பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, February 23, 2021

இஸ்லாத்தை அறிந்து - 114

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய  மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 114 👈👈👈* 
 

*📚📚📚 தலைப்பு  11 ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும் 📚📚📚*   



 *👉👉👉தொடர் பாகம் 2👈👈👈* 


     *👉தலைப்பு👇*


 *🌐🌐🐏🐏குறையுள்ள பிராணியை குர்பானி கொடுக்கலாமா❓🦌🦌🌐🌐* 


 *👉👉👉குறையுள்ள பிராணியை🦌🐏🐏🦌 குர்பானி கொடுக்கலாமா❓🌎* 

 *👆👆👆கூடாது. கொம்பு உடைந்தால் தவறில்லை👇👇👇.* 


 *✍✍✍குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும்,* *ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.* 
 *தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*

 *அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)* 
 *திர்மிதீ(1417), அபூதாவூத்(4293), நஸயீ(4294) , இப்னுமாஜா (3135), அஹ்மத் (17777)* 

 
📕📕📕நபி (ஸல்) அவர்கள் தெளிவாகக் குறை தெரியும் பிராணியைத் தடை செய்துள்ளார்கள். உதாரணமாக குருடு நொண்டி போன்ற குறைகள் இருக்கக் கூடாது. அவர்கள் கூறிய தெளிவாகத் தெரியும் என்ற வாசகம் குறை மறைமுகமாகவும் சிறியதாகவும் இருந்தால் பிரச்சனையில்லை என்பதை காட்டுகிறது. எனவே சிறிய அளவில் வெளிப்படையாகத் தெரியாத குறையுள்ள ஆட்டைக் குர்பானிக் கொடுப்பதில் குற்றமில்லை.
நபி(ஸல்) அவர்கள் கொம்புள்ள, கருப்பு நிறத்தால் நடக்கக் கூடிய, கருப்பு நிறத்தால் அமரக் கூடிய, கருப்பு நிறத்தால் பார்க்கக் கூடிய (அதாவது முட்டுக்கால், கால், கண்பகுதி, கருப்பு நிறமுடைய) ஆட்டை குர்பானிக் கொடுக்க வாங்கி வருமாறு கட்டளையிட்டார்கள்.📕📕📕

 *அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி)  முஸ்லிம் (3637)* 


 *👆👆👆கொம்பு உடைந்த பிராணியை குர்பானி கொடுக்கக்கூடாது என்று வரும் ஹதீஸ் பலவீனமானது.👈👈👈* 


 *🕋🕋🕋மக்காவில் உள்ளவர் எங்கே இஹ்ராம் கட்டவேண்டும்❓🕋🕋🕋*


 *✍✍✍ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன.* 
 *வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர் இருந்தால் இவர் தான் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.✍✍✍* 

 *1529* حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عَمْرٍو عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ وَلِأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ وَلِأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ وَلِأَهْلِ نَجْدٍ قَرْنًا فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ حَتَّى إِنَّ أَهْلَ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا رواه البخاري

 *👉👉👉இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :👇👇👇* 


📘📘📘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த்வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும், ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் இருக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம் என்றும் கூறினார்கள்📘📘📘.

 *நூல் : புகாரி 1529* 


 *✍✍✍ஹரமில் இருப்பவர்கள் எங்கிருந்து இஹ்ராம் அணிய வேண்டும்? ஹரமில் இருந்து கொண்டே இஹ்ராம் அணிவதா? அல்லது இஹ்ராம் அணிவதற்கென ஹரமுக்கு வெளியே குறிப்பிட்ட இடம் எதுவும் உண்டா? என்ற சந்தேகம் எழலாம். இதற்குப் பின்வரும் செய்தி விடையாக இருக்கின்றது.* 
 *மேற்கண்ட எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர்கள் மேற்கண்ட இடங்களில் இஹ்ராம் கட்ட வேண்டும். மேற்கண்ட எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டலாம் என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லைக்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் ஹரமை விட்டு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு ஹரமுக்குள் நுழைய வேண்டும்.✍✍✍* 

 *319* حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ فَقَدِمْنَا مَكَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَلَمْ يُهْدِ فَلْيُحْلِلْ وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَأَهْدَى فَلَا يُحِلُّ حَتَّى يُحِلَّ بِنَحْرِ هَدْيِهِ وَمَنْ أَهَلَّ بِحَجٍّ فَلْيُتِمَّ حَجَّهُ قَالَتْ فَحِضْتُ فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ عَرَفَةَ وَلَمْ أُهْلِلْ إِلَّا بِعُمْرَةٍ فَأَمَرَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَنْقُضَ رَأْسِي وَأَمْتَشِطَ وَأُهِلَّ بِحَجٍّ وَأَتْرُكَ الْعُمْرَةَ فَفَعَلْتُ ذَلِكَ حَتَّى قَضَيْتُ حَجِّي فَبَعَثَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ مَكَانَ عُمْرَتِي مِنْ التَّنْعِيم رواه البخاري

 *👉👉🧕🧕ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :👇👇👇* 


📙📙📙(உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும் வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது) எனது தலைமுடியை அவிழ்த்து தலை வாரிக்கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நான் செய்து முடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி தன்யீம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக இஹ்ராம் கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்📙📙📙.

 *நூல் : புகாரி 319* 


 *👆👆👆வேறு ஒரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்களை ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியே அழைத்துச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.👇👇👇* 

 *1788* فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي فَقَالَ مَا يُبْكِيكِ قُلْتُ سَمِعْتُكَ تَقُولُ لِأَصْحَابِكَ مَا قُلْتَ فَمُنِعْتُ الْعُمْرَةَ قَالَ وَمَا شَأْنُكِ قُلْتُ لَا أُصَلِّي قَالَ فَلَا يَضِرْكِ أَنْتِ مِنْ بَنَاتِ آدَمَ كُتِبَ عَلَيْكِ مَا كُتِبَ عَلَيْهِنَّ فَكُونِي فِي حَجَّتِكِ عَسَى اللَّهُ أَنْ يَرْزُقَكِهَا قَالَتْ فَكُنْتُ حَتَّى نَفَرْنَا مِنْ مِنًى فَنَزَلْنَا الْمُحَصَّبَ فَدَعَا عَبْدَ الرَّحْمَنِ فَقَالَ اخْرُجْ بِأُخْتِكَ الْحَرَمَ فَلْتُهِلَّ بِعُمْرَةٍ رواه البخاري

 *✍✍✍நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, “உனது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்! என்று கூறினார்கள்.✍✍✍* 

 *நூல் : புகாரி 1788* 


📗📗📗நீங்கள் ஹரமுடைய எல்லைக்குள் இருந்தால் அதை விட்டும் வெளியேறி தன்யீமுக்குச் சென்று இஹ்ராம் அணிய வேண்டும். நீங்கள் ஹரமில் இல்லாமல் மற்ற ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால் நீங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.📗📗📗


 *🌎🌎ஈஸா நபி 🕋ஹஜ் செய்தார்களா🌐🌐*


 *👉👉👉ஈஸா நபி ஹஜ் செய்தார்களா❓👇👇👇* 

 *✍✍✍கடந்த காலத்தில் ஈசா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா❓ இல்லையா❓ என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது.* 
 *ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா நபி ஹஜ் செய்வது போல் கனவில் எடுத்துக் காட்டப்பட்டதாகப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.* 
 *3440 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:✍✍✍* 

📒📒📒இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மாநிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவரது தோள்களுக்கிடையே தொங்கிக் கொண்டிருந்தது; படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக அவர் இருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இரு மனிதர்களின் தோள்கள் மீது தமது இரு கைகளையும் அவர் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். நான், இவர் யார்? என்று கேட்டேன். மர்யமின் மகன் ஈசா அவர்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு, அவருக்குப் பின்னால் நிறைய சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்தவர்களிலேயே இப்னு கத்தனுக்கு அதிக ஒப்பானவனாயிருந்தான். அவன் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் தோள்களின் மீது தன் இரு கைகளையும் வைத்திருந்தான். நான், யார் இது? என்று கேட்டேன். இவன் தஜ்ஜால் என்னும் மஸீஹ் என்று பதிலளித்தார்கள்.📒📒📒


 *✍✍✍நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களும் இதை அறிவிக்கிறார்கள்* .
 *கியாமத் நாள் ஏற்படுவதற்கு முன்பு ஈசா (அலை) அவர்கள் இந்த உலகத்திற்கு மீண்டும் இறைவனால் அனுப்பி வைக்கப்படுவார்கள். அப்போது ஹஜ் அல்லது உம்ரா அல்லது அவ்விரண்டையும் செய்வார்கள் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.✍✍✍* 

 *2196* و حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَعَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ ابْنِ عُيَيْنَةَ قَالَ سَعِيدٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ حَدَّثَنِي الزُّهْرِيُّ عَنْ حَنْظَلَةَ الْأَسْلَمِيِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُهِلَّنَّ ابْنُ مَرْيَمَ بِفَجِّ الرَّوْحَاءِ حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ لَيَثْنِيَنَّهُمَا و حَدَّثَنَاه قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ شِهَابٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ و حَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الْأَسْلَمِيِّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ بِمِثْلِ حَدِيثِهِمَا رواه مسلم

 *👉👉👉நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :👇👇👇* 


📓📓📓என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! (இறுதி நாட்களில்) மர்யமின் புதல்வர் (ஈசா) அவர்கள் (மக்கா – மதீனா இடையே உள்ள) “ஃபஜ்ஜுர் ரவ்ஹா’ எனுமிடத்தில் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக அல்லது அவ்விரண்டுக்குமாகத் தல்பியாச் சொல்வார்கள்.📓📓📓

 *இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.* 

 *நூல் : முஸ்லிம் 2403* 


 *👫👫👫பெற்றோருக்காக 🕋🕋ஹஜ், உம்ரா செய்வது கூடுமா❓🌎🌎*


 *👉👉👉👫பெற்றோருக்காக🕋🕋🕋 ஹஜ், உம்ரா செய்வது கூடுமா❓👇👇👇* 


 *✍✍✍தாய் தந்தையினர் உயிருடன் இருந்தால் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா என்று கேட்டுள்ளீர்கள். உங்கள் பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி அதை நிறைவேற்றாமல் வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ அவர்களுடைய ஹஜ் கடமையை நிறைவேற்றுவது உங்கள் பொறுப்பாகும். பின்வரும் ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாக உள்ளன✍✍✍.* 

 *1513* حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانَ الْفَضْلُ رَدِيفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَتْ امْرَأَةٌ مِنْ خَشْعَمَ فَجَعَلَ الْفَضْلُ يَنْظُرُ إِلَيْهَا وَتَنْظُرُ إِلَيْهِ وَجَعَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْرِفُ وَجْهَ الْفَضْلِ إِلَى الشِّقِّ الْآخَرِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ فَرِيضَةَ اللَّهِ عَلَى عِبَادِهِ فِي الْحَجِّ أَدْرَكَتْ أَبِي شَيْخًا كَبِيرًا لَا يَثْبُتُ عَلَى الرَّاحِلَةِ أَفَأَحُجُّ عَنْهُ قَالَ نَعَمْ وَذَلِكَ فِي حَجَّةِ الْوَدَاعِ رواه البخاري

 *👉👉👉அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :👇👇👇* 


📔📔📔ஃபள்ல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்துகொண்டிருந்த போது “கஸ்அம்’ எனும் கோத்திரத்தை சேர்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபள்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்) ஃபள்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கி, “அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் எனது வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா?’ எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்!’ என்றார்கள். இது “விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நிகழ்ந்தது.
📔📔📔

 *நூல் : புகாரி 1513* 

 *1939* و حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ أَبُو الْحَسَنِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَيْنَا أَنَا جَالِسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَتَتْهُ امْرَأَةٌ فَقَالَتْ إِنِّي تَصَدَّقْتُ عَلَى أُمِّي بِجَارِيَةٍ وَإِنَّهَا مَاتَتْ قَالَ فَقَالَ وَجَبَ أَجْرُكِ وَرَدَّهَا عَلَيْكِ الْمِيرَاثُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّهُ كَانَ عَلَيْهَا صَوْمُ شَهْرٍ أَفَأَصُومُ عَنْهَا قَالَ صُومِي عَنْهَا قَالَتْ إِنَّهَا لَمْ تَحُجَّ قَطُّ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ حُجِّي عَنْهَا رواه مسلم

 *👉👉👉புரைதா (ரலி) அவர்கள் கூறினார்கள் :👇👇👇* 


 *✍✍✍நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, “நான் என் தாயாருக்கு ஓர் அடிமைப் பெண்ணைத் தானமாக வழங்கியிருந்தேன். என் தாயார் இறந்துவிட்டார். (இப்போது அந்த அடிமைப் பெண் எனக்கே கிடைத்துவிட்டார். இந்நிலையில் தானத்திற்குரிய நற்பலன் எனக்கு உண்டா?)” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(தானம் செய்ததற்குரிய) நற்பலன் உனக்கு உறுதியாகிவிட்டது. வாரிசுரிமை, அவ்வடிமைப் பெண்ணை உனக்கே மீட்டுத் தந்துவிட்டது” என்று சொன்னார்கள். அப்பெண்மணி, “என் தாயார்மீது ஒரு மாத நோன்பு (கடமையாகி) இருந்தது. அவர் சார்பாக நான் நோன்பு நோற்கலாமா❓” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர் சார்பாக நீ நோன்பு நோற்றுக் கொள்” என்றார்கள். அப்பெண்மணி, “என் தாயார் (இதுவரை) அறவே ஹஜ் செய்யவில்லை. அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா❓” என்று கேட்டதற்கு, “அவருக்காக நீ ஹஜ் செய்” என்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍* 

 *நூல் : முஸ்லிம் 1939* 


📚📚📚பெற்றோர்கள் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் ஹஜ் செய்வது அவர்களின் மீது கடமையாகிவிடும். இந்நிலையில் அவர்களால் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் போனால் அவர்களது சார்பில் அவர்களுடைய பொறுப்பாளர்கள் அதாவது உறவினர்கள் அதை நிறைவேற்ற வேண்டும்.📚📚📚

 *1852* حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ امْرَأَةً مِنْ جُهَيْنَةَ جَاءَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنَّ أُمِّي نَذَرَتْ أَنْ تَحُجَّ فَلَمْ تَحُجَّ حَتَّى مَاتَتْ أَفَأَحُجُّ عَنْهَا قَالَ نَعَمْ حُجِّي عَنْهَا أَرَأَيْتِ لَوْ كَانَ عَلَى أُمِّكِ دَيْنٌ أَكُنْتِ قَاضِيَةً اقْضُوا اللَّهَ فَاللَّهُ أَحَقُّ بِالْوَفَاءِ رواه البخاري

 *👉👉👉இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள் :👇👇👇* 

 *✍✍✍ஜுஹைனா கூட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ந்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா❓’ என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய். உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்” என்றார்கள்.✍✍✍* 


 *நூல் : புகாரி 1852* 


 *6699* حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُ إِنَّ أُخْتِي قَدْ نَذَرَتْ أَنْ تَحُجَّ وَإِنَّهَا مَاتَتْ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَ عَلَيْهَا دَيْنٌ أَكُنْتَ قَاضِيَهُ قَالَ نَعَمْ قَالَ فَاقْضِ اللَّهَ فَهُوَ أَحَقُّ بِالْقَضَاءِ رواه البخاري

 *👉👉👉இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :👇👇👇* 


📕📕📕(உக்பா பின் ஆமிர் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “(அல்லாஹ்வின் தூதரே!) என் சகோதரி ஹஜ் செய்வதாக நேர்ந்துகொண்டு (அதை நிறை வேற்றாமல்) இறந்துவிட்டார்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் சகோதரிக்குக் கடன் இருந்தால் நீதானே அதை நிறைவேற்றுவாய்?” என்று கேட்டார்கள். அவர், “ஆம் (நான்தான் நிறைவேற்றுவேன்)” என்றார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் கடனை நிறைவேற்று! கடன்கள் நிறைவேற்றப்பட அவனே அதிக உரிமை படைத்தவன்” என்றார்கள்.📕📕📕


 *புகாரி (6699)* 


 *🕋🕋🕋ஹஜ்ஜோடு சேர்த்து, உம்ரா செய்யலாம். தனித்து கூடாது.🌎🌎🌎*

 *👉👉👉👫👫👫பெற்றோர்களுக்காக பிள்ளைகள், ஹஜ்ஜோடு சேர்த்து, உம்ரா செய்வதற்கும் ஆதாரம் உள்ளது. எனவே பெற்றோர்களின் சார்பில் பிள்ளைகள் ஹஜ்ஜோடு சேர்த்து, உம்ரா செய்யலாம்.👇👇👇* 

 *852* حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ النُّعْمَانِ بْنِ سَالِمٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ عَنْ أَبِي رَزِينٍ الْعُقَيْلِيِّ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَبِي شَيْخٌ كَبِيرٌ لَا يَسْتَطِيعُ الْحَجَّ وَلَا الْعُمْرَةَ وَلَا الظَّعْنَ قَالَ حُجَّ عَنْ أَبِيكَ وَاعْتَمِرْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي

 *👉👉👉அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள் :👇👇👇👇* 


 *✍✍✍நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது என்றேன். உனது தந்தைக்காக நீ ஹஜ் செய்துகொள். உம்ராவும் செய்துகொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍* 

 *நூல் : திர்மிதி (852)* 


📘📘📘ஹஜ் உம்ரா செய்வதற்கு பெற்றோர்களால் முடியாமல் போனாலே அவர்கள் சார்பில் பொறுப்பாளர்கள் நிறைவேற்ற முடியும். பெற்றோர்களுக்கு சக்தி இருந்தால் இவ்வணக்கத்தை அவர்களே நிறைவேற்ற வேண்டும். உறவினர்கள் நிறைவேற்றக் கூடாது.
ஹஜ் என்பது ஒருவர் மீது கடைமையான நிலையில் அவர் ஹஜ்ஜை மேற்கொள்ளும் போது அனுமதிக்கப்பட்ட மூன்று வகையான ஹஜ்ஜில், தமத்தூ மற்றும் கிரான் ஆகிய இருவகையான ஹஜ்ஜுகளில் உம்ராவையும் இணைத்து செய்யும் போது செய்யக்கூடிய உம்ராவை பற்றித்தான் இந்த நபித்தோழர் கேள்வி கேட்கின்றார். அப்போது செய்யும் உம்ராவை பற்றித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் குறிப்பிடுகின்றார்கள்.
எனவே, இந்த ஹதீஸை தவறுதலாக புரிந்து கொண்டு, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவைமட்டும் தனித்து செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது. மேலும், ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவைமட்டும் தனித்து செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காணமுடியவில்லை. தனித்து உம்ரா செய்யவேண்டும் என்பது நம்மீத்து கட்டாய கடமையும் இல்லை📘📘📘


 *🌐🌐சக்தி பெறாதவர் மீது🕋🕋🕋 ஹஜ் கடமையா❓🌎🌎* 


 *✍✍✍ஹஜ் செய்வதை பற்றி, அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,* 
 *“அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை”✍✍✍* 

 *அல்குர்-ஆன் 3:97* 


📙📙📙வயது முதிர்ந்து. உடல் பலவீனமடைந்த நிலையில் இருக்கக்கூடிய ஒருவர் ஹஜ் செய்யவேண்டும் என்றால், அதற்குரிய சக்தி அவரிடத்தில் இல்லை. அப்போது இவருக்குத்தான் ஹஜ் செய்ய சக்தியில்லையே, இவர் மீது ஹஜ் கடமையாகுமா? என்றால், இவர் மீது ஹஜ் கடமையில்லை. அதே நேரத்தில் அவர் உடல் வலிமையும், பொருளாதாரத்தையும் பெற்று திடகாத்திரமாக இருந்த நிலையில் அவர் மீது ஹஜ் கடமையாகி, அவர் அப்போது ஹஜ் செய்யாமலிருந்து இருப்பாரேயானால், அவர் சக்தி பெற்றிருந்த நிலையில் ஹஜ் செய்யாமல் விட்டதை, அவர்களுடைய வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகின்றார்கள்.
கடன் வாங்கிய ஒருவர் அந்த கடனை நிறைவேற்றுவது கட்டாயம் என்பது போல, அவர் திடகாத்திரமாக இருந்த போது கடமையாகிய ஹஜ்ஜைத்தான் அவர் நிறைவேற்றியாக வேண்டுமே ஒழிய, ஒருவர் வாங்காத கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று சொல்லுவது எப்படி நீதியாகாதோ, அதைப்போல கடைமையாகத ஹஜ்ஜை அவர் செய்யவேண்டும் என்று சொல்லுவதும் நீதியாகாது.
மேற்கண்ட அடிப்படையில் இந்த சட்டத்தை விளங்கிக்கொண்டால் தான் சக்திபெற்றவர் மீது ஹஜ் கடமை என்ற வசனத்திற்கும், வயது முதிர்ந்த நிலையில் உள்ளவர்களுக்காக அவரது பொறுப்பாளர்கள் ஹஜ் செய்ய வேண்டும் என்ற நபிமொழிக்கும் எந்த முரணும் இல்லாமல் விளங்க முடியும்📙📙📙


 *👫👫👫ஆண் துணையின்றி 🧕🧕🧕பெண்கள்🕋🕋🕋🕋 ஹஜ்ஜுக்கு செல்லலாமா❓🌎🌎*



 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 115* 


 *🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

Wednesday, February 17, 2021

ஜும்ஆவும் ஸலவாத்தும்

*ஜும்ஆவும் ஸலவாத்தும் *

*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ، وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ*

*அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.*

*Allaahumma salli 'alaa Muhammadin wa 'alaa 'aali Muhammadin, kamaa sallayta 'alaa 'Ibraaheema wa 'alaa 'aali 'Ibraaheema, 'innaka Hameedun Majeed. Allaahumma baarik 'alaa Muhammadin wa 'alaa 'aali Muhammadin, kamaa baarakta 'alaa 'Ibraaheema wa 'alaa 'aali 'Ibraaheema, 'innaka Hameedun Majeed.*

*இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும், கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.*

*O Allah, bestow Your favor on Muhammad and on the family of Muhammad as You have bestowed Your favor on Ibrahim and on the family of Ibrahim, You are Praiseworthy, Most Glorious. O Allah, bless Muhammad and the family of Muhammad as You have blessed Ibrahim and the family of Ibrahim, You are Praiseworthy, Most Glorious.*

*அறிவிப்பவர் கஅப் இப்னு உஜ்ரா(ரலி)  புகாரி 4797*

*யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*

*قَالَ رَسُولُ اللهِ (ﷺ) مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً وَاحِدَةً ، صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ ، وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ ، وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ.*
*அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*
*நூல் : நஸாயீ 1221*

*உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக்கிழமையாகும்.*
*அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள்.*
*அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது.*
*அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும்*
*அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும்*
*எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள்*

*நூல்: அபூதாவூத் 883*

வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்

வெள்ளிக்கிழமையின் சிறப்புகள்.


*நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது*.

*திருக்குர்ஆன்  62:9*

*தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.*

*திருக்குர்ஆன்  62:10*

👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻


*ஜூம்ஆவின் ஒழுங்குகள்*

*1. ஜூம்ஆ நேரத்தில் கொடுக்கல் வாங்கலை  விட்டு விட வேண்டும்*
*(அல்குர்ஆன் 62:9)*

*2. குளிப்பு கடமையைப் போல் குளிக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1530)*

*3. பல் துலக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1537)*

*4. தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1538)*

*5. நறுமணம் பூச வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1537)*

*6. இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும்* 
*(ஸஹீஹ் முஸ்லிம் 1540)*

*7. வாகனத்தில் செல்லாமல் நடந்தே பள்ளிக்கு செல்வது*

*யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு*

*(வாகனத்தில் செல்லாமல் நடந்து) அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*(சூனன் நஸயீ 1364)*

*8. ஜும்ஆ தொழுகைக்காக இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன் நேர காலத்துடன் செல்லுதல், அப்போதுதான் மலக்கு மார்களின் பட்டியலில் பெயரைப் பதித்துக்கொள்ள முடியும் குர்பானியின் நன்மை ஒட்டகம் மாடு ஆடு கோழி முட்டை என்ற வரிசையில் கிடைக்கும்*
*( ஸஹீஹ் புகாரி 929)*

*9. பள்ளிக்குல் நுழைந்த உடன் இடம் இல்லையெனில் யாரையும் நகர சொல்லாமல் யாரையும் பிரிக்காமல் தனக்கு கிடைத்த இடத்தில் நின்று அமர்வதற்கு முன் கூடுதல் தொழுகை தொழ வேண்டும் தொழாமல் அமரக் கூடாது* 

*(ஸஹீஹ் புகாரி 910 911,ஸஹீஹ் முஸ்லிம் 1585)*

*10. இமாம் உரை நிகழ்த்த ஆரம்பித்த உடன் யாரிடமும் பேசாமல் மெளனமாக இருந்து உரையை கவனிக்க வேண்டும்*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1556)*

*11. அருகில் இருப்பவரிடம் மெளனமாக இருங்கள் என்று கூறினாலும் வீண் காரியத்தில் ஈடுபட்டதாக அமைந்துவிடும் (ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்)*
*(ஸஹீஹ் முஸ்லிம் 1542)*

*12. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டுவிட்டார்.(ஜூம்ஆ உடைய கூலி முழுமையாக கிடைக்காமல் போகலாம்)*
*(ஸஹீஹ் முஸ்லிம்_1557)*

*13. இமாம் உரையை கவனமாக செவி தாழ்த்தி கேட்டு விட்டு தொழுகையையும் இமாமமுடன் தொழ வேண்டும்..*
*(ஸஹீஹ்முஸ்லிம்_1556)*

*மேற்கண்ட இவற்றை எல்லாம் சரியாக செய்தீர்கள் ஆனால் முழு ஜூம்ஆ வையும் அடைந்ததாக அமையும் ஜூம்ஆ உடைய கூலி இன்ஷா அல்லாஹ் முழுமையாக கிடைக்கும்*

*மேலும் அடுத்த ஜூம்ஆ வரையும் மேற்க்கொண்டு மூன்று நாட்கள் மொத்தம் வரக்கூடிய 10 நாட்கள் ஏற்படக்கூடிய பாவத்திற்கு பரிகாரமாக அமையும்*

*(ஸஹீஹ்_முஸ்லிம்_1556)*

அல் குர்ஆனின் செய்தியும்.

📖 அல் குர்ஆனின் செய்தியும்...
🤔 சிந்தனையும்.

சுப்ஹானல்லாஹ்... அல்லாஹ் தூய்மையானவன் என்று உச்சரிக்கும் போது, அவனின் தூய்மையை உள்ளம் உணர வேண்டும்.

அல்ஹம்துலில்லாஹ்...  புகழனைத்தும் அவனுக்கே என்று உச்சரிக்கும் போது, அவன் தந்த நிறைவை உள்ளம் உணர வேண்டும்.

அல்லாஹு அக்பர்... அல்லாஹ் மிகப் பெரியவன், என்று உச்சரிக்கும் போது, அவனின் ஆற்றல் மீதான படைப்புகளின் பிரம்மாண்டத்தை உள்ளம் உணர வேண்டும்.

திக்ர்கள்... என்பது வெறும் உச்சரிப்பில் இல்லை.
ஆன்மா அதை உணர்தலில் இருக்கிறது.

அல் குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்...

எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
அல் குர்ஆன்  2:152



*💗அல்லாஹ் யாரை நேசிக்கின்றான்?💗*

❣️நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (3:134)

❣️தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (3:159)

❣️நீதி செலுத்துவோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
அல்குர்ஆன் (5:42)

❣️சகித்துக்கொள்வேரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (3:146)

❣️திருத்திக் கொள்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (2:222)

❣️தனக்கு அஞ்சி நடப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (3:76)

❣️தூய்மையாக இருப்போரை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அல்குர்ஆன் (2:222)

இஸ்லாத்தை அறிந்து - 113

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய  மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 113 👈👈👈* 
 

*📚📚📚 தலைப்பு  11 ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும் 📚📚📚*   



 *👉👉👉தொடர் பாகம் 1👈👈👈* 


     *👉தலைப்பு👇*


 *🌐🌐அன்பளிப்பை கொண்டு ஹஜ் செய்யலாமா❓🌎🌎* 


 *👉👉👉கடனாக அல்லாமல் பிறர் அன்பளிப்பாகத் தந்த செல்வத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றலாமா❓👇👇👇* 

 *✍✍அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும்.✍✍* 

 *(அல்குர்ஆன்3:97)* 


📕📕📕இந்த வசனத்தின் அடிப்படையில் ஹஜ் செய்ய சக்தி பெற்றவர்களுக்கு அது கடமையாகும். அன்பளிப்பாகக் கிடைத்த பணமாக இருந்தாலும் அதைக் கொண்டு, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி இருந்தால் தாராளமாக ஹஜ்ஜை நிறைவேற்றலாம். ஹலாலான வழியில் வந்த எந்தச் செல்வத்தைக் கொண்டும் ஹஜ் செய்வதற்கு தடையேதும் இல்லை.📕📕📕


 *🌐புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு.🌐* . .

 *👉👉👉புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு👈👈👈* 

 *🏓டாக்டர் த. முஹம்மது கிஸார்🏓* 


 *✍✍✍புனித ஹஜ் நம்மை நெருங்கி வருகிறது. நம்மில், சிலருக்கு ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதில் சிலர் ஹஜ்ஜுக்கு தொடங்கி விட்டனர். இன்னும் ஹஜ்ஜுக்கு செல்ல தங்களை மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகி வருகின்றனர்.* 
 *இந்த சமயத்தில், ஹஜ் செல்வோர் தங்கள் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில வழிகாட்டுதலை இங்கு தர விரும்புகிறேன். இதில் நான் 1977 ஆம் ஆண்டு, சவூதி அரசின் மருத்துவராக ஹஜ்ஜின் போது களப் பணியாற்றிய எனது அனுபவத்தின் சில தாக்கங்களையும் இணைத்து உள்ளேன்✍✍✍* .


 *📘📘📘1)* ஹஜ் செல்ல நாடி உள்ளவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லும் முன் தங்கள் உடல் நலன்களை நல்ல முறையில் பரிசோதித்து, ஹஜ்ஜுக்கு செல்ல தயார் பண்ணி கொள்ள வேண்டும்📘📘📘.


 *✍✍✍2) நெடுநாளை நோய்களான சர்க்கரை என்னும் நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்த்மா, வலிப்பு, இருதய நோய் போன்ற நோயிகளால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள், தங்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து, தங்கள் நோயை முழுக்கட்டுபாட்டில் வைத்து கொள்ள வேண்டும். முறையான உணவு கட்டுப்பாடுகளை ஒழுங்காக பின்பற்ற வேண்டும்.✍✍✍* 


 *📙📙📙3)* நெடுநாளைய நோயிகளான சர்க்கரை என்னும் நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்த்மா, வலிப்பு, இருதய நோய், மாத்திரைகளை தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே கொண்டு செல்ல வேண்டும். அணைத்து மாத்திரைகளும், ஒரே பேக்கில் வைக்காமல், பல பேக்குகளில் பிரித்து வைத்து கொள்ள வேண்டும். அப்போதுதான், ஒரு பேக் தொலைந்து போனால் கூட, இடைவெளியில்லாமல் தொடர்ந்து போட மாத்திரைகள் இருக்கும்.
தங்களின் மாத்திரைகளின் பெயர்களையும் (brand name) அதன் மூலக்கூறு பெயர்களையும் (chemical  or molecule name) தெரிந்து வையுங்கள். அப்போது தான், மாத்திரை முடிந்து விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ, சவுதியில் அந்த மாத்திரைகளை மருத்துவரிடம் கூறி மாற்று மாத்திரையோ அல்லது மருந்தகங்களில் கேட்டு பெற வசதியாக இருக்கும்.
(எல்லா நாடுகளிலும் மூலக்கூறு (chemical or molecule name) மருந்தின் பேர் ஒன்று தான், brand name தான் நாட்டுக்கு நாடு மாறுபடும், ஒரு நாட்டு மருத்துவருக்கு, மற்ற நாட்டில் உள்ள எல்லா brand name களும் தெரிந்து இருக்க வாய்ப்பு குறைவு. மூலக்கூறு பெயர்கள் உலகம் முழுவதும் ஒன்று தான்)📙📙📙.


 *✍✍✍4) சவூதி அரசும் அதன் சுங்கதுரையும், அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு துரையின் அனுமதியில்லாத மற்ற நாட்டு மருந்துகளை, தங்கள் நாட்டின் அனுமதியளிப்பது இல்லையென்றாலும், நீங்கள் உபயோகப்படுத்தும் மருந்துகளை கொண்டு செல்லலாம்.* 
 *அனால், அந்த மருந்துகளுக்கு தேவையான டாக்டரின் பரிந்துரைக் கடிதம் (Prescription) என்னும் சீட்டுகளை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும். அந்த டாக்டர் சீட்டில், உங்கள் பெயர் உங்கள் பாஸ்ப்போர்ட்டில் எப்படி உள்ளதோ, அதே பெயர் அப்படியே, ஸ்பெல்லிங் தவர் இல்லாமல் குறிப்பிடுவது அவசியம். டாக்டர் சீட்டில் பாஸ்போர்ட் நம்பர் பதிவு செய்வது இன்னும் நல்லது.* 
 *மிக முக்கியமாக, வலிப்பு நோய் மருந்துகள், தூக்க மாத்திரைகள் மற்றும் மன நல நோய்க்கான மாத்திரைகள் கொண்டு செல்ல நேர்ந்தால், சரியான டாக்டரின் பரிந்துரைக் கடிதம் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்* .
 *இதுபோன்ற மாத்திரைகளுக்கு, சீட்டு இல்லாமல் சென்றால், சவூதி சட்டப்படி, சிறைத்தண்டனை வரை தர விதி உண்டு. டாக்டர் சீட்டில் மாத்திரைகளின் எண்ணிக்களையும் பதிவு செய்ய வேண்டும்., இதுபோன்ற மாத்திரைகளின் டாக்டரின் சீட்டுகளில், உங்கள் பெயர் மற்றும் வயதை பாஸ்போர்ட்டில் உள்ளவாறு சரியாக, ஸ்பெல்லிங் தவறில்லாமல் இருப்பது அவசியம்.✍✍✍* 


 *📗📗📗5)* பொதுவாக ஹஜ்ஜின் போது மக்காவிலும், மதினாவிலும், இந்திய மற்றும் சவுதி அரசின் கீழ் செயல்படும் மருத்துவ மையங்களும் மற்றும் மருந்து கூடங்களும், தேவையான அளவில் உள்ளன.
எனவே, சிறிய சிறிய நோயிகளான சளி, ஜுரம் போன்றவைகளுக்கு மருத்துவம் பெறுவதில், அதற்கான மாத்திரைகளை பெறுவதிலும் சிக்கல் இருக்காது. உங்கள் தேவைக்கேற்ப குறைந்த அளவு, சிறு நோயிகளுக்கான மாத்திரைகளை, மருத்தவ சீட்டுகளுடன் எடுத்து செல்லலாம்📗📗📗.


 *✍✍✍6) குறிப்பாக பெண்கள் பலர், தங்கள் மாதவிடாயை, இயற்கையாக வருவதை தள்ளிப்போடும் மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். காரணம், தங்கள் மாதவிடாய் சுழற்சி, ஹஜ்ஜு கீரிகை செய்யும் காலத்தில் வந்து, தாங்கள் அமல் செய்வது கெட்டு போகிவிடுமோ என்ற எண்ணம். மாதவிடாவின் பொது, தொழுகை மற்றும் கஹ்பாவை தவாப் சுற்றுவது, மஸ்ஜித் ஹரம்க்குள் நுழைவது தவிர, மற்ற எல்லா ஹஜ்ஜின் செயல்களும் ஆகுமானது தான். அதனால், நாற்பது நாளைக்கு மாதவிடாய் வராமல் மருந்துகள் மூலம் தள்ளிப்போவது நல்லது இல்லை* .
 *பொதுவாக, இந்த மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென்  மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சார்ந்தவை உள்ளதால், இந்த மாத்திரைகளை உட்கொள்ளும் போது, குமட்டல், வாந்தி, உடல் கனத்து போதல் போன்ற சில கஷ்டங்கள் வரலாம். இந்த மருந்துகள் எடுக்கும் போது, ஒரு வகையான மனரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு அமல் செய்வதை பாதிக்கலாம்* .
 *சில பெண்களுக்கு மார்பகங்கள் அதிகம் கனத்தும் வலியுடன் காணப்படும். (ஓர் ஆய்வின் படி தேர்வுக்காக தங்களின் மாத்தவிடாயை தள்ளிப்போட, ஹார்மோன் சார்ந்த மாத்திரை போட்ட மாணவிகளின், தேர்வு முடிவு,ஹார்மோன் சார்ந்த மாத்திரை போடாத மாணவிகளின் முடிவைவிட மோசமாக இருந்தது. காரணம், மனநிலை மாற்றம்).* 
 *ஒருவேளை, மாதவிடாயை தள்ளி போடும் மாத்திரையை தொடர்ந்து போடாமல் போகும் நிலை ஏற்பட்டாலோ அல்லது மாத்திரை தொலைந்து போனாலோ அல்லது மாத்திரை போட சில நாட்கள் மறந்தாலோ, மாத்திரை நிறுத்திய சில நாளில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு, அமல்களை அதிகம் பாதிக்கலாம். இந்த நிலைமை 1997 ஆண்டு ஹஜ்ஜின் போது, தீ விபத்து ஏற்பட்டு, பல பெண்கள் தங்கள் மாத்திரைகளை இழந்து விட்ட பின் , அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள்.* 
 *எனவே, இயற்கையாக மாதவிடாவை தள்ளி போடும் மாத்திரைகளை தவிர்ப்பது தான் எல்ல நிலையிலும் நல்லது. அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அவர்களின் சக்திக்கு மீறி சோதனை தர மாட்டான். (குறிப்பு: அதிக நாட்கள் இந்த மாத்திரைகளை உட்கொண்டால், மார்பகம் மற்றும் சினைப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.)✍✍✍* 


 *📒📒📒7)* நீரழிவு நோய் உள்ளவர்கள், முடிந்தால் தங்கள் சுகர் அளவை அடிக்கடி  சுயமாக சோதித்து கொள்ள, பாக்கெட்glucometer கொண்டு செல்லலாம் . அனால், அதிக battery உள்ளதால், அதை காபின் லக்கேஜுக்குள் விமான நிறுவனம் அனுமதி அளிப்பது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்📒📒📒.


 *✍✍✍8) ஹஜ் செல்லும் போது, பலர்க்கு தங்களை அறியாமலே, சிறிது மன படபடப்பு ஏற்படுவது உண்டு.* 
 *காரணம்*
 *தங்கள் சொந்தங்களை சொந்த ஊரில் விட்டு பிரிந்து வந்தது,* 
 *கடந்த காலங்களில் ஹஜ்ஜின் போது ஏற்பட்ட தீ விபத்து, கூட்ட செரிசல் விபத்தால்* *உயிரிழப்பு போன்ற சம்பவங்களை நினைத்து, இவ்வளவு செலவழித்து* *வந்திருக்கும் தங்களின் புனித பயணம் வெற்றியாக முடியுமோ என்ற மனநிலை,* 
 *தங்கள் ஊரில் விட்டு வந்த தங்களின் வியாபாரம் என்ன ஆகுமோ என்ற மனநிலை,* 
 *முற்றிலும் வித்தியாசாமான சூழ்நிலையில் 40 நாள் இருப்பது,* 
 *புதிதான விமான பயணம்,* 
 *அளவுக்கு அதிகமான கூட்டத்தை முதன் முதலில் சந்திப்பது,* 
 *அதிகம் அதிகம் உம்ரா மற்றும் தவாப் செய்ய வேண்டும் என்ற படபடப்பு,* 
 *ஹஜரல் அஸ்வத் கல்லை அடிக்கடி முத்தமிடும் வாய்ப்பு கிடைக்குமோ என்ற ஏக்கம் போன்றவற்றால், மனநிலையில் சிறிது படபடப்பு ஏற்படுவது* *இயற்கை என்றாலும், ஊரில் இருக்கும்போதே இதையெல்லாம்* *சமாளிக்க கூடிய மனநிலையை கொண்டு வந்து* *விட்டால், மன சார்ந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம். ஏற்கனவே, மனநோயால்* *பாதிக்கப்பட்டவர்கள், ஹஜ்ஜின்போது மேற்க்கூறிய காரணங்களினால் தங்களின் மன நோய் அதிகமாக வாய்ப்பு அதிகம் உள்ளதால்,* *ஊரில் இருக்கும்போதே தங்கள் மன நல மருத்துவரை கலந்து ஆலோசித்து, தான்* *ஹஜ் செல்ல உள்ளதை விளக்கி, அதற்க்கு ஏற்றார் போல்* *மாத்திரைகளை மாற்றி எடுப்பது நல்லது.✍✍✍* 


 *📓📓📓9)* கற்பமாக உள்ள பெண்கள் தங்கள் மகப்பேறு மருத்துவரை கலந்து ஆலோசித்து, ஹஜ் செல்வதை பற்றி முடிவு எடுப்பது நல்லது. முடிந்த வரை பிரசவம் ஆகும் வரை ஹஜ்ஜை தவிர்ப்பது நல்லது. இதில் அரசு விதிகள், மற்றும் விமான நிறுவனங்களின் விதிகளை பின்பற்ற வேண்டும். தான் கருவுற்று இருப்பதை மறைத்து ஹஜ் செல்வதை தவிர்க்க வேண்டும். 
ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்த பின் கருவுற்று இருந்தால், கருவுற்ற தகுந்த ஆதாரத்துடன் விண்ணப்பித்து, ஹஜ் செல்வதை தவிர்த்து, ஏற்கனவே கட்டிய பணத்தை வாபஸ் பெற வழி உண்டு.
சவூதி அரசின் சுகாதார அமைச்சகம், ஹஜ்ஜின் போது மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடை முறைகளை அறிவித்து உள்ளது. அது பற்றி சில குறிப்புகள். இது சென்ற வருடதிற்கான வழிமுறை.📓📓📓


 *✍✍✍மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி : (YELLOW FEVER VACCINE) இது மஞ்சள் காமாலை என்னும்JAUNDICE அல்ல.* 
 *சர்வதேச சுகாதார விதிகள் ஏற்ப மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க, (நோய் உள்ள நாடுகளின் பட்டியலில்) ஆபத்து நாடுகளில் இருந்து வரும் அணைத்து பயணிகள், குறைந்தது 10 நாட்கள் முன்பு, பத்து வருடங்களுக்கு மிகாமல் உள்ள, மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்த லிஸ்டில் இந்திய இடம் பெற வில்லை. எனவே, இது இந்தியர்களுக்கு பொருந்தாது. இந்த லிஸ்டில் உள்ள நாடுகளில் இருந்து வரும் இந்தியர்களுக்கு இது பொருந்தும்.✍✍✍* 


📔📔📔Meningococcal மூளைக்காய்ச்சல் தடுப்பூசி
மூளைக்காய்ச்சல் எதிராக தடுப்பூசி, சவுதிக்கு வருடத்திற்கு, 3 ஆண்டுகளுக்கு மேற்பட்டால் மற்றும் 10 நாட்கள் குறைவு இல்லாமல் meningococcal quadruvalent தடுப்பூசி போட்ட சான்றிதழ் (ACYW 135) அவசியம்.
2 வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்கள் meningococcal quadruvalent (ACYW 135) தடுப்பூசி1 டோஸ்  கொடுக்கப்பட வேண்டும்.
சவூதி உள்நாட்டு ஹஜ் பயணிகள் meningococcal quadruvalent (ACYW 135) தடுப்பூசி உடன் தேவை:
கடந்த3 ஆண்டுகளில் தடுப்பூசி போடாத மக்கா, மதீனா குடிமக்கள் (Citizen) மற்றும் குடியிருப்பாளர்கள் (resident).
ஹஜ் மேற்கொள்ளும் அணைத்து சவூதி குடிமக்கள்(citizen) மற்றும் குடியிருப்பாளர்கள் (resident).
கடந்த3 ஆண்டுகளில் தடுப்பூசி போடப்படாத அணைத்து ஹஜ் பணியாளர்கள்.
இளம்பிள்ளை வாதம் : (Oral polio drops ) போலயோ சொட்டு மருந்து
ஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, சாட், அங்கோலா மற்றும் சூடானில் இருந்து வரும் அணைத்து ஹஜ் பயணிகள், எல்லா வயதினர்களும் (முன்பு டிரோப்ஸ் போட்டு இருந்தாலும் சரியே). சவூதி அரேபியாவுக்கு கிளம்ப 6 வாரங்களுக்கு முன்பு 1 டோஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் சவூதி அரேபியா வந்து அடைந்ததும்,
அதன் எல்லையில் வைத்து இன்னொரு dose சவூதி அரசு வழங்கும், (இளம்பிள்ளை வாத சொட்டு மருந்து குறித்து, இந்த வருட சவூதி அரசின் பரிந்துரை இன்னும் தெரியவில்லை)📔📔📔


 *✍✍✍Seasonal ஃப்ளு பருவகால ஃப்ளு தடுப்பூசி* 
 *அதிக ஃப்ளு வருவதற்கு ரிஸ்க் உள்ள ஹஜ் யாத்ரீகர்கள் (எ.கா.முதியோர், நாள்பட்ட நுரையீரல் அல்லது இதய நோய் அல்லது கல்லீரல் நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு).* 
 *ஹஜ்ஜுக்கு சவூதி வருமுன் தங்கள் நாட்டில் ஒரு டோஸ் ஃப்ளு தடுப்பூசி போடா, சவூதி அரேபிய சுகாதார அமைச்சகம், பரிந்து உரைக்கிறது. இது ஒரு பரிந்துரையே ஒழிய, கண்டிப்பான சசரத்து அல்ல.* 
 *(இந்த ஃப்ளு தடுப்பூசியை பன்றி காய்ச்சல் (H1N1) தடுப்பு ஊசியும் அடக்கம்).* 
 *ஹஜ்ஜுக்கு செல்லும் முன் நீங்கள் தயார் படுத்துவதில் மிக முக்கியமானது இறை அச்சமே. அல்லாஹ் எல்லோரின் ஹஜ் கிரியைகள் முழுவதுமாக நிறைவேறி, ஏற்கப்பட்ட ஹஜ்ஜாக ஆக்க அருள் புரியட்டும், ஹஜ் செல்வோர் எனக்காகவும், இந்த ஜமாஅத்திற்காகவும் மற்றும் உலக முஸ்லிம்களுக்காகவும் , இம்மை மறுமை வெற்றிக்காக துஆ செய்யவும்.✍✍✍* 


 *🕋🕋🕋ஹாஜிகள்  நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா❓🕋🕋🕋*

 *👉👉👉ஹாஜி நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா❓👇👇👇* 

 *👆இல்லை.👇* 


📚📚📚ஹஜ் என்ற கடமைக்கும் நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமை நிறைவேற்றி மதீனா செல்லாமல் வந்துவிட்டால் நிச்சயம் அவரின் ஹஜ் நிறைவேறும்.
யார் ஹஜ் செய்து என்னை (என் கப்ரை) சந்திக்கவில்லையோ அவர் என்னை வெறுத்தவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📚📚📚

 *அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),* 
 *நூல் : அல்காமில் ஃபில் லுஅஃபா – இப்னு அதீ, பாகம் :7, பக்கம் : 14)* 


 *✍✍✍இச்செய்தியில் இடம்பெறும் அந்நுஃமான் பின் ஷிப்ல் என்பவர் நபிமொழிகளை* *இட்டுக்கட்டி சொல்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்களால் குற்றம் சுமத்தப்பட்டவர். எனவே நபியின் கப்ரை ஜியாரத் செய்வது கடமையோ கட்டாயமோ அல்ல.✍✍✍* 


 *🕋🕋🕋ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா❓🕋🕋🕋*


 *👆👆👆ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா❓👇👇👇* 

 *👆செய்யலாம்.👇* 


🕋🕋🕋ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான ஹஜ்ஜை முதலில் செய்ய வேண்டும் என்றும் ஹஜ் கடமையான ஒருவர் உம்ராச் செய்யும் போது அதனால் அடுத்து அவரால் ஹஜ் செய்ய முடியாமல் போகலாம் என்றும் கூறுகின்றனர்.
ஹதீஸ்களை ஆராய்ந்தால் இந்த வாதங்கள் தவறானைவை என்பதைத் தெளிவாக அறியலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதி காலத்தில் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்தார்கள். அந்த ஹஜ்ஜுக்கு முன்னால் நான்கு முறை உம்ரா செய்துள்ளார்கள்🕋🕋🕋

 *1780* حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ قَالَ سَأَلْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ رَدُّوهُ وَمِنْ الْقَابِلِ عُمْرَةَ الْحُدَيْبِيَةِ وَعُمْرَةً فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ حَدَّثَنَا هُدْبَةُ حَدَّثَنَا هَمَّامٌ وَقَالَ اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ فِي ذِي الْقَعْدَةِ إِلَّا الَّتِي اعْتَمَرَ مَعَ حَجَّتِهِ عُمْرَتَهُ مِنْ الْحُدَيْبِيَةِ وَمِنْ الْعَامِ الْمُقْبِلِ وَمِنْ الْجِعْرَانَةِ حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ رواه البخاري


 *✍✍✍அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :* 
 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில், இணைவைப்போர் (ஹுதைபியாவில் அவர்களைத்) தடுத்து விட்ட போது* *உம்ராவுக்காக சென்றிருந்தார்கள்; பிறகு, அடுத்த ஆண்டு (அதே)* *ஹுதைபியாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்;* *பிறகு துல்கஅதா மாதத்தில் ஹுனைன் போரில் கிடைத்த படைக்கலன்களைப் பங்கிட்ட இடமான* *“ஜிஇர்ரானா’விலிருந்து உம்ராச் செய்தார்கள்; அடுத்து, ஹஜ்ஜுடன் ஒரு உம்ராச் செய்தார்கள்.✍✍✍*
 
 *நூல்: புகாரி (1779)* 


📕📕📕ஹஜ்ஜுக்கு முன் உம்ராச் செய்வது கூடாதென்றால் இந்த உம்ராக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜுக்கு முன் செய்திருக்க மாட்டார்கள்.
மக்கா எதிரிகளின் கைவசம் இருந்த ஆரம்ப நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் முதன் முதலில் உம்ராச் செய்வதற்காகவே மக்காவிற்குப் புறப்பட்டு வந்தார்கள். நபியவர்களுடன் வந்த நபித்தோழர்கள் யாரும் இதற்கு முன் ஹஜ் செய்திருக்கவில்லை📕📕📕

 *1812* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَخْبَرَنَا أَبُو بَدْرٍ شُجَاعُ بْنُ الْوَلِيدِ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ الْعُمَرِيِّ قَالَ وَحَدَّثَ نَافِعٌ أَنَّ عَبْدَ اللَّهِ وَسَالِمًا كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَمِرِينَ فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ فَنَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُدْنَهُ وَحَلَقَ رَأْسَهُ رواه البخاري

 *✍✍✍இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் உம்ராச் செய்வதற்காகப் புறப்பட்டோம்; குறைஷிக் காபிர்கள் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டார்கள்; ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து) விட்டுத் தம் தலையை மழித்துக் கொண்டார்கள்! (இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள்!)✍✍✍* 

 *நூல் : புகாரி (1812)* 


📘📘📘நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் ஹஜ் செய்யப் புறப்பட்டார்கள். நபித்தோழர்கள் ஹஜ்ஜை நாடியே இஹ்ராம் அணிந்து புறப்பட்டனர். அவர்கள் ஹஜ்ஜுக்கு அணிந்த இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என நபியவர்கள் உத்தரவிட்டார்கள். ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்யக் கூடாது என்றால் இவ்வாறு நபியவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள்.📘📘📘

 *3832* حَدَّثَنَا مُسْلِمٌ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ الْفُجُورِ فِي الْأَرْضِ وَكَانُوا يُسَمُّونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا بَرَا الدَّبَرْ وَعَفَا الْأَثَرْ حَلَّتْ الْعُمْرَةُ لِمَنْ اعْتَمَرْ قَالَ فَقَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ رَابِعَةً مُهِلِّينَ بِالْحَجِّ وَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْحِلِّ قَالَ الْحِلُّ كُلُّهُ رواه البخاري

 *✍✍✍இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “ஹஜ்ஜுடைய மாதங்களில் (ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்: அம்மாதங்களில்) உம்ராச் செய்வது பூமியில் நடக்கும் பாவகரமான செயல்களில் ஒன்று’ என (அறியாமைக்கால) மக்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். (போர் செய்வது தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து வந்ததால் சலிப்புற்று முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்கு மாற்றி) ஸஃபருக்கு முஹர்ரம் என்று பெயர் சூட்டி வந்தார்கள். (ஹஜ் பிரயாணத்தில்) ஒட்டகங்கüன் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து (ஸஃபர் மாதமும் கழிந்து) விட்டால் உம்ரா செய்ய நாடுபவருக்கு உம்ராச் செய்ய அனுமதியுண்டு” என்று கூறி வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துகொண்டு (மதீனாவிலிருந்து) மக்கா நகருக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தம் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு, “(இஹ்ராம் அணிந்தவருக்கு விலக்கப்பட்டிருந்த) அனைத்து செயல்களும் அனுமதிக்கப்படும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.✍✍✍* 

 *நூல்: புகாரி (3832)* 


📙📙📙கடமையை நிறைவேற்றுவதற்கு முன் உபரியான வணக்கத்தில் ஈடுபடக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. ஒரு வணக்கத்தைக் காட்டி இன்னொரு வணக்கத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பது தான் இஸ்லாத்தில் கூடாது. ஹஜ்ஜுக்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று கூறுபவர்கள் இதைத் தான் செய்து கொண்டிருக்கின்றனர்
உம்ராச் செய்தால் அவசியம் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கூற்று குர்ஆனுக்கு எதிராக உள்ளது. சக்தியுள்ளவர்கள் மீது தான் ஹஜ் கடமை என்று குர்ஆன் கூறுகின்றது📙📙📙


 *✍✍✍ஒருவர் உம்ராச் செய்யும் போது செல்வந்தராக இருக்கின்றார். இதன் பிறகு அவர் ஏழையாக மாறினால் இவர் ஹஜ் செய்ய வேண்டுமா? இவருக்கு ஹஜ் கடமையில்லை என்றே குர்ஆன் கூறுகின்றது* .
 *அல்லது ஒருவர் தனது பொருளாதாரத்தில் ஏழை ஒருவரை உம்ராவுக்கு அழைத்துச் செல்கிறார். உம்ரா செய்து விட்ட இந்த ஏழை அடுத்து ஹஜ்ஜை நிறைவேற்றியாக வேண்டும் என்றால் இது நடைமுறைக்கு சாத்தியமில்லை. மனிதனின் சக்திக்கு மீறிய சட்டமாகும். எனவே தான் குர்ஆன் இப்படிப்பட்ட சட்டத்தைக் கூறவில்லை. ஆகையால் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை.✍✍✍* 


 *🌐🌐🐏🐏குறையுள்ள பிராணியை குர்பானி கொடுக்கலாமா❓🦌🦌🌐🌐* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 114* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

அதிக நன்மைகளை

*அதிக நன்மைகளை பெற்று தரக்கூடிய சில எளிமையான திக்ருகள்:*🛐



💟 *சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுஹானல்லாஹில் அளீம்*


*பொருள்:*

 அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கின்றேன். கண்ணியமிக்க
அல்லாஹ்வை துதிக்கின்றேன்.


*சிறப்பு:*

மீசான் தராசில்அதிக கனமுள்ளது

( நூல் : புகாரி : 66820 )


💟 *சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி*


*பொருள்:* 

அல்லாஹ்வைப் போற்றிப்
புகழ்ந்து துதிக்கின்றேன்.

*சிறப்பு:*

கடலின் நுரை அளவு பாவங்கள் மன்னிக்கப்படும்.

( நூல் : புகாரி: 6405 )


💟 *லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ கலஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து வஹுவ அலாகுல்லி ஷைய்இன் கதீர்*

*பொருள்:*

 வணக்கத்திற்குரியவன்
அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. அவன் தனித்தவன்.
அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சியும் அவனுக்கே! புகழும் அவனுக்கே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

*சிறப்பு:*

100 நன்மைகள் எழுதப்படும். 100தீமைகள் அளிக்கப்படும். ஷைத்தானின் தீங்கிலிருந்து பாதுகாப்புகிடைக்கிறது.

 ( நூல் : புகாரி : 3293 )


💟 *சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர்*

*பொருள்:*

இறைவன் தூயவன், அவனுக்கே எல்லாப் புகழும், அவன் மிகப் பெரியவன்.

*சிறப்பு:*

ஒவ்வொரு வார்த்தைக்கும் தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

( நூல் : முஸ்லிம் : 118 )


💟 *அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன், Fபீஹி*

*பொருள்:*

 தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழ் அனைத்தும்
அல்லாஹ்வுக்கே உரியது.

*சிறப்பு:*

12 வானவர்கள் இதை இறைவனிடம் கொண்டு செல்ல போட்டி போடும் அளவிற்கு நன்மை அதிகம். 

( நூல்: முஸ்லிம் : 1051 )


💟 *அல்லாஹு அக்பர் கபீரா வல்ஹம்து லில்லாஹி கஸீரா வசுப்ஹானல்லாஹி புக்ரதவ் வஅஸீலா*

*பொருள்:*

அல்லாஹ் மிகப் பெரியவன் என்று பெருமைப் படுத்துகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது என்று அதிகமாகப் போற்றுகிறேன். அல்லாஹ் பரிசுத்தமானவன் என்ற காலையிலும் மாலையிலும் அவனைத் துதிக்கிறேன்.

*சிறப்பு:*

 இதற்காக வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. இறையருள்கிடைக்கின்றன. 

( நூல் : முஸ்லிம் :1052 )


💟 *ஒவ்வொரு நாளும்) நூறு முறை "சுப்ஹானல்லாஹ்" துதிக்க வேண்டும் !*


*பொருள் :-*

இறைவன் தூயவன்


*சிறப்பு :-*

 ஆயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது அவர் செய்த ஆயிரம் தவறுகள் அவரைவிட்டுத் துடைக்கப்படுகின்றன

( நூல் : ஸஹீஹ் முஸ்லிம் : 5230 )



*#உங்களுக்கு பயன் அளிக்க கூடியதாக இருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் share செய்யுங்கள்.... 💞*

வெள்ளி கிழமை சிறப்பு

வெள்ளி கிழமை சிறப்பு 💞



💟 நாட்களில் சிறந்த நாள் :-


”நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.

( முஸ்லிம் 1548 )


💟 வெள்ளி கிழமை வியாபாரம் செய்யலாமா? 


வெள்ளிக்கிழமையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக ஜும்ஆ நடக்கும் நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது என்ற தடையை அல்லாஹ் குா்ஆன் மூலம் எச்சரிக்கிறான். அதை பின் வரும் குர்ஆன் வசனத்தின் மூலம் அறியலாம்.

ஈமான் கொண்டவர்களே! 

ஜும்ஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் – நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

( அல் குர்ஆன்  62:9 )

பின்னர், (ஜும்ஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். 

 ( அல் குர்ஆன் 62:10 )

அவர்களில் (சிலர்) ஒரு வியாபாரத்தையோ, அல்லது ஒரு வேடிக்கையையோ, கண்டால், அதன்பால் அவர்கள் சென்று விடுகின்றனர். மேலும், நின்ற வண்ணமே உம்மை விட்டுவிடுகின்றனர்; “அல்லாஹ்விடத்தில் இருப்பது, வேடிக்கையை விடவும் வியாபாரத்தை விடவும் மிகவும் மேலானதாகும்; மேலும் அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகவும் மேலானவன்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. 

( அல் குர்ஆன் 62:11 )

ஜும்ஆ நேரத்தில் வியாபாரம் செய்யக் கூடாது அவைகளை நிறுத்தி விட்டு நேரத்தோடு பள்ளிக்கு வர வேண்டும் என்பதை இந்த வசனங்கள் நமக்கு புரிந்து கொள்ளலாம் !


💟 ஜூம்ஆ முபாரக் என்று கூறலாமா?


வெள்ளிக்கிழமைகளில் "ஜும்மா முபாரக் " என்ற ஒரு வாசகத்தை நம்மில் சிலர் ஒருவருக்கு ஒருவர் சொல்லிக் கொள்கிறார்கள்.

பெரும்பாலானவர்கள் இந்த வார்த்தை மார்க்கத்தில் உள்ளதாக நினைத்துக் கொண்டுதான் சொல்கினறார்கள்.

உண்மையில் வெள்ளிக்கிழமையில் " ஜும்மா முபாரக்” என்ற வாசகத்தை சொல்வதற்கு குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான
ஹதீஸ்களிலோ எவ்வித ஆதாரமும் கிடையாது.

மார்க்கத்தில் எந்தவொரு செயலையாவது நாம் செய்தால் அதற்கு நபியவர்களின் வழிகாட்டுதல் (சுன்னாஹ்n)  இருக்க வேண்டும்.

அப்படியில்லாத பட்சத்தில் அது மார்க்கமாக அங்கீகரிக்கப்படாது.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை பாருங்கள் :👇

இம்மார்க்கத்தில்  இல்லாத ஒன்றையாரேனும் உருவாக்கினால் அது ரத்துசெய்யப்படும்.

( புகாரி : 2697 )


செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வின் வேதம் ஆகும்!

நடைமுறையில் மிகவும் சிறந்தது நபிகளாரின் " சுன்னா " ஆகும்!

காரியங்களில் மிகவும் தீயது மார்க்கம் என்ற பெயரால் புதிதாக உருவானவைகள் ஆகும்!

புதிதாக உருவானவைகள் அனைத்தும் " பித்அத்கள் " ஆகும்!


ஒவ்வொரு " பித்அத் "தும் வழிகேடாகும்!*

ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கும்!

( நஸயீ :- 1560 )


ஆக மார்க்கத்தில் இல்லாத எந்தவொரு  செயலை யார் செய்தாலும் அது மார்க்கமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது!

*"ஜும்மா முபாரக்" என்ற ஒரு வார்த்தையை வெள்ளி கிழமையில் சொல்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட "பித்அத்" ஆகும்.

இதற்கு நன்மையையும், கிடைக்காது, மாறாக "பித்அத்" ஐ உருவாக்கிய குற்றம் கிடைத்து விடும் .


💟 ஜூம்ஆ தொழுகைக்கு பள்ளிக்கு முன்பாகவே செல்ல வேண்டும் :-


”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாசலின் ஒவ்வொரு நுழைவாயிலிலும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்து கொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது,ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.


( முஸ்லிம் 1554 )


💟 துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம் ⏳️:-


வெள்ளிக் கிழமை நாள் ஒரு நேரம் இருக்கிறது அந்த நேரத்தில் ஓர் அடியான் தொழுது விட்டு அல்லாஹ்விடம் து ஆ கேட்டால், அந்த துஆவை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதாக நபியவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.

”அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை பற்றிக் குறிப்பிடுகையில்

 “அதில் ஒரு நேரம் இருக்கிறது. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் அடியார் தொழுகையில் ஈடுபட்டு, அல்லாஹ்விடம் எதைக் கோரினாலும் அதை அவருக்கு அல்லாஹ் வழங்காமல் இருப்பதில்லை.- 

அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அது மிகக் குறைந்த நேரம் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் சைகை செய்து உணர்த்தினார்கள்” 

( முஸ்லிம் 1543 )

அது எந்த நேரம் என்பதை அல்லாஹ் மட்டுமே நன்கு அறிந்தவன் ☝️


📚 வெள்ளிக்கிழமை செய்ய வேண்டிய அமல்கள் :-


💟 அதிகமாக ஸலவாத்து சொல்லுதல் :-

வெள்ளிக்கிழமையன்று என் மீது அதிகமாக ஸலவாத் சொல்லுங்கள்.

ஏனேனில், பூமியில் யாரேனும் ஒரு முஸ்லிம் தங்கள் மீது ஒருமுறை ஸலவாத் சொன்னால் நான் அவர்மீது பத்து ரஹ்மத்களைப் பொழிவேன். மேலும் என்னுடைய மலக்குகள் அவருக்காகப் பத்து முறை பாவமன்னிப்புத் தேடுகின்றனர்” 

( நூல் : தபரானீ )


💟 வெள்ளிக்கிழமை குளிப்பது :-🚿

'ஜுமுஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


( நூல்: புகாரீ 895 ) 


💟 பல் துலக்கி, வாசனை திரவியங்களை தடவி, அழகான ஆடையை அணிந்து கொள்வது 💞


'ஜுமுஆ நாளில் குளித்து விட்டு, இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெயைத் தேய்த்துக் கொண்டு, தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து, (அங்கு நெருக்கமாக அமர்ந்து கொண்டிருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல் தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜுமுஆவிற்கும் அடுத்த ஜுமுஆவிற்கும் இடையிலான (சிறு) பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


( நூல்: புகாரீ 880 )


💟 ஜூம்ஆ தொழுகைக்காக நடந்து வருவது 🚶🏻‍♂️:-


நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் :-

எவர் ஜும்ஆ நாளன்று மிக நல்ல முறையில் குளித்து காலை நேரத்தில் வாகனத்தில் செல்லாமல் நடந்து பள்ளிக்கு சென்று இமாமுக்கு அருகில் அமர்ந்து,

குத்பாவைக் கவனத்துடன் கேட்டு, அச்சமயம் எந்த விதப் பேச்சும் பேசாமல் இருக்கிறாரோ, 

அவர் ஜும்ஆத் தொழுகைக்கு எத்தனை எட்டுக்கள் எடுத்துவைத்து வந்தாரோ, அந்த ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு வருடம் நோன்பு வைத்த நன்மையும், ஒரு வருடம் இரவு நின்று வணங்கிய நன்மையும் கிடைக்கிறது” 


( நூல் : அபூதாவூத் )


💟 பாவங்கள் மன்னிக்கப்படுகிறது :-


நபி (ஸல்) அவர்கள் 
கூறினார்கள்:-

ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; 

பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார்.

 இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.


( ஸஹீஹ் முஸ்லிம் : 1556 )


💟 குத்பா ஓதும் நேரத்தில் பேசக்கூடாது 🗣️🚫


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது, உன் அருகில் இருப்பவரிடம் நீ 

“மௌனமாக இரு” 

என்று கூறினாலும் நீ வீண்பேச்சு பேசியவனாவாய்.

( ஸஹீஹ் முஸ்லிம் : 1541 )


💟 ஜும்ஆ தினத்தில் தொழுகைக்கு வராதவர்களுக்கான எச்சரிக்கை ⚠️


‘ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான் அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள்.

( நூல்: முஸ்லிம் :1432 )


💟 வெள்ளி கிழமை மட்டும் நோன்பு நேர்க்க கூடாது🚫

உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முன்பு ஒரு நாள், அல்லது பின்பு ஒரு நாளைச் சேர்க்காமல் (தனியாக) வெள்ளியன்று மட்டும் நோன்பு நோற்கவேண்டாம்.

( ஸஹீஹ் முஸ்லிம் : 2102 )


💟 ஜும்ஆ தொழுகைக்கு விதிவிலக்குப் பெற்றவர்கள் :-

ஜுமுஆத் தொழுகையில் விதிவிலக்குப் பெற்றவர்கள் நான்கு நபர்கள்:-

 1. பருவ வயதை அடையாதவர்கள்

2.பெண்கள் 

3. நோயாளி 

4. பயணி


'அடிமை, பெண்கள், பருவ வயதை அடையாதவர்கள், நோயாளி ஆகிய நால்வரைத் தவிர அனைத்து முஸ்லிம்கள் மீதும் ஜுமுஆத் தொழுகை கடமையாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ரலி)

( நூல்: அபூதாவூத் 901 ))


*❣️STRAIGHT PATH*❣️

பாவத்தை கழுவும் தொழுகை

பாவத்தை கழுவும் தொழுகை

கண்ணியத்திற்குரிய சகோதர, சகோதரிகளே, எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!

தொழுகையின் மூலம் அல்லாஹ் மனிதர்களின் பாவங்களை மன்னிக்கிறான். எவ்வாறு தொழுகையின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்பதை இந்த உரையில் காண்போம்..  

‘உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?’ என்று கேட்டார்கள். ‘அவரது அழுக்குகளில் எதையும் தங்க விடாது’ என்று மக்கள் பதிலளித்தார்கள். ‘இது தான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும் இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)

உடலை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும் நீண்ட தூரம் பயணம் செய்து பாவக் கடனைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல் வீட்டு வாசலில் ஓடுகின்ற, நமக்கு எளிதில் கிடைக்கின்ற ஆற்று நீர் உடலை தூய்மைப்படுத்துவதைப் போல எந்த விலையும் கொடுக்காமல் மிகப் பெரும் சிரமமும் இல்லாமல் நாம் தொழும் தொழுகை நாம் செய்யக் கூடிய பாவங்களைப் போக்கும் மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்.

(அல்குர்ஆன் 29:45)

இஸ்லாம் குற்றங்களைத் தடுத்து அதற்குத் தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல் அதை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை, தொழுகையின் மூலமாக சொல்லித் தருகிறது. தொழுபவர்கள் நாம் தொழுகிறோம் என்ற காரணத்திற்காகவாவது மானக்கேடான விஷயங்களை விட்டும் தவிர்ந்திருப்பார்கள். இன்று பெரும்பாலும் தொழக் கூடியவர்களிடம் பெரும் குற்றங்கள் நிகழ்வதைக் காண முடிவதில்லை. பாவங்களிலிருந்து விடுபட அல்லாஹ் நம்மை தொழுகையில் கண்காணிக்கிறான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

தொழுகையில் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணம், பாவங்கள் குற்றங்கள் செய்யும் போதும் இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவற்றைத் தடுக்கும் கருவியாக ஆகி விடுகின்றது. இது போல் ஐவேளைத் தொழுகையிலும் இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் பாவங்களுக்கு வழியில்லாமல் போய் விடும்.

இஹ்ஸான் என்றால் என்ன

இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ‘(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்’ என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 50

நாம் என்ன செய்தாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் ஒரு மனிதனிடத்தில் வந்து விட்டால் பாவங்கள் செய்ய அஞ்சுவான். மேலும் மறுமை நாளில் வெற்றி பெற்று சொர்க்கத்திற்குச் செல்பவனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது….

தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அவன்) தனது இறைவனின் பெயரை நினைத்துத் தொழுதான். (அல்குர்ஆன் 87:14, 15)

பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்தும் வழிமுறையாக தொழுகையை இந்த வசனத்தில் இறைவன் விளக்கியிருப்பது தொழுகையின் முக்கியத்துவத்தையும் பாவத்தை இல்லாமல் ஆக்கும் அழகிய வழிமுறையையும் எடுத்துக் காட்டுகிறது.

‘யார் எனது (இந்த) உளுவைப் போன்று உளுச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 160

சாதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுதால் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறதென்றால் ஐவேளைத் தொழுகையையும் நிறைவேற்றினால் ஆற்றில் ஐந்து தடவை குளித்து உடலைத் தூய்மை செய்தவதைப் போல் பாவங்கள் அழியும் என்பது தெளிவாகிறது. தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் உதாரணமாகக் கூறலாம்.

நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்’ என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை.

பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன்.

ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்!’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘அவ்வாறாயின் அல்லாஹ் ‘உமது பாவத்தை’ அல்லது ‘உமக்குரிய தண்டனையை’ மன்னித்து விட்டான்’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி (6823)

தொழுகை பாவங்களை அழிக்கும் என்பதற்கு நிதர்சன சான்றாக இந்த ஹதீஸ் உள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும், மற்ற எவருக்கும் தெரியாமல் பாவத்தைச் செய்து விட்டு, அந்த நபித்தோழர் தன் கௌவரத்தைத் தூக்கியெறிந்து விட்டுத் தன் பாவத்தை வாய்விட்டுச் சொல்கிறார் என்றால் தொழுகை பாவத்திற்குப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாவத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு மனிதனை எவ்வாறு பக்குவப்படுத்துகிறது என்பதை அறியலாம்.பாவங்கள் என்றால் பெரும் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களும் தொழுகையின் மூலமாக மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால்   

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும் பாவங்கள் செய்யாத வரை!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம் (394)

இவ்வாறு தொழுதால் மட்டும் தான் பாவங்கள் மன்னிக்கப்படுமா? தொழுகைக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளைச் செய்யும் போதும் பாவங்கள் மன்னிக்கப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?’ என்று கேட்டார்கள்.

மக்கள், ‘ஆம்! அல்லாஹ்வின் தூதரே!’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘சிரமமான சூழ்நிலைகளிலும் உளுவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தாம் கட்டுப்பாடுகளாகும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (421)

இவ்வாறு தொழுகைக்காகச் செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளும் நன்மையாக அமைகிறது. தொழுகை பாவப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சொர்க்கம் செல்வதற்குத் துணைச் சாதனமாகவும் உள்ளது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள்’ எனக் கேட்டார். அப்போது, ‘நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும் அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது தொழுகையை நிலைநாட்ட வேண்டும் ஸகாத் வழங்க வேண்டும் உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)

நூல்: புகாரி (1396)

அல்லாஹ்வுக்கு நிகராக யாரையும் எதையும் ஆக்கக் கூடாது என்ற கட்டளைக்கு அடுத்தபடியாக, சொர்க்கம் செல்வதற்குத் தொழுகை என்ற வணக்கத்தைத் தான் நபியவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இது தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.
இவ்வாறு தொழுகையாளிகளுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் அதிகமான கூலிகள் இருக்கும் நிலையில், தொழக்கூடிய சிலர் பாவங்களிலிருந்து விடுபடாத சூழ்நிலையைக் காண்கிறோம். தொழுது கொண்டே மோசடி செய்கிறார்கள் வட்டி வாங்குகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் தொழுகையை ஒரு சடங்காக நிறைவேற்றுவது தான்.

நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று, அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் தொழுகையை அமைத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு தொழுபவர்களுக்கு அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்.

தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான்.

அல்குர்ஆன் (107:4, 5)

இவர்களின் நிலைமை தான் இப்படி என்றால் குர்ஆன், ஹதீஸை விளங்கிய தவ்ஹீதைப் பேசக் கூடிய மக்களிடத்திலும் இந்தக் குறைபாடுகளைக் காண்கிறோம். குர்ஆன், ஹதீஸை மட்டும் பேசக்கூடிய பள்ளிவாயில்களில் கூட, சுப்ஹு தொழுகையில் ஒரு சில நபர்கள் மட்டும் வருவதே இதற்குச் சான்று! ஆனால் ஜும்ஆ தினங்களில் கால் வைக்கக் கூட இடமிருக்காது.
இது போன்று நடப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதுவும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்(கித் தொழுவிக்)குமாறு பணித்து விட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, இன்னும், தொழுகைக்குப் புறப்பட்டு வராமலிருப்பவரை எரித்து விட முடிவு செய்தேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (657)

நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் சோம்பல் காட்டுபவர்களை நயவஞ்சகர்களுக்கு ஒப்பிட்டுள்ளார்கள்.இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையே மறுமை வெற்றிக்கும் அடிப்படையாக உள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 378

தொழுகை தான் ஒருவனுடைய மறுமை வெற்றியைத் தீர்மானிப்பதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!

உயிரினும் மேலாக - 4

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🥀 உயிரினும் மேலாக*
         *தூதரை நேசிப்போம் 🥀*

                *✍🏻...... { 0️⃣4️⃣ }*

*🏹உஹத் போரில்*
                   *ஒரு காட்சி 🏹*

*🏮🍂உஹத் போர்க்களம் இஸ்லாமிய வரலாற்றில் மறக்க முடியாத ஒரு போர்க்களம். அந்தப் போர்க்களத்தின் போது நபி (ஸல்) அவர்களை எல்லா திசையிலிருந்தும் ஆபத்துகள் சுற்றி வளைத்து விடுகின்றன. எதிரிகள் யார்❓ முஸ்லிம்கள் யார்❓ என்று அடையாளம் தெரியாத அளவுக்குப் போர்க்களம் சின்னாபின்னமாகியிருந்தது.*

*🏮🥀போர்த் தளபதியாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறி வைத்து, எதிரிகள் கொல்ல நினைக்கின்ற அந்த வேளையில், அந்த இக்கட்டான கட்டத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனக்காகக் களமிறங்கி எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பவர் என்னுடன் சுவனத்தில் இருப்பார்” என்ற பிரகடனத்தை வெளியிடுகின்றார்கள். அப்போது அந்தத் தலைவர் மீது பற்றும் பாசமும் கொண்ட அன்சாரித் தோழர்கள் பாய்ந்து விழுந்து காப்பாற்றிய அந்த வீர தீர, தியாக வரலாற்றை, உண்மைச் சம்பவத்தைப் பார்ப்போம்.*

(14056) 14102- حَدَّثَنَا عَفَّانُ ، حَدَّثَنَا حَمَّادٌ ، أَخْبَرَنَا ثَابِتٌ ، وَعَلِيُّ بْنُ زَيْدٍ ، *عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ الْمُشْرِكِينَ لَمَّا رَهِقُوا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَهُوَ فِي سَبْعَةٍ مِنَ الأَنْصَارِ ، وَرَجُلَيْنِ مِنْ قُرَيْشٍ ، قَالَ : مَنْ يَرُدُّهُمْ عَنَّا ، وَهُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ ؟ فَجَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ ، فَقَاتَلَ حَتَّى قُتِلَ ، فَلَمَّا أَرْهَقُوهُ أَيْضًا ، قَالَ : مَنْ يَرُدُّهُمْ عَنِّي ، وَهُوَ رَفِيقِي فِي الْجَنَّةِ ؟ حَتَّى قُتِلَ السَّبْعَةُ ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبِيهِ : مَا أَنْصَفْنَا إِخْوَانَنَا*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்சாரிகள் ஏழு பேர், குறைஷிகளில் இரண்டு பேர் மட்டும் இருந்தனர். (இதைக் கண்ணுற்ற) எதிரிகள், நபி (ஸல்) அவர்களைத் தீர்த்துக் கட்ட நெருங்கியதும், “எனக்காக இவர்களுடன் எதிர்த்துப் போரிடுபவர் யார்❓ அவ்வாறு போரிடுபவர் சுவனத்தில் எனது நண்பர்கள்” என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகளில் ஒருவர் முன்வந்து போராடினார். கடைசியாக அவர் கொல்லப்பட்டு விட்டார். மீண்டும் எதிரிகள், நபி (ஸல்) அவர்களைத் தீர்த்துக் கட்ட நெருங்கியதும், “எனக்காக இவர்களுடன் எதிர்த்துப் போரிடுபவர் யார்❓ அவ்வாறு போரிடுபவர் சுவனத்தில் எனது நண்பர்கள்” என்று சொன்னார்கள். உடனே அன்சாரிகளில் ஒருவர் முன்வந்து போராடினார். கடைசியாக அவர் கொல்லப்பட்டு விட்டார். இப்படியே தொடர்ந்து (ஏழு தடவை) நடந்தது. கடைசியில் ஏழு அன்சாரித் தோழர்களும் கொல்லப்பட்டு விட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (குறைஷிகளான) இரு தோழர்களை நோக்கி, “நம்முடைய (குறைஷி) தோழர்கள் அன்சாரிகளைப் போல் நடந்து கொள்ளவில்லை” என்று குறிப்பிட்டார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
            *அனஸ் பின்*
                    *மாலிக் (ரலி),*

    *📚நூல்:அஹ்மத் 13544📚*

*🏮🍂அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சுவனத்தில் தமக்கு நண்பர் என்ற துருப்புச் சீட்டைத் தூக்கிப் போட்டதும், அன்சாரித் தோழர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டு, தூய நபி (ஸல்) அவர்களை அள்ளி அரவணைத்துக் காக்க முன் வருகின்றனர். தங்களது இன்னுயிரை நபி (ஸல்) அவர்களுக்காகக் பணயம் வைக்கின்றனர்.*

*🏮🍂அன்சாரிகளின் இந்தத் தியாகத்தைக் கண்டு நெகிழ்ந்து போன நபி (ஸல்) அவர்கள், இந்த நெருக்கடியான கட்டத்தில் என்னுடைய உயிரைக் காக்க அன்சாரிகள் செய்த தியாகத்தைப் போன்று முஹாஜிர்களாகிய நீங்கள் செய்யவில்லை; அந்தத் தியாகத்தில் அன்சாரிகள் உங்களை முந்திச் சென்று விட்டார்கள் என்று அன்சாரிகளை வெகுவாகப் பாராட்டுகின்றார்கள்.*

*🏮🍂இங்கே அன்சாரிகள் நபி (ஸல்) அவர்கள் மீது கொண்டிருந்த அன்பையும், மறுமையில் அன்னாருடைய அன்பைப் பெறுவதற்காகத் தங்கள் இன்னுயிரைச் சமர்ப்பிக்கும் தியாகக் காட்சியையும் உஹத் களத்திலிருந்து தெரிந்து கொள்கிறோம்.*

*🏮🍂போர்க்களத்தில் மட்டுமல்லாது சாதாரண காலத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அன்பை மட்டுமே நபித்தோழர்கள் எதிர் பார்த்திருந்தார்கள்.*

1122 – حَدَّثَنَا الْحَكَمُ بْنُ مُوسَى أَبُو صَالِحٍ حَدَّثَنَا هِقْلُ بْنُ زِيَادٍ قَالَ سَمِعْتُ الأَوْزَاعِىَّ قَالَ حَدَّثَنِى يَحْيَى بْنُ أَبِى كَثِيرٍ حَدَّثَنِى أَبُو سَلَمَةَ *حَدَّثَنِى رَبِيعَةُ بْنُ كَعْبٍ الأَسْلَمِىُّ قَالَ كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِى « سَلْ ». فَقُلْتُ أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِى الْجَنَّةِ. قَالَ « أَوَغَيْرَ ذَلِكَ ». قُلْتُ هُوَ ذَاكَ. قَالَ « فَأَعِنِّى عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ*

_*🍃நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இரவில் தங்கிக் கொண்டிருந்தேன். அவர்களுக்கு உளூச் செய்ய தண்ணீர் மற்றும் தேவையானவற்றைக் கொண்டு வந்தேன். அப்போது அவர்கள், “நீ என்னிடம் (தேவையானதைக்) கேள்” என்று கூறினார்கள். “நான் உங்களுடன் சுவனத்தில் இருப்பதையே கேட்கின்றேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “இதைத் தவிர வேறு ஒன்றுமில்லையா?” என்று கேட்டார்கள். “அது மட்டும் தான்” என்று கூறினேன். “அப்படியானால் நீ அதிகமாகத் தொழுவதன் மூலம் உனக்கு அது கிடைப்பதற்கு என்னுடன் ஒத்துழைப்பாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.*_

*🎙️அறி : ரபீஆ பின் கஅப் அல்அஸ்லமி (ரலி),*

*📚நூல் : முஸ்லிம் 754,*
                      *நஸயீ 1126,*
               *அபூதாவூத் 1125 📚*

*🏮🍂இந்த நபித்தோழரிடம் நபி (ஸல்) அவர்கள், கேள் என்றதும் பொன்னையும் பொருளையும் கேட்டு விடவில்லை. அந்த அன்சாரித் தோழர்களைப் போன்று மறுமையில் சுவனத்தில் நபி (ஸல்) அவர்களுடன் சேர்ந்திருக்கும் பாக்கியத்தைத் தான் கேட்கின்றார்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

உயிரினும் மேலாக - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🥀 உயிரினும் மேலாக*
         *தூதரை நேசிப்போம் 🥀*

                *✍🏻...... { 0️⃣3️⃣ }*

*🏮🍂இன்று இந்த உலகில் அற்ப அரசியல் தலைவர்களுக்காக உயிர்களையும் பொருட்களையும் அர்ப்பணம் செய்பவர்கள் இருக்கத் தான் செய்கின்றார்கள். ஆனால் அவர்களது அந்த நட்பு இந்த உலகத்தோடு முடிந்து விடுகின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்களுக்காகச் செய்யக் கூடிய இந்த அர்ப்பணம் மறுமை வரை நீடிக்கின்றது.*

3688- حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ ، عَنْ ثَابِتٍ ، *عَنْ أَنَسٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلاً سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم ، عَنِ السَّاعَةِ فَقَالَ مَتَى السَّاعَةُ قَالَ وَمَاذَا أَعْدَدْتَ لَهَا قَالَ : لاََ شَيْءَ إِلاَّ أَنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم فَقَالَ : أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَمَافَرِحْنَا بِشَيْءٍ فَرَحَنَا بِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ قَالَ أَنَسٌ فَأَنَا أُحِبُّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَبَا بَكْرٍ وَعُمَرَ وَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ بِحُبِّي إِيَّاهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِمِثْلِ أَعْمَالِهِمْ*

_*🍃ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் மறுமை நாளைப் பற்றி, “மறுமை நாள் எப்போது வரும்❓” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அதற்காக நீ என்ன தயார் செய்து வைத்திருக்கின்றாய்❓” என்று கேட்டார்கள்._ அம்மனிதர், _*“அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நான் நேசிக்கின்றேன் என்பதைத் தவிர எதுவுமில்லை” என்று பதிலளித்தார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் தான் நீ (மறுமையில்) இருப்பாய்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீ நேசித்தவர்களுடன் இருப்பாய்” என்று சொன்னதைக் கேட்டு நாங்கள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறு எதற்காகவும் மகிழ்ச்சியடைந்ததில்லை.*_

*🎙️அறி : அனஸ் (ரலி),*

     *📚நூல் : புகாரி 3688📚*

7153- حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَة، حَدَّثَنَا جَرِيرٌ ، عَنْ مَنْصُورٍ ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ ، *حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ بَيْنَمَا أَنَا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم خَارِجَانِ مِنَ الْمَسْجِدِ فَلَقِيَنَا رَجُلٌ عِنْدَ سُدَّةِ الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللهِ مَتَى السَّاعَةُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَا أَعْدَدْتَ لَهَا فَكَأَنَّ الرَّجُلَ اسْتَكَانَ ثُمَّ قَالَ يَا رَسُولَ اللهِ مَا أَعْدَدْتُ لَهَا كَبِيرَ صِيَامٍ ، وَلاَ صَلاَةٍ ، وَلاَ صَدَقَةٍ وَلَكِنِّي أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ قَالَ : أَنْتَ مَعَ مَنْ أَحْبَبْتَ*

_*🍃மற்றொரு அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதரே! நான் அதற்கு முன்னேற்பாடாகப் பெரிய அளவில் நோன்போ, தொழுகையோ, தான தர்மங்களோ செய்து வைத்திருக்கவில்லை. ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிக்கின்றேன்” என்று அம்மனிதர் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ யாரை நேசிக்கின்றாயோ அவருடன் இருப்பாய்” என்று கூறினார்கள்.*_

       *📚நூல் : புகாரி 7153📚*

*🏮🍂இவ்வாறு நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில் சங்கமித்து இருப்பது மறுமையில் கிடைக்கும் பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியமாகும். இதை எல்லாம் வல்ல அல்லாஹ் திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.*

*وَمَنْ يُّطِعِ اللّٰهَ وَالرَّسُوْلَ فَاُولٰٓٮِٕكَ مَعَ الَّذِيْنَ اَنْعَمَ اللّٰهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيّٖنَ وَالصِّدِّيْقِيْنَ وَالشُّهَدَآءِ وَالصّٰلِحِيْنَ‌ ۚ وَحَسُنَ اُولٰٓٮِٕكَ رَفِيْقًا ؕ‏* 

_*🍃அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்பட்டு நடப்போர், அல்லாஹ்வின் அருள் பெற்ற நபிமார்கள், உண்மை யாளர்கள், உயிர்த் தியாகிகள், மற்றும் நல்லோருடன் இருப்பார்கள். அவர்களே மிகச் சிறந்த நண்பர்கள்.*_

     *📖(அல்குர்ஆன் 4:69)📖*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

தூதரை நேசிக்காதவரை - 2

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

        *🔥 தூதரை*
                   *நேசிக்காதவரை 🔥*

                 *✍🏻........ { 0️⃣2️⃣ }*

*🥀நபி (ஸல்) மீது அன்பு*
       *நபித்தோழர்கள் போட்டி 🥀*

*🏮🍂 ஈமானின் சுவையை அனுபவிப்பதற்காக நபித்தோழர்கள், நீ முந்தியா❓ நான் முந்தியா❓ என ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொள்வார்கள்.போர்க் களத்திற்குப் போவதற்காக, அங்கு தங்கள் உயிர்களை அர்ப்பணம் செய்வதற்காகப் போட்டி போட்டுக் கொள்வார்கள். அவர்களுக்குத் தேவை நபி (ஸல்) அவர்களின் அன்பு தான்.* அதற்காக அவர்கள் எதையும் இழக்கத் தயாரானார்கள்.

3701- حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ ، عَنْ أَبِي حَازِمٍ *عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ لأُعْطِيَنَّ الرَّايَةَ غَدًا رَجُلاً يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ قَالَ فَبَاتَ النَّاسُ يَدُوكُونَ لَيْلَتَهُمْ أَيُّهُمْ يُعْطَاهَا فَلَمَّا أَصْبَحَ النَّاسُ غَدَوْا عَلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم كُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَاهَا فَقَالَ أَيْنَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ فَقَالُوا يَشْتَكِي عَيْنَيْهِ يَا رَسُولَ اللهِ قَالَ فَأَرْسِلُوا إِلَيْهِ فَأْتُونِي بِهِ فَلَمَّا جَاءَ بَصَقَ فِي عَيْنَيْهِ وَدَعَا لَهُ فَبَرَأَ حَتَّى كَأَنْ لَمْ يَكُنْ بِهِ وَجَعٌ فَأَعْطَاهُ الرَّايَةَ فَقَالَ عَلِيّيَا رَسُولَ اللهِ أُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا فَقَالَ انْفُذْ عَلَى رِسْلِكَ حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ مِنْ حَقِّ اللهِ فِيهِ فَوَاللَّهِ لأَنْ يَهْدِيَ اللَّهُ بِكَ رَجُلاً وَاحِدًا خَيْرٌ لَكَ مِنْ أَنْ يَكُونَ لَكَ حُمْرُ النَّعَمِ*

_*🍃(கைபர் போரின் போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நாளை (இஸ்லாமியப் படையின்) கொடியை ஒரு மனிதரிடம் தரப் போகின்றேன். அல்லாஹ் அவருடைய கரங்களில் வெற்றியை அளிப்பான்” என்று சொன்னார்கள். ஆகவே மக்கள் தம்மில் எவரிடம் அது கொடுக்கப்படும் என்ற யோசனையில் இரவெல்லாம் மூழ்கினார்கள். காலையானதும் மக்களில் ஒவ்வொருவரும் தன்னிடம் அது கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்ட வண்ணம் அல்லாஹ்வின் தூதரிடம் சென்றனர்.*_ _நபி (ஸல்) அவர்கள், “அலீ பின் அபீதாலிப் எங்கே❓” என்று கேட்டார்கள். மக்கள், “அவருக்குக் கண் வலி, அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவருக்கு ஆளனுப்பி என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் வந்தவுடன், அவர்களுடைய இரு கண்களிலும் (தம் உமிழ்நீரை) உமிழ்ந்து அவர்களுக்காகப் பிரார்த்தனை புரிந்தார்கள். அவர்களுக்கு (அதற்கு முன்) வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று அலீ (ரலி) அவர்கள் குணமடைந்தார்கள்._

_*பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி)யிடம் கொடியைக் கொடுத்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் நம்மைப் போன்று (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்தவர்களாக) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா❓” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “அவர்களுடைய களத்தில் இறங்கும் வரை நிதானமாகச் செல்லுங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்திற்கு அழையுங்கள். மேலும் இஸ்லாத்தில் அவர்கள் மீது கடமையாகின்ற அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகளைத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உங்கள் மூலமாக அல்லாஹ் ஒரு மனிதருக்கு நேர்வழி காட்டுவது (அரபுகளின் பெரும் செல்வமான) சிவப்பு நிற ஒட்டகங்களை தர்மம் செய்வதை விட உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்._

*🎙️அறிவிப்பவர்:* 
              *ஸஹ்ல் பின்*
                      *ஸஅத் (ரலி),*

      *📚நூல்: புகாரி 3701📚*

*🏮🍂இன்று இந்த உலகில் அற்ப அரசியல் தலைவர்களுக்காக உயிர்களையும் பொருட்களையும் அர்ப்பணம் செய்பவர்கள் இருக்கத் தான் செய்கின்றார்கள். ஆனால் அவர்களது அந்த நட்பு இந்த உலகத்தோடு முடிந்து விடுகின்றது. ஆனால் நபி (ஸல்) அவர்களுக்காகச் செய்யக் கூடிய இந்த அர்ப்பணம் மறுமை வரை நீடிக்கின்றது.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

தூதரை நேசிக்காதவரை - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

        *🔥 தூதரை*
                   *நேசிக்காதவரை 🔥*

                 *✍🏻........ { 0️⃣1️⃣ }*

*☄️உயிரினும் மேலான*
                    *உத்தம நபி*

*🏮🍂ஓர் இறை நம்பிக்கையாளர் எனப்படுபவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது கொண்டிருக்க வேண்டிய உறவு சாதாரண தொண்டன், தன்னுடைய அரசியல் கட்சித் தலைவர் மீது கொண்டிருக்கும் உறவைப் போன்றதல்ல!*

*🏮🍂அவனது தாய், தந்தையர், மனைவி மக்கள் மற்றும் உலக மக்களில் யார் மீது கொண்டிருக்கும் உறவு, அன்பு, பாசத்தை விடவும் நபி (ஸல்) அவர்கள் மீது கொள்ள வேண்டிய அன்பு அழுத்தமான ஒன்றாக இருக்க வேண்டும்.*

_இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்லிக் காட்டுகின்றான்._

_قُلْ اِنْ كَانَ اٰبَآؤُكُمْ وَاَبْنَآؤُكُمْ وَاِخْوَانُكُمْ وَاَزْوَاجُكُمْ وَعَشِيْرَتُكُمْ وَ اَمْوَالُ ۨاقْتَرَفْتُمُوْهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَ مَسٰكِنُ تَرْضَوْنَهَاۤ اَحَبَّ اِلَيْكُمْ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ وَ جِهَادٍ فِىْ سَبِيْلِهٖ فَتَرَ بَّصُوْا حَتّٰى يَاْتِىَ اللّٰهُ بِاَمْرِهٖ‌ ؕ وَاللّٰهُ لَا يَهْدِى الْقَوْمَ الْفٰسِقِيْنَ_

_*🍃“உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமான வையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்” என்று கூறுவீராக!*_

       *📖(அல்குர்ஆன் 9:24)📖*

*🏮🍂இந்த உலகத்தில் ஒரு மனிதனுக்குப் பிரியமான அனைத் தையும் விட அல்லாஹ்வும், அவனது தூதரும் மேலாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தன்னுடைய வேதனையை எதிர்பார்த்திருக்க வேண்டும் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄️உயிரினும் மேலான*
                   *உத்தம நபி*

 *اَلنَّبِىُّ اَوْلٰى بِالْمُؤْمِنِيْنَ مِنْ اَنْفُسِهِمْ‌ وَاَزْوَاجُهٗۤ اُمَّهٰتُهُمْ‌ ؕ وَاُولُوا الْاَرْحَامِ بَعْضُهُمْ اَوْلٰى بِبَعْضٍ فِىْ كِتٰبِ اللّٰهِ مِنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُهٰجِرِيْنَ اِلَّاۤ اَنْ تَفْعَلُوْۤا اِلٰٓى اَوْلِيٰٓٮِٕكُمْ مَّعْرُوْفًا‌ ؕ كَانَ ذٰ لِكَ فِى الْكِتٰبِ مَسْطُوْرًا‏*

_*🍃நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். அவரது மனைவியர் அவர்களுக்கு அன்னையர்.*_

     *📖(அல்குர்ஆன் 33:6)📖*

*🏮🍂நம்முடைய உயிரை விடவும் நபி (ஸல்) அவர்கள் மேலானவர்கள் என்று இந்த வசனம் குறிப்பிடுகின்றது. இதன் படி நபி (ஸல்) அவர்களை நேசிப்பது என்பது கொள்கை (ஈமானிய) அடிப்படையில் அமைந்து விடுகின்றது. அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்:*

حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ : أَخْبَرَنَا شُعَيْبٌ قَالَ : حَدَّثَنَا أَبُو الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ*

_*🍃“எனது உயிர் எவனது கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவருக்கு அவரது தந்தையையும், அவரது மக்களையும் விட நான் மிக்க அன்பானவராக ஆகும் வரை அவர் (உண்மையான) ஈமான் உள்ளவராக மாட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
                  *அபூஹுரைரா (ரலி),*

       *📚நூல் : புகாரி 14📚*

*🏮🍂இறைத் தூதரை நேசிப்பவர்கள் தான் ஈமானிய சுவையை அனுபவிக்க முடியும் என்று இந்த ஹதீஸில் குறிப்பிடுகின்றார்கள்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அல்லாஹ்வின் தூதரே - 4

*💐அஸ்ஸலாமு அலைக்கும்*

*🏅அல்லாஹ்வின் தூதரே 🏅*
                                  ⤵️
           *📚அழகிய ஆசிரியர்📚*

             *✍🏻.... தொடர் :  [ 04 ]*

*☄️தலைச்சிறந்த முன்மாதிரி*

*🏮🍂சுற்றியிருக்கும் மக்களுக்கு சத்தியத்தை சொல்ல வேண்டுமெனும் ஆர்வம் நபியிடம் மோலோங்கி இருந்தது. சுருக்கமாக கூறின், எல்லா விதத்திலும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தலைச்சிறந்த முன்மாதிரியாக திகழ்ந்தார்கள்.*

_ارِهِمْ، فَقُلْتُ: وَاثُكْلَ أُمِّيَاهْ، مَا شَأْنُكُمْ؟ تَنْظُرُونَ إِلَيَّ، فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ، فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ، فَلَمَّا صَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبِأَبِي هُوَ وَأُمِّي، مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلَا بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ، فَوَاللهِ، مَا كَهَرَنِي وَلَا ضَرَبَنِي وَلَا شَتَمَنِي، قَالَ: «إِنَّ هَذِهِ الصَّلَاةَ لَا يَصْلُحُ فِيهَا شَيْءٌ مِنْ كَلَامِ النَّاسِ، إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ» أَوْ كَمَا_

_*🍃நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது (தொழுது கொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் “யர்ஹமுக் கல்லாஹ்” (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன். உடனே  மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் “என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்❓” என்று கேட்டேன். மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை  அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்._

_*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என் தந்தையும் என் தாயும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்- (பின்வருமாறு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக!  அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. (மாறாக,) அவர்கள், “இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும் பெருமைப்படுத்துவதும் குர்ஆன் ஓதுவதுமாகும்“*_ _என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்._

*🎙️அறிவிப்பவர்:*
              *முஆவியா பின்*
                     *அல்ஹகம்(ரலி)*

     *📚நூல்: முஸ்லிம் (935)📚*

*🏮🍂“அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் (என் வாழ்நாளில்) கண்டதேயில்லை” என்று நபித்தோழர் கூறுகிறார். இதன் மூலம் அல்லாஹ்வின் தூதருடைய அணுகுமுறை எந்தளவுக்கு நன்றாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.*

*🏮🍂தும்மியவர் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவதை செவியேற்பவர், யர்ஹமுகல்லாஹ் என்று பதில் சொல்ல வேண்டும். தொழுகை என்பது இறைவனிடம் உரையாடுவதற்கு நிகரானது என்பதால் அதில் இருக்கும் நிலையில் தும்மியருக்கு பதில் சொல்லக் கூடாது.*

*🏮🍂இது தெரியாமல் தொழுகையில் பதில் கூறியவருக்கு நபியவர்கள் நல்ல முறையில் தவறைச் சுட்டிக் காட்டுகிறார்கள்; தொழுகையின் நோக்கத்தையும் விளக்குகிறார்கள். இவ்வாறு, கேட்பவரின் நிலைக்கேற்ப கற்றுத்தரும் பண்பாளராக நபிகளார் இருந்தார்கள்.*

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، قَالَ الوَلِيدُ بْنُ كَثِيرٍ: أَخْبَرَنِي أَنَّهُ سَمِعَ وَهْبَ بْنَ كَيْسَانَ، _أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ، يَقُولُ كُنْتُ غُلاَمًا فِي حَجْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَتْ يَدِي تَطِيشُ فِي الصَّحْفَةِ، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا غُلاَمُ، سَمِّ اللَّهَ، وَكُلْ بِيَمِينِكَ، وَكُلْ مِمَّا يَلِيكَ» فَمَا زَالَتْ تِلْكَ طِعْمَتِي بَعْدُ_

_*🍃நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் மடியில் வளர்ந்துவந்த சிறுவனாக இருந்தேன். (ஒரு முறை) என் கை உணவுத்தட்டில் (இங்கும் அங்குமாக) அலைந்து கொண்டிருந்தது. அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘சிறுவனே! அல்லாஹ்வின் பெயரைச் சொல். உன் வலக் கரத்தால் சாப்பிடு. உன(து கை)க்கு அருகிலிருக்கும் பகுதியிலிருக்கும் எடுத்துச் சாப்பிடு!’ என்று கூறினார்கள். அதன் பிறகு இதுவே நான் உண்ணும் முறையாக அமைந்தது.*_

*🎙️ அறிவிப்பவர்:*
              *உமர் இப்னு*
                    *அபீஸலமா(ரலி)*

      *📚நூல்: புகாரி (5376)📚*

*🏮🍂பெரும்பாலான பெரியவர்கள் சிறுவர்களுக்கு ஒழுக்க மாண்புகளைக் கற்றுத் தருவதில்லை. வளர்ந்து ஆளானதும் அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள் எனக் கருதிவிட்டு அடிப்படைச் செய்திகளைக் கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார்கள்.* சிலரோ போதிக்கும் பெயரில் அதிக கண்டிப்பைக் காட்டுகிறார்கள். கண்டிப்பே கூடாதென நாம் வாதிடவில்லை. *கற்கும் ஈடுபாட்டைக் கெடுக்காத வகையில் அது எல்லைக்குள் இருக்க வேண்டும்.*

*🏮🍂அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பாருங்கள். கண்டிப்பை கட்டுக்குள் வைத்துவிட்டு குழந்தையின் மனதில் ஆழப்பதியும் வகையில் பக்குவமாக சொல்கிறார்கள். சிறுவர்கள் மட்டுமல்ல, பெரியவர்களும் கூட சீக்கிரம் உள்வாங்கிக் கொள்ளும் வகையில்தான் அண்ணலாரின் அணுகுமுறை இருந்தது.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻