பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, July 25, 2019

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் - 5

🕋 *ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்*

📨 _தொடர்-5_

✂ *முடியை முழுமையாக மழிப்பது அல்லது குறைத்துக் கொள்வதில் ஏற்படும் தவறுகள்*
💇🏻‍♂❌👇🏽

1⃣ *தலையின் நடுப்பகுதி மற்றும் அதன் ஓரங்களில் ஆங்காங்கே மிகக் குறைவாக முடிகளை அகற்றுவது*
❌👇🏽

இது மிகப்பெரும் தவறு என்பதை அதிகமானவர்கள் அறியாமலேயே இருக்கிறார்கள். இவ்வாறு செய்வதனால் அவர் இஹ்ராமிலிருந்து விடுபட்டவராக கருத்தப்படமாட்டார். ஆண்கள் குறைப்பதாக இருந்தால் முழுமையாக குறைக்க வேண்டும். மழிப்பதாக இருந்தால் முழுமையாக மழிக்க வேண்டும். மழிப்பதே மிகச் சிறந்தது. முடியை மழிப்பவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள். (ஹஜ்ஜின் வகைகளை பொறுத்து இச்சட்டம் மாறுபடும்).
📌ஹஜ்ஜத்துல் விதாவில் நபி(ஸல்) அவர்கள் முடியை மழித்தவர்களுக்காக மூன்று முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள். முடியை குறைத்துக் கொண்டவர்களுக்காக ஒரு முறை பிரார்த்தனை செய்துள்ளார்கள்.📌
📚{நூல்: முஸ்லிம் 3150}

2⃣ *பெண்ணாக இருப்பின் அனைத்து முடிகளையும் சேர்த்து ஒரு இன்ச் குறைத்துக் கொள்ள வேண்டும்.*
👇🏽
இன்ஷா அல்லாஹ் இது பெண்களுக்கு போதுமானதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
📌பெண்களுக்கு மொட்டை அடிப்பது என்பது இல்லை . பெண்கள் குறைத்துக் கொள்ளவேண்டும்.📌 {அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரலி)}
📚{நூல்:அபூதாவூத் 1985}

3⃣ *தலை முடியை மழிக்கும் போது தாடியையும் சேர்த்து மழிப்பது.*
❌👇🏽

இது "தாடியை வளர விடுங்கள்" என்ற நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு நேர் முரணானதும் மிகப்பெரிய குற்றமும் ஆகும்.

4⃣ *முடியை மழிக்கும் போது கிப்லாவை முன்னோக்குவது சுன்னா என்று கருதுவது*
❌👇🏽

இதுவும் தவறாகும். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

🍃 🌹🍂🌹🍂🌹🍃

No comments:

Post a Comment