*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🍃அமல்களை*
*அதிகரிப்போம்[ 06 ]🍃*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*அமல்களும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖3⃣9⃣*
*☄ இறைவனை நினைவு (திக்ர்)*
*செய்வதன் சிறப்புகள் [ 07 ]*
*☄சோம்பலைப் போக்கி*
*சுறுசுறுப்பைத் தரும் திக்ர்*
1142- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ : أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلاَثَ عُقَدٍ يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ وَإِلاَّ أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلاَنَ*
_*🍃மனிதன் உறங்கும் போது ஷைத்தான் அவன் தலை மாட்டில் அமர்ந்து இன்னும் இரவு இருக்கிறது, தூங்கு எனக் கூறி மூன்று முடிச்சுக்கள் போடுகிறான். மனிதன் விழித்து விட்டால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவன் உளூச் செய்யும் போது இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவன் தொழ ஆரம்பித்ததும் மூன்றாவது முடிச்சும் அவிழ்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர் :*
*அபூஹுரைரா (ரலி),*
*📚 நூல் : புகாரி 1142 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄ஆயிரம் நன்மைகள்☄*
7027 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا مَرْوَانُ وَعَلِىُّ بْنُ مُسْهِرٍ عَنْ مُوسَى الْجُهَنِىِّ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا مُوسَى الْجُهَنِىُّ *عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ حَدَّثَنِى أَبِى قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقَالَ « أَيَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَكْسِبَ كُلَّ يَوْمٍ أَلْفَ حَسَنَةٍ ». فَسَأَلَهُ سَائِلٌ مِنْ جُلَسَائِهِ كَيْفَ يَكْسِبُ أَحَدُنَا أَلْفَ حَسَنَةٍ قَالَ « يُسَبِّحُ مِائَةَ تَسْبِيحَةٍ فَيُكْتَبُ لَهُ أَلْفُ حَسَنَةٍ أَوْ يُحَطُّ عَنْهُ أَلْفُ خَطِيئَةٍ*
_*🍃நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்தோம். அப்போது. “உங்களில் ஒருவர் ஒவ்வொரு நாளும் ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியாமல் இருப்பாரா?” என்று கேட்டார்கள். எங்களில் ஒருவர் எப்படி ஆயிரம் நன்மைகளைச் சம்பாதிக்க முடியும்? என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள். “ஒரு நாளைக்கு அவர் நூறு தஸ்பீஹ் செய்கின்ற போது அவருக்கு ஆயிரம் நன்மைகள் பதியப் படுகின்றன அல்லது ஆயிரம் பாவங்கள் அழிக்கப் படுகின்றன” என்று பதிலளித்தார்கள்.*_
*🎙அறிவிப்பவர் :*
*ஸஅத் பின்*
*அபீவக்காஸ் (ரலி),*
*📚நூல் : முஸ்லிம் 4866📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄பாவத்திற்குப் பரிகாரம்☄*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து எழுந்திருக்க விரும்பினால் கடைசியாக, “சுப்ஹானக்கல்லாஹும்ம வபிஹம்திக்க அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தக்ஃபிருக்க வஅதூபு இலைக்க (யா அல்லாஹ்! நீ தூய்மையானவன். உன் புகழைக்க கொண்டு உன்னைப் புகழ்கின்றேன். உன்னைத் தவிர வேறெந்த கடவுளும் இல்லை என்று தெரிவிக்கின்றேன். உன்னிடத்தில் மன்னிப்பு தேடி உன்னிடமே திரும்புகின்றேன்)” என்று சொல்பவர்களாக இருந்தனர். அப்போது ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கடந்த காலத்தில் சொல்லாத வார்த்தையை சொல்கின்றீர்களே?” என்று கேட்ட போது, “அது சபையில் ஏற்பட்டவைகளுக்குப் பரிகாரமாகும்” என்று பதிலளித்தார்கள்.*_
*🎙அறிவிப்பவர் :*
*அபூபர்ஸா அல்*
*அஸ்லமி (ரலி),*
*📚 நூல் : அபூதாவூத் 4217 📚*
*🏮🍂ஒவ்வவொரு நேரமும் இறைவனை திக்ர் செய்து, இறைவனின் மன்னிப்பைப் பெற்று, சுவனத்திற்கு செல்லக்கூடிய நன்மக்களாக, அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment