#அறுக்கும்_கத்தியை_முன்னமே_கூர்மை_செய்து_கொள்வீர்!
ஒருவர் ஆட்டை அறுப்பதற்காக அதைப் படுக்க வைத்துக் கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்) #இப்பிராணியைப்_பலமுறை_கொல்வதை_நீ_நாடுகிறாயா? இதை நீ படுக்கவைப்பதற்கு முன்பாகவே உன் கத்தியை நீ கூர்மைப்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : ஹாகிம் பாகம் : 4 பக்கம் : 257
:- பிராணியைப் படுக்க வைப்பதற்கு முன்பாகவே கத்தியைக் கூர்மைபடுத்திக் கொள்ள வேண்டும். அதைப் படுக்க வைத்துக் கொண்டு அதன் கண்ணெதிரே கத்தியைத் தீட்டுவதினால் பிராணி மிரள ஆரம்பிக்கும். இவ்வாறு செய்வது பிராணியைத் துன்புறுத்துவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
No comments:
Post a Comment