*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥அமல்களை*
*அதிகரிப்போம் [ 01 ]🔥*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*தொழுகையும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖1⃣0⃣*
*☄ஜமாஅத்துடன்*
*தொழுவது அவசியம் [ 02 ]*
*🏮🍂இரண்டாவது ஜமாஅத் நடத்துவதற்கு மார்க்கம் வழங்கியுள்ள சலுகையைத் தவறாக விளங்கிக் கொண்டு சிலர் ஜமாஅத் நடக்கும் போது கலந்து கொள்ளாமல் தனி ஜமாஅத்தாகப் பிறகு தொழுது கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.* ஏதோ ஒரு முக்கிய வேலையினால் தொழுகை தவறி விடும் போது இரண்டாவது ஜமாஅத் ஏற்படுத்துவது தவறில்லை.
*🏮🍂சரியான காரணம் இருக்க வேண்டும். முடிந்த அளவு முதல் ஜமாஅத்துடன் தொழுவதற்கு முயற்சிக்க வேண்டும். முடியாத பட்சத்தில் தான் அனுமதி உள்ளது. ஆனால் இன்றைக்கு எந்த வித சரியான காரணமும் இல்லாமல் சோம்பறித்தனத்தினால் இரண்டாவது ஜமாஅத் தொழ வைக்கப்படுகிறது. ஒரு ஏகத்துவவாதிக்கு இது அழகல்ல.* தொழுகையில் பிந்துவதை நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا أَبُو الأَشْهَبِ، عَنْ أَبِي نَضْرَةَ الْعَبْدِيِّ، *عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى فِي أَصْحَابِهِ تَأَخُّرًا فَقَالَ لَهُمْ تَقَدَّمُوا فَائْتَمُّوا بِي وَلْيَأْتَمَّ بِكُمْ مَنْ بَعْدَكُمْ لاَ يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ حَتَّى يُؤَخِّرَهُمُ اللَّهُ*
Sahih Muslim 438 a
In-book : Book 4, Hadith 144
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது தோழர்கள் (முதல் வரிசையை விட்டு) பிந்துவதைப் பார்த்தார்கள். எனவே அவர்களிடத்தில், "முந்தி வந்து என்னைப் பின்தொடர்ந்து தொழுங்கள். உங்களுக்குப் பின்னால் வருபவர்கள் உங்களைப் பின் தொடரட்டும். ஒரு கூட்டம் (முதல் வரிசையை விட்டும்) பிந்திக் கொண்டே இருக்கிறது. இறுதியில் அல்லாஹ் அவர்களை (தன் அருளிலிருந்து) பின் தள்ளி விடுவான்'' என்று கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூசயீத் அல் குத்ரீ (ரலி)*
*📚 நூல்: முஸ்லிம் 662 📚*
*🏮🍂அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் விடுத்துள்ள இந்த எச்சரிக்கைகளைக் கேட்ட சில நாட்கள் நாம் முறையாகத் தொழுவோம். பின்பு பழையபடி தொழுகைகளை விட ஆரம்பித்து விடுவோம். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும். தொடர்ந்து செய்யப்படும் வணக்கமே அல்லாஹ்விற்குப் பிடித்தமானதாக இருக்கிறது.*
ﺣﺪﺛﻨﺎ ﻣﺤﻤﺪ ﺑﻦ اﻟﻤﺜﻨﻰ، ﺣﺪﺛﻨﺎ ﻳﺤﻴﻰ، ﻋﻦ ﻫﺸﺎﻡ، ﻗﺎﻝ: ﺃﺧﺒﺮﻧﻲ ﺃﺑﻲ، *ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺩﺧﻞ ﻋﻠﻴﻬﺎ ﻭﻋﻨﺪﻫﺎ اﻣﺮﺃﺓ، ﻗﺎﻝ: «ﻣﻦ ﻫﺬﻩ؟» ﻗﺎﻟﺖ: ﻓﻼﻧﺔ، ﺗﺬﻛﺮ ﻣﻦ ﺻﻼﺗﻬﺎ، ﻗﺎﻝ: «ﻣﻪ، ﻋﻠﻴﻜﻢ ﺑﻤﺎ ﺗﻄﻴﻘﻮﻥ، ﻓﻮاﻟﻠﻪ ﻻ ﻳﻤﻞ اﻟﻠﻪ ﺣﺘﻰ ﺗﻤﻠﻮا» ﻭﻛﺎﻥ ﺃﺣﺐ اﻟﺪﻳﻦ ﺇﻟﻴﻪ ﻣﺎﺩاﻡ ﻋﻠﻴﻪ ﺻﺎﺣﺒﻪ*
_*🍃மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*ஆயிஷா (ரலி)*
*📚 நூல்: புகாரி 43 📚*
*🏮🍂ஜமாஅத் தொழுகைக்குத் தாமதமாக வருவதை நபி (ஸல்) அவர்கள் எச்சரித்திருப்பதுடன் தொழுகைக்காக சீக்கிரம் வந்து காத்திருந்தால் கிடைக்கும் சிறப்புகளைப் பற்றியும் கூறியுள்ளார்கள். அதைப் பற்றிய செய்திகளை நாளைய தொடரில் காண்போம்.
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼..தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment