பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, August 1, 2019

ஹஜ் உம்ரா - 9

*🍇🍇🍇மீள் பதிவு🍇🍇🍇*

*🌐🌐🌐ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*


*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉👉👉தொடர் பாகம் 9 👈👈👈*

     *👉தலைப்பு👇*

*🌐🌐🌐மூட்டப்பட்ட வேட்டி அணிந்து குளிக்கலாமா❓🌐🌐🌐*

*✍✍✍ஆண்கள் இஹ்ராமிலிருந்து விடுபடும் முன்னர் குளிக்கும் தேவை ஏற்பட்டால், மூட்டப்பட்ட கைலியை (ஈரத்திற்காக) அணிந்துக் கொண்டு குளிக்கலாமா❓ மூட்டப்படாத வேட்டி அணிந்து குளிப்பதுதான் சிறந்ததா❓✍✍✍*

*👉பதில்👇*

📕📕📕அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தைக்கப்பட்ட ஆடையை அணிய வேண்டாம் என்று சொல்லியிருக்கும் போது அந்த உத்தரவை நம்மால் இயன்ற அளவுக்குப் பின்பற்றுவது தான் சரியான செயலாகும். உடுத்திக் குளிப்பதற்கும், மாற்றுக்காகவும் தையல் இல்லாத துண்டுகளைக் கூடுதலாக வைத்துக் கொள்வது என்பது பெரிய சிரமமான காரியமல்ல. நபிவழியை முடிந்த அளவுக்குக் கடைப்பிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.📕📕📕

*🌐🌐கடுகளவு மூக்குத்தி மற்றும் மோதிரம் இஹ்ராமின்போது அணியலாமா❓🌎🌎*

*✍✍✍வழக்கமாகப் போடும் கடுகளவு மூக்குத்தி மற்றும் மெல்லிய குச்சியளவிலான மோதிரம் போன்றவற்றை இஹ்ராமின்போது அணியலாமா❓ (மற்ற நேரங்களில் இதுபோன்ற சிறிய அளவுகளில் இருந்தால் இவை வெளியில் தெரியலாமா❓)*
*இஹ்ராமின் போது அணியத் தடை செய்யப்பட்டவைகளில் இவை இடம்பெறவில்லை. ஆனால் பொதுவாக அலங்காரங்களை வெளிப்படுத்தும் வண்ணம் பெண்கள் நகைகளை அணிவது தவிர்க்கப்பட வேண்டும்.*
*தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.✍✍✍*

*🕋🕋ஹஜ்ஜில் மார்க்கத்திற்கு முரணான விஷயங்களை சுட்டிக் காட்டக்கூடாதா❓🕋🕋*

📘📘📘இஹ்ராமில் இருக்கும்போது தர்க்கம் செய்யக்கூடாது என்பதால், மார்க்கத்திற்கு முரணான விஷயங்களைப் பார்த்தாலும் அதை சுட்டிக் காட்டக்கூடாதா❓முப்பது லட்சம் மக்கள் கூடுகின்ற இடத்தில் பல விதமான அசவுகரியங்கள், நெருக்கடிகள், சங்கடங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அதனால் தான் வல்ல அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். அம்மாதங்களில் ஹஜ்ஜை (தன்மீது) விதியாக்கிக் கொண்டவர் ஹஜ்ஜின் போது உடலுறவு கொள்வதோ, குற்றம் செய்வதோ, விதண்டாவாதம் புரிவதோ கூடாது. நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அதை அல்லாஹ் அறிகிறான். (ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைத் திரட்டிக் கொள்ளுங்கள்! திரட்டிக் கொள்ள வேண்டியவற்றில் (இறை) அச்சமே மிகச் சிறந்தது. அறிவுடையோரே! என்னை அஞ்சுங்கள்!📘📘📘

*அல்குர்ஆன் 2:197*

*✍✍✍எனவே நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பது, மார்க்க ரீதியிலான வாதங்கள் செய்வது விதண்டாவாதத்தில் வராது.  எனினும், எதனையும் மிகவும் மென்மையான முறையில் புரியும் படி எடுத்துச் சொல்லித் தடுப்பதே சிறந்த முறையாகும். இல்லையெனில் நன்மைக்கு பதில், தீமையில் தான் முடியும்.✍✍✍*

*🧕🧕தாயாருக்காக🕋🕋 ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில்🕋 உம்ரா செய்யலாமா❓🕋🕋*

📙📙📙ஹஜ்ஜுக்கு செல்ல மிகுந்த ஆவல் கொன்டிருந்த என் தாயாருக்கு வசதி இருந்தும், மற்றவர்களின் கஷ்டத்திற்குக் கடனுதவியாகக் கொடுத்திருந்தார்கள். கடன் திரும்பி வரும் முன்பே அவர்கள் மரணித்து விட்டதால், நான் என் உம்ராவை முடித்த பிறகு அவர்களுக்காக உம்ரா செய்யலாமா❓ ஏனெனில், ஒருவேளை ஹஜ்ஜுக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்ரா மட்டுமாவது அவர்கள் செய்யவேண்டும் என்ற எண்ணமும் அவர்களிடம் இருந்தது.
பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அவர் செய்யாமல் மரணித்து விட்டால் அவர்களுக்காக அவர்களது பிள்ளைகள் ஹஜ் செய்யலாம். பெற்றோருக்கு ஹஜ் கடமையாக இல்லாத நிலையில் மரணித்து விட்டால் பெற்றோரை இது குறித்து அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். எனவே பெற்றோருக்குக் கடமையாக இல்லாவிட்டால் அவருக்காக பிள்ளைகள் ஹஜ் செய்யக் கூடாது.📙📙📙

*✍✍✍“என் தாயார் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து ஹஜ் செய்யாமல் மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யட்டுமா?” ஒரு பெண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உன் தாய் மீது கடன் இருந்தால் நீதானே நிறைவேற்றுவாய்? எனவே அவருக்காக நீ ஹஜ் செய். அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்ற அதிக தகுதி உள்ளது” என்றார்கள்.✍✍✍*

*நூல்: புகாரி 1582, 7315*

📗📗📗அல்லாஹ்வின் கடன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதில் இருந்து கடமையான ஹஜ்ஜாக இருந்தால் தான் பிள்ளைகள் அதைச் செய்ய முடியும் என்று அறிந்து கொள்ளலாம்.
உம்ராவைப் பொருத்த வரை அது ஹஜ் போல் கடமையான வணக்கம் அல்ல. உம்ரா செய்யாவிட்டால் அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான். எனவே மற்றவருக்காக உம்ரா செய்ய முடியாது.
ஆயினும் ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ரா செய்வதும் ஹஜ்ஜின் வகையில் ஒன்றாக உள்ளதால் பெற்றோருக்காக ஹஜ் செய்யும் போது அதனுடன் உம்ராவையும் செய்யலாம்.
அபூ ரஸீன் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! எனது தந்தை வயது முதிர்ந்த பெரியவராக இருக்கின்றார். அவரால் ஹஜ் செய்யவோ உம்ரா செய்யவோ பயணிப்பதற்கோ முடியாது” என்றேன். “உனது தந்தைக்காக நீ ஹஜ்ஜும் உம்ராவும் செய்துகொள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📗📗📗

*நூல்: திர்மிதி (852)*

*✍✍✍பெற்றோருக்காக உம்ரா செய்யலாம் என்ற இந்த அனுமதி உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கான அனுமதி இல்லை. மாறாக ஹஜ்ஜுடன் சேர்த்து உம்ராவைச் செய்யும் போது மட்டும் தான் இந்த அனுமதியாகும்.*
*இந்த ஹதீஸைத் தவறுதலாக புரிந்து கொண்டு, ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டக்கூடாது.✍✍✍*

📒📒📒ஒருவர் தனது தாய் தந்தையருக்காக, உம்ராவை மட்டும் தனித்துச் செய்வதற்கு எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை. தனித்து உம்ரா செய்ய வேண்டும் என்பது நம்மீது கட்டாயக் கடமையும் இல்லை.
ஒருவரது பிள்ளைகள் தவிர மற்ற உறவினர்களும் அவருக்காக ஹஜ் செய்யலாம். ஆயினும் தனக்காக அவர் ஹஜ் செய்திருக்க வேண்டியது அவசியமாகும்📒📒📒.

*✍✍✍ஒரு மனிதர் “லப்பைக்க அன் ஷுப்ருமா” (ஷுப்ருமாவுக்காக இஹ்ராம் கட்டுகிறேன்) என்று கூறியதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “ஷுப்ருமா என்பவர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கவர், என் சகோதரர் என்றோ என் நெருங்கிய உறவினர் என்றோ கூறினார். “உனக்காக நீ ஹஜ் செய்து விட்டாயா? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். அதற்கவர் “இல்லை” என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “முதலில் உனக்காக ஹஜ் செய்! பிறகு ஷுப்ருமாவுக்காக ஹஜ் செய்” என்றார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)*

*நூல்கள்: அபூதாவூத் 1546, இப்னுமாஜா 2894*

*👆👆👆👨‍👨‍👦பெற்றோர் அல்லாத மற்ற உறவினருக்காக 🕋ஹஜ் செய்பவர்கள் முதலில் தமக்காக 🕋ஹஜ் செய்ய வேண்டும் என்பதை இந்த📚 ஹதீஸிலிருந்து விளங்கலாம்.👈👈👈*

*🕋🕋இஹ்ராம் ஆடையில் ப்ரெஸ் பட்டன் பயன்படுத்தலாமா❓🕋🕋*

📓📓📓ஆண்களுக்கான இஹ்ராம் ஆடையில் எந்தத் தையலும் இல்லாமல், ஓரங்களில் ஊக்கு மாட்டிக் கொள்வதற்கு பதிலாக ப்ரெஸ் பட்டன் கொடுத்து கடைகளில் விற்கிறார்கள். அதைப் பயன்படுத்தலாமா❓
*பதில்*
பயன்படுத்திக் கொள்ளலாம். காரணம் அது தடை செய்யப்பட்டவைகளில் இல்லை📓📓📓.

*🕋🕋இஹ்ராமில் பனியன் ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணிந்து கொள்ளலாமா❓🕋🕋*

*✍✍✍ஆண்கள் இஹ்ராமின் போது ஜட்டி போன்ற உள்ளாடைகளை அணிந்து கொள்ளலாமா❓*
*பதில்*
*ஜட்டி என்பது தையல் ஆடை என்பதால் அதை இஹ்ராமின் போது அணியக்கூடாது. தையல் இல்லாத வகையில் லங்கோடு போன்ற துணியால் இடுப்பில் கட்டிக் கொள்ளலாம்.✍✍✍*

*🌐🌐தல்பியாவை ஒருவர் சொல்லி மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டாகச் சொல்லலாமா❓🌎🌎*

📔📔📔தல்பியாவை ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் அதைத் தொடர்ந்து கூட்டாகச் சொல்லலாமா❓ அதேபோல், ஒருவருக்கொருவர் குழம்பாமல் இருப்பதற்காக, தனியாக ஒருவர் சொல்லிக் கொடுக்காமல் ஒரே நேரத்தில் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து சொல்வது நபிவழிக்கு மாற்றமானதா❓
அவரவர் தல்பியா சொன்னதாகத் தான் ஹதீஸில் வருகிறதே தவிர ஒருவர் சொல்ல, மற்றவர்கள் சொன்னதாக வரவில்லை.
முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்கüடம் தல்பியாச் சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியாச் சொல்பவர் தல்பியாச் சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை” என்று பதிலüத்தார்கள்.📔📔📔

*நூல்: புகாரி 970*

*👆👆👆இந்த ஹதீஸின் அடிப்படையில் அவரவர் சொல்வதைத் தான் நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்திருக்கின்றார்கள். ஒருவர் சொல்லிக் கொடுக்க மற்றவர்கள் சொல்வது நபிவழிக்கு மாற்றமானதாகும். அவரவர் சொல்லும் போது அது கூட்டாகச் சொல்வதாகத் தான் அமையும். எனவே இது தவறில்லை.👈👈👈*

*🕋🕋🕋கஃபதுல்லாஹ்வை பார்த்தவுடன் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? ஹரம் எல்லையை அடைந்ததுமா❓🕋🕋🕋*

*✍✍🕋கஃபதுல்லாஹ்வை பார்த்தவுடன் தல்பியாவை நிறுத்த வேண்டுமா? ஹரம் எல்லையை அடைந்ததும் தல்பியாவை நிறுத்த வேண்டுமா❓*
*நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்.✍✍✍*
*நூல்: புகாரி 1573*

*👆👆👆இந்த ஹதீஸின் அடிப்படையில் ஹரம் எல்லைக்கு வந்ததும் தக்பீரை நிறுத்த வேண்டும் என்பதே சரி!👈👈👈*

*🕋🕋பாபு பனீ ஷைபா என்பதும், பாபுஸ்ஸலாம் என்பதும் ஒன்றா❓🕋🕋*

📚📚🕋ஹரமில் “பாபு பனீ ஷைபா’ வழியாக நுழைவது சுன்னத் என்பதை அறிந்திருக்கிறேன். சிலர் “பாபுஸ்ஸலாம்’ வழியாக நுழைவது சுன்னத் என்கிறார்கள். “பாபு பனீ ஷைபா’ என்பதும் “பாபுஸ்ஸலாம்’ என்பதும் ஒன்றா❓
*பதில்*
இரண்டு வாசல்களும் ஒன்று தான். நபி (ஸல்) அவர்கள் இந்த வாசல் வழியாக நுழைந்திருக்கிறார்கள். இது ஹஜ்ருல் அஸ்வதை நோக்கிச் செல்வதற்கு வசதியான வாசல். காரணம் ஹஜருல் அஸ்வத் அமைந்த கஅபாவின் மூலையில் இருந்து தான் ஒருவர் தனது தவாஃபை ஆரம்பிக்க வேண்டும். இந்த வாசல் மகாமு இப்ராஹீம் அமைந்துள்ள கஅபாவின் பகுதியை முன்னோக்கியிருக்கும்.📚📚📚

*🌐🌐🌐தஹிய்யதுல் மஸ்ஜித் தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கலாமா❓🌎🌎🌎*

*✍✍✍ஹரம் ஷரீஃபில் நுழைந்த பிறகு “தஹிய்யதுல் மஸ்ஜித்’ தொழுதுவிட்டு தவாஃபை ஆரம்பிக்கலாமா❓ அல்லது முதல் அமலே தவாஃபில் தான் ஆரம்பிக்க வேண்டுமா❓*
*நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் “ஹஜருல் அஸ்வத்’ உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள்.✍✍✍*

*நூல்: முஸ்லிம் 2334, 1603*

*👆👆👆நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்து தவாஃபைத் தான் துவக்கியுள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் நாம் தவாஃபைத் துவக்குவது தான் நபிவழியாகும்.👈👈👈*

*🕋🕋🕋ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு 1 லட்சம் நன்மைகள் என்பது ஒவ்வொரு 2 ரக்அத்திற்குமா❓🕋🕋🕋*

*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம்  10*

No comments:

Post a Comment