குக் கிடைக்கும் மிகப்பெரும் பாக்கியமாகும்.*

*அதே நேரத்தில் வரிசையில் சீர்குலைவு ஏற்படுமென்றால் அதுவே உள்ளப் பிரிவினைகளுக்கும் காரணமாகிவிடும். எனவே வரிசையை சீர் செய்த பின்பே தொழுகையை ஆரம்பம் செய்ய வேண்டும்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄வரிசை சீர்பெற்றாலே*
    *தொழுகை முழுமை பெறும்☄*

حَدَّثَنَا  مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا  مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ،  _*يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله  عليه وسلم ‏"‏ سَوُّوا صُفُوفَكُمْ فَإِنَّ تَسْوِيَةَ الصَّفِّ مِنْ تَمَامِ الصَّلاَةِ ‏"*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில், வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகை முழுமை அடைவதன் ஓர் அங்கமாகும்.*_

*🎙அறிவிப்பவர்: அனஸ் (ரலி),*

*📚 நூல்: முஸ்லிம் (741) 📚*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﻮﻟﻴﺪ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻋﻦ ﻗﺘﺎﺩﺓ، _*ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «-[146]- ﺳﻮﻭا ﺻﻔﻮﻓﻜﻢ، ﻓﺈﻥ ﺗﺴﻮﻳﺔ اﻟﺼﻔﻮﻑ ﻣﻦ ﺇﻗﺎﻣﺔ اﻟﺼﻼﺓ*_

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் (தொழுகை) வரிசைகளை ஒழுங்குபடுத்துங்கள். வரிசைகளை ஒழுங்குபடுத்துவது தொழுகையை (நிறைவுடன்) நிலை நாட்டுவதேயாகும்.*_

*🎙அறிவிப்பவர்:  அனஸ் (ரலி),*

*📚நூல்: புகாரி (723)📚*

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺤﻤﺪ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﺮﺯاﻕ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﻣﻌﻤﺮ، ﻋﻦ ﻫﻤﺎﻡ ﺑﻦ ﻣﻨﺒﻪ، _*ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺃﻧﻪ ﻗﺎﻝ: " ﺇﻧﻤﺎ ﺟﻌﻞ اﻹﻣﺎﻡ ﻟﻴﺆﺗﻢ ﺑﻪ، ﻓﻼ ﺗﺨﺘﻠﻔﻮا ﻋﻠﻴﻪ، ﻓﺈﺫا ﺭﻛﻊ، ﻓﺎﺭﻛﻌﻮا، ﻭﺇﺫا ﻗﺎﻝ: ﺳﻤﻊ اﻟﻠﻪ ﻟﻤﻦ ﺣﻤﺪﻩ، ﻓﻘﻮﻟﻮا: ﺭﺑﻨﺎ ﻟﻚ اﻟﺤﻤﺪ، ﻭﺇﺫا ﺳﺠﺪ ﻓﺎﺳﺠﺪﻭا، ﻭﺇﺫا ﺻﻠﻰ ﺟﺎﻟﺴﺎ، ﻓﺼﻠﻮا ﺟﻠﻮﺳﺎ ﺃﺟﻤﻌﻮﻥ، ﻭﺃﻗﻴﻤﻮا اﻟﺼﻒ ﻓﻲ اﻟﺼﻼﺓ، ﻓﺈﻥ ﺇﻗﺎﻣﺔ اﻟﺼﻒ ﻣﻦ ﺣﺴﻦ اﻟﺼﻼﺓ "*_

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை வரிசையை நேராக்குங்கள். ஏனெனில் வரிசை நேராக்குவது தொழுகையை அழகுறச் செய்வதேயாம்.*_

*🎙அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),*

*📚நூல்: புகாரி (722)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மறுமையின்⛱* ⤵ *⛱ சாட்சிகள் ⛱* - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *⛱ மறுமையின்⛱*
                             ⤵
                    *⛱ சாட்சிகள் ⛱*

           *✍🏻...தொடர் ➖1⃣0⃣*

*☄கழுத்தில் இருக்கும்*
               *பதிவேட்டின் சாட்சி*

*🏮🍂நமது நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக ஒரு முக்கியமான ஏற்பாட்டினை வல்ல இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.* நமது கழுத்தில் நமது செயல்பாடுகள் பற்றிய தகவல்களை சேமிக்கும் பொருளை வைத்திருக்கிறான். *பார்ப்பது, நடப்பது, கேட்பது என்ற சகல செயல்பாடுகளும் அதிலே பதிவு செய்யப்படுகின்றன. மறுமை நாளில் ஒரு மாபெரும் ஏடாக அதை அல்லாஹ் கொண்டு வருவான்.*

*🏮🍂நாம் சொல்லும் வார்த்தையின் சத்தத்தை உள்வாங்கிக் கொண்டு அந்த வார்த்தையில் இருப்பதையெல்லாம் தேடித்தரும் மென்பொருள்களை மனிதனே உருவாக்கியிருக்கிறான். மனிதனுக்கே இந்த அறிவு இருக்கும் போது, அத்தகைய மனிதனை படைத்த இறைவன் இதற்குச் சக்தி பெற்றவன் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.* இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.

*وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ ۖ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَىٰ بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا*

_*🍃ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். "உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்'' (என்று கூறப்படும்).*_

*📖(அல்குர்ஆன் 17:13,14)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Friday, November 29, 2019

மறுமையின்⛱* ⤵ *⛱ சாட்சிகள் - 10

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *⛱ மறுமையின்⛱*
                             ⤵
                    *⛱ சாட்சிகள் ⛱*

           *✍🏻...தொடர் ➖1⃣0⃣*

*☄கழுத்தில் இருக்கும்*
               *பதிவேட்டின் சாட்சி*

*🏮🍂நமது நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக ஒரு முக்கியமான ஏற்பாட்டினை வல்ல இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.* நமது கழுத்தில் நமது செயல்பாடுகள் பற்றிய தகவல்களை சேமிக்கும் பொருளை வைத்திருக்கிறான். *பார்ப்பது, நடப்பது, கேட்பது என்ற சகல செயல்பாடுகளும் அதிலே பதிவு செய்யப்படுகின்றன. மறுமை நாளில் ஒரு மாபெரும் ஏடாக அதை அல்லாஹ் கொண்டு வருவான்.*

*🏮🍂நாம் சொல்லும் வார்த்தையின் சத்தத்தை உள்வாங்கிக் கொண்டு அந்த வார்த்தையில் இருப்பதையெல்லாம் தேடித்தரும் மென்பொருள்களை மனிதனே உருவாக்கியிருக்கிறான். மனிதனுக்கே இந்த அறிவு இருக்கும் போது, அத்தகைய மனிதனை படைத்த இறைவன் இதற்குச் சக்தி பெற்றவன் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை.* இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.

*وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ ۖ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَىٰ بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا*

_*🍃ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். "உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்'' (என்று கூறப்படும்).*_

*📖(அல்குர்ஆன் 17:13,14)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

நன்மைகளை வாரி - 43

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 43 ]*_

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 13 }*

*🏖வரிசையை*
           *சீராக்குவதன்*
                    *சிறப்புகள் { 01 }🏖*

*☄வரிசைக்கு நபிகளார்*
     *கொடுத்த முக்கியத்துவம்*

ﺣﺪﺛﻨﺎ ﺃﺣﻤﺪ اﺑﻦ ﺃﺑﻲ ﺭﺟﺎء، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻣﻌﺎﻭﻳﺔ ﺑﻦ ﻋﻤﺮﻭ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺯاﺋﺪﺓ ﺑﻦ ﻗﺪاﻣﺔ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺣﻤﻴﺪ اﻟﻄﻮﻳﻞ، _*ﺣﺪﺛﻨﺎ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ، ﻗﺎﻝ: ﺃﻗﻴﻤﺖ اﻟﺼﻼﺓ ﻓﺄﻗﺒﻞ ﻋﻠﻴﻨﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻮﺟﻬﻪ، ﻓﻘﺎﻝ: «ﺃﻗﻴﻤﻮا ﺻﻔﻮﻓﻜﻢ، ﻭﺗﺮاﺻﻮا، ﻓﺈﻧﻲ ﺃﺭاﻛﻢ ﻣﻦ ﻭﺭاء ﻇﻬﺮﻱ*_

_*🍃அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: (ஒரு நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை நோக்கித் தம் முகத்தைத் திருப்பி, வரிசைகளை நேராக்குங்கள்! நெருக்கமாக நில்லுங்கள்! ஏனெனில் என் முதுகுக்குப் பின்புறமாகவும் உங்களை நான் காண்கின்றேன் என்று கூறினார்கள்.*_

*📚(நூல்: புகாரி 719)📚*

*🏮🍂இந்தச் செய்தியில் நபியவர்கள் முதுகுக்குப் பின்புறமாகவும் பார்க்கிறார்கள் என்று இடம் பெற்றுள்ளது. சில வழிகேடர்கள் இந்த ஹதீஸைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல் இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியங்களை நியாயப்படுத்துவதற்காக தவறான பொருளில் பயன்படுத்தி வருகின்றனர்.*

*🏮🍂முதுகுக்குப் பின்புறமாக உள்ளவற்றை நபியவர்கள் பார்க்கிறார்கள் என்பதன் சரியான பொருள், நபியவர்கள் ருகூவு செய்யும் போது, சுஜூது செய்யும் போது பின்புறம் நிற்பவர்களின் மீது படுகின்ற பார்வையைத் தான் குறிப்பிடுகின்றார்கள்.* இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺑﺸﺎﺭ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻏﻨﺪﺭ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺷﻌﺒﺔ، ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﻗﺘﺎﺩﺓ، _*ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: " ﺃﻗﻴﻤﻮا اﻟﺮﻛﻮﻉ ﻭاﻟﺴﺠﻮﺩ ﻓﻮ اﻟﻠﻪ ﺇﻧﻲ ﻷﺭاﻛﻢ ﻣﻦ ﺑﻌﺪﻱ - ﻭﺭﺑﻤﺎ ﻗﺎﻝ: ﻣﻦ ﺑﻌﺪ ﻇﻬﺮﻱ - ﺇﺫا ﺭﻛﻌﺘﻢ ﻭﺳﺠﺪﺗﻢ "*_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ருகூஉவையும் சஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் "எனக்குப் பின்புறமாக' அல்லது "என் முதுகுக்குப் பின்புறமாக' நீங்கள் குனி(ந்து ருகூஉ செய்)யும் போதும் சிரவணக்கம் (சஜ்தா) செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.*_

*🎙அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),*

*📚நூல்: புகாரி 742, 6644📚*

*🏮🍂பொதுவாகத் தொழுகையில் ருகூவு அல்லது ஸஜ்தா செய்யும் போது முன்னால் இருப்பவருக்குப் பின்னால் உள்ள வரிசை தெரியத் தான் செய்யும். எனவே தான், நீங்கள் வரிசையைச் சரி செய்யாவிட்டால் ருகூவின் போது பின்புறம் நான் பார்த்து விடுவேன் என்று சாதாரண அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் சொன்னதை இப்படி அனர்த்தம் செய்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது.*

*🏮🍂ஒரு வாதத்திற்கு, பின்னால் உள்ளதைப் பார்க்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வைத்துக் கொண்டாலும் தொழுகையின் போது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காண்பித்துக் கொடுக்கிறான் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

இரகசிய ஞானம் உண்டா?*

❓ *இரகசிய ஞானம் உண்டா?*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு வகையான பாத்திரங்களை நான் நினைவில் வைத்துக் கொண்டு இருக்கிறேன். அவற்றில் ஒன்றை நான் பரப்பி விட்டேன். மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் என் அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும் என்று அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாக புகாரியில் ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. இது திருக்குர்ஆனின் 2:159,160 வசனத்திற்கு மாற்றமாக உள்ளதே!

▪ *பதில்:*

நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் இதுதான்:

صحيح البخاري

120 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي أَخِي، عَنِ ابْنِ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: " حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وِعَاءَيْنِ: فَأَمَّا أَحَدُهُمَا فَبَثَثْتُهُ، وَأَمَّا الآخَرُ فَلَوْ بَثَثْتُهُ قُطِعَ هَذَا البُلْعُومُ

120 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இரண்டு பை(செய்தி)களை மனனமிட்டேன். அவற்றில் ஒன்றை நான் (மக்களிடையே) பரப்பிவிட்டேன்; மற்றொன்றை நான் பரப்பியிருந்தால் (என்) அடித் தொண்டை வெட்டப்பட்டிருக்கும். (அவையனைத்தும் அரசியல் குழப்பங்கள் தொடர் பானவை.) 

அபூஹுரைரா (ரலி) அவர்கள் பரப்பாமல் விட்டு விட்டதாகத் தெரிவிக்கும் இந்தச் செய்தி எது என்பது குறித்த விளக்கம் எதுவும் ஹதீஸ்களில் காணப்படவில்லை. எனினும் நிச்சயமாக அந்தச் செய்திகள் மார்க்கம் தொடர்பான செய்திகள் அல்ல என்பதை அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ள முடியும்.

حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ إِنَّ النَّاسَ يَقُولُونَ أَكْثَرَ أَبُو هُرَيْرَةَ وَلَوْلَا آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ مَا حَدَّثْتُ حَدِيثًا ثُمَّ يَتْلُو إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلْنَا مِنْ الْبَيِّنَاتِ وَالْهُدَى إِلَى قَوْلِهِ الرَّحِيمُ إِنَّ إِخْوَانَنَا مِنْ الْمُهَاجِرِينَ كَانَ يَشْغَلُهُمْ الصَّفْقُ بِالْأَسْوَاقِ وَإِنَّ إِخْوَانَنَا مِنْ الْأَنْصَارِ كَانَ يَشْغَلُهُمْ الْعَمَلُ فِي أَمْوَالِهِمْ وَإِنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَلْزَمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشِبَعِ بَطْنِهِ وَيَحْضُرُ مَا لَا يَحْضُرُونَ وَيَحْفَظُ مَا لَا يَحْفَظُونَ

'அபூஹுரைரா அதிகமாக அறிவிக்கின்றாரே' என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்' என்று அபூஹுரைரா (ரலி) கூறி விட்டு, மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:159,160) ஆகிய இரு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். மேலும் தொடர்ந்து,

'மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரப் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்சாரிகளோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூஹுரைராவோ, முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) வயிறு நிரம்பினால் போதும் என்று நபி (ஸல்) அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்பாடம் செய்யாதவற்றை எல்லாம் நான் மனப்பாடம் செய்து கொண்டு இருந்தேன்' என்று அபூஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அஃரஜ்

நூல்: புகாரி 118

மார்க்கம் தொடர்பான எந்தச் செய்தியையும் மறைக்கக் கூடாது என்று மேற்கண்ட இரு வசனங்களும் கூறுவதால் தான் எதையும் மறைக்காமல் அறிவிப்பதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். எனவே அவர்கள் பரப்பாமல் விட்டு விட்டதாகக் கூறுவது மார்க்கம் தொடர்பான செய்திகள் அல்ல என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

அவை எது குறித்த செய்திகள் என்பதையும் அபூஹுரைரா (ரலி) அவர்களின் வார்த்தையிலிருந்தே விளக்கத்தைப் பெற முடியும். அந்தச் செய்திகளைச் சொல்லியிருந்தால் கழுத்து வெட்டப்பட்டிருக்கும் என்று கூறுகின்றார்கள். எனவே அரசியல், அதிகாரம் குறித்த செய்திகளாகவே அவை இருக்க முடியும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் குறித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். அந்த முன்னறிவிப்புக்கள் அன்றைய ஆட்சியாளர்கள் சிலருக்கு எதிராகவும் இருந்தன.

அது போன்ற செய்திகள் அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குத் தெரிந்திருந்து, அதைப் பரப்பினால் அன்றைய ஆட்சியாளர்களால் மரண தண்டனைக்கு உள்ளாக நேரிடும். இதையே அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் கூறியிருக்க முடியும். மார்க்கம் சம்மந்தப்பட்ட விஷயமாக இருக்க முடியாது.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
என்றும் இறைப்பணியில்...
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

மறுமையின்⛱* ⤵ *⛱ சாட்சிகள் - 09

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

          *⛱ மறுமையின்⛱*
                             ⤵
                    *⛱ சாட்சிகள் ⛱*

           *✍🏻...தொடர் ➖0⃣9⃣*

*☄ இறைத்தூதரின்*
                     *சாட்சிகள் [ 02 ]☄*

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻳﻮﺳﻒ، ﺣﺪﺛﻨﺎ اﻟﻠﻴﺚ، ﺣﺪﺛﻨﻲ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﺃﺑﻲ ﺣﺒﻴﺐ، ﻋﻦ ﺃﺑﻲ اﻟﺨﻴﺮ، *ﻋﻦ ﻋﻘﺒﺔ ﺑﻦ ﻋﺎﻣﺮ: ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺧﺮﺝ ﻳﻮﻣﺎ، ﻓﺼﻠﻰ ﻋﻠﻰ ﺃﻫﻞ ﺃﺣﺪ ﺻﻼﺗﻪ ﻋﻠﻰ اﻟﻤﻴﺖ، ﺛﻢ اﻧﺼﺮﻑ ﺇﻟﻰ اﻟﻤﻨﺒﺮ، ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻲ ﻓﺮﻁ ﻟﻜﻢ، ﻭﺃﻧﺎ ﺷﻬﻴﺪ ﻋﻠﻴﻜﻢ، ﻭﺇﻧﻲ ﻭاﻟﻠﻪ ﻷﻧﻈﺮ ﺇﻟﻰ ﺣﻮﺿﻲ اﻵﻥ، ﻭﺇﻧﻲ ﺃﻋﻄﻴﺖ ﻣﻔﺎﺗﻴﺢ ﺧﺰاﺋﻦ اﻷﺭﺽ - ﺃﻭ ﻣﻔﺎﺗﻴﺢ اﻷﺭﺽ - ﻭﺇﻧﻲ ﻭاﻟﻠﻪ ﻣﺎ ﺃﺧﺎﻑ ﻋﻠﻴﻜﻢ ﺃﻥ ﺗﺸﺮﻛﻮا ﺑﻌﺪﻱ، ﻭﻟﻜﻦ ﺃﺧﺎﻑ ﻋﻠﻴﻜﻢ ﺃﻥ ﺗﻨﺎﻓﺴﻮا ﻓﻴﻬﺎ»*

_*🍃ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப்போர் உயிர்த் தியாகிகளுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்)க்குத் திரும்பி வந்து, "(உங்களுக்கு முன்னேற்பாடுகளைச் செய்து வைப்பவனைப் போல்) நான் உங்களுக்கு முன்பே செல்கிறேன். நான் (அப்போது) உங்களுக்கு சாட்சியம் கூறுவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு பூமியின் கருவூலங்களின் திறவுகோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணைவைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும் நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொருவர் போட்டியிடுவீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
           *உக்பா பின்*
                    *ஆமிர் (ரலி)*

     *📚 நூல்: புகாரி (1344) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

Thursday, November 28, 2019

தவறான வாதங்கள்:

இறைவனுடைய கட்டளைக்கு மாறுசெய்ய வேண்டுமென்றோ, இறைத்தூதரின் வழிகாட்டுதலைப் புறக்கணிக்க வேண்டுமென்றோ எந்த முஸ்லிமும் எண்ண மாட்டான்.

இறைவனல்லாதவர்களைப் பிரார்த்தனை செய்பவர்கள் தங்கள் தரப்பில் சில நியாயங்கள் வைத்திருக்கிறார்கள். அதனடிப்படையிலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கின்றனர். சிந்தித்துப் பார்க்கும் போது அவர்களது வாதங்கள் யாவுமே அர்த்தமற்றதாக அமைந்துள்ளதை உணரலாம்.

பரிந்துரையை வேண்டுவது குற்றமாகுமா?

‘பெரியார்களைப் பிரார்த்திக்கும் நாங்கள் அவர்களுக்கு இறைத்தன்மை உண்டு என்று எண்ணவில்லை; மாறாக, அவர்களும் இறைவனின் அடிமைகள்’ என்றே கூறுகிறோம். ‘ஆயினும் அவர்கள் இறைவனது நெருக்கத்தைப் பெற்றுள்ளதால் அவர்கள் இறைவனிடம் பெற்றுத் தருவார்கள்’ என்றே நாங்கள் நம்புகிறோம். ‘சுயமாக எதுவும் அவர்கள் செய்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை; இவ்வாறு நம்புவது எப்படித் தவறாகும்?’

இது இவர்களின் தரப்பில் கூறப்படும் நியாயங்களில் ஒன்றாகும்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது இதில் நியாயம் இருப்பது போல் தோன்றினாலும் இதில் எந்த நியாயமும் இல்லை.

இறைவனின் ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்பவில்லை என்பது உண்மையே. ஆனால் மற்றொரு வகையில் இறைவனுக்குச் சமமான ஆற்றல் அந்தப் பெரியவர்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

எங்கிருந்து அழைத்தாலும், எத்தனை பேர் அழைத்தாலும், எந்த நேரத்தில் அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அனைத்தையும் ஒரே சமயத்தில் அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே சொந்தமானதாகும். இதே போன்ற ஆற்றல் அந்தப் பெரியார்களுக்கு உண்டு என்று இவர்கள் நம்புகிறார்கள்.

இதன் காரணமாகவே உலகின் பல பாகங்களிலிருந்தும் பலரும் அந்தப் பெரியார்களைப் பிரார்த்திக்கின்றனர். தங்களது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுப்பது போலவே பெரியார்களும் செவிமடுக்கின்றனர் என்று நம்பி இந்த விசயத்தில் இறைவனுக்குச் சமமாகப் பெரியார்களை நம்புகின்றனர்.

முழுக்க முழுக்க இறைத்தன்மை பெற்றவர்களாக மற்றவர்களை எண்ணுவது மாத்திரம் இணைவைத்தல் அன்று. மாறாக, இறைவனது தன்மைகளில் ஏதேனும் ஒரு தன்மை இறைவனுக்கு இருப்பது போலவே மற்றவர்களுக்கும் இருப்பதாக எண்ணுவதும் இணை வைத்தலாகும். இதைப் புரிந்து கொள்ளாததாலேயே இறைவனல்லாதவர்களைப் பிரார்த்திக்கின்றனர்.

அல்லாஹ்வையன்றி அவர்களுக்குத் தீமையும், நன்மையும் செய்யாதவற்றை வணங்குகின்றனர். ‘அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்’ என்றும் கூறுகின்றனர். ‘வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்’ என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:18)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் ‘அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை’ (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 39:3)

மக்கத்துக் காஃபிர்கள் பெரியார்கள் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கையை இவ்விரு வசனங்களும் தெளிவுபடுத்துகின்றன. இறைவனிடம் பரிந்துரை செய்வார்கள் என்பதற்காக மட்டுமே பெரியார்களை அவர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர். ஆனால் அதை அல்லாஹ் அங்கீகரிக்காது அவர்களைக் காஃபிர்கள் எனப் பிரகடனம் செய்து விட்டான்.

இறைவனிடம் பெற்றுத் தருவார்கள் என்ற எண்ணத்தில் கூட இறைவனல்லாத எவரையும் பிரார்த்திக்கலாகாது என்பதற்கு இது போதிய சான்றாகும்.

ஆ. உதாரணங்கள் ஆதாரங்களாகுமா?

திருக்குர்ஆனையும், நபிவழியையும் அலட்சியம் செய்துவிட்டு உதாரணங்களைக் காட்டுகின்றனர்.

அதாவது உயர் பதவியிலுள்ள ஒருவரை நாம் நேரடியாக அணுகவோ, சந்திக்கவோ இயலாது. நம்மைப் பற்றி அவரிடம் பரிந்து பேச இடைத் தரகர்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். அவர் மூலமாக நமது காரியத்தைச் சாதித்துக் கொள்கிறோம்.

இவர்களை விட மிக மிக உயர்வான நிலையிலுள்ள அல்லாஹ்வை நாம் எப்படி நேரடியாக அணுக முடியும்? இதற்காகவே பெரியார்களைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்கின்றனர்.

ஷைத்தான் இவர்களது தீய செயல்களை இவ்வாறே அழகானதாகக் காட்டுகிறான். உண்மையில் இதுவும் முட்டாள்தனமான வாதமேயாகும்.

உயர் பதவிகளில் உள்ளவர்களை நாம் நேரடியாக அணுக முடியாது என்பது உண்மை தான். ஏன் அணுக முடியவில்லை என்றால் அந்த அதிகாரிக்கு நம்மைப் பற்றித் தெரியாது. அந்த உயரதிகாரிக்கு எப்படி நம்மைப் பற்றித் தெரியாதோ அதே போல் இறைவனுக்கும் நம்மைப் பற்றி எதுவும் தெரியாதா? இந்தப் பெரியார்கள் நம்மைப் பற்றிச் சொன்னால் தான் இறைவனுக்கு நம்மைப் பற்றித் தெரியுமா? என்று இவர்கள் சிந்திக்கத் தவறி விட்டனர்.

சாதாரண உயர் அதிகாரியின் நிலை எதுவோ அது தான் இறைவனது நிலையும் என்றல்லவா இவர்கள் எண்ணுகின்றனர்!

யாவற்றையும் அறிந்து வைத்திருக்கின்ற, முக்காலமும் உணர்ந்து வைத்திருக்கின்ற, மனதில் மறைத்து வைத்திருக்கின்றவற்றையும் துல்லியமாக அறிகின்ற அந்த வல்லவனை அவனது அடிமைகளில் ஒருவரான அதிகாரிக்குச் சமமாக எண்ணுவதை விடவும் மோசமான உதாரணம் என்ன இருக்க இயலும்?

நம் வழக்குகளில் நாமே வாதாடுவதில்லை. ஒரு வக்கீலை நியமித்துக் கொள்கிறோம். அவ்வாறிருக்க இறைவனிடம் வாதாடும் வக்கீலாக வலிமார்களைக் கருதுவதில் என்ன தவறு? எனவும் இவர்கள் கேட்கின்றனர்.

நீதிபதியிடம் வாதாட வக்கீல் அவசியம் தான். வக்கீல், தன் வாதத் திறமையால்  குற்றவாளியையும் நிரபராதியாக்கி விடுவார்; நிரபராதியையும் குற்றவாளியாக்கி விடுவார். அதை நீதிபதியும் நம்பி தீர்ப்பு அளித்து விடுவார்.

இறைவனின் நிலைமை நீதிபதியின் இந்த நிலைமை போன்றது தானா? திறமையான வாதத்தினடிப்படையில் குற்றவாளியை நிரபராதியென தீர்ப்பளிக்கும் நீதிபதியைப் போல் இறைவனும் தவறான தீர்ப்பை வழங்கக் கூடியவன் தானா?

யார் உண்மையில் குற்றாவளி? யார் நிரபராதி? என்பது நீதிபதிக்குத் தெரியாதது போலவே இறைவனுக்கும் தெரியாது என்கிறார்களா?

இறைவனது நல்லடியார்களின் வேலையும் வக்கீலுடைய வேலை போன்றது தானா? குற்றவாளிகளை நல்லவர்கள் என்று இறைவனிடம் அவர்கள் வாதிடப் போகிறார்களா? இல்லை என்றால் வக்கீல் எதற்காக?

அல்லாஹ்வைப் பற்றிக் கூறுவதென்றால் வக்கீல், நீதிபதி, அதிகாரி என்றெல்லாம் உதாரணம் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். அல்லாஹ்வைப் போல் எதுவும் இல்லாததால் எதையும் உதாரணம் காட்டிப் பேசலாகாது என அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 16:74)

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்

(அல்குர்ஆன் 42:11)

அவனுக்கு நிகராக யாருமில்லை.

(அல்குர்ஆன் 112:4)

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை அவன் மறந்து விட்டான்.

(அல்குர்ஆன் 36:78)

அல்லாஹ்வுக்கு எதையும் உதாரணமாகக் கூறலாகாது என்பதை இவ்வசனங்கள் அறிவிக்கின்றன.

இ. பாவிகள் கடவுளை எப்படி நெருங்க முடியும்?

‘நாம் பாவங்கள் செய்தவர்கள். இறைவனின் பல கட்டளைகளை மீறியவர்கள். இவ்வாறிருக்க, எப்படி இறைவனிடம் கேட்க முடியும்? எங்கள் மேல் அல்லாஹ் கோபமாக இருக்கும் போது அவனது கோபத்தை அமைதிப்படுத்தத் தான் பெரியார்களைப் பிடித்துக் கொள்கிறோம்’ என்பது இவர்களின் மற்றொரு நியாயம்.

அதாவது இறைவனிடம் கேட்பதற்குரிய தகுதி தங்களுக்கு இல்லை என்று கூறிக் கொண்டு இவர்கள் திசை மாறிச் செல்கிறார்கள்.

அல்லாஹ்வின் கட்டளையை நாம் மீறியதால் நாம் அல்லாஹ்விடம் கேட்க முடியாது. அதனால் தான் அவ்லியாக்களிடம் கேட்கிறோம் என்போர் அளவற்ற அருளாளன் என்ற அல்லாஹ்வின் பண்பையே மறுக்கிறார்கள்.

‘அல்லாஹ் கோபக்காரன்; அவ்லியாக்கள் அளவற்ற அருளாளர்கள்’ என நம்பக் கூடியவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும். அல்லாஹ்வை விட அவ்லியாக்கள் அதிகமாக அருள் புரிவார்கள் என்பது இணை வைத்தலை விட கொடிய குற்றமாகும். இது அல்லாஹ்வை விட அவ்லியாக்களை உயர்த்தும் கொடுஞ்செயலாகும்.

இவர்களின் இந்த அறியாமையை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் சுட்டிக் காட்டுகிறான்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்’

(அல்குர்ஆன் 12:87)

மனிதன் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் தவறை உணர்ந்து தன்னிடம் கேட்டால் தனது அருள் உண்டு என அல்லாஹ் உத்திரவாதம் தருகிறான். பாவிகள் தன்னிடம் வரலாகாது என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக, பாவிகளையே அழைத்து என் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள் என்கிறான்.

ஈ. அல்லாஹ்வின் பாதையில்கொல்லப்பட்டவர்கள் உயிருடன் உள்ளனர்

வரட்டு வாதங்களைக் கூறி சமாதி வழிபாட்டை நியாயப்படுத்துவது போலவே குர்ஆனிலிருந்தும் கூட தவறான வியாக்கியானம் கொடுத்து இவர்கள் ஆதாரங்களைச் சமர்ப்பிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 2:154)

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.

(அல்குர்ஆன் 3:169)

மரணித்த பின்பும் நல்லடியார்கள் வாழ்கிறார்கள் என்று இரண்டு வசனங்களும் கூறுவதால் அவர்களை வழிபடலாம் என்பது இவர்களின் வாதம்.

பல நியாயமான காரணங்களால் இவர்களின் வாதம் முற்றிலும் தவறாகும்.

முதலாவது வசனத்தில் உயிருடன் உள்ளனர், எனினும் (அதை) நீங்கள் உணர மாட்டீர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் நீங்கள் தெரிந்து வைத்துள்ள அர்த்தத்தில் அல்ல. மாறாக இதை நீங்கள் உணர முடியாது என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகின்றான். நாம் உணர்ந்து கொள்ள இயலாத வேறொரு விதமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இரண்டாவது வசனத்தில் தங்கள் இறைவனிடம் அவர்கள் உயிருடன் உள்ளனர் என்கிறான். நம்மைப் பொருத்த வரை அவர்கள் மரணித்து விட்டாலும் இறைவனிடம் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் பேசுவதைக் கேட்கவோ, பதிலளிக்கவோ இயலாத நமக்குத் தெரியாத இன்னொரு வாழ்க்கையை அவர்கள் வாழ்வதாகத் தான் இந்த வசனங்கள் கூறுகின்றனவே அன்றி இவர்கள் நினைக்கின்ற அர்த்தத்தில் வாழ்கிறார்கள் எனக் கூறவில்லை.

அடுத்து இந்த வசனம் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) சொன்ன விளக்கத்தையும் இவர்கள் கவனிக்கத் தவறி விட்டனர்.

இந்த வசனம் பற்றி நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘அவர்களின் உயிர்கள் பச்சை நிறத்துப் பறவைக் கூட்டுக்குள்ளிருந்து சொர்க்கத்தில் விரும்பியவாறு சுற்றித் திரிகின்றன’ என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)

நூல்: முஸ்லிம் 3500

உயிருடன் உள்ளனர் என்பதன் பொருள் சொர்க்கத்து வாழ்வு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) விளக்கிய பின் அதற்கு மாற்றமாக இவர்கள் தரும் விளக்கம் தள்ளப்பட வேண்டியதாகும்.

இந்த நிலை கூட எல்லா நல்லடியார்களுக்கும் பொதுவானதன்று. அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களுக்கே உரியதாகும். மற்ற நல்லடியார்களுக்கு இந்த நிலைமை இல்லை.

மற்ற நல்லடியார்களின் நிலை என்ன என்பதைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

ஒரு நல்லடியார் கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவுடன் கேள்விகள் கேட்கப்படும். அவர் சரியாக பதில் கூறுவர். அதன் பின்னர் ‘புது மணமகனைப் போல் நீ உறங்கு! அல்லாஹ் உன் உறக்கத்திலிருந்து உன்னை எழுப்பும் வரை உறங்கு!’ எனக் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுருக்கம்)

அஹ்மத், திர்மிதீ ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.

உயிருடன் இருந்தாலும் கூட கியாம நாள் வரை எழாமல் உறங்கிக் கொண்டே இருப்பவர்களை அழைப்பது என்ன நியாயம்? இதையெல்லாம் கூட விட்டு விடுவோம். இவர்கள் நினைக்கின்ற விதமாக உயிருடன் இருப்பதாகவே வைத்துக் கொள்வோம்.

இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை – பொறுமை

இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை – பொறுமை

இன்று அரிதாகி வரும் நற்பண்புகளில், யாவரும் எளிதாகப் பெற முடியாத ஒன்று தான் பொறுமை என்னும் நற்பண்பு. பொறுமை என்பது சொல்லளவில் மிகச் சிறியதே. வெகு சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் “பொறுமை” என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது.

பொறுத்தார் பூமியாள்வார்,
பொறுமை கடலினும் பெரிது,
பொறுமை பூமியைக் காட்டிலும் பெரியது,
வலிமை உடையவரை விட பொறுமை உடையவரே மேலானவர்,
“ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.”

திருக்குறளின் பொருள் : பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்ளாது தண்டித்தவர்க்கு ஒரு நாள் மட்டுமே இன்பம் கிட்டும். அதனை பொறுத்தக்கொண்டவரின் புகழ், உலகம் உள்ளவரைக்கும் நிலைத்து நிற்கும்.

போன்ற அறிவுரைகள் பொறுமையின் பெருமைகளை எடுத்துக் காட்டுவதாக பல உதாரணங்கள் அமைந்துள்ளன.

பொறுமைக்கு இவ்வாறு பல உதாரணங்கள் கூறப்பட்டாலும், துன்பம், கவலை, துக்கம் போன்ற நிகழ்வுகள் வரும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இதை விட மிக அழகிய வழிமுறைகளை இஸ்லாம் கூறுகிறது.

பொறுமை ஒரு வெளிச்சம்

மனிதன் எதை இழந்தாலும் பெற்றுவிடலாம், ஆனால் பொறுமையை இழந்தவன் வாழ்க்கையையே இழந்தவனாகிறான் என்ற பழமொழிக்கு ஏற்ப பொறுமையை இழந்து கோபப்படும் போது வாழ்க்கையே ஒரு கேள்விக் குறியாகிவிடுகிறது. இருள்களிலி ருந்து வெளிச்சம் எவ்வாறு வழிகாட்டுகிறதோ அதே போல் இன்னல்களிலிருந்து காப்பாற்ற ஓர் வெளிச்சமாக பொறுமை இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். “அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். “சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி’ (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி),
நூல் : முஸ்லிம் 381

பொறுமை ஓர் அருட்கொடை

ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் பல விதமான சோதனைகளை அல்லாஹ் ஏற்படுத்துவான். அவ்வாறு அல்லாஹ் சோதிக்கும் போது அதை பொறுத்துக் கொண்டால், அதுவே விசாலமான அருட்கொடை என்றும், அதை விட வேற எதுவும் விசாலமான ஓர் அருட்கொடை இல்லை என்றும் நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்ட போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்து விட்டபோது, “என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானத்துடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். யார் (இன்னல்களைச்) சகித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை வேறெதுவும் எவருக்கும் வழங்கப்படுவதில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி ),
நூல் : முஸ்லிம் 1902

இறைநம்பிக்கையாளரின் பண்பு

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

அல்குர்ஆன் 2:177

மேற்கண்ட வசனத்தில் நன்மையான விஷயங்களை அல்லாஹ் பட்டியலிடுகிறான். அதில் ஒன்று தான் யார் தனக்கு வறுமை, நோய் வரும் போது பொறுமையை கடைபிடிக்கின்றாரோ அவர் நன்மை செய்பவர், உண்மையை கூறுபவர், இறைவனை அஞ்சுபவர் என்று அல்லாஹ் கூறியுள்ளான். அதாவது இறைநம்பிக்கையாளரின் பண்புகளில் ஒன்றாகும்.

நல்லவர்களின் பண்பு

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.

அல்குர்ஆன் 41:35

பொறுமை என்பது ஓர் வெளிச்சம், அருட்கொடை, இறைநம்பிக்கையாளரின் பண்பு, நல்லவர்களின் பண்பு என பொறுமைக்கு பல உதாரணங்களை இஸ்லாம் கூறுகிறது.

பொறுமையின் மூலம் உதவி தேடுதல்சோதனைகள் வரும் போது பொறுமையாக இருந்து, தொழுகையின் மூலமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து பாதுகாப்பு தேட வேண்டும் என்று கீழ்க்கண்ட வசனங்கள் உணர்த்துகின்றன.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

அல்குர்ஆன் 2:45

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

அல்குர்ஆன் 2:153

சோதனைகள் வருகின்ற வழிகளையும், அப்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் இஸ்லாம் கூறுகிறது.

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வது

செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத்தருகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 2:155, 157

உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.

அல்குர்ஆன் 47:31

உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.

அல்குர்ஆன் 3:186

இழப்புகள் ஏற்படும் போது சகித்துக் கொள்வது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்’ என்பது) அவருடைய இரு கண்களைக் குறிக்கும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
நூல் : புகாரி 5653

இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு கண்கள் மிகவும் அவசியமாகும். உதாரணமாக நாம் இந்த கண்ணிருப்பதால் தான் அதிகம் பணம் சம்பாதிக்கிறோம், அதிக செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம். அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானதென்று தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு காரணம் இந்த கண் தான். எனவே இந்த ஒரு மிகப்பெரிய பாக்கியத்தை அல்லாஹ்விற்காக நாம் இழப்பதின் காரணத்தினால் அல்லாஹ் நமக்கு செர்க்கத்தை தருகிறேன் என்று கூறுகிறான். அதற்காக நாம் புலம்பக் கூடாது. அல்லாஹ்வை திட்டாமல், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமக்குச் சுவனம் கிடைக்கும்.

குழந்தைகள் மரணிப்பதை சகித்துக் கொள்வது

இஸ்லாமிய மார்க்கம் மறுமை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் இழந்து விட்ட இழப்புக்கு ஓர் ஈடாக, அவர் சந்தித்த சோதனைக்கு பரிகாரமாக சுவனத்தை பரிசாக அளிக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) இறந்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி ),
நூல் : புகாரி 1248

ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனை பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் செர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும் அந்த அளவிற்கு உயர்ந்த செயலாக இதை இறைவன் மதிப்பிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லி ரிமுடைய பிள்ளைகளில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்துபோனால், அந்த மனிதரை நரகம் தீண்டாது; (“உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது’ என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி ),
நூல் : முஸ்லிலி ம் 5128

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரது உயிரை நான் கைப்பற்றிவிடும் போது நன்மையை நாடிப் பொறுமை காப்பாரானால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 6424

மனிதர்களை சோதிப்பதற்காக

வறுமை மற்றும் நோயைச் சகித்துக் கொள்வது வறுமை என்பது மனிதர்களை சோதிப்பதற்காக இறைவன் தருவது.

அதற்கு பகரமாக மறுமையில் அவர்களுக்கு அனைத்து சுகங்களும் தரப்படும். அதே போல் இன்று தமிழகத்தில் பரவி வரும் டெங்கு, சிக்குன் குன்யா, மற்றும் விஷக் காய்ச்சல் எல்லாம் அல்லாஹ்வின் சோதனையாகும். இந்த சோதனையின் போது பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளை சொல்லாமல் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு அல்லாஹ்விடம் பிராத்தனை செய்ய வேண்டும்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், “அது, தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்” என்று தெரிவித்தார்கள். மேலும், “கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள(விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
நூல் : புகாரி 3474, 5734

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்கüடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, “அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!” என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம்; உங்கüல் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்” என்று சொன் னார்கள்.

நான், “(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஆம்’ என்று கூறிவிட்டுப் பிறகு, “ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
நூல் : புகாரி 5660

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான் “சரி! (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், “(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலி ப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன்.

அப்போது (என் உடலிலிலி ருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்” என்று சொன்னார்கள். இப்பெண்மணி “நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆயினும், (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்” என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 5032

இன்று போன்ற வறுமை மற்றும் நோய்களின் மூலம் சோதனைகள் வரும் போது நமக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு பகரமான உடல் நலத்தை, அல்லது வேறு விதமான நன்மைகளை வழங்குவான் என்ற நம்பிக்கையுடன் பொறுமையாக இருக்க வேண்டும்.

நம்மை யாராவது அடித்தால் அல்லது திட்டினால் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு கஷ்டத்தைக் கொடுத்து சோதிக்கும் போது, இதை நாம் பொறுத்துக் கொள்ளாமல் தன்னை தானே மாய்த்துக்கொள்கிறோம். இவ்வாறு செய்வதை நபி (ஸல்)
அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

ஹசன் அல்பஸ்ரீ அவர்கள் கூறியதாவது: உங்களுக்கு முன்னிருந்த (பனூ இஸ்ராயீல்) மக்களிடையே ஒருவர் இருந்தார். அவருடைய உடலில் ஒரு கொப்புளம் கிளம்பியது. அது அவரைத் தொல்லைபடுத்திய போது (பொறுமை இழந்த) அவர் தமது அம்புக் கூட்டிரிருந்து ஓர் அம்பை உருவி கொப்புளத்தில் பாய்ச்சினார். (கொப்புளம் உடைந்து) இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது. இறுதியில் அவர் இறந்து போனார். உங்கள் இறைவன் “(என் அடியான் அவசரப்பட்டு தன்னை அழித்துக்கொண்டதால்) அவன் மீது நான் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டேன்” என்று கூறினான்.

(இதை ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷைபான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:)

பிறகு ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் (பஸ்ராவிலுள்ள) பள்ளிவாசலை நோக்கித் தமது கையை நீட்டியவாறு, “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸைத் தாம் செவியுற்றதாக இந்தப் பள்ளிவாசலில் வைத்துத்தான் எனக்கு அறிவித்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பவர் : ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல் : முஸ்லிலி ம் 180

மன வேதனையின் போது சகித்துக் கொள்வது மனிதன் வாழ்க்கையில் துன்பம் என்பது கண்டிப்பாக வந்து சென்று கொண்டே இருக்கும். பொறுமை மேற்கொள்வது இறைநம்பிக்கையாளனின் கடமையாகும். ஆனால் பல துன்ப நேரங்களில் கன்னத்தில் அறைந்து கொள்வதும், சட்டையைக் கிழித்துக் கொள்வதும், ஒப்பாரி வைத்து அழுவதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். துன்பங்கள் நேரும் போது படைத்தவன் நம்மை சோதிக்கிறான் என்றெண்ணி நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து, இறைவா இந்த சோதனைக்குப் பகரமாக கூலியைக் கொடு. இதை விட சிறந்ததை வழங்கு என்று கூற வேண்டும்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது “நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

(அல்குர்ஆன் 2:155-157)

பிறர் தரும் தொல்லைகளைப் சகித்துக் கொள்வது ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருந்தால் பல துன்பங்களையும், கஷ்டங்களையும் சந்திக்க நேரிடும், அவ்வாறு அடையும் போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை வெளிப்படையாக கூறும் போது கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். அதே போல் நாமும் ஏகத்துவ கொள்கையில் உறுதியாக இருந்தால் பிறர் தரும் துன்பத்தையும், சங்கடத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்று கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் உணர்த்துகிறான்.

உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.

அல்குர்ஆன் 3:186

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.

அல்குர்ஆன் 6:34

(முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! பலம் பொருந்திய நமது அடியார் தாவூதை நினைவூட்டுவீராக! அவர் (நம்மிடம்) திரும்புபவராக இருந்தார்.

அல்குர்ஆன் 38:17

யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.

அல்குர்ஆன் 42:43

போரில் துன்பங்களை சகித்துக் கொள்வது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
நூல் : புகாரி 3026, 2833

உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கüன் அடிமையாகவும் அவர்களுடைய எழுத்தராகவும் இருந்த சாலிம் அபுந் நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள். அதில் எழுதியிருந்ததை நான் படித்துக் காட்டினேன். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாட்கüல் ஒருமுறை சூரியன் உச்சி சாயும் வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

பிறகு மக்கüடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தலானார்கள்: மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரைத் தவிர்க்க வாய்ப்பüத்து) அமைதி நிலை தரும்படி கேளுங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்து விடாமல் போரின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருங்கள். மேலும், சொர்க்கம் வாட்கüன் நிழல்கüல் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டு, “இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! இ(ப்பகை)வர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

நூல் : புகாரி 2956, 2966

போர்க்களத்தில் எதிரிகளை எதிர்த்து பொறுமையுடனும், (இறைவனுக்காக) தூய எண்ணத்துடனும், புறமுதுகிட்டு ஓடாமலும் போர் செய்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நின்று, “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி),

நூல் : முஸ்லிம் 3830

இறை உதவி வரும் வரை பொறுமையைக் கடைப்பிடித்தல்

(முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்.

அல்குர்ஆன் 10:109

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார்.

அல்குர்ஆன் 68:48

வணக்கங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்வது

வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன். எனவே அவனை வணங்குவீராக! அவனது வணக்கத்திற்காக (சிரமங்களைச்) சகித்துக் கொள்வீராக! அவனுக்கு நிகரானவனை நீர் அறிகிறீரா?

அல்குர்ஆன் 19:65

(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.

அல்குர்ஆன் 20:132

நபி (ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய தரிசு நிலங்களை (அன்சாரிகளுக்கு) வருவாய் மானியமாகத் தர விரும்பினார்கள். அதற்கு அன்சாரிகள், (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் எங்களுக்கு வருவாய் மானியம் வழங்குவதைப் போன்றே எங்கள் முஹாஜிர் சகோதரர்களுக்கும் வருவாய் மானியம் வழங்காத வரை (நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டோம்) என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(அன்சாரிகளே!) எனக்குப் பின் (சிறிது காலத்திற்குள்ளாகவே ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆகவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் (காலம்) வரை பொறுமையைக் கடைப்பிடியுங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி 2376

கோபத்தின் போது பொறுமையைக் கடைபிடித்தல்

ஷைத்தான் மனிதனை ஆக்கிரமிப்பதற்கு அவனுடைய முதல் வேலை மனிதனுக்கு கோபத்தைச் சீண்டி விடுவதுதான். தேவையில்லாத விஷயத்திற்கு ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் நிற்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு கடும் சொற்களால் காயப்படுத்துவார். சிலவேளை அதையும் கடந்து சட்டைக் கையை மடக்கி முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். அதே போல் கோபத்தினால் பல விபரீதமான காரியங்கள் நடப்பதை நாம் காண்கிறோம்.

மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான், இவருக்கு சமுதாயம் வீரன் என்று பட்டம் சூட்டி விடும். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இவன் வீரனல்ல. வீரன் என்பவன் யாரென்றால் தனக்கு கோபம் வரும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கக் கூடியவன் தான் வீரன் என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன்” என்று கூறினார்கள். மக்கள், “அப்படியானால், வீரன் என்பவன் யார், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே (வீரன் ஆவான்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி),

நூல் : முஸ்-லிம் 5086

கோபம் மனிதனுக்குத் தேவைதான். தேவை இல்லை என்று கூறிட முடியாது ஆனால் அதை தேவைக்கேற்ப பிரயோகிக்க வேண்டும்.

பழி தீர்ப்பதை விட பொறுமையே சிறந்தது

ஒருவரை பலிழிக்குப் பழிலி வாங்குவதை விட பொறுமையை கடைப்பிடிப்பதே சிறந்து என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது. பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்!

அல்குர்ஆன் 16:126-127

லுக்மான் தனது மகனுக்கு பொறுமையை போதித்தார்

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னால் வாழ்ந்த நல்லடியாரான லுக்மான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அவர் தன் மகனிடம் இறைவனுக்கு இணைகற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்க வேண்டும், பெற்றோருக்கு உதவ வேண்டும், பிறரிடத்தில் அழகிய முறையில் நடக்க வேண்டும், நல்லவர்களின் வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டும், தர்மம் வழங்க வேண்டும், நன்மையை ஏவி, தீமையைத் தடு, சோதனை வரும் போது பொறுமையாக இருக்க வேண்டும், பிறரிடத்தில் கண்ணியமாக நடக்க வேண்டும், கர்வமாக நடக்கக் கூடாது என்று மிக அழகான முறையில் அறிவுரை வழங்கியுள்ளார். சகித்துக் கொள்ளுதல் என்ற செயலை மிக சிறப்புக்குரிய காரியமாக அவர்கள் தன் மகனிடம் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.

அல்குர்ஆன் 31:17

யூசுப் (அலை) அவர்களின் பொறுமை

“எங்கள் தந்தையே! நாங்கள் போட்டி போட்டு ஓடினோம். எங்கள் பொருளுக்கருகில் யூஸுஃபை விட்டுச் சென்றோம். அப்போது அவரை ஓநாய் தின்று விட்டது. நாங்கள் உண்மை கூறுவோராக இருந்த போதும் நீங்கள் எங்களை நம்புபவராக இல்லை” என்றனர். அவரது சட்டையைப் பொய்யான இரத்தத்துடன் கொண்டு வந்தனர். “உங்கள் உள்ளங்கள் உங்களுக்கு ஒரு காரியத்தை அழகாகச் சித்தரித்து விட்டன. அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன். நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்” என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:17-18

அய்யூப் (அலை) அவர்களின் பொறுமை

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூத, கிறித்தவர்கள் இவரை யோபு என்பர். இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர். பொறுமைக்கு எடுத்துக்காட்டாக இவர் அமைந்துள்ளார்.

(அவரது உட-லில் புழுக்கள் உற்பத்தியாகின என்றெல்லாம் கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.)

“எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்” என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

அல்குர்ஆன் 21:83-84

நபி (ஸல்) அவர்களின் பொறுமை

பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நன்மை செய்தோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

அல்குர்ஆன் 11:115

தன் மகனாரின் மரணத்தை சந்தித்த நபியவர்கள் வரம்பு மீறியதில்லை. மடத்தனமான வார்த்தைகளை பேசியதில்லை. மாறாக பொறுமையாக இருந்துள்ளார்கள்.

மகன் இறந்த போது

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ர-லிலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “அவ்ஃபின் புதல்வரே!” என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு “கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக்கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்” என்றார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி 1303

கொலை செய்வதாக மிரட்டியவரிடம்

நபிகளாரை வாளால் மிரட்டி பின்னர் வாள் தன்னிடம் வந்த போதும் அந்த நபரை நபிகளார் எதுவும் சொல்லாமலும் கண்டிக்காமலும் பொறுமையை கடைபிடித்தார்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (“தாத்துர் ரிகாஉ’ எனும்) போருக்காக “நஜ்த்’ நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம். (போரை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்துசேர்ந்தார்கள். (மதிய ஓய்வு கொள்ளும் நண்பகல் நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே இறங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்கள் தமது வாளை அந்த மரத்தின் கிளையொன்றில் தொங்கவிட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்று, நிழல் பெற்று (ஓய்வெடுத்து)க் கொண்டிருந்தனர்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களை அழைத்துக்) கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் என்னிடம் வந்து (எனது) வாளை (தமது கையில்) எடுத்துக்கொண்டார். உடனே நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் என் தலைமாட்டில் நின்றிருந்தார். (உறையிலிலிருந்து) உருவப்பட்டவாள் அவரது கையில் இருப்பதை உடனே உணர்ந்தேன். அப்போது அவர், “என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?” என்று என்னிடம் கேட்டார்.

நான், “அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். பிறகு மீண்டும் அவர், “என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?” என்று கேட்டார். நான் “அல்லாஹ்’ என்றேன். உடனே அவர் வாளை உறையிலிட்டுவிட்டார். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார். பிறகு அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையிடவில்லை (கண்டிக்கவில்லை).

அறிவிப்பவர் : ஜாபிர் (ர-லி),

நூல்: முஸ்லிம் 4585

கடுமையாக நடந்து தர்மம் கேட்டவரிடம்தர்மம் கேட்கும் போது நபிகளாரை முள்மரத்தில் தள்ளிவிட்டு அவர்களின் சால்வை முள்ளில் சிக்கிக் கொண்டது. இப்படி முரட்டுத்தனமாக நடந்தவர்களிடம் கூட நபிகளார் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மேலும் சிலர் நேர்மையாக பங்கிடவில்லை என்று கடுமையான வாசகத்தை கூறியபோது கோபப்பட்ட நபிகளார் நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தை நினைத்துப்பார்த்து பொறுமையாக இருந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “ஹுனைன்’ போரிலி-ருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; “சமுரா’ என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ü விட்டார்கள். நபியவர்கüன் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, “என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்கüன் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்கüடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காண மாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி-),

நூல் : புகாரி 2821

நபிகளாரின் நீதத்தை சந்தேகித்த போது

நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அன்சாரிகளில் ஒருவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார்.

நான், “நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்கüடம் சொல்வேன்” என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கüடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கüடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அüத்தது. அவர்களுடைய முகமே (நிறம்) மாறிவிட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்கüடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் “(இறைத்தூதர்) மூசா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக்கொண்டார்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி-),

நூல் : புகாரி 6100

வரம்புமீறிய பெண்ணிடம் பொறுமை போதித்த நபிகளார் அனஸ் பின் மாலி-க் (ர-லி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், “இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அப்பெண்மணி, “ஆம் (தெரியும்)” என்று கூறினார். அனஸ் (ர-லி) அவர்கள் கூறினார்கள்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுதுகொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது, “அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண், “என்னைவிட்டு விலகிச் செல்வீராக. எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை (அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்)” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்து சென்றுவிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அவ்வழியே சென்றார். அவர், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டார். அப்பெண், “எனக்கு அவர் யாரென்று தெரியாது” எனக் கூறினாள். அம்மனிதர், “அவர்கள் தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)” என்று சொல்ல அவள், நபி (ஸல்) அவர்கüன் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. ஆகவே அவள், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை” என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள், “பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும்” என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 7154

மகளுக்கு பொறுமை போதித்த நபிகளார்

நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் (ஸைனப்-ர-லி) “தமது குழந்தை’ அல்லது “தம் மகன்’ இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். செய்தி கொண்டு வந்தவரிடம், “என் மகளிடம் சென்று, எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்!” என்று கூறியனுப்பினார்கள்.

அவர் (சென்றுவிட்டு) திரும்பிவந்து “தங்கள் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுத் தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும் எனக் கூறுகிறார்” என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல் (ரலி-) ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன்.

(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தை கொடுக்கப்பட்டது; இற்றுப்போன பழைய தோல் பையில் இருப்பதைப் போன்று (குழந்தையின் மார்பு ஏறி இறங்கிற்று). அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. சஅத் பின் உபாதா (ர-லிலி) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரே, என்ன இது (ஏன் அழுகிறீர்கள்)?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்” என்றார்கள்.

அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ர-லி),

நூல் : முஸ்லிம் 1682, புகாரி7448

நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரும் நபி (ஸல்) அவர்(களின் இறப்பு நெருங்கியபோது அவர்)களுக்கு அருகில் இருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலிலி-) அவர்கள் நடந்துவந்தார்கள். அவரது நடை சிறிதும் பிசகாமல் அப்படியே நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், “என் மகளே! வருக!” என்று வரவேற்றார்கள். பிறகு அவரை “தமது வலப் பக்கத்தில்’ அல்லது “இடப் பக்கத்தில்’ அமர்த்திக்கொண்டார்கள். பிறகு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய பதற்றத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது அவரிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே?” என்று கேட்டேன்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தபோது ஃபாத்திமாவிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சென்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு ஃபாத்திமா,

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை” என்று கூறிவிட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா (ர-லி) அவர்களிடம் நான், “உங்கள் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்து நம்பிக்கையுடன் கேட்கிறேன். அந்த இரகசியம் என்னவென்று நீங்கள் சொல்லி-யே ஆகவேண்டும்” என்றேன். ஃபாத்திமா, “சரி! இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டுப் பின்வருமாறு தெரிவித்தார்:

முதலாவது முறை என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு முறை குர்ஆனை ஓதிக்காட்(டி நினைவூட்)டுவார். ஆனால், அவர் இந்த முறை இரண்டு தடவை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடியாக (இவ்வுலகைவிட்டு) சென்றுவிடுவேன்.

ஆகவேதான், உங்கள் முன்னிலையில் நான் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, “ஃபாத்திமா! “இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது “இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?” என்று இரகசியமாகக் கேட்டார்கள். ஆகவேதான், உங்கள் முன்னிலையில் அவ்வாறு சிரித்தேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ர-லி),

நூல்: முஸ்லிம் 4844

மகன் இகழ்ந்த போது பொறுமை மேற்கொண்ட நபித்தோழி ஹாரிஸா பின் சுராகா (ரலி-) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ர-லி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் “ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த்தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ர-லி),

நூல் : புகாரி 2809

பொறுமை கடைபிடித்து சொர்க்கவாதியான பெண்மணி

(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ர-லி) அவர்கள் என்னிடம், “சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?” என்று கேட்டார்கள். நான் “சரி! (காட்டுங்கள்)” என்று சொன்னேன். அவர்கள், “(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், “நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்” என்று சொன்னார்கள். இப்பெண்மணி “நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆயினும், (வ-லிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலி-ருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்” என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 5032

புறம் பேசுதல்

*👺👺மீள் பதிவு👺👺* 

*🌐புறம் பேசுதல் உங்களை நரகத்தில் சேர்த்துவிடும்🌐*

 *🌎அல்லாஹும் அவனின் தூதரின் எச்சரிக்கை🌎*

 *🏓புறம் பேசுதல்🏓*

 *🕋புறம் பேசுவது சம்பந்தமான குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் 🕋:*

 *✍குறை கூறிப் புறம் பேசும்ஒவ்வொருவனுக்கும் கேடு தான்✍*

 *திருக்குர்ஆன் 104:1* 

📕நம்பிக்கை கொண்டோரே ! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்!
சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர்
மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின்
மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை
அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.📕

 *திருக்குர்ஆன் 49:12* 

 *✍✍அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *(ஒரு முறை)* *அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (எங்களிடம்) , ” புறம் பேசுதல் என்றால்* *என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?” என்று* 
 *கேட்டார்கள். அதற்கு மக்கள் , ”அல்லாஹ்வும்* *அவனுடைய தூதரும் நன்கறிந்தவர்கள் ”* *என்று பதிலளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர்* *உம்முடைய சகோதரரைப் பற்றி அவர் விரும்பாத ஒன்றைக்* 
 *கூறுவதாகும் ” என்று பதிலளித்தார்கள். அப்போது , ” நான் சொல்லும் குறை என் சகோதரரிடம்* *இருந்தாலுமா ? ( புறம் பேசுதலாக ஆகும்) , கூறுங்கள் ” என்று* *கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் , ” நீர்* 
 *சொல்லும் குறை உம்முடைய சகோதரரிடம் இருந்தால்தான் , நீர்* *அவரைப் பற்றிப் புறம்பேசினீர் என்றாகும் நீர் சொன்ன குறை *அவரிடம்*இல்லாவிட்டாலோ ,நீர் அவரைப் பற்றி* *அவதூறு சொன்னவராவீர் ”* *என்று கூறினார்கள்✍✍.*

 *நூல் : முஸ்லிம் 5048* 

📘📘நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் மிஃராஜிற்கு கொண்டு செல்லப்பட்ட போது ஒரு கூட்டத்தார்களை கடந்து
சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம்
தங்களுடைய முகங்களையும், நெஞ்சையும் பிளந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள் இவர்கள்
தான் (புறம் பேசி) மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக்கொண்டிருந்தார்கள் என்று கூறினார்.📘📘

 *நூல்: அபூதாவூத் 4235* 

 *📚அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:📚*

 *✍✍✍( ஆதாரமில்லாமல்பிறரைச்) சந்தேகிப்பதாக குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.* *ஏனெனில் சந்தேகம் கொள்வது , பெரும் பொய்யாகும்.* 
 *(பிறரைப் பற்றித்) துருவித்துருவிக் கேட்காதீர்கள் ;* *( அவர்களின் அந்தரங்கம் பற்றி)* *ஆராயாதீர்கள். (நீங்கள் வாழ்வதற்காகப் பிறர் வீழ வேண்டுமெனப்)* *போட்டியிட்டுக்கொள்ளாதீர்கள் ; பொறாமை கொள்ளாதீர்கள் ;* 
 *கோபம் கொள்ளாதீர்கள்.* *பிணங்கிக்கொள்ளாதீர்கள். (மாறாக)* *அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்)* *சகோதரர்களாய் இருங்கள்✍✍✍.*

 *இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.* 
 *நூல் : முஸ்லிம் 5006* 

📗📗📗இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு மண்ணறைகளை (கப்றுகளை)க்
கடந்து சென்றார்கள். அப்போது (மண்ணறை களிலுள்ள) இவ்விருவரும் வேதனை
செய்யப் படுகிறார்கள். ஆனால் மிகப்பெரும் (பாவச்) செயலுக்காக (இவர்கள்)
இருவரும் வேதனை செய்யப்படவில்லலை. இதோ! இவர் (தம் வாழ்நாளில்) சிறுநீர்
கழிக்கும் போது (தம் உடலை) மறைக்க மாட்டார். இதோ! இவர் (மக்களிடையே) கோள்
சொல்லி (புறம்பேசி)த் திரிந்து கொண்டிருந்தார் என்று கூறினார்கள். பிறகு பச்சைப் பேரீச்ச மட்டையொன்றைக் கொண்டுவரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து இவர் (மண்ணறை) மீது ஒன்றையும் அவர் (மண்ணறை) மீது ஒன்றையும் நட்டார்கள்.
பிறகு, இவ்விரண்டின் ஈரம் உலராதவரை இவர்களின் வேதனை குறைக்கப்படலாம் என்று சொன்னார்கள்.📗📗📗

 *நூல்: புகாரி 6052* 

 *✍ஒரு முஸ்லிமின் மயானத்தில் உரிமையும் இல்லாமல் வரம்பு மீறுவதுதான் தண்டனைகளிலே மிகப்பெரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍.*

 *நூல்: அபூதாவூத் 4233* 

📙அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியார் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார்.
அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட
அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.📙

 *நூல்: புகாரி 6477* 

 *✍✍நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:            ஓர் அடியார்* *அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஓரு வார்த்தையை* *சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக* *யோசிக்காமல்)* *பேசுகிறார். அதன் காரணமாக* 
 *அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை* *உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார்* *அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு* *வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன்* 
 *பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்)* *பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்✍✍.*

 *இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: புகாரி 6478*

📕📕யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறுவாரோ அவரை அல்லாஹ், சகதியும், நரகவாசிகளின் சீலும் சலமும் கலந்திருக்கின்ற மலையில் தங்க வைப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📕📕

 *நூல்: அபூதாவூத் 3123* 


அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

நன்மைகளை வாரி - 42

_*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*_

_*✍🏼...நன்மைகளை வாரி*_
                          ⤵
         _*வழங்கும் தொழுகை*_

         _*✍🏼...தொடர் [ 42 ]*_

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 12 }*

*☄முதல் வரிசையின்*
            *சிறப்புகளும்,*
                     *நன்மைகளும் [ 04 ]*

*☄வரிசையின் வலது புறம்*
            *நிற்பது சிறந்ததா❓☄*

*🏮🍂தொழுகை வரிசையின் வலது புறத்தைச் சிறப்பித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாகவே உள்ளன.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வும், மலக்குமார்களும் (தொழுகை) வரிசைகளில் வலதுபுறத்தார்கள் மீது ஸலவாத்துக் கூறுகின்றனர்*_

*🎙அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)*

*📚நூல்: அபூதாவூத் (578)📚*

*🏮🍂இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் "உஸாமா பின் ஸைத்' என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் ஆவார்.*

*☄''இவர் ஒரு பொருட்டாக மதிக்கத் தக்கவர் அல்ல'' என இமாம் அஹ்மத் விமர்சித்துள்ளார்கள்.*

*☄யஹ்யா பின் ஸயீத் அவர்கள் இவரைப் பலவீனமாக்கியுள்ளார்கள்.*

*☄''இவருடைய ஹதீஸ்கள் எழுதிக் கொள்ளப்படும். இவரை ஆதாரமாகக் கொள்ளப்படாது'' என இமாம் அபூ ஹாதிம் விமர்சித்துள்ளார்கள்*

*☄''இவர் உறுதியானவராக இல்லை'' என இமாம் நஸாயீ கூறுகிறார்.*

*☄''இமாம் முஸ்லிம் இவரை ஆதாரமாகக் கொள்ளவில்லை. இவருடைய ஹதீஸ்களை துணைச் சான்றாகவே பதிவு செய்துள்ளார்கள்'' என இப்துல் கத்தான் அல்ஃபாஸி கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் 1 பக்கம் 183)*

*☄மேலும் மேற்கண்ட அறிவிப்பாளர் தொடரில் ''முஆவியா இப்னு ஹிஸாம்'' என்றொரு அறிவிப்பாளரும் இடம்பெறுகிறார். இவரையும் இமாம்கள் குறைகூறியுள்ளனர். எனவே இவரும் பலவீனமானவர் ஆவார்.*

*🏮🍂வரிசைகளில் வலது புறத்தைச் சிறப்பித்து வரக்கூடிய அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவையாக இருப்பதால் வலது புறத்தில் நிற்பதும், இடது புறத்தில் நிற்பதும் சமமே.*

*ஆனால் இமாமுடன் தொழுபவர் ஒருவராக மட்டும் இருந்தால் அவர் இமாமின் வலது புறத்தில் தான் நிற்க வேண்டும்.*

_*🍃இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் வீட்டில் ஓர் இரவில் தங்கினேன். (அன்றிரவு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில்) இஷாத் தொழுகை தொழுதுவிட்டு (வீட்டிற்கு) வந்து நான்கு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு உறங்கினார்கள். பின்னர் எழுந்து (இரவுத் தொழுகைக்காக) நின்றார்கள். நான் சென்று (அவர்களுடன்) அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். அவர்கள் (தொழுது கொண்டிருந்த) என்னை (இழுத்து) தமது வலப் பக்கத்தில் நிறுத்திவிட்டு ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். ....*_

*📚நூல்: புகாரி (697)📚*

_*🍃அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கும் என் தாயாருக்கும், அல்லது என் சிறிய தாயாருக்கும் (தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள். அப்போது என்னைத் தமக்கு வலப் பக்கத்திலும் பெண்ணை எங்களுக்குப் பின்னாலும் நிறுத்தினார்கள்.*_

*📚நூல்: முஸ்லிம் (1171)📚*

*🏮🍂இமாமுடன் ஒருவர் மட்டும் நின்று தொழும் போது தான் அவர் இமாமிற்கு வலது புறம் நிற்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் வந்துவிட்டால் இமாம் முன்னால் சென்று விடுவார். பின்னர் வலதும், இடதும் சமமாகத் தான் இருக்க வேண்டும். இதுவும் வரிசையை சீராக ஆக்குவதில் உள்ளதாகும். பின்வரும் ஹதீஸில் ஒரு ஸஹாபி மட்டும் நபி (ஸல்) அவர்களுடன் தொழும் போது வலது புறம் நின்றார்கள். பின்னர் அதிகமான மக்கள் வந்ததும் அவர்கள் நபிகள் நாயகத்திற்கு பின்னால் வந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.*

_*🍃அனஸ் ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தொழுவார்கள். (ஒரு நாள்) நான் சென்று அவர்களுக்கு விலாப் பக்கத்தில் நின்று கொண்டேன். இன்னொரு மனிதர் வந்து அவரும் நின்றுகொண்டார். இறுதியில் நாங்கள் ஒரு கூட்டமாகவே ஆகிவிட்டோம். தமக்குப் பின்னால் நாங்கள் நிற்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்ததும் தொழுகையைச் சுருக்கலானார்கள்.*_

*📚நூல்: முஸ்லிம் (2014)📚*

*🏮🍂வலது புறத்தில் நிற்பதை மிகவும் சிறப்பாக மக்கள் விளங்கி இருப்பதன் காரணத்தினால் சில பள்ளிகளில் இடது புறத்தை அப்படியே விட்டுவிட்டு வலது புறத்தில் மட்டும் நிற்கின்றனர். இது வரிசைகளுக்குரிய ஒழுங்கு முறை கிடையாது. எனவே வரிசை சீராக அமையும் பொருட்டு வலது புறத்தையும், இடது புறத்தையும் சமமாக நிரப்புவதே சிறந்ததாகும்.*

*🏮🍂நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தி முடித்ததும் வலது புறம் உள்ளவர்களை நோக்கித் திரும்புவார்கள். இதன் காரணத்தினால் நபி (ஸல்) அவர்கள் தன்னை பார்க்க வேண்டும் என்பதற்காக ஸஹாபாக்கள் வலது புறம் நிற்பதை விரும்பியுள்ளார்கள்.*

_*🍃பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் தொழும்போது அவர்களுக்கு வலப் பக்கம் இருப்பதையே விரும்புவோம். அவர்கள் (தொழுது முடித்ததும்) எங்களை நோக்கித் திரும்புவார்கள். அப்போது, "ரப்பீ கினீ அதாபக யவ்ம தப்அஸு (அல்லது "தஜ்மஉ') இபாதக்க' (இறைவா! உன் அடியார்களை "உயிர் கொடுத்து எழுப்பும்' (அல்லது ஒன்றுதிரட்டும்) நாளில் உன் வேதனையிலிருந்து என்னைக் காப்பாயாக!) என்று அவர்கள் பிரார்த்திப்பதை நான் கேட்டுள்ளேன்.*_

*📚நூல்: முஸ்லிம் (1280)📚*

*🏮🍂மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகத்தின் மீதுள்ள பாசத்தினாலும், அவர்கள் செய்கின்ற துஆவிற்காகவும் ஸஹாபாக்கள் வலது புறம் நிற்பதை விரும்பியுள்ளார்கள்.* இன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிரோடு இல்லாத காரணத்தினாலும், வலது புறம் நிற்பது தொழுகையின் அம்சமாகச் கூறப்படாத காரணத்தினாலும் *மேற்கண்ட செய்தியின் அடிப்படையில் வலது புறம் நிற்பது சிறப்பானது என்ற கருதமுடியாது.*

*எனவே வலது புறமும், இடது புறமும் சீராக தொழுகை வரிசையை அமைத்துக் கொள்வதே சரியான செயல்முறையாகும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻