*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥அமல்களை*
*அதிகரிப்போம் [ 01 ]🔥*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*தொழுகையும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖0⃣2⃣*
*☄தவ்ஹீதின்*
*வெளிப்பாடு*
*நற்காரியங்கள்*
*🏮🍂தவ்ஹீத் கொள்கையை கடைப்பிடிப்பதுடன் அல்லாஹ் விதித்த கடமைகளையும் அவனுடைய தூதர் காட்டித் தந்த நற்காரியங்களையும் அதிகம் செய்ய வேண்டும். அமல்கள் என்பது ஏகத்துவத்தின் வெளிப்பாடாகும்.*
*🏮🍂அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று கூறுவதைப் போல் ஏகத்துவவாதியின் நற்செயல்களை வைத்து இவர் தவ்ஹீத்வாதி என்று மக்கள் இனங்காணும் விதத்தில் நமது நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.* ஒரு ஏகத்துவவாதி நரகம் புகாமல் சொர்க்கம் புக வேண்டுமானால் அவனிடத்தில் அவசியம் நல்லமல்கள் நிறைய இருக்க வேண்டும். *இதை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.*
*قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ يُوْحٰٓى اِلَىَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰـهٌ وَّاحِدٌ ۚ فَمَنْ كَانَ يَرْجُوْالِقَآءَ رَبِّهٖ فَلْيَـعْمَلْ عَمَلًا صَالِحًـاوَّلَايُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهٖۤ اَحَدًا*
_*🍃“நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர் பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்” என்று (முஹம்மதே!) கூறுவீராக!*_
*📖(அல்குர்ஆன் 18:110)📖*
*🏮🍂அல்லாஹ் இந்த வசனத்தில் தன்னுடைய சந்திப்பை அடியார்கள் பெறுவதற்கு இரண்டு விஷயங்கள் வேண்டும் என்று கூறுகிறான்.* ஒன்று இணை வைக்காமல் ஏகத்துவக் கொள்கையைக் கடைப்பிடிப்பது. *மற்றொன்று நல்லறம் செய்வது. அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்கு நல்லறங்கள் அவசியம் என்று இந்த வசனத்திலிருந்து உணரலாம்.*
*🏮🍂மனிதன் செய்த நல்லறங்கள் மற்றும் தீமைகளை அல்லாஹ் மறுமை நாளில் தராசுகளை வைத்து அளவிடுவான். அதில் நல்லறங்கள் அதிகமாகிவிட்டால் அவன் சுவர்க்கம் செல்வான்.* ஆனால் தீமைகள் மிகைத்து விட்டால் அவன் செல்ல வேண்டிய இடம் நரகம். இதை அல்லாஹ் பின்வரும் வசனத்தில் எடுத்துரைக்கிறான்.
*فَاَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِيْنُهٗ ۙ فَهُوَ فِىْ عِيْشَةٍ رَّاضِيَةٍ ؕ*
_*🍃யாருடைய எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர் திருப்தியான வாழ்க்கையில் இருப்பார். யாருடைய எடைகள் இலேசாக உள்ளனவோ அவர் தங்குமிடம் ஹாவியாவாகும். ஹாவியா என்றால் என்னவென்று உமக்கு எப்படித் தெரியும்❓ அதுவே சுட்டெரிக்கும் நெருப்பாகும்.*_
*📖 (அல்குர்ஆன் 101:6) 📖*
*🏮🍂நாம் இறந்த பிறகு நம்முடன் வரக்கூடியது நாம் செய்த செயல்கள் தான். நாம் புரிந்த நல்லறங்களைத் தவிர செல்வமோ, காசு பணமோ மறு உலக வாழ்வில் எந்தப் பயனும் தராது. மறு உலக வாழ்வில் ஈடேற்றம் பெற வேண்டுமானால் நல்லமல்கள் அவசியம் என்பதை நபி (ஸல்) அவர்கள்* பின்வரும் ஹதீஸில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். எனவே தவ்ஹீத் என்பது வெறும் நம்பிக்கை மாத்திரம் இல்லை. *மாறாக செயல்பாடுகளுடன் இணைந்தது என்பதை மறந்துவிடக் கூடாது.*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறந்து போனவரை மூன்று பொருட்கள் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) இரண்டு திரும்பி விடுகின்றன. ஒன்று மட்டுமே அவருடன் தங்கி விடுகின்றது. அவரை அவருடைய குடும்பமும், செல்வமும், அவர் செய்த செயல்களும் பின் தொடர்ந்து செல்கின்றன. (அவற்றில்) அவருடைய குடும்பமும், செல்வமும் திரும்பி விடுகின்றன. அவருடைய செயல்கள் மட்டுமே அவருடன் தங்கிவிடும்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அனஸ் பின் மாலிக் (ரலி)*
*📚 நூல்: புகாரி 6514 📚*
*🏮🍂இறைவன் வலியுறுத்திய காரியங்களில் ஒன்றான தொழுகை விஷயத்தில் நாம் மோசமாக நடந்து கொள்கிறோம். பலர் தொழுகைக்குரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்று வதில்லை. பல நேரங்களில் தொழ வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல் கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.*
*🏮🍂தொழுகைக்கு மட்டும் மக்களை அழைக்கின்ற தப்லீக் ஜமாஅத்தினர் தவறான செய்திகளை நம்பினாலும் தொழுகை விஷயத்தில் கவனமாக இருப்பதுடன் தாங்கள் ஈடுபட்ட பணியில் எவ்வளவு முனைப்புடன் செயல்படுகிறார்கள்!* சத்தியக் கொள்கையில் இருக்கக்கூடிய நாம் அவர்களை விடப் பன்மடங்கு தொழுகையைப் பேண வேண்டும். *தொழுகையின் அவசியத்தையும் அதை விட்டவனுக்கு மார்க்கம் விடும் எச்சரிக்கையையும் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஒரு ஏகத்துவவாதி அறிந்து கொண்டால் நிச்சயமாக அவன் தொழுகையை விடமாட்டான்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼..தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment