*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥அமல்களை*
*அதிகரிப்போம் [ 01 ]🔥*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*தொழுகையும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖0⃣5⃣*
*☄தொழுகையின்*
*முக்கியத்துவம் [ 03 ]*
ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻮ ﻣﻌﻤﺮ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻮاﺭﺙ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻌﺰﻳﺰ، *ﻋﻦ ﺃﻧﺲ ﺑﻦ ﻣﺎﻟﻚ، ﻗﺎﻝ: «ﻟﻢ ﻳﺨﺮﺝ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺛﻼﺛﺎ»، ﻓﺄﻗﻴﻤﺖ اﻟﺼﻼﺓ، ﻓﺬﻫﺐ ﺃﺑﻮ ﺑﻜﺮ ﻳﺘﻘﺪﻡ، ﻓﻘﺎﻝ ﻧﺒﻲ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ: «ﺑﺎﻟﺤﺠﺎﺏ ﻓﺮﻓﻌﻪ، ﻓﻠﻤﺎ ﻭﺿﺢ ﻭﺟﻪ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻣﺎ ﻧﻈﺮﻧﺎ ﻣﻨﻈﺮا ﻛﺎﻥ ﺃﻋﺠﺐ ﺇﻟﻴﻨﺎ ﻣﻦ ﻭﺟﻪ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺣﻴﻦ ﻭﺿﺢ ﻟﻨﺎ، ﻓﺄﻭﻣﺄ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﻴﺪﻩ ﺇﻟﻰ ﺃﺑﻲ ﺑﻜﺮ ﺃﻥ ﻳﺘﻘﺪﻡ، ﻭﺃﺭﺧﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ اﻟﺤﺠﺎﺏ، ﻓﻠﻢ ﻳﻘﺪﺭ ﻋﻠﻴﻪ ﺣﺘﻰ ﻣﺎﺕ»*
_*🍃நபி (ஸல்) அவர்கள் மூன்று நாட்களாக வெளியில் வரவில்லை. தொழுகைக்காக இகாமத் சொல்லப் பட்டதும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தொழுகை நடத்துவதற்கு முன் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது அறையின் திரையை உயர்த்திப் பார்த்தார்கள். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தோற்றமளித்த போது அவர்களின் முகத்தை விடவும் மகிழ்ச்சியான எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பார்த்ததில்லை.*_
*🎙அறிவிப்பவர்:*
*அனஸ் (ரலி)*
*📚 நூல்: புகாரி 681 📚*
*🏮🍂பொதுவாக மரண வேளையில் மிக முக்கியமான விஷயங்களை வலியுறுத்திக் கூறுவோம். ஒருவர் நமக்கு ஒரு லட்சம் ரூபாயும் மற்றொருவர் நமக்கு 5 ரூபாயும் தர வேண்டும் என்று இருந்தால் நாம் மரணிக்கும் போது லட்சம் ரூபாயைப் பற்றித் தான் பேசுவோம்.*
*🏮🍂இது போன்று நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தன்னுடைய சமுதாயத்திற்குத் தொழுகையை கடைப்பிடிக்கும் படி மிகவும் வலியுறுத்திக் கூறினார்கள்.*
*عَنْ عَلِيٍّؓ قَالَ: كَانَ آخِرُ كَلاَمِ رَسُولُ اللهِ ﷺ: اَلصَّلاَةَ اَلصَّلاَةَ اِتَّقُوا اللهَ فِيمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ.*
_*🍃நபி (ஸல்) அவர்களுக்கு மரண வேளையில் அவர்களுடைய மூச்சு மேலும் கீழும் சென்று கொண்டிருந்த போது அவர்கள் பெரும்பாலும் தொழுகையைப் பற்றியும் உங்களுடைய வலக்கரம் சொந்த மாக்கியுள்ள (அடிமைகளைப்) பற்றியும் வலியுறுத்திச் சொன்னார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அனஸ் பின் மாலிக் (ரலி)*
*📚 நூல்: இப்னு மாஜா (2688)📚*
*🏮🍂அல்லாஹ், இறந்தவர்கள் அனைவரையும் மறுமை நாளில் எழுப்பி விசாரணை செய்வான். முதன் முதலில் அவன் தொழுகையைப் பற்றித் தான் விசாரிப்பான்.* இதற்கடுத்து தான் மற்றவைகளைப் பற்றி கேள்வி கேட்பான். *இறைவன் கேட்கும் முதல் கேள்விக்கு நாம் அனைவரும் தயாராக இருக்கின்றோமா❓ என்று யோசிக்க வேண்டும்.*
_*🍃அடியான் முதன் முதலில் விசாரிக்கப்படுவது அவனுடைய தொழுகையைப் பற்றித் தான்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூஹுரைரா (ரலி)*
*📚 நூல்: நஸயீ 463 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼..தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment