பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, July 14, 2019

சர்ச்சைக்குரிய ஹதீஸ்கள - 17

*🌐🌐🌐சர்ச்சைக்குரிய ஹதீஸ்கள்🌐🌐🌐*

*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*📚📚📚ஹதீஸ் சர்ச்சைக்குரியவை, மாற்றப்பட்ட நிலைப்பாட்டின் தொடர்📚📚📚*

*👉 தொடர் பாகம் 17👈*

*🌐மாற்றப்பட்ட நிலைப்பாடு*
*பயணத்தொழுகை சுருக்கப்பட்டது🌎!*

*✍✍✍அல்லாஹ் தொழுகையை கடமையாக்கிய போது ஊரிலிருந்தாலும் பிரயாணத்திலிருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கினான்.* *பிரயாணத்தில் தொழுகை இரண்டு ரக்அத்தாகவே* *ஆக்கப்பட்டு பிரயாணம் அல்லாத போதுள்ள தொழுகை* *அதிகரிக்கப்பட்டது.✍✍✍*

*அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)*

*நூல் : புகாரி (350)*

📕📕📕இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது பிரயாணத்தொழுகை எந்த விதமான மாற்றத்திற்கும் உள்ளாகாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்து இரண்டு ரக்அத்தாகவே இருந்தது என்றக் கருத்தைத் தருகிறது. ஆனால் திருக்குர்ஆன் பயணத்தொழுகையைப் பற்றி பேசும்போது நான்கு ரக்அத்துகளிலிருந்து இரண்டு ரக்அத்துகளாக பயணத்தொழுகை சுருக்கப்பட்டது என்று கூறுகிறது.
நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது (ஏக இறைவனை) மறுப்போர் உங்களைத் தாக்கக்கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது. (ஏக இறைவனை) மறுப்போர் உங்களுக்குப் பகிரங்க எதிரிகளாகவுள்ளனர்.📕📕📕

*அல்குர்ஆன் (4 : 101)*

*✍✍✍முழுமையான ஒன்றிலிருந்து தான் சுருக்கமுடியும். பயணத்தில்* *தொழுகையை சுருக்குவதாக இருந்தால் முதலில் நான்கு ரக்அத்துகள்* *தொழ வேண்டும் என்று சட்டம் இருந்திருக்க வேண்டும். இந்த நான்கு ரக்அத்துகளிலிருந்து* *இரண்டாக பயணத்தில் தொழுகை* *குறைக்கப்பட்டிருக்க வேண்டும்.*
*ஆயிஷா (ரலி) அவர்கள் பயணத்தொழுகையை குறிப்பிடும் போது நான்கிலிருந்து சுருக்கப்பட்டது என்று கூறாமல் தொழுகை கடமையாக்கப்பட்ட காலத்திலிருந்தே பயணத்தொழுகை எந்தவிதமான மாற்றமும்* *செய்யப்படாமல் இரண்டுரக்அத்துகளாகவே இருப்பதைப் போன்று* *கூறியுள்ளார்கள். எனவே இவர்கள் கூறும் கருத்து குர்ஆனிற்கு முரண்பாடாக* *இருப்பதால் இதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கூறினோம்.✍✍✍*

📘📘📘முரண்பாடில்லை
இந்த ஹதீஸை சரிகாணுபவர்கள் இதற்கு கூறிய விளக்கத்தையும் நாம் ஆராய்ந்ததன் மூலம் கிடைத்த விளக்கத்தையும் வைத்துப் பார்த்தால் இந்த ஹதீஸை முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ள வாய்ப்புள்ளது. இவர்கள் கூறும் விளக்கத்திற்கு முறையான ஆதாரங்கள் இருப்பதால் இந்த விளக்கத்தை நாம் ஏற்றுத் தான் ஆகவேண்டும்.
சத்தியத்தை தெரிவது தான் நம்முடைய நோக்கமே தவிர நாம் கூறிய கருத்துக்களை எப்படியாவது சரிகாண வேண்டும் என்று நாம் பிடிவாதம் பிடிக்கமாட்டோம். எனவே ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை பின்வரும் முறையில் முரண்பாடில்லாமல் விளங்கிக்கொள்ளலாம்.📘📘📘

*✍✍✍நபி (ஸல்) அவர்கள் மக்காவில் வாழும் போது கடமையானத் தொழுகை இரண்டு ரக்அத்துகளாக இருந்தது. மதீனாவிற்கு அவர்கள் வந்தவுடன் நான்கு ரக்அத்துகளாக மாற்றப்பட்டது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*
*(மக்காவில்) தொழுகை இரண்டு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து சென்ற பின் நான்கு ரக்அத்துகளாகக் கடமையாக்கப்பட்டது. மேலும் பிரயாணத் தொழுகை மட்டும் முன்பு கடமையாக்கப்பட்டிருந்தவாறே (இரண்டு ரக்அத்தாகவே இருக்கட்டுமென்று) விட்டுவிடப்பட்டது.✍✍✍*

*அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)*

*நூல் : புகாரி (3935)*

📙📙📙மதீனாவிற்கு வருவதற்கு முன்பு மக்காவில் இரண்டு ரக்அத்துதான் கடமையாக்கப்பட்டிருந்தது என்றக் கருத்தை ஆயிஷா (ரலி) அவர்கள் மட்டும் சொல்லவில்லை. அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்களும் இந்தக் கருத்தை கூறியுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வரும் வரை லுஹர் தொழுகையை இரண்டு இரண்டாகத் தான் தொழுதுவந்தார்கள்📙📙📙.

*அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)*

*நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான் பாகம் : 6 பக்கம் : 143*

*✍✍✍தொழுகையை இரண்டாக சுருக்கிக் கொள்ளுவதற்கு அனுமதியளிக்கும் வசனம் மதீனாவில் இறங்கியது என்றக் கருத்தை இப்னுல் அசீர் தவ்லாபீ மற்றும் சுஹைலீ போன்ற அறிஞர்கள் பதிவுசெய்துள்ளார்கள்*  *நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த உடன் தொழுகை நான்காக மாற்றப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் இரண்டு ரக்அத்தை சுருக்கிக்கொள்ளலாம் என்று வசனம் இறங்கியது. இதனால் ஊரில் நான்கு ரக்அத்துகளாகவும் பிரயாணத்தில் இரண்டு ரக்அத் தொழுகவும் கடமையாக்கப்பட்டது. இறுதியில் முடிவாக்கப்பட்ட இந்த நிலையைத் தான் ஆயிஷா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் முரண்பாடு வராது.✍✍✍*

📒📒📒தொழுகை நான்கு ரக்அத்துகளாக மாற்றப்ட்டது. பின்பு வசனம் இறங்கியதால் இரண்டாக குறைக்கப்பட்டது என்ற விளக்கம் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியில் இல்லாததால் அது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறினோம். ஆனால் இந்த விளக்கம் வேறு ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகிவிட்டதால் முரண்பாடு எதுவும் இல்லாமல் இதை விளங்கிக்கொள்ள முடியும்.
முதலில் இரண்டு ரக்அத் கடமையாக இருந்தது. மதீனாவிற்கு வந்த உடன் நான்காக மாற்றப்பட்டதால் முன்பிருந்த தொழுகையை விட இரண்டு ரக்அத் அதிகமாக்கப்பட்டது. இதன் பிறகு பயணத்தில் குறைத்துக்கொள்ளும் படி வசனம் இறங்கியதால் மதீனாவில் இருக்கும் போது பயணத்தில் இரண்டு ரக்அத் தொழவேண்டும் என்ற பழைய சட்டம் இறுதியாக அப்படியே வைக்கப்பட்டுவிட்டது என்பதே ஆயிஷா (ரலி) அவர்களுடைய கூற்றின் விளக்கம்.📒📒📒

*👆👆👆முரண்பாடு நீங்கிவிட்டதால் இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளலாம்.👈👈👈*

*🌐பாதிரியார்களை கடவுளாக எடுத்துக்கொள்ளுதல்🌎*

📓📓📓பாதிரியார்களை கடவுளாக எடுத்துக்கொள்ளுதல்

*3020* حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ يَزِيدَ الْكُوفِيُّ حَدَّثَنَا عَبْدُ السَّلَامِ بْنُ حَرْبٍ عَنْ غُطَيْفِ بْنِ أَعْيَنَ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي عُنُقِي صَلِيبٌ مِنْ ذَهَبٍ فَقَالَ يَا عَدِيُّ اطْرَحْ عَنْكَ هَذَا الْوَثَنَ وَسَمِعْتُهُ يَقْرَأُ فِي سُورَةِ بَرَاءَةٌ اتَّخَذُوا أَحْبَارَهُمْ وَرُهْبَانَهُمْ أَرْبَابًا مِنْ دُونِ اللَّهِ قَالَ أَمَا إِنَّهُمْ لَمْ يَكُونُوا يَعْبُدُونَهُمْ وَلَكِنَّهُمْ كَانُوا إِذَا أَحَلُّوا لَهُمْ شَيْئًا اسْتَحَلُّوهُ وَإِذَا حَرَّمُوا عَلَيْهِمْ شَيْئًا حَرَّمُوهُ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ عَبْدِ السَّلَامِ بْنِ حَرْبٍ وَغُطَيْفُ بْنُ أَعْيَنَ لَيْسَ بِمَعْرُوفٍ فِي الْحَدِيثِ رواه الترمذي

என் கழுத்தில் தங்கத்தால் ஆன சிலை இருக்கும் நிலையில் நபிகளாரிடம் சென்றேன். அப்போது இந்த சிலையை எரிந்துவிடுங்கள் என்று கூறினார்கள். பின்னர் பராஅத் (தவ்பா) அத்தியாயத்தின் (31 வது வசனமான) அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், கடவுள்களாக்கினர். என்பதை ஓதினார்கள். மேலும் இவர்கள், அவர்களை வணங்கவில்லை. மாறாக அவர்கள் ஏதாவது ஒன்றை ஹராம் என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) இவர்களும் ஹராமாக்கிக்கொள்வார்கள். ஏதாவது ஒன்றை அவர்களுக்கு ஹராம் என்று கூறினால் (ஆய்வு செய்யாமல்) ஹராமாக்கிக் கொள்வார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📓📓📓

*அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)* *நூல் :திர்மிதீ (3020)*

*👆👆👆இச்செய்தியில் குதைஃபின் பின் அஃயன், அல்ஹுஸைன் பின் யஸீத் என்ற இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்👈👈👈* .

*🌐🌐கோபம் வந்தால் அமருங்கள்🌎🌎*

*✍✍✍கோபம் வந்தால் அமருங்கள்*

*4151* حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ عَنْ أَبِي حَرْبِ بْنِ أَبِي الْأَسْوَدِ عَنْ أَبِي ذَرٍّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَنَا إِذَا غَضِبَ أَحَدُكُمْ وَهُوَ قَائِمٌ فَلْيَجْلِسْ فَإِنْ ذَهَبَ عَنْهُ الْغَضَبُ وَإِلَّا فَلْيَضْطَجِعْ حَدَّثَنَا وَهْبُ بْنُ بَقِيَّةَ عَنْ خَالِدٍ عَنْ دَاوُدَ عَنْ بَكْرٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ أَبَا ذَرٍّ بِهَذَا الْحَدِيثِ قَالَ أَبُو دَاوُد وَهَذَا أَصَحُّ الْحَدِيثَيْنِ رواه ابوداود

*✍✍✍ஒருவர் உட்கார்ந்திருக்கும் போது கோபம் வந்தால் அவர் அமர்ந்து கொள்ளட்டும். கோபம் போனால் சரி, இல்லையானால் அவர் படுத்துக் கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : அபூதாவூத் (4151)*

📔📔📔இச்செய்தியை இருவழிகளில் அபூதாவூத் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். ஒரு வழியில் அறிவிப்பாளர் தொடர் இணைந்ததாகவும் ஒருவழியில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டதாகவும் உள்ளது. இதில் அறிவிப்பாளர் தொடர் விடுபட்டதாக வரும் செய்தியே சரியானதாகும் என்று அந்த செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இச்செய்தியில் இடம் பெறும் தாவூத் பின் அபீ ஹின்த் என்ற அறிவிப்பாளர்களிடமிருந்து அபூமுஆவியா என்பவர் தாவூத் பின் அபீஹின்த்இ அபூஹர்ப் வழியாக அறிவிக்கிறார். இது முன்கதிவு (தொடர்பு அறுந்த செய்தியாக) இடம் பெற்றுள்ளது.
இதைப் போன்று காலித் என்பவர் தாவூத் பின் அபீ ஹின்த்இ பக்ர் பின் அப்துல்லாஹ் என்பவர் வழியாக முர்ஸலாக (நபித்தோழர் இல்லாமல் தொடர்பு அறுந்து) இடம்பெற்றுள்ளது.📔📔📔

*✍✍✍இதைப் போன்று அப்துர்ரஹீம் பின் சுலைமான் என்பவர் தாவூத் பின் அபீஹின்த், பக்ர் பின் அப்துல்லாஹ் வழியாக முன்கதிவு (தொடர்பு அறுந்ததாக) அறிவித்துள்ளார்.*
*தாவூத் பின் அபீ ஹின்த் என்பவரிடமிருந்து அறிவிக்கும் மூன்று அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாக இருப்பதால் எதற்கும் முன்னுரிமை வழங்க முடியாத இள்திராப் (குளறுபடி நிறைந்த) வகையைச் சார்ந்ததாக அமைகிறது.✍✍✍*

*4152* حَدَّثَنَا بَكْرُ بْنُ خَلَفٍ وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ الْمَعْنَى قَالَا حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا أَبُو وَائِلٍ الْقَاصُّ قَالَ دَخَلْنَا عَلَى عُرْوَةَ بْنِ مُحَمَّدٍ السَّعْدِيِّ فَكَلَّمَهُ رَجُلٌ فَأَغْضَبَهُ فَقَامَ فَتَوَضَّأَ ثُمَّ رَجَعَ وَقَدْ تَوَضَّأَ فَقَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي عَطِيَّةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْغَضَبَ مِنْ الشَّيْطَانِ وَإِنَّ الشَّيْطَانَ خُلِقَ مِنْ النَّارِ وَإِنَّمَا تُطْفَأُ النَّارُ بِالْمَاءِ فَإِذَا غَضِبَ أَحَدُكُمْ فَلْيَتَوَضَّأْ رواه ابوداود

📗📗📗கோபம் ஷைத்தானிடமிருந்து வந்ததாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான். நெருப்பு தண்ணீரைக் கொண்டு அணைக்கப்படுகிறது. எனவே, உங்களில் ஒருவர் கோபப்பட்டால் உளு செய்து கொள்ளட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்📗📗📗.

*அறிவிப்பவர் : அதிய்யா (ரலி) நூல் :அபூதாவூத் (4152)*

*👆👆👆இச்செய்தியில் இடம்பெறும் உர்வா பின் முஹம்மத் அஸ்ஸஅதீ என்பவர் யாரென அறியப்படாதவர்.👈👈👈*

*🌎🌎பாங்கு இகாமத் இடையே துஆ🌎🌎*

*🤲🤲துஆ ஏற்றுக் கொள்ளப்படும் நேரம்👇👇👇*

*437* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ عَنْ أَبِي إِيَاسٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُرَدُّ الدُّعَاءُ بَيْنَ الْأَذَانِ وَالْإِقَامَةِ رواه ابوداود

*✍✍✍பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் கேட்கப்படும் துஆ மறுக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*

*நூல்கள் : அபூதாவூத் (437), திர்மிதீ (196), அஹ்மத் (11755),* *முஸ்னத் அபீயஃலா (4147), பைஹகீ (2013), தப்ரானீ-அவ்ஸத் (4053), அத்துஆ-தப்ரானீ (483),* *அத்துஆ -பைஹகீ (60), முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் (1909)*

*👆👆👆இச்செய்தி இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் ஸைத் அல்அம்மீ என்ற பலவீனமானவர் இடம்பெற்றுள்ளார்👈👈👈* .

*🌐🌐மூன்று விசயங்கள் தாமதப்படுத்தக்கூடாது🌐🌐*

📚📚📚மூன்று விசயங்கள் தாமதப்படுத்தக்கூடாது

*156* حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ الْجُهَنِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ عُمَرَ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ يَا عَلِيُّ ثَلَاثٌ لَا تُؤَخِّرْهَا الصَّلَاةُ إِذَا آنَتْ وَالْجَنَازَةُ إِذَا حَضَرَتْ وَالْأَيِّمُ إِذَا وَجَدْتَ لَهَا كُفْئًا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ حَسَنٌ رواه الترمذي

அலீயே! மூன்று விசஷயங்களை தாமதப்படுத்தாதே! தொழுகை அதன் நேரம் வரும் போது, ஜனாஸா தாயாராகிவிட்டதும், துணையில்லாத பெண்ணுக்கு பொருத்தமான மணமகனை நீர் கண்டபோது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📚📚📚

*அறிவிப்பவர் : அலீ (ரலி), நூல்கள் : திர்மிதீ (156), ஹாகிம் (2686)*

*👆👆👆இந்த செய்தியில் முஹம்மத் பின் உமர் பின் அலீ என்பவரும் ஸயீத் பின் அப்துல்லாஹ் பின் அப்துல்லாஹ் என்ற இருவரும் யாரென அறியப்படாதவர்கள் ஆவர்.👈👈👈*

*அபூபக்ர் ஈமானும் உலக மக்கள் ஈமானும்*

*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 18*

No comments:

Post a Comment