பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, July 24, 2019

ஹஜ் உம்ரா - 4

*🍇🍇🍇மீள் பதிவு🍇🍇🍇*

*🌐🌐🌐ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*


*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉👉👉தொடர் பாகம் 4👈👈👈*

     *👉தலைப்பு👇*

*🕋🕋🕋ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா❓🕋🕋🕋*

*👆👆👆🕋ஹஜ் செய்தால் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படுமா❓🕋👇👇👇*

*✍✍✍மனிதனுக்கு செய்தவையன்றி, மற்றவை மன்னிக்கப்படும்.*
*இறைவனுக்காக மனத்தூய்மையான முறையில் ஒருவர் ஹஜ்ஜை நிறைவேற்றினால் நிச்சயமாக அவர் முன்னர் செய்த பெரும்பாவங்கள் மன்னிக்கப்படும்.*
*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம்பத்திய உறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல்லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெடுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.✍✍✍*

*அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (1521)*

📕📕📕அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று ”உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள். நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் (பைஅத்) அளிக்கிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன். நபி (ஸல்) அவர்கள், ”அம்ரே! உமக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டார்கள். நான், ”சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ”என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர்?” என்று கேட்டார்கள். ”என் (முந்தைய) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும்” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ”முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும்; ஹிஜ்ரத்தும் முந்தைய பாவங்களை அழித்துவிடும்; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள். (பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன்.) 📕📕📕

*நூல் : முஸ்லிம் (192)*

*✍✍✍மேற்கண்ட நபிமொழிகள் ஹஜ் முந்தைய பாவங்களை அழித்து விடும் என்பதற்கு சான்றாகத் திகழ்கின்றன. ஆனால் இவற்றில் மனிதன் மனிதனுக்குச் செய்கின்ற பாவங்கள் அடங்காது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு அநீதி இழைத்தால் பாதிக்கப்பட்ட மனிதன் மன்னித்தாலே தவிர இறைவன் மன்னிக்க மாட்டான். பாதிக்கப்பட்வன் மன்னிக்கா விட்டால் மறுமையில் இவனுடைய நன்மைகளை பாதிக்கப்பட்டவனுக்கு வழங்கி அல்லது பாதிக்கப்பட்டவனின் தீமைகளை அநீதி இழைத்தவன் மீது சுமத்தி அல்லாஹ் நீதி வழங்குவான்.*
*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்ளிக் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும்.) (ஏனெனில், மறுமை நாளில்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிலிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும்✍✍✍* .

*அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி ( 2449)*

📘📘📘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அறப்போரில் கொல்லப்பட்ட) உயிர்த் தியாகியின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன; கடனைத் தவிர.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி ) *நூல் : முஸ்லிம் (3832)*
எனவே ஹஜ் செய்வதின் மூலம் பெரும் பாவங்கள் மன்னிக்கப்டும் என்பதில் மனிதன் மனிதனுக்குச் செய்த அநீதிகள் அடங்காது என்பதுதான் சரியானதாகும். அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்.📘📘📘

*🕋🕋ஹஜ் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டால்❓🕋🕋*

*👉👉👉நான் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.  எனக்கு ஹஜ் கடைமையாகிவிட்டது. எப்படி செய்வது❓👈👈👈*

*✍✍✍நீங்கள் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டால், உங்களுக்கு ஹஜ் கடைமையில்லை* .
*இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும்என்று கங்கணம் கட்டியுள்ள நாடுகளிலும் முஸ்லிம்கள் வாழலாம். அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள அந்த நாடுகளால் அல்லது வேறு சக்திகளால் தடுக்கப்படலாம். இத்தகையவர்கள் மீதும் ஹஜ் கடமையாகாது. சென்று வர சக்தியுள்ளவர்கள் மீது ஹஜ் கடமையாகும் என்று இறைவன் கூறுவதிலிருந்து இதனை நாம் அறியலாம்.✍✍✍*

📙📙📙”அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.”📙📙📙

*(திருக்குர்ஆன் 3:97)*

*✍✍✍எனவே, உடல் தகுதி, பொருளாதாரம் உங்களிடம் இருந்தால், சென்று வர சக்தி இல்லாததால்,  உங்களுக்கு ஹஜ் கடைமையில்லை.✍✍✍*

*🕋🕋🕋ஹஜ் கட்டாய கடமையா? யாருக்கு❓🕋🕋🕋*

*👆👆👆ஹஜ் கட்டாய கடமையா❓👇👇👇*

📗📗📗ஆம். ஹஜ் கட்டாய கடமை என்பதை வழியுறுத்தும் குர்ஆன் வசனம், ஹதீஸ்கள் உள்ளன. சக்தி உள்ள ஆண், பெண் இருவர் மீதும் ஹஜ் கட்டாய கடமையாகும்.
மக்காவிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள புனிதத் தலங்களுக்குச் சென்று சில கிரியைகளைச் செய்வது ஹஜ் எனப்படுகின்றது. வசதியும், வாய்ப்பும் உள்ளவர்கள் தங்கள் வாழ்வில் ஒரு தடவை ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும்.
அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.📗📗📗

*(திருக்குர்ஆன் 3:97)*

*✍✍✍மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள்!என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு ஆண்டுமா? என்று கேட்டார். அவர் இவ்வாறு மூன்று தடவை கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்து விட்டு நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே கடமையாகி விடும். அதற்கு நீங்கள் சக்தி பெற மாட்டீர்கள்என்று விடையளித்தார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)*

*நூல்: முஸ்லிம் 2380.*

*🧕🧕🧕பெண்கள் மீதும்🕋🕋🕋 ஹஜ் கடமை🧕🧕🧕*

📒📒📒அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.📒📒📒

*(திருக்குர்ஆன் 3:97)*

*✍✍✍அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் மீது ஜிஹாத் கடமையா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போரிடுதல் இல்லாத ஜிஹாத் அவர்கள் மீது கடமையாக உள்ளது. அது தான் ஹஜ்ஜும், உம்ராவும்என்று விடையளித்தார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)*

*நூல்கள்: அஹ்மத் 24158, இப்னுமாஜா 2892*

📓📓📓சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமைஎன்ற வசனத்தின் அடிப்படையிலும், இந்த ஹதீஸின் அடிப்படையிலும் பெண்கள் மீதும் ஹஜ் கடமையாகும் என்பதை அறியலாம்.📓📓📓

*🕋🕋🕋ஹஜ்ஜின் சிறப்புக்கள் என்னென்ன❓🕋🕋🕋*

*🕋👉👉ஹஜ்ஜின் சிறப்புக்கள்👇👇👇*

*✍✍✍ஹஜ் கட்டாயக் கடமையாக இருப்பதுடன் அதை நிறைவேற்றுவதற்கு ஏராளமான நன்மைகளும் கிடைக்கின்றன.*
*”அமல்களில் சிறந்தது எது?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் நம்புவது என்று விடையளித்தார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்வதுஎன்றார்கள். அதற்கு அடுத்தபடியாக எது? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் என்று விடையளித்தார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)*

*நூல்: புகாரி 26, 1519*

*👉👉👉சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை👇👇👇*

📔📔📔”ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📔📔📔

*அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)*

*நூல்: புகாரி 1773*

*✍✍✍”அல்லாஹ்வின் தூதரே! ஜிஹாத் செய்வதையே மிகச் சிறந்த செயலாக நீங்கள் கருதுகிறீர்கள். எனவே (பெண்களாகிய) நாங்களும் ஜிஹாத் செய்யலாமா?” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ”பெண்களாகிய உங்களுக்கு சிறந்த ஜிஹாத், ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்” என்று கூறினார்கள்✍✍✍* .

*அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)*

*நூல்: புகாரி 1520, 2748*

📚📚📚”உடலுறவு கொள்ளாமல், தீய காரியங்களில் ஈடுபடாமல் யாரேனும் ஹஜ் செய்தால் அன்று பிறந்த பாலகன் போன்று பாவமற்றவராக அவர் திரும்புகிறார்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📚📚📚

*அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)*

*நூல்: புகாரி 1521, 1819, 1920*

*👆👆👆இன்னும் இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் ஹஜ் செய்வதன் சிறப்பையும், அதனால் கிடைக்கும் பயன்களையும் அறிவிக்கின்றன.👈👈👈*

*🌐🌐முதியவர்கள், நோயாளிகள்🕋🕋 ஹஜ் மீது கடமையா❓🌎🌎*

*🌐🌐முதியவர்கள், நோயாளிகள் மீது கடமையா❓🌎🌎*

*👉👉👉சக்தியை பொருத்தது👇👇👇.*

📕📕📕”அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.”📕📕📕

*(திருக்குர்ஆன் 3:97)*

*✍✍✍மேற்கண்ட வசனத்தில் அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை என்று கூறப்படுகிறது. சென்று வரும் சக்தி என்பது வெறும் பொருளாதார வசதி மட்டுமல்ல. பிரயாணம் செய்வதற்கான உடல் நிலையையும் உள்ளடக்கியதாகும்* .
*பிரயாணமே செய்ய முடியாத முதியவர்கள், நோயாளிகள் போன்றோர் எவ்வளவு வசதிகளைப் பெற்றிருந்தாலும், அவர்கள் மீது ஹஜ் கடமையாகாது என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.✍✍✍*

📘📘📘ஒருவர் இளமையுடனும், திடகாத்திரத்துடனும் இருக்கும் போது ஏழையாக இருந்து, தள்ளாத வயதில் பொருள் வசதியைப் பெற்றால் அவர் மீதும் ஹஜ் கடமையாவதில்லை.
இளமையுடனும், திடகாத்திரத்துடனும் இருக்கும் போது பொருள் வசதியைப் பெற்றவர், வேண்டுமென்றே தாமதப்படுத்தி முதிய வயதை அடைந்தால் அவர் மீதுள்ள ஹஜ் கடமை நீங்கி விடாது. அல்லாஹ் மன்னிக்கவில்லையானால் அவர் குற்றவாளியாக இறைவனைச் சந்திக்க நேரும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்📘📘📘
.

*✍✍✍அது போல் ஒருவருக்கு இந்த ஆண்டு ஹஜ் கடமையாவதாக வைத்துக் கொள்வோம். இந்த ஆண்டே ஹஜ் செய்யாமல் மரணிப்பதற்குள் அதைச் செய்து விட அவருக்கு அவகாசம் உள்ளது என்றாலும் தாமதப்படுத்தக் கூடாது.*
*ஏனெனில், அடுத்த ஆண்டு வருவதற்குள் அவருக்கு மரணம் ஏற்படலாம். அல்லது பயணம் மேற்கொள்ள இயலாத அளவுக்கு அவர் பலவீனப்படலாம். அவ்வாறு ஏற்பட்டால் கடமையான பின்பும் அதை நிறைவேற்றத் தவறிய குற்றம் அவரைச் சேரும். நல்ல பலத்துடன் இருக்கும் போதே அவர் மீது ஹஜ் கடமையாகி விட்டால் இப்போதைய பலவீனம் அவருக்கு எந்தச் சலுகைகளையும் தராது.✍✍✍*

*🧘‍♂🧘‍♂🧘‍♀🧘‍♀சிறுவர்கள் 🕋🕋ஹஜ் செய்யலாமா❓🕋🕋*

*👉👉🧘‍♂🧘‍♀சிறுவர்கள் 🕋🕋ஹஜ் செய்யலாமா❓👇👇👇*

:
*👉👉👉செய்யலாம். கடமையில்லை.👈👈👈*

🧘‍♀🧘‍♀🧘‍♂🧘‍♂சிறு குழந்தைகளையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம்🧘‍♀🧘‍♀🧘‍♂🧘‍♂

📙📙📙நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரவ்ஹாஎன்ற இடத்தில் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்தார்கள். இந்தக் கூட்டத்தினர் யார்? என்று விசாரித்தனர். முஸ்லிம்கள்!என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் நீங்கள் யார்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். நான் அல்லாஹ்வின் தூதர்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி சிறு பையனை (குழந்தையை) தூக்கிக் காண்பித்து இவனுக்கு ஹஜ் உண்டா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! கூலி உனக்கு உண்டுஎன்று விடையளித்தார்கள்.📙📙📙

*அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)*

*நூல்: முஸ்லிம் 2377, 2378.*

*✍✍✍நான் ஏழு வயதுடையவனாக இருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் என் தந்தை என்னையும் ஹஜ் செய்ய வைத்தார்கள்✍✍✍*

*அறிவிப்பவர்: ஸாயிப் பின் யஸீத் (ரலி)*

*நூல்: புகாரி 1858*

📗📗📗சிறுவர்கள் மீது ஹஜ் கடமையில்லாவிட்டாலும் அவர்களையும் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸ்கள் விளக்குகின்றன.
சிறு வயதில் ஹஜ் செய்தவர்கள் பருவ வயதை அடைந்து ஹஜ் செய்வதற்கான வசதி வாய்ப்பைப் பெற்றால், அப்போது அவர் ஹஜ் செய்வது கடமையாகும். சிறு வயதில் இவனுக்கு ஹஜ் உண்டா? என்ற கேள்விக்கு, ஆம்! உனக்குக் கூலி உண்டுஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்துள்ளனர். சிறு வயதில் செய்த ஹஜ்ஜின் கூலி அவரை அழைத்துச் சென்ற பெற்றோருக்குச் சேர்வதால் சிறுவரின் கணக்கில் அது சேர்க்கப்படவில்லை என்று அறியலாம்.
ஹஜ்ஜுக்குரிய கூலியை அவர் அடைய வேண்டுமானால் பருவ வயதை அடைந்த பிறகு அவர் வசதி வாய்ப்பைப் பெற்றால் மீண்டும் ஒரு முறை ஹஜ் செய்தாக வேண்டும்📗📗📗.

*🧘‍♂🧘‍♂🧘‍♀🧘‍♀சிறுவயதில் 🕋🕋ஹஜ் செய்துள்ளேன். இப்போது மீண்டும் செய்ய வேண்டுமா❓🧘‍♂🧘‍♀🧘‍♂🧘‍♀*

*👉👉👉நான் எனது தந்தையுடன்🧘‍♀🧘‍♂🧘‍♀🧘‍♂ சிறுவயதில்🕋🕋 ஹஜ் செய்துள்ளேன். இப்போது மீண்டும் செய்ய வேண்டுமா❓ எனக்கு கடமையா❓ கடமை இல்லையா❓🧘‍♀🧘‍♀🧘‍♂🧘‍♂👇👇👇*

*👉👉👉ஆம். கடமை.👈👈👈*

*✍✍✍சிறு வயதில், அதாவது பருவ வயதை அடைவதற்கு முன்னால் ஹஜ் செய்தவர்கள் பருவ வயதை அடைந்து ஹஜ் செய்வதற்கான வசதி வாய்ப்பைப் பெற்றால், அப்போது அவர் ஹஜ் செய்வது கடமையாகும். சிறு வயதில் இவனுக்கு ஹஜ் உண்டா? என்ற கேள்விக்கு, ”ஆம்! உனக்குக் கூலி உண்டு” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்துள்ளனர்.* *சிறு வயதில் செய்த ஹஜ்ஜின் கூலி அவரை அழைத்துச் சென்ற பெற்றோருக்குச் சேர்வதால் சிறுவரின் கணக்கில் அது சேர்க்கப்படவில்லை என்பதை கீழ்காணும் ஹதீஸிலிருந்து அறியலாம்.✍✍✍*

📒📒📒”நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரவ்ஹாஎன்ற இடத்தில் ஒரு பயணக் கூட்டத்தைச் சந்தித்தார்கள். இந்தக் கூட்டத்தினர் யார்? என்று விசாரித்தனர். முஸ்லிம்கள்!என்று அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள் நீங்கள் யார்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டனர். நான் அல்லாஹ்வின் தூதர்என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி சிறு பையனை (குழந்தையை) தூக்கிக் காண்பித்து இவனுக்கு ஹஜ் உண்டா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! கூலி உனக்கு உண்டுஎன்று விடையளித்தார்கள்.”📒📒📒

*அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)*

*நூல்: முஸ்லிம் 2377, 2378.*

*👆👆👆எனவே, ஹஜ்ஜுக்குரிய கூலியை அவர் அடைய வேண்டுமானால் பருவ வயதை அடைந்த பிறகு அவர் வசதி வாய்ப்பைப் பெற்றால் மீண்டும் ஒரு முறை ஹஜ் செய்தாக வேண்டும்.👈👈👈👈*

*🌐🌐உம்ராவின் சிறப்பு என்ன❓🏓🏓*

*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 5*

No comments:

Post a Comment