*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🍃அமல்களை*
*அதிகரிப்போம்[ 07 ]🍃*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*அமல்களும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖4⃣5⃣*
*☄திருக்குர்ஆனுடன்*
*தொடர்பு வைப்போம் [ 01 ]*
*🏮🍂இறைவன் இந்த உலகத்தை படைத்து இந்த உலகத்திலே சிறந்த படைப்பாக மனித சமுதாயத்தை உருவாக்கினான். இவ்வுலக வாழ்க்கைக்கு பிறகு மறுமைநாளில் வெற்றி பெறுவதற்காக அந்த இறைவனுக்கு விருப்பமான வழிகாட்டுதல், வாழ்கை முறை என்ன என்பதை அவனுடைய திருமறை குர்ஆன் மூலமும் அவன் தூதர் மூலமும் விளக்கியுள்ளான்.*
*يَاأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ*
_*🍃மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன.*_
*📖(திருக்குஆன் 10:57)📖*
*🏮🍂உங்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய ஷிர்க்கையும் உங்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய தவறான எண்ணங்கள் அனைத்தையும் போக்கும் நிவாரணியாக இந்த குர்ஆன் இருக்கிறது.*
*🏮🍂யாரிடம் இஸ்லாத்திற்கு முரணான கொள்கைகள் உள்ளனவோ அவர் இந்த குர்ஆனை படித்தால்,அதனுடன் தொடர்பு வைத்தால், அதில் உள்ள சட்டங்களை விளங்கினால் அவர்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய தவறான எண்ணங்களும் தவறான கொள்கைகளும் அழிந்து விடும்.*
*🏮🍂முஸ்லிம்கள் இந்த குர்ஆனோடு எப்படி தொடர்பு வைத்திருக்கிறார்கள்❓ ஏதோ ஒரு மந்திர சொல்லைப் போன்று தான் இந்த குர்ஆனை பார்க்கிறார்கள்.* யாரேனும் மரணித்தார்கள் என்றால் மற்ற சமுதாயம் எவ்வாறு திதி, திவஷம் என்று ஒன்றாவது, மூன்றாவது, ஏழாவது நாள்களில் சில சடங்குகளை செய்கிறார்களோ அவ்வாறு *இந்த திருக்குர்ஆனையும் பயன்படுத்தி வருகின்றனர். யாரவது இறந்தால்தான் திருக்குர்ஆனின் நினைப்பே இந்த சமுதாயத்திற்கு வருகிறது.*
*🏮🍂மரணித்தவருக்கு ஓதுவற்குதான் இந்த குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்று எண்ணுகின்றனர். இன்னும் சிலர் வழிகாட்டும் திருக்குர்ஆன் வசனங்களை தண்ணீரில் கரைத்து குடிப்பது. அல்லது தாயத்துகளில் அடைத்துக் கொள்வதுதான் திருக்குர்ஆனோடு அவர்களின் தொடர்பாக உள்ளது.*
*🏮🍂அல்லாஹ் இது போன்று செய்ய கட்டளையிட்டுள்ளானா❓ அல்லது சில வசனங்களை தகட்டில் எழுதி வீட்டில் மாட்டி வைக்க வேண்டும் என்று கட்டளை இட்டுள்ளானா என்றால் அவ்வாறு எங்கும் அல்லாஹ் கூறவில்லை.* திருக்குர்ஆன் மனிதர்களுக்கு வழிகாட்டி என்றுதான் கூறியுள்ளான். உள்ளங்களில் இருக்கக் கூடிய கசடுகளை உங்களுடைய உள்ளங்களில் இருக்கக் கூடிய *தவறான எண்ணங்களை அனைத்தையும் போக்கும் மருந்து என்றுதான் கூறுகிறான்.*
*🏮🍂திருக்குர்ஆனை மனிதர்களின் வழிகாட்டி என்று பார்க்காததால்தான் இன்று பலர் தர்ஹாவிற்கு படைஎடுக்கிறார்கள். தங்கள் தேவைகளை முறையிட இறந்துவிட்ட ஒருவரிடம் செல்பவர்கள் பின்வரும் வசனத்தை சிந்தித்துப் பார்க்கட்டும்.*
*أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُ*
_*🍃தனது அடியாருக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா❓*_
*📖(திருக்குர்ஆன் 39:36)📖*
*🏮🍂அல்லாஹ்வை விட்டு எங்கே போகிறாய்❓ அவனை விட்டு யாரிடம் கேட்கிறாய்❓ அல்லாஹ்விடம் ஏதாவது இல்லையா❓ கொடுக்கமாட்டானா❓ கொடுக்கக் கூடாது என்ற எண்ணம் உள்ளவனா❓ அல்லது அவனிடம் செல்வம் இல்லையா❓ அல்லது கொடுப்பதற்கு சக்தி இல்லையா❓ ஏன் படைத்தவனை விட்டுவிட்டு படைப்பினங்களிடம் செல்கிறீர்கள்❓* என்று பல பொருள்களில் இந்த வசனத்தை அல்லாஹ் அமைத்துள்ளான்.
*🏮🍂உனக்கு அல்லாஹ் போதுமானவன் இல்லையா? என்ற வசனத்தை ஒழுங்காக படித்திருந்தால் தர்ஹாவின் பக்கம்கூட யாரும் செல்ல மாட்டார்கள். திருக்குர்ஆனோடு சரியான தொடர்பை வைத்திருக்க முஸ்லிம்கள் முன்வந்தால் மூட நம்பிக்கைகள், இணைவைப்புகள் அடியோடு மறைந்துவிடும்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
✍🏼...தொடரும்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment