பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, July 25, 2019

ஹஜ் உம்ரா - 5

*🍇🍇🍇மீள் பதிவு🍇🍇🍇*

*🌐🌐🌐ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*


*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉👉👉தொடர் பாகம் 5👈👈👈*

     *👉தலைப்பு👇*

*🌐🌐உம்ராவின் சிறப்பு என்ன❓🏓🏓*

*👉👉👉உம்ராவின் சிறப்புகள்👇👇👇*

*✍✍✍ஒரு உம்ராச் செய்து விட்டு மற்றொரு உம்ராச் செய்வது அவ்விரண்டுக்கும் இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லைஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)*

*நூல்: புகாரி 1773*

*🌙🌙🌙ரமலானில் 🕋🕋🕋உம்ரா செய்வதின் சிறப்பு என்ன❓🕍🕍🕍*

📕📕📕நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ரமலானில் செய்யும் ஒரு உம்ரா ஒரு ஹஜ்ஜுக்கு நிகரானதாகும்.📕📕📕

*(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1782)*

*🕋🕋🕋உம்ராவின் கிரியைகள்🤲🤲🤲 என்னென்ன❓🕍🕍🕍*

*✍✍✍நபி (ஸல்) அவர்கள் (இஹ்ராம் ஆடை அணிந்து கொண்டு மக்கா) வந்ததும் இறையில்லம் கஃஅபாவை ஏழு முறை தவாப் செய்து விட்டு (பின்) மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுத பின் ஸஃபா மர்வாவுக்கு இடையே ஏழு முறை சஃயு செய்து விட்டு முடியை மழித்தோ அல்லது குறைத்துக் கொண்டோ இஹ்ராமிலிருந்து விடுபடுவார்கள்.✍✍✍*

*(அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: புகாரி) (ஹதீஸ்களின் தொகுப்பு சுருக்கம்)*

*🕋🕋🕋கஅபாவைக் கண்டதும் கேட்கும்🤲🤲🤲 துஆ அங்கீகரிக்கப்படுமா❓🌈🌈🌈*

👉👉👉🕋கஅபாவைக் கண்டதும் கேட்கும் 🤲🤲துஆ அங்கீகரிக்கப்படுமா❓👇👇👇

📘📘📘ஹஜ்ஜுக்குச் செல்லும்போது கஅபத்துல்லாஹ்வைப் பார்த்து (முதல் பார்வையில்) கேட்கப்படும் துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறுகின்றனர் இது சரியா❓
*இல்லை*
கஅபாவை காணும் போது துஆச் செய்ய வேண்டும் என்று வரக்கூடிய ஹதீஸ் பலவீனமானதாகும்.
المعجم الكبير – (ج *8* / ص *169* )

*7713* – حدثنا محمد بن العباس المؤدب ثنا الحكم بن موسى ثنا الوليد بن مسلم عن عفير بن معدان عن سليم بن عامر عن أبي أمامة سمعه يحدث : عن رسول الله صلى الله عليه و سلم قال : تفتح أبواب السماء ويستجاب الدعاء في أربعة مواطن عند التقاء الصفوف في سبيل الله وعند نزول الغيث وعند إقامة الصلاة وعند رؤية الكعبة
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணிகள் சந்திக்கும் போது. 2. மழை பொழியும் போது. 3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது 4. கஅபாவைக் காணும் போது.📘📘📘

*அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)*

*நூற்கள் : தப்ரானீ அல்முஃஜமுல் கபீர், “மஃரிஃபதுஸ் ஸூனன் வல் ஆஸார்” (2092) சுனனுல் குப்ரா (6252)*

*✍✍✍இதன் அறிவிப்பாளர் தொடரில் “உஃபைர் பின் மஃதான்“ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றி விமர்சனம் செய்துள்ள அனைத்து அறிஞர்களும் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.*
ميزان الاعتدال – (ج *3* / ص *83* )

[ عفير ] *5679* – عفير بن معدان [ ق ] الحمصى المؤذن، أبو عائذ. عن عطاء، وقتادة، وسليم بن عامر. وعنه أبو اليمان، والنفيلي، وجماعة. قال أبو داود: شيخ صالح ضعيف الحديث. وقال أبو حاتم: يكثر عن سليم، عن أبي أمامة بما لا أصل له. وقال يحيى: ليس بشئ. وقال – مرة: ليس بثقة. وقال أحمد: منكر الحديث، ضعيف.
*இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என அபூதாவூத் கூறியுள்ளார்.*
*அபூ உமாமாவிடமிருந்து ஸலீம் என்ற அறிவிப்பாளர் வழியாக அடிப்படை இல்லாத விசயங்களை அதிகம் அறிவித்துள்ளார் என அபூ ஹாத்திம் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்*
*இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத்தக்கவரில்லை என்று்ம் இவர் நம்பகமானவர் இல்லை என்றும் யஹ்யா பின் மயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்*
*இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கத்தக்கவர், பலவீனமானவர் என்று அஹ்மத் கூறியுள்ளார்.✍✍✍*

*(மீஸானுல் இஃதிதால் பாகம் : 3 பக்கம் : 83)*

📙📙📙எனவே மேற்கண்ட செய்தி மிகவும் பலவீனமாதாகும்.
கஅபாவைக் காணும் போது துஆச் செய்ய வேண்டும் என்பதற்கோ, குறிப்பிட்ட துஆக்களை ஓத வேண்டும் என்பதற்கோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபத்துல்லாஹ்வைப் பார்த்தால் இரு கைகளையும் உயர்த்தி இறைவா! இந்த ஆலயத்திற்கு கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகப்படுத்து. (எதிரிகளுக்கு) அச்சத்தையும் அதிகப்படுத்து. இந்த ஆலயத்தின் கண்ணியம், மரியாதையின் காரணத்தால் (இந்த ஆலயத்தை) ஹஜ் செய்பவர்களுக்கும் உம்ரா செய்யபவர்களுக்கும் கண்ணியத்தையும் மரியாதையையும் நன்மையையும் அதிகப்படுத்து என்று பிரார்த்தனை செய்வார்கள்.📙📙📙

*அறிவிப்பவர் : இப்னு ஜுரைஜ்,*

*நூல் : முஸ்னத் ஷாஃபீ*

*✍✍✍இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட வேண்டுமானால் அதை நபித்தோழர்கள் மட்டுமே குறிப்பிட முடியும். இவர் அடுத்த காலத்தில் வாழ்ந்தவர் என்பதால் இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது.*
*அதே நேரத்தில் கஃபத்துல்லாஹ்விற்கு உள்ளே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.*
*(மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்து திசைகளிலும் பிராத்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்) தொழாமலேயே அதிலிருந்து வெளியேறி விட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே (நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, “இதுதான் கிப்லா (தொழும் திசை) என்று சொன்னார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),*

*நூல் : புகாரி 398*

*🧕🧕🧕பெண்கள் விசிட் விசாவில்🕋🕋🕋 உம்ராச் செய்யலாமா❓🧕🧕🧕*

📗📗📗கேள்வி என்னுடைய தாயாரைக் குவைத்திற்கு விசிட் விசாவில் வரவழைத்து உம்ராவுக்கு அனுப்புவது கூடுமா❓
*பதில்* :
ஒருவரை விசிட் விசாவில் வெளிநாட்டிற்கு அழைத்து அங்கிருந்து உம்ராவிற்கு அனுப்பவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. இதில் தடுக்கப்பட்ட எந்த அம்சமும் இல்லை📗📗📗.

*🌎சலவாத் கூறிவிட்டுத் தான் 🤲🤲🤲துஆ கேட்கவேண்டுமா❓🌎*

*👉👉👉சலவாத் கூறிவிட்டுத் தான் துஆ கேட்கவேண்டுமா❓👇👇👇*

*✍✍✍சிலர் “துஆ கேட்கும் போது அல்லாஹ்வை புகழ்ந்து , நபி( ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொன்ன பிறகு தான் நம் தேவைகளை கேட்க வேண்டும். துஆவை முடிக்கும் போதும் ஸலவாத் சொல்லித் தான் முடிக்க வேண்டும். இப்படி கேட்டால் தான் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்” என்கிறார்கள். இதற்கு திர்மிதியில் ஹதீஸ் உண்டு என்கிறார்கள். அது ஆதாரப்பூர்வமான ஹதீஸா? இப்படித் தான் கேட்க வேண்டுமா❓*
*இல்லை.*
*பொதுவாக எப்போது பிரார்த்தனை செய்தாலும் முதலில் இறைவனைப் போற்றிப் புகழ வேண்டும். பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலாவாத்துக் கூற வேண்டும். இதன் பிறகே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சிலர் கூறிவருகிறார்கள்.*
*இதற்கு திர்மிதி அபூதாவூத் ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கூறுகின்றனர். ஆனால் இவர்கள் கூறுவது போல் அனைத்து பிராத்தனைகளிலும் இந்த ஒழுங்கு முறை பேணப்பட வேண்டும் என அந்த ஹதீஸ் கூறவில்லை.*
*மாறாக அந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் தொழுகையில் அத்தஹிய்யாத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைக்கு மட்டுமே இந்த ஒழுங்கு முறையைக் கடைபிடிக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதை அறியலாம்.✍✍✍*

*1266* حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ حَدَّثَنَا حَيْوَةُ أَخْبَرَنِي أَبُو هَانِئٍ حُمَيْدُ بْنُ هَانِئٍ أَنَّ أَبَا عَلِيٍّ عَمْرَو بْنَ مَالِكٍ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ صَاحِبَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَدْعُو فِي صَلَاتِهِ لَمْ يُمَجِّدْ اللَّهَ تَعَالَى وَلَمْ يُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجِلَ هَذَا ثُمَّ دَعَاهُ فَقَالَ لَهُ أَوْ لِغَيْرِهِ إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِتَمْجِيدِ رَبِّهِ جَلَّ وَعَزَّ وَالثَّنَاءِ عَلَيْهِ ثُمَّ يُصَلِّي عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ يَدْعُو بَعْدُ بِمَا شَاءَ رواه أبو داود ( *3399* ترمذي)

📒📒📒ஒரு மனிதர் தனது தொழுகையில் அல்லாஹ்வை (புகழ்ந்து) கண்ணியப்படுத்தாமலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லாமலும் பிரார்த்தனை செய்ததை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். இவர் அவசரப்பட்டு விட்டார் என்று கூறி அம்மனிதரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அவரிடம் அல்லது மற்றவரிடம் உங்களில் ஒருவர் தொழு(கையில் பிரார்த்தித்)தால் முதலில் மாண்பும் வலிமையும் மிக்க தனது இறைவனை அவர் புகழ்ந்து கண்ணியப்படுத்தட்டும். பிறகு (உங்கள்) நபியின் மீது ஸலவாத்துச் சொல்லட்டும். இதற்குப் பிறகு அவர் விரும்பியதை வேண்டலாம் என்று கூறினார்கள்.📒📒📒

*அறிவிப்பவர் : ஃபளாலா பின் உபைத் (ரலி)*
*நூல் : அபூதாவுத் (1266) திர்மிதீ (3399)*

*✍✍✍தொழுகையின் இறுதி அமர்வில் நாம் ஓத வேண்டியவற்றை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். முதலில் அத்தஹிய்யாத் ஓதி இறைவனைப் புகழ வேண்டும். இதன் பிறகு ஸலவாத்துச் சொல்ல வேண்டும். ஆனால் மேற்கண்ட சம்பவத்தில் அந்த நபித்தோழர் இவற்றைச் செய்யாமல் எடுத்த எடுப்பில் பிரார்த்தனையைத் துவங்கி விடுகிறார். அத்தஹிய்யாத் அமர்வில் ஓத வேண்டியதை ஓதாமல் விட்டு விடுகின்றார். இச்செயலையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கின்றார்கள்.*
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகைக்கு வெளியில் எத்தனையோ பிரார்த்தனைகளைச் செய்துள்ளார்கள். நமக்கும் பல பிரார்த்தனைகளைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.*
*உதாரணமாக கழிவறைக்குள் நுழையும் முன்பு இறைவா ஆண் பெண் ஷைத்தான்களின் தீங்குகளிலிருந்து உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்றும் கழிவறையிலிருந்து வெளியேறும் போது இறைவா உன் மன்னிப்பை வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்கள்.✍✍✍*

📓📓📓மேற்கண்ட பிரார்த்தனையை அல்லாஹ்வை போற்றி நபியவர்கள் மீது ஸலவாத்துக் கூறிய பிறகு தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. இது போன்று வெறுமனே பிரார்த்தனை வாசகங்கள் மட்டும் அடங்கிய எண்ணற்ற துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே இறைவனிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதற்கும் ஹதீஸ்களில் எண்ணற்ற ஆதாரங்கள் உள்ளன.
எனவே அல்லாஹ்வைப் புகழ்ந்து நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்லிய பிறகு தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று மார்க்கம் நிபந்தனையிடவில்லை.
ஒவ்வொரு துஆவின் போதும் ஒருவர் அல்லாஹவைப் புகழ்ந்து பின்னர் ஸலவாத்து ஓதி அதன் பின்னர் கோரிக்கையைக் கேட்டால் அது தடுக்கப்பட்டதல்ல. ஆனால் அது துஆவுக்கான நிபந்தனைகளில் ஒன்றாக மார்க்கம் கூறவில்லை📓📓📓

*🤲🤲🤲கைகளை உயர்த்தி தான் பிரார்த்திக்க வேண்டுமா❓🤲🤲🤲*

*✍✍✍நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகளின்போது கைகளை உயர்த்தி பிரார்த்தித்ததால் நாமும் கைகளை உயர்த்தி பிரார்த்திப்பது தான் சுன்னத் என்பது சரியா? அரபாவில் மட்டும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தால் போதுமா❓*
*பொதுவாக சாப்பிடும் போது, சாப்பிட்டு முடித்ததும், கழிவறை செல்லும் போது. படுக்கும் போது போன்ற அன்றாடப் பழக்கவழக்கங்களின் துஆக்களைத் தவிர இதர துஆக்களில் கையை உயர்த்துவது நபிவழியாகும். அரஃபா உள்ளிட்ட எந்த இடத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் இது பொருந்தும்.✍✍✍*

*🌐நாள் கணக்கின்றி தொடர் 🧕🧕🧕உதிரப்போக்கு இருந்தால்❓🌐*

📔📔📔தொடர் உதிரப்போக்கு போல் நாள் கணக்கின்றி தொடர்ந்து, அதே சமயம் அதிகமாகவும் இல்லாமல் மிகக் கொஞ்சமாக தொடர்ந்து மாதவிடாய் இருப்பதை இஸ்திஹாளா (தொடர் உதிரப் போக்கு) கணக்கில் எடுத்துக் கொண்டு தொழுகை, தவாஃப், ஸயீ போன்ற அமல்களை செய்யலாமா❓
மூன்று அல்லது ஏழு என ஒரு பெண்ணுக்கு வழக்கமாக வரக்கூடிய நாட்களைத் தாண்டி அதிகமான நாட்கள் உதிரப் போக்கு ஏற்பட்டால் அது இஸ்திஹாளா தான். இரத்தம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்கüடம் (வந்து), “நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவளாக இருக்கின்றேன்; (தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்படுவதால்) நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். (மாதவிடாயன்று). ஆயினும் (மாதத்தில்) வழக்கமாக உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அளவிற்குத் தொழுகையை விட்டுவிடு! பிறகு குüத்துவிட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்து) தொழுதுகொள்!” என்றார்கள்.📔📔📔

*நூல்: புகாரி 325*

*🕋🕋உம்ரா என்றால் என்ன❓🕋🕋*

*👉👉👉உம்ரா என்றால் என்ன❓👇👇👇*


*✍✍✍இஹ்ராம் கட்டி கஃபாவில் தவாஃப் செய்து*
*இரண்டு ரக்அத்கள் தொழுது ஸஃபா* *மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது ஆகியவையே உம்ராவாகும்.*
*அதன் பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியைக் குறைத்து* *இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.*
*உம்ரா முடித்து, தலையை மழித்து, அல்லது முடியைக் குறைத்து முடித்தவுடன் குர்பானி ஏதும் கொடுக்கத் தேவையில்லை.✍✍✍*

📚📚📚🕋ஹஜ்ஜுக்காக குறிப்பிட்ட நாட்களில் தான் இஹ்ராம் கட்ட வேண்டும். குறிப்பிட்ட நாட்களில் தான் அதை நிறைவேற்ற வேண்டும். உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. எல்லா நாட்களிலும் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டி அதை நிறைவேற்றலாம்.
தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டி மக்காவில் தங்கியிருப்பவர்களும், மக்காவாசிகளும் ஹஜ்ஜுக்காக மக்காவிலேயே இஹ்ராம் கட்டலாம்.
ஆனால், இவர்கள் உம்ராவுக்காக மக்கா எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு மக்காவுக்குள் நுழைய வேண்டும்.📚📚📚

*🕋🕋உம்ரா மற்றும் 3 வகை🕋🕋🕋 ஹஜ் வேறுபாடு என்ன❓🕋🕋*

*👉👉👉உம்ரா – 3 வகை ஹஜ் வேறுபாடு என்ன❓👇👇👇*

*✍✍✍நபில் தொழுகை 2 ரகஅத், பின் லுஹர் தொழுகை 4 ரகஅத் ஆகியவை எப்படி தனித்தனி வணக்கங்களோ, அதே போன்று உம்ரா மற்றும் ஹஜ் ஆகிய இரண்டும் தனித்தனி வணக்கங்களாகும்.*
*உம்ரா என்பது குறைவான* *செயல்களைக் கொண்ட ஒரு வணக்கம். உம்ரா கட்டாயக்* *கடமையில்லை. ஹஜ் என்பது கூடுதலான* *செயல்களைக் கொண்ட ஒரு வணக்கம். பர்ளான தொழுகையைப்* *போன்று, சக்தி பெற்றவர் மீது ஹஜ் கட்டாயக் கடமை.*
*ஹஜ்ஜை தமத்தூ என்ற வகையில் செய்தால், அதிலேயே ஹஜ்ஜும், உம்ராவும் அடங்கி* *விடுகின்றன. எனவே,* *பெரும்பாலானவர்கள் ”தமத்தூ ஹஜ்” செய்வதையே* *விரும்புகின்றனர்.✍✍✍*

*👉👉👉இனி விரிவாக👇👇👇*

*👉உம்ரா என்பது :👇*

📕📕📕இஹ்ராம் கட்டி
கஅபாவில் தவாஃப் செய்து
இரண்டு ரக்அத்கள் தொழுது
ஸஃபா மர்வாவுக்கிடையே ஏழு தடவை ஓடுவது
பிறகு தலையை மழித்து அல்லது சிறிதளவு முடியை குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபடுவது.
ஆகியவையே உம்ராவாகும்.
குறிப்பு : ஹஜ்ஜை குறிப்பிட்ட நாட்களில் தான் நிறைவேற்ற முடியும். ஆனால், உம்ராவுக்கென்று குறிப்பிட்ட நாட்கள் கிடையாது. வருடத்தின் எல்லா நாட்களிலும் உம்ராவை நிறைவேற்றலாம்.📕📕📕

*✍✍✍ஹஜ் என்பது : மினா, அரஃபா, முஸ்தலிஃபா, மீண்டும் மினாவில் சில காரியங்கள், தவாஃபுல் இஃபாளா, பிறகு துல்ஹஜ் 11, 12, 13 நாட்களில் கல்லெறிதல் என ஏராளமான கிரியைகள் ஹஜ்ஜில் உள்ளன. மூன்று வகையான ஹஜ்ஜுகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை மட்டும் இங்கு சுருக்கமாக காண்போம்!✍✍✍*

*📘📘📘மூன்று வகை : ஹஜ்ஜில் மூன்று வகைகள் உள்ளன.*  வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஹஜ் எனும் வணக்கத்திற்காக மூன்று வகையாக இஹ்ராம் கட்டலாம். அதில் முதல் வகை தமத்துவ் எனப்படும். இஹ்ராம் என்றால் சில கட்டுப்பாடுகளை பின்பற்றிய நிலையில், குறிப்பிட்ட வார்த்தைகளை கூறுவதாகும். இனிவரும் செய்திகளில் இஹ்ராம் அல்லது இஹ்ராம் கட்டுதல் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படும். அப்போதல்லாம் இதை நினைவு படுத்திக் கொள்ளவும்.📘📘📘

*👉👉👉தமத்துவ் ஹஜ்👇👇👇*

*✍✍✍முதலில் உம்ரா: ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் மாதத்தின் பத்து நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்கள் என்பதை நாம் அறிவோம்.  ஹஜ்ஜுடைய இந்த மாதங்களில் இஹ்ராம் கட்டுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில், முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் மக்கா சென்று, முதலில் உம்ராவை நிறைவேற்றி விட்டு, தலை முடியை சிறிதளவு குறைத்துக் கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும்.*
*பின்னர்: இஹ்ராம் இல்லாமல் அவர் மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும்.*
*பிறகு ஹஜ் : துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று, மீண்டும் ஒரு தடவை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டும். அதன் பிறகு ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும்.*
*இப்போது மீண்டும் தவாஃபுல் குதூம், 2 ரகஅத், ஸஃபா-மர்வா, முடி குறைத்தல் உண்டா? அல்லது இஹ்ராம் கட்டி, நிய்யத் கூறி, துல்ஹஜ்-8 அன்று நேரடியாக மினாவிற்கு செல்ல வேண்டுமா❓✍✍✍*

*👆👆👆இதற்கு தமத்துவ் என்று கூறப்படுகின்றது👈👈👈.*

*👉👉👉முதலில் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும் போது ”லப்பைக்க உம்ரதன்” என்றும்,👇👇👇*

*👆👆👆பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும் போது, ”லப்பைக்க ஹஜ்ஜன்” என்றும் கூறி இஹ்ராம் கட்ட வேண்டும்.👈👈👈*

*👉👉👉கிரான் ஹஜ்👇👇👇*

📙📙📙கிரான் என்றால் சேர்த்துச் செய்தல் என்பது பொருள். அதாவது, இஹ்ராம் கட்டும் போது, ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். ”லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்” என்று கூறுவதன் மூலம் இவ்வாறு இஹ்ராம் கட்டலாம்.
ஒரு இஹ்ராமில் உம்ராவையும், ஹஜ்ஜையும் நிறைவேற்றுவதால் இது கிரான் (உம்ராவையும், ஹஜ்ஜையும் சேர்த்துச் செய்தல்) எனப்படுகின்றது.
இதில் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் உம்ரா என்று எதையும் தனியாகச் செய்வதில்லை. ஆனால், தமத்துவ் செய்பவர் முதலில் உம்ரா செய்வார். பிறகு, ஓய்வு எடுத்து விட்டு, பிறகு ஹஜ் செய்வார். கிரான் செய்பவர் ஹஜ்ஜை மட்டும் செய்துவிட்டு, ஹஜ்-உம்ரா இரண்டின் நன்மைகளையும் பெற்றுவிடுகிறார்.
அதாவது, கஅபாவில் நுழைந்தவுடன் செய்யும் தவாஃபுல் குதூம் செய்து விட்டு, இஹ்ராமைக் களையாமல் எட்டாம் நாளில் இருந்து ஹஜ்ஜின் கிரியைகளை அவர் செய்ய வேண்டும். ஹஜ் செய்பவர் எவற்றைச் செய்வாரோ அவற்றை மட்டும் செய்ய வேண்டும். ஆனாலும் இவர் ஹஜ்ஜும், உம்ராவும் செய்தவராகக் கருதப்படுவார்.📙📙📙

*👉👉👉அப்படி எனில், நாம் கிரானே செய்து விடலாமே!👈👈👈*

*ஹஜ்ஜை மட்டும் செய்து, ஹஜ், உம்ரா ஆகிய இரண்டின் நன்மைகளையும் பெற்றுத் தரும் கிரானை செய்ய விரும்பினால், நீங்கள் கிளம்பும் போதே ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற பலிப் பிராணியை உங்களோடு அழைத்து வந்திருக்க வேண்டும். மேலும், பலியிடும் வரை இஹ்ராமைக் களைய முடியாது. இந்த இரண்டு நிபந்தனைகளையும் உங்களால் நிறைவேற்ற முடியுமெனில் நீங்கள் கிரான் செய்ய முடியும். இல்லையெனில் தமத்துவ் தான் சிறந்தது.*

*ஹஜ் செய்பவர் எவற்றைச் செய்வாரோ என்றால் என்ன? ஹஜ் செய்பவர் எவற்றை செய்வார்?*

*அதாவது மினாவில் 5 வேளை* *தொழுவதிலிருந்து ஆரம்பிக்கும்* *கிரியைகள், மினா, அரஃபா, முஸ்தலிஃபா, மீண்டும் மினா, பிறகு கல்லெறிதல், குர்பானி கெடுத்தல், முடி* *மழித்தல், தவாஃபுல் இஃபாளா, பிறகு துல்ஹஜ் 11, 12, 13 நாட்களில் கல்லெறிதல் – இவைகள் தான் ஹஜ் செய்பவர் செய்யும் கிரியைகள்.✍✍✍*

*👉👉👉இஃப்ராத் ஹஜ்👇👇👇*

📗📗📗இஃப்ராத் என்றால் தனித்துச் செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமிடத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் லப்பைக்க ஹஜ்ஜன் என்று கூறி இஹ்ராம் கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும். ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பிறகு விரும்பினால் உம்ராச் செய்யலாம்.
இவ்வாறு ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டியவர்கள் குர்பானி எதனையும் கொடுக்க வேண்டியதில்லை.
குர்பானி கொடுப்பது. இஹ்ராம் கட்டும் போது நிய்யத் செய்வது ஆகிய இரண்டு விஷயத்தைத் தவிர இஃப்ராத் என்பதற்கும் கிரான் என்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
ஆயினும், கிரான் என்று நிய்யத் செய்தவர் ஹஜ், உம்ரா இரண்டையும் செய்த நன்மையை அடைகிறார்.
இஃப்ராத் என்று நிய்யத் செய்தவர் ஹஜ் மட்டும் செய்தவராக ஆகின்றார்.
மக்காவில் வசிப்பவர்கள்,  இந்த வகையான இஹ்ராம் மட்டுமே கட்டி ஹஜ்ஜை நிறைவேற்ற வேண்டும். மற்றவர்கள் இந்த மூன்று வகைகளில் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இவற்றுக்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.
நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம், உங்களில் ஹஜ்ஜுக்கும் உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும். உம்ராவுக்கு இஹ்ராம் கட்டுபவர் அவ்வாறே செய்யட்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். அவர்களுடன் சிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மற்றும் சிலர் ஹஜ்ஜுக்கும், உம்ராவுக்கும் இஹ்ராம் கட்டினார்கள். இன்னும் சிலர் உம்ராவுக்கு இஹ்ராம் கட்டினார்கள். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினேன்.📗📗📗

*அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)*

*நூல்கள்: புகாரி 317, 1562*

*✍✍✍நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்ததும் உங்களில் கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு வந்தவர் ஹஜ்ஜை நிறைவேற்றும் வரை இஹ்ராமிலிருந்து விடுபட முடியாது. உங்களில் குர்பானிப் பிராணியைக் கொண்டு வராதவர் கஃபாவைத் தவாஃப் செய்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடி முடியைக் குறைத்து (உம்ராவை முடித்தவராக) இஹ்ராமிலிருந்து விடுபடட்டும்; பிறகு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி, (ஹஜ்ஜை நிறைவேற்றிய பின்) குர்பானி கொடுக்கட்டும்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)*

*நூல்: புகாரி 319*

📒📒📒நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக ஆரம்பத்தில் இஹ்ராம் கட்டினாலும், பிறகு இறைவனது கட்டளைப் பிரகாரம் அதற்குள் உம்ராவையும் சேர்த்துக் கொண்டார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகீக் எனும் பள்ளத்தாக்கை அடைந்த போது, ”என் இறைவனிடமிருந்து ஒரு (வான)வர் என்னிடம் வந்தார். இந்தப் பாக்கியம் நிறைந்த பள்ளத்தாக்கில் தொழுவீராக! உம்ரதுன் பீஹஜ்ஜதின் (ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்க்கிறேன்.) என்று கூறுவீராக என்று கூறினார்” எனக் குறிப்பிட்டார்கள்.📒📒📒

*அறிவிப்பவர்: உமர் (ரலி)*

*நூல்: புகாரி 1534, 2337, 7343*

*✍✍✍ஹஜ்ஜுடன் உம்ராவையும் சேர்த்துச் செய்வதாக முடிவு* *செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாக உம்ராச் செய்யவில்லை.* *ஆரம்பமாக நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஸ்களில் இருந்து* *இதை நாம் அறியலாம். கையோடு குர்பானிப் பிராணியைக் கொண்டு சென்றவர் கிரான்* *அடிப்படையில் இஹ்ராம் கட்டுவதே சிறந்தது. அவ்வாறு* *கொண்டு செல்லாதவர்கள்* *தமத்துவ் அடிப்படையில் இஹ்ராம் கட்டுவது சிறந்ததாகும்.*
*மேலே நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸிலிருந்தும் பின்வரும் ஹதீஸிலிருந்தும் இதை நாம் அறியலாம்.*
*மக்களெல்லாம் உம்ராவை முடித்து, இஹ்ராமிலிருந்து விடுபட்ட நிலையில் நீங்கள்* *இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே ஏன்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான்* *கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் குர்பானிப்* *பிராணியைக் கையோடு கொண்டு வந்து விட்டேன். எனவே* *ஹஜ்ஜை முடிக்காமல் நான் இஹ்ராமிலிருந்து விடுபட மாட்டேன் என்று விடையளித்தார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி)*

*நூல்கள்: புகாரி 1568*

*🕍🕍🕍மதீனா பள்ளியில் தொழுவதன் நன்மைகள் யாவை❓🕍🕍🕍*

*இன்ஷாஅல்லாஹ்தொடரும் பாகம் 6*

No comments:

Post a Comment