*👺👺மீள் பதிவு👺👺*
*📚 📚 📚 மறுமை நாளில் என்றால் என்ன ❓ ❓ ❓அது எப்போது வரும் 📚 📚 📚*
*இறுதி பாகம் 3*
*இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்*
*திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு*
*குர்ஆன் கூறும் ஒரு நாள் என்பது 1,000 வருடங்களா? 50,000 வருடங்களா?*
இஸ்லாத்தைப் பற்றி சிறிதளவு அறிந்துகொண்ட மாற்று மதத்தவர்களால் கேட்கப்படும் கேள்விகள்:
குர்ஆனின் உள்ள ஒரு குறிப்பிட்ட வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. மற்றொரு வசனம் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. இவ்வாறு குர்ஆன் தனக்குத் தானே முரண்படுகிறதே. சரியா?
அருள்மறை குர்ஆனின் இரண்டு வசனங்கள் இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது நாம் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. *அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனமும், அத்தியாயம் 32 ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனமும்* இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஆயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது. *அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துல் மஆரிஜ்ன் 4வது வசனம்* இறைவனின் பார்வையில் ஒரு நாள் என்பது மனிதர்கள் கணக்கிடும் ஐம்பதினாயிரம் வருடங்களுக்குச் சமமானது என்று சொல்கிறது.
மேற்படி வசனம் உணர்த்தும் பொதுவான கருத்து என்னவெனில் அல்லாஹ் கணக்கிடும் காலம் பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலத்தோடு ஒப்பிட முடியாததது என்பதுதான். மேற்படி வசனங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஐம்பதினாயிரம் ஆண்டுகள் என்பது பூமியில் மனிதர்கள் கணக்கிடும் காலம் ஆகும். ஆயிரம் ஆண்டுகள் என்பது மனிதர்களின் பார்வையில் மிகவும் அதிகமான காலகட்டம் ஆகும். ஆனால் ஆயிரம் ஆண்டுகள் என்பது அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாளைக்குச் சமமானது.
*1. ‘யவ்ம்’ என்றால் காலம் என்றும் பொருள் கொள்ளலாம்:*
மேற்படி வசனங்களில் ‘யவ்ம்’ என்ற அரபி வார்த்தை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. ‘யவ்ம்’ என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்ற பொருள் தவிர, காலம் என்றும் ஒரு நீண்ட காலம் என்றும் பொருள் கொள்ளலாம். மேற்படி வசனங்களில் வரும் ‘யவ்ம்’ என்ற அரபி வார்த்தைக்கு நாள் என்று பொருள் கொள்ளாது, காலம் என்று பொருள் கொண்டால் எந்த குழப்பமும் இ;ல்லை.
அருள்மறை குர்ஆனின் 22வது அத்தியாயம் ஸுரத்துல் ஹஜ்ஜின் 47வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
‘(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள். அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும்.
*(அல் குர்ஆன் – 22:47)*
இறை நம்பிக்கை கொள்ளாதவர்கள் தங்களது தண்டனைக்காக அவசரப் பட்ட பொழுது, அல்லாஹ் இறக்கியருளிய வசனம் இது. அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை. அல்லாஹ்வின் பார்வையில் ஒரு நாள் என்பது, மனிதர்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளை போலாகும் என்று கூறுகிறது.
அருள்மறை குர்ஆனின் 32வது அத்தியாயம் ஸுரத்துஸ் ஸஜ்தாவின் 5வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்: ஒருநாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும். அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.
*(அல் குர்ஆன் – 32:5)*
மேற்படி அருள்மறையின் வசனம் ஒருநாளில் எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மேலேறிச் செல்லும் என்றும், அந்த நாளின் அளவு நாம் (மனிதர்கள்) கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும் என்றும் குறிப்பிடுகிறது.
அருள்மறை குர்ஆனின் 70வது அத்தியாயம் ஸுரத்துஸ் மஆரிஜ் – ன் 4வது வசனம் கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது:
ஒருநாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்: அ(த் தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்
*. (அல் குர்ஆன் 70:4)*
மலக்குகளும், ஆன்மாக்களும் அல்லாஹ்வை சென்றடையக் கூடிய காலம் ஐம்பதினாயிரம் வருடங்களாக இருக்கும் என்று மேற்கண்ட அருள்மறை வசனம் குறிப்பிடுகிறது.
இரண்டு மாறுபட்ட செயல்கள் நடைபெறக் கூடிய காலகட்டங்கள் சமமாக இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. உதாரணத்திற்கு நான் சென்னையிலிருந்து செங்கல்பட்டைச் சென்றடைய இரண்டு மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். அதே வேளையில் சென்னையிலிருந்து கன்னியாகுமரி சென்றடைய 14 மணி நேரம் பிடிக்கிறது என்கிறேன். மேற்படி நான் சொன்ன எனது இரண்டு கூற்றுக்களும் ஒன்றோடு ஒன்று முரண்படவில்லை.
அதே போன்றுதான் அருள்மறை குர்ஆனின் வசனங்கள் ஒன்றோடு ஒன்று முரண்படுவதே இல்லை. மாறாக நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடு சமன்படுகிறது.
*மேலும் கூடுதலான விளக்கம்*
இறைவனிடம் ஒரு நாளின் அளவு பூமியிலே 1000 ஆண்டுகளுக்கு சமம் என்று குர்ஆனில் *22:47, 32:5 என்ற வசனங்கள்* கூறியிருக்க, ஐம்பதினாயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று 70:4 வசனம் கூறுகிறது. இது தெளிவான முரண்பாடு அல்லவா?
முரண்பாடுகிறது என்று எடுத்துக்காட்டப்பட்ட குர்ஆன் வசனங்களை ஆய்வோம்.
(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும். – *அல்குர்ஆன் 22:47.*
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும். – *அல்குர்ஆன் - 32:5*
ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும். - *அல்குர்ஆன் 70:4*
இம்மூன்று வசனங்களில் 'நாள்' என்று மொழிபெயர்க்கப்பட்டது, 'யவ்ம்' என்னும் அரபிப்பதமேயாகும். சாதாரணமாக இருபத்தி நான்கு மணிநேரமுள்ள ஒரு நாளையே அரபியில் 'யவ்ம்' என்று கூறுவர். இன்னும் 'யவ்ம்' என்னும் பதத்திற்கு 'கால அளவு', 'காலகட்டம்' என்னும் பொருளும் கொள்வதுண்டு. குர்ஆனில், இத்தகைய பொருளில் 'யவ்ம்' என்னும் பதம் பயன்படுத்தப்பட்டதுண்டு.
'ஸலாமுடன் - சாந்தியுடன் இ(ச்சுவர்க்கத்)தில் பிரவேசியுங்கள். இது தான் நித்தியமாக நீங்கள் தங்கியிருக்கும் நாளாகும்' (என்று கூறப்படும்) *(அல்குர்ஆன – 50:34* ) நித்தியமாக தங்கியிருக்கும் நாள் என்றால் சூரியன் உதித்து அஸ்தமிக்கும் இடையிலான கால அளவு இல்லையல்லவா? ஏனென்றால் இது எல்லைக்குள்ளான கால அளவு ஆகும். எந்நிலையிலும் முடிவுறாத நித்தியமான அழிவில்லாத மறுமையினையே இங்கே *(திருக்குர்ஆன் 50:34* ) 'நாள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை அதன் உபயோகத்திலிருந்து விளங்குகிறது.
கியாம நாளில் நிகழும் காரியங்களைக் குறித்தும் கூறும் போதும் குர்ஆன் 'நாள்' (யவ்ம்) என்னும் பதத்தையே உபயோகப்படுத்தியுள்ளது.
அந்நாளில் சிதறடிக்கப்பட்ட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள். மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும். - *அல்குர்ஆன் - 101:4-5*
இந்த பூமி வேறு பூமியாகவும், இன்னும் வானங்களும் மாற்றப்படும் நாளில் (அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.) மேலும் அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்வின் முன்னிலையில் வெளியாகி நிற்பார்கள். - *அல்குர்ஆன் - 14:48*
அந்நாளில், மக்கள் தங்கள் வினைகள் காண்பிக்கப்படும் பொருட்டு, பல பிரிவினர்களாகப் பிரிந்து வருவார்கள். - *அல்குர்ஆன் - 99:6*
ஆனால் அந்நாளில் (அல்லாஹ் செய்யும்) வேதனையைப் போல், வேறு எவனும் வேதனை செய்யமாட்டான். - *அல்குர்ஆன் - 89:25*
அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும். அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும். - *அல்குர்ஆன் - 88:2-3*
இரகசியங்கள் யாவும் வெளிப்பட்டுவிடும் அந்நாளில். - *அல்குர்ஆன் - 86:9*
அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள். - *அல்குர்ஆன் - 83:6*
அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. - *அல்குர்ஆன் - 82:19*
அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் - தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;, தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்- அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும். - *அல்குர்ஆன் - 80:34-37*
அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான். - *அல்குர்ஆன் - 79:35*
'பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்;' - *அல்குர்ஆன் - 79:6*
ரூஹு (என்ற ஜிப்ரயீலு)ம், மலக்குகளும் அணியணியாக நிற்கும் நாளில் அர்ரஹ்மான் எவருக்கு அனுமதி கொடுகிறானோ அவர்களைத் தவிர்த்து வேறெவரும் பேசமாட்டார்கள் - அ(த்தகைய)வரும் நேர்மையானதையே கூறுவார். - *அல்குர்ஆன் - 78:38*
நிச்சயமாக, நெருங்கி வரும் வேதனையைப்பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறோம் - மனிதன் தன் இருகைகளும் செய்து முற்படுத்தியவறற்றை - அமல்களை - அந்நாளில் கண்டு கொள்வான் - மேலும் காஃபிர் ''அந்தோ கைசேதமே! நான் மணண்ணாகிப் போயிருக்க வேண்டுமே!'' என்று (பிரலாபித்துக்) கூறுவான். - *அல்குர்ஆன் - 78:40*
அந்நாள் சத்தியமானது. ஆகவே, எவர் விரும்புகிறாரோ, அவர் தம் இறைவனிடம் தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொள்வாராக. - *அல்குர்ஆன் - 78:39*
மேற்காணும் இவ்வசனங்களில் உள்ள ஒவ்வொரு சம்பவங்களுடனுமுள்ள 'நாள்' என்பது அந்த சம்பவங்கள் நடக்கும் கால அளவே என்பது தெளிவாக விளங்கும். ஓவ்வொரு சம்பவங்களின் அடிப்படையில் கால அளவும் மாறுபாடாக இருக்கும். மனிதர்கள் தம் கர்மங்களுக்கு ஏற்ப பல பிரிவுகளாக பிரிந்து நிற்கும் நாள், மனிதர்கள் சிதறடிக்கப்பட்ட ஈசல்கள் போலாகும் நாள் போல இருப்பதில்லை. ஓவ்வொரு நாளின் கால அளவும் வேறுபட்டிருக்கும். அவைகளின் அளவு குறித்து அல்லாஹ் மட்டுமே அறிவான். மனிதர்களாகிய நாம் அதைக் குறித்து அறிய நம்முடைய கையில் எந்த வழியும் இல்லை.
கியாமநாளுடன் தொடர்புடைய இரு சம்பவங்களின் கால அளவை மட்டுமே குர்ஆன் மூலமாக அல்லாஹ் அறிவித்துத் தருகிறான். காரியங்கள் அல்லாஹ்வின் பால் மேலேறிச் செல்லும் ஒரு நாளின் அளவு மனித கணக்குப்படியுள்ள ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமம் என்று *32:5ம்* வசனம் மூலமாக அறிவிக்கின்றான். மலக்குகளும் ஆன்மாக்களும் அல்லாஹ்வின் பால் மேலேறிச் செல்லும் நாளின் அளவு மனித கணக்குப்படியுள்ள 5000 ஆண்டுகளுக்குச் சமம் என்று *70:4ம்* வசனம் மூலமாக அறிவிக்கிறான்.
இரண்டு வசனங்களிலும் விவரிக்கப்பட்டது கியாம நாளின் போதான இருவேறு சம்பவங்கள் ஆகும். இந்த இரு வேறு சம்பவங்களும் நடைபெற எடுத்துக்கொள்ளும் கால அளவும் வேறு வேறாகும் என்பதை இக்குர்ஆன் வசனங்கள் மூலமாகவே விளங்க முடிகிறது. மற்றபடி இவ்விரண்டுக்கும் மத்தியில் எந்தவொரு முரண்பாடும் இல்லை. இரண்டும் இரு சம்பவங்கள். இரு வேறு சம்பவங்களும் எடுத்துக்கொள்ளும் கால அளவும் இரு வேறு கால அளவாகும் என்றிருக்க இவை எப்படி முரண்பாடாகும்?
அது போல், திருக்குர்ஆனின் *22:47ம்* வசனத்தில் '(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்' என்று இறைவன் கூறுகின்றான். நிராகரிப்போருக்கு தண்டனை உண்டு என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்த போது அதை பரிகாசம் செய்து, நாங்கள் நிராகரித்து ஆண்டுகள் பல ஆகியும் தன்டனை வந்து சேராது ஏனோ? என்னும் கேள்விக்கு இறைவனில் பதிலாகும் இந்த வசனம். இறைவனின் தண்டனை சில காலத்திலேயே வந்தடைய வேண்டும் என்றில்லை. வரலாற்றில் இறைவனின் தண்டனை இறங்குவது மனிதர்களின் கணக்கை அனுசரித்தோ அவன் இஷ்டத்தை அனுசரித்தோ அல்ல. (மாறாக அது) அல்லாஹ்வின் தீர்மானப்படியாகும். அவன் இஷ்டப்படியாகும் என்பதையே இவ்வசனம் எடுத்துக் கூறுகிறது. அல்லாஹ்வின் கணக்குப்படி ஒரு நாள் என்பது மனிதர்களின் கணக்குப்படி ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம். ஆதலால் தண்டனையிறங்கவில்லையே என்று பரிகாசம் செய்யவேண்டாம் என்று இவ்வசனம் தெளிவாக்குகிறது. மனித வரலாற்றில் தெய்வீக தலையீடுகளை மனித கணக்குப்படி கணிப்பது கூடாது என்பதே இவ்வசனத்தின் பாடம். இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் மற்ற இரு வசனங்களோடு தொடர்பு இல்லாதது ஆகும். மூன்று வசனங்களும் கூறுவது மூன்று விதமான விஷயங்களாகும். அவைகளின் சம்பவங்களும் வேறுபாடாகும். அதனால் அவைகளுக்கு இடையே எந்தவொரு முரண்பாடும் இல்லை என்பது தெளிவு.
*அல்லாஹ் இருக்கும் இடத்தை கூறும் குரான் கணக்கீடு*
குரான் முரண்பாடு அற்றது அறிவியல் நிறைந்தது என பல பொய்களை கூறும் இஸ்லாமிய நண்பர்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் குரானில் இறைவன் இருக்கும் இடம் குறிப்பிட பட்டுள்ளது சரி நான் அறிந்ததை உங்களுக்கும் அறிவிக்கிறேன் நீங்கள் தான் பகுத்தறிவாளர்கள் அகிற்றே தயவு செய்து நன்றாக பகுத்தறியுங்கள் விளங்கும்
அல்லாஹ் எங்கே இருக்கிறான், காட்டு என்று கேட்டு ரொம்ப தொந்தரவு செய்யும் நாத்திக பதிவர்களுக்கு இதோ அல்லாஹ் இருக்கும் கிரகம் என்று அடையாளம் காட்டி, சவுக்கடியும் செருப்படியும் அளித்துள்ளநமது புனிதகுரானுக்கு தான் முதல் நன்றி அல்லாஹ் உங்களுக்கு நன்றாக கூலி கொடுப்பானாக.என்ன? முழிக்கிறீர்களா?இப்போது அல்லாஹ்வே அப்படி முழித்துகொண்டிருப்பான் என்பதையும் அறியுங்கள். ஆகவே நீங்கள் மட்டுமே தனியாக முழிக்கவில்லை.
*சரி விடயத்திற்கு வருவோம்*
ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரயீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள் அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக)
இருக்கும். எனவே நீர் அழகிய பொறுமையுடன் பொறுப்பீராக. நிச்சயமாக அவர்கள் அதை வெகு தூரமாகக் காண்கின்றனர்.ஆனால், நாமோ அதனை வெகு சமீபமாகக் காண்கிறோம்.
*(அல் குர்ஆன் 70:4–7)*
*70:4* . ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு *ஐம்பதினாயிரம் ஆண்டுகள்* (சமமாக) இருக்கும்.
70:4. The angels and the spirit ascend unto him in a Day the measure whereof is [as] fifty thousand years:
அதாவது அல்லாஹ் இருக்கும் இடத்துக்கு பூமியிலிருந்து வானவர்கள் (மலக்குகள்) மேலேறி செல்வார்கள். அதற்கு 50000 ஆண்டுகள் ஆகும்.
இப்போது மலக்குகளின் வேகம் என்ன என்ற கேள்வி வருகிறது இல்லையா? அதற்கும் அல்லாஹ் பதில் அளிக்கிறான்
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம்(அலை) உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்.
*அறிவிப்பவர் :ஆயிஷா(ர)*
*நூல் : முஸ்லிம் (5314)*
ஆக பயனிக்கவோ, செய்திகளை அனுப்பவோ அதிகபட்ச வேகம் *99.999999……%C* (ஒளி வேகம்). குர்ஆன் வசனங்களில் மனிதன் அந்த வேகத்தில் சென்றதாக குறிப்பிடவில்லை, அதற்கு மாறாக செய்திகளும், வானவர்களும் பயணித்ததாக குறிப்பிடுகிறது.
அடுத்த வசனமாக *70:4* மலக்குகள் அந்த வேகத்தில் சென்றதாக கூறுகிறது, மலக்குகளுக்கு மட்டும் அந்த வேகத்தில் பயணிப்பது எப்படி சாத்தியம் என்று கேட்கலாம்,வானவர்கள் என்பவர்கள் ஒளியால் படைக்க பட்டவர்கள் என்று கூறியதால், ஒளியால் உருவான ஒன்று ஒளி வேகத்தில் செல்வது என்பது அதிசயமான ஒன்று அல்ல.
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளதால் அவர்களது வேகம் ஒளிக்கு சமமானது! ஆஹா! இதுவல்லவா, ஹதீஸ் ஒளியை வைத்து, ஒளிக்கே டார்ச் அடிப்பது என்பது! இப்போது தெரிகிறதா அல்லாஹ் எங்கே இருக்கிறான் என்பது?
வானவர்களும் செய்தியும் ஒளிக்கு சற்று குறைவான வேகத்தில் சென்றதால், அவர்களது உணர்வில் ஒரு நாள் செலவழித்தமாதிரி உணர்வார்கள். ஆகவே அவர்களது அதிகபட்ச வேகம் ஒளியின் வேகம்தான்.
ஒளி ஒருவருடம் பிரயாணம் செய்யும் தூரத்தை ஒரு ஒளிவருடம் என்று அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். அதாவது *light year.*
சூரியனை சுற்றி வரும் மூன்றாவது கல்தான் நாம் வாழும் பூமி. இதுக்குத்தான் வானவர்களை(மலக்குகளை) அல்லாஹ் அனுப்பி வைக்கிறான்.
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டவர்கள் என்று நபி(ஸல்) அவர்களும், அதனை வைத்து ஒளி வேகத்தில் பயணம் செய்கிறார்கள் என்று கார்பன் கூட்டாளியும் சொல்கிறார்கள். ஆகவே அவர்கள் செல்ல *50000* வருடங்கள் ஆகிறது என்றால், அல்லாஹ் இருக்குமிடம் *50000* ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கிறது என்று பொருள்!
ஆகவே, நமது பூமியிலிருந்து *50000* ஒளிவருடங்கள் தொலைவில் அல்லாஹ் இருக்கிறான்!
நமது பால்வீதி காலக்ஸி சுமார் *100000* ஒளிவருடங்கள் விட்டமுடையது.
அதாவது நமது பூமி சுற்றும் சூரியனை மையமாக வைத்துகொண்டு *50000* ஒளிவருடத்தை ஒரு ஆரமாக வைத்துகொண்டு வட்டம் வரைந்தால் அந்த வட்டத்தின் விளிம்பில்தான் அல்லாஹ் இருக்கிறான்!
நமது இஸ்லாமிய புனித பூமியான சவுதி அரேபியா உடனே நாஸாவுடன் ஒப்பந்தம் போட்டு உலக மகா டெலஸ்கோப்புகளை உருவாக்கி *50000* ஒளிவருடங்கள் தொலைவில் இருக்கும் கிரகங்களை எல்லாம் கண்டுபிடிக்க வேண்டும்.
ஆனால் கீழ்க்கண்ட வசனங்களில் பூமியிலிருந்து செய்திகள் அவனது கெரஹத்துக்கு செல்ல *1000* ஆண்டுகளாகிறது என்று அல்லாஹ் கூறுகிறான்.
*32:5* . வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.
32:5. He rules [all] affairs from the heavens to the earth: in the end will [all affairs] go up to Him, on a Day, the space whereof will be [as] a thousand years of your reckoning.
22:47.
(நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
22:47. Yet they ask thee to hasten on the Punishment! But Allah will not fail in His Promise. Verily a Day in the sight of thy Lord is like a thousand years of your reckoning.
அல்லாஹ் காலம் வெளி டார்க் மேட்டருக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக இருந்தாலும், அவன் உருவாக்கிய பொருட்கள் எல்லாம் விதிப்படியே இயங்கும்
ஆகையால் பூமியிலிருந்து செய்தியும் விதிப்படிதான் இயங்க வேண்டும். எந்த ஒரு செய்தியும் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்லமுடியாது என்று ஈன்ஸ்டீனின் சார்வியல் விதி கூறுகிறதல்லவா?
ஆகையால் இந்த செய்திகளும் ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் அல்லாஹ்வின் கெரஹத்தை அடைய *1000* ஆண்டுகளாகிறது என்று சொல்கிறது. ஆகவே அல்லாஹ் இருக்கும் கெரஹம் நமது பூமியிலிருந்து *1000* ஒளிவருட தொலைவில் இருக்கிறது என்று ஆகிறது. இப்போது நமக்கு சிக்கல் இருப்பதை கவனித்திருக்கலாம்.
ஒளியால் உருவான வானவர்கள் ஒளிவேகத்தில் பயணம் செய்தால் அல்லாஹ்வின் கெரஹத்தை அடைய *50000* ஒளிவருட தொலைவு ஆகிறது. ஆனால் செய்திகள் *1000* ஒளிவருடத்திலேயே இந்த கெரஹத்தை அடைந்துவிடுகின்றன. அப்படி அடைய வேண்டுமென்றால், அவை ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் பயணம் செய்தே ஆகவேண்டும். அல்லாஹ்வுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லைஇருந்தாலும் விதி படி நடக்க வேண்டும் என்ற கோட்பாடு இதில் உடைகிறதே .சரி இனி விடயத்திற்கு வருவோம்
ஆகவே நம் உயிரினும் மேலான கண்ணின் மணி நபிஹள் நாயஹெத்தின் உயிரை கையில் வைத்திருக்கும் அல்லாஹ் நம்மோட லோக்கல் காலக்ஸியில்தான் இருக்கிறான்
நம்மோட காலக்ஸி இக்கணூண்டு சின்னது. இந்த காலக்ஸியின் விட்டமே *100000* ஒளிவருடங்கள்தான். அது ஆயிரமோ *ஐம்பதினாயிரமோ,* நம்ம காலக்ஸியிலதான் அல்லாஹ் இக்கான். நமது காலக்ஸியில் இருக்கும் நம் சூரியன் மாதிரியான நட்சத்திரங்கள் *200* பில்லியன் இருக்கின்றன என்று சொல்கிறார்கள். அதில் ஏதோ ஒரு சூரியனை சுற்றும் ஒரு கிரகத்தில்தான் அல்லாஹ் இருக்கிறான்.
அதுவும் எந்த மாதிரியான கெரஹம் என்பதற்கான க்ளூவையும் அல்லாஹ் தருகிறான். !
*22:47* . (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.
மனிதர்கள் வாழும் பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள ஆகும் காலம் ஒரு நாள்.
மனிதர்களது பூமியின் கணக்கில் ஆயிரம் ஆண்டுகளை வைத்துகொள்ளுங்கள். அல்லாஹ் இருக்கும் கெரஹம் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள மனிதர்களது கணக்கில் ஆயிரம் ஆண்டுகளாகிறது என்று பொருள்!
ஆஹா! இந்த மாதிரி ஒரு கெரஹத்தை கண்டுபிடிச்சா போதும்யா! அல்லாஹ்வை பிடிச்சிடலாம்!
இப்ப நமது பூமியை பற்றியும் அதன் இருப்பிடத்தையும் பற்றி கண்டுகொள்வோம்
நாம் இருக்கும் சூரியனை சுற்றி *12* ஒளிவருடங்கள் தொலைவுக்குள் கீழ்க்கண்ட நட்சத்திரங்கள் இருக்கின்றன.
நம் சூரியனை சுற்றி *250* ஒளிவருட சுற்றளவில் இந்த நட்சத்திரங்கள் (சூரியர்கள்) இருக்கின்றன
நமது சூரியனை சுற்றி *5000* ஒளிவருட சுற்றளவில் இந்த நட்சத்திர கூட்டங்கள் இருக்கின்றன
நம் கேலக்ஸி *100000* ஒளிவருடங்கள் விட்டமுடையது.
நம்ம காலக்ஸியை சுற்றி பல கேலக்ஸிகள் இருக்கின்றன. *500,000* ஒளிவருடங்கள் தொலைவுக்குள்ளாகவே *13* கேலக்ஸிகள் இருக்கின்றன. ஒவ்வொரு காலக்ஸியிலும் இதே மாதிரி *10* பில்லியனிலிருந்து *200* பில்லியன் வரைக்கும் நட்சத்திரங்கள் இருக்கின்றன.
ஐந்து மில்லியன் ஒளிவருடங்கள் சுற்றி பார்த்தால், *49* பெரிய காலக்ஸிகள் இருக்கின்றன. அதில் சுமார் *700* பில்லியன் நட்சத்திரங்கள் இருக்கின்றன.
இந்த லோக்கல் குரூப் ஒரு பெரிய காலக்ஸி கூட்டத்தின் பகுதி அதன் பெயர் விர்கோலிஸ் க்ளஸ்டர்
இந்த விர்கோலிஸ் க்ளஸ்டர் ஒரு பெரிய கூட்டத்தின் ஒரு பகுதி
நடுவில் விர்கோலிஸ் க்ளஸ்டரை வைத்து நாமாக போட்ட ஒரு படம். இதுதான் விர்கோ க்ளஸ்டர் இருக்கும் சூப்பர் க்ளஸ்டர்
இந்த சூப்பர் க்ளஸ்டர் நம்மால் அறியக்கூடிய பிரபஞ்சத்தின் ஒரு பகுதி அவ்வளவுதான்.
அவ்வளவெல்லாம் தேட வேண்டாம் என்று நமது கேலக்ஸிக்குள்ளாகவே அல்லாஹ் இருக்கிறான்என்று கூறும் இக்குரானை உண்மையென்று சொல்லுபர்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக!
*22:65* . (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.
பூமி மேல வானம் விழ்ந்துடாம அல்லாஹ் தன்னோட கெரஹத்திலேர்ந்து உக்காந்துகிட்டே புடிச்சிகிட்டிருக்கான். அப்பப்ப மலக்குகளும் (வானவர்கள்), ஜின்களும் அல்லாஹ்வோட கெரஹத்திலேர்ந்து நம்ம பூமி கெரஹம் வரைக்கும் வந்து போய்ட்டு இருக்காங்க. அவங்க அல்லாஹ் ஜிப்ரீலிடம் சொல்லி அனுப்பிச்சி அவர் இங்க வந்து சேர்ரதுக்கு ஆயிரம் வருடம் ஆகியிருக்குன்னு வேற கவனிக்கணும். அவங்க கிளம்பி *50000* வருடங்கள் கழித்துத்தான் பூமிக்கு வந்து சேர்வார்கள். ஆனால், இங்கே இருக்கும் செய்திகள் அல்லாஹ்விடம் போக *1000* வருடங்கள் ஆகும். உதாரணமாக, ஈஸா நபியை சாகடிக்க யூதர்கள் பிளான் பண்ணிகிட்டு இருந்தது அல்லாஹ்வுக்கு தெரியவேண்டுமென்றால், அந்த செய்தி அல்லாஹ்விடம் போவதற்கு அவரது ஒரு நாள், அதாவது மனிதர்களது *1000* வருடங்கள் ஆகும். அப்புறம் எப்படி அல்லாஹ் அந்த சதித்திட்டத்தை மறு சதித்திட்டம் போட்டு முடித்தார் என்று தெரியவில்லை. அல்லாஹ்வே அறிவான். அல்லது நம்ம கார்பன் கூட்டாளி அறிவார். ஆனால், நபிகளின் மனைவிமார்கள் ரவுசு பண்ணிகொண்டிருந்தால், நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எச்சரிக்க வேண்டுமென்றால் உடனே வஹி எறங்கிடும். அதற்கெல்லாம் *1000* வருடங்கள் ஆகாது. அதுவும் அல்லாஹ்வே அறிவான். அல்லாஹ் அறியாவிட்டாலும்,நம்ம பயான்கள் அறிவர்
இப்ப ஜிப்ரீல் வந்ததை ஆராய்வோம். நம்ம ஹிஜ்ரி *(கிபி 622)* ஆரம்பிச்சப்ப ஜிப்ரீல் வந்திருக்கார்னு வச்சா இந்த வருஷம் 2011. அதாவது 2011-622 = *1389 வருடங்கள்* ஆகிவிட்டன.
அதாவது அவர் அல்லாஹ்வோட கிரகத்திலேர்ந்து கிளம்புவது சுமார் *50000-622* என்று வைத்துகொண்டால், கிமு *49378 ஆம்* ஆண்டிலேயே நமது ஜிப்ரீல் அல்லாஹ்வோட கெரஹத்திலேர்ந்து கிளம்பிட்டார். அவர் இங்க வந்து சேர்ரதுக்கு *கிபி 622* ஆய்டிச்சி. ஸோ.. நபிஹள் நாயஹம் சாவுற வரைக்கும் வஹி எறக்கி வஹி எறக்கி *கிபி 632* இல் தன்னோட *62ஆம்* வயசிலேயே செத்தவுடனே அப்பாடான்னு ஜிப்ரீல் கிளம்பி அல்லாஹ்வோட கெரஹத்துக்கு கிளம்பி போயிருப்பார். அவர் போய் சேரதுக்கு இன்னும் *50000+632 =* அதாவது கிபி. *50632* இல்தான் போய் சேர்வார். நான் சொல்லலைன்ங்கண்ணா.குரான் சொல்லுகிறது அதை தான் கொஞ்சோம் விளக்கமாக சொன்னேன் இப்ப முகம்மது செத்தது அல்லாஹ்வுக்கு தெரியுமா? தெரியும். எப்படி?
நபிஹள் நாயஹெம் மொஹம்மத் இப்னு அப்தல்லா ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் *கிபி 632* இல் செத்தார். *632+1000* அதாவது *கிபி 1632* ஆம் வருடம் அல்லாஹ்வுக்கு இந்த செய்தி சென்றுவிட்டது என்று அறியவும். ”ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.”
ஓகேயா? இது தான் முஸ்லீம் அறிவியல் அல்லாஹ் இருக்கும் இடத்தை நான் காட்டிவிட்டேன் இதற்கும் முஸ்லீம் நண்பர்கள் பதில் கூறலாம்
*இறுதி பாகம் முற்றும்*
அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்
*ஜஸாகல்லாஹ் ஹைரன்*
No comments:
Post a Comment