பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, July 1, 2019

அமல்களை*அதிகரிப்போம் - 03

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥அமல்களை*
                  *அதிகரிப்போம்[ 01 ]🔥*

*🍃கொள்கை மட்டும் போதாது*
                                    ⤵
             *தொழுகையும் வேண்டும்*

            *✍🏻..... தொடர் ➖0⃣3⃣*

*☄தொழுகையின்*
                *முக்கியத்துவம் [ 01 ]*

*🏮🍂இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் வணக்கத்திற்குத் தகுதியானவர் இல்லை என்று கூறுவது, மற்றும் தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐந்து தூண்களால் கட்டப்பட்டுள்ளது.*

*🏮🍂இந்த ஐந்தில் ஒன்றான தொழுகையை ஒருவர் விடுவாரானால் அவருடைய இஸ்லாம் என்ற கட்டடம் பெரிய குறைபாடு உடையதாக ஆகி விடுகின்றது. எப்போது அது இடிந்து விழும் என்று சொல்ல முடியாது.* நாம் கட்டிய கட்டடத்தின் ஒரு தூண் விழுந்து விட்டாலோ அல்லது அது பலம் குன்றியதாக இருந்தாலோ உடனே நாம் அதைச் சரி செய்து விடுகிறோம். இல்லையென்றால் அது நம் மீது விழுந்து நம்மையே அழித்து விடும். *தொழாதவனின் இஸ்லாம் என்ற கட்டடம் காலப்போக்கில் இடிந்து, அவனிடத்தில் இஸ்லாம் அற்றுப் போய்விடும் என்பதால் நபி (ஸல்) அவர்கள் தொழுகையை இஸ்லாத்தின் தூண் என்று ஒப்பிட்டுள்ளார்கள்.*

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﻴﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﻮﺳﻰ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﺎ ﺣﻨﻈﻠﺔ ﺑﻦ ﺃﺑﻲ ﺳﻔﻴﺎﻥ، ﻋﻦ ﻋﻜﺮﻣﺔ ﺑﻦ ﺧﺎﻟﺪ، *ﻋﻦ اﺑﻦ ﻋﻤﺮ، ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻬﻤﺎ ﻗﺎﻝ: ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ " ﺑﻨﻲ اﻹﺳﻼﻡ ﻋﻠﻰ ﺧﻤﺲ: ﺷﻬﺎﺩﺓ ﺃﻥ ﻻ ﺇﻟﻪ ﺇﻻ اﻟﻠﻪ ﻭﺃﻥ ﻣﺤﻤﺪا ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ، ﻭﺇﻗﺎﻡ اﻟﺼﻼﺓ، ﻭﺇﻳﺘﺎء اﻟﺰﻛﺎﺓ، ﻭاﻟﺤﺞ، ﻭﺻﻮﻡ ﺭﻣﻀﺎﻥ*

_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:_

_*🍃வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ஸகாத் வழங்குதல், ஹஜ் செய்தல், ரமளானில் நோன்பு நோற்றல் ஆகிய ஜந்து காரியங்கள் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது.*_

*🎙அறிவிப்பவர்:*
               *இப்னு உமர் (ரலி)*

       *📚 நூல்: புகாரி 8 📚*

*🏮🍂கலிமாவை நம்புவது மாத்திரம் இஸ்லாம் அல்ல. இந்த ஐந்து கடமைகளையும் நிறைவேற்றுவது தான் இஸ்லாம். ஒருவன் கலிமாவை ஏற்றுக் கொண்டு, தொழவில்லை என்றால் அவனுடைய இஸ்லாம் அரைகுறையாக உள்ளது என்று அர்த்தம். மேற்கூறப்பட்ட ஐந்தும் சேர்ந்தது தான் இஸ்லாம் என்று நபி (ஸல்) அவர்கள் பின்வரும் ஹதீஸில் விளக்குகிறார்கள்.*

_*🍃நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (ஜிப்ரீல்), “இஸ்லாம் என்றால் என்ன❓” என்று கேட்டார். அதற்கவர்கள் “இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும், தொழுகையை நீர் நிலைநிறுத்தி வருவதும், கடமையாக்கப்பட்ட ஜகாத்தை நீர் வழங்கி வருவதும், ரமளான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும்” என்று கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                *அபூஹுரைரா (ரலி)*

           *📚 நூல்: புகாரி (50) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼..தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment