பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, July 1, 2019

அமல்களை*அதிகரிப்போம் - 13

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥அமல்களை*
                  *அதிகரிப்போம்[ 01 ]🔥*

*🍃கொள்கை மட்டும் போதாது*
                                    ⤵
             *தொழுகையும் வேண்டும்*

            *✍🏻..... தொடர் ➖1⃣3⃣*

     *☄ இரவுத் தொழுகை ☄*

*🏮🍂இரவுத் தொழுகை ரமலான் மாதத்திற்கு மட்டும் உரியது என்று சிலர் எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் ரமலானிலும், ரமலான் அல்லாத காலங்களிலும் 11 ரக்அத்துகள் தான் தொழுதார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.* எனவே இரவுத் தொழுகை என்பது ரமலானில் மாத்திரம் செய்கின்ற வணக்கம் இல்லை. பொதுவாக எல்லா நாட்களிலும் இரவில் இதைத் தொழ வேண்டும். *இந்தச் சட்டத்தை விளங்கியவர்கள் கூட இரவுத் தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த இரவுத் தொழுகையை நிறைவேற்றுவதன் மூலம் ஒருவர் சிறந்தவராக மாறுகிறார்.*

_*🍃"அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் மனிதர்களில் அவர் மிக நல்லவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு நான் இரவில் தொழுபவனாகி விட்டேன்.*_

*🎙அறிவிப்பவர்:*
           *அப்துல்லாஹ் பின்*
                           *உமர் (ரலி)*

*📚 நூல்: புகாரி 1158 📚*

*🏮🍂நபி (ஸல்) அவர்கள் செய்த எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்து விட்டான். ஆனாலும் நபி (ஸல்) அவர்கள் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் குறை வைக்கவில்லை.* அதிகமான ரக்அத்துக்களை நீண்ட நேரத்தில் தொழுது நமக்கு அழகிய முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள்.

*🏮🍂இன்றைக்கு இளைஞர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் இரவு நேரங்களில் வீண் பேச்சுக்களைப் பேசிக் கொண்டு பொன்னான நேரங்களை வீணடித்து விடுகிறார்கள்.* கடமையான தொழுகைகளுக்கு அடுத்து சிறந்த தொழுகையாக இருக்கக்கூடிய இந்த இரவுத் தொழுகையில் நாம் அக்கறை காட்ட வேண்டும்.

_*🍃"கடமையான தொழுகைக்குப் பின்பு சிறந்த தொழுகையாக இருப்பது இரவுத் தொழுகையாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                 *அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல்: முஸ்லிம் 1982 📚*

_*🍃சில சமயம் நபி (ஸல்) அவர்கள் கால் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும் போது, "நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்பார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
                      *முகீரா (ரலி)*

     *📚 நூல்: புகாரி 1130 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment