*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥அமல்களை*
*அதிகரிப்போம் [ 03 ]🔥*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*அமல்களும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖2⃣1⃣*
*☄உபரியான*
*வணக்கங்கள்*
*புரிவோம் [ 06 ]*
*☄இரவுத்*
*தொழுகையின்*
*சிறப்புகள் { 01 }*
*🏮🍂அன்பிற்குரிய சகோதர, சகோதரிகளே! எல்லாம் வல்ல ஏக இறைவனின் நல்லடியார்களே! மத்ஹப்பை பின்பற்றும் நேரத்தில் கண்ணும் கருத்துமாக தொழுத இரவுத் தொழுகை தொழும் பழக்கம், ஏகத்துவத்தை ஏற்ற மக்களிடையே பெரும்பாலும் குறைந்து வருகிறது. இரவுத் தொழுகையைப் பற்றி குர்ஆனும், ஹதீஸும் ஏராளமான சிறப்புகளை எடுத்துரைக்கின்றன.*
*🏮🍂அப்படி தொழும் சிலரும் முந்திய பகுதிகளில் தொழுதுவிட்டு உறங்கி விடுகின்றனர். ஆனால், இரவுத் தொழுகையை பொருத்த வரையில் பிந்திய இரவில் தொழுவது தான் மிகச் சிறப்பான வணக்கமாகும்.* எனவே, பிந்திய நேரங்களில் தொழுவதன் சிறப்பைத் தெரிந்து கொண்டு, *முடிந்த அளவு அதைச் செயல்படுத்தி, அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄விலகி விடும்*
*விலாப்புறங்கள்*
*كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ وَّ الْاَحْزَابُ مِنْۢ بَعْدِهِمْ وَهَمَّتْ كُلُّ اُمَّةٍۢ بِرَسُوْلِهِمْ لِيَاْخُذُوْهُ ؕ وَجَادَلُوْا بِالْبَاطِلِ لِيُدْحِضُوْا بِهِ الْحَقَّ فَاَخَذْتُهُمْ فَكَيْفَ كَانَ عِقَابِ*
_*🍃அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக கண்குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.*_
*📖(அல்குர்ஆன் 32:16,17)📖*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*🔥 நரகத்திலிருந்து*
*பாதுகாப்பு 🔥*
_*🍃நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும் இருந்தேன். இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப் பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன. இதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) யிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!” என்று கூறினார்கள். அதன் பின்னர் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.*_
*🎙அறி :இப்னு உமர் (ரலி),*
*📚 நூல் : புகாரி 1121, 1122 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼..தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment