*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥அமல்களை*
*அதிகரிப்போம் [ 01 ]🔥*
*🍃கொள்கை மட்டும் போதாது*
⤵
*தொழுகையும் வேண்டும்*
*✍🏻..... தொடர் ➖1⃣5⃣*
*☄தொழுவதால்*
*கிடைக்கும்*
*நன்மைகள் [ 02 ]*
*🏮🍂ஒரு நாளைக்கு நாம் செய்யக்கூடிய நன்மைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆனால் பாவங்களை எண்ண முடியாது. அந்த அளவுக்கு அதிகமான பாவங்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.* இந்தப் பாவங்கள் மறுமையில் நமக்குப் பெரும் சுமையாக வந்து விடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் நம்முடைய தொழுகைகளின் மூலம் இவைகளை அழித்து விடுகிறான். *தொழவில்லை என்று சொன்னால் தொழாத பாவத்துடன் இந்தப் பாவங்களும் இணைந்து கொண்டு நம்மைப் பாடுபடுத்திவிடும். தொழுபவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதற்கு நபி (ஸல்) அவர்கள் அழகான ஒரு உதாரணத்தைக் கூறியுள்ளார்கள்.* மேலும் இதை அவர்கள் காலத்தில் நடந்த ஒரு சம்பவத்திலிருந்தும் அறியலாம்.
ﺣﺪﺛﻨﺎ ﺇﺑﺮاﻫﻴﻢ ﺑﻦ ﺣﻤﺰﺓ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ اﺑﻦ ﺃﺑﻲ ﺣﺎﺯﻡ، ﻭاﻟﺪﺭاﻭﺭﺩﻱ، ﻋﻦ ﻳﺰﻳﺪ ﻳﻌﻨﻲ اﺑﻦ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﻬﺎﺩ، ﻋﻦ ﻣﺤﻤﺪ ﺑﻦ ﺇﺑﺮاﻫﻴﻢ، ﻋﻦ ﺃﺑﻲ ﺳﻠﻤﺔ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ، *ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﺃﻧﻪ ﺳﻤﻊ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: " ﺃﺭﺃﻳﺘﻢ ﻟﻮ ﺃﻥ ﻧﻬﺮا ﺑﺒﺎﺏ ﺃﺣﺪﻛﻢ ﻳﻐﺘﺴﻞ ﻓﻴﻪ ﻛﻞ ﻳﻮﻡ ﺧﻤﺴﺎ، ﻣﺎ ﺗﻘﻮﻝ: ﺫﻟﻚ ﻳﺒﻘﻲ ﻣﻦ ﺩﺭﻧﻪ " ﻗﺎﻟﻮا: ﻻ ﻳﺒﻘﻲ ﻣﻦ ﺩﺭﻧﻪ ﺷﻴﺌﺎ، ﻗﺎﻝ: «ﻓﺬﻟﻚ ﻣﺜﻞ اﻟﺼﻠﻮاﺕ اﻟﺨﻤﺲ، ﻳﻤﺤﻮ اﻟﻠﻪ ﺑﻪ اﻟﺨﻄﺎﻳﺎ»*
_*🍃"உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கிறார். அவரது மேனியில் உள்ள அழுக்குகளில் எதுவும் மிஞ்சியிருக்குமா? கூறுங்கள்'' என்று தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். "அவரது அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது'' என நபித்தோழர்கள் கூறினர். "இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*அபூஹுரைரா (ரலி)*
*📚 நூல்: புகாரி 528 📚*
ﺣﺪﺛﻨﺎ ﻗﺘﻴﺒﺔ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻳﺰﻳﺪ ﺑﻦ ﺯﺭﻳﻊ، ﻋﻦ ﺳﻠﻴﻤﺎﻥ اﻟﺘﻴﻤﻲ، ﻋﻦ ﺃﺑﻲ ﻋﺜﻤﺎﻥ اﻟﻨﻬﺪﻱ، *ﻋﻦ اﺑﻦ ﻣﺴﻌﻮﺩ، ﺃﻥ ﺭﺟﻼ ﺃﺻﺎﺏ ﻣﻦ اﻣﺮﺃﺓ ﻗﺒﻠﺔ، ﻓﺄﺗﻰ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻓﺄﺧﺒﺮﻩ ﻓﺄﻧﺰﻝ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ: {ﺃﻗﻢ اﻟﺼﻼﺓ -[112]- ﻃﺮﻓﻲ اﻟﻨﻬﺎﺭ ﻭﺯﻟﻔﺎ ﻣﻦ اﻟﻠﻴﻞ، ﺇﻥ اﻟﺤﺴﻨﺎﺕ ﻳﺬﻫﺒﻦ اﻟﺴﻴﺌﺎﺕ} [ﻫﻮﺩ: 114] ﻓﻘﺎﻝ اﻟﺮﺟﻞ: ﻳﺎ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺃﻟﻲ ﻫﺬا؟ ﻗﺎﻝ: «ﻟﺠﻤﻴﻊ ﺃﻣﺘﻲ ﻛﻠﻬﻢ»*
_*🏮🍂ஒரு மனிதர் அன்னியப் பெண்ணை முத்தமிட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து (பரிகாரம் கேட்டு) இந்த விபரத்தைக் கூறினார். "பகலின் இரு ஓரங்களிலும், இரவின் பகுதிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவீராக! நன்மைகள் தீமைகளை அழித்து விடும்'' (11:114) என்ற வசனத்தை இறைவன் அருளினான். அப்போது அந்த மனிதர் "அல்லாஹ்வின் தூதரே! இது எனக்கு மட்டுமா?'' என்று கேட்டார். அதற்கு, "என் சமுதாயம் முழுமைக்கும்'' என நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.*_
*🎙அறிவிப்பவர்:*
*இப்னுமஸ்ஊத் (ரலி)*
*📚 நூல்: புகாரி 526 📚*
_சொல்லப்பட்ட செய்திகளைக் கவனத்தில் வைத்து தொழுகையை முறையாகப் பேணுபவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக!_
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄நாளை முதல் உபரியான வணக்கங்களை நிறைவேற்றுவதன் அவசியம் குறித்தும் அதனால் கிடைக்கும் மறுமை பலன்களைக் குறித்தும் தொடராக பார்ப்போம்...*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼..தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment