*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🍃அமல்களை*
*அதிகரிப்போம்[ 07 ]🍃*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*அமல்களும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖4⃣9⃣*
*☄ அதிக நன்மைப்*
*பெற்று தரும்*
*சின்னஞ் சிறிய*
*அமல்கள் [ 02 ]*
*☄அல்லாஹ்விற்குமிகவும்*
*விருப்பமான அமல்*
*🏮🍂எந்த அமலை அற்பமாக கருதிகிறமோ அந்த அமலை தான் தனக்கு விருப்பமான அமலாக தேர்ந்தெடுத்துயிருக்கிறான், அமல்களின் குறைவாக இருந்தாலும் அதை தொடர்ந்து செய்ய வேண்டும், அந்த நல்ல அமலை தான் அல்லாஹ் விரும்புகிறான்,*
ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻌﺰﻳﺰ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ، ﺣﺪﺛﻨﺎ ﺳﻠﻴﻤﺎﻥ، ﻋﻦ ﻣﻮﺳﻰ ﺑﻦ ﻋﻘﺒﺔ، ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻠﻤﺔ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ، *ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ: ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻗﺎﻝ: «ﺳﺪﺩﻭا ﻭﻗﺎﺭﺑﻮا، ﻭاﻋﻠﻤﻮا ﺃﻥ ﻟﻦ ﻳﺪﺧﻞ ﺃﺣﺪﻛﻢ ﻋﻤﻠﻪ اﻟﺠﻨﺔ، ﻭﺃﻥ ﺃﺣﺐ اﻷﻋﻤﺎﻝ ﺇﻟﻰ اﻟﻠﻪ ﺃﺩﻭﻣﻬﺎ ﻭﺇﻥ ﻗﻞ»*
_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:_
_*🍃நேர்மையோடு (நடுநிலையாகச்) செயல்படுங்கள். நிதானமாகச் செயல்படுங்கள். (வரம்பு மீறிவிடாதீகள்.) அறிந்துகொள்ளுங்கள்: உங்கள் யாரையும் அவரது நற்செயல் சொர்க்கத்தில் ஒருபோதும் நுழைவிக்காது. (மாறாக, அல்லாஹ்வின் தனிப்பெரும் கருணையாலேயே எவரும் நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்வோருக்கு அழகிய கூலி உண்டு. நமது கட்டளைகளில் எளிதானதை அசொர்க்கம் புக முடியும்.) நற்செயல்கள் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே ஆகும்.*_
*🎙அறிவிப்பாளர் :*
*ஆயிஷா (ரலி)*
*📚 நூல் : புகாரி 6464 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄நல்ல அமல் செய்தால் பத்திருந்து எழுநூறு வரை நன்மை உண்டு☄*
*🏮🍂நாம் அற்பமாக கருதப்படும் சின்ன அமல்களை செய்தால் பத்திருந்து எழுநூறு நன்மைகளை அல்லாஹ் வாரி வாரி வழங்குகிறான்,*
ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻣﻌﻤﺮ، ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻮاﺭﺙ، ﺣﺪﺛﻨﺎ ﺟﻌﺪ ﺑﻦ ﺩﻳﻨﺎﺭ ﺃﺑﻮ ﻋﺜﻤﺎﻥ، ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﺭﺟﺎء اﻟﻌﻄﺎﺭﺩﻱ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ، ﻋﻦ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﻴﻤﺎ ﻳﺮﻭﻱ ﻋﻦ ﺭﺑﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻗﺎﻝ: ﻗﺎﻝ: «ﺇﻥ اﻟﻠﻪ ﻛﺘﺐ اﻟﺤﺴﻨﺎﺕ ﻭاﻟﺴﻴﺌﺎﺕ ﺛﻢ ﺑﻴﻦ ﺫﻟﻚ، ﻓﻤﻦ ﻫﻢ ﺑﺤﺴﻨﺔ ﻓﻠﻢ ﻳﻌﻤﻠﻬﺎ ﻛﺘﺒﻬﺎ اﻟﻠﻪ ﻟﻪ ﻋﻨﺪﻩ ﺣﺴﻨﺔ ﻛﺎﻣﻠﺔ، ﻓﺈﻥ ﻫﻮ ﻫﻢ ﺑﻬﺎ ﻓﻌﻤﻠﻬﺎ ﻛﺘﺒﻬﺎ اﻟﻠﻪ ﻟﻪ ﻋﻨﺪﻩ ﻋﺸﺮ ﺣﺴﻨﺎﺕ ﺇﻟﻰ ﺳﺒﻊ ﻣﺎﺋﺔ ﺿﻌﻒ ﺇﻟﻰ ﺃﺿﻌﺎﻑ ﻛﺜﻴﺮﺓ، ﻭﻣﻦ ﻫﻢ ﺑﺴﻴﺌﺔ ﻓﻠﻢ ﻳﻌﻤﻠﻬﺎ ﻛﺘﺒﻬﺎ اﻟﻠﻪ ﻟﻪ ﻋﻨﺪﻩ ﺣﺴﻨﺔ ﻛﺎﻣﻠﺔ، ﻓﺈﻥ ﻫﻮ ﻫﻢ ﺑﻬﺎ ﻓﻌﻤﻠﻬﺎ ﻛﺘﺒﻬﺎ اﻟﻠﻪ ﻟﻪ ﺳﻴﺌﺔ ﻭاﺣﺪﺓ»*
_*🍃(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்:*_
_*அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணி விட்டாலே-அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால், ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ் வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்.*_
*🎙அறிவிப்பாளர் :*
*இப்னு அப்பாஸ் (ரலி)*
*📚 நூல் : புகாரி 6491,7501📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment