*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥அமல்களை*
*அதிகரிப்போம் [ 01 ]🔥*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*தொழுகையும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖0⃣9⃣*
*☄ஜமாஅத்துடன்*
*தொழுவது அவசியம் [ 01 ]*
*🏮🍂நபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவே மென்மையான குணம் உடையவர்கள். எதிரிகள் செய்த ஏராளமான கொடுமைகளை மன்னித்திருக்கிறார்கள். இப்படி மென்மையான குணம் கொண்ட நபி (ஸல்) அவர்கள் ஒருவரை எரிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்றால்* அவர் செய்த குற்றம் எவ்வளவு பெரிய குற்றமாக இருக்கும்❓ தொழுகைக்காகப் பள்ளிக்கு வராதவரின் வீட்டைத் தான் நபி (ஸல்) அவர்கள் எரிக்க வேண்டும் என்று நாடினார்கள். *ஜமாஅத் தொழுகை பள்ளியில் நடக்க, அதைப் பொருட்படுத்தாமல் வீட்டில் அமர்ந்து கொண்டிருப்பவர்கள் இதை மனதில் பதிய வைக்க வேண்டும்.*
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ يُوسُفَ قَالَ : أَخْبَرَنَا مَالِكٌ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْطَبَ ثُمَّ آمُرَ بِالصَّلاَةِ فَيُؤَذَّنَ لَهَا ثُمَّ آمُرَ رَجُلاً فَيَؤُمَّ النَّاسَ ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا ، أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ*
_*🍃ஒரு தொழுகையில் நபி (ஸல்) அவர்கள், மக்கள் வராமல் இருப்பதைப் பார்த்து விட்டு, "மக்களுக்குத் தொழவைக்கும் படி நான் ஒருவரை ஏவி விட்டு தொழுகைக்கு வராதவர்களை நோக்கிச் சென்று அவர்களுடன் அவர்களுடைய வீடுகளைக் கொளுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எலும்புள்ள கொழுத்த கறித்துண்டு கிடைக்கும் என அவர்களில் யாருக்காவது தெரியுமானால் இஷா தொழுகையில் கலந்து கொண்டு விடுகிறார்'' என்று கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூஹுரைரா (ரலி)*
*📚 நூல்: முஸ்லிம் 1040 📚*
*🏮🍂இந்த ஹதீஸ் ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஏனென்றால் மக்கள் பள்ளிக்கு வராததால் நபி (ஸல்) அவர்கள் கோபப்பட்டு இந்த வார்த்தையைக் கூறினார்கள்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼..தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment