பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, July 21, 2019

பெண்களுக்கான - 7

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹*

*🧕🧕🧕பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் பெண்களுக்கு மட்டுமே 🧕🧕🧕*

            *பாகம் 7*

*👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

*பெண்கள் நக பாலீஷ் பூசலாமா?*

ஒரு பொதுவான அடிப்படையை விளங்கிக்கொண்டால் பல கேள்விகளுக்குரிய பதில்கள் நமக்குக் கிடைத்துவிடும். *மார்க்க சட்டத்திட்டங்களுக்கு இடையூராக அமையாத அலங்காரப்பொருட்கள்* எதை வேண்டுமானலும் நாம் பயன்படுத்திக்கொள்வதில் தவறில்லை.

மார்க்கத்தை கடைபிடிப்பதற்கு இடஞ்சலாக அமைந்த அலங்காரப் பொருட்களை பயன்படுத்துவது கூடாது.

    உளூ செய்யும் போது கழுவப்பட வேண்டிய உறுப்புக்கள் முழுவதிலும் அவசியம் தண்ணீர் பட வேண்டும் என்பது மார்க்கச் சட்டம். அறைகுறையாகக் கழுகுவது தடுக்கப்பட்டிருக்கிறது.
நாங்கள் மேற்கொண்ட பயணம் ஒன்றில் அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே (பிந்தி) வந்துகொண்டிருந்தார்கள். 

அஸ்ர் தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் (அவசர அவசரமாக) உளூ (அங்கசுத்தி) செய்து கொண்டிருக்கும்போது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் (கால்களை முறைப்படி கழுவாமல்) எங்கள் கால்கள் மீது தண்ணீர் தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து) கொள்ளலானோம்.

(அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் "குதிகால்களைச் சரியாகக் கழுவாதவர்களுக்கு நரகம்தான்!'' என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள்.

*அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலிலி)*
*நூல் : புகாரி (96)*

    இன்றைக்கு விற்கப்படும் *நகப்பூச்சுக்கள்* தண்ணீர் ஊடுருவுவதை தடுக்கக்கூடியவையாக உள்ளது. இவற்றைப் பூசிக்கொண்டு உளூ செய்யும் போது நகங்களின் மீது தண்ணீர்படுவது தடுக்கப்படுகிறது. எனவே *தொழுகை அல்லாத மற்ற நேரங்களில் பூசிக்கொள்வதில் தவறில்லை.* உளூ செய்யும் போது இவற்றை அகற்றிவிட வேண்டும்.

    தண்ணீர் ஊடுருவதை தடுக்காத வகையில் நகப்பூச்சு கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

*பெண்கள் நறுமணம் பூசலாமா?*

    பிறரை கவர்ந்திழுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நறுமணம் பூசுவதை மார்க்கம் தடைசெய்துள்ளது.

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண் நறுமணத்தைப் பூசிக்கொண்டு தன் வாடையை (பிறர்) நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தை கடந்து சென்றால் அவள் விபச்சாரியாவாள்.

*அறிவிப்பவர் : அபூ மூஸா (ரலி)*
*நூல் : நஸயீ (5036)*

    பிறர் நுகர வேண்டும் என்பதற்காக என்று நபி (ஸல்) அவர்கள் கூறும் வார்த்தை கவனிக்கத்தக்கதாகும். தவறான எண்ணமில்லாமல் துர்நாற்றத்தைப் போக்குவதற்காக பூசுவது தவறில்லை என்பது இதிலிருந்து விளங்குகிறது.

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் நறுமணத்தை பயன்படுத்தியுள்ளார்கள். இஷாத் தொழுகைக்கு வரும் போது மாத்திரம் நறுமணத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு பெண்கள் கட்டளையிடப்பட்டார்கள். மற்றத் தொழுகைகளுக்கு வரும் போதோ அல்லது தொழுகை அல்லாத மற்ற நேரங்களிலோ நறுமணம் பூசக்கூடாது என்றோ அவர்களுக்கு தடை விதிக்கப்படவில்லை. 

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எந்தப் பெண் நறுமணப் புகையை பயன்படுத்தினாரோ அவர் கடைசித் தொழுகையான இஷாவில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.

*அறிவிப்பர் : அபூஹ‚ரைரா (ரலி)*
*நூல் : முஸ்லிம் (675)*

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து (வீட்டில்) உறங்கினார்கள். அப்போது அவர்களுக்கு வியர்வை வெளிப்பட்டது. எனது தாய் ஒரு கண்ணாடிக் குடுவையைக் கொண்டு வந்து அதில் நபி (ஸல்) அவர்களின் வியர்வையை சேகரித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் விழித்துவிட்டார்கள். உம்மு சுலைமே நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு (எனது தாய்) உம்மு சுலைம் இது உங்களின் வியர்வை. இது நறுமணங்களில் சிறந்த நறுமணமாக இருப்பதால் இதை நாங்கள் எங்களின் நறுமணத்துடன் சேர்த்துக்கொள்வோம்.

*அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)*
*நூல் : முஸ்லிம் (4300)*

    நறுமணத்தைப் போன்றே பூக்களையும் பிறரைக் கவரும் நோக்கத்தில் பயன்படுத்தக் கூடாது.  தவறான எண்ணமில்லாமல் பூவின் அழகை விரும்பியோ அதன் வாசனையை வரும்பியோ பூக்களை சூட்டிக்கொண்டால் அதில் தவறு ஏதும் இல்லை.

    ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில் எந்தக் காரியத்தையும் ஒரு பெண் செய்யக்கூடாது என்பதால் பலரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்த அதிக நறுமணத்தைத் தருகின்ற வாசனை திரவியங்களை பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

*ஒட்டுமுடி வைக்கலாமா?*

    ஒட்டுமடி வைத்துக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவருடைய தலைமுடி கொட்டிவிட்டது. ஆகவே, அவருடைய உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபி (ஸல்) அவர்களிடம்  கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும்  அல்லாஹ் சபிக்கின்றான்.

ஹை‚சைன் பின் மிஹ்ஸன் (ரலி) அவர்களின் தந்தையுடன் பிறந்த சகோதரி ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு தேவைக்காக வந்திருந்தார். தேவையை முடித்துக்கொண்ட போது நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் உனக்கு கணவன் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் நீ எவ்வாறு நடந்துகொள்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர் என்னால் இயலாமல் போனாலேத் தவிர அவருக்கு நன்மை செய்வதில் நான் குறைவு வைக்கமாட்டேன் என்று கூறினார். நீ எவ்வாறு அவரிடத்தில் நடந்துகொள்கிறாய் என்பதை கவனித்துக்கொள். ஏனென்றால் அவர் தான் உனது சொர்க்கமாகும். உனது நரகுமுமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

*அறிவிப்பவர் : ஹ‚ஸைன் பின் மிஹ்ஸன் (ரலி)*
*நூல் : அஹ்மத் (18233)*

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : *ஒருவர் இன்னொருவருக்கு சிரம்பணியுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்திருந்தால் மனைவி தன் கணவனுக்கு சிரம்பணியுமாறு* கட்டளையிட்டிருப்பேன்.

*அறிவிப்பவர் : முஆத் பின் ஜபல் (ரலி)*
*நூல் : அஹ்மத் (20983)*

*கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாக சொன்னால்...*

மனைவி கணவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அதே நேரத்தில் கணவன் மார்க்கத்திற்கு மாற்றமாக கட்டளையிட்டால் அதற்குக் கட்டுப்படக்கூடாது. *இதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.*
அன்சாரிகüல் ஒரு பெண் தம்முடைய மகளுக்கு மணமுடித்து வைத்தார். அவரது மகüன் தலைமுடி உதிர்ந்துவிட்டது. அவள் நபி (ஸல்) அவர்கüடம் வந்து இது குறித்து தெரிவித்துவிட்டு, "என் கணவர், எனது தலையில் ஒட்டுமுடி வைத்துக்கொள்ளுமாறு பணிக்கிறார்'' என்று கூறினாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வேண்டாம்! (ஒட்டுமுடி வைக்காதே!) ஒட்டுமுடி வைக்கும் பெண்கள் சபிக்கப்பட்டுள்ளனர்'' என்று சொன்னார்கள்.

*அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)*
*நூல் : புகாரி (5205)*
   
*அல்லாஹ்வுக்கு மாறுசெய்வதில் கீழ்படிதல் கிடையாது.*

கீழ்படிதல் என்பதெல்லாம் நன்மையில்தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*அறிவிப்பவர் : அலீ (ரலி)*
*நூல் : புகாரி (7257)*

*கணவனின் உறவினர்களுக்கு பணிவிடை செய்தல்*

*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 8*

No comments:

Post a Comment