பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 24, 2019

TNTJ ஹதீஸ் மறுப்பு - 20

*TNTJ ஹதீஸ் மறுப்பு - ஓர் ஆய்வு* (Part -20)

தனக்கு பிடிக்காத ஒருவரை ஒன்றும் செய்ய முடியாத இயலாமை ஒருவனுக்கு ஏற்பட்டால் அவன், அந்த பிடிக்காதவரைப்  பற்றி அவதூறாக கக்கூஸில் எழுதிவைத்துவிடுவான். அந்த இயலாமைக்காரனால் கரித்துண்டால் கக்கூஸில் கிறுக்குவதைத் தவிர்த்து வேறு எதுவும் முடியாது. 

அதுபோன்ற ஒரு கிறுக்கலைத்தான் TNTJ செய்தது. சூனியம் தொடர்பான ஹதீஸ்களை "எவரோ இட்டுக்கட்டிவிட்டார்" என்று அவதூறு பரப்ப ஆரம்பித்தது.

இப்படி நான் கூறியவுடன்,

ஒரு ஹதீஸை ஸஹீஹ் என்றும் அதே ஹதீஸை வேறு சிலர் லயீஃப் என்றும் கூறுவதுபோலத்தானே நாங்களும்கூறுகிறோம் என்று கேட்டார் அந்த  TNTJ சகோதரர். மேலும்,

** ஒரு ஹதீஸை லயீஃப் என்று சொல்லும்போது அதை யாரும் தூக்கி வீசிவிடுவதில்லையே!

** ஒரு ஹதீஸை ஒதுக்கி வைத்துவிட்டு பிறகு ஏற்றுக்கொள்வது சாதாரணமாக நடப்பதுதானே!!

** அதுபோல நாங்களும் குர்ஆனுக்கு முரணாக உள்ள ஹதீஸை ஓரமாக வைக்கிறோம். 

** குர்ஆனுக்கு முரணாக இல்லையென்று நிரூபிக்கப்பட்டுவிட்டால் அதை மீண்டும் ஏற்றுக்கொள்ளப்போகிறோம். 

இதிலென்ன அவதூறு இருக்கிறது என்றும் கேட்டார் அந்த TNTJ சகோதரர்.

இதில்தான் சில புரிதல் பிரச்சினை இருக்கிறது. 

ஹதீஸ் கலையின் பல வாசல்கள் திறந்தே இருக்கின்றன. ஆனால், சில வாசல்கள் அடைக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வாசல்களைத் திறந்தால் ஹதீஸ்கள் அழிந்துவிடும் என்று கூறினேன். 

மனிதர்கள் உருவாக்கிய ஹதீஸ் கலையில் வாசல்களைத் திறந்து வைத்தது யார்? வாசல்களை மூடி வைத்தது யார்? என்று கேலியாகச் சிரித்தார் அந்த TNTJ சகோதரர்.

அவருடைய கேள்வியில் நியாயம் இருப்பதுபோல் தோன்றினாலும் அந்த கேள்வி அவர் சார்ந்திருக்கும் கொள்கைக்கே எதிரானது என்பதை அவர் அறியாமலேயே கேள்வி கேட்கிறார் என்பதுதான் உண்மை. 

மனிதர்கள் உருவாக்கிய ஹதீஸ் கலை விதிகளை TNTJ எடுக்கவே கூடாது. 

ஏனென்றால் மனிதர்கள் உருவாக்கிய ஹதீஸ் கலை என்பது இரண்டு அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது. 

(1) இஸ்னாது (الإسناد)
(2) மத்தன் (المتن)

** "இஸ்னாது" என்பது ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர்களின் வரிசையைக் குறிக்கும்.

** "மத்தன்" என்பது அந்த அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்படும் செய்தியைக் குறிக்கும்.

இந்த இரண்டையும்தான் அடிப்படையாகக் கொண்டு ஹதீஸ் கலை மனிதர்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. 

இந்த ஹதீஸ் கலை விதியானது TNTJ வின் கொள்கைக்கு எதிரானது. 

குர்ஆனும் நபிவழியும்தான் மார்க்கம் என்பதில் உறுதியாக இருக்கும் TNTJ வினர், இஸ்னாது என்ற அறிவிப்பாளர் வரிசையை பார்க்கவே கூடாது. ஏனென்றால், நபிவழியில் இதற்கு ஆதாரம் ஏதுமில்லை. 

நபி(ஸல்) அவர்களே தங்களிடமிருந்து ஒரு செய்தி வந்தால் அதை எப்படி அனுக வேண்டும் என்று கூறியிருப்பதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். 

"நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் பெயரில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்களது உள்ளங்கள் ஒத்துக் கொள்ளுமானால், இன்னும் உங்கள் தோல்களும் முடிகளும் அச்செய்திக்குப் பணியுமானால், இன்னும் அச்செய்தி உங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை(க் கூறுவதில்) நானே உங்களில் மிகத் தகுதி வாய்ந்தவன்.

என் பெயரில் ஒரு செய்தியை நீங்கள் கேள்விப்படும் போது அச்செய்தியை உங்கள் உள்ளம் வெறுக்குமானால், இன்னும் உங்களது தோல்களும் முடிகளும்  விரண்டு ஓடுமானால் இன்னும் அச்செய்தி உங்களுக்கு தூரமாக இருப்பதாக நீங்கள் கருதினால் உங்களில் நானே அதை விட்டும் மிக தூரமானவன்".

அறிவிப்பவர்: அபூ உஸைத் (ரலி)

நூல்: அஹ்மத் 15478

இது மட்டும்தான் TNTJ வினர் ஹதீஸை அனுக வேண்டிய நபிவழி. 

** உள்ளம் ஒத்துக்கொள்ள வேண்டும்
** தோல்கள் பணிய வேண்டும்
** முடிகளும் பணிய வேண்டும்
** தங்களுக்கு நெருக்கமாக இருப்பதாக கருத வேண்டும்

இந்த நான்கும் நடந்தால் மட்டுமே TNTJ வினர் ஹதீஸை ஏற்க வேண்டும். இல்லையேல் அந்த ஹதீஸை புறக்கணிக்க வேண்டும். 

ஆனால், இதை அவர்கள் செய்வதில்லை. நபிமொழியை பின்பற்றுவதில்லை. மனிதர்கள் வகுத்த ஹதீஸ் கலையைத்தான் பிடித்து தொங்குகின்றனர். அதையும் ஒழுங்காக தொங்காமல் இஷ்டத்துக்கும் கள்ள ஆட்டம் ஆடுகின்றனர். 

அந்த கள்ள ஆட்டத்தை தெரிந்து கொள்ள வேண்டுமானால் நாம் ஹதீஸ் கலையில் பிஎச்டி (Phd) செய்ய வேண்டும். 

பல வருடங்கள் படித்து ஆய்வு செய்து பெற வேண்டிய பிஎச்டி (Phd) பட்டத்தை நாம் சில பதிவுகளிலேயே பெற்றுக்கொள்வோம். 

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

பிறை மீரான்.

Part -21

https://m.facebook.com/story.php?story_fbid=787798661643271&id=100012394330588

No comments:

Post a Comment