*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥அமல்களை*
*அதிகரிப்போம் [ 01 ]🔥*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*தொழுகையும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖0⃣4⃣*
*☄தொழுகையின்*
*முக்கியத்துவம் [ 02 ]*
*🏮🍂எல்லா விஷயங்களிலும் நமக்கு அழகிய முன்மாதிரியாக விளங்கும் நபி (ஸல்) அவர்கள் தொழுகை விஷயத்திலும் சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள். மரண வேளையில் கூட தொழுகையை அவர்கள் விட்டு விடவில்லை.*
*🏮🍂அப்பாஸ் (ரலி) மற்றும் அலீ (ரலி) ஆகிய இருவரின் மீது சாய்ந்து கொண்டு தரையில் காலை ஊன்ற முடியாமல் அவர்களது பாதம் தரையில் கோடு போட்டுக் கொண்டே சென்றது. இவ்வளவு சிரமமான நிலையிலும் இறைவனுக்குச் செய்ய வேண்டிய தொழுகையை நிறைவேற்றினார்கள்.* தான் இல்லாவிட்டாலும் தன் தோழர்கள் தொழுது கொண்டிருப்பதைப் பார்த்து அளவில்லா மகிழ்ச்சி கொண்டார்கள்.
_*🍃நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “நபி (ஸல்) அவர்கள் நோயுற்ற போது நடந்த நிகழ்ச்சியை எனக்குச் சொல்வீர்களா❓” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூறியதாவது.*_
_*நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையான போது, “மக்கள் தொழுது விட்டார்களா❓” என்று கேட்டார்கள். “இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறார்கள்” என்று கூறினோம். அப்போது “பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம். அதில் அவர்கள் குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, “மக்கள் தொழுது விட்டார்களா❓” என்று கேட்டார்கள். “இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொன்னோம். அப்போது, “பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்” என்றார்கள். அவ்வாறே தண்ணீர் வைத்தோம். அவர்கள் உட்கார்ந்து குளித்து விட்டு எழுந்திருக்க முயன்றார்கள். அப்போது அவர்கள் மயங்கி விழுந்து விட்டார்கள். பின்னர் அவர்களின் மயக்கம் தெளிந்த போது, “மக்கள் தொழுது விட்டார்களா❓” என்று கேட்டார்கள். “இல்லை, அவர்கள் உங்களை எதிர்பார்த்து இருக்கிறார்கள்” என்று சொன்னோம். அப்போது “பாத்திரத்தில் எனக்குத் தண்ணீர் வையுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் தண்ணீர் வைத்தோம்.*_
*🎙அறிவிப்பவர்:*
*உபைதுல்லாஹ்*
*📚 நூல்: புகாரி 687 📚*
ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ اﻟﻴﻤﺎﻥ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﺷﻌﻴﺐ، ﻋﻦ اﻟﺰﻫﺮﻱ، *ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﻋﺒﻴﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻋﺘﺒﺔ، ﺃﻥ ﻋﺎﺋﺸﺔ، ﻗﺎﻟﺖ: ﻟﻤﺎ ﺛﻘﻞ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻭاﺷﺘﺪ ﺑﻪ ﻭﺟﻌﻪ، اﺳﺘﺄﺫﻥ ﺃﺯﻭاﺟﻪ ﻓﻲ ﺃﻥ ﻳﻤﺮﺽ ﻓﻲ ﺑﻴﺘﻲ، ﻓﺄﺫﻥ ﻟﻪ، ﻓﺨﺮﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻴﻦ ﺭﺟﻠﻴﻦ، ﺗﺨﻂ ﺭﺟﻼﻩ ﻓﻲ اﻷﺭﺽ، ﺑﻴﻦ ﻋﺒﺎﺱ ﻭﺭﺟﻞ ﺁﺧﺮ. ﻗﺎﻝ ﻋﺒﻴﺪ اﻟﻠﻪ: ﻓﺄﺧﺒﺮﺕ -[*
_*🍃(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் (தொங்கியவர்களாக) வெளியே வந்தார்கள். (அவர்களின் கால்களை சரியாக ஊன்ற முடியாமையால்) பூமியில் அவர்களது இரு கால்களும் கோடிட்டுக் கொண்டு சென்றன.*_
*🎙அறிவிப்பவர்:*
*ஆயிஷா (ரலி)*
*📚 நூல்: புகாரி 198 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼..தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment