பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, July 2, 2019

அமல்களை*அதிகரிப்போம - 40

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🍃அமல்களை*
                  *அதிகரிப்போம்[ 06 ]🍃*

*🍃கொள்கை மட்டும் போதாது*
                                    ⤵
                *அமல்களும் வேண்டும்*

            *✍🏻..... தொடர் ➖4⃣0⃣*

*☄குர்ஆனின் சிறப்புகள் [ 01 ]*

*🏮🍂வல்ல ரஹ்மான் இறக்கியருளிய திருக்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் இக்குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரியாமல் இருக்கின்றார்கள்.* போலியான மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப் பற்றி அறிந்து அதன் படி செயல்படுகிறார்கள். *ஆனால் முஸ்லிம்களோ பெயர் தாங்கிகளாக இருந்து வருகின்றார்கள்.*

*🏮🍂இன்னும் சிலர் “குர்ஆன் என்றால் அதை ஓர் உறையில் போட்டுப் பத்திரமாக ஓரிடத்தில் வைக்க வேண்டும்; இறந்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும் போது மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டும்” என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றார்கள். எனவே முஸ்லிம்களுக்கே குர்ஆனைப் பற்றி விளக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கின்றோம்.*

*🏮🍂குர்ஆன் என்பது உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டு வதற்காக இறைவனால் நபி (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட வேதமாகும். இதை அல்லாஹ் தனது திருமறையில் கூறும் போது,*

*شَهْرُ رَمَضَانَ الَّذِىْٓ اُنْزِلَ فِيْهِ الْقُرْاٰنُ هُدًى لِّلنَّاسِ وَ بَيِّنٰتٍ مِّنَ الْهُدٰى وَالْفُرْقَانِۚ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَـصُمْهُ ؕ وَمَنْ کَانَ مَرِيْضًا اَوْ عَلٰى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ اَيَّامٍ اُخَرَؕ يُرِيْدُ اللّٰهُ بِکُمُ الْيُسْرَ وَلَا يُرِيْدُ بِکُمُ الْعُسْرَ وَلِتُکْمِلُوا الْعِدَّةَ وَلِتُکَبِّرُوا اللّٰهَ عَلٰى مَا هَدٰٮكُمْ وَلَعَلَّکُمْ تَشْكُرُوْنَ*

_*🍃இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்.*_

*📖 (அல்குர்ஆன் 2:185) 📖*

*اِنَّ هٰذَا الْقُرْاٰنَ يَهْدِىْ لِلَّتِىْ هِىَ اَقْوَمُ وَ يُبَشِّرُ الْمُؤْمِنِيْنَ الَّذِيْنَ يَعْمَلُوْنَ الصّٰلِحٰتِ اَنَّ لَهُمْ اَجْرًا كَبِيْرًا ۙ‏*
_*🍃இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழி காட்டுகிறது. “நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய் வோருக்கு பெரிய கூலி உள்ளது” என்று நற்செய்தியும் கூறுகிறது.*_

*📖 (அல்குர்ஆன் 17:9) 📖*

*تَبٰـرَكَ الَّذِىْ نَزَّلَ الْـفُرْقَانَ عَلٰى عَبْدِهٖ لِيَكُوْنَ لِلْعٰلَمِيْنَ نَذِيْرَا*
ۙ‏
_*🍃(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.*_

*📖 (அல்குர்ஆன் 25:1) 📖*

இந்தக் குர்ஆனுக்கு இன்னும் பல சிறப்புகள் இருக்கின்றன. அவற்றை வரும் தொடர்களில் காண்போம்...

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment