பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 3, 2019

நன்மைகளை வாரி -18

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*✍🏼...நன்மைகளை வாரி*
                          ⤵
         *வழங்கும் தொழுகை*

         *✍🏼...தொடர் [ 18 ]*

*☄தொழுகைக்கு முன்கூட்டியே*
        *வருவதன் சிறப்புகள் { 02 }*

*☄பள்ளியை நோக்கும் உள்ளமும் - அர்ஷின் நிழலும்☄*

*🏮🍂மறுமை நாளின் வெப்பத்தின் கொடுமை மிகக் கடுமையானதாகும். அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழல் அந்நாளில் இருக்காது. அப்போது பள்ளிவாசலோடு தொடர்பு கொண்ட உள்ளத்தை உடையவர்களுக்கு அல்லாஹ் தன்னுடைய அர்ஷின் கீழ் நிழல் கொடுக்கின்றான்.*

*🏮🍂ஒருவர் ஒவ்வொரு தொழுகைக்கும் முன்கூட்டியே பள்ளிவாசலுக்கு வருவது அவரை இத்தகைய பாக்கியத்தைப் பெறக்கூடியவராக ஆக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.*

 *عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم  قَالَ ‏"‏ سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ  فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ الإِمَامُ الْعَادِلُ،  وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي  الْمَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ  وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ  وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ‏.‏ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى  حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ  اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் தனது (அரியணையின்) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் ஏழு பேருக்கு நிழல் (அடைக்கலம்) அளிப்பான்:*_

_*☄1. நீதி மிக்க ஆட்சியாளர்.*_

*☄2. இறை வணக்கத்திலேயே*
              *வளர்ந்த இளைஞன்.*

*☄3. பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.*

*☄4. அல்லாஹ்வுக்காகவே நட்புக் கொண்டு அந்த நிலையிலேயே (இவ்வுலகிலிருந்து) பிரிந்து சென்ற இருவர்.*

*☄5. அந்தஸ்தும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர்.*

*☄6. தமது வலக் கரம் செய்த தர்மத்தை இடக் கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர்.*

*☄7. தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் வடித்தவர்.*

*🎙அறிவிப்பவர்:*
              *அபூஹுரைரா (ரலி),*

*📚 நூல்:  புகாரி (660) 📚*

*முஸ்லிமுடைய அறிவிப்பில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.*

_*🍃"பள்ளிவாசலிலிருந்து புறப்பட்டுச் சென்றாலும் திரும்பி வரும்வரை அதனுடனேயே தொடர்பு வைத்துக்கொள்ளும் இதயமுடையவர்''*_

*📚நூல்: முஸ்லிம் (1869)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜
                            ⤵⤵⤵
                           ✍🏼...

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment