பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 13, 2019

அமல்களை - 51

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃அமல்களை*
                  *அதிகரிப்போம்[ 07 ]🍃*

*🍃கொள்கை மட்டும் போதாது*
                                    ⤵
                *அமல்களும் வேண்டும்*

            *✍🏻..... தொடர் ➖5⃣1⃣*

*🔥 அதிக நன்மைப்*
            *பெற்று  தரும்*
                  *சின்னஞ் சிறிய*
                       *அமல்கள் [ 04 ]*

*☄ஸஹாபாக்களின்*
                        *ஆர்வம் [ 02 ]*

*🏮🍂நபிதோழர்கள் நன்மைகளை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்கள் தர்மம் செய்யமுடியாவிட்டாலும் பணக்கார ஸஹாபாக்களை நன்மையில் முந்த வேண்டும் என்பதற்காக நன்மை செய்வதை பற்றி நபி (ஸல்) அவர்களிடத்தில் அதிகமாக கேட்பார்கள்.*

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُرَاوِحٍ، *عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الْعَمَلِ أَفْضَلُ، قَالَ ‏‏ إِيمَانٌ بِاللَّهِ، وَجِهَادٌ فِي سَبِيلِهِ ‏"‏‏.‏ قُلْتُ فَأَىُّ الرِّقَابِ أَفْضَلُ قَالَ ‏"‏ أَغْلاَهَا ثَمَنًا، وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا ‏"‏‏.‏ قُلْتُ فَإِنْ لَمْ أَفْعَلْ‏.‏ قَالَ ‏"‏ تُعِينُ صَانِعًا أَوْ تَصْنَعُ لأَخْرَقَ ‏"‏‏.‏ قَالَ فَإِنْ لَمْ أَفْعَلْ‏.‏ قَالَ ‏"‏ تَدَعُ النَّاسَ مِنَ الشَّرِّ، فَإِنَّهَا صَدَقَةٌ تَصَدَّقُ بِهَا عَلَى نَفْسِكَ ‏"‏‏.‏"*

_*🍃நான் நபி (ஸல்) அவர்களிடம், ''எந்த நற்செயல் சிறந்தது❓'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ்வின் மீது ஈமான் (நம்பிக்கை) கொள்வதும் அவனது பாதையில் ஜிஹாத் செய்வதும் (போராடு வதும்) ஆகும்'' என்று பதிலளித்தார்கள். நான், ''எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அவர்களால் அதிக விலை கொண்ட அடிமையும் தன் எஜமானர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)'' என்று பதிலளித்தார்கள். நான், ''என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லையென்றால்?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''பலவீனருக்கு உதவி செய்; அல்லது உழைத்துச் சம்பாதிக்க இயலாதவனுக்கு நன்மை செய்'' என்று கூறினார்கள். நான், ''இதுவும் என்னால் இயலவில்லை யென்றால்....?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்து கொள்ளும் ஒரு தர்மம் ஆகும்'' என்று கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பாளர் :*
                       *அபூதர் (ரலி)*
            *📚 நூல் : புகாரி 2518 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment