பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, November 8, 2019

நன்மைகளை வாரி - 22

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 22 ]*

*☄தொழுகைக்காக*
            *நடந்து செல்வதன்*
                          *சிறப்புகள் { 01 }*

*🏮🍂தொழுகையை முறையாக பேணித் தொழுபவர்கள் அதன் மூலம் ஏராளமான நற்பாக்கியங்களை அடைந்து கொள்கின்றனர். அந்த நற்பாக்கியங்களில் ஒன்று தான் தொழுகையை நிறைவேற்றுவதற்காக நடந்து வருபவர்கள் பெறும் நன்மைகள். இதற்கு எத்தகைய பாக்கியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள் என்பதைக் காண்போம்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄தொலைவிலிருந்து நடந்து வருபவருக்கு அதிக நன்மை☄*

*🏮🍂பள்ளிவாசல் தூரமாக இருந்தால் தொழுகைக்குச் செல்வதற்கு சோம்பல் கொண்டு பல சகோதரர்கள் வீட்டிலேயே தொழுது விடுகின்றனர். இதனை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.*

*நம்முடைய வீட்டிலிருந்து பள்ளிவாசல் வெகு தொலைவில் இருந்தாலும் நாம் பள்ளியை நாடிச் சென்று தொழுகையை நிறைவேற்றினால் ஏராளமான நன்மைகளை அல்லாஹ் நமக்கு வாரி வழங்குகிறான்.*

*🏮🍂அதிலும் குறிப்பாக இன்று பல பள்ளிவாசல்களில் இணை கற்பிக்கின்ற காரியங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இத்தகைய பள்ளிவாசல்கள் தொழுவதற்கே தகுதியற்ற பள்ளிவாசல்களாகும்.*

*🏮🍂இணை வைப்புக் காரியங்கள் அரங்கேறாத தவ்ஹீத் பள்ளிவாசல்கள் வெகு தொலைவில் இருந்தாலும் நாம் நாடிச் சென்று அங்கு நம்முடைய தொழுகைகளை நிறைவேற்றும் போது நாம் இந்த நன்மைகளை அடைந்து கொள்ள முடியும்.*

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ  بَرَّادٍ الأَشْعَرِيُّ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو  أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، *عَنْ أَبِي مُوسَى، قَالَ  قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ أَعْظَمَ النَّاسِ  أَجْرًا فِي الصَّلاَةِ أَبْعَدُهُمْ إِلَيْهَا مَمْشًى فَأَبْعَدُهُمْ  وَالَّذِي يَنْتَظِرُ الصَّلاَةَ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الإِمَامِ  أَعْظَمُ أَجْرًا مِنَ الَّذِي يُصَلِّيهَا ثُمَّ يَنَامُ ‏"‏ ‏.‏ وَفِي  رِوَايَةِ أَبِي كُرَيْبٍ ‏"‏ حَتَّى يُصَلِّيَهَا مَعَ الإِمَامِ فِي  جَمَاعَةٍ ‏"‏*

*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் தொழுகைக்காக அதிக நன்மை பெறுகின்றவர் (யாரெனில்), (தொழுகைக்காக) வெகு தொலைவிலிருந்து நடந்துவருபவர் ஆவார். அடுத்து அதற்கடுத்த தொலை தூரத்திலிருந்து வருபவர் ஆவார். யார் இமாமுடன் ஜமாஅத்தாகத் தொழக் காத்திருக்கிறாரோ அவர், (தனியாகத்) தொழுதுவிட்டு உறங்கி விடுபவரை விட அதிக நன்மை அடைபவராவார்.*

*🎙அறிவிப்பவர்: அபூமூசா (ரலி),*

*📕நூல்: முஸ்லிம் (1179)📕*

*🏮🍂தொழுகையாளிகள் தான் இத்தகைய பாக்கியங்களை அடைந்து கொள்ள முடியும்...*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment