பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, February 10, 2024

ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம் ! ‌‌

 ஏமாற்றி பிழைக்கும் மருத்துவ உலகம் ! ‌‌

- டாக்டர். பிரதீப் அகர்வால்......


கறுப்பு பணம் சம்பாதிக்கும் வழிகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் !...

ஏன் ரூபாய் நோட்டு தடையும் தேவை ?
நான் ஒரு மருத்துவர்; அதனால்தான்
"அனைத்து நேர்மையான மருத்துவர்களிடமும், முதலில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எழுதுகிறேன்...!"
மாரடைப்பு ஏற்பட்டுள்ளது ! எனில்,
மருத்துவர் கூறுகிறார் -
Streptokinase ஊசி போடுங்கள்... என்று. அதற்கு, ரூ. 9,000/ ரூபாய்... என்கின்றனர். ஆனால், ஊசியின் உண்மையான விலை ரூ. 700/ - முதல் 900/- வரை மட்டுமே. ஆனால் MRP ரூ. 9,000/- !... .
அப்பாவி மக்கள், என்ன செய்வார்கள் ? ....
டைபாய்டு வந்தது… எனில்,
மொத்தம் 14 மோனோசெஃப் எடுக்கப்படும் ! மொத்த விற்பனை விலை ரூ 25/- ... ஆனால், மருத்துவமனையின் வேதியியலாளர் ரூ.53/- விலைக்கு தருகிறார்...
மக்கள் என்ன செய்வார்கள் ??
சிறுநீரகம் செயலிழந்து விட்டது..
மூன்று நாளுக்கு ஒருமுறை டயாலிசிஸ் செய்யப்படுகிறது.., டயாலிசிஸ் முடிந்து ஒரு ஊசி போடப்படுகிறது . MRP அனேகமாக ரூ.1800/- !
அதை மொத்த சந்தையில் இருந்து எடுக்க எண்ணினால், இந்தியா முழுவதும் தேடினாலும் எங்கும் கிடைக்காது ... ஏன் ?
மருந்து நிறுவனம், மருத்துவருக்கு மட்டுமே சப்ளை செய்கிறது !!
அந்த இன்ஜெக்க்ஷனின் அசல் விலை ரூ. 500/- மட்டுமே, ஆனால் மருத்துவர், தனது மருத்துவமனையில் ரூ.1800/- க்கு தருகிறார்.
மக்கள் என்ன செய்வார்கள் ??
நோய் தொற்று ஏற்பட்டு விட்டது..! மருத்துவர் எழுதிய ஆன்டிபயாடிக் விலை ரூ.540/-
அதே மருந்து மற்றொரு நிறுவனத்தில் ரூ. 150/- மற்றும் ஜெனரிக் விலை ரூ. 45 /--
ஆனால் வேதியியலாளர் மறுக்கிறார்.., நாங்கள் ஜெனரிக் அல்லது மற்ற நிறுவனங்களைத் சார்ந்தவற்றைத் தர மாட்டோம்.., என்பார்;
மருத்துவர் எழுதிக் கொடுத்ததை மட்டும் கொடுப்பார்கள்... அதாவது 540/- ?
மக்கள் என்ன செய்வார்கள் ??
சந்தையில் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை 750/- ரூபாயில் உள்ளது.,
அறக்கட்டளை மருந்தகம் 240/- ரூபாயில் தருகிறது ! எனவே, ரூ. 750/- யில், மருத்துவர் கமிஷன் 300/- ரூபாய் !
எம்ஆர்ஐயில், டாக்டர் கமிஷன் ரூ. 2,000/- முதல் 3,000/= வரை !
டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளின் இந்த கொள்ளை, இந்த களியாட்டம், அச்சமின்றி, இந்நாட்டில் சர்வசாதாரணமாக நடக்கிறது!
மருந்துக் கம்பெனிகளின் லாபி, நாட்டையே நேரடியாகப் பிணயக் கைதியாக வைத்திருக்கும் அளவுக்கு வலிமையானது !
மருத்துவர்களும், மருந்து நிறுவனங்களும் கூட்டு கொள்ளையிடுகின்றன !. .. இருவருமே அரசாங்கத்தை பிளாக்மெயில் செய்கிறார்கள்...!!
இதில், மிகப்பெரிய கேள்வி...
ஊடகங்கள் இதைக் காட்டாமல், இரவும் பகலும் வேறு என்னத்த காட்டுகின்றன ?.... .
குழியில் விழுந்த இளவரசன்.., டிரைவர் இல்லாத கார், ராக்கி சாவந்த், பிக்பாஸ், மாமியார் மருமகள் சூழ்ச்சி, க்ரைம் ரிப்போர்ட், கிரிக்கெட் வீரரின் கேர்ள் பிரெண்ட், இதையெல்லாம் காட்டுகிறார்கள்.
ஆனால்... டாக்டர், மருத்துவமனை மற்றும் மருந்து நிறுவனங்களின் வெளிப்படையான கொள்ளையை ஏன் காட்ட வில்லை ?.....
ஊடகங்கள் காட்டவில்லை என்றால், வேறு யார் காட்டுவார்கள் ?
பின்னர் எப்படி மருத்துவ லாபியின் கொடுமை நிறுத்தப்படும் ?
இந்த லாபி.... அரசாங்கத்தையே.... கையாலாகாத நிலையில் வைத்திருக்கிறதா ?
ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன் ?
ரூ. 20/- கூடுதலாக கேட்டால் ஆட்டோரிக்க்ஷாகாரரிடம், மக்கள் எகிறுவார்கள்,..! ஆனால்,
கொள்ளையிடும்
டாக்டரை என்ன செய்வார்கள் ???
இது உண்மை என்று நீங்கள் நினைத்தால், அனைவருக்கும் அனுப்புங்கள்! விழிப்புணர்வை கொண்டு வாருங்கள்; மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த உங்கள் ஆதரவை வழங்குங்கள் !!!....
இலட்சிய சமூகத்தை உருவாக்குபவர்கள்
*சிந்தனை மாற்றம்*. . . . . வேண்டுகோள்:- இந்தியன்
நீங்கள் ஐந்து பேருக்கு அனுப்புங்கள்;
அந்த ஐந்து பேர் கண்டிப்பாக அடுத்த ஐந்து பேருக்கு அனுப்பட்டும்!
க ஐந்து ஐந்தாக அனுப்பினால், அதைக் கண்டு நாடே ஒன்றுபடும்.

மிஃஹ்ராஜ் எனும் அற்புத பயணம்

 இஸ்லாத்தில் மிஃஹ்ராஜ் எனும் அற்புத பயணம் பற்றி அறிந்து கொள்ளுவோம்

💞*

*• மிஃஹ்ராஜ் பயணம் என்பது நபி (ஸல்) அவர்கள் வாழ்வில் நடந்த மிக சிறந்த அற்புத நிகழ்வாகும்! வேறு எந்த நபிக்கும் கிடைக்காத பாக்கியம் ஆகும் !*
• அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்களை முதலில் மக்காவிருந்து பைத்துல் முகத்தஸுக்கு இரவோடு இரவாக ஜிப்ரயில் (அலை) அவர்கள் அழைத்து சென்றார்கள் இந்த அற்புத நிகழ்ச்சிக்கு இஸ்ரா என்று கூறுவார்கள் இதற்கு இரவில் கூட்டிச் செல்லுதல் என்பது பொருள் ஆகும்!
*• இதன் பின்னர் பைத்துல் முகத்தஸிருந்து விண்ணுலகத்திற்குச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கு மிஃராஜ் என்று அழைக்கப்படுகின்றது!*
*• அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை சந்திக்க அழைத்தான் இந்த அற்புத பயணத்தின் பெயர் தான் மிஃஹ்ராஜ் எனும் பயணம் ஆகும்!*
• ஒரே இரவில் வானத்தின் எல்லை வரை நபி (ஸல்) அவர்களை அழைத்து சென்று அனைத்தை பற்றியும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் காட்டினான்!
*(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்!*
(அல்குர்ஆன் : 17 : 1)
*💟 மிஃஹ்ராஜ் பயணம் 😘
-• அல்லாஹ் தனது அத்தாச்சிகளை காட்டவும்! தனது ஆற்றலை காட்டவும் நபி (ஸல்) அவர்களை மிஹ்ராஜ் பயணம் செய்ய அழைத்தான்!*
*• இந்த மிஃஹ்ராஜ் என்ற அற்புத பயணம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நடைபெற்றது! அப்போது முஸ்லீம்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு மட்டுமே இருந்தது!*
*• நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தபோது வீட்டு முகடு திறக்கப்பட்டது! (அது வழியாக) ஜிப்ரீல் (அலை) மற்றும் உடன் இரண்டு மலக்கு மார்கள் இறங்கி நபி (ஸல்) அவர்களின் நெஞ்சைப் பிளந்தார்கள்!*
*• அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் எனும் இறைநம்பிக்கை மற்றும் ஞானத்தினால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டிவிட்டு, அதை மூடினார்கள்!*
*• நபி (ஸல்) அவர்கள் சிறு வயதாக இருக்கும் பொழுதும் இப்படி ஒரு சம்பவம் நடந்து உள்ளது!*
• இதன் பின்பு நபி (ஸல்) அவர்களை புராக் எனும் வாகனம் மூலம் பைத்துல் ஹராமில் (கஃபாவில்) இருந்து பைத்துல் அக்ஸாவுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மூலம் அழைத்து செல்லப்பட்டார்கள்!
(நூல் : புகாரி : 349)
*💟 புராக் எனும் மின்னல் வேக வாகனம் 😘
*• நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தை ஒரே இரவில் அல்லாஹ் பயணம் செய்ய வைத்தான்!*
• நபி (ஸல்) அவர்கள் மிஹ்ராஜ் பயணத்தை புராக் எனும் ஒரு வாகனம் மூலம் பயணம் செய்தார்கள்!
*• புராக் எனும் வாகனத்தை ஒரு விலங்கு அகும்! இந்த விலங்கு கோவேறுக் கழுதையை விடச் சிறியதும், கழுதையை விடப் பெரியதாக இருக்கும்! புராக் எனும் வாகனத்தின் மூலம் நபி அவர்கள் மிஃஹ்ராஜ் பயணம் செய்தார்கள்!*
*• அந்த விலங்கு தன் பார்வை எட்டிய தூரம் வரை தனது கால்களை எடுத்து வைக்கும் அந்த அளவுக்கு வேகமாக பயணம் செய்யும்!*
(நூல் : புஹாரி : 3207 | முஸ்லீம் : 259)
*💟 பைத்துல் முகத்திஸ் எனும் பள்ளி 😘
• புராக் எனும் வாகனத்தில் நபி (ஸல்) அவர்களும் உடன் ஜிப்ரயில் (அலை) அவர்களும் ஏறி முதலில் பைத்துல் முகத்தஸிற்கு சென்றார்கள்!
*• நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் ஹரமில் இருந்து பலஸ்தீனத்தில் பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்த பயணத்திற்கு இஸ்ரா என்பது பெயர் ஆகும்!*
*• பைத்துல் முகத்தஸிற்கு செல்லும் வழியில் ஒரு செம்மண் குன்றின் அருகில் நபி மூஸா (அலை) அவர்கள் கபூரில் தொழுது கொண்டு இருந்தார்கள்!*
• மூஸா (அலை) அவர்களின் உருவ தோற்றம் யமனியர்களான ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று மாநிறமுடையவர்கள்; உயரமானவர்கள்; சுருள்முடியுடைவர்களா இருந்தார்கள்!
(நூல் : முஸ்லிம் : 267 | நஸயீ : 1613)
*❤️ பைத்துல் முகத்தஸிஸ் சிறப்பு 😘
*1) பரக்கத் பொருந்திய இடம்!*
(அல் குர்ஆன் : 21 : 71)
*2) உலகில் இரண்டாவதாக அமைக்கப்பட்ட பள்ளி வாசல் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும்!*
(நூல் : புகாரி : 3425)
*3) உலகின் சிறந்த மூன்று பள்ளிகளில் மஸ்ஜிதுல் அக்ஸாவும் ஒன்றாகும்!*
(நூல் : முஸ்லீம் : 2698)
*4) முதல் கிப்லா திசை மஸ்ஜிதுல் அக்ஸா ஆகும்! இதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் மற்றும் ஸஹாபாக்கள் அனைவரும் சுமார் 16 அல்லது 17 மாதங்கள் நோக்கி தொழுது உள்ளார்கள்!*
(நூல் : புகாரி : 399)
*• நபி (ஸல்) அவர்களுக்கு காபாவை நோக்கி தொழ ஆசை இதன் பின்பே அல்லாஹ் காபாவை கிப்லா திசையாக மாற்றினான்!*
(அல் குர்ஆன் : 2 : 144)
*5) தஜ்ஜால் செல்ல முடியாத பகுதிகளில் மஸ்ஜிதுல் அக்ஸாவும் ஒன்றாகும்!*
(நூல் : அஹ்மத் : 24083)
• நபி (ஸல்) அவர்களும் ஜிப்ரயில் (அலை) அவர்களும் பைத்துல் முகத்தஸிற்கு வந்த பின்பு புராக் வாகனத்தை ஒரு இடத்தில் கட்டிவைத்தனர்!
*• நபி (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு உள்ளே சென்றதும் அங்கு ஆதம் (அலை) முதல் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் வந்த நபி ஈஸா (அலை) அவர்கள் வரை அனைத்து நபி மார்களும் இருந்தார்கள் இவர்கள் அனைவருக்குமே நபி (ஸல்) அவர்கள் இமாம் ஆக இருந்து தொழுகை நடத்தினார்கள்!*
*• தொழுகை முடிந்தவுடன்! இவர் தான் நரகத்தின் காவலாளி என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் மாலிக் (அலை) அவர்களை அறிமுகப்படுத்தி ஸலாம் சொல்லும்படி சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ஸலாம் சொல்ல ஆரம்பிக்கும் போது மாலிக் (அலை) அவர்கள் முந்திக்கொண்டு நபி அவர்களுக்கு ஸலாம் கூறினார்!*
(நூல் : முஸ்லீம் : 278)
*💟 விண்ணுலக பயணம் 😘
*• மீண்டும் புராக் வாகனத்தில் ஏறி கொண்டு விண்ணுலகம் பயணம் செய்தார்கள்!* அப்போது முதல் வானத்திற்கு அருகில் வந்த பொழுது வானத்தின் காவலரிடம், 'திறங்கள்' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'யார் அது? என்று கேட்டார். ஜிப்ரீல் அவர்கள், 'இதோ ஜிப்ரீல்' என்று பதிலளித்தார்கள்!
• அதற்கு அவர், 'உங்களுடன் வேறெவராது இருக்கிறரா?' என்று கேட்டார். அவர்கள், 'என்னுடன் முஹம்மத் அவர்கள் இருக்கிறார்கள்' என்று பதிலளித்தார்கள். அதற்கு அவர், ' (அவரை அழைத்துவரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டதா?' என்று கேட்க, ஜிப்ரீல் அவர்கள், 'ஆம், திறவுங்கள்' என்று கூறினார்கள்!
(நூல் : புகாரி : 3342)
*• பூமியில் நிகழும் நிகழ்வுகளை அல்லாஹ் அறிவிக்காத வரையில் மலக்கு மார்களால் எதையும் அறிந்து கொள்ள முடியாது!*
(நூல் : புகாரி : 7517)
*❤️ முதல் வானம் 😘
• முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு நாங்கள் வானத்தில் (இன்னும்) மேலே சென்றபோது அங்கே *ஒருவர் இருந்தார். அவரின் வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர்!*
*• இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தன்னுடைய வலப்பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தன்னுடைய இடப்பக்கம் பார்க்கும்போது அழுதார்.* (பிறகு, என்னைப் பார்த்து,) 'நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!' என்று . அவர், கூறினார்!
• நான் ஜிப்ரீலே இவர் யார்?' என்று கேட்டேன். அவர் *'இவர் ஆதம் (அலை) அவர்கள்; அவர்களின் வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவர்களின் சந்ததிகள். அவர்களில் வலப்பக்கமிருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரக வாசிகள்! எனவே, தான் அவர்கள் வலப்பக்கம் (சொர்க்கவாசிகளான) தம் மக்களை பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்கள்; இடப்பக்கம் (நரக வாசிகளான தம் மக்களைப்) பார்க்கும்போது (வேதனைப்பட்டு) அழுகிறார்கள்'* என்று பதிலளித்தார்கள்!
• பிறகு என்னை அழைத்துக் கொண்டு ஜிப்ரீல் (இன்னும் உரயத்திற்கு) ஏறிச் சென்றார்கள்!
(நூல் : புகாரி : 3342)
*❤️ இரண்டாவது வானம் 😘
• பிறகு, இரண்டாம் வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், 'திறவுங்கள்' என்று கூறினார்கள். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே இந்த வானவரும் கேட்டார். பிறகு முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் இரண்டாம் வானத்தின் கதவு திறந்தார்!
*• இரண்டாவது வானத்தில் நபி ஈஸா (அலை) மற்றும் நபி யஹ்யா (அலை) அவர்களையும் நபி (ஸல்) சந்தித்தார்கள்* அவர்கள் இருவரும் , 'சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்' என்று கூறினார்கள்!
(நூல் : புகாரி : 3207)
*❤️ மூன்றாவது வானம் 😘
• பிறகு மூன்றாவது வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், 'திறவுங்கள்' என்று கூறினார்கள். அதன் காவலரும் இரண்டாவது மலக்கு கேட்டதை போன்றே இந்த வானவரும் கேட்டார். பிறகு முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் மூன்றாவது வானத்தின் கதவு திறந்தார்!
*• மூன்றாவது வானத்தில் யூசுஃப் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள்!* நபி (ஸல்) அவர்கள் ஸலாம் கூறினார்கள்! நபி யூசுஃப் (அலை) அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்று வாழ்த்து சொன்னார்கள்!
(நூல் : புகாரி : 3207)
*❤️ நான்காவது வானம் 😘
• பிறகு நான்காவது வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், 'திறவுங்கள்' என்று கூறினார்கள். அதன் காவலரும் மூன்றாவது மலக்கு கேட்டதை போன்றே இந்த வானவரும் கேட்டார். பிறகு முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் நான்காவது வானத்தின் கதவு திறந்தார்!
*• நான்காவது வானத்தில் நபி இத்ரீஸ் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள்!* அவர்களுக்கு சலாம் கூறினார்கள்! . அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் நபி இத்ரீஸ் (அலை) அவர்கள் வாழ்த்து கூறினார்கள்!
(நூல் : புகாரி : 3207)
*❤️ ஐந்தாவது வானம் 😘
• பிறகு ஐந்தாவது வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், 'திறவுங்கள்' என்று கூறினார்கள். அதன் காவலரும் நான்காவது மலக்கு கேட்டதை போன்றே இந்த வானவரும் கேட்டார். பிறகு முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் ஐந்தாவது வானத்தின் கதவு திறந்தார்!
*• ஐந்தாவது வானத்தில் நபி ஹாரூன் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள்!* அவர்களுக்கு சலாம் கூறினார்கள்! . அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் நபி ஹாரூன் (அலை) அவர்கள் வாழ்த்து கூறினார்கள்!
(நூல் : புகாரி : 3207)
*❤️ ஆறாவது வானம் 😘
• பிறகு ஆறாவது வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், 'திறவுங்கள்' என்று கூறினார்கள். அதன் காவலரும் ஐந்தாவது மலக்கு கேட்டதை போன்றே இந்த வானவரும் கேட்டார். பிறகு முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் ஆறாவது வானத்தின் கதவு திறந்தார்!
*• ஆறாவது வானத்தில் நபி மூஸா (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள்!* அவர்களுக்கு சலாம் கூறினார்கள்! . அவர்கள் சகோதரரும் நபியுமான உங்கள் வரவு நல்வரவாகட்டும் நபி மூஸா (அலை) அவர்கள் வாழ்த்து கூறினார்கள்!
*• நபி (ஸல்) அவர்கள் மூஸா (அலை) அவர்களை கடந்து செல்லும் போது அழுதார்கள்! நீங்கள் ஏன் அழுகிறீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், 'இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்தினரிலிருந்து சொர்க்கம் புகுவார்கள்'* என்று பதிலளித்தார்கள்!
(நூல் : புகாரி : 3207)
*❤️ ஏழாவது வானம் 😘
• பிறகு ஏழாவது வானத்திற்கு வந்து அதன் காவலரிடம், 'திறவுங்கள்' என்று கூறினார்கள். அதன் காவலரும் ஆறாவது மலக்கு கேட்டதை போன்றே இந்த வானவரும் கேட்டார். பிறகு முன்பு போன்றே ஜிப்ரீல் அவர்கள் பதில் கூறிய பின்னர் ஏழாவது வானத்தின் கதவு திறந்தார்!
*• ஏழாவது வானத்தில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்தித்தார்கள்!* அவர்களுக்கு சலாம் கூறினார்கள்! அவர்கள், மகனும் நபியுமான உங்கள் வரவு நல்வராவாகட்டும் என்றார்கள்!
*• இதன் பின்பு பிறகு ‘ அல் பைத்துல் மஃமூர் ’ எனும் ' வளமான இறையில்லம் ' எனக்கு (அருகே கொண்டு வந்து) காட்டப்பட்டது. நான் அதைக் குறித்து ஜிப்ரீலிடம் கேட்டேன். அவர், 'இதுதான் 'அல் பைத்துல் மஃமூர்' ஆகும் என்று கூறினார்கள்!*
(நூல் : புகாரி : 3207)
*💟 அல் பைத்துல் மஃமூர் எனும் பள்ளி வாசல் 😘
• அல் பைத்துல் மஃமூர் என்ற பள்ளி ஏழு வானத்திற்கு மேலே அல்லாஹ் அமைத்து உள்ளான்!
*• இந்த பள்ளியில் ஒவ்வொரு நாளும் சுமார் 70,000 ஆயிரம் மலக்கு மார்கள் தொழுவார்கள்!*
*• ஒரு முறை அவர்கள் தொழுது விட்டால் மீண்டும் அவர்கள் உள்ளே நுழைய மாட்டார்கள்! புதியதாக வேறு மலக்கு மார்கள் உள்ளே நூழைவார்கள்!*
(நூல் : முஸ்லீம் : 259)
• இதன் பின்பு பிறகு, வான எல்லையிலுள்ள இலந்தை மரமான
‘ சித்ரத்துல் முன்தஹா ’ எனக்கு அருகே கொண்டு வந்து காட்டப்பட்டது!
*💟 ஸித்ரத்துல் முன்தஹா எனும் மரம் 😘
• ஸித்ரதுல் முன்தஹா என்பது இலந்தை இலை மரமாகும்! அல்லாஹ் இந்த மரத்தை வானத்தின் எல்லையில் படைத்து வைத்து உள்ளான்!
*• இந்த ஸித்ரதுல் முன்தஹா எனும் இலந்தை இலை மரத்தின் வேர் பகுதி ஆறாம் வானத்தில் இருந்து ஆரம்பமாகி ஏழாம் வானத்தில் விருட்சமாக அல்லாஹ் படைத்துள்ளான்!*
*• இந்த மரத்தின் இலைகள் யானையுடைய காதுகள் அளவுக்கு இருக்கும். அதனுடைய பழங்கள் பெரிய பெரிய கூஜாக்களைப் போன்று இருக்கும்.*
*• அந்த இலந்தை மரத்தை சூழாக பிரகாசமாக வெளிச்சமாக இருக்கும். தங்கத்திலாலான வெட்டுக் கிளிகள் அதனை சூழாக பறந்து கொண்டே இருக்கும்!*
*• பூமியிலிருந்து மேலே கொண்டு செல்லப்படும் (உயிர்கள், மனிதர்களின் செயல்கள் பற்றிய குறிப்புகள்) யாவும் அங்கு தான் சென்று சேர்கின்றன; அங்கே அவை கையகப்படுத்த படுகின்றன!*
*• அதற்கு மேலேயிருந்து கிழே கொண்டு வரப்படும் (இறைக்கட்டளைகள்) யாவும் அங்குதான் வந்து சேர்கின்றன; அங்கே (வானவர்களால்) அவை பெற்றுக்கொள்ளப்படுகின்றன!*
(நூல் : முஸ்லீம் : 279)
*• ஸித்ரதுல் முன்தஹா எனும் இலந்தை இலை மரத்தின் வேர் பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன!*
*• அல் கவ்ஸர் நீர் தடகத்தின் மண் கஸ்தூரி ஆகும்! மறுமை நாளில் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கும் நீர் தாடகம் ஆகும்!*
(நூல் : புகாரி : 7517)
• நான் ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும் யூப்ரடீஸ் நதியும் ஆகும்' என்று பதிலளித்தார்கள்!
(நூல் : புகாரி : 3207)
*💟 மூன்று கிண்ணம் 😘
*நபி (ஸல்) அவர்களுக்கு மூன்று கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன! பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம்! இதில் நபி (ஸல்) அவர்கள் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து அருந்தினார்கள்! அப்போது நீங்கள் இயற்க்கை மார்க்கத்தை தெரிவு செய்துவிட்டீர்கள்! என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார்கள்!*
(நூல் : புகாரி : 5610)
*💟 அல்லாஹ்வை சந்தித்தல் 😘
*சர்வ வல்லமை படைத்தவனும் கண்ணியத்தின் அதிபதியுமான இறைவன், வில்லின் இரண்டு முனையளவு அல்லது அதைவிட மிக அருகில் நபி (ஸல்) அவர்களிடம் நெருங்கி வந்தான்!*
(நூல் : புகாரி : 7517)
• நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உருவத்தை பார்க்க வில்லை ஒளியை மட்டுமே பார்த்தார்கள் இதை பற்றி கிழே விரிவாக குறிப்பிட்டு உள்ளோம்!
*❤️ கட்டுக்கதை 😘
• அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் சந்திக்க சென்ற நிகழ்வை வைத்து பல கட்டுக்கதைகள் கூறுவார்கள் அவற்றில் சில ;
*1) அல்லாஹ் உண்மையான குரலில் பேசினால் நபி (ஸல்) அவர்கள் பயந்து விடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்களின் நெருக்கிய நண்பர் அபூபக்கர் சித்திக் (ரழி) அவர்கள் குரலில் பேசினான்!*
*2) அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினான் அதற்கு பதில் கூற நபி (ஸல்) அவர்கள் அத்தஹியாத் ஓதினார்கள்!*
*3) ஜிப்ரயில் (அலை) அவர்கள் ஒரு குறிப்பிட்ட துரத்திலயே நின்று விட்டார்கள் நபி (ஸல்) ஏன் என்று கேட்க அருகில் வந்தால் அல்லாஹ்வின் ஒளி என்னை எரிந்து விடும்!*
*• இப்படி நிறைய கதைகள் கூறுவார்கள் ஆனால் இவை எல்லாமே அடிப்படை ஸஹீஹான ஆதாரம் அற்ற பொய்யான செய்திகள் ஆகும்!*
*💟 மிஃஹ்ராஜ் பயணத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்புகள் 😘
• அல்லாஹ்வை சந்திந்த நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மூன்று வெகுமதிகளை வழங்கினான் அவைகள் ;
*1) தொழுகை*
*2) அல்பகரா அத்தியாயத்தின் இறுதி மூன்று வசனங்கள்!*
*3) நபி (ஸல்) அவர்களுடைய சமுதாயத்தாரில் அல்லாஹ்வுக்கு இணையேதும் வைக்காதவர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும் எனும் வாக்குறுதி!*
(நூல் : முஸ்லிம் : 279)
*💟 மூஸா (அலை) அவர்களின் தொழுகை குறித்து ஆலோசனை 😘
*• அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு ஐம்பது நேரத் தொழுகைகள் கடமையாக்கினான்!*
• தொழுகை பெற்று கொண்டு நபி (ஸல்) அவர்கள் முன்னேறிச் சென்ற போது நபி மூஸா (அலை) அவர்களை சந்தித்தார்கள்! தொழுகை பற்றி கேட்டார்கள்!
• அதற்க்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் *என் சமுதாயத்தின் மீது 50 நேர தொழுகை கடமையாக்கி உள்ளான்* என்று பதில் கூறினார்கள்!
• இதை கேட்ட மூஸா (அலை) அவர்கள் *எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்'* என்றார்கள்!
• நபி (ஸல்) அவர்கள் திரும்ப சென்று அல்லாஹ்விடம் தொழுகையை சற்று குறைத்து தரும் படி கேட்டார்கள் *அல்லாஹ்வும் 40 ஆக தொழுகை கொடுத்தான்!*
• பிறகும் நபி மூஸா அலை அவர்களை சந்திக்க அவர்கள் *உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். எனவே, உங்களுடைய இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் (தொழுகைகளின் எண்ணிக்கையைக்) குறைத்துத் தரும்படி கேளுங்கள்'* என்றார்கள்! என்று முன்பு சொன்னவாறே கூறினார்கள்!
• நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அல்லாஹ்விடம் சென்று தொழுகை குறைத்து கேட்டு 30 ஆக ஆக்கினான்!
• பின்பு மீண்டும் மூஸா (அலை) அவர்கள் அறிவுரை கூற மீண்டும் அதைப் போன்றே நடக்க (அதை) *இறைவன் 20 ஆக ஆக்கினான்!*
*• நான் மூஸா(அலை) அவர்களிடம் சென்றபோது அவர்கள் முன்பு போன்றே சொல்ல (நான் இறைவனிடம் மீண்டும் குறைத்துக் கேட்க) அவன் அதை 5 ஆக ஆக்கினான்!*
• பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், 'என்ன செய்தாய்?' என்று கேட்க, 'அதை *இறைவன் ஐந்தாக ஆக்கிவிட்டான்' என்றேன். அதற்கு அவர்கள், 'முன்பு சொன்னதைப் போன்றே (இன்னும் குறைத்துக் கேட்கும்படி) சொன்னார்கள்!*
• அதற்க்கு *நபி (ஸல்) அவர்கள் இதற்கு மேல் அல்லாஹ்விடம் குறைத்து கேட்க நான் வெட்கம் படுகிறேன் என்று கூறி 5 நேர தொழுகையே நான் ஒப்புக் கொண்டேன்'* என்று பதிலளித்தேன். அப்போது (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து அசரீரியாக), 'நான் என் (ஐந்து வேளைத் தொழுகை எனும்) விதியை அமல்படுத்தி விட்டேன்!
*• என் அடியார்களுக்கு (ஐம்பது வேளைகளிலிருந்து ஐந்து வேளையாகக் குறைத்து கடமையை) லேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை நான் வழங்குவேன்' என்று அறிவிக்கப்பட்டது!*
(நூல் : புகாரி : 3207 & 349)
*💟 சொர்க்கம் & நரகம் காணுதல் 😘
*💜 சொர்க்கம் காணுதல் 😘
*நபி (ஸல்) அவர்கள் சொர்க்கத்தில் நுழைந்தார்கள் அதில் முத்துக்களினால் ஆன கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது!*
(நூல் : புகாரி : 349)
*சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன்!*
(நூல் : புகாரி : 3241)
*❤️ நரகம் காணுதல் 😘
*நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களைக் கண்டேன்!*
(நூல் : புகாரி : 3241)
• மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை *மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர்!*
ஜிப்ரீலே! இவர்கள் யார்? என்று நான் கேட்டேன். இவர்கள் *(புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்* என்று பதிலளித்தார்கள்!
(நூல் : அஹ்மத் : 12861)
*💟 குறைஷிகள் நம்ப மறுத்தல் 😘
*• நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்று வந்த செய்தியை மக்களிடத்தில் சொல்லிய போது முஷ்ரிகீன்கள் (சிலை வணங்க கூடியவர்கள்) அதை மறுத்தார்கள்!*
• இன்னும் அல்லாஹ்வின் விரோதி அபூஜஹ்ல் நபி (ஸல்) அதிகம் ஏளனம் செய்தான் இதை பற்றி தங்கள் தலைவர்களிடம் கூற வேண்டும் என்று கூறினான்!
• நபி (ஸல்) அவர்களும் மிஹ்ராஜ் இரவில் நடந்த அனைத்தையும் கூறினார்கள்!
*• இதை கேட்டு கேலி செய்ய ஆரம்பித்தார்கள். குறிப்பிட்ட இந்த இரவில் யாரும் போய்வர முடியாத இந்த பயணத்தை இவர் சென்றுவந்தாராம். என்று பரிகாசம் செய்ய ஆரம்பித்தனர்.*
*• இதன் பின்பு பனீ கஅப் பின் லுவை சேர்ந்த கூட்டத்தை அழைத்து பைத்துல் முகத்தஸ் பற்றி கேட்டார்கள் இதை பற்றி கேட்க காரணம் நபி (ஸல்) அவர்கள் அந்த இடத்திற்கு சென்றது கிடையாது இரண்டாவது அந்த ஊருக்கு ஒட்டகத்தில் சென்றாலும் 1 மாத காலம் ஆகும்!*
• பனீ கஅப் பின் லுவை கூட்டம் அந்த கூட்டம் வியாபாரம் ரீதியாக அடிக்கடி செல்லுவார்கள் அதனால் அந்த பள்ளி பற்றி நன்கு அறிந்து இருந்தார்கள் அவர்கள் அந்த பள்ளியை பற்றி எங்களுக்கு விவரிக்க சொன்னார்கள்!
*• அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வர்ணிக்கத் துவங்கி, தொடர்ந்து வர்ணித்துக் கொண்டிருக்கும் போது வர்ணனையில் எனக்கு சிறிது தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது!*
*• நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது இகால் அல்லது உகைல் வீட்டு அருகில் பள்ளி கொண்டு வந்து வைக்கப்பட்டது. இப்போது அதை நான் பார்த்துக் கொண்டு, அதைப் பார்த்தவாறே வர்ணித்தேன். நான் நினைவில் வைத்திராத வர்ணனையும் இத்துடன் அமைந்திருந்தது!*
• இதைக் கேட்ட மக்கள், வர்ணனை விஷயத்தில் அல்லாஹ்வின் மீதாணையாக இவர் சரியாகத் தான் சொன்னார் என்று கூறினார்கள்!
(நூல் : புகாரி : 3886 | அஹ்மத் : 2670)
*💟 மிஃஹ்ராஜ் பயணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பார்த்தார்களா 😘
• மிஃஹ்ராஜ் பயணத்தின் போது நபி அவர்கள் அல்லாஹ்வை பார்த்தார்களா? என்று ஸஹாபாக்கள் பேசி கொண்டு இருந்தனர்!
*• இதை கேட்ட ஆயிஷா (ரழி) அவர்கள்
(அல் குர்ஆன் : 42 : 51 | 6 : 103) ஆகிய குர்ஆன் வசனங்களை ஓதி அல்லாஹ்வை யாராலும் பார்க்க முடியாது ஆனால் அவனோ எல்லோரையும் பார்க்கிறான் என்று கூறினார்கள்!*
• ஆனால் ஜிப்ரயில் (அலை) அவர்களை மட்டும் நபி (ஸல்) அவர்கள் இரண்டு முறை நிஜ தோற்றத்தில் பார்த்து உள்ளார்கள்!
(நூல் : புகாரி : 4855)
*இது வரை அல்லாஹ்வின் தோற்றத்தை யாரும் பார்த்தது கிடையாது! அல்லாஹ் தன்னை ஒரு ஒளி திரை கொண்டு மறைத்து உள்ளான்!*
(அல் குர்ஆன் : 42 : 52) (நூல் : முஸ்லீம் : 291)
*💟 ஒரே இரவில் அனைத்தும் நடந்தது 😘
• மிஃஹ்ராஜ் பயணம் என்பது மிக நீண்ட பயணம் ஆகும் சொர்க்கம் நரகம் என நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள் இந்த அனைத்து நிகழ்வுகளும் ஒரே இரவில் அல்லாஹ் நடத்தி காட்டினான்!
*(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்!*
(அல் குர்ஆன் : 17 : 1)
*💟 மிஃஹ்ராஜ் பயணம் எப்போது நடந்தது 😘
*• இன்று அல்லாஹ் பாதுகாக்கணும்! இன்று பல இடங்களில் ரஜப் 27 நாள் இரவில் தான் மிஃஹ்ராஜ் நடைபெற்றது - என்று ஒரு ஸஹீஹான ஹதீஸ் ஆதாரமும் இல்லாமல் இந்த நாளை சிறப்பித்து கொண்டாடுகிறார்கள்!*
*• மிஃஹ்ராஜ் பயணம் எந்த நாளில் அல்லது எந்த மாதத்தில் நடை பெற்றது என்பது இன்று வரை கூட வரலாற்று ஆசிரியர்களுக்கும் தெரியவில்லை !*
*• ஏன் என்றால் மிஃஹ்ராஜ் பயணம் மக்காவில் இஸ்லாம் ஆரம்பம் ஆன காலத்தில் நடைபெற்றது அப்போது முஸ்லீம்கள் எண்ணிக்கையும் மிக குறைவே! இதனால் நபி (ஸல்) அவர்கள் உடப்பட யாருமே மிஃஹ்ராஜ் பயணம் எந்த நாளில் நடை பெற்றது என்று குறித்து அல்லது நியாபகம் வைத்து இருக்க வில்லை!*
• இன்னும் சில அறிஞர்கள் : இந்த நாட்களில் நடை பெற்று இருக்கலாம் என்று ஒரு யுகமாக கூறி உள்ளார்கள் ஆனால் அதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது! அவர்கள் கூறிய சில கருத்துகள் ;
*1) நபித்துவம் கிடைத்த ஆண்டு நடைபெற்று இருக்கலாம்!*
*2) நபித்துவத்தின் ஐந்தாம் ஆண்டு நடைபெற்று இருக்கலாம்!*
*3) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரஜப் மாதம் 27வது இரவில் நடைபெற்று இருக்கலாம்!*
*• இப்படி ஒவ்வொரு அறிஞர்களும் ஒவ்வொரு நாட்களை குறிப்பிடுகிறார்கள்! ஆனால் இதற்கும் எந்த வித ஆதாரமும் கிடையாது! ஒரு யுகமாக கூறி உள்ளார்கள் ஆனால் இதையும் நாம் மறுக்க வேண்டும்! காரணம் 😘
*• நபி அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரழி) நபித்துவத்தின் பத்தாம் ஆண்டு ரமழான் மாதத்தில் தான் இறந்தார்கள்!*
• அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை தொழாமல் அடக்கம் செய்தார்கள் காரணம் தொழுகை கடமையாக்கப்படுவதற்கு முன் மரணித்து விட்டார்கள்!
*• அதனால் தான் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நடத்த வில்லை! ஆனால் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு மிஹ்ராஜ் இரவில் தொழுகை கடமையாக்கி விட்டான்!*
*• மிஃஹ்ராஜ் எப்போது நடைபெற்றது என்பதை அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்! நாம் உறுதியாக மிஃஹ்ராஜ் இரவு நடைபெற்றது என்பதை மட்டும் நம்பிக்கை கொள்ள வேண்டும்!*
*💟 மிஃஹ்ராஜ் இரவும் அமல்களும் 😘
*• முதலில் மிஃஹ்ராஜ் எப்போது நடந்தது என்று இஸ்லாத்தில் ஸஹீஹான ஒரு ஆதாரமும் கிடையாது!*
• அல்லாஹ் பாதுகாக்கணும் இன்றும் பல ஊர்களில் எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் மிஃஹ்ராஜ் இரவு என்று சிறப்பு தொழுகை முறை திக்ர் துஆ நோன்பு என இவர்களே சுயமாக உருவாக்கி கொண்டார்கள் (நவதுபில்லாஹ்) இதை பற்றி இன்ஷாஅல்லாஹ் அடுத்த பதிவில் கூறுகிறோம்!
*@ *DOORS OF JANNAH*