பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, July 21, 2019

பெண்களுக்கான - 6

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹*

*🧕🧕🧕பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் பெண்களுக்கு மட்டுமே 🧕🧕🧕*

            *பாகம் 6*

*👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

*திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டவர்களுடன் இருக்கும் போது...*

    பெண்கள் அண்ணிய ஆண்களிடம் முழுமையாக உடலை மறைக்க  வேண்டியதைப் போன்று திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட நெருங்கிய உறவினர்களிடம் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. இதை பின் வரும் நபி மொழிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

*அல்குர்ஆன் (24 : 31)*

    நபி (ஸல்) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களுக்கு ஒரு அடிமையை அன்பளிப்பாக கொடுத்தார்கள். பாத்திமா (ரலி) அவர்கள் மீது (சிறிய) ஆடை ஒன்று இருந்தது. அந்த ஆடை மூலம் அவர்கள் தலையை மூடினால் கால் வெளியே தெரிந்தது. காலை மூடினால் தலை தெரிந்தது. இதை நபி (ஸல்) அவர்கள் கவனித்த போது  உன்னிடத்தில் உனது தந்தையும் அடிமையும் தான் இருக்கிறார்கள். அதனால் உன் மீது குறற்ம் இல்லை என்று கூறினார்கள்.

*அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*
*நூல்: அபூதாவூத் (3582)*

மற்ற பெண்களோடு நடந்துகொள்ளும் முறை
மஹ்ரமான ( அதாவது திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட) ஆண்கள் முன்னால் பெண்கள் முழுமையான பர்தாவைப் பேண வேண்டிய அவசியம் இல்லை. இவர்களுக்கு முன்னால் காட்சித் தருவதைப் போன்றே மற்ற பெண்களுக்கு முன்னாலும் சாதாரணமான ஆடையில் பெண்கள் வருவது தவறு கிடையாது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம்.

*அல்குர்ஆன் (24 : 31)*

என்றாலும் அந்தரங்க உறுப்புக்களை பெண்கள் மற்ற பெண்களிடம் காட்டுவது கூடாது. இவளது மர்ம உறுப்பை பார்க்கும் உரிமை அவளது கணவனுக்குத் தவிர வேறு யாருக்கும் இல்லை. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ளலம்.
எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும் எவற்றை மறைக்காமல் இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் உன் மனைவி உன் அடிமை பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புக்களை பாதுகாத்து கொள் என்று விடையளித்தார்கள் ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பை காத்து கொள்ள வேண்டுமா? என்று கேட்டேன் அதற்கு நபி (ஸல்) அவர்கள் எவரும் பார்க்க முடியாதவாறு உம்மால் மறைத்துக்கொள்ள முடியுமானால் மறைத்துக்கொள் என்று கூறினார்கள்.

*அறிவிப்பவர் ; முஆவியா பின் ஹைதா (ரலி)*
*நூல் : திர்மிதி (2693)*

ஒரு ஆண் மற்ற ஆண்களிடத்தில் மறை உறுப்பை வெளிப்படுத்துவதை தடுக்கப்பட்டுள்ளது. இûதேச் சட்டம் பெண்களுக்கும் உரியதாகும்.
ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பை பார்க்க வேண்டாம் ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறும உறுப்பை பார்க்க வேண்டாம் ஒரு ஆன் மற்றொரு ஆணுடன் ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரு ஆடைக்குள் படுக்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)*
*நூல்: முஸ்லிம் 512*

ஒரே ஆடைக்குள் இரு பெண்கள் படுப்பது தவறு என்றும் மேலுள்ள ஹதீஸ் உணர்த்துகிறது.
ஆண்களுடன் தனித்திருக்கக்கூடாது
மேற்கண்ட *(24 : 31)* வசனத்தில் சொல்லப்பட்டவர்களைத் தவிர்த்து மற்றவர்களிடத்தில் பெண்கள் பர்தாவை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் கணவனுடைய அண்ணன் தம்பிமார்களின் முன்பு சர்வசாதாரணமாக பர்தா இல்லாமல் வந்து செல்கிறார்கள். அவர்களுடன் தனித்திருப்பதை பெரிய குற்றமாக இவர்கள் கருதுவதில்லை. இது தவறாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகüல் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.

*அறிவிப்பவர் : உக்பது பின் ஆமிர் (ரலி)*
*நூல் : புகாரி (5232)*

"ஒரு பெண்ணுடன் எந்த (அன்னிய) ஆடவனும் தனிமையில் இருக்கலாகாது; (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவினருடன் (அவள்) இருக்கும்போது தவிர!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

*அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)*
*நூல் : புகாரி (5233)*

*பெண்கள் ஜனாஸாவை ஆண்கள் பார்க்கலாமா?*

    *இறந்த பெண்ணின் முகத்தை ஆண் பார்ப்பதற்கும் இறந்துவிட்ட ஆணின் முகத்தை பெண் பார்ப்பதற்கும் மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை* . மற்றவர்களை ஆசை உணர்வுடனும் தவறான எண்ணத்துடனும் பார்ப்பது தான் தடைசெய்யப்பட்டுள்ளது. நபியவர்களின் காலத்தில் பெண்கள் *தங்கள் முகத்தை திறந்திருந்தார்கள் என்பதை பல ஹதீஸ்களில் காணுகிறோம்.*
    உயிருடன் இருக்கும் போது எம்முறையில் பார்ப்பது அனுமதிக்கப்பட்டிருக்கிறதோ அம்முறையில் இறந்தவரைப் பார்ப்பதில் குற்றமில்லை.

உயிருடன் இருக்கும் போது எந்த எண்ணத்தில் மற்றவர்களைப் பார்க்கக்கூடாதோ அவ்வெண்ணத்தில் இறந்தவர்களையும் பார்க்கக்கூடாது.

*பட்டாடை அணியலாம்*

    ஆண்கள் பட்டாடை அணிவதற்கு தடை உள்ளது. ஆனால் பெண்களுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கோடு போட்ட  பட்டு அங்கி ஒன்றை (அன்பüப்பாக) வழங்கினார்கள். ஆகவே, அதை நான் அணிந்துகொண்டேன். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கüன் முகத்தில் கோபக் குறியை நான் பார்த்தேன். உடனே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்கüடையே பங்கிட்டுவிட்டேன்.

*அறிவிப்பவர் : அலீ (ரலி)*
*நூல் : புகாரி (5366)*

*காவிநிற ஆடையை அணியலாம்*

    காவிநிறத்தை அதாவது குங்குமப்பூ நிறத்தை ஆண்கள் பயன்படுத்துவது கூடாது. பெண்களுக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது.
ஆண்கள் (தங்களது மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

*அறிவிப்பவர் : அனஸ் (ரலி)*
*நூல் : புகாரி (5846)*

    பெண்கள் இஹ்ராம் நிலையில் இருக்கும் போது *முகத்திரையையும் கையுறைகளையும் குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த ஆடையையும் அணிவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.* அதற்குப் பிறகு (சாதாரண நேரத்தில்) *அவள் விரும்பும் வண்ண ஆடைகளையும் குங்குமப்பூ நிறத்திலுள்ள ஆடையையோ பட்டாடையையோ ஆபரணத்தையோ சிர்வாலையோ நீளங்கியையோ காலுறையையோ அணிந்துகொள்ளட்டும்* என்று கூறினார்கள்.

*அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)*
*நூல் : அபூதாவுத் (1556)*

*ஆண்களின் ஆடைகளை அணியக்கூடாது*

    ஆண்கள் பெண்களைப் போன்று நடப்பதையும் பெண்கள் ஆண்களைப் போன்று நடப்பதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். ஆனால் இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில் ஆண்களின் ஆடைகளை பெண்கள் அணிந்துகொண்டு இருக்கிறார்கள். இது தவறாகும்.
நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்கûளும் சபித்தார்கள் .

*அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)*
*நூல்: புகாரி (5885)*

*காது மூக்கு குத்தலாமா?*

    காது மூக்கு குத்தக்கூடாது என்று தெளிவாக எந்த ஒரு தடையும் வரவில்லை. மாறாக அல்லாஹ் படைத்த படைப்பில் மாற்றம் செய்யக்கூடாது என்று மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

காதுகளை கிழிப்பதும் *அல்லாஹ்வின் படைப்பில் மாற்றம் செய்வதும் ஷைத்தானுடைய செயல் என்று குர்ஆன் கூறுகிறது.*
    "அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளை யிடுவேன்; *அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்''* (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான்.

*அல்குர்ஆன் (4 : 119)*

    இயற்கையாக அல்லாஹ் படைத்த உறுப்புக்களில் மாற்றம் செய்வதை நபி (ஸல்) அவர்களும் தடைசெய்துள்ளார்கள்.
*பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள்,* (மொத்தத்தில்) *இறைவன் அளித்த  உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!* நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

*அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)*
*நூல் : புகாரி (5931)*

    காதுகளிலும் மூக்கிலும் துளையிடும் போது அழகான தோற்றம் வரும் என்று நாம் நினைப்பதால் தான் *காது மூக்கு குத்திக்கொள்கிறோம். இவற்றில் துளையில்லாமல் பிறக்கும் மனிதன் அழகான தோற்றமுள்ளவன் என்று அல்லாஹ் கூறுகிறான்.*
மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.

*அல்குர்ஆன் (95 : 4)*

    மிக அழகாக படைப்பது தன்னுடைய தன்மை என்று அல்லாஹ் கூறுகிறான்.
பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினை முட்டையாக்கினோம்.  பின்னர் கருவுற்ற சினை முட்டையை சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

*அல்குர்ஆன் (23 : 14)*

"அஞ்ச மாட்டீர்களா? அழகிய படைப்பாளனும், உங்கள் இறைவனும், உங்கள் முன்னோரின் இறைவனுமாகிய அல்லாஹ்வை விட்டு விட்டு "பஅல்' எனும் சிலையைப் பிரார்த்திக் கிறீர்களா?

*அல்குர்ஆன் (37 : 125)*
  
காது மற்றும் மூக்கில் துளையிடுவது *இறைவனுடைய படைப்பில் குறைகாணுவதைப் பிரதிபலிப்பதால் இதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.*
    இந்தச் சட்டம் தெரியாத நேரத்தில் *குத்திக்கொண்டவர்கள் துளையை அடைக்க வேண்டியதில்லை. அதில் ஆபரணங்களை இட்டுக்கொள்ளலாம்.* ஏனென்றால் சஹாபிய பெண்கள் காதுகளில் தோடுகளை அணிந்திருந்ததார்கள். காது குத்துவதால் ஏற்பட்ட துளையை அடைக்க வேண்டுமென்றோ அத்துளையில் ஆபரணங்களை அணியக்கூடாது என்றோ நபி (ஸல்) அவர்கள் அப்பெண்களுக்குக் கூறவில்லை. *மாறாக ஒப்புதல் வழங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலிலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.*  அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார்கள்.  அங்கிருந்த பெண்கள் *தங்கள் காதணிகளையும்,* மோதிரங்களையும் (கழற்றிப்) போடலா னார்கள்.   

*அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)*
*நூல் : புகாரி (98)*

*பெண்களுக்கு கத்னா செய்யலாமா?*

    ஆண்களின் பாலுறுப்பில் இருக்கும் தேவையற்ற தோல்பகுதியை அகற்றுவதற்குப் பெயர் தான் கத்னா என்பது. இவ்வாறு செய்வதால் பாலுறுப்பினுள் விந்தோ சிறுநீரோ தங்கும் நிலை ஏற்படாது. இதன் மூலம் பாலுறுப்பு சுத்தமாக வைத்துக்கொள்ளப்படுவதால் ஏராளமான நோய்கள் அண்டுவதில்லை.
இல்லறவாழ்வின் போது கணவன் தன் மனைவியை திருப்தியடையச் செய்வதற்கு கத்னா காரணமாக உள்ளது. அறிவுப்பூர்வமான இந்த வழிமுறை கடைபிடிக்குமாறு இஸ்லாம் ஆண்களுக்குக் கூறுகிறது.

    ஆனால் சிலர் அறிவின்மையினால் பெண்களுக்கும் கத்னாவை செய்துவிடுகிறார்கள். அதாவது பெண்களின் இல்லற இன்பத்தை குறைப்பதற்காக அவர்களின் பாலுறுப்பில் இன்பத்தை உணரும் பகுதியின் முனையை வெட்டிவிடுவார்கள். இறைவன் அளித்த பாக்கியமான இல்லற இன்பத்தை முழுமையாக பெண்கள் அடையமுடியாத துர்பாக்கியமான நிலை ஏற்படுகிறது. இவ்வாறு செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை.

    பெண்களுக்கும் கத்னா செய்ய வேண்டும் என்றக் கருத்தில் சில ஹதீஸ்கள் வருகிறது. அவற்றை அறிவிப்பவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே இஸ்லாத்திற்கு அவப்பெயரை பெற்றுத் தரும் இந்த அவச்செயலை முஸ்லிம்கள் கட்டாயம் தவிர்ந்துகொள்ள வேண்டும்.

*அணிகலன்களை அணியலாம்*

விரும்புகின்ற நகைகளை அணிவதற்கு பெண்களுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

தங்கம் வெள்ளி பிளாட்டினம் முத்து பவளம் போன்ற விலையுயர்ந்தப் பொருட்களை அணிவதற்கு எந்தத் தடையும் இல்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் ஆபரணங்களை அணிந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றிவிட்டு) பெண்கள் செவியேற்கும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்களிருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலிலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள்.  அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு தர்மம் செய்யும்படி வலிலியுறுத்தினார்கள்.  அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும், மோதிரங்களையும் (கழற்றிப்) போடலா னார்கள். பிலால் (ரலிலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக் கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன்.

*அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்*
*நூல் : புகாரி (98)*

என்றாலும் இவையெல்லாம் அலங்காரம் என்பதால் இந்த அலங்காரத்தை அண்ணிய ஆண்களிடம் வெளிப்படுத்தக்கூடாது.

    தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.

*அல்குர்ஆன் (24 : 31)*

*பெண்கள் நக பாலீஷ் பூசலாமா?*

    *இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 7*

No comments:

Post a Comment