*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥அமல்களை*
*அதிகரிப்போம் [ 01 ]🔥*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*தொழுகையும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖1⃣1⃣*
*☄ஜமாஅத்துடன்*
*தொழுவது அவசியம் [ 03 ]*
*🏮🍂ஜமாஅத் தொழுகைக்குத் தாமதமாக வருவதை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பதுடன் தொழுகைக்காக சீக்கிரம் வந்து காத்திருந்தால் கிடைக்கும் சிறப்புகளைப் பற்றியும் கூறியுள்ளார்கள்.*
حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ : حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنِ الأَعْمَشِ ، عَنْ أَبِي صَالِحٍ ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : صَلاَةُ الْجَمِيعِ تَزِيدُ عَلَى صَلاَتِهِ فِي بَيْتِهِ وَصَلاَتِهِ فِي سُوقِهِ خَمْسًا وَعِشْرِينَ دَرَجَةً فَإِنَّ أَحَدَكُمْ إِذَا تَوَضَّأَ فَأَحْسَنَ وَأَتَى الْمَسْجِدَ لاَ يُرِيدُ إِلاَّ الصَّلاَةَ لَمْ يَخْطُ خُطْوَةً إِلاَّ رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْهُ خَطِيئَةً حَتَّى يَدْخُلَ الْمَسْجِدَ ، وَإِذَا دَخَلَ الْمَسْجِدَ كَانَ فِي صَلاَةٍ مَا كَانَتْ تَحْبِسُهُ وَتُصَلِّي ، يَعْنِي عَلَيْهِ – الْمَلاَئِكَةُ مَا دَامَ فِي مَجْلِسِهِ الَّذِي يُصَلِّي فِيهِ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ مَا لَمْ يُحْدِثْ فِيهِ.*
_*🍃ஒருவர் தமது வீடு அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஜந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது. அதாவது ஒருவர் உளூ செய்து அதை அழகாகவும் செய்து பின்னர் தொழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அல்லாஹ் ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான். ஒரு பாவத்தை அழிக்கிறான். அவர் தொழுமிடத்தில் இருக்கும் போதெல்லாம் அவருக்காக மலக்குகள் பிரார்த்திக்கின்றனர். தங்கள் பிரார்த்தனையில், "இறைவா! நீ இந்த மனிதர் மீது அருள் புரிவாயாக! உனது கருணையை அவருக்கு வழங்குவாயாக! என்றும் கூறுவார்கள். உங்களில் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்திருக்கும் போதெல்லாம் அவர் தொழுகையிலேயே இருக்கிறார்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூஹுரைரா (ரலி)*
*📚 நூல்: புகாரி 647 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄ஜமாஅத்துடன் தொழுதால்*
*பாவங்கள்*
*மன்னிக்கப்படுகின்றன.*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக ஒருவர் உளூவை முழுமையாகச் செய்து விட்டு கடமையான தொழுகைக்காக நடந்து சென்று மக்களுடன் அதைத் தொழுதால் அல்லது ஜமாஅத்துடன் அதைத் தொழுதால் அல்லது பள்ளிவாசலில் அதைத் தொழுதால் அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்.*_
*🎙அறிவிப்பவர்:*
*உஸ்மான் பின்*
*அஃப்பான் (ரலி)*
*📚 நூல்: முஸ்லிம் 341 📚*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் இமாமுடன் தொழக் காத்து இருக்கிறாரோ அவர் (தனியாகத்) தொழுது விட்டு உறங்கி விடுபவரை விட அதிக நன்மை அடைபவராவார்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூ மூஸா (ரலி)*
*📚 நூல்: முஸ்லிம் 1064 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼..தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment