பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, July 1, 2019

அமல்களை*அதிகரிப்போம் - 17

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥அமல்களை*
                  *அதிகரிப்போம் [ 01 ]🔥*

*🍃கொள்கை மட்டும் போதாது*
                                    ⤵
                *அமல்களும் வேண்டும்*

            *✍🏻..... தொடர் ➖1⃣7⃣*

*☄உபரியான*
                *வணக்கங்கள்*
                            *புரிவோம் [ 02 ]*

*☄சுன்னதான*
              *தொழுகையின்*
                           *சிறப்புகள் { 01 }*

*☄குறைபாடுகளை*
          *சரிசெய்யும் நஃபில்கள்*

*🏮🍂கடமையான வணக்கங்களை நிறைவேற்றும் போது மனிதர்கள் என்ற முறையில் குறைபாடுகள் ஏற்படலாம். இந்தக் குறைபாடுகள் அல்லாஹ்விடத்தில் நம்மைக் குற்றவாளிகளாக ஆக்கி விடக்கூடாது.* எனவே கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளுக்கு ஒரு பரிகாரம் தேவைப்படுகிறது. *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த வழியில் உபரியான வணக்கங்கள் புரிவது கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை ஈடுசெய்வதாக அமைந்துள்ளது.*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: நிச்சயமாக ஓர் அடியான் மறுமையில் முதன் முதலில் தொழுகையைப் பற்றித் தான் விசாரிக்கப்படுவான். அவனது தொழுகை நிறைவானதாகக் காணப்பட்டால் அவனது தொழுகை நிறைவானது என்று எழுதப்படும். அவனது தொழுகையில் குறை இருந்தால் அல்லாஹ் மலக்குகளை நோக்கி, “என்னுடைய அடியானுக்கு உபரியான வணக்கங்கள் இருக்கின்றனவா என்று பார்த்து அவனுடைய கடமையான தொழுகையில் குறைவானதை நிறைவாக்குங்கள். பிறகு ஸக்காத்தைப் பாருங்கள். மற்ற வணக்கங்களையும் இதே கணக்கின் அடிப்படையில் பார்த்து நிறைவாக்குங்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான்.*_

*🎙அறி : தமீமுத் தாரி (ரலி),*

*📚 நூல் : தாரமீ

*🏮🍂கடமையான வணக்கங்களில் ஏற்படும் குறைகளை உபரியான வணக்கங்கள் நீக்கி விடுவதுடன் இறைவனிடத்தில் நெருக்கத்தை ஏற்படுத்துபவையாகவும் அமைந்துள்ளன.* எனவே கடமையான வணக்கத்தை நிறைவேற்றி விட்டோம் என்று அலட்சியமாக இருந்து விடாமல் *உபரியான வணக்கங்களையும் நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளைப் பெற்றவர்களாக நாம் ஆக வேண்டும்.*

*🏮🍂இஸ்லாம் கூறும் வணக்க வழிபாடுகளில் முதன்மையானது தொழுகை என்பதை அறிவோம். அந்த அடிப்படையில் அன்றாடம் ஐவேளை தொழுவது ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாகும்.* இவை தவிர உபரியான தொழுகைகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄சுன்னத்தான தொழுகைகள்*

*🏮🍂அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒவ்வொரு கடமையான தொழுகைக்கும் முன்போ, அல்லது பின்போ வழமையாக சுன்னத் தொழுகைகளை தொழுது வந்துள்ளனர். அந்தத் தொழுகைகளைப் பற்றியும் அவற்றின் சிறப்புகளையும் பார்ப்போம்.*

1727 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا أَبُو خَالِدٍ – يَعْنِى سُلَيْمَانَ بْنَ حَيَّانَ – عَنْ دَاوُدَ بْنِ أَبِى هِنْدٍ عَنِ النُّعْمَانِ بْنِ سَالِمٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ قَالَ حَدَّثَنِى عَنْبَسَةُ بْنُ أَبِى سُفْيَانَ فِى مَرَضِهِ الَّذِى مَاتَ فِيهِ بِحَدِيثٍ يُتَسَارُّ إِلَيْهِ *قَالَ سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ مَنْ صَلَّى اثْنَتَىْ عَشْرَةَ رَكْعَةً فِى يَوْمٍ وَلَيْلَةٍ بُنِىَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِى الْجَنَّةِ*

_*🍃யார் இரவிலும், பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.*_

*🎙அறி : உம்மு ஹபீபா (ரலி),*

    *📚 நூல் : முஸ்லிம் 📚*

1801- أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ، قَالَ : أَنْبَأَنَا أَبُو الأَسْوَدِ ، قَالَ : حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ ، عَنْ ابْنِ عَجْلاَنَ ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ ، *عَنْ أُمِّ حَبِيبَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ اثْنَتَا عَشْرَةَ رَكْعَةً مَنْ صَلاَّهُنَّ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ، أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْعَصْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ*

_*🍃லுஹருக்கு முன் நான்கு ரக்அத்துக்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள் ஆகிய சுன்னத்தான பன்னிரண்டு ரக்அத்துகளை யார் தொழுகின்றார்களோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறி : ஆயிஷா (ரலி) ,*

*📚நூல் : திர்மிதீ,*
                        *நஸயீ,*
                              *இப்னுமாஜா*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment