பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, July 25, 2019

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் - 4

🕋 *#ஸஈயோடு #தொடர்புடைய #தவறுகள்*
#படியுங்கள் #பகிருங்கள்

📨 _தொடர்-4_

1⃣
*إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ*
*என்று தொடங்கும்*
*குர்ஆன் வசனத்தை அனைத்து சுற்றுக்களிலும் ஓதுவது.*
❌👇🏽

إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا وَمَنْ تَطَوَّعَ خَيْراً فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
📖 {سورة البقرة : 158}

இந்த குர்ஆன் வசனத்தை அனைத்து சுற்றுக்களிலும் ஓத வேண்டிய அவசியம் இல்லை. முதல் சுற்றில் ஸஈயை ஆரம்பிக்கும் போது ஸஃபாவில் மட்டும் ஓதுவது போதுமானது. மர்வாவில் ஓத வேண்டிய தேவையில்லை.

2⃣ *தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்ட பிறகும் ஸஈயை தொடர்வது*
❌👇🏽

இது தவறாகும். ஸஈ செய்து கொண்டிருக்கும்போது கடமையான தொழுகையை அடைந்து விட்டால் ஸஈயை துண்டித்து விட்டு தொழுகையை நிறைவேற்ற வேண்டும். பிறகு விடுபட்ட இடத்திலிருந்து ஸஈயை பரிபூரணமாக செய்து முடிக்க வேண்டும்.
                                                                                                             
3⃣ *ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஸஈ செய்யும் போது கட்டாயம் ஒளூ இருக்க வேண்டும் என்று கருதுவது*
❌👇🏽

இது தவறாகும். ஒளூ இல்லாமலும் ஸஈ செய்யலாம்.                                               
                                                                                                                                                                4⃣ *தவாஃப் செய்து முடித்தவுடன் இடைவெளியில்லாமல் நேரடியாக ஸஈ செய்ய வேண்டும் என கருதுவது.*
❌👇🏽

இதுவும் தவறாகும். களைப்பாக இருப்பின் தவாஃபுக்கும், ஸஈயுக்கும் மத்தியில் அல்லது ஒவ்வொரு தவாஃபுக்கு மத்தியிலும் ஒவ்வொரு ஸஈயுக்கு மத்தியிலும் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.
📌அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தைக் கொடுப்பதில்லை📌
📖 {2:286}
                                                                                                                                       5⃣ *பச்சை நிறத்தில் அடையாளமிடப்பட்ட பகுதியை தவிர ஸஃபா மர்வாவில் வேகமாக ஓடுவது*
❌👇🏽

இதுவும் தவறாகும். அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு மட்டுமே அனுமதி. பெண்களுக்கு அனுமதியில்லை. மேலும் ஒருவர் நோயாளியாகவோ, இயலாதவராகவோ இருந்தால் அவரும் குறிப்பிட்ட பச்சை நிறத்தில் அடையாளமிடப்பட்ட பகுதிகளில் ஓடத் தேவையில்லை.  
                        
6⃣ *ஸஃபா மர்வாவில் பிறருக்கு தொல்லை கொடுக்கும் விதம் கூட்டாக சப்தமாக துஆ செய்வது*
❌👇🏽

இதுவும் மிகப்பெரும் தவறாகும். துஆவின் ஒழுங்குமுறைகளில் உள்ளது தான்
உள்ளச்சத்தோடு, பணிவாக, கூச்சலிடாமல் பிறருக்கு இடையூறு  ஏற்படுத்தாமல் துஆ செய்வது.    

7⃣ *ஸஃபாவிலும் மர்வாவிலும் இரண்டு ஸஈ செய்துவிட்டு அதனை ஒரு ஸஈ என கருதுவது*
❌👇🏽

இது அறியாமையினால் ஏற்படும் தவறாகும். இவ்வாறு செய்யும் போது 14 ஸஈ ஆகிவிடும். ஸஃபாவிலிருந்து மர்வா வரை ஒரு ஸஈ முடிவடைகிறது. மீண்டும் மர்வாவிலிருந்து ஸஃபா வரை 2வது ஸஈ முடிவடைகிறது. இவ்வாறு 7வது ஸஈ மர்வாவில் முடிவடையும்.

8⃣ *ஸஈ செய்பவர் வலது தோள் புஜத்தை திறந்த நிலையில் இருப்பது*
❌👇🏽

_ஸஈயில் இழ்திபாவின் நிலை_ 👇🏾
ஸஈ செய்பவர் வலது தோள் புஜத்தை திறந்த நிலையில் வைத்திருப்பது தவறாகும். இந்நிலை தவாஃபுல் குதூமிற்கு (ஹஜ்ஜின் ஆரம்ப தவாஃபிற்கு) மட்டுமே. ஆனால் ஹாஜிகளில் அதிகமானவர்கள் ஹஜ்ஜின் கிரிகைகள் முடியும் வரை வலது தோள் புஜத்தை திறந்த நிலையிலேயே இருக்கின்றனர். இதுவும் தவறாகும்.

9⃣ *ஸஃபா மற்றும் மர்வாவில் அடையாளத்திற்காக வைக்கப்பட்டுள்ள அந்த சிறு பாறைகளின் மீது ஏறினால் தான் ஸஈ பரிபூரணமாகும் என கருதுவது*
❌👇🏽

இதுவும் தவறாகும். சற்று மேடான பகுதிகளில் சென்று வந்தாலே போதுமானது.                                                                                                          

🔟 *ஒவ்வொரு ஸஈயிலும் பிரத்தேகமாக சில துஆக்களை ஓத வேண்டும் என கருதுவது*
❌👇🏽

இதுவும் தவறாகும். அவ்வாறு குறுப்பிட்டு எந்த துஆவையும் ஓத வேண்டும் என மார்க்கம் நமக்கு வழிகாட்ட வில்லை. ஹஜ், உம்ராவை நிறைவேற்றும் ஒருவர் திக்ர், குர்ஆன் ஓதுவது, தனக்காக, பிற முஸ்லிம் சகோதரர்களுக்காக தான் விரும்பிய துஆக்களை செய்யலாம்.                                                   *#கவனிக்க #வேண்டிய #முக்கியமான #விஷயம்* தொழுகையிலும் தொழுகை அல்லாத நிலைகளிலும் திக்ர், குர்ஆன் ஓதுவது, துஆ ஆகிய நாவினால் செய்யப்படும் வணக்க வழிபாடுகளில் உதடும் நாவும் அசைய வேண்டும் என்பது கட்டாயம்.

🍃🌹🍂🌹🍂🌹🍃

No comments:

Post a Comment