பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 13, 2019

மண்ணறை வாழ்க்கை - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*🔥 குர்ஆன் ஹதீஸ் ஔியில்🔥*
                               ⤵
         *🔥மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 01 ]*

            *☄முன்னுரை☄*

*🏮🍂 நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கும் உலக வாழ்க்கை பல கவர்ச்சி கரமான அம்சங்களை உள்ளடக்கி இருக்கிறது. நிலையில்லாத உலக வாழ்க்கை இன்பத்தில் மூழ்கி நிலையான மறுமை வாழ்க்கையை பலர் மறந்து விடுகிறார்கள்.* இதனால் அவர்கள் நண்மையான காரியங்களை விட்டு விலகிச் செல்வதோடு தீமையின்பால் விரைந்து கொண்டிருக்கிறார்கள்.

🏮🍂 நல்லவர்களாக வாழ நினைப்பவர்களும் தீமைகளை அதிகம் செய்து கொண்டிருக்கிறார்கள். *இறையச்சத்தை நினைவூட்டும் காரியங்களை அறிந்து கொள்ளாததால் இத்தகைய நிலை இவர்களிடத்தில் நீடிக்கிறது.*

*தடம் புரண்டுவிடாமல் வெற்றிகான வழியில் தொடர்ந்து செல்ல வேண்டும் என்று ஆசைபடுபவர்கள் மரணத்தையும் அதற்கு பின்னால் இருக்கின்ற வாழ்க்கையையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(தவறான) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்.*_

*🎙அறிவிப்பவர்-அபூஹுரைரா (ரலி)*

*📕 நூல்- திர்மிதி-(2229)📕*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு "இந்த உலகத்தில் நீ ஒரு பயணியைப் போன்ற வாழ். அல்லது வழிபோக்கனைப் போல் வாழ். மண்ணறைக்குள் சென்று விட்டவர்களில் ஒருவனாக உன்னை நீ கருதிக் கொள்" என்று கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்- இப்னு உமர் (ரலி)*

*📕நூல்-முஃஜம் இப்னில் அஃராபி📕*

*🏮🍂அல்லாஹ்வின் வேதனைக்கு அஞ்சுவது அவசியமென்றும் வேதனைக்கு அஞ்சுவது நல்லவர்களின் பண்பாக இருக்க வேண்டும் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.*

_*وَالَّذِينَ هُم مِّنْ عَذَابِ رَبِّهِم مُّشْفِقُونَ. إِنَّ عَذَابَ رَبِّهِمْ غَيْرُ مَأْمُونٍ*_

_*அவர்கள் தமது இறைவனின் வேதனைக்கு அஞ்சுவார்கள்.*_
_*அவர்களின் இறைவனது வேதனை அச்சப்படத்தக்கதே.*_

திருக்குர்ஆன் 70:28

*أُولَٰئِكَ الَّذِينَ يَدْعُونَ يَبْتَغُونَ إِلَىٰ رَبِّهِمُ الْوَسِيلَةَ أَيُّهُمْ أَقْرَبُ وَيَرْجُونَ رَحْمَتَهُ وَيَخَافُونَ عَذَابَهُ ۚ إِنَّ عَذَابَ رَبِّكَ كَانَ مَحْذُورًا*

*☄இவர்கள் யாரிடம் பிரார்த்திக்கிறார்களோ அவர்களில் (இறைவனுக்கு) மிகவும் நெருக்கமானவர்களே தமது இறைவனை நோக்கி வஸீலாவை (இறைவனை நெருங்குவதற்கான வழியைத்) தேடுகின்றனர். அவனது அருளை எதிர்பார்க்கின்றனர். அவனது வேதனைக்கு அஞ்சுகின்றனர். உமது இறைவனின் வேதனை அச்சப்பட வேண்டியதாகும்.*

*📖திருக்குர்ஆன்- 17:57📖*

*🏮🍂மண்ணறையில் நடக்கின்ற நிகழ்வுகளை நபி (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுப்படுத்தியுள்ளார்கள். இவற்றை நாம் தெரிந்துக் கொண்டால் இறைவனுடைய பயம் கண்டிப்பாக நமக்கு ஏற்ப்படும்.*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄மண்ணறை வாழ்வில் தீயவர்களின் நிலையையும், குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் விளக்கி மக்களை சீர்படுத்துவதே இந்த தொடரின் நோக்கம்*

🍝🍝🍝🍝🍝🍝🍝🍝🍝🍝🍝

*☄நூலாசிரியர்-*
            *அப்பாஸ் அலீ*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                            ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment