பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, November 12, 2019

நன்மைகளை வாரி - 27

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 27 ]*

    *☄ஜமாஅத் தொழுகை { 01 }*

*🏮🍂முந்தைய தொடர்ளில் தொழுகைக்காக உளூச் செய்தல், பல் துலக்குதல், உளூச் செய்த பின் ஓதும் துஆ, பாங்கு கூறுதல், பாங்கிற்குப் பின் ஓதும் துஆக்கள், தொழுகைக்காகப் பள்ளிக்கு நடந்து வருதல், முன்கூட்டியே தயாராகுதல், தொழுகைக்காகக் காத்திருத்தல் போன்ற நற்காரியங்களில் எவ்வளவு பெரிய நன்மைகளை அல்லாஹ் வைத்திருக்கின்றான் என்பதைப் பார்த்தோம்.*

*🏮🍂வரும் தொடர்களில் தொழுகையை ஜமாஅத்தாகத் தொழுவதால் கிடைக்கும் பாக்கியங்களைப் பற்றியும் நன்மைகளைப் பற்றியும் நபியவர்கள் கூறிய பொன்மொழிகளைப் பார்க்கவிருக்கின்றோம்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄ஜமாஅத்தாகத்*
          *தொழுவதன்*
                      *சிறப்புகள் { 01 }*

*🏮🍂நாம் சென்ற இதழ்களில் தொழுகைக்காகக் காத்திருத்தல், பள்ளிக்கு முன்கூட்டியே வருதல், பள்ளிக்கு நடந்து வருதல் போன்ற நற்காரியங்களின் சிறப்புக்களைப் பற்றிப் பார்த்தோம். அவை அனைத்துமே ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்புக்களில் உள்ளடங்கியவை தான். ஏனெனில்  நாம் பள்ளிவாசலுக்குச் செல்லும் நோக்கமே தொழுகையை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றுவதற்காகத் தான். நாம் பள்ளிவாசலுக்கு முன்கூட்டியே வருவதும், நடந்து வருவதும், தொழுகைக்காகக் காத்திருப்பதும் தொழுகையை ஜமாஅத்தாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகத் தான்.*

*🏮🍂நபி (ஸல்) அவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதை மிகவும் வலியுறுத்தி உள்ளார்கள். அவற்றின் முக்கியத்துவத்தையும் சிறப்புகளையும் காண்போம்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄கூட்டுத் தொழுகை*
        *நேரிய வழிகளில் ஒன்று☄*

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ  أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، عَنْ أَبِي  الْعُمَيْسِ، عَنْ عَلِيِّ بْنِ الأَقْمَرِ، عَنْ أَبِي الأَحْوَصِ، *عَنْ  عَبْدِ اللَّهِ، قَالَ مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ غَدًا مُسْلِمًا  فَلْيُحَافِظْ عَلَى هَؤُلاَءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بِهِنَّ  فَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّكُمْ صلى الله عليه وسلم سُنَنَ الْهُدَى  وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى وَلَوْ أَنَّكُمْ صَلَّيْتُمْ فِي  بُيُوتِكُمْ كَمَا يُصَلِّي هَذَا الْمُتَخَلِّفُ فِي بَيْتِهِ  لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ  لَضَلَلْتُمْ وَمَا مِنْ رَجُلٍ يَتَطَهَّرُ فَيُحْسِنُ الطُّهُورَ ثُمَّ  يَعْمِدُ إِلَى مَسْجِدٍ مِنْ هَذِهِ الْمَسَاجِدِ إِلاَّ كَتَبَ اللَّهُ  لَهُ بِكُلِّ خَطْوَةٍ يَخْطُوهَا حَسَنَةً وَيَرْفَعُهُ بِهَا دَرَجَةً  وَيَحُطُّ عَنْهُ بِهَا سَيِّئَةً وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ  عَنْهَا إِلاَّ مُنَافِقٌ مَعْلُومُ النِّفَاقِ وَلَقَدْ كَانَ الرَّجُلُ  يُؤْتَى بِهِ يُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِي الصَّفِّ*  ‏.‏

_*🍃அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யார் நாளை (மறுமை நாளில்) முஸ்லிமாக அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவர் தொழுகை அறிவிப்புச் செய்யப்படும் இடங்களில் (பள்ளிவாசல்களில்) இந்தத் தொழுகைகளைப் பேணி வரட்டும். ஏனெனில், அல்லாஹ் உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு நேரிய வழிகளைக் காட்டியுள்ளான். (கூட்டுத்) தொழுகைகள் நேரிய வழிகளில் உள்ளவையாகும். கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் தமது வீட்டிலேயே தொழுது கொள்ளும் இன்ன மனிதரைப் போன்று நீங்களும் உங்கள் வீடுகளிலேயே தொழுது வருவீர்களானால் நீங்கள் உங்கள் நபியின் வழிமுறைகளைக் கைவிட்டவர் ஆவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கைவிட்டால் நிச்சயம் நீங்கள் வழிதவறிவிடுவீர்கள்.*_

_*யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதைச் செம்மையாகவும் செய்து பின்னர் இப்பள்ளிவாசல்களில் ஒன்றை நோக்கி வருகிறாரோ அவர் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடிக்கும் அவருக்கு அல்லாஹ் ஒரு நன்மையை எழுதுகிறான்; அவருக்கு ஒரு தகுதியை உயர்த்துகிறான்; அவருடைய பாவங்களில் ஒன்றை மன்னித்துவிடுகிறான். நான் பார்த்தவரை எங்களிடையே நயவஞ்சகம் அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறெவரும் கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. (எங்களில் நோயாளியான) ஒரு மனிதர் இரு மனிதருக்கிடையே தொங்கியவாறு அழைத்துவரப்பட்டு (கூட்டுத்) தொழுகையில் நிறுத்தப்பட்டதுண்டு.*_

*📚நூல்:  முஸ்லிம் (1159)📚*

*🏮🍂இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஜமாஅத் தொழுகைக்கு வரவில்லையெனில் அவர் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு நயவஞ்சகர் என்பது தெளிவாகின்றது. நாம் இந்த நயவஞ்சகத் தன்மையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கடுமையானவர்களாக இருந்துள்ளார்கள்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment