*🍇🍇🍇மீள் பதிவு🍇🍇🍇*
*🌐🌐🌐ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉தொடர் பாகம் 1👈👈👈*
*👉தலைப்பு👇*
*🌐🌐அன்பளிப்பை கொண்டு ஹஜ் செய்யலாமா❓🌎🌎*
கடனாக அல்லாமல் பிறர் அன்பளிப்பாகத் தந்த செல்வத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றலாமா?
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும்.
(அல்குர்ஆன்3:97)
இந்த வசனத்தின் அடிப்படையில் ஹஜ் செய்ய சக்தி பெற்றவர்களுக்கு அது கடமையாகும். அன்பளிப்பாகக் கிடைத்த பணமாக இருந்தாலும் அதைக் கொண்டு, ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி இருந்தால் தாராளமாக ஹஜ்ஜை நிறைவேற்றலாம். ஹலாலான வழியில் வந்த எந்தச் செல்வத்தைக் கொண்டும் ஹஜ் செய்வதற்கு தடையேதும் இல்லை.
*🌐புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு.🌐* . .
புனித ஹஜ் செல்வோர் கவனத்திற்கு
டாக்டர் த. முஹம்மது கிஸார்
புனித ஹஜ் நம்மை நெருங்கி வருகிறது. நம்மில், சிலருக்கு ஹஜ்ஜுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இதில் சிலர் ஹஜ்ஜுக்கு தொடங்கி விட்டனர். இன்னும் ஹஜ்ஜுக்கு செல்ல தங்களை மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகி வருகின்றனர்.
இந்த சமயத்தில், ஹஜ் செல்வோர் தங்கள் உடல் நலம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில வழிகாட்டுதலை இங்கு தர விரும்புகிறேன். இதில் நான் 1977 ஆம் ஆண்டு, சவூதி அரசின் மருத்துவராக ஹஜ்ஜின் போது களப் பணியாற்றிய எனது அனுபவத்தின் சில தாக்கங்களையும் இணைத்து உள்ளேன்.
1) ஹஜ் செல்ல நாடி உள்ளவர்கள் ஹஜ்ஜுக்கு செல்லும் முன் தங்கள் உடல் நலன்களை நல்ல முறையில் பரிசோதித்து, ஹஜ்ஜுக்கு செல்ல தயார் பண்ணி கொள்ள வேண்டும்.
2) நெடுநாளை நோய்களான சர்க்கரை என்னும் நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்த்மா, வலிப்பு, இருதய நோய் போன்ற நோயிகளால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள், தங்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்து, தங்கள் நோயை முழுக்கட்டுபாட்டில் வைத்து கொள்ள வேண்டும். முறையான உணவு கட்டுப்பாடுகளை ஒழுங்காக பின்பற்ற வேண்டும்.
3) நெடுநாளைய நோயிகளான சர்க்கரை என்னும் நீரழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஆஸ்த்மா, வலிப்பு, இருதய நோய், மாத்திரைகளை தேவைக்கு கொஞ்சம் அதிகமாகவே கொண்டு செல்ல வேண்டும். அணைத்து மாத்திரைகளும், ஒரே பேக்கில் வைக்காமல், பல பேக்குகளில் பிரித்து வைத்து கொள்ள வேண்டும். அப்போதுதான், ஒரு பேக் தொலைந்து போனால் கூட, இடைவெளியில்லாமல் தொடர்ந்து போட மாத்திரைகள் இருக்கும்.
தங்களின் மாத்திரைகளின் பெயர்களையும் (brand name) அதன் மூலக்கூறு பெயர்களையும் (chemical or molecule name) தெரிந்து வையுங்கள். அப்போது தான், மாத்திரை முடிந்து விட்டாலோ அல்லது தொலைந்து விட்டாலோ, சவுதியில் அந்த மாத்திரைகளை மருத்துவரிடம் கூறி மாற்று மாத்திரையோ அல்லது மருந்தகங்களில் கேட்டு பெற வசதியாக இருக்கும்.
(எல்லா நாடுகளிலும் மூலக்கூறு (chemical or molecule name) மருந்தின் பேர் ஒன்று தான், brand name தான் நாட்டுக்கு நாடு மாறுபடும், ஒரு நாட்டு மருத்துவருக்கு, மற்ற நாட்டில் உள்ள எல்லா brand name களும் தெரிந்து இருக்க வாய்ப்பு குறைவு. மூலக்கூறு பெயர்கள் உலகம் முழுவதும் ஒன்று தான்).
4) சவூதி அரசும் அதன் சுங்கதுரையும், அந்நாட்டு மருந்து கட்டுப்பாட்டு துரையின் அனுமதியில்லாத மற்ற நாட்டு மருந்துகளை, தங்கள் நாட்டின் அனுமதியளிப்பது இல்லையென்றாலும், நீங்கள் உபயோகப்படுத்தும் மருந்துகளை கொண்டு செல்லலாம்.
அனால், அந்த மருந்துகளுக்கு தேவையான டாக்டரின் பரிந்துரைக் கடிதம் (Prescription) என்னும் சீட்டுகளை கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும். அந்த டாக்டர் சீட்டில், உங்கள் பெயர் உங்கள் பாஸ்ப்போர்ட்டில் எப்படி உள்ளதோ, அதே பெயர் அப்படியே, ஸ்பெல்லிங் தவர் இல்லாமல் குறிப்பிடுவது அவசியம். டாக்டர் சீட்டில் பாஸ்போர்ட் நம்பர் பதிவு செய்வது இன்னும் நல்லது.
மிக முக்கியமாக, வலிப்பு நோய் மருந்துகள், தூக்க மாத்திரைகள் மற்றும் மன நல நோய்க்கான மாத்திரைகள் கொண்டு செல்ல நேர்ந்தால், சரியான டாக்டரின் பரிந்துரைக் கடிதம் கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும்.
இதுபோன்ற மாத்திரைகளுக்கு, சீட்டு இல்லாமல் சென்றால், சவூதி சட்டப்படி, சிறைத்தண்டனை வரை தர விதி உண்டு. டாக்டர் சீட்டில் மாத்திரைகளின் எண்ணிக்களையும் பதிவு செய்ய வேண்டும்., இதுபோன்ற மாத்திரைகளின் டாக்டரின் சீட்டுகளில், உங்கள் பெயர் மற்றும் வயதை பாஸ்போர்ட்டில் உள்ளவாறு சரியாக, ஸ்பெல்லிங் தவறில்லாமல் இருப்பது அவசியம்.
5) பொதுவாக ஹஜ்ஜின் போது மக்காவிலும், மதினாவிலும், இந்திய மற்றும் சவுதி அரசின் கீழ் செயல்படும் மருத்துவ மையங்களும் மற்றும் மருந்து கூடங்களும், தேவையான அளவில் உள்ளன.
எனவே, சிறிய சிறிய நோயிகளான சளி, ஜுரம் போன்றவைகளுக்கு மருத்துவம் பெறுவதில், அதற்கான மாத்திரைகளை பெறுவதிலும் சிக்கல் இருக்காது. உங்கள் தேவைக்கேற்ப குறைந்த அளவு, சிறு நோயிகளுக்கான மாத்திரைகளை, மருத்தவ சீட்டுகளுடன் எடுத்து செல்லலாம்.
6) குறிப்பாக பெண்கள் பலர், தங்கள் மாதவிடாயை, இயற்கையாக வருவதை தள்ளிப்போடும் மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். காரணம், தங்கள் மாதவிடாய் சுழற்சி, ஹஜ்ஜு கீரிகை செய்யும் காலத்தில் வந்து, தாங்கள் அமல் செய்வது கெட்டு போகிவிடுமோ என்ற எண்ணம். மாதவிடாவின் பொது, தொழுகை மற்றும் கஹ்பாவை தவாப் சுற்றுவது, மஸ்ஜித் ஹரம்க்குள் நுழைவது தவிர, மற்ற எல்லா ஹஜ்ஜின் செயல்களும் ஆகுமானது தான். அதனால், நாற்பது நாளைக்கு மாதவிடாய் வராமல் மருந்துகள் மூலம் தள்ளிப்போவது நல்லது இல்லை.
பொதுவாக, இந்த மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன் சார்ந்தவை உள்ளதால், இந்த மாத்திரைகளை உட்கொள்ளும் போது, குமட்டல், வாந்தி, உடல் கனத்து போதல் போன்ற சில கஷ்டங்கள் வரலாம். இந்த மருந்துகள் எடுக்கும் போது, ஒரு வகையான மனரீதியான மாற்றங்கள் ஏற்பட்டு அமல் செய்வதை பாதிக்கலாம்.
சில பெண்களுக்கு மார்பகங்கள் அதிகம் கனத்தும் வலியுடன் காணப்படும். (ஓர் ஆய்வின் படி தேர்வுக்காக தங்களின் மாத்தவிடாயை தள்ளிப்போட, ஹார்மோன் சார்ந்த மாத்திரை போட்ட மாணவிகளின், தேர்வு முடிவு,ஹார்மோன் சார்ந்த மாத்திரை போடாத மாணவிகளின் முடிவைவிட மோசமாக இருந்தது. காரணம், மனநிலை மாற்றம்).
ஒருவேளை, மாதவிடாயை தள்ளி போடும் மாத்திரையை தொடர்ந்து போடாமல் போகும் நிலை ஏற்பட்டாலோ அல்லது மாத்திரை தொலைந்து போனாலோ அல்லது மாத்திரை போட சில நாட்கள் மறந்தாலோ, மாத்திரை நிறுத்திய சில நாளில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டு, அமல்களை அதிகம் பாதிக்கலாம். இந்த நிலைமை 1997 ஆண்டு ஹஜ்ஜின் போது, தீ விபத்து ஏற்பட்டு, பல பெண்கள் தங்கள் மாத்திரைகளை இழந்து விட்ட பின் , அதிக பாதிப்புக்கு உள்ளானார்கள்.
எனவே, இயற்கையாக மாதவிடாவை தள்ளி போடும் மாத்திரைகளை தவிர்ப்பது தான் எல்ல நிலையிலும் நல்லது. அல்லாஹ் எந்த ஆத்மாவையும் அவர்களின் சக்திக்கு மீறி சோதனை தர மாட்டான். (குறிப்பு: அதிக நாட்கள் இந்த மாத்திரைகளை உட்கொண்டால், மார்பகம் மற்றும் சினைப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்.)
7) நீரழிவு நோய் உள்ளவர்கள், முடிந்தால் தங்கள் சுகர் அளவை அடிக்கடி சுயமாக சோதித்து கொள்ள, பாக்கெட்glucometer கொண்டு செல்லலாம் . அனால், அதிக battery உள்ளதால், அதை காபின் லக்கேஜுக்குள் விமான நிறுவனம் அனுமதி அளிப்பது இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
8) ஹஜ் செல்லும் போது, பலர்க்கு தங்களை அறியாமலே, சிறிது மன படபடப்பு ஏற்படுவது உண்டு.
*காரணம்*
தங்கள் சொந்தங்களை சொந்த ஊரில் விட்டு பிரிந்து வந்தது,
கடந்த காலங்களில் ஹஜ்ஜின் போது ஏற்பட்ட தீ விபத்து, கூட்ட செரிசல் விபத்தால் உயிரிழப்பு போன்ற சம்பவங்களை நினைத்து, இவ்வளவு செலவழித்து வந்திருக்கும் தங்களின் புனித பயணம் வெற்றியாக முடியுமோ என்ற மனநிலை,
தங்கள் ஊரில் விட்டு வந்த தங்களின் வியாபாரம் என்ன ஆகுமோ என்ற மனநிலை,
முற்றிலும் வித்தியாசாமான சூழ்நிலையில் 40 நாள் இருப்பது,
புதிதான விமான பயணம்,
அளவுக்கு அதிகமான கூட்டத்தை முதன் முதலில் சந்திப்பது,
அதிகம் அதிகம் உம்ரா மற்றும் தவாப் செய்ய வேண்டும் என்ற படபடப்பு,
ஹஜரல் அஸ்வத் கல்லை அடிக்கடி முத்தமிடும் வாய்ப்பு கிடைக்குமோ என்ற ஏக்கம் போன்றவற்றால், மனநிலையில் சிறிது படபடப்பு ஏற்படுவது இயற்கை என்றாலும், ஊரில் இருக்கும்போதே இதையெல்லாம் சமாளிக்க கூடிய மனநிலையை கொண்டு வந்து விட்டால், மன சார்ந்த பிரச்சினையில் இருந்து விடுபடலாம். ஏற்கனவே, மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஹஜ்ஜின்போது மேற்க்கூறிய காரணங்களினால் தங்களின் மன நோய் அதிகமாக வாய்ப்பு அதிகம் உள்ளதால், ஊரில் இருக்கும்போதே தங்கள் மன நல மருத்துவரை கலந்து ஆலோசித்து, தான் ஹஜ் செல்ல உள்ளதை விளக்கி, அதற்க்கு ஏற்றார் போல் மாத்திரைகளை மாற்றி எடுப்பது நல்லது.
8) கற்பமாக உள்ள பெண்கள் தங்கள் மகப்பேறு மருத்துவரை கலந்து ஆலோசித்து, ஹஜ் செல்வதை பற்றி முடிவு எடுப்பது நல்லது. முடிந்த வரை பிரசவம் ஆகும் வரை ஹஜ்ஜை தவிர்ப்பது நல்லது. இதில் அரசு விதிகள், மற்றும் விமான நிறுவனங்களின் விதிகளை பின்பற்ற வேண்டும். தான் கருவுற்று இருப்பதை மறைத்து ஹஜ் செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஹஜ்ஜுக்கு விண்ணப்பித்த பின் கருவுற்று இருந்தால், கருவுற்ற தகுந்த ஆதாரத்துடன் விண்ணப்பித்து, ஹஜ் செல்வதை தவிர்த்து, ஏற்கனவே கட்டிய பணத்தை வாபஸ் பெற வழி உண்டு.
சவூதி அரசின் சுகாதார அமைச்சகம், ஹஜ்ஜின் போது மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடை முறைகளை அறிவித்து உள்ளது. அது பற்றி சில குறிப்புகள். இது சென்ற வருடதிற்கான வழிமுறை.
மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி : (YELLOW FEVER VACCINE) இது மஞ்சள் காமாலை என்னும்JAUNDICE அல்ல.
சர்வதேச சுகாதார விதிகள் ஏற்ப மஞ்சள் காய்ச்சல் பரவுவதை தடுக்க, (நோய் உள்ள நாடுகளின் பட்டியலில்) ஆபத்து நாடுகளில் இருந்து வரும் அணைத்து பயணிகள், குறைந்தது 10 நாட்கள் முன்பு, பத்து வருடங்களுக்கு மிகாமல் உள்ள, மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இந்த லிஸ்டில் இந்திய இடம் பெற வில்லை. எனவே, இது இந்தியர்களுக்கு பொருந்தாது. இந்த லிஸ்டில் உள்ள நாடுகளில் இருந்து வரும் இந்தியர்களுக்கு இது பொருந்தும்.
Meningococcal மூளைக்காய்ச்சல் தடுப்பூசி
மூளைக்காய்ச்சல் எதிராக தடுப்பூசி, சவுதிக்கு வருடத்திற்கு, 3 ஆண்டுகளுக்கு மேற்பட்டால் மற்றும் 10 நாட்கள் குறைவு இல்லாமல் meningococcal quadruvalent தடுப்பூசி போட்ட சான்றிதழ் (ACYW 135) அவசியம்.
2 வயதுக்கு மேல் குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்கள் meningococcal quadruvalent (ACYW 135) தடுப்பூசி1 டோஸ் கொடுக்கப்பட வேண்டும்.
சவூதி உள்நாட்டு ஹஜ் பயணிகள் meningococcal quadruvalent (ACYW 135) தடுப்பூசி உடன் தேவை:
கடந்த3 ஆண்டுகளில் தடுப்பூசி போடாத மக்கா, மதீனா குடிமக்கள் (Citizen) மற்றும் குடியிருப்பாளர்கள் (resident).
ஹஜ் மேற்கொள்ளும் அணைத்து சவூதி குடிமக்கள்(citizen) மற்றும் குடியிருப்பாளர்கள் (resident).
கடந்த3 ஆண்டுகளில் தடுப்பூசி போடப்படாத அணைத்து ஹஜ் பணியாளர்கள்.
இளம்பிள்ளை வாதம் : (Oral polio drops ) போலயோ சொட்டு மருந்து
ஆப்கானிஸ்தான், இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயக குடியரசு, சாட், அங்கோலா மற்றும் சூடானில் இருந்து வரும் அணைத்து ஹஜ் பயணிகள், எல்லா வயதினர்களும் (முன்பு டிரோப்ஸ் போட்டு இருந்தாலும் சரியே). சவூதி அரேபியாவுக்கு கிளம்ப 6 வாரங்களுக்கு முன்பு 1 டோஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் சவூதி அரேபியா வந்து அடைந்ததும்,
அதன் எல்லையில் வைத்து இன்னொரு dose சவூதி அரசு வழங்கும், (இளம்பிள்ளை வாத சொட்டு மருந்து குறித்து, இந்த வருட சவூதி அரசின் பரிந்துரை இன்னும் தெரியவில்லை)
Seasonal ஃப்ளு பருவகால ஃப்ளு தடுப்பூசி
அதிக ஃப்ளு வருவதற்கு ரிஸ்க் உள்ள ஹஜ் யாத்ரீகர்கள் (எ.கா.முதியோர், நாள்பட்ட நுரையீரல் அல்லது இதய நோய் அல்லது கல்லீரல் நோய் அல்லது சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களுக்கு).
ஹஜ்ஜுக்கு சவூதி வருமுன் தங்கள் நாட்டில் ஒரு டோஸ் ஃப்ளு தடுப்பூசி போடா, சவூதி அரேபிய சுகாதார அமைச்சகம், பரிந்து உரைக்கிறது. இது ஒரு பரிந்துரையே ஒழிய, கண்டிப்பான சசரத்து அல்ல.
(இந்த ஃப்ளு தடுப்பூசியை பன்றி காய்ச்சல் (H1N1) தடுப்பு ஊசியும் அடக்கம்).
ஹஜ்ஜுக்கு செல்லும் முன் நீங்கள் தயார் படுத்துவதில் மிக முக்கியமானது இறை அச்சமே. அல்லாஹ் எல்லோரின் ஹஜ் கிரியைகள் முழுவதுமாக நிறைவேறி, ஏற்கப்பட்ட ஹஜ்ஜாக ஆக்க அருள் புரியட்டும், ஹஜ் செல்வோர் எனக்காகவும், இந்த ஜமாஅத்திற்காகவும் மற்றும் உலக முஸ்லிம்களுக்காகவும் , இம்மை மறுமை வெற்றிக்காக துஆ செய்யவும்.
*🕋🕋🕋ஹாஜிகள் நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா❓🕋🕋🕋*
ஹாஜி நபியின் கப்ரை ஸிராத் செய்ய வேண்டுமா?
இல்லை.
ஹஜ் என்ற கடமைக்கும் நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்பதற்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமை நிறைவேற்றி மதீனா செல்லாமல் வந்துவிட்டால் நிச்சயம் அவரின் ஹஜ் நிறைவேறும்.
யார் ஹஜ் செய்து என்னை (என் கப்ரை) சந்திக்கவில்லையோ அவர் என்னை வெறுத்தவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),
நூல் : அல்காமில் ஃபில் லுஅஃபா – இப்னு அதீ, பாகம் :7, பக்கம் : 14)
இச்செய்தியில் இடம்பெறும் அந்நுஃமான் பின் ஷிப்ல் என்பவர் நபிமொழிகளை இட்டுக்கட்டி சொல்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்களால் குற்றம் சுமத்தப்பட்டவர். எனவே நபியின் கப்ரை ஜியாரத் செய்வது கடமையோ கட்டாயமோ அல்ல.
*🕋🕋🕋ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா❓🕋🕋🕋*
ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?
செய்யலாம்.
ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான ஹஜ்ஜை முதலில் செய்ய வேண்டும் என்றும் ஹஜ் கடமையான ஒருவர் உம்ராச் செய்யும் போது அதனால் அடுத்து அவரால் ஹஜ் செய்ய முடியாமல் போகலாம் என்றும் கூறுகின்றனர்.
ஹதீஸ்களை ஆராய்ந்தால் இந்த வாதங்கள் தவறானைவை என்பதைத் தெளிவாக அறியலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதி காலத்தில் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்தார்கள். அந்த ஹஜ்ஜுக்கு முன்னால் நான்கு முறை உம்ரா செய்துள்ளார்கள்
1780حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ قَالَ سَأَلْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ رَدُّوهُ وَمِنْ الْقَابِلِ عُمْرَةَ الْحُدَيْبِيَةِ وَعُمْرَةً فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ حَدَّثَنَا هُدْبَةُ حَدَّثَنَا هَمَّامٌ وَقَالَ اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ فِي ذِي الْقَعْدَةِ إِلَّا الَّتِي اعْتَمَرَ مَعَ حَجَّتِهِ عُمْرَتَهُ مِنْ الْحُدَيْبِيَةِ وَمِنْ الْعَامِ الْمُقْبِلِ وَمِنْ الْجِعْرَانَةِ حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ رواه البخاري
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில், இணைவைப்போர் (ஹுதைபியாவில் அவர்களைத்) தடுத்து விட்ட போது உம்ராவுக்காக சென்றிருந்தார்கள்; பிறகு, அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபியாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் ஹுனைன் போரில் கிடைத்த படைக்கலன்களைப் பங்கிட்ட இடமான “ஜிஇர்ரானா’விலிருந்து உம்ராச் செய்தார்கள்; அடுத்து, ஹஜ்ஜுடன் ஒரு உம்ராச் செய்தார்கள்.
நூல்: புகாரி (1779)
ஹஜ்ஜுக்கு முன் உம்ராச் செய்வது கூடாதென்றால் இந்த உம்ராக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜுக்கு முன் செய்திருக்க மாட்டார்கள்.
மக்கா எதிரிகளின் கைவசம் இருந்த ஆரம்ப நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் முதன் முதலில் உம்ராச் செய்வதற்காகவே மக்காவிற்குப் புறப்பட்டு வந்தார்கள். நபியவர்களுடன் வந்த நபித்தோழர்கள் யாரும் இதற்கு முன் ஹஜ் செய்திருக்கவில்லை
1812حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَخْبَرَنَا أَبُو بَدْرٍ شُجَاعُ بْنُ الْوَلِيدِ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ الْعُمَرِيِّ قَالَ وَحَدَّثَ نَافِعٌ أَنَّ عَبْدَ اللَّهِ وَسَالِمًا كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَمِرِينَ فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ فَنَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُدْنَهُ وَحَلَقَ رَأْسَهُ رواه البخاري
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் உம்ராச் செய்வதற்காகப் புறப்பட்டோம்; குறைஷிக் காபிர்கள் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டார்கள்; ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து) விட்டுத் தம் தலையை மழித்துக் கொண்டார்கள்! (இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள்!)
நூல் : புகாரி (1812)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் ஹஜ் செய்யப் புறப்பட்டார்கள். நபித்தோழர்கள் ஹஜ்ஜை நாடியே இஹ்ராம் அணிந்து புறப்பட்டனர். அவர்கள் ஹஜ்ஜுக்கு அணிந்த இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என நபியவர்கள் உத்தரவிட்டார்கள். ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்யக் கூடாது என்றால் இவ்வாறு நபியவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள்.
3832حَدَّثَنَا مُسْلِمٌ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ الْفُجُورِ فِي الْأَرْضِ وَكَانُوا يُسَمُّونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا بَرَا الدَّبَرْ وَعَفَا الْأَثَرْ حَلَّتْ الْعُمْرَةُ لِمَنْ اعْتَمَرْ قَالَ فَقَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ رَابِعَةً مُهِلِّينَ بِالْحَجِّ وَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْحِلِّ قَالَ الْحِلُّ كُلُّهُ رواه البخاري
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : “ஹஜ்ஜுடைய மாதங்களில் (ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்: அம்மாதங்களில்) உம்ராச் செய்வது பூமியில் நடக்கும் பாவகரமான செயல்களில் ஒன்று’ என (அறியாமைக்கால) மக்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். (போர் செய்வது தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து வந்ததால் சலிப்புற்று முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்கு மாற்றி) ஸஃபருக்கு முஹர்ரம் என்று பெயர் சூட்டி வந்தார்கள். (ஹஜ் பிரயாணத்தில்) ஒட்டகங்கüன் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து (ஸஃபர் மாதமும் கழிந்து) விட்டால் உம்ரா செய்ய நாடுபவருக்கு உம்ராச் செய்ய அனுமதியுண்டு” என்று கூறி வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துகொண்டு (மதீனாவிலிருந்து) மக்கா நகருக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தம் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?” எனக் கேட்டனர். அதற்கு, “(இஹ்ராம் அணிந்தவருக்கு விலக்கப்பட்டிருந்த) அனைத்து செயல்களும் அனுமதிக்கப்படும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
நூல்: புகாரி (3832)
கடமையை நிறைவேற்றுவதற்கு முன் உபரியான வணக்கத்தில் ஈடுபடக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. ஒரு வணக்கத்தைக் காட்டி இன்னொரு வணக்கத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பது தான் இஸ்லாத்தில் கூடாது. ஹஜ்ஜுக்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று கூறுபவர்கள் இதைத் தான் செய்து கொண்டிருக்கின்றனர்
உம்ராச் செய்தால் அவசியம் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கூற்று குர்ஆனுக்கு எதிராக உள்ளது. சக்தியுள்ளவர்கள் மீது தான் ஹஜ் கடமை என்று குர்ஆன் கூறுகின்றது
ஒருவர் உம்ராச் செய்யும் போது செல்வந்தராக இருக்கின்றார். இதன் பிறகு அவர் ஏழையாக மாறினால் இவர் ஹஜ் செய்ய வேண்டுமா? இவருக்கு ஹஜ் கடமையில்லை என்றே குர்ஆன் கூறுகின்றது.
அல்லது ஒருவர் தனது பொருளாதாரத்தில் ஏழை ஒருவரை உம்ராவுக்கு அழைத்துச் செல்கிறார். உம்ரா செய்து விட்ட இந்த ஏழை அடுத்து ஹஜ்ஜை நிறைவேற்றியாக வேண்டும் என்றால் இது நடைமுறைக்கு சாத்தியமில்லை. மனிதனின் சக்திக்கு மீறிய சட்டமாகும். எனவே தான் குர்ஆன் இப்படிப்பட்ட சட்டத்தைக் கூறவில்லை. ஆகையால் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை.
*🌐🌐🐏🐏குறையுள்ள பிராணியை குர்பானி கொடுக்கலாமா❓🦌🦌🌐🌐*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 2*
No comments:
Post a Comment