*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🍃அமல்களை*
*அதிகரிப்போம்[ 04 ]🍃*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*அமல்களும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖2⃣6⃣*
*☄உபரியான*
*வணக்கங்கள்*
*புரிவோம் [ 11 ]*
*☄இரவுத்*
*தொழுகையின்*
*சட்டங்கள் { 01 }*
*🏮🍂இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஒருவர் இரவுத் தொழுகையை முடித்துக் கொள்ள நாடினால் ஒற்றைப் படை எண்ணிக்கை தொழுது அத்தொழுகையை முடிக்க வேண்டும்.*
_*🍃ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகையைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். உங்களில் எவரும் ஸுப்ஹுத் தொழுகையைப் பற்றி அஞ்சினால் அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அவர் (முன்னர்) தொழுதவற்றை அது ஒற்றையாக ஆக்கி விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*இப்னு உமர் (ரலி)*
*📚 நூல்: புகாரீ 990 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄இரவுத்*
*தொழுகையின் நேரம்*
*🏮🍂இஷாத் தொழுகை முடிந்ததிலிருந்து பஜ்ர் நேரம் வரும் வரை இத்தொழுகையைத் தொழலாம். நபி (ஸல்) அவர்கள் அனைத்து நேரங்களிலும் தொழுதுள்ளார்கள்.*
_*🍃நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*ஆயிஷா (ரலி)*
*📚நூல்: முஸ்லிம் 1216📚*
_*🍃இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*இப்னுஅப்பாஸ் (ரலி)*
*📚 நூல்: புகாரீ 7452 📚*
_*🍃நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)*_
*🎙அறிவிப்பவர்:*
*இப்னு அப்பாஸ் (ரலி)*
*📚 நூல்: முஸ்லிம் 376 📚*
_*🍃நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)*_
*🎙அறிவிப்பவர்:*
*இப்னு அப்பாஸ் (ரலி)*
*📚 நூல்: புகாரீ 183 📚*
_*🍃நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது.*_
*🎙அறிவிப்பவர்:*
*ஆயிஷா (ரலி)*
*📚 நூல்: புகாரீ 996 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment