*🍇🍇🍇மீள் பதிவு🍇🍇🍇*
*🌐🌐🌐ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉தொடர் பாகம் 8 👈👈👈*
*👉தலைப்பு👇*
*🌐🌐தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டுமா🌎🌎*
*✍✍✍நபி (ஸல்) அவர்கள் தங்களின் இஹ்ராம் எல்லையான துல் ஹுலைஃபாவுக்கு வந்த பிறகு இரண்டு ரக்அத்துக்கள் தொழுதிருக்கிறார்கள். எனவே இஹ்ராம் எல்லைக்கு வந்தவுடன் நிய்யத் சொல்லி, தல்பியா சொன்ன பிறகு இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்று சொல்கிறார்கள். இது சரியா❓*
*துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும்.*
*யலம்லம் வழியாகவோ, மற்ற மீகாத்-எல்லை வழியாகவோ* *செல்பவருக்கு பொருந்தாது.✍✍✍*
📕📕📕நபி (ஸல்) அவர்கள் தமது எல்லையான துல்ஹுலைபாவில் இரண்டு ரக்அத்துகள் தொழுததற்குக் காரணம், அவர்களுக்கு இவ்வாறு தொழ வேண்டும் என்ற உத்தரவு வந்தது.
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனது இறைவனிடமிருந்து வரக்கூடிய(வான)வர் இன்றிரவு வந்து “இந்த அபிவிருத்தி மிக்க பள்ளத்தாக்கில் தொழுவீராக! இன்னும் ஹஜ்ஜுடன் உம்ராவைச் சேர்த்துவிட்டதாக மொழிவீராக!” எனக் கட்டளையிட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கில் கூற நான் கேட்டேன்.📕📕📕
*நூல்: புகாரி 1534*
*👆👆👆இதன்படி துல்ஹுலைபாவை எல்லையாகக் கொண்டவருக்கு மட்டும் இது பொருந்தும்.👈👈👈*
*🕋🕋ஹாஜிகள் பிறை 1க்குப் பிறகு நகம், முடி களையக் கூடாதல்லவா❓🕋🕋*
*✍✍✍இஹ்ராமுக்கு முன் நகம், முடிகளைக் களைந்து கொள்ள வேண்டுமா? துல்ஹஜ் பிறை பிறந்த பிறகு ஊரிலிருந்து புறப்படுபவர்கள் (குர்பானிக்காக) பிறை 1க்குப் பிறகு நகம், முடி களையக் கூடாதல்லவா?*
*இஹ்ராமிற்கு பிறகிருந்தே முடி களையக் கூடாது.*
*இஹ்ராமுக்கு முந்தி நகம், முடிகளைக் களைய வேண்டும் என்று எந்த ஹதீசும் வரவில்லை. ஆனால் இஹ்ராமுக்குப் பின்னால் இவற்றைக் களைகின்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதற்கு முன்பு களைந்து கொள்ள வேண்டும். துல்ஹஜ் பிறை 1க்குப் பிறகு புறப்பட நேர்ந்தால் அப்போதும் முடி, நகம் களைந்து கொள்ளலாம்.*
*குர்பானிக்காக முடி, நகம் களையக்கூடாது என்பது ஹாஜி அல்லாதவர்களுக்குரிய சட்டமாகும். ஹாஜிகளுக்கு இஹ்ராம் கட்டிய பிறகு தான் இவை தடுக்கப்பட்டுள்ளது.✍✍✍*
*🌐🌐நிபந்தனையிட்டு 🕋🕋ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுவது என்றால் என்ன❓🌎🌎*
📘📘📘ஹஜ் அல்லது உம்ராவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கருதுபவர்கள் முன் நிபந்தனையிட்டு சொல்லக்கூடிய “இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்” என்று ஹதீஸ் உள்ளதா❓ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தந்தையின் சகோதரர் புதல்வியான) ளுபாஆ பின்த் ஸுபைர் (ரலி) அவர்கüடம் சென்று, “நீ ஹஜ் செய்ய விரும்புகிறாய் போலும்!” என்றார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்னும் நோயாüயாகவே இருக்கிறேன்” என்று சொன்னார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடம், “நீ முன் நிபந்தனையிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, “இறைவா! நீ எந்த இடத்தில் (ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்ய முடியாதவாறு) என்னைத் தடுக்கிறாயோ அதுதான் நான் இஹ்ராமிலிருந்து விடுபடும் இடமாகும்’ என்று சொல்லிவிடு!” எனக் கூறினார்கள்.📘📘📘
*நூல்: புகாரி 5089*
*🌎🌎இஹ்ராம் ஆடை அணியும் முன்பாக குளித்துவிட்டு நறுமணம் பூசுவதற்குப் 🧕🧕🧕பெண்களுக்கும் அனுமதி உண்டா❓🌎🌎*
*✍✍✍இஹ்ராம் ஆடை அணியும் முன்பாக குளித்துவிட்டு நறுமணம் பூசுவதற்குப் பெண்களுக்கும் அனுமதி உண்டா❓*
*ஆம்*
*பெண்கள் நறுமணம் போடக்கூடாது என்று தனியாக எந்தத் தடையும் வரவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமுக்கு முன்பு நறுமணம் பூசிக் கொண்டு, இஹ்ராமுக்குப் பின்பு வரை நீடிக்கச் செய்துள்ளார்கள்.*
*ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*நபி (ஸல்) அவர்களின் தலைவகிட்டில் (அவர்கள் இரவில் பூசியிருந்த) வாசனைத் திரவியத்தின் மினுமினுப்பை இப்போதும் நான் பார்ப்பதைப் போன்றுள்ளது. அப்போது நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தே இருந்தார்கள்.✍✍✍*
📙📙📙பெண்கள் நறுமணம் பூசுவது சம்பந்தமான குறிப்பு
நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.
தனது உடலில் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு. ஆட்களை தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு. முதல் வகையான நறுமணம் அருகில் நெருங்கி வருவோருக்கும் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.
பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.📙📙📙
*🏵🏵🏵ஹேர் ஆயில், தைலம், டைகர் பாம் போன்றவை நறுமணம் பூசுவதில் அடங்குமா❓🏵🏵🏵*
*✍✍✍வாசனையுள்ள ஹேர் ஆயில், வலி தைலங்கள், தலைவலிக்கு போட்டுக் கொள்ளும் ஒடுக்கலான், டைகர் பாம் போன்றவை நறுமணம் பூசுவது என்பதில் அடங்குமா? போட்டவுடன் கழுவிவிடும் வகையிலான சோப்பு, ஷாம்பூ வகைகள் வாசனையாக இருந்தால் குற்றமா❓ அதைத் தவிர்த்துக் கொள்வதுதான் சிறந்ததா❓*
*இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது :*
*இஹ்ராம் அணிந்த ஒரு மனிதரை, அவரது ஒட்டகம் அவரது கழுத்தை முறித்துக் கொன்றுவிட்டது. அவரது உடல் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டபோது, “அவரை நீராட்டிக் கஃபனிடுங்கள்! அவரது தலையை மூடாதீர்கள்; அவருக்கு நறுமணம் பூசாதீர்கள்! ஏனெனில், அவர் (மறுமையில்), தல்பியா கூறிக் கொண்டிருப்பவராக எழுப்பப்படுவார்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*
*நூல்: புகாரி 1839*
📗📗📗இந்த ஹதீஸின் அடிப்படையில் இஹ்ராமின் போது நறுமணம் பூசக்கூடாது. ஆனால் கண்வலி, காது வலிக்கு மருந்து இட்டுக் கொள்ளலாம்.
நுபைஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (ஒரு பயணத்தில்) அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களுடன் புறப்பட்டோம். நாங்கள் “அல்மலல்’ எனுமிடத்தை அடைந்த போது, (எங்களுடன் வந்த) உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டது. பின்னர் நாங்கள் “அர்ரவ்ஹா’ எனுமிடத்தில் இருந்தபோது, அவருக்குக் கண் வலி கடுமையாகி விட்டது. உடனே உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அபான் பின் உஸ்மான் (ரஹ்) அவர்களிடம் ஆளனுப்பி (தாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி)க் கேட்டார். அதற்கு அபான் (ரஹ்) அவர்கள், அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு கூறியனுப்பினார்கள். மேலும், “(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில்) “இஹ்ராம்’ கட்டியிருந்த ஒருவருக்குக் கண்வலி ஏற்பட்டபோது, இவ்வாறுதான் அவருடைய கண்களில் கற்றாழைச் சாற்றைப் பிழிந்து கட்டுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்றார்கள்.📗📗📗
*நூல்: முஸ்லிம் 2089*
*✍✍✍இந்த அடிப்படையில் தலைவலிக்குத் தைலம் தடவிக் கொள்ளலாம். தைலத்தில் நறுமணம் கலந்திருந்தாலும் நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தவறில்லை. ஆனால் குளிக்கும் போது பயன்படுத்துகின்ற ஷாம்பு, வாசனை சோப்பு, தலைக்குத் தடவும் எண்ணெய் போன்றவை மருந்து வகையில் அடங்காது. அவற்றில் நறுமணம் கலந்திருப்பதால் அவற்றைப் பயன்படுத்தக்கூடாது.✍✍✍*
*🌐🌐🌐இஹ்ராமில் கட் ஷூ அணிந்துக் கொள்ளலாமா❓🌐🌐🌐*
📒📒📒‘ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!’ என்ற நபிமொழியின்படி, கட் ஷூ அணிந்து கொள்ளலாமா❓ குளிர் அதிகமாக உள்ள பகுதிகளில் செருப்புக்குப் பதிலாக அதையே இஹ்ராமிலும் அணிந்துக் கொள்ளலாமா❓
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “ஒருவரிடம் செருப்புகள் இல்லையென்றால், அவர் காலுறைகளை (அவற்றின் மேலிருந்து) கணுக்காலுக்குக் கீழுள்ள பகுதிவரை கத்தரித்துக் கொள்ளட்டும்!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்📒📒📒.
*நூல்: புகாரி 1838*
*✍✍✍நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் காலுறைகளை வெட்டி அணிந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். ஆனால் பின்வரும் ஹதீஸில் வெட்ட வேண்டும் என்று கூறவில்லை.*
*இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*நபி (ஸல்) அவர்கள் அரஃபாவில் உரை நிகழ்த்தும்போது, “யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்; யாருக்கு வேட்டி கிடைக்கவில்லையோ அவர் கால் சட்டைகளை அணியட்டும்! யாருக்கு செருப்பு கிடைக்கவில்லையோ அவர் காலுறைகளை அணியட்டும்!” என்று இஹ்ராம் கட்டியவர்களுக்குக் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.✍✍✍*
*நூல்: புகாரி 1841*
📓📓📓இது நபி (ஸல்) அவர்கள் அரஃபா தினத்தில் கூறியதாகும். எனவே, ஆரம்ப நிலையில் காலுறைகளை வெட்டி அணிய வேண்டும் என்று கூறியிருந்தாலும், இறுதியாக அந்த நிபந்தனையைக் கூறாமல் காலுறை அணிந்து கொள்ளட்டும் என்று பொதுவாகக் கூறுவதால் இந்த அனுமதியைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என தற்கால மார்க்க அறிஞர்கள் கூறுகின்றனர். இதன் அடிப்படையில் ஷூ அணிவதில் தவறில்லை.📓📓📓
*🏓🏓🏓காலுறை அணியக்கூடாது என்ற சட்டம் 👨👨👦ஆண், பெண் இருவருக்குமா❓🏓🏓🏓*
*✍✍✍காலுறை அணியக்கூடாது என்ற சட்டம் ஆண், பெண் இருவருக்குமா❓ அல்லது பெண்கள் காலுறை மற்றும் உள்ளாடை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள், அதுபோல் எதுவும் நபிவழியில் சொல்லப்பட்டுள்ளதா❓* *செருப்பு கிடைக்காதவர் காலுறை அணிந்து கொள்ளலாம் என்ற சட்டம் ஆண்களுக்கு மட்டுமே! பெண்கள் காலுறை, உள்ளாடைகள் அணிய வேண்டும் என்றோ, அணியக் கூடாது என்றோ எந்த நிபந்தனையும் சொல்லப்படவில்லை. பெண்கள் முகத்திரையும், கையுறையும் அணியக் கூடாது என்று மட்டும் தடை உள்ளது.✍✍✍*
*🧕🧕🧕பெண்கள் கால் பாதங்கள் திறந்திருக்கலாமா❓🧕🧕🧕*
📔📔📔பெண்கள் இஹ்ராம் சமயத்தில் முகமும் முன் கைகளும் மட்டும் திறந்திருக்க வேண்டும் என்றால் கால் பாதங்கள் திறந்திருக்கலாமா❓ உடல் ஆரோக்கியம் பேணிக்கொள்ள ஃபேஸ் மாஸ்க் போட்டுக் கொள்ளும்படி இங்குள்ள ஹஜ் சர்வீஸில் அறிவுறுத்துகிறார்கள். பெண்கள் முகம் மூடக்கூடாது என்றால் ஃபேஸ் மாஸ்க் இஹ்ராமில் ஆண், பெண் இருவருக்கும் கூடுமா❓
பெண்கள் பொதுவாக முகம், கை, கால்கள் மறைக்க வேண்டும் என்பது தவறான கருத்தாகும். மார்க்கத்தில் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் முகத்தை மூடுவதற்குத் தடை விதிக்கின்றார்கள்.
“இஹ்ராம் கட்டிய பெண் தனது முகத்தை மறைக்க வேண்டாம். கையுறைகளையும் அவள் பயன்படுத்த வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்📔📔📔.
*அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)*
*நூல்: புகாரி 1838*
*👉👉👉ஃபேஸ் மாஸ்க் போன்ற முகத்தை மறைக்கும் சாதனங்களைக் குறித்தே நபி (ஸல்) அவர்கள் இந்தத் தடையை விதித்துள்ளார்கள் என்று இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.👈👈👈*
*🧕🧕🧕பெண்கள் தலை சீவும்போது முடி கழியும் என்பதால் தலைசீவுவது கூடாதா❓🧕🧕🧕*
*✍✍✍பெண்கள் தலை சீவும்போது முடி கழியும் என்பதால் பெண்கள் தலைசீவுவதும் கூடாது என்கிறார்கள். இது சரியா? ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டவுடன் இஹ்ராமைக் களைவதற்காக ‘உன் தலையை அவிழ்த்து சீவிக் கொண்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டு, உம்ராவை விட்டுவிடு’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது, இஹ்ராமில் இருக்கும்போது தலையை அவிழ்த்து சீவக்கூடாது என்ற கருத்தையும் சொல்லுமா❓*
*இஹ்ராமின் போது ஆண்களும், பெண்களும் செய்யக்கூடாத அல்லது தடை செய்யப்பட்ட காரியங்களை குர்ஆனும் ஹதீசும் தெளிவுபடுத்தி விட்டன. இதில் தலை வாருதல் இடம்பெறவில்லை. இதிலிருந்தே தலை வாருவதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.✍✍✍*
📚📚📚ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டி ருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (அதனால் என்னால் முதலில் எண்ணியிருந்த உம்ராவை செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே நான் நபி (ஸல்) அவர்கüடம் இது பற்றி முறையிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ரா செய்வதை விட்டுவிடு! உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக் கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!” என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன்.📚📚📚
*நூல்: புகாரி 317*
*✍✍✍இந்த ஹதீஸ், இஹ்ராமின் போது ஆண்களோ, பெண்களோ தலை வாரிக்கொள்வதற்கு அனுமதியிருக்கின்றது என்பதை வலியுறுத்தும் ஹதீஸ் ஆகும். அத்துடன் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டாலும் அவர்கள் இஹ்ராமில் தான் இருக்கிறார்கள் என்பதையும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.*
*தவாஃபைத் தவிர மற்ற வணக்கங்களைச் செய்யலாம் என்பது ஆயிஷா (ரலி) அவர்கள் இஹ்ராமில் இருக்கின்றார்கள் என்பதற்கு சரியான சான்றாகும்.✍✍✍*
*📚📚📚இஹ்ராமின் போது தலை, கால்களை மூடி போர்வை போர்த்தலாமா❓📚📚📚*
🌈🌈⛱⛱இஹ்ராம் ஆடையில் ஆண்கள் தலை, கால்களை மறைக்கக்கூடாது என்பதால் குளிர் மற்றும் உறங்கும் சமயங்களிலும் தலை, கால்களை மூடும் விதமாக போர்வை போர்த்தலாமா❓ தலை, கால்களை விட்டுவிட்டு உடம்பில் மட்டும்தான் போர்த்திக் கொள்ள வேண்டுமா❓
ஹஜ்ஜின் கிரியைகளைச் செய்யும் போது அணிந்திருக்கும் இஹ்ராம் ஆடையில் தான் தலையை மறைக்கக் கூடாது. உறங்கும் போது போர்வை போர்த்துதல் என்பது ஆடையில் சேராது.
குளிருக்காக நன்கு மூடப்பட்ட ஓர் அறைக்குள் போய் உறங்குவது எப்படியோ அப்படித் தான் போர்வை போர்த்திக் கொண்டு உறங்குவதும் ஆகும். எனவே உறங்கும் போது தலையை மறைத்து போர்வை போர்த்துவதில் தவறில்லை.🌈🌈⛱⛱
*🌐🌐🌐மூட்டப்பட்ட வேட்டி அணிந்து குளிக்கலாமா❓🌐🌐🌐*
*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 9*
No comments:
Post a Comment